Thursday, August 26, 2010

மன்னாதி மன்னர்கள்

ராஜாதி ராஜ.. ராஜ மார்த்தாண்ட.. ராஜ கம்பீர..

யாரு யாரு’ ? பொறுங்களேன்.

'ன்னைக்குப் பொருக்காட்சிக்குப் போகலாமா?’ தம்பி கேட்டதும் மருமக்களுக்கு மட்டுமல்ல அவன் அக்காக்கள் எங்கள் மூவருக்கும் கூட குஷிதான். சின்ன வயதில் போனது. அப்புறம் நெல்லைக்கு போன சமயங்களில் அது வாய்த்திருக்கவில்லை. “பொருக்காட்சின்னா..?” -இது தங்கையின் புத்திரன். அமெரிக்காவில் பெரிய மால்களுக்கும் பெங்களூரில் மால்களுடன், குளிரூட்டப்பட்டு அல்லது ஒரே கொட்டகையின் கீழ் கம்பளமிடப்பட்ட பொருட்காட்சிகளுக்குமே பழகி விட்டிருந்த பிள்ளைகளுக்கு விளக்க முற்பட்ட போது “ஓ கைப்புள்ள திருவிழா மாதிரியா?” என்றார்கள். நல்ல தெளிவுதான். வாழ்க வடிவேலு.

கோவில் மற்றும் விசேஷ வீடுகளுக்கு செல்லுகையில் அழகாய் பாவாடை சட்டை அணியப் பழகிவிட்டிருந்த தங்கை மகளுக்கென கொட்டி வைத்திருந்தார்கள் வண்ண வண்ண வளையல்களை முதல் கடையில். அங்கேயே நேரம் எடுக்க ஆரம்பிக்க காத்திருக்கும் பாலபாடமும் ஆரம்பமாகி விட்டது. ஒலிபெருக்கியில் ஓங்கி இசைந்த பாடலுக்குத் தானாக ஆட்டம் வந்தது தம்பியின் செல்ல மகனுக்கு. தோள்களை ஸ்டைலாக அசைத்து கைகளைச் சொடுக்கிட ஆரம்பிக்க சுற்றி நின்று ரசித்திருந்தார்கள் மற்றவர்கள். ஆடிக்காற்றில் ஆளுயரத்துக்குத் திடீர் திடீரெனக் கிளம்பியப் புழுதிப் புயலைச் சமாளிக்க முதலில் திணறினாலும், ஓரிரு முறைகளில் எதிர்திசை திரும்பி இமைகளை எப்படி இறுக்கிக் கொள்வது என்பது கண் வந்த கலையாயிற்று.

தை எடுத்தாலும் ஆறு ரூபாய்’. இந்தக் கடையைப் பார்த்து தாள மாட்டாத ஆச்சரியம் . ‘ஒன்லி சிக்ஸ் ருபீஸ்? எப்படி சாத்தியம்?’ என ஒரே வியப்பு. சின்னத் தங்கையின் சின்ன மகன் அங்கே ஆறு ரூபாய்க்கு ஒரு அசத்தல் கண்ணாடி வாங்கி மாட்டிக் கொண்டான். அடுத்தடுத்த கடைகளில் ராமரின் வில் அம்புகள், இந்திய ரூபாய்கள் கொண்ட கீ செயின் என பார்த்துப் பார்த்து ஏதேதோ வாங்கிப் பையை நிரப்பிக் கொண்டான். தற்சமயம் அவனது அமெரிக்கப் பள்ளியில் இந்த பர்ச்சேஸ் எல்லாம்தான் ஹாட் டாபிக் என சாட்டில் தெரிவித்தாள் தங்கை. தன் மேசையில் வரிசையாக அடுக்கி வைத்து அங்கே ஒரு கண்காட்சி நடத்திக் கொண்டிருக்கிறானாம்.

தேசம் விட்டு தேசம் வந்து..

[ஆறு ரூபாய் அசத்தல் கண்ணாடியில் தம்பியும், முதன்முதல் பஞ்சு மிட்டாய் சுவைக்கப் போகும் பரவசத்தில் அண்ணனும்..]

விற்பனை உத்தி
உருண்டு திரண்டு..

மிட்டாய் உருண்டு திரண்டு பஞ்சாகி வரும் அழகை ரசித்துப் பார்த்திருந்து வாங்கிச் சப்புக் கொட்டி மகிழ்ந்தார்கள். மைதானத்தில் பல குழந்தைகள் ஒளிரும் கொம்புகளுடன் திரிந்தார்கள். கொம்பு சீவி விட்டவர் யாரெனத் தெரிந்து போனது சிறிது தூரம் நடந்ததும். நல்ல விற்பனைதான். விளம்பர உத்தி தந்த வெற்றி. ‘ரொம்பதான் அலட்டிக்காதே. உனக்கு மட்டுமென்ன ரெண்டு கொம்பா முளச்சிருக்கு?’ எனும் கேள்வியை அடிக்கடி சந்திக்க நேருபவரும் கூட வாங்கி மாட்டிக் கொள்ளலாம்:)!

ஒரு பக்கம் திறந்த மேடையில், ஒளிவெள்ளத்தில், அதிரும் சினிமா பாடல்களுக்கு ஜோராக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது ஒரு ஜோடி. லைவ்வாக ‘மானாட மயிலாட’! பிடிக்காமல் போகுமா மக்களுக்கு? சரியான கூட்டம் அங்கு.

டக் தடக்’ எனத் தூக்கித் தூக்கி அடித்த ராட்டினம் ஒன்றில், மொத்த வண்டிக்கும் தனி ஆளாய் அமர்ந்து அசராமல் பவனி வந்து வெற்றிப் புன்னகையுடன் இறங்கினாள் தங்கை மகள். அதற்கென்ன என்கிறீர்களா? சொல்கிறேன். அடுத்து நாங்கள் நின்றிருந்தது பேய் வீட்டின் (ஹாண்டட் ஹவுஸ்) முன்.

இப்படித்தான், நான் நான்காம் வகுப்பில் இருந்தபோது நெல்லை மருத்துக்கல்லூரி பொருட்காட்சிக்குப் பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றிருந்தார்கள். அங்கே பேய் நடனமென எலும்புக்கூடுகள் ஆட, பார்த்து விட்டு வெளியே வந்து தேம்பித் தேம்பி அழுத வகுப்பு மாணவியர் நினைவுக்கு வர எச்சரித்தேன் அப்படியும் இருக்கலாமென. ‘ஹை!! ஸ்கெலட்டன் டான்ஸ். நல்லாதான் இருக்கும்’ பிள்ளைகள் அடம் செய்ய தலைக்கு பத்து ரூபாய் என டிக்கெட் வாங்கப் பட்டது.

தயாராகக் காத்திருந்த முகமூடிப் பேய் ‘பே’ என தலையை மட்டும் நீட்டி அச்சுறுத்த, முதல் ஆளாய் காலை எடுத்து வைத்த தங்கை மகள் சற்றும் அதை எதிர்பாராத நிலையில் அழத் தொடங்கி விட்டாள். அவள் அம்மா உடனேயே வெளியே அழைத்து வந்து விட்டாலும் கொஞ்ச நேரம் அழுதுதான் நிறுத்தினாள்.

முன் தினம் முரப்பநாடு ஆற்றுக்குப் போயிருந்த போது ‘தண்ணீர் கலர் ப்ரெளனாக இருக்கே’ என்று ஒரு அண்ணனும், ‘இறங்கினால் மீன் கடிக்கே’ என ஒரு அண்ணனும் நீச்சல்குள நினைவுகளோடு கரையோடு நின்று விட, சின்ன அண்ணாரு மட்டும் பயமின்றி குளித்தார் என்றாலும் குளிரில் வெடவெடத்தார். இவள் மட்டுமே நடுஆற்றுக்குப் போய் கொஞ்சமும் பயமின்றி மூழ்கி மூழ்கி வெளிவந்தாள். சமீபத்திய தாய்லாந்து பயணத்தில், அடியில் அதல பாதாளமாய் இருக்க, ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு(‘ஃப்ளைட் ஆஃப் தி கிபான்’) குரங்கு போல கயிற்றின் வழி சென்றவள், எப்போதும் தைரியசாலியாய் பாராட்டப்பட்டவள் இந்த முகமூடிப் பேயிடம் ஏமாந்து போய் விட்டாள்.

ஏழு வயதுதானே? எதையோ எதிர்பார்த்து என்னென்னவோ கணக்குப் போட்டு நாம் எடுத்து வைக்கிற அடிகள் எதிர்பாராத திருப்பத்தில் சறுக்கி விடுவதில்லையா? அனுபவங்களைப் பாடங்களாய் காணும் பக்குவம் இன்றைய பிள்ளைகளுக்கு நிறையவே இருக்கிறது. தாண்டி வருவாள்.

பேய் வீட்டுக்குள் நுழைந்த மற்ற சூரர்களைப் பற்றிப் பார்ப்போம். தங்கையை மிரட்டிய பேய் மேலே அண்ணன்களுக்கு இருந்திருக்கிறது உள்ளுக்குள்ளே கோபம். நுழைகையில் பயம் காட்டிய பேயே உள்பக்கமாக ஓடிஓடி அடுத்தடுத்த திருப்பங்களிலும் அச்சுறுத்தியதைக் கவனித்து, சுதாகரித்துக் கொண்டவர்கள் கடைசித் திருப்பத்தில் பேய் அலறும் முன் ‘பே’ எனத் தாங்கள் அலறி வெலவெலக்க வைத்து விட்டார்கள் வீரதீரப் பேயை. பிழைத்துக் கொள்வார்கள்.

சிரித்தபடி பிள்ளைகள் வெளிவர, பேய் முகமூடியைத் தூக்கி என் தங்கையிடம் ‘யக்கா யக்கா, டீக்கு ஒரு ரெண்டு ரூவா கொடுத்துட்டுப் போக்கா’ என்றிருக்கிறது பரிதாபமாக. ஐந்து டீக்கு காசை கொடுத்து விட்டு வந்ததாக தங்கை சொன்ன போது பேயின் பிழைப்பு மேல் இரக்கமே ஏற்பட்டது.

சிரித்து வாழ வேண்டும்


ராசாதி ராசா யார் என்று தெரிந்து விட்டதா?இவரை சிரிக்க வைக்கக் கூட்டத்தினர் ஏதேதோ கோமாளித் தனங்கள் செய்து, தமது செய்கையை தாமே ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தது நல்ல வேடிக்கை. அதுவேதான் நோக்கமெனில் பாராட்டத்தான் வேண்டும்.

ராசா விறைப்பாக நின்றாலும் எங்கோ பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொருவரின் முயற்சிகளையும் உன்னிப்பாகக் கவனித்தபடிதான் இருந்தார். அப்படியும் நரசிம்ம ராவைத் தோற்கடிக்கும் முகத்துடனேயே நின்றிருக்க இதொன்றும் அத்தனை சிரமமில்லை போலிருக்கிறதென நினைத்து, வீடு திரும்பியதும் ஆளாளுக்கு அந்த ராசா போல இருந்து பார்த்தோம். ஊஹூம். யாராலும் ஓரிரு நிமிடம் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. உண்மையில் அதில் வெல்லும் ஆர்வம் எவருக்கும் இல்லை என்றே கொள்ள வேண்டும். கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் சிரிக்காமல் வாழ யாருக்குதான் இருக்கும் விருப்பம்?

ஆனால் சவால் ராசாவோ ஐம்பதாயிரத்தில் ஐம்பது பைசாவைக் கூட யாருக்கும் விட்டுக் கொடுப்பதாய் இல்லை. மகுடம் தலைக்கு ஏறிவிட்டால் அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்வதிலேதானே இன்றைய சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளுக்குக் காலம் கழிகிறது! இன்னொரு கோணத்தில் பார்த்தால் சாமான்னியர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா எனும் சிந்தனையும் எழுகிறது. பெயர், பொருள், புகழ், வேலை, பதவி என இருப்பதைத் தக்க வைத்துக் கொள்ளவதுதான் எல்லோருக்குமே வாழ்நாள் போராட்டமாய் உள்ளது. சக்கரவர்த்திகளுக்குச் சற்றே கூடுதலான போராட்டம். அவ்வளவுதான் வித்தியாசம்.

இவ்வேந்தரைப் பொறுத்த மட்டில் கிரீடம் என்பது சவாலில் தோற்றுப் போகாமல் எஜமானின் ஐம்பதாயிரதைக் காப்பாற்றித் தன் வேலையைத் தக்க வைத்துக் கொள்வதே எனும் கனமான உண்மை, பளபளத்த அவரது உடைகளுக்குள் பதுங்கி விட்டுக் கொண்டிருந்தது.

சற்றுப் பொறுத்துக் கிடைத்த காட்சிதான் என்ன அழகு! நிகழ்ச்சி இடைவேளையின் போது தன் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ரொம்ப அந்நியோன்மாய் மக்களிடம் அளவளாவிக் கொண்டிருந்தார் ராசா. அரியாசனத்தில் இருப்பவர்கள் இப்படிப் பொதுமக்களை அணுகினால் எத்தனை நன்றாக இருக்கும்? எட்டிப் பார்த்த ஏக்கத்தை எளிதாகத் தட்டிவிட முடியவில்லை.

தூத்துக்குடியிலிருந்து வரவேண்டிய பெங்களூர் எக்ஸ்பிரசுக்காக கோவில்பட்டி ரயில் நிலையத்தில் காத்திருந்தோம் நானும் மகனும். பெஞ்சில் அமர்ந்திருந்த எங்களைக் கடந்து சென்றார்கள் நாலைந்து பேர். அதில் ஒல்லியான உருவத்துடன் ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ‘எங்கிட்ட நடக்குமா? அப்படியே கொடல வுருவி மாலையாப் போட்டுறுவேன்ல. அந்தப் பயம் இருக்கு அவனுக்கு’ என உதார் விட்டுக் கொண்டிருந்தார்.

”கொடல என்றால்?” உச்சரிப்பு பிடிபடாமல் இழுத்தான் மகன். ”கொடல இல்லை, குடல்.” விளக்கினேன். உதார் மன்னன் சொன்னதன் அர்த்தம் முழுதாகப் புரியவர சிரிப்பை அடக்க முடியவில்லை அவனுக்கு. ”ஆளப் பார்த்தா அப்படியொண்ணும் ரவுடி மாதிரி தெரியலயே” என்றான். ”வெள்ளந்தி மனிதர்கள்தானடா. இப்படி உதார் விட்டுக் கொள்வதில் கிடைக்கிறது ஒரு அற்ப சந்தோஷம்” சொல்லி முடிக்கவில்லை நான்..

அடுத்து வந்து கொண்டிருந்தார்கள் பளீர் வெள்ளையும் சுளீர் சொள்ளையுமாய், மடித்துக் கட்டிய வேட்டியோடு மூன்று பேர். நடுவிலிருந்த பெரியவருக்கு அறுபது வயது இருக்கும். ”எங்க அக்கா வூட்ல இருக்குல அந்தச் சட்டை. அத மட்டும் நா போட்டேன்னு வையு” விரல்களைச் சொடுக்கி ”ஒரு.. ஒரு.. எளவட்டப் பயலும் எம்முன்ன நிக்க முடியாதுல்ல” ரவுசு விட்டபடி அக்கா வூட்டுச் சட்டையை அப்போதே அணிந்திருக்கும் தோரணையில் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார். ‘ஏதேனும் டீ ஷர்டாய் இருக்கும்’ மறுபடி அடக்க மாட்டாமல் மகன் சிரிக்க எனக்கோ உலகெங்குமே வயது வரம்பின்றி ரவுசு மன்னர்கள் அடிக்கடி தங்களைப் பற்றி விடும் சவுண்டு நினைவுக்கு வந்தது. ‘யூத்து...’!!!

***

இந்தப் பதிவின் ஒரு பகுதி ஆனந்த விகடனின் ‘என் விகடன்’ மதுரை பதிப்பின் வலையோசையில்..
நன்றி விகடன்!

61 comments:

 1. பொருட்காட்ச்சிக்கு உங்களோடு நானும் வலம் வந்த மாதிரி ரசித்தேன்.
  நரசிம்மராவ் பற்றிய நக்கல் சூப்பர்....
  மகுடம் விட்டுக் கொடுக்காத மன்னரும் அருமை.....
  மொத்தத்தில் தங்கை மகன்களுக்கு நல்ல outing.
  நல்ல பகிர்வு.....

  ReplyDelete
 2. ஹைய்ய்ய்ய்ய் பஞ்சு முட்டாயிய்ய்ய்ய்ய்

  அப்படியே வாங்கினதும் கொஞ்சம் கொஞ்சமா பிச்சு தின்னு கலர் உதடு நல்ல ரோஸா மாறியதும், உதார் வுட்டுக்கிட்டு திரியறதும் உண்டே :)


  // எதையோ எதிர்பார்த்து என்னென்னவோ கணக்குப் போட்டு நாம் எடுத்து வைக்கிற அடிகள் எதிர்பாராத திருப்பத்தில் சறுக்கி விடுவதில்லையா?//

  சரிதான் ! :)

  கோவில்பட்டி ரயில் நிலைய சம்பாஷணைகள் எங்கே பொதுஜனங்கள் அதிகமிருக்கும் இடத்திலும் இது போன்ற ஆர்வம் மிகச்செய்யும் செயல்கள் எப்பொழுதும் இருக்கும் :)

  ReplyDelete
 3. சுவாரஸ்யமான அனுபவங்கள். எனக்கும் தஞ்சை மருத்துவக் கல்லூரி கண்காட்சியில் பார்த்த எலும்புக்கூடு டான்ஸ் மற்றும் உருகும் மனிதன் நினைவெல்லாம் வந்தது.

  ReplyDelete
 4. கூடவே கூட்டிட்டு போனத்துக்கு ரொம்ப நன்றி அக்கா.

  ReplyDelete
 5. \\பெயர், பொருள், புகழ், வேலை, பதவி என இருப்பதைத் தக்க வைத்துக் கொள்ளவதுதான் எல்லோருக்குமே வாழ்நாள் போராட்டமாய் உள்ளது. சக்கரவர்த்திகளுக்குச் சற்றே கூடுதலான போராட்டம். அவ்வளவுதான் வித்தியாசம்.

  இவ்வேந்தரைப் பொறுத்த மட்டில் கிரீடம் என்பது சவாலில் தோற்றுப் போகாமல் எஜமானின் ஐம்பதாயிரதைக் காப்பாற்றித் தன் வேலையைத் தக்க வைத்துக் கொள்வதே எனும் கனமான உண்மை, பளபளத்த அவரது உடைகளுக்குள் பதுங்கி விட்டுக் கொண்டிருந்தது.

  சற்றுப் பொறுத்துக் கிடைத்த காட்சிதான் என்ன அழகு! நிகழ்ச்சி இடைவேளையின் போது தன் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ரொம்ப அந்நியோன்மாய் மக்களிடம் அளவளாவிக் கொண்டிருந்தார் ராசா. அரியாசனத்தில் இருப்பவர்கள் இப்படிப் பொதுமக்களை அணுகினால் எத்தனை நன்றாக இருக்கும்? எட்டிப் பார்த்த ஏக்கத்தை எளிதாகத் தட்டிவிட முடியவில்லை.\\

  மைண்ட்ல வச்சுக்கறேன்! எனக்கு மட்டும் ஒரு எம் எல் ஏ சீட் கொடுத்து பாருங்க.நான் எப்படி இருக்கேன்னு.

  ReplyDelete
 6. மிக மெதுவாக அழகா ரசிச்சு படிச்சேன் இந்த பதிவை. அலுக்காம இருந்தது பதிவு. பை தி பை ஞாயிறு என் சின்ன அக்காவின் வெள்ளிவிழா திருமண நாளுக்கு ஸ்ரீரங்கம் போகனும். நானும் இப்படி அக்காக்கள் தம்பி எல்லோரும் ஒன்னா இருப்போமே:-)))

  இதை படிக்கும் போது எதிர்வரும் அந்த ஞாயிறு தான் நியாபகம் முழுக்க முழுக்க!!!!

  ReplyDelete
 7. அருமை
  அதுவும் ராஜாவைப்பத்திய பகுதிகளில் நிகழ்வும் அதையொட்டிய உங்கள் சிந்தனைகளும் மிகவே அருமை..ராமலக்‌ஷ்மி

  ReplyDelete
 8. அரியாசனத்தில் இருப்பவர்கள் இப்படிப் பொதுமக்களை அணுகினால் எத்தனை நன்றாக இருக்கும்? எட்டிப் பார்த்த ஏக்கத்தை எளிதாகத் தட்டிவிட முடியவில்லை.//

  எல்லோருக்கும் ஏக்கம் மட்டுமே மிச்சம்.
  நல்ல பகிர்வு.
  நன்றி.

  ReplyDelete
 9. நாங்களும் உங்களோடு பொருட்காட்சியை வலம் வந்த உணர்வு.
  கூடவே உங்கள் சிந்தனை சிப்பியில் சிதறிய நன் முத்துக்களும்...
  அருமையான பகிர்வு.

  ReplyDelete
 10. மன்னர் தானே இருக்கார்? மன்னர்கள் எங்கே? ஹிஹிஹி...
  எங்க ஊரில் இறங்கினதும் எனக்கும் இப்படி ஒரு ரவுடி@தாதா தோரணை வந்து விடும்,.. ஒரே ரகளை தான்.:))

  ReplyDelete
 11. கடைசி மூணு பத்தியும் வெகு சுவாரஸ்யம்...

  ReplyDelete
 12. /*“ஓ கைப்புள்ள திருவிழா மாதிரியா?” என்றார்கள். நல்ல தெளிவுதான். வாழ்க வடிவேலு.
  */
  :-))
  aarambam mudhal mudivu varai suvarasyamaana asathal. angange simmasana mannar pothumakkalidam pesinaal enra karuththukkaludan... nalla pakirvu

  ReplyDelete
 13. சற்றுப் பொறுத்துக் கிடைத்த காட்சிதான் என்ன அழகு! நிகழ்ச்சி இடைவேளையின் போது தன் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ரொம்ப அந்நியோன்மாய் மக்களிடம் அளவளாவிக் கொண்டிருந்தார் ராசா. அரியாசனத்தில் இருப்பவர்கள் இப்படிப் பொதுமக்களை அணுகினால் எத்தனை நன்றாக இருக்கும்? எட்டிப் பார்த்த ஏக்கத்தை எளிதாகத் தட்டிவிட முடியவில்லை.
  கற்பனை சுகமாத்தான் இருக்குது...

  எங்கே சினிமாக்காரர்கள் வேண்ணா உட்னே பார்த்திடறாங்க..

  ReplyDelete
 14. intresting, சகா!

  குடும்பத்தோடு இருந்தது போலான ஒரு நிறைவு.

  ReplyDelete
 15. கோவில்பட்டி ரயில் நிலைய உரையாடல்கள் அறிந்து, ரசித்து சிரித்தேன். வெள்ளந்தி மனதின் வெளிப்படையான பேச்சுக்கள்...... ம்ம்ம்ம்......

  ReplyDelete
 16. நிறுத்தி நிறுத்தி மூன்று முறை படித்தேன். சேலத்திலும் பொருட்காட்சி போட்டிருக்கிறார்கள். மூன்று வருடம் ஆயிற்று போய் சுற்றிப்பார்த்து. கடைசியாய் அம்மாவுடன் போனது. இந்த வருடம், போடா, இதைப்போய் என்ன பார்ப்பது என்றிருந்தேன். பதிவைப்படித்தவுடன் இப்போது ஆபீஸ், ப்ளாக் பெரி, லேப்டாப்பையெல்லாம் தூக்கிக் கடாசி விட்டு கண்டிப்பாக போய் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. பழைய நண்பர்களை கூட்டிப்போக வேண்டும், மிளகாய் பஜ்ஜி வாங்க வேண்டும், பெரிய அப்பளம் வாங்க வேண்டும், கொலம்பஸூக்கு அடியில் போய் நின்று "ஆ"வென வேடிக்கை பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஆசை வந்து விட்டது. டைப் செய்யும் போதே கண்ணில் நீர் திரையிடுகிறது பழைய ஜாலி டேஸை நினைத்து.

  ReplyDelete
 17. பொருக்காட்சி எங்கேங்க?. நெல்லையிலா??

  பேய்வீட்டுக்கே போயி பேயை மிரட்டிய வீரர்கள் வாழ்க :-))))))))

  ReplyDelete
 18. நல்ல பகிர்வு, வழக்கம் போலவே உங்கள் படங்கள் அருமை :-), நீங்கள் புகைப்பட கலை படித்தவரா ராமலக்ஷ்மி?

  ReplyDelete
 19. அருமை ராமலக்ஷ்மி; புகை படம்; எழுத்து இரண்டிலும் கலக்குகிறீர்கள்

  ReplyDelete
 20. ரசித்துப் படித்தேன்.. நல்ல அனுபவம்..

  ReplyDelete
 21. எவ்வளவு அழகாகத் தொகுத்து எழுதியிருக்கிறீர்கள்.அருமை.
  ராஜாவைப் பற்றிய சிந்தனைகளும் படங்களும் ரசித்தேன்.

  பஞ்சு மிட்டாய் பார்த்தே ரொம்பநாளாப்போச்சு.தம்பியிடம் பறித்துச் சாப்பிடவேணும்போல இருக்கு !

  ReplyDelete
 22. பொருட்காட்சிக் காட்சிகள் இளமைக் கால நினைவுகளை நினைவில், சுகமாக, இதமான தென்றலாக வீசச் செய்தது...

  கோவில்பட்டி ரயில் நிலைய உதார் பார்ட்டிகளின் வீர தீரப் பேச்சுகள் புன்னகை வரவழைத்தன.

  ReplyDelete
 23. விறுவிறுப்பான நடைங்க

  ||எதையோ எதிர்பார்த்து என்னென்னவோ கணக்குப் போட்டு நாம் எடுத்து வைக்கிற அடிகள் எதிர்பாராத திருப்பத்தில் சறுக்கி விடுவதில்லையா?||

  நிதர்சனம்

  கட்டுரை நடை வண்ணமயமாய் கைவருகிறது. நிறைய எழுதுங்கள்

  ReplyDelete
 24. ஹைய் பஞ்சு முட்டாயி...

  பொருட்காட்சிக்கு உங்களோடு நானும் வந்த மாதிரி ரசித்தேன்.

  ReplyDelete
 25. //கூடவே கூட்டிட்டு போனத்துக்கு ரொம்ப நன்றி அக்கா//

  ஒரே வரியில் சுசி எழுதிட்டாங்களே.. நல்ல பகிர்வு.

  ReplyDelete
 26. நான் மிஸ் பண்ணின பொருட்காட்சியைச் சுத்திப் பார்த்த திருப்தி!!

  ReplyDelete
 27. பொருட்காட்ச்சிக்கு எங்களையும் அழைத்து சென்று விட்டீர்கள் ராமலக்ஷ்மி.


  பஞ்சு மிட்டாய்,மன்னாதி மன்னர்கள்,கோவில்பட்டிமனிதர் எல்லாம் கண் முன் தெரிந்தார்கள்.

  படங்கள் அருமை.

  மதுரையில் சித்திரை பொருட்காட்சியை பார்த்த நினைவுகள்
  வருகிறது. உங்கள் பதிவை படித்தவுடன்.

  ReplyDelete
 28. goma said...
  //பொருட்காட்ச்சிக்கு உங்களோடு நானும் வலம் வந்த மாதிரி ரசித்தேன்.
  நரசிம்மராவ் பற்றிய நக்கல் சூப்பர்....
  மகுடம் விட்டுக் கொடுக்காத மன்னரும் அருமை.....
  மொத்தத்தில் தங்கை மகன்களுக்கு நல்ல outing.
  நல்ல பகிர்வு.....//

  நன்றி கோமா:)!

  ReplyDelete
 29. ஆயில்யன் said...
  //ஹைய்ய்ய்ய்ய் பஞ்சு முட்டாயிய்ய்ய்ய்ய்

  அப்படியே வாங்கினதும் கொஞ்சம் கொஞ்சமா பிச்சு தின்னு கலர் உதடு நல்ல ரோஸா மாறியதும், உதார் வுட்டுக்கிட்டு திரியறதும் உண்டே :)//

  :)!

  //கோவில்பட்டி ரயில் நிலைய சம்பாஷணைகள் எங்கே பொதுஜனங்கள் அதிகமிருக்கும் இடத்திலும் இது போன்ற ஆர்வம் மிகச்செய்யும் செயல்கள் எப்பொழுதும் இருக்கும் :)//

  உண்மைதான். நன்றி ஆயில்யன்.

  ReplyDelete
 30. ஸ்ரீராம். said...
  //சுவாரஸ்யமான அனுபவங்கள். எனக்கும் தஞ்சை மருத்துவக் கல்லூரி கண்காட்சியில் பார்த்த எலும்புக்கூடு டான்ஸ் மற்றும் உருகும் மனிதன் நினைவெல்லாம் வந்தது.//

  நன்றி ஸ்ரீராம்:)!

  ReplyDelete
 31. சுசி said...
  //கூடவே கூட்டிட்டு போனத்துக்கு ரொம்ப நன்றி அக்கா..//

  கூட வந்ததற்கு நன்றி சுசி:)!

  ReplyDelete
 32. அபி அப்பா said...
  ***\\ அரியாசனத்தில் இருப்பவர்கள் இப்படிப் பொதுமக்களை அணுகினால் எத்தனை நன்றாக இருக்கும்? எட்டிப் பார்த்த ஏக்கத்தை எளிதாகத் தட்டிவிட முடியவில்லை.\\

  மைண்ட்ல வச்சுக்கறேன்! எனக்கு மட்டும் ஒரு எம் எல் ஏ சீட் கொடுத்து பாருங்க.நான் எப்படி இருக்கேன்னு.//***

  நல்லது. எந்தத் தொகுதி வேண்டும்:)?

  ReplyDelete
 33. அபி அப்பா said...
  //மிக மெதுவாக அழகா ரசிச்சு படிச்சேன் இந்த பதிவை. அலுக்காம இருந்தது பதிவு. பை தி பை ஞாயிறு என் சின்ன அக்காவின் வெள்ளிவிழா திருமண நாளுக்கு ஸ்ரீரங்கம் போகனும். நானும் இப்படி அக்காக்கள் தம்பி எல்லோரும் ஒன்னா இருப்போமே:-)))

  இதை படிக்கும் போது எதிர்வரும் அந்த ஞாயிறு தான் நியாபகம் முழுக்க முழுக்க!!!!//

  இன்றுதான் அந்த ஞாயிறு:)! வெள்ளிவிழா காணும் தம்பதியருக்கு என் வாழ்த்துக்கள். உறவுகள் ஒன்றாக சந்தித்து மகிழ்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

  ReplyDelete
 34. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //அருமை
  அதுவும் ராஜாவைப்பத்திய பகுதிகளில் நிகழ்வும் அதையொட்டிய உங்கள் சிந்தனைகளும் மிகவே அருமை..ராமலக்‌ஷ்மி//

  நன்றி முத்துலெட்சுமி.

  ReplyDelete
 35. அமைதி அப்பா said...
  ***//அரியாசனத்தில் இருப்பவர்கள் இப்படிப் பொதுமக்களை அணுகினால் எத்தனை நன்றாக இருக்கும்? எட்டிப் பார்த்த ஏக்கத்தை எளிதாகத் தட்டிவிட முடியவில்லை.//

  எல்லோருக்கும் ஏக்கம் மட்டுமே மிச்சம்.
  நல்ல பகிர்வு.
  நன்றி.***

  உண்மைதான். நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 36. அம்பிகா said...
  //நாங்களும் உங்களோடு பொருட்காட்சியை வலம் வந்த உணர்வு.
  கூடவே உங்கள் சிந்தனை சிப்பியில் சிதறிய நன் முத்துக்களும்...
  அருமையான பகிர்வு.//

  மிக்க நன்றி அம்பிகா.

  ReplyDelete
 37. தமிழ் பிரியன் said...
  //மன்னர் தானே இருக்கார்? மன்னர்கள் எங்கே? ஹிஹிஹி...
  எங்க ஊரில் இறங்கினதும் எனக்கும் இப்படி ஒரு ரவுடி@தாதா தோரணை வந்து விடும்,.. ஒரே ரகளை தான்.:))//

  குறிப்பாக கடைசி பத்திகளில் உங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்ட உதார் மன்னர், ரவுசு மன்னர்களை கவனிக்கத் தவறி விட்டீர்களே:)! நன்றி தமிழ் பிரியன்.

  ReplyDelete
 38. ப்ரியமுடன் வசந்த் said...
  //கடைசி மூணு பத்தியும் வெகு சுவாரஸ்யம்...//

  ரசித்தமைக்கு நன்றி வசந்த்.

  ReplyDelete
 39. அமுதா said...
  ***/*“ஓ கைப்புள்ள திருவிழா மாதிரியா?” என்றார்கள். நல்ல தெளிவுதான். வாழ்க வடிவேலு.
  */
  :-))
  aarambam mudhal mudivu varai suvarasyamaana asathal. angange simmasana mannar pothumakkalidam pesinaal enra karuththukkaludan... nalla pakirvu/***

  நன்றி அமுதா:)!

  ReplyDelete
 40. கண்ணகி said...
  ***//சற்றுப் பொறுத்துக் கிடைத்த காட்சிதான் என்ன அழகு! நிகழ்ச்சி இடைவேளையின் போது தன் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ரொம்ப அந்நியோன்மாய் மக்களிடம் அளவளாவிக் கொண்டிருந்தார் ராசா. அரியாசனத்தில் இருப்பவர்கள் இப்படிப் பொதுமக்களை அணுகினால் எத்தனை நன்றாக இருக்கும்? எட்டிப் பார்த்த ஏக்கத்தை எளிதாகத் தட்டிவிட முடியவில்லை.
  கற்பனை சுகமாத்தான் இருக்குது...//

  எங்கே சினிமாக்காரர்கள் வேண்ணா உட்னே பார்த்திடறாங்க..***

  உண்மைதான் கண்ணகி. வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 41. பா.ராஜாராம் said...
  //intresting, சகா!

  குடும்பத்தோடு இருந்தது போலான ஒரு நிறைவு.//

  நன்றி பா ரா:)!

  ReplyDelete
 42. Chitra said...
  //கோவில்பட்டி ரயில் நிலைய உரையாடல்கள் அறிந்து, ரசித்து சிரித்தேன். வெள்ளந்தி மனதின் வெளிப்படையான பேச்சுக்கள்...... ம்ம்ம்ம்......//

  நன்றி சித்ரா:)!

  ReplyDelete
 43. ஜெஸ்வந்தி said...
  //அருமையான பகிர்வு.//

  நன்றி ஜெஸ்வந்தி.

  ReplyDelete
 44. yeskha said...
  //நிறுத்தி நிறுத்தி மூன்று முறை படித்தேன். சேலத்திலும் பொருட்காட்சி போட்டிருக்கிறார்கள். மூன்று வருடம் ஆயிற்று போய் சுற்றிப்பார்த்து. கடைசியாய் அம்மாவுடன் போனது. இந்த வருடம், போடா, இதைப்போய் என்ன பார்ப்பது என்றிருந்தேன். பதிவைப்படித்தவுடன் இப்போது ஆபீஸ், ப்ளாக் பெரி, லேப்டாப்பையெல்லாம் தூக்கிக் கடாசி விட்டு கண்டிப்பாக போய் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. பழைய நண்பர்களை கூட்டிப்போக வேண்டும், மிளகாய் பஜ்ஜி வாங்க வேண்டும், பெரிய அப்பளம் வாங்க வேண்டும், கொலம்பஸூக்கு அடியில் போய் நின்று "ஆ"வென வேடிக்கை பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஆசை வந்து விட்டது. டைப் செய்யும் போதே கண்ணில் நீர் திரையிடுகிறது பழைய ஜாலி டேஸை நினைத்து.//

  மிக்க நன்றி எஸ்கா. கண்டிப்பாகப் போய் வாருங்கள். அதுவும் பழைய நண்பர்களுடன் போய் வந்தால் கண்டிப்பாகப் பால்ய நாட்களை மீட்டெடுப்பீர்கள்:)!

  ReplyDelete
 45. அமைதிச்சாரல் said...

  //பொருக்காட்சி எங்கேங்க?. நெல்லையிலா??

  பேய்வீட்டுக்கே போயி பேயை மிரட்டிய வீரர்கள் வாழ்க :-))))))))//

  நெல்லையேதான்! நன்றி அமைதிச் சாரல். உங்கள் வாழ்த்துக்களை வீரர்களிடம் சேர்ப்பித்து விடுகிறேன்:))!

  ReplyDelete
 46. சிங்கக்குட்டி said...
  //நல்ல பகிர்வு, வழக்கம் போலவே உங்கள் படங்கள் அருமை :-),..

  நன்றி சிங்கக் குட்டி.

  // நீங்கள் புகைப்பட கலை படித்தவரா ராமலக்ஷ்மி?//

  இல்லை:)! ஆனால் படங்களை மெருகேற்றுவது போன்ற விஷயங்கள் வலையுலகம் வந்த பின்னரே, PiT மூலமாக ஓரளவு கற்றுக் கொண்டுள்ளேன்.

  ReplyDelete
 47. மோகன் குமார் said...
  //அருமை ராமலக்ஷ்மி; புகை படம்; எழுத்து இரண்டிலும் கலக்குகிறீர்கள்//

  மிக்க நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 48. பதிவுலகில் பாபு said...
  //ரசித்துப் படித்தேன்.. நல்ல அனுபவம்..//

  முதல் வருகைக்கு நன்றி பாபு.

  ReplyDelete
 49. சசிகுமார் said...
  //அருமை//

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 50. ஹேமா said...
  //எவ்வளவு அழகாகத் தொகுத்து எழுதியிருக்கிறீர்கள்.அருமை.
  ராஜாவைப் பற்றிய சிந்தனைகளும் படங்களும் ரசித்தேன்.

  பஞ்சு மிட்டாய் பார்த்தே ரொம்பநாளாப்போச்சு.தம்பியிடம் பறித்துச் சாப்பிடவேணும்போல இருக்கு !//

  ரசித்தமைக்கு நன்றி ஹேமா:)!

  ReplyDelete
 51. Ammu said...
  ***//பொருட்காட்சிக் காட்சிகள் இளமைக் கால நினைவுகளை நினைவில், சுகமாக, இதமான தென்றலாக வீசச் செய்தது...

  கோவில்பட்டி ரயில் நிலைய உதார் பார்ட்டிகளின் வீர தீரப் பேச்சுகள் புன்னகை வரவழைத்தன.//***

  இந்த அனுபவங்கள் என்றைக்கு நினைவில் சுகமாக இருக்க பதிந்து வைத்து விட்டேன்:)! நன்றி அம்மு!

  ReplyDelete
 52. ஈரோடு கதிர் said...
  //விறுவிறுப்பான நடைங்க

  ||எதையோ எதிர்பார்த்து என்னென்னவோ கணக்குப் போட்டு நாம் எடுத்து வைக்கிற அடிகள் எதிர்பாராத திருப்பத்தில் சறுக்கி விடுவதில்லையா?||

  நிதர்சனம்

  கட்டுரை நடை வண்ணமயமாய் கைவருகிறது. நிறைய எழுதுங்கள்//

  நிச்சயமாய். மிக்க நன்றி கதிர்.

  ReplyDelete
 53. சே.குமார் said...
  //ஹைய் பஞ்சு முட்டாயி...

  பொருட்காட்சிக்கு உங்களோடு நானும் வந்த மாதிரி ரசித்தேன்.//

  நன்றி குமார்.

  ReplyDelete
 54. James Vasanth said...
  ***//கூடவே கூட்டிட்டு போனத்துக்கு ரொம்ப நன்றி அக்கா//

  ஒரே வரியில் சுசி எழுதிட்டாங்களே.. நல்ல பகிர்வு.***

  நன்றி ஜேம்ஸ்:)!

  ReplyDelete
 55. ஹுஸைனம்மா said...
  //நான் மிஸ் பண்ணின பொருட்காட்சியைச் சுத்திப் பார்த்த திருப்தி!!//

  நன்றி ஹுஸைனம்மா. அடுத்தமுறை வாய்ப்பு கிடைத்தால் மிஸ் செய்யாதீர்கள்:)!

  ReplyDelete
 56. கோமதி அரசு said...
  //பொருட்காட்ச்சிக்கு எங்களையும் அழைத்து சென்று விட்டீர்கள் ராமலக்ஷ்மி.


  பஞ்சு மிட்டாய்,மன்னாதி மன்னர்கள்,கோவில்பட்டிமனிதர் எல்லாம் கண் முன் தெரிந்தார்கள்.

  படங்கள் அருமை.

  மதுரையில் சித்திரை பொருட்காட்சியை பார்த்த நினைவுகள்
  வருகிறது. உங்கள் பதிவை படித்தவுடன்.//

  ரசித்தமைக்கு மிக்க நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 57. தமிழ் மணத்தில் வாக்களித்த 15 பேருக்கும், Indli-யில் வாக்களித்த 29 பேருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 58. ஓ.. கோவில்பட்டி ஸ்டேசன்லதான் இருந்தீங்களா.. கடலை மிட்டாய் வாங்குனீங்களா?

  ReplyDelete
 59. @ உழவன்,

  வாங்காமல் வருவேனா:)? நன்றி உழவன்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin