ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

திருப்தியான வாழ்க்கைக்கான திறவுகோல்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 37

#1
“வாழ்க்கையின் குறிக்கோள், 
குறிக்கோளுடனான வாழ்க்கையே!" 
_ Robert Byrne

#2
“சீரான திருப்தியான வாழ்க்கைக்கான திறவுகோல், 
வாழ்வில் சாதிக்க நாம்  யாரென்பதே நமக்குப் போதுமானதென 
மனப்பூர்வமாக நம்புவது”
_Ellen Sue Stern

#3
“நம்முடைய உலகத்தில் மாற்றம் கொண்டு வர 
எந்த மாயஜாலமும் தேவையில்லை. 
அதற்குத் தேவையான அத்தனை சக்தியும் 
நம்முள் ஏற்கனவே இருக்கிறது.” 
_J. K. Rowling

#4
“நமது திறமைகளை விடவும் நமது தெரிவுகளே  
உண்மையில் நாம் யாரென்பதைக் காட்டுகின்றன"
_J. K. Rowling


#5
மெளனம் பெரும் சக்தி” 
_ Lao Tzu.

#6
“நினைவிருக்கட்டும், தனித்துவமாய் இருக்க 
எப்போதும் உங்களுக்கு உரிமை உண்டு, 
அப்படி இருக்க வேண்டியது 
உங்களது கடமையும் கூட.”
_ Eleanor Roosevelt
*
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது..
**
இது என் 901_வது பதிவு. சென்ற பதிவை வலையேற்றிய பின்னரே 900 பதிவுகள் நிறைவுற்றிருப்பதைக் கவனித்தேன். 1000 பதிவுகள் எட்ட இன்னும் எத்தனை காலமாகுமெனத் தெரியவில்லை. என்றாலும்  இதுகாலமும், பெரிய இடைவெளிகள் இன்றி,  மிதமான வேகத்தில் சீராகச் சென்று கொண்டிருப்பதில் மகிழ்ச்சியே. உடன் வரும் அனைவருக்கும் நன்றி:)!
***

12 கருத்துகள்:

 1. 901 வது பதிவா? வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.
  அழகான பதிவுகள், அழகான படங்கள் அனைத்தும்.

  இந்த பதிவில் அனைத்து படங்களும், வரிகளும் அழகு.

  மெளனம் பெரும் சக்தி தான்.

  பதிலளிநீக்கு
 2. கன கச்சிதமான எல்லைகளை வகுத்துக் கொண்டு சீராக அந்தத் தடத்தின் வரையறைக்குள்ளாகவே நிதானமாக எழுதி வருகிறீர்கள். மிகச் சிறந்த சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்கக் கொடுப்பதற்கு நாங்கள் அதிக கடமைப்பட்டிருக்கிறோம். இன்னும் சீரிய படைப்புகள் அளித்திட வாழ்த்துக்கள்.

  நமது தெரிவுகளே நமக்கான இடத்தை நிர்ணயிக்கின்றன. நல்லதொரு தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 3. அனைத்தும் அருமை...

  901-வது பதிவிற்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 4. படங்களையும் வரிகளையும் ரசித்தேன்.

  மூன்றாவது படமும், அடுத்ததாக ஆறாவது படமும் ரொம்பவே அழகு.

  901 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துகள் படங்கள் வழக்கம்போல் அழகு

  பதிலளிநீக்கு
 6. படங்கள் அனைத்துமே அழகு.

  901-வது பதிவு. ஆஹா வாழ்த்துகள். அத்தனையும் முத்தான பதிவுகள். தொடரட்டும் உங்கள் வலைப்பயணம்....

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin