புதன், 23 செப்டம்பர், 2015

உனக்கான நாள்

#1
ஆசையின் தீவிரம், கனவின் அளவு, போகிற போக்கில் ஏமாற்றங்களைச் சமாளிக்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது, வெற்றியின் அளவு._ Robert Kiyosaki
#2
இதயத்தில் சற்றே இடம் வைத்திருங்கள், நினைத்தும் பார்த்திராத ஆச்சரியங்களுக்கு. _Mary Oliver
#3 

‘நேரத்தை சமாளிக்கத் தெரியாதரால் வேறு எதையும் சமாளிக்க இயலாது.’ 
_ Peter F

#4
‘நாம் விட்டு வந்தவற்றை விட மென்மேலும் சிறந்தவை காத்திருக்கின்றன நமக்காக.’ _ C.S. Lewis.
#5
போகட்டும் விடுங்கள், உங்கள் வலிமையை அசைத்துப் பார்க்கும் எண்ணங்கள்..
#6
‘நாம் அணிகையில் நமக்கு நன்றாகத் தோன்றுவதே உலகத்தின் மிகச் சிறந்த வண்ணம்’ 
Coco Chanel
#7
‘தன்னம்பிக்கை வெற்றியைத் தராதிருக்கலாம். 
ஆனால் சவால்களைச் சந்திக்கும் சக்தியைத் தரும்.’

#8
‘பலனைப் பற்றிய போதுமான அக்கறை இருக்குமானால், பெரும்பாலும் அதை அடைந்தே தீருவீர்கள்.’_ William James

#9
தோல்விகள், பிரச்சனைகள், அச்சங்கள் யாவும் வாழ்வுக்கு சற்றே வண்ணம் ஏற்றுகின்றன. அவ்வளவே.
#10
முயல்வதை நிறுத்தாதே. நம்பிக்கையை இழக்காதே. இயலாதென விலகாதே. உனக்கான நாள் வரும்.
Mandy Hale 

14 கருத்துகள்:

 1. சிந்தனை வரிகளும் அதற்கான படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 2. சிந்தனை வரிகளும் அதற்கான படங்களும் மிக நன்று .பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 3. அருமையான சிந்தனைகள். படங்களும் வெகு அழகு!

  பதிலளிநீக்கு
 4. படங்கள் ஒரு பக்கம் அழகென்றால் அவற்றுக்கான தேர்ந்தெடுத்த வாசகங்கள் கூடுதல் அழகு. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin