புதன், 18 ஜூன், 2014

நீரும் நெருப்பும்

நீரும் நெருப்பும்.. நிலமும் காற்றும்..

பஞ்ச பூதங்களில் நான்கு பூதங்கள்!

இந்த நான்கு இயற்கை சக்திகளையும் படமாக்கக் கேட்டுள்ளார் இந்த மாத PIT போட்டிக்காக, நடுவர் ஆன்டன்.

*நீர்த்துளி முதல் சீறும் சமுத்திரம் வரை..
*வெப்பத்தில் வெடித்துப் போன நிலம் முதல் அழகாகத் தெரியும் எந்த நில அமைப்பும்..
*சீறும் தீக்குச்சி முதல் காட்டுத்தீ வரை..
* உருவமில்லாக் காற்றை உணர வைப்பதாக..

உங்கள் படங்கள் இருக்க வேண்டும் என்கிறார். குறிப்பாக, இயற்கை சக்தி பார்த்ததும் ஈர்ப்பதாக அமைந்திருக்க வேண்டும்.

அறிவிப்புப் பதிவு இங்கே.

மாதிரிக்காகவும் ஒரு நினைவூட்டலாகவும் மேலும் சில படங்களை இங்கு பகிருகிறேன். [கடைசி இரு படங்கள் தவிர்த்து மற்றவை புதியவை:). படங்கள் இரண்டும் மூன்றும் தலைப்புக்காகவே எடுத்தவை.]

#1 சிற்றருவியின் தீம்தனனா..

#2 காற்றலை இல்லையென்றால்..
#3 சுடர்த் தாமரை



#4 பாலருவியின் பாய்ச்சல்

#5 தீ

நான்கு இயற்கைச் சக்திகளில் இரண்டோ, மூன்றோ அல்லது நான்குமோ ஒரு படத்தில் இருந்தாலும் சரிதான் என்கிற விதிப்படி இரண்டு சக்திகள் கீழ்வரும் படத்தில்..

#6 நீரும் நிலமும்

இதுவரை வந்திருக்கும் படங்களைக் காண இங்கே செல்லலாம்.

படங்கள் அனுப்பக் கடைசித்தேதி: 20-06-2014 

***


14 கருத்துகள்:

  1. ஆகா... அனைத்தும் அருமை... முக்கியமாக "காற்றலை இல்லையென்றால்"

    பதிலளிநீக்கு
  2. தலைப்பிற்கேற்ற அற்புதமான படங்கள்
    போட்டி சிறக்க நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மாதிரிப் படங்கள் அருமை. நீங்கள் தேர்ந்தெடுக்க நல்லபல படங்கள் அமைய வாழ்த்துகள். :)))

    பதிலளிநீக்கு
  4. சிற்றருவியின் சங்கீதமும், பாலருவியின் பாய்ச்சலும் மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. மற்ற படங்களும் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
  5. @ஸ்ரீராம்.,

    நன்றி ஸ்ரீராம்:)! இந்த முறை தேர்ந்தெடுக்கவிருப்பவர் ஆன்டன்.

    பதிலளிநீக்கு
  6. @ஸ்ரீராம்.,

    நன்றி ஸ்ரீராம்:)! இந்த முறை தேர்ந்தெடுக்கவிருப்பவர் ஆன்டன்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான படங்கள்.....

    போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. படங்கள் எல்லாம் அழகு அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin