ஞாயிறு, 2 ஜூலை, 2017

புதுப் புது வாய்ப்புகள்

என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 18)

#1
“விட்டு விடும் எண்ணம் தோன்றுகையில்தான்
இன்னும் கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டும்..!”

#2
‘உங்கள் இலக்கை விட்டுத் திசை திருப்பச் செய்யும் 
எவற்றின் மீதும் கவனத்தை இழக்காதீர்கள்!


#3
‘சின்ன விஷயங்களாக இருக்கலாம். 
ஆனால் அவையே அதி முக்கியமானவையாகவும் இருக்கின்றன.’

#4
“நீங்கள் நேசிக்கும் ஒருவர் நினைவுகளாகிப் போகையில், 
அந்த நினைவுகள் யாவும் பொக்கிஷங்களாகிப் போகின்றன..”


#5
“வாழ்க்கை என்பது உங்களைத் தெரிந்து கொள்வதல்ல.
உங்களை உருவாக்கிக் கொள்வது”
_ஜார்ஜ் பெர்னார்ட் ஷா


#6
கனவுகளில் நுழைகிறோம், 
நமக்கே நமக்கான உலகிற்குள்..
- JK Rowling

#7
‘சலனத்தை வெல்ல ஒரே வழி 
அதனிடம் சரணடவதே’

#8
“மற்றவரையும் தொற்றிக் கொள்ளக் கூடியது
நெஞ்சில் சுரக்கும் கருணையானது..”

#9
“ஒவ்வொரு தினத்தின் ஒவ்வொரு நொடியும்
புதுப்புது வாய்ப்புகளுடன் பூக்கின்றன..”

#10
துணிந்து உங்கள் கரத்தை இருளுக்குள் நீட்டிடுங்கள், மற்றுமோர் கரத்தை வெளிச்சத்திற்கு இழுத்திட..
_ Norman B. Rice

***
[ஃப்ளிக்கர் தளத்தில் படங்களுடன் பதிந்த  பொன்மொழிகளின் தமிழாக்கம், எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..]


16 கருத்துகள்:

 1. எல்லாமே ரசிக்க வைத்தது படங்களும் பொன்மொழிகளும்

  பதிலளிநீக்கு
 2. மகிழ்ச்சி, படங்களும் பொன்மொழிகளும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. படங்களும், பொன்மொழிகளும் மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. வரிகளை மிகவும் ரசித்தேன். குறிப்பாக ஒன்று முதல் ஐந்து வரையும் பத்தாவதும். வரிகளை ரசிப்பதில் படங்களை ரசிக்க மறந்து விட்டேன். மறுபடியும் ஒரு முறை புகைப்படங்களை ரசித்துக் கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 5. இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு என் பதிவு கான மயிலாட என்ற மாதிரித்தான் தோன்று கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் தோட்டம் குறித்தப் பகிர்வை மிகவும் ரசித்தேன். எத்தனை விதமான மரங்கள், செடிகள்! லாப்ஸ்டர் பூ பார்த்திருக்கிறேன். ஆனால் படம் எடுத்ததில்லை.

   நீக்கு
 6. எப்பொழுதும் படங்களை ரசித்துவிட்டு பின் வரிகளை வாசிப்பேன்...

  இன்று ஒவ்வொரு வரியும் வாசிக்க வாசிக்க..படங்களை ரசிக்க மறந்தேன்...


  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin