வெள்ளி, 25 ஜூலை, 2014

புதிய பாதை

1.  ஒவ்வொரு படியிலும் நின்று ஒவ்வொருவருக்கும் நம்மை நிரூபித்துக் கொண்டிருக்க முடியாது. செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

2. நாம் மாறிவிட்டதாக எவரும் சொன்னால், நம் வாழ்க்கையை மற்றவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாழ்வதை நிறுத்திக் கொண்டோம் என்று அர்த்தம்.

3. எல்லாம் மிகச்சரியாகச் சென்று கொண்டிருந்தாலே மகிழ்ச்சி கிட்டும் என்றில்லை. சரியற்றவற்றைத் தாண்டிப் பார்க்கவும், கடக்கவும் நாம் எடுக்கிற முயற்சியிலும் முடிவிலும் கூடக் கிடைக்கிறது மகிழ்ச்சி.

4. வெற்றி உட்பட எளிதாகக் கிடைக்கிற எதுவும் விரைவாக நழுவி விடும்.

5. வீழ்ச்சி பயணத்தின் ஒரு பாகம். தொடர்ந்து ஓடுவோம் நதி போல.

6. சாதாரண மனிதர்கள் தம் முயற்சிகளை ஒருபோதும் கைவிடுவதில்லை. நம்பிக்கையை இழப்பதில்லை. அத்தனை இலேசில் விட்டு விடுவதில்லை.


7. தவற விட்ட வாய்ப்புகளுக்காக வருந்திக் கொண்டிருந்தால் திறந்திருக்கும் வாய்ப்புகள் கவனத்துக்கு வராமலே போகும்.

8. நட்பென்பது ஒப்பந்தம் அல்ல, ஒருவரையொருவர் புரிந்து கொள்வது. மறப்பது அல்ல, மன்னிப்பது. தொடர்ப்பு விட்டுப் போனாலும் கூட நினைவுகளில் நிறைந்திருப்பது.

9. செல்லும் பாதை எதை நோக்கியும் இட்டுச் செல்லாததை உணரும்போது நிதானித்து வேறு பாதையைத் தேர்வு செய்திடலாம். திசைமாறிப் பயணிக்கத் தாமதமான தருணமோ எனத் தயங்க வேண்டியதில்லை.

10. இருப்பவற்றுக்காக மகிழ்ச்சி அடையக் கற்றுக் கொள்வோம், விரும்புகிறவற்றை அடைய ஓடுகிற பொழுதில்.

 **
[எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..]


 

12 கருத்துகள்:

  1. எல்லாமே நன்றாக இருக்கிறது 10வது மிகவும் நன்றாக இருக்கிறது.
    புதியபாதை அருமை.

    பதிலளிநீக்கு
  2. @Nat Chander,

    புதிதாக எதையும் சொல்லப் போவதில்லை என இத்தொடர் பகிர்வின் முதல் பதிவிலேயே சொல்லி விட்டுள்ளேன். நான் எடுக்கும் படங்களைப் பகிரும் போது அவற்றுக்கு ஏற்றவையாக வாசித்ததில் பிடித்தவற்றிலிருந்து, வாய்மொழியாய் அறிந்தவற்றிலிருந்து என உரத்த சிந்தனைகளின் தொகுப்பாக என் மொழியில் என் நடையில் சேமித்து வருகிறேன். அவ்வளவே:)! நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin