திங்கள், 18 அக்டோபர், 2010

யார் அந்தச் சிறுவன்? - உயிரோசை கவிதைஅடிக்கடி கனவில் வந்தான் அந்தச் சிறுவன்
அழகான பெரிய வட்டக் கண்கள்
சிரிக்கும் போது
மேல் வரிசையின் முன்னிரெண்டு பற்கள் மட்டும்
மாட்டுப்பல் போல பெரிசாய்
கொஞ்சமே கொஞ்சம் தூக்கினாற் போல்
ஆனாலும் தெத்துப்பல் என்று சொல்ல முடியாது

கிட்டிப்புள்ளில் கில்லாடி
கோலிக் குண்டைச் சுண்டி விட்டால்
தப்பாது வைத்த குறி
மகுடிக்கு ஆடும் பாம்பைப்போல் கிறங்கிச் சுற்றும்
அவன் சாட்டைக்குப் பம்பரம்
காற்றைக் கிழித்து உயர உயரப் பறக்கும்
களத்துமேட்டில் அவன் பிடித்து நிற்கும் காற்றாடி

எனக்குச் சுட்டுப் போட்டாலும்
வராத வித்தைகளை
ஊதித்தள்ளி உவகை தந்தான்

மிகப் பரிச்சயமான முகமாய்
ஆனால் யாரென்று அறிய முடியாமல்
என் கனவுகளை நிறைத்திருந்தான்

ஒருஅதிகாலையில்,
கம்மாக் கரையிலிருந்து கொஞ்சமும் தயங்காமல்
டைவ் அடித்து நீருக்குள் குதித்தவன்
தம் பிடித்து வெளியில் வராமல்
போக்குக் காட்டியபோது
பதைத்து வியர்த்து விழித்தேன்

‘இனி கனவில் வரவே மாட்டானோ’
அழுத்தும் அலுவலக வேலைகளுக்கு நடுவிலும்
அலைக்கழித்தது அவன் சிரித்த முகம்

இரவு இரயிலடியில்
என்னைப் பெயர் சொல்லியழைத்த
ஒரு கிராமத்துப் பெரியவர்
தன்னைத் தூரத்து உறவென்று
அறிமுகம் செய்து கொண்டபோது
ஆச்சரியமாய்ப் பார்த்தேன்

வெள்ளந்தி மனிதர்,
‘சின்னதுல பார்த்ததுதான்
ஆனாலும் செல்லுல சிரிச்சுப் பேசிகிட்டே
எதுக்க நீ வந்தப்ப
முட்டைக் கண்ணும் அந்த
முன்னிரெண்டு மாட்டுப்பல்லும்
காட்டிக் கொடுத்துச்சுப்பா’ என்றார்!
*** *** ***

படம் நன்றி: உயிரோசை

75 கருத்துகள்:

 1. தெத்துபல்லும் , முட்டை கண்ணும் காட்டிக் கொடுத்துடுச்சி... எங்களுக்கும் தான். அழகான கற்பனை. உயிரோசையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி

  பதிலளிநீக்கு
 2. அம்பிகா said...
  //தெத்துபல்லும் , முட்டை கண்ணும் காட்டிக் கொடுத்துடுச்சி... எங்களுக்கும் தான். அழகான கற்பனை. உயிரோசையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி//

  காட்டிக் கொடுத்திடுச்சா:)? ஆழ்மன ஏக்கங்களின் வெளிப்பாடாக அமைந்து போன கனவுகள்! வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அம்பிகா.

  பதிலளிநீக்கு
 3. புவனேஸ்வரி ராமநாதன் said...
  //கவிதை அழகு.//

  மிக்க நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.

  பதிலளிநீக்கு
 4. இராமசாமி கண்ணண் said...
  //அருமையான கவிதை//

  நன்றிகள் இராமசாமி கண்ணன்.

  பதிலளிநீக்கு
 5. ரொம்ப நல்லாருக்கு ராமல்ஷ்மி! கற்பனையை ரசித்தேன்.
  வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 6. ஆழ்மன அசைவுகள்,
  ஆண்வடிவு எடுத்து
  ஆட்டம் போட்டிருக்கிறதா கனவில். கனவுகளுக்கு இருக்கும் சுதந்திரம் நினைவில் இல்லைதான்:(

  மிக அருமை ராமலக்ஷ்மி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. நிறைவேறாத ஆசைகள் கனவுகளாகவும் கற்பனையாகவும்...நிஜம்தான் அக்கா.

  கவிதை அழகு.

  உயிரோசையில் வந்ததற்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. அழகான கற்பனை ராமலக்ஷ்மி . எனக்கும் இதே போல ஒரு அனுபவம் உண்டு. ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 9. கற்பனைக் கடலில் ஆழமாக மூழ்கி அருமையான முத்தெடுத்துச் சர்ம் தொடுத்துவருகிறீர்கள்.பாராட்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 10. ஆழ்மன ஏக்கங்களே கனவுகளாய்.. கவிதை அருமையா வந்திருக்கு.உயிரோசைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. நல்ல கற்பனைங்க ராமலஷ்மி. எளிமையான வார்த்தைகள் நல்ல புரிதலை ஏற்படுத்துகிறது.........

  பதிலளிநீக்கு
 12. ஆல்பா நிலையில் கண்ட கனவா சகோ

  அருமை சகோ

  விஜய்

  பதிலளிநீக்கு
 13. //எனக்குச் சுட்டுப் போட்டாலும்
  வராத வித்தைகளை
  ஊதித்தள்ளி உவகை தந்தான்//

  :) கனவுலகம் ரசிப்பதற்குரியது!

  அதில் வரும் கதாபாத்திரங்கள், நிஜ உலகில் நம்மால் உருவங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு,உணர்வுகளில் நம்மால் எதிர்ப்பார்க்கப்படுகின்ற அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியவர்களாய் உலா வரும் கனவுலகம் !

  பதிலளிநீக்கு
 14. அக்கா, பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. அருமையாக இருக்கிறது, அக்கா..

  பதிலளிநீக்கு
 15. அழகான வரிகளில் அருமையான கனவு அக்கா.

  பதிலளிநீக்கு
 16. சந்தோஷங்கள் வந்தால் உலகையே மறப்பது பலருக்கும் இயல்புதான். ஆனால் நாம் நம்முடைய நினைவுகளையே பறக்க விட்டுவிட்டு எங்கே எதைத் தேடுகிறோம் என்று யோசிக்க வைத்த கவிதை. உங்களுடைய படைப்புகள் பெரும்பாலும் ஒவ்வொருவரின் பால்ய நினைவுகளை மீட்டேடுப்பதாகவே இருக்கிறது. வாசகர்களுக்கு இதை விட பெரிய பரிசு எதையும் தந்து விட முடியாது. உயிரோசையில் பிரசுரமாதற்கு வாழ்த்துக்கள். நினைவுகளை மீட்டு தந்ததற்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 17. எனக்கும் அட்டிக்கடி ஒரு அழகான பொண்ணு கனவுல வருது யாரென்றுதான் தெரியல....

  சரி உங்கட கவிதை யதார்த்தம்

  பதிலளிநீக்கு
 18. ராமலக்ஷ்மி, உயிரோசையில் வந்த கவிதை அருமை.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. சந்தனமுல்லை said...
  //ரொம்ப நல்லாருக்கு ராமல்ஷ்மி! கற்பனையை ரசித்தேன்.
  வாழ்த்துகள்!//

  நன்றி முல்லை:)!

  பதிலளிநீக்கு
 20. வல்லிசிம்ஹன் said...
  //ஆழ்மன அசைவுகள்,
  ஆண்வடிவு எடுத்து
  ஆட்டம் போட்டிருக்கிறதா கனவில். கனவுகளுக்கு இருக்கும் சுதந்திரம் நினைவில் இல்லைதான்:(

  மிக அருமை ராமலக்ஷ்மி. வாழ்த்துகள்.//

  கனவுகளின் சுதந்திரத்துக்கு எல்லையே இல்லைதான்! நன்றி வல்லிம்மா:)!

  பதிலளிநீக்கு
 21. அன்புடன் அருணா said...
  //பூங்கொத்து!//

  நன்றி அருணா.

  பதிலளிநீக்கு
 22. சுந்தரா said...
  //நிறைவேறாத ஆசைகள் கனவுகளாகவும் கற்பனையாகவும்...நிஜம்தான் அக்கா.

  கவிதை அழகு.

  உயிரோசையில் வந்ததற்கும் வாழ்த்துக்கள்!//

  மிக்க நன்றி சுந்தரா.

  பதிலளிநீக்கு
 23. ஜெஸ்வந்தி said...
  //அழகான கற்பனை ராமலக்ஷ்மி . எனக்கும் இதே போல ஒரு அனுபவம் உண்டு. ரசித்தேன்//

  பலருக்கும் இருக்கக் கூடும். நன்றி ஜெஸ்வந்தி.

  பதிலளிநீக்கு
 24. goma said...
  //கற்பனைக் கடலில் ஆழமாக மூழ்கி அருமையான முத்தெடுத்துச் சரம் தொடுத்துவருகிறீர்கள்.பாராட்டுகிறேன்//

  அன்பான பாராட்டுக்கு நன்றி கோமா.

  பதிலளிநீக்கு
 25. அமைதிச்சாரல் said...
  //ஆழ்மன ஏக்கங்களே கனவுகளாய்.. கவிதை அருமையா வந்திருக்கு.உயிரோசைக்கு வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி அமைதிச்சாரல்.

  பதிலளிநீக்கு
 26. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
  //நல்ல கற்பனைங்க ராமலஷ்மி. எளிமையான வார்த்தைகள் நல்ல புரிதலை ஏற்படுத்துகிறது.........//

  நன்றிகள் நித்திலம்.

  பதிலளிநீக்கு
 27. விஜய் said...
  //ஆல்பா நிலையில் கண்ட கனவா சகோ

  அருமை சகோ//

  அப்படி ஒரு கோணம் உள்ளதோ:)? நன்றி விஜய்!

  பதிலளிநீக்கு
 28. ஆயில்யன் said...
  ***//எனக்குச் சுட்டுப் போட்டாலும்
  வராத வித்தைகளை
  ஊதித்தள்ளி உவகை தந்தான்//

  :) கனவுலகம் ரசிப்பதற்குரியது!

  அதில் வரும் கதாபாத்திரங்கள், நிஜ உலகில் நம்மால் உருவங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு,உணர்வுகளில் நம்மால் எதிர்ப்பார்க்கப்படுகின்ற அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியவர்களாய் உலா வரும் கனவுலகம் !/***

  மிகச் சரி. நன்றி ஆயில்யன்.

  பதிலளிநீக்கு
 29. Chitra said...
  //அக்கா, பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. அருமையாக இருக்கிறது, அக்கா..//

  நன்றிகள் சித்ரா.

  பதிலளிநீக்கு
 30. சுசி said...
  //அழகான வரிகளில் அருமையான கனவு அக்கா.//

  மிக்க நன்றி சுசி.

  பதிலளிநீக்கு
 31. திருவாரூரிலிருந்து சரவணன் said...
  //சந்தோஷங்கள் வந்தால் உலகையே மறப்பது பலருக்கும் இயல்புதான். ஆனால் நாம் நம்முடைய நினைவுகளையே பறக்க விட்டுவிட்டு எங்கே எதைத் தேடுகிறோம் என்று யோசிக்க வைத்த கவிதை. உங்களுடைய படைப்புகள் பெரும்பாலும் ஒவ்வொருவரின் பால்ய நினைவுகளை மீட்டேடுப்பதாகவே இருக்கிறது. வாசகர்களுக்கு இதை விட பெரிய பரிசு எதையும் தந்து விட முடியாது. உயிரோசையில் பிரசுரமாதற்கு வாழ்த்துக்கள். நினைவுகளை மீட்டு தந்ததற்கு நன்றிகள்.//

  மிக்க மகிழ்ச்சி. நன்றி சரவணன்.

  பதிலளிநீக்கு
 32. மயாதி said...
  //எனக்கும் அட்டிக்கடி ஒரு அழகான பொண்ணு கனவுல வருது யாரென்றுதான் தெரியல....

  சரி உங்கட கவிதை யதார்த்தம்//

  தெரியவரும் எப்போதாவது:)! முதல் வருகைக்குக்கும் கருத்துக்கும் நன்றி மயாதி.

  பதிலளிநீக்கு
 33. கோமதி அரசு said...
  //ராமலக்ஷ்மி, உயிரோசையில் வந்த கவிதை அருமை.

  வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 34. நல்லாயிருக்குங்க கவிதை... மாட்டுப்பல்லை கவிதை காட்டுகிறது..

  பதிலளிநீக்கு
 35. முதல்ல அவசரமா படிச்சுட்டேன்...

  இப்போ திரும்ப படித்த பின்பு புரிந்தது......

  அருமை..

  அன்புடன்

  ஈ.. ரா

  பதிலளிநீக்கு
 36. ஈ ரா said...
  //முதல்ல அவசரமா படிச்சுட்டேன்...

  இப்போ திரும்ப படித்த பின்பு புரிந்தது......

  அருமை..//

  நல்லது ஈ ரா:)! மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 37. சசிகுமார் said...
  //அருமை//

  நன்றி சசிகுமார்.

  பதிலளிநீக்கு
 38. சூப்பர்! மிக அழகான இனிமையான கவிதை!

  பதிலளிநீக்கு
 39. கனவு ரொம்ப அழகு!
  ரசித்துப் படித்தேன்.

  பதிலளிநீக்கு
 40. இப்படியாகணும், அப்படியாகணும் ‘கனவு காணுவாங்க’ சிலர்!

  நீங்க ‘கனவிலேயே காணுறீங்க’ போல!!

  :-))

  பதிலளிநீக்கு
 41. உயிரோசையில் தொடர்ந்து இடம்பெறுவது கண்டு மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துகள் :-)

  பதிலளிநீக்கு
 42. சுகமும் இதமும் கனவுகளிலும் கவிதைகளிலும்... அருமை.

  உயிரோசையில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 43. வித்தியாசமான ஒன்று ராமலக்ஷ்மி .. நல்லா இருக்கு..

  பதிலளிநீக்கு
 44. எஸ்.கே said...
  //சூப்பர்! மிக அழகான இனிமையான கவிதை!//

  நன்றிகள் எஸ் கே.

  பதிலளிநீக்கு
 45. Sriakila said...
  //கனவு ரொம்ப அழகு!
  ரசித்துப் படித்தேன்.//

  மிக்க நன்றி ஸ்ரீஅகிலா.

  பதிலளிநீக்கு
 46. ஹுஸைனம்மா said...
  //இப்படியாகணும், அப்படியாகணும் ‘கனவு காணுவாங்க’ சிலர்!

  நீங்க ‘கனவிலேயே காணுறீங்க’ போல!!

  :-))//

  அதே:))! நன்றி ஹுஸைனம்மா!!

  பதிலளிநீக்கு
 47. "உழவன்" "Uzhavan" said...
  //உயிரோசையில் தொடர்ந்து இடம்பெறுவது கண்டு மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துகள் :-)//

  மிக்க நன்றி உழவன்:)!

  பதிலளிநீக்கு
 48. ஸ்ரீராம். said...
  //சுகமும் இதமும் கனவுகளிலும் கவிதைகளிலும்... அருமை.

  உயிரோசையில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 49. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //வித்தியாசமான ஒன்று ராமலக்ஷ்மி .. நல்லா இருக்கு..//

  நன்றி முத்துலெட்சுமி:)!

  பதிலளிநீக்கு
 50. இந்த கவிதைய படிச்சிட்டு மனசுல ஒரு கேள்வி.
  உங்கள பாராட்டறதா இல்லை என்னை மகிழ்வித்த கவிதையை பாராட்டறதா?????
  விடையளியுங்களேன் தயவு செய்து.

  பதிலளிநீக்கு
 51. \\வல்லிசிம்ஹன் said...

  ஆழ்மன அசைவுகள்,
  ஆண்வடிவு எடுத்து
  ஆட்டம் போட்டிருக்கிறதா கனவில். கனவுகளுக்கு இருக்கும் சுதந்திரம் நினைவில் இல்லைதான்:(

  மிக அருமை ராமலக்ஷ்மி. வாழ்த்துகள்.
  \\\\\\\\\\\\\\\\\\\\

  அன்பான வரிகள்,

  அருமையான அளந்து எடுத்து
  செதுக்கிய வார்த்தை,

  நீ நல்லா இரு நானும் அப்படியே
  எனக்கு எதிரி இல்லை
  நானும் யாரையும் எதிர்க்கவில்லை

  உன் அக்கா நலமா, தம்பி நலமா, உன்னிடம் நான் நலமா

  சாப்பிட்டாயா? தூக்கம் வருதா?
  மடியில் இடம் வேணுமா,
  உன் மகள் எப்படி,
  மகன் என்றால் அடம்! உலக நியதி,
  .
  .
  .
  .

  இன்றைக்கு பார்த்த அம்மாவின் பார்வைக்கு சமம் வல்லிம்மா வின் எல்லா பின்னூட்டமும்....

  பதிலளிநீக்கு
 52. ஆணின் பார்வையில் ஓர் அட்டகாசமான கவிதை.. உயிரோசையில் வாராவாரம் எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 53. naveen (தமிழமிழ்தம்) said...
  //இந்த கவிதைய படிச்சிட்டு மனசுல ஒரு கேள்வி.
  உங்கள பாராட்டறதா இல்லை என்னை மகிழ்வித்த கவிதையை பாராட்டறதா?????
  விடையளியுங்களேன் தயவு செய்து//

  கவிதையை:)! நன்றி நவீன்.

  பதிலளிநீக்கு
 54. yeskha said...
  //ஆணின் பார்வையில் ஓர் அட்டகாசமான கவிதை.. உயிரோசையில் வாராவாரம் எதிர்பார்க்கிறேன்.//

  வாரவாரமா(ஆ..)? அதெப்படி சாத்தியம்? நன்றி எஸ் கா:)!

  பதிலளிநீக்கு
 55. தமிழ் மணத்தில் வாக்களித்த 20 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 25 பேருக்கும் என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 56. கற்பனைகள் சில் நேரம் எங்கேயோ கண்ட உண்மை போல நிற்கும்..இதைப் படித்த போது அப்படித்தான் தோன்றியது..வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..

  பதிலளிநீக்கு
 57. தியாவின் பேனா said...
  //அருமையான அழகுக் கவிதை.//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 58. சே.குமார் said...
  //அழகான கற்பனை...
  அருமையான கவிதை.//

  நன்றிகள் குமார்.

  பதிலளிநீக்கு
 59. பாச மலர் / Paasa Malar said...
  //கற்பனைகள் சில் நேரம் எங்கேயோ கண்ட உண்மை போல நிற்கும்..இதைப் படித்த போது அப்படித்தான் தோன்றியது..வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..//

  உண்மைதான் பாசமலர். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 60. Kanchana Radhakrishnan said...
  //கவிதை அழகு.//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 61. கவிதை நன்றாக உள்ளது.
  கடையம் ஆனந்த எனது நண்பர். அவருடைய வலைப்பூ மூலம் உங்களின் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி.
  என்னுடைய வலைப்பூவையும் பாருங்கள். பார்த்து உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள்.
  அன்புடன்
  ராஜா
  http://www.rajawinparvaiyele.blogspot.com/

  பதிலளிநீக்கு
 62. ஆழ்மன ஏக்கங்கள், எண்ணங்கள் என்னும் முத்துக்களைக் கோர்த்த அழகான முத்துச்சரம்!
  இனிய வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!

  பதிலளிநீக்கு
 63. @ ராஜா,

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. வருகிறேன் வலைப்பக்கம் நேரம் கிடைக்கும் போது.

  பதிலளிநீக்கு
 64. @ மனோ சாமிநாதன்,

  கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin