Sunday, August 10, 2014

மலர்களால் மைசூர் அரண்மனை - 200_வது லால்பாக் சுதந்திர தின மலர் கண்காட்சி - படங்கள் 17 - ( Bangalore Lalbagh Independence Day Flower Show 2014 )

#1
இருநூறு வருடங்களாக இடைவிடாமல் வருடத்துக்கு இருமுறையென நடைபெற்று வரும் லால்பாக் மலர்க் கண்காட்சியின் இந்த வருட சிறப்பு அம்சங்களாக மைசூர் அரண்மனை, தேவி சாமுண்டீஸ்வரியை அம்பாரியில் ஏற்றி வரும் தசரா யானைகள் ஊர்வலம் மற்றும் மைசூர் கே. ஆர். சர்கிளில் இருக்கும் மகராஜா கிருஷ்ணராஜ உடையாரின் உருவச்சிலையுடனான மணி மண்டபம்.

[படங்கள் திறக்கத் தாமதமானால் ஏதேனும் ஒரு படத்தின் மேல் க்ளிக் செய்து வரிசையாக லைட் பாக்ஸில் பார்க்கலாம்.]

#2

அரண்மனை 45 அடி நீளம், 12 அடி அகலம், 27 அடி உயரத்தில் மூன்று லட்சம் மஞ்சள், வெள்ளை, சிகப்பு ரோஜாக்களால் எழுந்து நின்றிருந்தது.

#3


#4

#5 அன்னை சாமுண்டீஸ்வரி
#6

இரண்டு வருடங்களுக்கு முன் தசரா சமயத்தில் மைசூர் சென்றிருந்த போது அரண்மனையை இப்படிதான் விதம் விதமான கோணங்களில் படம் எடுத்திருந்தேன்:)! அவற்றைப் பகிரவே இல்லை என்பது நேற்று இந்த மலர் அரண்மனையைப் படமாக்கும் போதுதான் நினைவுக்கு வந்தது. “விரைவில் பகிருகிறேன்” பட்டியலில் அதையும் போட்டு வைக்கிறேன்:)!

#7

#8
கடந்த 15 நாட்களாக, 10 பேர்கள் கட்டுமான வேலைகளில் கவனம் செலுத்த 25 பேர்களின் உழைப்பில் மலர்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாப் பக்கங்களிலிருந்தும் அந்த உழைப்பின் நேர்த்தியைக் கண்டு களிக்க வேண்டாமா?  அரண்மனையின் பின்பக்கத்தைப் பார்க்கலாம், வாங்க!

#9

#10

# 11

# 12

மைசூர் கே. ஆர். சர்க்கிள் இங்கே செவ்வக வடிவில்..:)! ஆனால் மணி மண்டபம் இதே போலதான் இருக்கும்.

# 13
# 14

# 15

#16

8ஆம் தேதி ஆரம்பித்த கண்காட்சி 17 ஆகஸ்ட் 2014 வரை நடைபெற உள்ளது. எப்போதுமே ஆரம்ப நாட்களிலும் வார நாட்களிலும் கூட்டம் ‘சற்றே’ குறைவாக இருக்கும். நேற்று வாரயிறுதிக்கான கூட்டம் தவிர்க்க முடியாததாக இருந்தாலும் ஓரளவு படங்கள் எடுக்க முடிந்தது. மேலும் படங்களைப் பாகம் இரண்டாக நேரம் கிடைக்கும் போது பகிருகிறேன்.

இந்தச் சிறுவனைப் போல நீங்களும் இரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்:)!

# 17
***

18 comments:

 1. சிறுவன் போல ரசித்தேன். சிறுவனும் அழகு.
  மைசூர் அரண்மனை மிக அழகு.
  அனைத்து படங்களும் மிக நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. மலர் யானை! அட! மலர் அரண்மனை அசத்துகிறது.

  மலர் மண்டபத்துக்குள் இருப்பதும் குதிரை வீரரும் மலர்களால் ஆனவை அல்ல என்று நினைக்கிறேன்.

  நானும் சிறுவனைப்போல் ரசித்தேன்தான்!

  ReplyDelete
 3. அற்புதம். உங்கள் உழைப்பு பாராட்டத் தக்கது. மிகவும் ரசித்தோம்.
  எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. அருமையான படங்கள்! - அரிமா இளங்கண்ணன், லாஸ் ஏஞ்சல்ஸ்

  ReplyDelete
 5. கண்கொள்ளாக்காட்சிகள்.

  ReplyDelete
 6. @கோமதி அரசு,

  மகிழ்ச்சி. நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 7. @ஸ்ரீராம்.,

  மனித உருவச் சிலைகள் மலர்களால் ஆனவை அல்ல.

  நன்றி ஸ்ரீராம்:).

  ReplyDelete
 8. பகிர்வு அழகு அக்கா...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் அரண்மனை அலங்காரத்துக்கு?
  படங்களால் அறிய முடிவது நிறைய - நன்றி.

  ReplyDelete
 10. மலர்க் கண்காட்சியும் அதைப் படமாக எடுத்து வெளியிட்ட நேர்த்தியும் ஆஹா.. அருமை அருமை. நன்றாக இருக்கிறது என்று சொன்னால் அது தேன் இனிக்கிறது என்று சொல்வதுபோல் இருக்கும். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 11. @அப்பாதுரை,

  மலர்களைப் பதிக்க மட்டும் முழுதாக இரண்டு நாட்கள் ஆகியிருக்கின்றன. கட்டுமான வேலைகள் ஒரு வாரத்திற்கு முன்னதாக ஆரம்பித்திருக்கிறார்கள். நன்றி.

  ReplyDelete
 12. வருடாவருடம் தவறாமல் கலந்து கொண்டு நிழல் படம் எடுத்து போடுகிறீர்கள் :-)

  மற்ற படங்களோடு பையன் படம் செமையாக இருக்கிறது.. பளிச்ன்னு

  ReplyDelete
 13. @கிரி,

  வருடத்துக்கு இரண்டு நடக்கிறதே:). ஒன்றை தவற விட்டாலும் முடிந்தவரை அடுத்ததற்கு சென்று விடுகிறேன். நன்றி கிரி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin