புதன், 21 அக்டோபர், 2009

தொழில்


ந்துருவுக்கு சந்தோஷமாக இருந்தது தன் தொழில் நேர்த்தியை நினைத்து. ஐந்து வருடங்களில் தனி ஆளாக இருபது முகமூடிக் கொள்ளைகள் நடத்தி விட்டான். ஏடிஎம், ஒதுக்குப் புறமான தனிவீடுகள், சிலபல கடைகளின் கல்லாக்கள் என அவன் கைவரிசை காவல்துறைக்குப் பெரும்தலைவலியாகவே இருந்து வந்தது. போலீசாரின் திறமையைப் புகழ்ந்து ஏதேனும் செய்தி பத்திரிகையிலோ தொலைக்காட்சியிலோ வந்தால் தாங்க முடியாத சிரிப்புத்தான் வரும் அவனுக்கு.

அன்றைய ப்ராஜக்ட்டையும் போட்ட திட்டம் இம்மியும் பிசகாமல் முடித்து விட்டிருந்தான். அவன் குறி வைத்தது ஒரு சின்ன நகைக் கடைக்கு. நகை என்று வந்து விட்டால் சின்னது பெரியது என்பதெல்லாம் ஒரு பொருட்டா என்ன? குண்டுமணி அளவேயானாலும் தங்கம் தங்கமாயிற்றே.

ஓரளவு அதிகமான போக்குவரத்துக் கொண்ட சாலை ஒன்றிலிருந்து பிரியும் சந்தின் முனையில் இருந்தது அந்தக் கடை. நேர் எதிரே பிள்ளையார் கோவில். அதுவும் காலை பத்து மணிக்கெல்லாம் நடை சாத்தி விடுவார்கள். கடையையும் கோவிலையும் விட்டால் அந்தச் சந்து முழுவதும் தனி வீடுகள். மதிய நேரம் ஆள் நடமாட்டமே இருப்பதில்லை.

ஒரு பக்கம் கலகலப்பான சாலை என்பதால் நகைக்கடை உரிமையாளர் காவலாளி ஏதும் வைத்துக் கொள்ளவில்லை. சரியாக இரண்டு மணியளவில் தனது நோஞ்சான் மச்சானின் பொறுப்பில் கடையினை விட்டுவிட்டு உரிமையாளர் சாப்பிடக் கிளம்பிச் சென்றால் திரும்புவதற்கு இரண்டு மணிநேரமாகும். கூட ஒரே ஒரு விற்பனைப் பெண்மணிதான். ஒருவாரமாக தினம் அந்த சமயத்தில் வந்து நின்று ஃபீல்ட் வொர்க் செய்தாயிற்று. பிள்ளையார் தும்பிக்கையை நீட்டிப் பிடித்தால்தான் உண்டு என நினைத்துக் கொண்டான் சந்துரு.

எதிர் திசையில் தன் பைக்கை நிறுத்தி விட்டு சாலையைக் கடக்க நிற்கையில் சரியாக ஒரு ஸ்கூட்டி வந்து நின்றது கடை முன்னே. ஒரு இளம் பெண்ணும், நடுத்தர வயதுப் பெண்மணியும் இறங்கினார்கள். சந்துரு அசரவில்லை. போட்ட திட்டம் நடந்தே ஆக வேண்டும். எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கத்தான் ப்ரீஃகேஸில் சகல ஆயுதங்களும் இருக்கிறதே.

கடைக்குள் நுழையும் முன் தயாராக வைத்திருந்த முகமூடியை மாட்டிக் கொண்டவன், மடமடவென செயலில் இறங்கினான். தானியங்கிக் கதவாகையால் பிறர் சந்தேகத்துக்கு இடமின்றித் தாழிட எளிதாயிற்று. கல்லாவிலிருந்த நோஞ்சான் திடுக்கிட்டு சுகாதரிப்பற்குள் நெற்றியில் துப்பாக்கியை அழுத்திஹேண்ட்ஸ் அப்என்றான்.

அலாரம் எதையாவது அழுத்த நினைச்சே அவ்ளோதான். நான் சொல்றதையெல்லாம் ஒழுங்காக் கேட்டா நாலு பேருக்கும் உசுராவது மிஞ்சும். கூப்பாடு போடலாம்னு நினைச்சீங்க.. ஆளுங்க வருமுன்னயே அடுத்தடுத்து சுட்டுப்போட்டுட்டுப் போயிட்டேயிருப்பேன். இது சைலன்சர் பொறுத்தின துப்பாக்கி நெனப்புல இருக்கட்டும்என்றவன் விற்பனைப் பெண்மணியைப் பார்த்துதொற எம் பொட்டியஎன்றான்.

அதிலிருந்த கயிறுகளையும் துணிப்பந்துகளையும் அவளை விட்டே எடுக்க வைத்து வாடிக்கையாளர்கள் கைகளையும் நோஞ்சானின் கைகளையும் கட்டவைத்து வாயில் துணிப் பந்துகளைத் திணிக்கச் செய்தான்.

இப்ப ஒழுங்கு மரியாதையா ஷோகேஸில் இருக்கிற அம்புட்டு நகையையும் இதுலஅள்ளிப் போடல அப்புறம் ஒம் பொணத்ததான் இங்கிருந்து அள்ளிட்டு போக வேண்டியிருக்கும்எனப் பெட்டியைக் காட்ட நடுநடுங்கி அவன் சொன்னவாறே செய்தாள் அவள். காரியம் முடிந்ததும் ஏற்கனவே விதிர்விதிர்த்துப் போயிருந்த அந்தப் பெண்ணைக் கட்டிப் போடுவதும், வாயில துணியை அடைப்பதும் கஷடமாக இல்லை.

கொஞ்ச நேரத்துல ஒங்க முதலாளி வந்து அவுத்து விடுவாரு. வரட்டுமா கண்ணுங்களாஎன்றபடி யாரும் வருகிறார்களா எனக் கவனமாகப் பார்த்து விட்டு, வெளியேறும் சமயம் முகமூடியைக் கழட்டிக் கொண்டவன் பைக்கில் ஏறி சிட்டாய்ப் பறந்து வந்து விட்டான்.
*

என்ன மேடம் சொல்றீங்க. அவனை நேரில பார்த்ததே இல்லைங்கறீங்க. இப்பவும் உங்க யாராலேயும் முகத்தைப் பார்க்க முடியல. அப்புறம் எப்படி?" ஆச்சரியமாய்க் கேட்டார் ராம்.

ஆனால் வாடிக்கையாளராக மாட்டிக் கொண்ட பாமாவோ உறுதியாக இருந்தாள் அது அவன்தான் என்று.

இன்ஸ்பெக்டர் நான் சொன்ன தகவலை வச்சுக்கிட்டு உடனே அவனை வளைச்சுப் புடிக்க முடியுமான்னு முதல்ல பாருங்க. புடிச்ச பிறகு இதோ இந்த நம்பரில் என்னைக் கூப்பிடுங்க. பொண்ணு ரொம்ப பயந்து போயிருக்கா. இப்ப நான் கிளம்பறேன்என்றவள் மகளை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டியை நோக்கிச் செல்ல அவளை தடுக்க விரும்பவில்லை ராம்.

அங்கே குண்டு இங்கே குண்டுஎன வரும் அனாமத்து தொலைபேசித் தகவல்களை எப்படி ஒதுக்க முடியாதோ அதே போல இதையும் எடுத்துக் கொண்டால் என்ன எனத் தோன்றிற்று. அது மட்டுமின்றி பாமாவின் உறுதி மேல் ஏற்கனவே ஒரு நம்பிக்கை படர்ந்து விட்டிருந்தது.
*

அடுத்த சில மணி நேரத்தில் பாமா வீட்டில் இருந்தார் ராம்.

உங்களை ஸ்டேஷனுக்கெல்லாம் அலைக்க வேண்டாமேன்னு நானே வந்துட்டேன் தேங்க் பண்ண. நீங்க சொன்ன ஏஜன்ஸியிலே போய் விசாரிச்சதுமே வீட்டு அட்ரஸ் கிடச்சுட்டு. மஃப்டியில் ரவுண்டு கட்டி நின்னு அவன் வீட்டுக்குள்ள நுழையும் போதேப் புடிச்சுட்டோம். நீங்க எப்பேர்பட்ட உதவி செஞ்சிருக்கீங்க தெரியுமா? எனக்கு அவார்டு கிடைக்கோ இல்லையோ, நிச்சயமா உங்களுக்கு ரிவார்டு வாங்கிக் கொடுப்பேன்.”

அதெல்லாம் வேண்டாம். ஒரு சிட்டிசனா என் கடமையைத்தானே செஞ்சேன்.”

இருந்தாலும் க்ரேட் நீங்க. அவனோட மெயின் தொழிலு கொள்ளை. ஆனா, ஊரோட பார்வைக்கு அப்பாவியாக் காட்டிக்க ஒரு தொழில். என்னா கில்லாடிங்கறீங்க! சரி, இப்பவாவது சொல்லுங்க எப்படி அவனை கைகாட்டினீங்கன்னு..”

இன்ஸ்பெக்டர், அந்த ஏஜன்ஸியிலிருந்து கடந்த அஞ்சு வருஷமா எங்க கம்பெனிக்கு சப்ளையரா இவன்தான் வந்துட்டிருக்கான். முதல்ல இதக் கேளுங்க. நான் பத்து வருஷம் முன்னே மும்பையில் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து ஒருத்தர் ஏதோ விஷயமாய் எங்க மேனஜர்ட்ட பேச ஃபோன் போட்டார். அவர்ஹலோன்னு சொன்ன அடுத்த செகன்ட் . ‘யெஸ் அருண்ன்னு பேரைச் சொல்ல அசந்தே போயிட்டார். அதுபோலத்தான் அவன்ஹேண்ட்ஸ் அப்ன்னதுமே எனக்குப் புரிஞ்சு போச்சு..”

அங்கே சிறையில் சந்துருவுக்கு, ‘எங்கேடா வச்சிருக்க முன்ன கொள்ளையடிச்சதையெல்லாம்எனக் கேட்டு போலீஸ் தன்னைச் செய்ய போகிற சித்திரவதையை விட, ‘எப்படி எப்படி எப்படி மாட்டினோம்என்கிற சிந்தனையே மிகப் பெரும் சித்திரவதையாய் இருக்க..

இங்கே இன்ஸ்பெக்டர் ராம், பாமா சொல்வதை வியப்பு அடங்காமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

நீங்கன்னு இல்ல, பொதுவா எல்லோருமே ஒரு ஆளைக் கண்ணால பார்த்து உள்வாங்கித்தான் அடையாளம் கண்டுக்கறீங்க. ஆனால் என்னை மாதிரியானவங்க காதால குரலை உள்வாங்கினாலே ஆளைத் தெரிஞ்சிடும்.”

இப்போது ராமின் முகத்திலிருந்த வியப்பு குழப்பமாக மாறுவதைக் கவனித்த பாமா சிரித்தாள்.

ஏன்னா அது எங்க தொழில் இன்ஸ்பெக்டர். இருபது வருஷமா டெலிஃபோன் ஆப்பரேட்டரா இருக்கேன்.”

***
*** *** ***

படம்: இணையத்திலிருந்து...76 கருத்துகள்:

 1. புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
  புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
  பல தள செய்திகள்...
  ஓட்டுப்பட்டை வேண்டாம்...
  எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
  முழுவதும் தமிழில் படிக்க....

  தமிழ்செய்திகளை வாசிக்க

  (இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

  (விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் புக்மார்க் செய்ய

  தமிழ்செய்திகளை இணைக்க

  ஆங்கில செய்திகளை வாசிக்க

  வலைப்பூ தரவரிசை

  சினிமா புக்மார்க்குகள்

  சினிமா புகைப்படங்கள்

  பதிலளிநீக்கு
 2. ”ஹேண்ட்ஸ் அப்”புக்கு ஒரு ஹேண்ட் ஷேக்.

  ஜான்ஸிராணி குதிரையில் பவனி வருகிறார்.பராக் பராக் பராக்

  பதிலளிநீக்கு
 3. சூப்பர் அக்கா...

  அப்டி இப்டீன்னு யோசிக்க வச்சு கடைசீல நச்சுன்னு முடிச்சிட்டீங்க...

  வெற்றி பெற வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 4. //ஆடுற குதிரையோ ஓடுற குதிரையோ, ஏறிட்டன்ல...? அப்போ நீங்க?”//

  காலரியில உக்காந்துக்கிட்டு கையைசத்து வாழ்த்துக்கள் சொல்லிக்கிட்டிருக்கேன் :))

  ஒரு வேளை அந்த அடையாளம் கண்டுபுடிச்ச பாமா நம்ம
  “மேஜர் சுந்தர்ராஜன்” கேரக்டர்ல ஹாஹாஹா நாந்தான் அந்த கொள்ளைகூட்டத்து தலைவி இப்ப அவன் தனியா பிசினஸ் ஆரம்பிச்சுட்டான்னு அதான் புடிச்சு போடமுடிவு செஞ்சேன்னு சொல்லுவாங்களோன்னு எதிர்பார்த்தேன் :))

  பதிலளிநீக்கு
 5. மிகப் பிராமாதம். என்னால் கடைசிவரை கற்பனைப் செய்துப் பார்க்கவேயில்லை.

  மிக அழகு. கதை சொன்னவிதம்.

  பதிலளிநீக்கு
 6. //
  “ஏன்னா அது எங்க தொழில் இன்ஸ்பெக்டர். இருபது வருஷமா டெலிஃபோன் ஆப்பரேட்டரா இருக்கேன்.”

  /// ‘நச்’ இங்கவச்சிட்டீங்க...நல்லாருக்கு
  ராமலஷ்மி ,ஆடுகுதிரைஅழகுப்பெண்ணுக்கு சுத்திப்போடுங்க!

  பதிலளிநீக்கு
 7. ராம‌ல‌க்ஷ்மி மேட‌ம்..

  க‌தை ந‌ல்லா இருக்கு... அதுவும் இந்த‌ காமெடி ட‌ய‌லாக் என்னை க‌ளுக்கென்று சிரிக்க‌ வைத்த‌து...

  //பிள்ளையார் தும்பிக்கையை நீட்டிப் பிடித்தால்தான் உண்டு என நினைத்துக் கொண்டான் சந்துரு.//

  வித்தியாச‌மான‌ முடிவு...

  வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்....

  பதிலளிநீக்கு
 8. நச்னு இருக்கு, வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 9. T.V.Radhakrishnan said...

  //நச்//

  முத்துச்சரத்துக்கு இது உங்கள் முதல் வருகை.
  இந்தச் சிறுகதைக்கு முதல் பாராட்டும் உங்களதே.
  இரண்டுக்கும் என் நன்றிகள்:)!

  பதிலளிநீக்கு
 10. goma said...

  // ”ஹேண்ட்ஸ் அப்”புக்கு ஒரு ஹேண்ட் ஷேக். //

  ஹாப்பியா குலுக்கிக்கறேன்:)! நன்றி கோமா.

  //ஜான்ஸிராணி குதிரையில் பவனி வருகிறார்.பராக் பராக் பராக்//

  பின்னாடியே சீக்கிரமா அடுத்த குதிரையில் நீங்களும் வரணும்னு கேட்டுக்கறேன்:)!

  பதிலளிநீக்கு
 11. சுசி said...

  // சூப்பர் அக்கா...

  அப்டி இப்டீன்னு யோசிக்க வச்சு கடைசீல நச்சுன்னு முடிச்சிட்டீங்க...

  வெற்றி பெற வாழ்த்துக்கள்....//

  கதை பிடித்திருப்பதுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சுசி:)!

  பதிலளிநீக்கு
 12. ஆயில்யன் said...
  //காலரியில உக்காந்துக்கிட்டு கையைசத்து வாழ்த்துக்கள் சொல்லிக்கிட்டிருக்கேன் :))//

  நன்றி, இந்த ஊக்கம் தரும் உற்சாகம்தான் எங்களுக்குப் பரிசு ஆயில்யன்:)!

  // ஒரு வேளை அந்த அடையாளம் கண்டுபுடிச்ச பாமா நம்ம
  “மேஜர் சுந்தர்ராஜன்” கேரக்டர்ல ஹாஹாஹா நாந்தான் அந்த கொள்ளைகூட்டத்து தலைவி இப்ப அவன் தனியா பிசினஸ் ஆரம்பிச்சுட்டான்னு அதான் புடிச்சு போடமுடிவு செஞ்சேன்னு சொல்லுவாங்களோன்னு எதிர்பார்த்தேன் :))//

  ஹிஹி, அவங்க நல்ல சிட்டிஸன் தானே? கள்ளப் பயலைவிட தொழில் நேர்த்தி கொண்டவங்கதானே? அவனை விடவும் மகா கில்லாடிதானே:)?

  கருத்துக்கு நன்றி ஆயில்யன்.

  பதிலளிநீக்கு
 13. இராகவன் நைஜிரியா said...

  //மிகப் பிராமாதம். என்னால் கடைசிவரை கற்பனைப் செய்துப் பார்க்கவேயில்லை.//

  இது போதும் எனக்கு:)!

  // மிக அழகு. கதை சொன்னவிதம்.//

  நடையையும் ரசித்தமைக்கு நன்றி ராகவன்.

  பதிலளிநீக்கு
 14. ஷைலஜா said...

  //‘நச்’ இங்கவச்சிட்டீங்க...நல்லாருக்கு//

  முடிவுலதானே வைக்கணும், ரொம்ப நன்றி ஷைலஜா.

  // ராமலஷ்மி ,ஆடுகுதிரைஅழகுப்பெண்ணுக்கு சுத்திப்போடுங்க!//

  செஞ்சிடுறேன் எனக்கு நானே:))!

  பதிலளிநீக்கு
 15. பிரியமுடன்...வசந்த் said...

  //நல்ல ட்விஸ்ட்,,,நல்லாயிருக்கு...//

  ரொம்ப நன்றி வசந்த்.

  பதிலளிநீக்கு
 16. கதைக்கு பவர்பாயிண்ட் படங்களிலிருந்து போட்டிருக்கிறீர்கள் அதுவும் ஒரு, நச்சோ நச்

  பதிலளிநீக்கு
 17. R.Gopi said...

  ராம‌ல‌க்ஷ்மி மேட‌ம்..

  ***/ க‌தை ந‌ல்லா இருக்கு... அதுவும் இந்த‌ காமெடி ட‌ய‌லாக் என்னை க‌ளுக்கென்று சிரிக்க‌ வைத்த‌து...

  //பிள்ளையார் தும்பிக்கையை நீட்டிப் பிடித்தால்தான் உண்டு என நினைத்துக் கொண்டான் சந்துரு.// /***

  ஹி, நன்றி கோபி:)!

  //வித்தியாச‌மான‌ முடிவு...

  வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்....//

  முடிவு பற்றிய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கோபி.

  பதிலளிநீக்கு
 18. சின்ன அம்மிணி said...

  //நச்னு இருக்கு, வெற்றி பெற வாழ்த்துக்கள்!!//

  கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அம்மிணி.

  பதிலளிநீக்கு
 19. படம் இணையத்திலிருந்து என்றிருக்கிறது ஆனால் அந்த இணையமும் பவர்பாயிண்டில் கை வைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
  எனக்கு எப்படித் தோன்றியதென்றால் ,என் ஜோக்ஸ்களுக்கெல்லாம் அங்கிருந்து படம் சுட இருந்தேன் ...அதில் உள்வாங்கியதுதான் இந்த கண்டு பிடிப்பு...

  அடுத்த பின்னூட்டம் திவா வந்தபிறகு...

  பதிலளிநீக்கு
 20. sindhusubash said...

  //வாழ்த்துக்கள்...//

  நன்றி சிந்து.

  பதிலளிநீக்கு
 21. நன்றாக இருந்தது..

  நான் அந்த பெண்மணிகளும் திருடர்களாக இருப்பார்களோ என்று நினைத்தேன்... வித்யாசமான திருப்பம்..

  வெற்றிபெற வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 22. goma said...

  //கதைக்கு பவர்பாயிண்ட் படங்களிலிருந்து போட்டிருக்கிறீர்கள்//

  நீங்கள் அடுத்த பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல இணையத்திலிருந்து எடுத்ததுதான்.

  //அதுவும் ஒரு, நச்சோ நச்//

  இந்த பாயின்ட் ரொம்பப் பிடிச்சிருக்கு:)! படத்தை ரசித்தமைக்கு மிக்க நன்றி கோமா.

  பதிலளிநீக்கு
 23. பர..பர..சுவராசியக் கதை!

  பிள்ளையார் பிடிச்சாதான் உண்டு என்ற சின்ன நையாண்டியும் சூப்பர்!

  பதிலளிநீக்கு
 24. அழகா யோசிக்கவச்சு கொண்டு போய் நச் னு முடிச்சிட்டீங்க. நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 25. goma said...

  //என் ஜோக்ஸ்களுக்கெல்லாம் அங்கிருந்து படம் சுட இருந்தேன் ...அதில் உள்வாங்கியதுதான் இந்த கண்டு பிடிப்பு...//

  எங்கிருந்து எடுத்தோம் என சொல்லி விட்டால் அது நன்றி நவிலல் ஆகி விடுகிறது இங்கே:))! உங்கள் ‘உள்வாங்கலும்’ ‘கண்டுபிடிப்பும்’ அபாரம்:)! கோமாவும் பாமாவைப் போலவே க்ரேட்:)!

  பதிலளிநீக்கு
 26. ஈ ரா said...

  //நன்றாக இருந்தது..

  நான் அந்த பெண்மணிகளும் திருடர்களாக இருப்பார்களோ என்று நினைத்தேன்...//

  அட, ஆயில்யன் கூட அப்படித்தான் நினைத்திருக்கிறார்:)!

  //வித்யாசமான திருப்பம்..

  வெற்றிபெற வாழ்த்துக்கள்..//

  கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஈ.ரா!

  பதிலளிநீக்கு
 27. velji said...

  //பர..பர..சுவராசியக் கதை!

  பிள்ளையார் பிடிச்சாதான் உண்டு என்ற சின்ன நையாண்டியும் சூப்பர்!//

  முத்துச்சரத்துக்கு முதல் வருகை தந்தமைக்கும், பாராட்டுக்கும் நன்றி வேல்ஜி. நையாண்டியை ரசித்தமைக்கும்:)!

  பதிலளிநீக்கு
 28. கலக்கல் ;))

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)

  பதிலளிநீக்கு
 29. நல்லாயிருக்கு... வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்

  பதிலளிநீக்கு
 30. கோபிநாத் said...

  //கலக்கல் ;))//

  அப்போ ‘நச்’தாங்றீங்க:)!

  //போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)//

  நன்றி கோபிநாத்.

  பதிலளிநீக்கு
 31. தண்டோரா ...... said...

  // நல்லாயிருக்கு... வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் //

  மிக்க நன்றி தண்டோரா.

  பதிலளிநீக்கு
 32. கலக்கல் கதை......................அசத்துங்க அக்கா

  பதிலளிநீக்கு
 33. அத்திரி said...

  //கலக்கல் கதை ........... அசத்துங்க அக்கா//

  நன்றி அத்திரி:)!

  பதிலளிநீக்கு
 34. ராமலஷ்மி ஏறிய குதிரையைப் பார்த்து,’கமான்...கமான்..கமான்’ என்று கூவுகிறேன். வெற்றிக் கோட்டை கட்டாயம் தொட்டுவிடும்.

  பதிலளிநீக்கு
 35. //பிள்ளையார் தும்பிக்கையை நீட்டிப் பிடித்தால்தான் உண்டு என நினைத்துக் கொண்டான் சந்துரு//

  வாய் விட்டு சிரித்தேன்.. அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 36. நானானி said...

  //ராமலஷ்மி ஏறிய குதிரையைப் பார்த்து,’கமான்...கமான்..கமான்’ என்று கூவுகிறேன். வெற்றிக் கோட்டை கட்டாயம் தொட்டுவிடும்.//

  உற்சாகக் கூவலுக்கும் மிகவும் நன்றி நானானி:)! கோட்டை வரை போய் எல்லோரும் குதிரைகளை நிறுத்தியாயிற்று:)! முடிவெனும் கதவு திறக்கும் வரைக் காத்திருப்போம். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 37. " உழவன் " " Uzhavan " said...

  **/ //பிள்ளையார் தும்பிக்கையை நீட்டிப் பிடித்தால்தான் உண்டு என நினைத்துக் கொண்டான் சந்துரு//

  வாய் விட்டு சிரித்தேன்.. /**

  :))! ஆனால் பிடித்துதான் விட்டார் பாமா என்னும் தும்பிக்கை மூலமாக:)!

  //அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

  ரசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி உழவன்:)!

  பதிலளிநீக்கு
 38. ராமலக்ஷ்மி,
  கதை நன்றாக இருக்கிறது.
  வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ஆடும் குதிரையில் உள்ள ராமலக்ஷ்மி
  சொல்ல வருவது வெற்றி எனதே!

  பதிலளிநீக்கு
 39. எனக்குத் தெரிந்த டெலிபோன் ஆபரேடர் பெண்மணி பெருமைப்படுவார் - துப்பறியும் தொழிலில் இறங்காமலிருந்தால் சரி.

  பதிலளிநீக்கு
 40. ராமலக்ஷ்மி வழக்கமான உங்க கதையில் இருந்து வேறுபட்ட கதை.... நல்லா இருக்கு

  உங்க படம் ஏகப்பட்டது வைத்து இருக்கீங்க போல.. ;-)

  பதிலளிநீக்கு
 41. நல்லா இருக்கு. பரிசு பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 42. கதை அருமையா நச்னு இருக்கு,
  வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

  அழகு குட்டி பாப்பாவுக்கு திரிஷ்டி சுத்தி போடுங்க:)

  பதிலளிநீக்கு
 43. ம்ம்.. அப்புறம் போட்டியில் நீங்க வென்று எனக்கு treat தரனும் சரியா:-)

  பதிலளிநீக்கு
 44. கோமதி அரசு said...
  //கதை நன்றாக இருக்கிறது.
  வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

  நன்றி.

  //ஆடும் குதிரையில் உள்ள ராமலக்ஷ்மி சொல்ல வருவது வெற்றி எனதே!//

  குதிரையில் ஏறியாயிற்று, பார்க்கலாம்:)! எல்லாம் உங்கள் ஆசிகளே!

  பதிலளிநீக்கு
 45. அப்பாதுரை said...

  // எனக்குத் தெரிந்த டெலிபோன் ஆபரேடர் பெண்மணி பெருமைப்படுவார்//

  நிச்சயமாய் அவருக்கும் இந்தத் திறமை இருந்தே இருக்கும்.

  //துப்பறியும் தொழிலில் இறங்காமலிருந்தால் சரி.//

  வாய் விட்டு சிரித்தேன்:))!

  கருத்துக்கும் முத்துச்சரத்துக்கு முதல் வருகை தந்ததற்கும் நன்றிகள் அப்பாத்துரை.

  பதிலளிநீக்கு
 46. கிரி said...

  //ராமலக்ஷ்மி வழக்கமான உங்க கதையில் இருந்து வேறுபட்ட கதை.... நல்லா இருக்கு//

  போட்டியின் விதிகளுக்குட்பட்டு சிந்திக்கையில் வித்தியாசமாக அமைந்து போனதில் எனக்கும் மகிழ்ச்சியே:)!

  // உங்க படம் ஏகப்பட்டது வைத்து இருக்கீங்க போல.. ;-)//

  ஹி, ஆம்:)!

  பதிலளிநீக்கு
 47. Shakthiprabha said...

  //நல்லா இருக்கு. பரிசு பெற வாழ்த்துக்கள்.//

  நன்றி ஷக்தி.

  பதிலளிநீக்கு
 48. RAMYA said...

  // கதை அருமையா நச்னு இருக்கு,
  வெற்றி பெற வாழ்த்துக்கள்!!//

  நன்றி ரம்யா.

  // அழகு குட்டி பாப்பாவுக்கு திரிஷ்டி சுத்தி போடுங்க:)//

  அதற்கென்ன போட்டிடலாம்:)!

  //ம்ம்.. அப்புறம் போட்டியில் நீங்க வென்று எனக்கு treat தரனும் சரியா:-)//

  நிச்சயமா, ஆனா முடிவு வரட்டும்:)! நச் நச் என மிக மிக அருமையான கதைகள் களத்தில் குதித்தபடியே. பரிசு இரண்டாம் பட்சம். இப்படி ஒரு போட்டியை அறிவித்து எல்லோரது சிந்தனையையும் தூண்டி விட்டதற்கு முதலில் எல்லோரும் சர்வேசனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

  பதிலளிநீக்கு
 49. படிக்க,படிக்க என்ன சொல்ல போகிறார் கடைசியில் என்று ஆவல் அதிகமாகிறது.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 50. aambal samkannan said...

  // படிக்க,படிக்க என்ன சொல்ல போகிறார் கடைசியில் என்று ஆவல் அதிகமாகிறது. //

  அதுதான் நானும் எதிர்பார்த்தது:)! அந்த வகையில் எனக்கு வெற்றியே:)!

  //வாழ்த்துக்கள்.//

  முத்துச் சரத்துக்கு தந்த முதல் வருகைக்குக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஆம்பல்.

  பதிலளிநீக்கு
 51. நல்லா இருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  //‘சப்’புன்னு இருக்கோ, ஆடுற குதிரையோ ஓடுற குதிரையோ, ஏறிட்டன்ல...? அப்போ நீங்க?”//

  நொண்டி குதிரை

  பதிலளிநீக்கு
 52. அழகாக, நிறைய கதாபாத்திரங்கள் (தங்கக் கடையில்) அடைக்காமல், ரொம்பவும் இழுக்காமல், பொட்டுனு சுடுடற மாதிரி 'நச்'னு எழுதியிருக்கீங்க.

  //நான் அந்த பெண்மணிகளும் திருடர்களாக இருப்பார்களோ என்று நினைத்தேன்...

  அட, ஆயில்யன் கூட அப்படித்தான் நினைத்திருக்கிறார்:)!//

  மீ த்ரீ ... :))

  //ராமலஷ்மி ஏறிய குதிரையைப் பார்த்து,’கமான்...கமான்..கமான்’ என்று கூவுகிறேன். வெற்றிக் கோட்டை கட்டாயம் தொட்டுவிடும்.//

  'ப‌ரிசு பெற்ற‌து யாருங்க‌ ?

  ஹ‌ல்லோ ... நாந்தாங்க‌ ....'

  என்று சொல்ல வாழ்த்துக்க‌ள் :)

  பதிலளிநீக்கு
 53. சுவாரஸ்யமான கதை. அடுத்த நொடியை யோசிக்க வைக்கும் நடை. வெகுவாக ரசித்தேன். வெற்றி பெற வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!

  ஒரு கதை போட்டிக்கு போட்டிருக்கேன். ஆனா அது போட்டிக்கு ஏற்றதானு பாத்துச் சொல்லுங்க :)

  http://vennilapakkangal.blogspot.com/2009/10/500-2009.html

  பதிலளிநீக்கு
 54. நசரேயன் said...

  //நல்லா இருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்//

  நன்றி நசரேயன்.

  *** //‘சப்’புன்னு இருக்கோ, ஆடுற குதிரையோ ஓடுற குதிரையோ, ஏறிட்டன்ல...? அப்போ நீங்க?”//

  நொண்டி குதிரை ***

  வழக்கமாகவே நச் நச் என கதைகள் தருபவர் நீங்கள். அதுவும் தமிழ்மண நட்சத்திரமாக கம்பீரமான குதிரையில் பவனி வந்த கையோடு இப்படி சொல்லலாமா:)? கம் ஆன், உங்கள் குதிரையையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் நாங்கள்.

  பதிலளிநீக்கு
 55. சதங்கா (Sathanga) said...

  //நிறைய கதாபாத்திரங்கள் (தங்கக் கடையில்) அடைக்காமல், ரொம்பவும் இழுக்காமல், பொட்டுனு சுடுடற மாதிரி 'நச்'னு எழுதியிருக்கீங்க.//

  இப்படி இப்படித்தான் இருக்க வேண்டுமென நான் நினைத்து எழுதியதைக் கவனித்து அப்படி அப்படியே சொல்லி விட்டிருக்கிறீர்கள்:)!
  ----------------------------

  ***/ //நான் அந்த பெண்மணிகளும் திருடர்களாக இருப்பார்களோ என்று நினைத்தேன்...

  அட, ஆயில்யன் கூட அப்படித்தான் நினைத்திருக்கிறார்:)!//

  மீ த்ரீ ... :)) /***

  முடிவு ஊகிக்க முடியாததாய் இருக்கவேண்டுமென்ற என் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்று விட்டதாகவே நினைக்கிறேன்.
  ----------------------------

  //'ப‌ரிசு பெற்ற‌து யாருங்க‌ ?

  ஹ‌ல்லோ ... நாந்தாங்க‌ ....'

  என்று சொல்ல வாழ்த்துக்க‌ள் :)//

  ஆசைதான்:))! பங்களிப்போடு நம்ம கடமை முடிந்தது. அணிவகுப்பும் படைப்புகள் அத்தனையும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் இந்த
  அழகான வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி சதங்கா.

  பதிலளிநீக்கு
 56. அரவிந்தன் said...

  //சுவாரஸ்யமான கதை. அடுத்த நொடியை யோசிக்க வைக்கும் நடை. வெகுவாக ரசித்தேன். வெற்றி பெற வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!//

  பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அரவிந்தன்.

  //ஒரு கதை போட்டிக்கு போட்டிருக்கேன். ஆனா அது போட்டிக்கு ஏற்றதானு பாத்துச் சொல்லுங்க :)//

  கண்டிப்பாக வந்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 57. இந்தத் "தொழிலை" நான் இப்போத்தான் பார்க்கிறேன். கதை வித்தியாசமாக அவர் கேட்பதுபோல திருப்பத்துடன் இருக்குங்க, ராமலக்ஷ்மி.

  நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  அதென்ன அவரு யு எஸ் டாலராத்தான் கொடுப்பாரா பரிசுத்தொகையை? :)))

  பதிலளிநீக்கு
 58. வருண் said...

  //இந்தத் "தொழிலை" நான் இப்போத்தான் பார்க்கிறேன்.//

  கதையையா, சந்துரு அல்லது பாமாவின் தொழிலையான்னு குழப்பம் வந்திடப் போகுது!! தெளிவாய் சொல்லுங்கள் வருண்:))!
  __________________________

  //கதை வித்தியாசமாக அவர் கேட்பதுபோல திருப்பத்துடன் இருக்குங்க, ராமலக்ஷ்மி.//

  அவர் கேட்பது 'ஹென்றி ஓ' திருப்பமாயிற்றே:), அந்த அளவு இல்லாவிட்டாலும் முடிவு ஊகிக்க முடியாமல் கொண்டு செல்ல நினைத்ததில் வெற்றி பெற்றிருப்பதாகத்தான் நினைக்கிறேன். வாழ்த்துக்களுக்கு நன்றி.
  ____________________________

  //அதென்ன அவரு யு எஸ் டாலராத்தான் கொடுப்பாரா பரிசுத்தொகையை? :)))//

  டாலராய் கொடுத்தால் வாங்க மாட்டீர்களா:)? அவர் அங்கிருப்பதால் அப்படி அறிவித்திருக்கிறார் என நினைக்கிறேன். வென்றவர் பெயரில் உதவுக்கரங்களுக்கு பணம் அனுப்பப்படுவது பாராட்டுக்குரியது.

  சரி, உங்களுக்குப் போட்டியில் குதிக்கும் எண்ணம் இல்லையா?

  பதிலளிநீக்கு
 59. விறு விறுப்பான கதை. நல்லா இருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 60. @ அமுதா,

  கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அமுதா.

  பதிலளிநீக்கு
 61. Interesting twist at the end..I liked it

  வாழ்த்துகள்

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

  பதிலளிநீக்கு
 62. @ சுவாசிகா,

  முதல் வருகைக்கும், கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 63. @@@@@ராமலக்ஷ்மி said...

  வருண் said...

  //இந்தத் "தொழிலை" நான் இப்போத்தான் பார்க்கிறேன்.//

  கதையையா, சந்துரு அல்லது பாமாவின் தொழிலையான்னு குழப்பம் வந்திடப் போகுது!! தெளிவாய் சொல்லுங்கள் வருண்:))!@@@

  உங்க கதை டைட்டிலைத்தான் சொன்னேங்க!
  __________________________

  @@@ //கதை வித்தியாசமாக அவர் கேட்பதுபோல திருப்பத்துடன் இருக்குங்க, ராமலக்ஷ்மி.//

  அவர் கேட்பது 'ஹென்றி ஓ' திருப்பமாயிற்றே:), அந்த அளவு இல்லாவிட்டாலும் முடிவு ஊகிக்க முடியாமல் கொண்டு செல்ல நினைத்ததில் வெற்றி பெற்றிருப்பதாகத்தான் நினைக்கிறேன். வாழ்த்துக்களுக்கு நன்றி.@@@@

  எனக்கு ஓ ஹென்ரினா யாருனே இப்போத்தான் தெரியும். அந்த அளவுக்கு நான் ஒரு ஞான சூனியம்- இலக்கியத்தை பொறுத்தவரையில். :)))
  ____________________________

  @@@ //அதென்ன அவரு யு எஸ் டாலராத்தான் கொடுப்பாரா பரிசுத்தொகையை? :)))//

  டாலராய் கொடுத்தால் வாங்க மாட்டீர்களா:)? அவர் அங்கிருப்பதால் அப்படி அறிவித்திருக்கிறார் என நினைக்கிறேன். வென்றவர் பெயரில் உதவுக்கரங்களுக்கு பணம் அனுப்பப்படுவது பாராட்டுக்குரியது.@@@

  இதுவும் நீங்க சொல்லித்தான் தெரியும். ஆமாம் பாராட்டவேண்டிய ஒன்றுதான் :)
  --------------------------

  @@@@சரி, உங்களுக்குப் போட்டியில் குதிக்கும் எண்ணம் இல்லையா?@@@

  குதிச்சிட வேண்டியதுதான் :))))

  "திருப்பம்" வைத்து எழுதுறது கஷ்டமா இருக்குங்க. இந்த மாதிரி ஸ்ட்ரேடஜிபோட்டு கதை எழுத வராது எனக்கு.

  இருந்தாலும் கொஞ்சம் சில்லியா ஒரு சிறுகதை மாதிரி ஒரு கதையை எழுதிவச்சிருக்கேன்ங்க. அதை போட்டியில் கலக்கவிடலாமானு யோசிச்சுக்கொண்டே இருக்கேன். என்னை வச்சு எல்லோரும் காமடி கீமெடி பண்ணிடுவாங்களோனு யோசிக்கிறேன். பார்க்கலாம் :)))

  பதிலளிநீக்கு
 64. நானும் கலந்துக்கலாம்னு இருக்கேன்.. பெரிய ஆளுங்கள்லாம் களத்துல இருக்கீங்க.. இந்த தடவையும் பல்புதானா? அவ்வ்வ்வ்..

  பதிலளிநீக்கு
 65. வருண் said...
  //"திருப்பம்" வைத்து எழுதுறது கஷ்டமா இருக்குங்க. இந்த மாதிரி ஸ்ட்ரேடஜிபோட்டு கதை எழுத வராது எனக்கு.//

  எனக்கும் திருப்பங்கள் வைத்தெல்லாம் எழுதிப் பழக்கமில்லை. இதுதான் முதல் முயற்சி. சவாலே சமாளி:)!

  ________________________________
  //என்னை வச்சு எல்லோரும் காமடி கீமெடி பண்ணிடுவாங்களோனு யோசிக்கிறேன். பார்க்கலாம் :)))//

  கதையப் படித்தேன். நன்றாகவே இருக்கிறது. காமடி கீமடிக்கெல்லாம் பயந்தால் வலையில் கதைக்கு ஆகாது. நாம் விரும்புவதைப் பதிந்தபடியே பயணப்பட வேண்டியதுதான்:))! உங்கள் கதைக்கு என் வாழ்த்துக்கள் வருண்!

  பதிலளிநீக்கு
 66. ஆதிமூலகிருஷ்ணன் said...

  //நானும் கலந்துக்கலாம்னு இருக்கேன்..//

  வாங்க தாமிரா, கண்டிப்பா.

  //பெரிய ஆளுங்கள்லாம் களத்துல இருக்கீங்க.. இந்த தடவையும் பல்புதானா? அவ்வ்வ்வ்..//

  நீங்கள் கலந்து கொண்டால் பல்பு மற்றவர்களுக்குதான்:)! அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 67. கதை நன்றாக உள்ளது மேடம். எப்படி தெரியும் என்றே யோசித்த யாரும் டெலிபோன் ஆபரேடர் என்ற கோணத்தில் ஊகித்திருக்க முடியாது

  நானும் இந்த கதை போட்டியில் கலந்துள்ளேன். "அடுத்த வீட்டு பெண்" கதை படிக்க இங்கே வருகை தரவும் : http://veeduthirumbal.blogspot.com/

  மோகன் குமார்

  பதிலளிநீக்கு
 68. வாசிக்கும் போது கற்பனைக்கு வராத முடிவு.

  வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்.

  பதிலளிநீக்கு
 69. Mohan Kumar said...

  //கதை நன்றாக உள்ளது மேடம். எப்படி தெரியும் என்றே யோசித்த யாரும் டெலிபோன் ஆபரேடர் என்ற கோணத்தில் ஊகித்திருக்க முடியாது//

  வருகைக்கும் கருத்துக்கு நன்றி மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 70. மாதேவி said...

  //வாசிக்கும் போது கற்பனைக்கு வராத முடிவு.//

  இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்:)! வாழ்த்துக்களுக்கு நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 71. இந்தக் கதை திண்ணை இணைய இதழில் பிரசுரம் ஆகியுள்ளது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 72. பார்த்தேன் சரண். தகவலுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin