வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஜினியா - இரட்டை வர்ணங்களில்.. - ( Bangalore Lalbagh Flower Show )

ஆகஸ்ட் லால்பாக் கண்காட்சியில் எடுத்த படங்களில் மலர் அலங்காரங்களையும், சிட்டுக் குருவிகள் போல் அங்குமிங்கும் தத்தித் திரிந்த மழலைகளையும் தொகுப்பாகப் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  மேலும் எடுத்த வகை வகையான மலர்களை... ஃப்ளிக்கரில் வரிசையாகப் பகிர்ந்தவற்றை.. சில தொகுப்புகளாக இங்கு பதிந்திட எண்ணியுள்ளேன்.

இன்று ஜினியா. அதுவும் Bicolor  என அறியப்படும் இரட்டை வர்ண ஜினியாக்கள். இதழ்களில் ஏதேனும் இரண்டு வர்ணங்களைப் பிரதானமாகக் கொண்டவை.

விதைகள் பாகத்தில் தெரியும் வர்ணங்களும், சிலவற்றின் இதழ்களில் மூன்றாவதாக ஊடுருவப் பார்க்கும் வர்ணமும் கணக்கில் வரா என்பதை சொல்லிக் கொள்கிறேன்:)!

சில வகைகள் சட்டெனப் பார்வையை ஓட விடுகையில் ஒரே மாதிரியானவையோ எனத் தோன்ற வைத்தாலும் உற்றுப் பார்க்கையில் தெரிந்திடும் இறைவனின் தூரிகை எடுத்துக் கொண்ட கவனம்.

வாருங்கள் இரசிக்கலாம் அழகின் கொண்டாட்டத்தை.. அழுத்தமான வண்ணங்களிலும் மென்மையான நிறங்களிலும்...

#1 வெள்ளை - மஞ்சள்


#2 மஞ்சள் - பழுப்பு


#3 சிகப்பு - மஞ்சள்


#4 வயலட் - மஞ்சள்


#5 வெள்ளை - மஞ்சள்
இதழ்களின் ஓரத்தில் பார்டர் வைத்த மாதிரி வயலட்...

#6 வயலட்-மஞ்சள்
#7 முற்றிய விதைகளோடு.. முகம் மலர்ந்து..

[இன்னும் வரும்:)!]
***28 கருத்துகள்:

 1. இறைவனின் தூரிகை எடுத்துக் கொண்ட கவனமும், நீங்கள் இயக்கும் கமிரா எடுத்துக் கொண்ட கவனமும் மிக அருமை.
  மலர்கள் அழகாய் தெரிகிறது காட்சிக்கு.
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 2. கண்ணை விட்டு அகலமறுக்கும் அற்புதங்கள். எங்கெங்கோ இருக்கும் இயற்கையின் வண்ணங்களை எங்கள் வீட்டு கணினி முற்றத்தில் காண உதவும் தங்களுக்கு இனிய பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 3. மலர்கள் அழகாகச் சிரிக்கின்றன.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. அழகாய் ரசிக்க வைக்கும் மலர்கள்....
  அருமை அக்கா.

  பதிலளிநீக்கு
 5. கடவுளின் படைப்பில் தான் எத்தனை எத்தனை வகை மலர்கள்.. தங்களின் காமிரா கைவண்ணத்தில் மேலும் மெருகேறுகின்றன...

  நான் ஜினியாவை டெய்சி என்றல்லவா நினைத்திருந்தேன்...:)

  பதிலளிநீக்கு
 6. இறைவனின் தூரிகை எடுத்துக் கொண்ட கவனமும்,
  முகம் மலர்ந்த இனிய மலர்களும் அருமை..பாராட்டுக்கள் !

  பதிலளிநீக்கு
 7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 8. பதிவுலகின் சகலகலாவல்லி ராமலக்ஷ்மிக்குப் பிறந்தநாள்
  கதை, கட்டுரை, கவிதை, புகைப்படக்கலை, தத்துவம், அறிவியல் போன்ற விஷயங்களால் பதிவுலகின் எட்டு திக்குகளிலும் எதிரொலிக்கும் பெருமை பெற்ற நம்
  அன்பு ராமலக்ஷ்மிக்கு இன்று (28-12-) பிறந்தநாள்!!
  எங்களுக்கு ஆனந்தம்...பரமானந்தம்!!!
  நன்றி!: http://9-west.blogspot.in/2010/12/blog-post_28.html

  நான் ஒருமுறை உங்களது சித்தப்பா வெடிவால் சகாதேவன் அவர்களது பதிவுகள் அனைத்தையும் படித்தபோது உங்கள் அத்தை நானானியின் பதிவுகளையும் படித்தேன். அப்போது படித்த மேலே சொல்லப்பட்ட தகவல் ஞாபகம் வந்தது. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. அத்தனையுமே அழகு.....

  இயற்கையின் எழில் உங்கள் கைவண்ணத்தில் ஒளிர்கிறது

  பதிலளிநீக்கு
 10. எண்ணமெல்லாம் தழைத்தோங்கும்
  வண்ண மலர்(கள்) போல்
  இனிக்கும் நல்ல கதை சொல்லும்
  உங்கள் வாழ்வும் வளமும் என்றே
  வரவிருக்கும் புத்தாண்டை வணங்கி
  வாழ்த்துகின்றேன் அம்மா ........

  பதிலளிநீக்கு
 11. @ADHI VENKAT,

  டெய்ஸியின் இதழ்கள் இதே போல இருந்தாலும் நடுப்பாகம் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும், கவனியுங்கள்.

  நன்றி ஆதி:)!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin