சனி, 15 ஜூலை, 2017

எந்த மனிதனாலும் அடைக்க முடியாத கதவுகள்

#1
வாழ்க்கை கடினமானது.
ஏன், அதை எதிர்கொள்ளும் நீங்களும் கூடதான்!

#2
"புன்னகை புரியுங்கள், ஏனெனில் அது எளிதானது.. இனிதானது.."


#3
“இடர்கள் கொண்டதே வாழ்க்கை - அதனால் என்ன?”
_Malcolm Bradbury

# 4
“எங்கள் தங்கம்!”
பெண் மகவைக் கொண்டாடுவோம்!

#5
“இவள் கண்களுக்கென்றே இருக்கிறது தனி அகராதி. 
அறிந்து கொள்ள அது என்னவொரு அழகான மொழி!”


#6
"எந்த மனிதனாலும் அடைக்க முடியாத கதவுகளை 
உங்களுக்காகத் திறப்பார் கடவுள்"_Revelation 3:8 (Bible)


#7
"குறிப்புத் தவறி வாசிப்பது பெரிது படுத்தத் தேவையற்ற ஒன்று; 
ஆர்வம் இன்றி வாசிப்பதே மன்னிக்க இயலாதது "
_Ludwig van Beethoven 
ஆழ்ந்த வாசிப்பில் கலைஞன்

#8
“சில பயணங்கள், நீங்கள் தனித்தே மேற்கொள்ள வேண்டியிருக்கும்”
_Suzanne Collins 

#9
“இசை என்பது உயிர். அதனாலேயே நம் இதயங்களிலும் துடிப்புகள் உள்ளன"_ Cecily Morgan.

#10
வானவில்களையும் சூரியவெளிச்சத்தையும் ஒன்றாகக் கட்டிக் கையில் கொடுக்கப்படும் பொட்டலமே, ஒரு குழந்தை சிந்தும் புன்னகை!”

****
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..]

16 கருத்துகள்:

 1. படங்களும் வாசகங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 2. அனைத்தும் அருமை. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. மிகவும் தெளிவான, அழகான புகைப்படங்கள்!

  " வானவில்களையும் சூரிய வெளிச்சத்தையும் ஒன்றாகக் கட்டி கையில் கொடுக்கப்படும் பொட்டலமே ஒரு குழந்தை சிந்தும் புன்னகை"

  மிக அழகிய வரி!

  பதிலளிநீக்கு
 4. சில பயணங்கள் தனித்தே மேற்கொள்ள வேண்டி இருக்கிறது உம் வாழ்க்கைப் பயணம்

  பதிலளிநீக்கு
 5. அழகான படங்கள். அருமையான வாசகங்கள்....

  தொடரட்டும் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
 6. வார்த்தைகள் நிதர்சனம். படங்களில் இயல்பான அழகு.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin