ஞாயிறு, 20 மார்ச், 2011

என்றும் உள்ளது ஒரேநிலா..நேற்று மட்டும் அபூர்வநிலா.. - SUPERMOON

1. அபூர்வ நிலா

துதான் பதினெட்டு ஆண்டுகளுக்கு பின் தெரிந்த அபூர்வ நிலா. சூப்பர்மூன் என உலகமே உற்றுப் பார்த்த உச்சி நிலா. பூமிக்கு வெகு அருகாமையில் வந்து வழக்கத்தை விட 10% பெரிய அளவிலும், 30% அதிக பிரகாசத்துடனும் ஒளிர்ந்த நிலா. இதற்கு முந்தைய சூப்பர் நிலாக்கள் 1955,1974, 1992 and 2005 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகில் வந்து ‘ஹலோ’ சொல்லி கவனம் பெற்றிருந்தன.

நேற்று இந்நிலாவைப் பதிய பரபரப்புடன் தயாரானார்கள் பதிவுலக நண்பர்களும் புகைப்பட ஆர்வலர்களும். ஏற்கனவே நான்கு மாதங்களாக நிலவைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நான் சூப்பர்நிலவைத் தவற விடுவேனா:)? எம் குடியிருப்பின் எட்டாவது தளத்தில் அமைந்த மொட்டை மாடியிலிருந்து காட்சிப் படுத்தியாயிற்று கண் கொள்ளா பிரகாசத்துடன் மிளிர்ந்த வெண்ணிலவை. முன்னிரவில் கிழக்கே உதிக்கும் போதே எடுத்தவர்களுக்கு ‘மெகா நிலா’வாகப் பதிய முடிந்திருக்கிறது. இரவு பதினொரு மணியளவில் நான் பதிந்தது மேலே.

தேய்வதும் பின்னர் வளர்வதுமாய் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தியும், கோடியில் புரளும் கோமானுக்கும், வீதியில் வாழும் இல்லாதவனுக்கும் எந்த பாகுபாடும் காட்டாமல் பாசம் பாராட்டும் அன்னையைப் போல் பாலாய் பொழியும் நிலவின் மேல்தான் எத்தனை பாடல்கள்? மனதோடு ஒன்றி விடுகின்றன நிலவுப் பாட்டுகளும்.

பதிவுலகம் வந்த புதிதில் PiT மூலமாக இணையத்தில் நிபுணர்கள் எடுக்கும் படங்கள் காணக் கிடைத்ததுடன், புகைப்படத் தளங்களும் அறிமுகமாயின. ஒரு முறை நந்துவின் நிலாவை [அவர் பொண்ணைச் சொல்லவில்லை:)] பார்க்க நேர்ந்த போது அதுபோல எடுக்க ஆசை வந்து zoom செய்தால் ஒரு வெள்ளிப் பொட்டு கிடைத்தது:)! பின்னரே அறிந்தேன் அதற்கு SLR அல்லது அதிக optical zoom வேண்டுமென. அதிக optical zoom-க்கு மாற நேர்ந்த போதும் [குறைந்த பட்சம் 8X optical zoom அவசியமாம் P&S-ல் நிலவை முயற்சிக்க-தகவல் நன்றி ஜீவ்ஸ்] வெள்ளிப் பொட்டு வெள்ளித் தட்டாகக் கிடைத்து வந்ததே தவிர நிலவுக்குள்ளே வடை சுடும் பாட்டியும், காதுகளை உசத்தி அமர்திருக்கும் மொசலும் மாட்டவே இல்லை!

2. வெள்ளித் தட்டு


வம்பர் இறுதியில் SLR வாங்கும் போதே 55-200mm lens, tripod-ம் வாங்கி விட்டேன் நிலவைப் பிடிக்கவே. வீட்டின் பால்கனிகள் மேற்கு பார்த்தவை என்பதால் அஸ்தமன நிலவே கண்ணுக்குக் கிடைத்தது, இம்மாதம் தவிர்த்து. உதய நிலா பிடிக்க மொட்டை மாடிக்குதான் செல்ல வேண்டும். அதுவும் கொஞ்சம் உயரம் வந்த பிறகே காணக் கிடைக்கும். கீழ்வானம் தெரிவதில்லை. உதய நிலாவில்தான் விவரங்கள் தெளிவாகக் கிடைக்குமென சொல்லுகிறார்கள் நிபுணர்கள். போகட்டுமெனப் பிடித்த மேற்கு நிலாக்கள் இங்கே வரிசையாக:

3. மார்கழித் திங்கள் அல்லவா..?
மதி கொஞ்சும் நாள் அல்லவா..?


4. தைத்திங்கள் திருநாளில்..


முதலிரண்டு மாதமும் எந்த mode-ல் வைத்து எடுத்தால் நன்றாக வருமெனும் வித்தை பிடிபடவில்லை. ஆனாலும் காமிரா அதுபாட்டுக்குப் பிடித்து, ஃப்ளிக்கரில் தவறாமல் போட்டு தன் கடமையை செவ்வனே ஆற்றி வந்தது:)! மாசியும் வந்தது.

5. மாசி நிலா


இருபத்தைந்து நிமிட இடைவெளியில்..
6. வெள்ளி நிலா தங்கமாய்..
இந்த தங்க நிலா, காலைத் தேநீர் தயாரித்துவிட்டு வந்த பத்தே நிமிட அவகாசத்தில் கீழ்வானைத் தொட்டு பெரிய சைஸில் ‘தகதகதக தகதகதக என ஆடவா?’ எனக் கேட்க காமிராவை கோணம் வைப்பதற்குள் ஒருசில நொடியிலேயே ‘ஓடவா?’ என ஓடி விட்டது!! மஞ்சள் நிலாவுக்கு ஒரே அவசரம்..!


ற்றுக் குட்டி முயற்சிகள்தாம்.

இருப்பினும் இம்மாத(பங்குனி) முழுநிலாவுக்கு என்னைத் தயார் செய்து கொள்ள சென்ற வாரம் வெண்ணிலா வானில் வரும் வேளையில்... விழித்திருந்து, அடுத்தடுத்த நாட்கள் எடுத்தவை கீழே. இவை நள்ளிரவிலேயே மேற்கு வான் உச்சிக்கு வந்தவை.


7. அரை நிலா ஆகாசத்திலே..சற்றே படம் ஆட்டம் கண்டிருக்க மறுநாளே முயன்றதில்...

8. வளர் நிலா வானிலே..இப்படியாக எடுத்த பயிற்சி நேற்று கைகொடுத்தது என்றே சொல்ல வேண்டும். ஓரளவு திருப்தியாக அமைந்து விட்டது அபூர்வ நிலா[படம் 1]. ஃப்ளிக்கர் தளத்திலும் கிடைத்தது நல்ல வரவேற்பு: "Rare" Super Moon/View from Bangalore.

இதுதான்...

அந்த நிலாவை நான்.. காமிராவில் புடிச்ச கத:)!
*****


நிலவை எடுத்த விதத்தைப் பற்றிய இதே அனுபவப் பகிர்வு விளக்கங்களுடன் PiT தளத்தில்: அபெச்சர் மோட்.. ஓர் அதிசயம் - அவ்வ்வ்... டு வாவ் ரசசியம்

85 கருத்துகள்:

 1. செம படம்! சூப்பரா இருக்கு :-)

  நான் கூட முதல் படம் இணையத்துல இருந்து எடுத்தீங்களோ என்று நினைத்தேன்.. உங்கள் பேரை மற்றும் நீங்கள் எழுதியதை படித்த பிறகே நீங்கள் எடுத்தது என்று அறிந்தேன்.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. அபூர்வ நிலா அழகு நிலா சூப்பர் க்ளிக்.

  வடை சுடும் பாட்டி தெரிவார் என்று நினைத்தேன்....

  தெரியும் முன்னமே கிரி வந்து வடையைச் சுட்டு விட்டாரே....

  பதிலளிநீக்கு
 3. புகைப்படம் சூப்பரோ சூப்பர்.

  பதிலளிநீக்கு
 4. நிலாப் படங்கள் அருமை. எப்படிப் பிடித்தீர்கள் என்ற என் மனக் கேள்விக்கு விடை கீழே...
  'வெள்ளித் தட்டுகள்' இட்லியாய் காட்சி தந்தால், 'வளர் நிலா வானிலே' மடித்து வைத்த தோசையாய்...!
  பாடல்களை வைத்து கொடுத்துள்ள தலைப்புகளும் பிரமாதம்.

  பதிலளிநீக்கு
 5. கை வண்ணத்தில் நிலாக்கள்
  அட சூப்பரா இருக்கே...
  அருமை அக்கா.

  பதிலளிநீக்கு
 6. நிலவை பிடிக்க நீங்கள் காட்டிய ஆர்வம் வியக்க வைக்கிறது. அத்தன படங்களும் அழகோ அழகு. நிலாவின் படங்கள் அல்லவா.

  பதிலளிநீக்கு
 7. அருமை. என்னமா எடுக்குறீங்க?

  இந்த மாதம் உங்கள் பதிவுகள் எண்ணிக்கை ரிக்கார்ட் ஆக இருக்கலாம் (வலை சரம் உபயத்தில் நிறைய பதிவுகள் அல்லவா?)

  பதிலளிநீக்கு
 8. அக்கா...பாராட்ட வார்த்தைகள் இல்லை.அவ்ளோ அழகான படங்கள்.எனக்கு இங்கு இருட்டிய வானமாகவே இருந்தது நேற்று.நிலவைப் பார்க்க முடியவில்லை !

  பதிலளிநீக்கு
 9. அனைத்தும் அசத்தல் புகைப்படங்கள்.

  பதிலளிநீக்கு
 10. ரெம்ப சுவாரஸ்யம் .. படமும்
  நீங்கள் எழுதி இருந்த நடையும் !

  பதிலளிநீக்கு
 11. நிலா அது வானத்து மேலே..நம் அருகில் வந்தாடியது அதை படம் புடிச்சது அனைத்தும் அருமை.
  அதை சினிமா பாடல்களால் வர்ணித்த விதமும் அருமை.
  இவ்வளவு அருகில் வருவதால் நமக்கெல்லாம் ஆபத்தாமே?
  ‘நிலவே என்னிடம் நெருங்காதே..’னு பாடலையா?

  பதிலளிநீக்கு
 12. உங்கள் ஆர்வமும் சிரத்தையும் பிரமிக்க வைக்கின்றன, ராமலக்ஷ்மி. காமெரா பிடித்த நிலாக்கள் அத்தனையும் கொள்ளை அழகு.

  பதிலளிநீக்கு
 13. ஆஹா என்ன அழகு அழகு
  அருகே வந்து பழகிய நிலா.
  ஆறுமாதம் எடுத்த முயற்சியா
  திருவினையாக்கி இருக்கிறது. ராமலக்ஷ்மி மறக்க முடியாத நிலாப்பெண்.
  அழகி. வானம் அள்ளித்தந்த பெண்ணிலா. இந்த வெண்ணிலா.
  எடுத்த கைகளுக்கும் ஊக்கம்.பார்க்கும் கண்களுக்கும் ஊக்கம். வாழ்க நீ வெண்ணிலவே.

  பதிலளிநீக்கு
 14. அந்த நிலாவைத் தான் நான் கேமராவில் பிடிச்சேன்னு பாட்டு ஏதும் படிச்சீங்களோ?.. ;-)

  பதிலளிநீக்கு
 15. நிலா படங்களும் அதற்கு ஏற்ற பாடல்களும் விளக்கமும் அருமை ராமலக்ஷ்மி.

  அபூர்வநிலா வெகு அருமை.

  பதிலளிநீக்கு
 16. அன்பின் ராமலக்ஷ்மி

  அருமையான நிலா - சூப்பர் நிலா - நாளுக்கு நாள் திறமை கூடுகிறது. ஆர்வமும் உழைப்பும் கை கொடுக்க புகைப்படத்துறையில் பெரும் புகழ் அடைய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 17. அப்படியே என்ன செட்டிங்ஸ் வெச்சி எடுத்தீங்கன்னும் சொல்லி இருக்கலாம் :))

  பதிலளிநீக்கு
 18. மிக நல்லப்படம். இதுக்கு முன்னாடி யாராவது இப்படி நிலாவ படம் பிடிச்சிருக்காங்கலான்னு கூகுள் இமேஜ்-ல தேடினேன். அப்புறம்தான் தெரிஞ்சிது அபூர்வ நிலாவின் அருமை.

  பாராட்டுக்கள் அப்படின்னு அபூர்வ நிலாவ சராசரியாக்க விரும்பவில்லை!

  உங்கள் உழைப்புக்கும் பொறுமைக்கும் கிடைத்தப் பரிசுதான் இந்த அபூர்வ நிலா.

  பதிலளிநீக்கு
 19. ஆஹா... அழகு....
  அற்புதமான படங்கள்.
  கடைசிபடம் ரொம்ப க்ளியரா இருக்கு.

  பதிலளிநீக்கு
 20. உங்க நிலவு படம் என்னை கவர்ந்து இங்க கொண்டு விட்டது. அருமையான புகைப்படங்கள்.

  பதிலளிநீக்கு
 21. சூப்பர்... நிலவுக்கு தான் எத்தனை முகங்கள்... எத்தனை முறை பார்த்தாலும் அழகான முகம். அந்த அழகைக் கண்டு தான் கடல் கூட ஆர்ப்பரிக்கிறது வழக்கத்திற்கு மாறாக...

  பதிலளிநீக்கு
 22. உங்களை தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்..

  http://amaithicchaaral.blogspot.com/2011/03/blog-post_22.html

  பதிலளிநீக்கு
 23. நிலாப்படங்கள் அருமை மேடம் நிலான்னாலே யாருக்குதான் பிடிக்காது.
  அதிலும் எனக்கு ரொம்பபபபபபப பிடிக்கும்..

  அழகு நிலா
  அதை படம் பிடித்ததும்
  அழகு நிலா

  பதிலளிநீக்கு
 24. கிரி said...
  //செம படம்! சூப்பரா இருக்கு :-)

  நான் கூட முதல் படம் இணையத்துல இருந்து எடுத்தீங்களோ என்று நினைத்தேன்.. உங்கள் பேரை மற்றும் நீங்கள் எழுதியதை படித்த பிறகே நீங்கள் எடுத்தது என்று அறிந்தேன்.

  வாழ்த்துக்கள்.//

  நன்றி கிரி:)! கடந்த சில மாதமாக எடுத்த பயிற்சி நிஜமாகவே கைகொடுத்தது.

  பதிலளிநீக்கு
 25. goma said...
  //அபூர்வ நிலா அழகு நிலா சூப்பர் க்ளிக்.

  வடை சுடும் பாட்டி தெரிவார் என்று நினைத்தேன்....

  தெரியும் முன்னமே கிரி வந்து வடையைச் சுட்டு விட்டாரே....//

  அடுத்த வடை எடுத்துக் கொள்ளுங்கள், பாட்டி தெரிகிறார்தானே:)? மிக்க நன்றி கோமா.

  பதிலளிநீக்கு
 26. கலாநேசன் said...
  //புகைப்படம் சூப்பரோ சூப்பர்.//

  மிக்க நன்றி கலாநேசன்.

  பதிலளிநீக்கு
 27. ஸ்ரீராம். said...
  //நிலாப் படங்கள் அருமை. எப்படிப் பிடித்தீர்கள் என்ற என் மனக் கேள்விக்கு விடை கீழே...
  'வெள்ளித் தட்டுகள்' இட்லியாய் காட்சி தந்தால், 'வளர் நிலா வானிலே' மடித்து வைத்த தோசையாய்...!//

  :)!

  //பாடல்களை வைத்து கொடுத்துள்ள தலைப்புகளும் பிரமாதம்.//

  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 28. கடையம் ஆனந்த் said...
  //கை வண்ணத்தில் நிலாக்கள்
  அட சூப்பரா இருக்கே...
  அருமை அக்கா.//

  நலமா ஆனந்த்:)? மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 29. கக்கு - மாணிக்கம் said...
  //நிலவை பிடிக்க நீங்கள் காட்டிய ஆர்வம் வியக்க வைக்கிறது. அத்தன படங்களும் அழகோ அழகு. நிலாவின் படங்கள் அல்லவா.//

  மிக்க நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 30. மோகன் குமார் said...
  //அருமை. என்னமா எடுக்குறீங்க?//

  நன்றி:)!

  //இந்த மாதம் உங்கள் பதிவுகள் எண்ணிக்கை ரிக்கார்ட் ஆக இருக்கலாம் (வலை சரம் உபயத்தில் நிறைய பதிவுகள் அல்லவா?)//

  உண்மைதான், இம்மாதத்துக்கு அத்தோடு நிறுத்தி விடத்தான் எண்ணியிருந்தேன். ஆனால் பிட் போட்டி, சூப்பர் மூன் தவிர்க்க முடியாதவையாகி விட்டன. பொறுத்தருள்க:))!

  பதிலளிநீக்கு
 31. Thekkikattan|தெகா said...
  //சூப்பர் நிலா... சூப்பரு :)//

  உங்கள் வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி தெகா.

  பதிலளிநீக்கு
 32. திவா said...
  //:-))//

  ஃப்ளிக்கரில் அன்றைக்கே படத்துக்குப் பாராட்டு. இங்கே அதன் பின்னே இருக்கும் கதையைக் கேட்டு வந்திருக்கிறது நல்ல சிரிப்பு:)! நன்றி திவா சார்.

  பதிலளிநீக்கு
 33. ஹேமா said...
  //அக்கா...பாராட்ட வார்த்தைகள் இல்லை.அவ்ளோ அழகான படங்கள்.எனக்கு இங்கு இருட்டிய வானமாகவே இருந்தது நேற்று.நிலவைப் பார்க்க முடியவில்லை !//

  நன்றி ஹேமா. பார்க்க முடியாத குறையை என் படம் தீர்த்து வைத்திருக்கும் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 34. அமைதிச்சாரல் said...
  //அசத்தல் ராமலஷ்மி..//

  மிக்க நன்றி சாரல்.

  பதிலளிநீக்கு
 35. S.Menaga said...
  //அனைத்தும் அசத்தல் புகைப்படங்கள்.//

  நன்றி மேனகா.

  பதிலளிநீக்கு
 36. James Vasanth said...
  //ரெம்ப சுவாரஸ்யம் .. படமும்
  நீங்கள் எழுதி இருந்த நடையும் !//

  வாங்க ஜேம்ஸ், மிக்க நன்றி. இந்த முறை நீங்கள் கொடுத்த சில டிப்ஸ் ரொம்ப உபயோகமாய் இருந்தது.

  பதிலளிநீக்கு
 37. நானானி said...
  //நிலா அது வானத்து மேலே..நம் அருகில் வந்தாடியது அதை படம் புடிச்சது அனைத்தும் அருமை.
  அதை சினிமா பாடல்களால் வர்ணித்த விதமும் அருமை.//

  நன்றி:)!

  //இவ்வளவு அருகில் வருவதால் நமக்கெல்லாம் ஆபத்தாமே?
  ‘நிலவே என்னிடம் நெருங்காதே..’னு பாடலையா?//

  அப்படிப் பாடினால் படமெடுக்க முடியாதே. தேடிப்போயே எடுத்தாயிற்று:)!

  பதிலளிநீக்கு
 38. கவிநயா said...
  //உங்கள் ஆர்வமும் சிரத்தையும் பிரமிக்க வைக்கின்றன, ராமலக்ஷ்மி. காமெரா பிடித்த நிலாக்கள் அத்தனையும் கொள்ளை அழகு.//

  மிக்க நன்றி கவிநயா.

  பதிலளிநீக்கு
 39. வல்லிசிம்ஹன் said...
  //ஆஹா என்ன அழகு அழகு
  அருகே வந்து பழகிய நிலா.
  ஆறுமாதம் எடுத்த முயற்சியா
  திருவினையாக்கி இருக்கிறது. ராமலக்ஷ்மி மறக்க முடியாத நிலாப்பெண்.
  அழகி. வானம் அள்ளித்தந்த பெண்ணிலா. இந்த வெண்ணிலா.
  எடுத்த கைகளுக்கும் ஊக்கம்.பார்க்கும் கண்களுக்கும் ஊக்கம். வாழ்க நீ வெண்ணிலவே.//

  நன்றி வல்லிம்மா:)! வாழ்க நீ வெண்ணிலவே! நானும் சொல்லிக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 40. kggouthaman said...
  //Super zoom picture - the first one is the best one.//

  மிக்க நன்றி. அதுதான் நேற்றைய மூன். மற்றவை யாவும் படிப்படியாய் முன்னேறிய பயிற்சியைக் காட்டும் படங்கள்:)!

  பதிலளிநீக்கு
 41. தமிழ் பிரியன் said...
  //அந்த நிலாவைத் தான் நான் கேமராவில் பிடிச்சேன்னு பாட்டு ஏதும் படிச்சீங்களோ?.. ;-)//

  ஆம் தமிழ் பிரியன், அப்படிப் படித்ததைத்தான் கடைசிவரியில் குறிப்பிட்டுள்ளேன்:)! நன்றி.

  பதிலளிநீக்கு
 42. கோமதி அரசு said...
  //நிலா படங்களும் அதற்கு ஏற்ற பாடல்களும் விளக்கமும் அருமை ராமலக்ஷ்மி.

  அபூர்வநிலா வெகு அருமை.//

  மிக்க நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 43. Kanchana Radhakrishnan said...
  //சூப்பரா இருக்கு.//

  மிக்க நன்றி மேடம்:)!

  பதிலளிநீக்கு
 44. cheena (சீனா) said...
  //அன்பின் ராமலக்ஷ்மி

  அருமையான நிலா - சூப்பர் நிலா - நாளுக்கு நாள் திறமை கூடுகிறது. ஆர்வமும் உழைப்பும் கை கொடுக்க புகைப்படத்துறையில் பெரும் புகழ் அடைய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

  தங்கள் ஆசிகளுக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 45. 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
  //அருமைங்க! :))//

  நன்றி:)!

  //அப்படியே என்ன செட்டிங்ஸ் வெச்சி எடுத்தீங்கன்னும் சொல்லி இருக்கலாம் :))//

  ஃப்ளிக்கர் சுட்டியைக் கொடுத்திருந்ததாலும், அங்கே அனைத்து விவரமும் கிடைத்து விடும் என்பதாலும் இங்கே சொல்லவில்லை. இதோ f/11.0 ; 1/500s ; ISO 200; -2 EV.

  பதிலளிநீக்கு
 46. சே.குமார் said...
  //சூப்பரா இருக்கு..//

  நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 47. அமைதி அப்பா said...
  //மிக நல்லப்படம். இதுக்கு முன்னாடி யாராவது இப்படி நிலாவ படம் பிடிச்சிருக்காங்கலான்னு கூகுள் இமேஜ்-ல தேடினேன். //

  ஏகப்பட்ட படங்கள் வந்து விழுந்திருக்குமே:)!

  //அப்புறம்தான் தெரிஞ்சிது அபூர்வ நிலாவின் அருமை.

  பாராட்டுக்கள் அப்படின்னு அபூர்வ நிலாவ சராசரியாக்க விரும்பவில்லை!

  உங்கள் உழைப்புக்கும் பொறுமைக்கும் கிடைத்தப் பரிசுதான் இந்த அபூர்வ நிலா.//

  மிக்க நன்றி அமைதி அப்பா.

  பதிலளிநீக்கு
 48. அம்பிகா said...
  //ஆஹா... அழகு....
  அற்புதமான படங்கள்.
  கடைசிபடம் ரொம்ப க்ளியரா இருக்கு.//

  நன்றி அம்பிகா, சற்றே வெளிச்சம் அதிகமானாலும் துல்லியமான விவரங்களைத் தந்து சூப்பர் மூனை நல்லா எடுக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையையும் தந்தது அந்தப் படமே:)!

  பதிலளிநீக்கு
 49. Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...
  //உங்க நிலவு படம் என்னை கவர்ந்து இங்க கொண்டு விட்டது. அருமையான புகைப்படங்கள்.//

  நன்றி மைதிலி:)! ஃபேஸ்புக்கில் படத்தை ‘விரும்பி’ப் பாராட்டியிருந்ததற்கும்.

  பதிலளிநீக்கு
 50. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //என்ன ஒரு துல்லியம்ப்பா ..யப்பா..//

  நன்றி முத்துலெட்சுமி:)!

  பதிலளிநீக்கு
 51. அன்புடன் அருணா said...
  //clarity super Ramalakshmi!//

  மிக்க நன்றி அருணா.

  பதிலளிநீக்கு
 52. அமுதா said...
  //சூப்பர்... நிலவுக்கு தான் எத்தனை முகங்கள்... எத்தனை முறை பார்த்தாலும் அழகான முகம். அந்த அழகைக் கண்டு தான் கடல் கூட ஆர்ப்பரிக்கிறது வழக்கத்திற்கு மாறாக...//

  ஆம் அமுதா, எத்தனை முறை பார்த்தாலும்...

  மிக்க நன்றி:)!

  பதிலளிநீக்கு
 53. அமைதிச்சாரல் said...
  //உங்களை தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்..//

  அழைத்த அன்புக்கு நன்றி சாரல். உங்களைப் போல சுவாரஸ்யமாக என் பெயரைப் பற்றிச் சொல்ல ஏதும் இருக்கிறதா என யோசித்துக் கொண்டிருக்கிறேன்:)!

  பதிலளிநீக்கு
 54. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  //நிலாப் படங்கள் அருமை.//

  நன்றி தங்கள் முதல் வருகைக்கும்.

  பதிலளிநீக்கு
 55. அன்புடன் மலிக்கா said...
  //நிலாப்படங்கள் அருமை மேடம் நிலான்னாலே யாருக்குதான் பிடிக்காது.
  அதிலும் எனக்கு ரொம்பபபபபபப பிடிக்கும்..//

  மிக்க நன்றி மலிக்கா:)!

  பதிலளிநீக்கு
 56. தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.

  பதிலளிநீக்கு
 57. படங்கள் போட்ட உங்களின் முந்தைய பதிவில் இருக்கும் என் கமெண்டை மீண்டும் வாசித்துக் கொள்ளவும் அல்லது இங்கே காப்பி-பேஸ்ட் செய்யவும்.

  (வழக்கம்போல் ஆச்சர்யத்தில் வாய்பிளந்து நிற்கிறேன். என்ன எழுதன்னு தெரியலை)

  பதிலளிநீக்கு
 58. @ ஹுஸைனம்மா,

  தங்கள் அக்கறையுடனான ஆலோசனை நினைவில், மனதில் இருக்கிறது:)! மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
 59. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் !

  முயற்சி திருவினையாக்கும் !

  Very nice examples of hard work and the satisfaction it brings along..

  Breathtaking view - I felt like reaching to touch it without 3D glasses on :)

  Congrats on a shot well done :)

  பதிலளிநீக்கு
 60. முழு நிலவு குறித்த முழுமையான
  தகவல்களுடனும் படங்களுடனும்
  பதிவை அமர்களப்படுத்திவிட்டீர்கள்
  நல்ல மன்நிறைவைத் தந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 61. வாவ்....

  மேடம்... கேமரா சூப்பர் வித்தை காட்டியிருக்கிறது...

  புகைப்படங்கள் கொள்ளை அழகு...

  // goma said...
  அபூர்வ நிலா அழகு நிலா சூப்பர் க்ளிக்.

  வடை சுடும் பாட்டி தெரிவார் என்று நினைத்தேன்....

  தெரியும் முன்னமே கிரி வந்து வடையைச் சுட்டு விட்டாரே....//

  பதிவையும், புகைப்படங்களையும், கூடவே கோமாவின் இந்த கமெண்டையும் மிகவும் ரசித்தேன்...

  நேரமிருப்பின் பார்க்கவும் :

  "விதை” - குறும்படம் http://jokkiri.blogspot.com/2011/03/blog-post_22.html

  கிரீன் டீ - மருத்துவ குணங்கள் http://edakumadaku.blogspot.com/2011/03/blog-post.html

  பதிலளிநீக்கு
 62. எத்தனை நிலாக்கள்..
  ம்ம்.. என்றும் உள்ளது ஒரே நிலா .. உங்கள் திறமைக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 63. சூப்பர்.. ராமலெக்ஷ்மி.. அந்த நிலாவைத்தான் நான் காமிராவில் பிடிச்சேன்ன்னு பாட தோணுது..:))

  பதிலளிநீக்கு
 64. படங்களே ஆயிரமாயிரம் கவி பாடுகின்றதே!!சூப்பர் ராமலக்ஷ்மி

  பதிலளிநீக்கு
 65. திறமை, உழைப்பு, ஆர்வம். அணைத்தும் கலந்த கலவை, கச்சிதமான குளிர்நிலவின் பிடியில் உணரமுடிகிறது. வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 66. Someone like you said...
  //Very nice examples of hard work and the satisfaction it brings along..

  Breathtaking view - I felt like reaching to touch it without 3D glasses on :)

  Congrats on a shot well done :)//

  Thanks a lot:)!

  பதிலளிநீக்கு
 67. Ramani said...
  //முழு நிலவு குறித்த முழுமையான
  தகவல்களுடனும் படங்களுடனும்
  பதிவை அமர்களப்படுத்திவிட்டீர்கள்
  நல்ல மன்நிறைவைத் தந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி ரமணி.

  பதிலளிநீக்கு
 68. R.Gopi said...
  //வாவ்....

  மேடம்... கேமரா சூப்பர் வித்தை காட்டியிருக்கிறது...

  புகைப்படங்கள் கொள்ளை அழகு...//

  நன்றி கோபி. கோமாவின் கருத்தை நானும் ரசித்தேன்:)!

  பதிலளிநீக்கு
 69. ரிஷபன் said...
  ***//எத்தனை நிலாக்கள்..

  ம்ம்.. என்றும் உள்ளது ஒரே நிலா .. உங்கள் திறமைக்கு வாழ்த்துகள்..//***

  மிக்க நன்றி ரிஷபன்.

  பதிலளிநீக்கு
 70. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //சூப்பர்.. ராமலெக்ஷ்மி.. அந்த நிலாவைத்தான் நான் காமிராவில் பிடிச்சேன்ன்னு பாட தோணுது..:))//

  நன்றி தேனம்மை:))!

  பதிலளிநீக்கு
 71. ஸாதிகா said...
  //படங்களே ஆயிரமாயிரம் கவி பாடுகின்றதே!!சூப்பர் ராமலக்ஷ்மி//

  நன்றி ஸாதிகா:)!

  பதிலளிநீக்கு
 72. சதங்கா (Sathanga) said...
  //திறமை, உழைப்பு, ஆர்வம். அனைத்தும் கலந்த கலவை, கச்சிதமான குளிர்நிலவின் பிடியில் உணரமுடிகிறது. வாழ்த்துக்கள் அக்கா.//

  நன்றி சதங்கா:)!

  பதிலளிநீக்கு
 73. நிலவிற்கே போய்விட்டு வந்த மாதிரி இருக்கு.தொட்டு பார்க்கணும்னு தோணுவது மாதிரி படங்கள்.
  சூப்பர் ராமலஷ்மி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin