வியாழன், 29 நவம்பர், 2012

இலையுதிர்காலப் பாடல் – கவிக்குயில் சரோஜினி நாயுடு


மேகங்களைப் பற்றித் தொங்கிக் கொண்டிருந்தது அஸ்தமனம்
கவலையுற்ற இதயத்தில் ஏற்பட்டக் களிப்பைப் போல.
தங்கப் புயல் போல மேகக் குஞ்சங்கள் மினுங்க,
நலிந்த அழகிய இலைகள் படபடத்து நடுங்க,
காட்டுத்தனமாக வீசியது முகில் மேல் காற்று.
உற்றுக் கேட்ட இதயத்துக்குப் புரிகிறது
காற்றின் குரலில் இருந்த அழைப்பு;
படபடத்து உதிருகிற இலைகளைப் போன்ற கனவுகளால்
சோர்வில்.. கவலையில்.. தனிமையில்.. என் இதயம்.
எதற்காகக் கடந்ததை எண்ணித் துயருற வேண்டும்  நான்?
***

மூலம்:
Autumn Song
By Sarojini Naidu

16 நவம்பர் 2012, அதீதம் இதழுக்காக மொழியாக்கம் செய்த கவிதை. 

22 கருத்துகள்:

 1. சிறப்பானதொரு மொழியாக்கம்..

  பதிலளிநீக்கு
 2. அதானே... எதற்கும் கலங்கக் கூடாது...

  அருமை... நல்ல மொழியாக்கம்...

  நன்றி...
  tm3

  பதிலளிநீக்கு
 3. //தங்கப் புயல் போல மேகக் குஞ்சங்கள் மினுங்க//

  அட!!.. அட!!. அற்புதமான சொல்லாடல். அருமையான கவிதை ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 4. மொழியாக்கம் மிகத் தெளிவாக அழகாக வந்திருக்கிறது அக்கா !

  பதிலளிநீக்கு
 5. அருமையான மொழியாக்கம்,அதைவிட புகைப்படம் ரொம்ப பிடித்திருக்கு....

  பதிலளிநீக்கு
 6. கடந்ததை எண்ணித் துயருறாமல் இருக்க முடியுமானால் சிறப்புதான்! ம் ..ஹூம்! :))

  பதிலளிநீக்கு
 7. அருமை. நல்ல மொழியாக்கம். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. ஆஹா! அருமையான படம், கவிதைக்கு ஏற்றபடம், அருமையான மெழியாக்கம். வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  கடந்து போனதை நினைத்தால் நிகழ்காலம் நன்றாக இருக்காது.

  பதிலளிநீக்கு
 9. @S.Menaga,

  நன்றி மேனகா. பொருத்தமாக நான் எடுத்த படமே அமைந்து விட்டது:)!

  பதிலளிநீக்கு
 10. @ஸ்ரீராம்.,

  முயன்றுதான் பார்ப்போமே:)! நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin