வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

எப்போது கிடைக்கும் உண்மையான சுதந்திரம்?



அறுபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் பதினைந்து நள்ளிரவில் நாடெங்கிலும் மக்கள் சுதந்திரம் பெற்று விட்டதாக ஆனந்தமாய் குதூகலித்திருந்த போது அந்த மகிழ்ச்சியில் முழுமையாக பங்கு பெற இயலாதவராய் சர்தார் வல்லபாய் படேல் சொன்னதைச் சற்று நினைவு கூர்ந்திடுவோம்:
"நாம் பெற்றிருப்பது 'சுதந்திரம்' அல்ல. அந்நியரிடமிருந்து 'விடுதலை' மட்டுமே!".

அவர் பார்வையில் எதுதான் சுதந்திரம்? அவரே சொல்கிறார்:
'சாதி இன வேறுபாடு மறைந்து, தீண்டாமை ஒழிந்து, பட்டினியால் வாடுவோர் வளம் பெற்று, மக்கள் ஒன்றுபட்டு வாழுகையிலும்; சுருங்கச் சொல்லின், புதியதொரு வாழ்வை உருவாக்க மக்களின் மனங்களிலும் பார்வையிலும் மாபெரும் மாற்றம் நிகழுகையிலும்தான் சுதந்திரம் வரும்!'

சத்தியமான வார்த்தைகள். அன்றைய நிலைமையோடு ஒப்பிட்டால் அத்தகு மாற்றங்கள் பலவும் நிகழ்ந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது. குறிப்பிட்ட இனத்தவர் கோவில்களுக்குள் செல்ல இயலாமல் இருந்த காலமெல்லாம் பல தலைவர்களின் முயற்சியால் மாறி விட்டன. மாறி வரும் தலைமுறையில் நடக்கின்ற கலப்புத் திருமணங்களால் சாதி, மதங்கள் இன்று பின் தள்ளப் படுகின்றன. பயணம் செய்கின்ற பொது வாகனங்கள், பொது இடங்கள், கல்விக்கூடங்கள், அலுவலகங்களில் எந்த வேறுபாடுமின்றி எல்லோரும் சமமாக நடத்தப் படுகின்றனர்.

அன்று எதிர்க்கப் பட்ட எத்தனையோ விஷயங்கள் இன்று ஏற்புடையதாகி விட்டன. உதாரணத்துக்கு 1928-ஆம் ஆண்டு சென்னை சட்டசபையில் டாக்டர் முத்துலெட்சுமி அவர்கள் பால்ய விவாகத்தை எதிர்த்து பெண்களின் திருமண வயது பதினான்காகவேனும் அமையட்டுமெனக் கோரி ஒரு மசோதாவைக் கொண்டு வர முயற்சித்த போது, படித்தவர்களும் பெரிய பதவிகளில் இருந்தவர்களும் மதத்தின் பெயரால் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக சமீபத்தில் பிரபல வார இதழ் ஒன்றில் வாசித்தறிந்தேன். எதிர்ப்புகளால் தள்ளிப்போன் மசோதா மறுஆண்டு நிறைவேறியதாம்.

அதுபோல இன்றைய காலக் கட்டத்தில் எதிர்க்கப் படும் நல்ல விஷயங்கள் நாளை ஒருநாள் புரிதலுடன் ஏற்கப்பட்டே தீரும். இன்னமும் ஒருசில பின்தங்கிய கிராமங்களில் இருந்து வரும் பால்ய விவாக நடைமுறையும், தீண்டாமையும் கூட காலப் போக்கில் மாறுமென நம்புவோம். பெண்களுக்கான சுதந்திரம் பெருமளவில் வந்தடைந்திருப்பதும் கண்கூடு. பெண்களுக்குப் படிப்பே தேவையில்லை என்றிருந்த காலமெல்லாம் காணாது போய், இன்று அவர்கள் மின்னாத துறையே இல்லை என்றாகி விட்டது.

அறுபதுகளிலே நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோது அந்நியரிடம் தானியத்தைத் கையேந்தித் தானமாகப் பெற்றோம். ஆனால் அயராத முயற்சியுடன் அதே கைகளால் பசுமைப் புரட்சி செய்து தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கிறோம். ஏழை மக்களை மனதில் கொண்டு அரசு ரேஷன் மூலமாக குறைந்த விலையில் உணவுப் பொருட்களைக் கொடுத்து அவர்களது தேவைகளை கவனிக்கவும் செய்கிறது. எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும் சொல்லப் பட்டாலும், தரமான மருத்துவ சேவை இலவசமாக எளிய மக்களுக்குக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

இத்தகைய பல மாற்றங்களால் வியக்கத்தகு பொருளாதார வளர்ச்சியும் சாத்தியப்பட்டிருக்க, இன்னொரு பக்கம் அவ்வப்போது வெடிக்கின்ற கலவரங்களும் மோதல்களும் ‘தீர்வே பிறக்காதா?’ எனும் ஆதங்கத்தையும், கூடவே ‘சட்டம் என்ன செய்து கொண்டிருக்கிறது?’ எனும் கேள்வியினையும் எழுப்பியபடி இருக்கின்றன. நூற்றுப் பத்து கோடி மக்களுக்குமான பாதுகாப்பை இன்னபிற வளர்ந்த நாடுகளை விடவும் நம் அரசு இயன்றவரை சிற்ப்பாகச் செய்ய முயற்சித்தபடியேதான் இருக்கிறது. சமூக விரோத செயல்கள் குறைவதும் மறைவதும், ஊழல் அற்ற சமுதாயம் மலருவதும், சரியான பாதையில் முன்னேற்றம் தொடர்வதும் நாடு உண்மையான சுதந்திரம் பெற்றால் மட்டுமே நடக்கும்.

எப்போது கிடைக்கும் அத்தகு சுதந்திரம்? எல்லோரும் அறிந்த பாடலே எனினும் இவ்விடத்திற்குப் பொருத்தமாய் இருப்பதால் இரவீந்திரநாத் தாகூர் படைத்த ‘கீதாஞ்சலி’யின் முப்பத்தைந்தாவது பாடலை இங்கே தமிழ் படுத்தித் தந்திருக்கிறேன்:

"எப்போது மனம் பயமின்றி இருக்கிறதோ
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ;
எங்கே அறிவு தடையின்றி வளர்கிறதோ;
எங்கே உலகம் குறுகிய மனப்பான்மையெனும்
சுவர்களால் பிரிக்கப்படாமல் இருக்கிறதோ;

எங்கே வார்த்தைகள் உண்மையின்
ஆழத்திலிருந்து வருகிறதோ;
எங்கே அயராத முயற்சி நேர்த்தியை
நோக்கித் தன் கரங்களை நீட்டுகிறதோ;

எங்கே நோக்கமானது
தொடர்ந்து விரிந்து கொண்டே செல்கின்ற
எண்ணத்தாலும் செயலாலும்
வழிநடத்தப் படுகிறதோ-
அந்த சுதந்திரமான சுவர்க்கபூமியில்,
என் நாடு விழித்தெழட்டும்"


இப்படியாக இறைவனை இறைஞ்சுகிறார் தாகூர். இதை மனதில் உள்வாங்கி ஒவ்வொரு குடிமகனும் ‘தான், தன் வாழ்க்கை, தன் குடும்பம், தன் இனம், தன் மொழி, தன் மதம்’ என்கிற வட்டங்களை விட்டு வெளிவந்து ‘நாம், நம் நாடு, நாட்டின் நலம்’ என்பதில் அக்கறை காட்டினால் சுதந்திரத்துக்கான உண்மையான அர்த்தம் கிடைக்கும்.

வாழ்க்கையைப் போலவே சுதந்திரம் என்பதும் ஒரு தொடர் பயணம். கடக்க வேண்டிய மைல்கற்கள் எவ்வளவோ இருக்கின்றனதான். ஆயினும் இலக்கை அடைந்தால் மட்டுமே கிடைக்கும் மகிழ்ச்சி என்றால் என்றைக்கும் வராது எதிலும் திருப்தி. கடந்து வந்த பாதைகள் கரடுமுரடாக இருந்தாலும் கூட அடைந்த சாதனைகளையே ஊக்கமாக எடுத்துக் கொண்டு பெருமையுடன் பயணத்தைத் தொடருவோம் உற்சாகமாக! பெற்ற விடுதலையை அர்த்தமுள்ள சுதந்திரம் ஆக்கி, அதைப் பேணி வளர்ப்போம்! வாழ்க பாரதம்!
***

* படம்: இணையத்திலிருந்து..

*விகடன்.காம் சுதந்திரதினச் சிறப்பிதழில்...

வெளிவந்திருக்கும் படைப்பு:

*இந்தப் பதிவுடன், வலைக்கு சிலவார கால விடுப்பு எடுத்துச் செல்கிறேன். மீண்டும் சந்திப்போம்!
அனைவருக்கும் என் அன்பான சுதந்திரதின வாழ்த்துக்கள்!

83 கருத்துகள்:

  1. சுதந்திர தின நச் பதிவு. நல்லாயிருக்கு. ஊருக்கு போறீங்களா அக்கா. சில காலம்ன்னு சொன்னா எவ்வுளவு? சீக்கிரம வந்திருக்கா..

    பதிலளிநீக்கு
  2. சுதந்திர தின வாழ்த்துக்கள் மேடம்

    //வாழ்க்கையைப் போலவே சுதந்திரம் என்பதும் ஒரு தொடர் பயணம். கடக்க வேண்டிய மைல்கற்கள் எவ்வளவோ இருக்கின்றனதான். ஆயினும் இலக்கை அடைந்தால் மட்டுமே கிடைக்கும் மகிழ்ச்சி என்றால் என்றைக்கும் வராது எதிலும் திருப்தி. கடந்து வந்த பாதைகள் கரடுமுரடாக இருந்தாலும் கூட அடைந்த சாதனைகளையே ஊக்கமாக எடுத்துக் கொண்டு பெருமையுடன் பயணத்தைத் தொடருவோம் உற்சாகமாக!//

    கண்டிப்பாக

    விகடனில் வெளிவந்தமைக்கும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. //வாழ்க்கையைப் போலவே சுதந்திரம் என்பதும் ஒரு தொடர் பயணம். கடக்க வேண்டிய மைல்கற்கள் எவ்வளவோ இருக்கின்றனதான். ஆயினும் இலக்கை அடைந்தால் மட்டுமே கிடைக்கும் மகிழ்ச்சி என்றால் என்றைக்கும் வராது எதிலும் திருப்தி. கடந்து வந்த பாதைகள் கரடுமுரடாக இருந்தாலும் கூட அடைந்த சாதனைகளையே ஊக்கமாக எடுத்துக் கொண்டு பெருமையுடன் பயணத்தைத் தொடருவோம் உற்சாகமாக!//

    கண்டிப்பாக

    தங்களுக்கும் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

    விகடனில் வெளிவந்தமைக்கும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. சுதந்திரம் பற்றிய உங்கள் சிந்தனைகள் சிறப்பாக இருக்கின்றன

    //*இந்தப் பதிவுடன், வலைக்கு சிலவார கால விடுப்பு எடுத்துச் செல்கிறேன். மீண்டும் சந்திப்போம்!
    அனைவருக்கும் என் அன்பான சுதந்திரதின வாழ்த்துக்கள்!//

    சென்று வாருங்கள். மீண்டும் சந்திப்போம் !

    பதிலளிநீக்கு
  5. சுதந்திரம் என்பது முழுமையான சமுதாய மாற்றமாக இருக்கும்னு புரிஞ்சிகிட்டேன்.

    சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    ஜெய்..ஹிந்த்!

    பதிலளிநீக்கு
  6. http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html

    தங்கள் படைப்பு வந்திருக்கிறதா தெரிந்துகொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  7. சுதந்திர தின நாளில் அருமையானதொரு கட்டுரை - தாகூரின் தமிழாக்க வரிகளில்

    //எங்கே நோக்கமானது
    தொடர்ந்து விரிந்து கொண்டே செல்கின்ற
    எண்ணத்தாலும் செயலாலும்
    வழிநடத்தப் படுகிறதோ-//

    அருமை!

    பதிலளிநீக்கு
  8. Really we Indians have acheived a lot after the independence in all fields.

    Compared to many countries, we are in a good position.

    We should proudly say that we are an independent nation.

    பதிலளிநீக்கு
  9. சூப்பர் பதிவு..

    சுதந்திர தின வாழ்த்துகள் அக்கா..

    பதிலளிநீக்கு
  10. பூங்கொத்துகளுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. அருமையான இடுகை.

    காத்திருப்போம். ஆனால்......... எவ்வளவுநாள் என்பதுதான்........

    விடை தெரியாத கேள்வி.

    பதிலளிநீக்கு
  12. நல்ல பதிவு! அனைவருக்கும் சுந்தந்திர தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. கடையம் ஆனந்த் said...

    //சுதந்திர தின நச் பதிவு. நல்லாயிருக்கு.//

    நன்றி ஆனந்த்.

    //சில காலம்ன்னு சொன்னா எவ்வுளவு? சீக்கிரம வந்திருக்கா..//

    சில ‘வார’ காலம் என சொல்லியிருக்கிறேன், ஒருமாதம்:)? வந்து விடுகிறேன்!

    பதிலளிநீக்கு
  14. பிரியமுடன்.........வசந்த் said...

    // சுதந்திர தின வாழ்த்துக்கள் மேடம்//

    நன்றி வசந்த்.

    முடிவுரையை முன் வைத்துத் தந்திருக்கும் வாக்குறுதிக்கும் பாராட்டுக்களுக்கும் மறுபடி நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  15. கோவி.கண்ணன் said...

    //சுதந்திரம் பற்றிய உங்கள் சிந்தனைகள் சிறப்பாக இருக்கின்றன//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோவி.கண்ணன்.

    பதிலளிநீக்கு
  16. நம்பிக்கையூட்டும் பதிவு

    வளர்நோக்கு மாற்றம் என்பதை நம்மில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டுமே தவிர...
    எதையும் குறை சொல்ல உரிமையில்லை

    //வாழ்க்கையைப் போலவே சுதந்திரம் என்பதும் ஒரு தொடர் பயணம். //

    மகிழ்ச்சியான வரிகள்

    சுதந்திர தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. ஆஹா, இன்று லீவு. சன் டிவி,கே டிவியில் நிறைய ப்ரோகிராம் இருக்கு. ஜாலி. பலருக்கும் இதுதான் எண்ணம். டிவியில் ஜனாதிபதி, கவர்னர், கலெக்டர் கொடி ஏற்றுவதை காட்டும்போது சேனலை மாற்றி விடாமல் எழுந்து நின்று மரியாதை செய்தாலே போதும்.
    உங்களுக்கு லீவ் கிரான்டெட். சீக்கிரம் வந்துவிடுங்கள்
    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  18. அருமையான பதிவு அக்கா.. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். போய்ட்டு சீக்கிரமா வாங்க.

    பதிலளிநீக்கு
  19. ரங்கன் said...

    //சுதந்திரம் என்பது முழுமையான சமுதாய மாற்றமாக இருக்கும்னு புரிஞ்சிகிட்டேன்.//

    இடுகையில் நான் சொல்லியிருப்பதை வழிமொழிந்த கருத்துக்கும், முதல் வருகைக்கும் நன்றி ரங்கன்!

    //சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    ஜெய்..ஹிந்த்!//

    ஜெய் ஹிந்த்!

    பதிலளிநீக்கு
  20. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    // oorula poi enjoy your freedom :)//

    Thanks a lot Muthuletchumi:)!

    பதிலளிநீக்கு
  21. valaivikadan said...

    ****http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html

    தங்கள் படைப்பு வந்திருக்கிறதா தெரிந்துகொள்ளுங்கள்****

    எனது கவிதை 'பால்நிலா’ தங்கள் ஆகஸ்ட் மாத வெளியீட்டில் இடம் பெற்றிருப்பது கண்டேன். மகிழ்ச்சி. மிக்க நன்றி வலைவிகடன்!

    பதிலளிநீக்கு
  22. ஆயில்யன் said...

    ./ சுதந்திர தின நாளில் அருமையானதொரு கட்டுரை - //

    மிக்க நன்றி.

    ***//தாகூரின் தமிழாக்க வரிகளில்

    //எங்கே நோக்கமானது
    தொடர்ந்து விரிந்து கொண்டே செல்கின்ற
    எண்ணத்தாலும் செயலாலும்
    வழிநடத்தப் படுகிறதோ-//

    அருமை!//***

    நான் நான் நானேதான் செய்தேனாக்கும் தமிழாக்கத்தை:)! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிகள்தான் உயிர்நாடி அந்தப் பாடலுக்கு! நம் நாட்டின் வளர்ச்சிக்கான் வழிக்காட்டியும் கூட. நன்றி ஆயில்யன்.

    பதிலளிநீக்கு
  23. ராம்ஜி.யாஹூ said...

    //Really we Indians have acheived a lot after the independence in all fields.//

    எவராலும் மறுக்க முடியாத உண்மை.

    //Compared to many countries, we are in a good position.//

    அதுதான் எனது கருத்தும்.

    // We should proudly say that we are an independent nation.//

    வேறுபல வளர்ந்த நாடுகளிலும் கிட்டாத ஒரு பாதுகாப்புணர்வு நமக்கு இங்கு உள்ளதுதான். பாருக்குள்ளே நல்ல நாடு பாரதநாடு எனப் பெருமை கொள்ளலாம். அதேசமயம் முன்னேறத் தடையாக இருக்கும் தளைகளைத் தொடர்ந்து உடைத்தெறிந்து பயணத்தைத் தொடருவோம். நம்பிக்கை ஊட்டும் நல்ல கருத்துக்களுக்கு நன்றி ராம்ஜி.

    பதிலளிநீக்கு
  24. வல்லிசிம்ஹன் said...

    //INDEPENDANCE DAY GREETINGS. RAMALAKSHMI.//

    THANK YOU VALLIMMA!

    பதிலளிநீக்கு
  25. சிந்திக்க வேண்டிய பகிர்வு.

    பதிலளிநீக்கு
  26. ***ஆயினும் இலக்கை அடைந்தால் மட்டுமே கிடைக்கும் மகிழ்ச்சி என்றால் என்றைக்கும் வராது எதிலும் திருப்தி. கடந்து வந்த பாதைகள் கரடுமுரடாக இருந்தாலும் கூட அடைந்த சாதனைகளையே ஊக்கமாக எடுத்துக் கொண்டு பெருமையுடன் பயணத்தைத் தொடருவோம் உற்சாகமாக***

    உண்மைதாங்க, ராமலக்ஷ்மி :)

    Happy Independence day!

    Have a nice and safe trip! :-)

    பதிலளிநீக்கு
  27. முன்னாடியே மன்னிப்பு கேட்டுக்கிறேன்....ஸாரி, பட் என்னவோ எட்டாம் க்ளாஸ் கட்டுரை மாதிரி இருக்கு....

    //
    எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும் சொல்லப் பட்டாலும், தரமான மருத்துவ சேவை இலவசமாக எளிய மக்களுக்குக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
    //

    உண்மையான ஏழை எளிய மக்கள் இந்த "தரமான" மருத்துவ சேவை குறித்து என்ன நினைப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  28. //எப்போது கிடைக்கும் உண்மையான சுதந்திரம்? //


    நமக்கு சுதந்திரம் வேண்டாம்...

    நாம் அடிமை போதையில் சொர்க்கத்தை பார்க்கத்துடிக்கிறவர்கள்...

    சொர்க்கம் சுதந்திரத்தை விட உன்னதமானது...

    மீண்டும் வந்து கலக்குங்கள்...

    பதிலளிநீக்கு
  29. சுதந்திர தினத்தில் ஒரு நல்ல நச்சுன்னு பதிவு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  30. சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  31. சுதந்திர தின வாழ்த்துக்கள்,ராமலக்ஷ்மி.


    விகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  32. SanjaiGandhi said...

    // சூப்பர் பதிவு..

    சுதந்திர தின வாழ்த்துகள் அக்கா..//

    நன்றி சஞ்ச்ய், வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும்!

    பதிலளிநீக்கு
  33. அன்புடன் அருணா said...

    //பூங்கொத்துகளுடன் வாழ்த்துக்கள்!//

    மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டேன், நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  34. துளசி கோபால் said...
    //காத்திருப்போம். ஆனால்......... எவ்வளவுநாள் என்பதுதான்........

    விடை தெரியாத கேள்வி.//

    அந்த் விடையைத் தேடித்தான் தொடர்வோம் பயணத்தை உற்சாகமாய் என அழைப்பு விட்டிருக்கிறேன்:)!

    //அருமையான இடுகை//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  35. தமிழ் பிரியன் said...

    // நல்ல பதிவு! அனைவருக்கும் சுந்தந்திர தின வாழ்த்துக்கள்!//

    நன்றி தமிழ் பிரியன், வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும்.

    பதிலளிநீக்கு
  36. சீரிய சிந்தனைகள்..முத்துச்சரம் ஒளிர்கிறது!

    ஆகா...வலையிலிருந்து விடுதலையா...அது உங்கள் சுதந்திரம்!! :-))

    பதிலளிநீக்கு
  37. தங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

    என் சுதந்திர நாள் சிறப்பு பதிவிற்கு வந்து வாழ்த்திய தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி...

    //வாழ்க்கையைப் போலவே சுதந்திரம் என்பதும் ஒரு தொடர் பயணம். கடக்க வேண்டிய மைல்கற்கள் எவ்வளவோ இருக்கின்றனதான். ஆயினும் இலக்கை அடைந்தால் மட்டுமே கிடைக்கும் மகிழ்ச்சி என்றால் என்றைக்கும் வராது எதிலும் திருப்தி. கடந்து வந்த பாதைகள் கரடுமுரடாக இருந்தாலும் கூட அடைந்த சாதனைகளையே ஊக்கமாக எடுத்துக் கொண்டு பெருமையுடன் பயணத்தைத் தொடருவோம் உற்சாகமாக! பெற்ற விடுதலையை அர்த்தமுள்ள சுதந்திரம் ஆக்கி, அதைப் பேணி வளர்ப்போம்! வாழ்க பாரதம்!//

    ச‌ரியாக‌ சொன்னீர்க‌ள்.... த‌ங்க‌ள் சீரிய‌ சிந்த‌னைக்கும், இந்த‌ ப‌திவிற்கும் என் ம‌ன‌மார்ந்த வாழ்த்துக்க‌ள்

    விரைவில் உங்களை எதிர்நோக்கும் உங்கள் தோழன்....

    பதிலளிநீக்கு
  38. நெல்லைக்கு போறீங்களா? டீச்சரை பார்க்கவும். அருமையான பதிவு!!!!!

    பதிலளிநீக்கு
  39. ‘//சட்டம் என்ன செய்து கொண்டிருக்கிறது?’//

    யாருக்குத் தெரியும் ?

    ஆனால், இந்த அறுபத்தி இரண்டு ஆண்டுகளில் இயற்றப்பட்ட
    எல்லா சட்டங்களும் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது
    என்பதை,

    சட்டம் படித்தவர்கள்,
    சட்ட சபையிலே உட்கார்ந்து சட்டங்களை இயற்றும் வல்லுனர்கள்,
    சட்டங்களை நிறைவேற்ற கடமைப்பட்டவர்கள்,

    எல்லோருமே நன்கு புரிந்து அதற்குத் தகுந்தாற்போல் வாழ்கிறார்கள்.

    ' ங ' ப்போல் வளை என்றார்களே !

    தானும் வளைந்து, தனக்கேற்றாற்போல், எதையும் எச்சட்டத்தையும், வளைக்கவும் தெரியவேண்டும்.
    அதுதானே இன்றைய சட்டம்.!!!

    வாழிய பாரத மணித்திருநாடு .
    வந்தே மாதரம் !! வந்தே மாதரம் !!

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  40. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ....

    பதிலளிநீக்கு
  41. பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் ....!!!

    பதிலளிநீக்கு
  42. கதிர் - ஈரோடு said...

    // நம்பிக்கையூட்டும் பதிவு

    வளர்நோக்கு மாற்றம் என்பதை நம்மில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டுமே தவிர...
    எதையும் குறை சொல்ல உரிமையில்லை //

    அந்த நம்பிககையை வழிமொழிந்த கருத்துக்கு வாழ்த்துக்களுக்கும் நன்றி கதிர்!

    பதிலளிநீக்கு
  43. சகாதேவன் said...

    //ஆஹா, இன்று லீவு. சன் டிவி,கே டிவியில் நிறைய ப்ரோகிராம் இருக்கு. ஜாலி. பலருக்கும் இதுதான் எண்ணம்.//

    விடுமுறை என்றாலே அந்தநாளின் முக்கியத்துவத்தை மறக்கடிக்கும் டிவி நிகழ்ச்சிகள்தான் முன் நிற்கின்றன:(!

    //டிவியில் ஜனாதிபதி, கவர்னர், கலெக்டர் கொடி ஏற்றுவதை காட்டும்போது சேனலை மாற்றி விடாமல் எழுந்து நின்று மரியாதை செய்தாலே போதும்.//

    நல்ல கருத்து.

    //உங்களுக்கு லீவ் கிரான்டெட். சீக்கிரம் வந்துவிடுங்கள்//

    ஆகா, உடனடியாக சான்ங்ஷன் செய்ததற்கு என் நன்றிகள்:)! அதற்காகவே சீக்கிரம் வந்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  44. சுசி said...

    //அருமையான பதிவு அக்கா.. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். போய்ட்டு சீக்கிரமா வாங்க.//

    நல்லது சுசி, மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  45. பீர் | Peer said...

    // சிந்திக்க வேண்டிய பகிர்வு.//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பீர்!

    பதிலளிநீக்கு
  46. மருதநாயகம் said...

    //சுதந்திர தின வாழ்த்துக்கள்//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மருதநாயகம்.

    பதிலளிநீக்கு
  47. நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு !

    //அதுபோல இன்றைய காலக் கட்டத்தில் எதிர்க்கப் படும் நல்ல விஷயங்கள் நாளை ஒருநாள் புரிதலுடன் ஏற்கப்பட்டே தீரும்.//

    ம்ம்ம். நிச்சயமா.

    படேல் அவர்களின் சிந்தனை, தாகூர் அவர்களின் உருக்கமான வரிகள் (உங்களின் தமிழாக்கமும் சேர்த்து) எல்லாம் படிக்க படிக்க இன்பம்.

    பதிலளிநீக்கு
  48. வருண் said...

    //***ஆயினும் இலக்கை அடைந்தால் மட்டுமே கிடைக்கும் மகிழ்ச்சி என்றால் என்றைக்கும் வராது எதிலும் திருப்தி. கடந்து வந்த பாதைகள் கரடுமுரடாக இருந்தாலும் கூட அடைந்த சாதனைகளையே ஊக்கமாக எடுத்துக் கொண்டு பெருமையுடன் பயணத்தைத் தொடருவோம் உற்சாகமாக***

    உண்மைதாங்க, ராமலக்ஷ்மி :)//

    நன்றி வருண், இந்தக் கருத்தோடு ஒத்து போனதுக்கு தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும்!

    பதிலளிநீக்கு
  49. அது சரி said...

    //முன்னாடியே மன்னிப்பு கேட்டுக்கிறேன்....ஸாரி, பட் என்னவோ எட்டாம் க்ளாஸ் கட்டுரை மாதிரி இருக்கு....//

    (அது) சரி, உங்கள் மனதில் பட்டதைத்தானே சொல்கிறீர்கள்:)! ஸாரி, பட் எட்டாம் வகுப்பு கட்டுரையே ஆயினும் அதில் எட்டி யோசிக்க ஏதேனும் இருக்கிறதா என்பதைச் சற்றாவது கவனித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    ***/ //எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும் சொல்லப் பட்டாலும், தரமான மருத்துவ சேவை இலவசமாக எளிய மக்களுக்குக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.//

    உண்மையான ஏழை எளிய மக்கள் இந்த "தரமான" மருத்துவ சேவை குறித்து என்ன நினைப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்! /***

    குறைபாடுகள் இருக்கலாம்தான், அதையும் குறிப்பிட்டிருக்கிறேன். எத்தனையோ எளிய மக்கள் தாங்கள் பெற்ற (அரசின்) மருத்துவ சேவையில் நெகிழ்ந்து, வாழ்த்திச் சென்றதை அறிந்திருக்கிறேன். நேரிலும் சொல்லக் கேட்டிருக்கிறேன். மேலும் ஒரு சாதாரண தலைவலி காய்ச்சலுக்குக் கூட இன்சூரன்ஸ் இல்லாவிட்டால் மருத்துவமனையை அணுக முடியாத நிலையுடைய பல நாடுகளை விட நாம் எவ்வளவோ மேல் என்பதையும் யோசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அதுசரி.

    பதிலளிநீக்கு
  50. அத்திவெட்டி ஜோதிபாரதி said...

    ***/ //எப்போது கிடைக்கும் உண்மையான சுதந்திரம்? //

    நமக்கு சுதந்திரம் வேண்டாம்...

    நாம் அடிமை போதையில் சொர்க்கத்தை பார்க்கத்துடிக்கிறவர்கள்...

    சொர்க்கம் சுதந்திரத்தை விட உன்னதமானது... /***

    கலக்கம் விடுங்கள். மக்கள் விழிப்பார்கள். நம்பிக்கையோடு நாளையைச் சந்திப்போம்.

    // மீண்டும் வந்து கலக்குங்கள்...//

    கலக்கிடலாம்:), வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோதிபாரதி.

    பதிலளிநீக்கு
  51. ஆ.ஞானசேகரன் said...

    //சுதந்திர தினத்தில் ஒரு நல்ல நச்சுன்னு பதிவு வாழ்த்துகள்//

    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  52. goma said...

    //சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி கோமா!

    பதிலளிநீக்கு
  53. கோமதி அரசு said...

    //சுதந்திர தின வாழ்த்துக்கள்,ராமலக்ஷ்மி.


    விகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.//

    தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி கோமதி அரசு.

    பதிலளிநீக்கு
  54. சந்தனமுல்லை said...

    //சீரிய சிந்தனைகள்..முத்துச்சரம் ஒளிர்கிறது!//

    நன்றி முல்லை.

    //ஆகா...வலையிலிருந்து விடுதலையா...அது உங்கள் சுதந்திரம்!! :-))//

    ஆகா...எனது பாயிண்டை எனக்கே திருப்பிட்டீங்களா:))?!

    பதிலளிநீக்கு
  55. R.Gopi said...

    ***//தங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

    //வாழ்க்கையைப் போலவே சுதந்திரம் என்பதும் ஒரு தொடர் பயணம்........வாழ்க பாரதம்!//

    ச‌ரியாக‌ சொன்னீர்க‌ள்.... த‌ங்க‌ள் சீரிய‌ சிந்த‌னைக்கும், இந்த‌ ப‌திவிற்கும் என் ம‌ன‌மார்ந்த வாழ்த்துக்க‌ள்//***

    தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கோபி. சீக்கிரம் வந்து உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறேன்:)!

    பதிலளிநீக்கு
  56. அபி அப்பா said...

    //நெல்லைக்கு போறீங்களா? டீச்சரை பார்க்கவும். அருமையான பதிவு!!!!!//

    இந்தமுறை நேரம் வாய்ப்பது கடினம். அடுத்தமுறை முயற்சிக்கிறேன்:)! கருத்துக்கு மிகவும் நன்றி அபி அப்பா!

    பதிலளிநீக்கு
  57. sury said...
    // தானும் வளைந்து, தனக்கேற்றாற்போல், எதையும் எச்சட்டத்தையும், வளைக்கவும் தெரியவேண்டும்.
    அதுதானே இன்றைய சட்டம்.!!!//

    சட்டம் பற்றிய தங்கள் நீண்ட கருத்துக்கு நன்றி சூரி சார்! வருந்தத்தக்க உண்மைகளை உடைத்துச் சொல்லியிருக்கிறீர்கள். எத்தனையையோ கடந்து வந்து விட்டோம். ‘இதுவும் கடந்து போகும்’! இவர்களிலும் நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் வருவார்கள் என நம்புவோம்.

    //வாழிய பாரத மணித்திருநாடு .
    வந்தே மாதரம் !! வந்தே மாதரம் !!//

    வந்தே மாதரம்!

    பதிலளிநீக்கு
  58. லவ்டேல் மேடி said...

    //சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ....

    பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் ....!!!//

    நல்வாழ்த்துக்களுக்கு நன்றி மேடி!

    பதிலளிநீக்கு
  59. சதங்கா (Sathanga) said...

    // நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு !

    //அதுபோல இன்றைய காலக் கட்டத்தில் எதிர்க்கப் படும் நல்ல விஷயங்கள் நாளை ஒருநாள் புரிதலுடன் ஏற்கப்பட்டே தீரும்.//

    ம்ம்ம். நிச்சயமா.//

    நன்றி சதங்கா, இது வெறும் எதிர்பார்ப்பன்று. நிச்சயம் நடக்கும்.

    //படேல் அவர்களின் சிந்தனை, தாகூர் அவர்களின் உருக்கமான வரிகள் (உங்களின் தமிழாக்கமும் சேர்த்து) எல்லாம் படிக்க படிக்க இன்பம்.//

    மிகவும் நன்றி, குறிப்பாக என் தமிழாக்கத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கு:)!

    பதிலளிநீக்கு
  60. அருமையான பதிவு.

    /*எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும் சொல்லப் பட்டாலும், தரமான மருத்துவ சேவை இலவசமாக எளிய மக்களுக்குக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது*/
    உண்மை

    /*வாழ்க்கையைப் போலவே சுதந்திரம் என்பதும் ஒரு தொடர் பயணம். கடக்க வேண்டிய மைல்கற்கள் எவ்வளவோ இருக்கின்றனதான். ஆயினும் இலக்கை அடைந்தால் மட்டுமே கிடைக்கும் மகிழ்ச்சி என்றால் என்றைக்கும் வராது எதிலும் திருப்தி. கடந்து வந்த பாதைகள் கரடுமுரடாக இருந்தாலும் கூட அடைந்த சாதனைகளையே ஊக்கமாக எடுத்துக் கொண்டு பெருமையுடன் பயணத்தைத் தொடருவோம் உற்சாகமாக! */

    இத்தனை மக்கள் உள்ள நாட்டில், நாமும் பல வழிகளில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறோம்.

    நீங்கள் சொன்னது போல் /* "இன்னொரு பக்கம் அவ்வப்போது வெடிக்கின்ற கலவரங்களும் மோதல்களும் ‘தீர்வே பிறக்காதா?’ எனும் ஆதங்கத்தையும், கூடவே ‘சட்டம் என்ன செய்து கொண்டிருக்கிறது?’ எனும் கேள்வியினையும் எழுப்பியபடி இருக்கின்றன. "*/

    /*...கூட அடைந்த சாதனைகளையே ஊக்கமாக எடுத்துக் கொண்டு பெருமையுடன் பயணத்தைத் தொடருவோம் உற்சாகமாக*/
    ஆம் தொடருவோம் உற்சாகமாக

    பதிலளிநீக்கு
  61. அருமையான பதிவு ராமலக்ஷ்மி. தமிழாக்கம் வெகு அருமையாக இருக்கிறது.

    மனமார்ந்த வாழ்த்துகள். எப்போ திரும்பி வருவீங்கன்னு சொல்லவே இல்லையே?

    பதிலளிநீக்கு
  62. நல்ல கட்டுரை. சென்று வாருங்கள். மீண்டும் சந்திப்போம் :-)

    பதிலளிநீக்கு
  63. நல்லா நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க!! சுதந்திர தினத்தில் எல்லோரையும் சிந்திக்க வைச்சுட்டீங்க!!

    பதிலளிநீக்கு
  64. நல்ல கருத்துக்கள்...இது போல இன்னும் நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  65. என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

    http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

    என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி

    பதிலளிநீக்கு
  66. பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.

    http://s1023.photobucket.com/albums/af360/singakkutti/?action=view&current=singakkutti-awad.gif

    நன்றி.

    பதிலளிநீக்கு
  67. //வருண் has left a new comment on your post "எப்போது கிடைக்கும் உண்மையான சுதந்திரம்?":

    ராமலக்ஷ்மி அவர்களே!

    நீங்க வெக்கேஷன்ல இருக்கீங்கனு தெரியும்!

    இருந்தாலும் உங்களை இந்த தொடர் பதிவில் கலந்துக்க அழைத்துள்ளேன். முடிஞ்சா கலந்துகொள்ளுங்கள். :)

    நன்றி

    வருண் செப் 2, 2009

    http://timeforsomelove. blogspot.com/2009/09/blog- post_2112.html//

    பதிலளிநீக்கு
  68. அமுதா said...

    // அருமையான பதிவு.//

    //உண்மை//

    // இத்தனை மக்கள் உள்ள நாட்டில், நாமும் பல வழிகளில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறோம்.//

    // ஆம் தொடருவோம் உற்சாகமாக//

    நன்றி அமுதா. ஒத்த கருத்துக்களுக்கும், உற்சாகமாய் பயணத்தைத் தொடரக் கூடவே குரல் கொடுக்கும் நட்புக்கும்.

    பதிலளிநீக்கு
  69. சிங்கக்குட்டி said...

    // சுதந்திர தின வாழ்த்துக்கள் :-))//

    நன்றி சிங்கக்குட்டி!

    பதிலளிநீக்கு
  70. கவிநயா said...

    //அருமையான பதிவு ராமலக்ஷ்மி. தமிழாக்கம் வெகு அருமையாக இருக்கிறது.//

    நன்றி கவிநயா, தமிழாக்கத்தைக் கவனித்துத் தனியாகப் பாராட்டியிருப்பதற்கும்:)!

    //எப்போ திரும்பி வருவீங்கன்னு சொல்லவே இல்லையே?//

    இன்னும் ஓரிரு வாரங்கள்:)!

    பதிலளிநீக்கு
  71. " உழவன் " " Uzhavan " said...

    //நல்ல கட்டுரை. சென்று வாருங்கள். மீண்டும் சந்திப்போம் :-)//

    மிகவும் நன்றி உழவன்:)!

    பதிலளிநீக்கு
  72. இசக்கிமுத்து said...

    //நல்லா நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க!! சுதந்திர தினத்தில் எல்லோரையும் சிந்திக்க வைச்சுட்டீங்க!!//

    நன்றி இசக்கிமுத்து. மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை வலைப்பக்கம் பார்க்கிறேன். மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  73. சிங்கக்குட்டி said...

    //நல்ல கருத்துக்கள்...இது போல இன்னும் நிறைய எழுதுங்கள்.//

    தொடரும் உங்கள் அனைவரின் ஊக்கத்துக்கும் நன்றி.

    //என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.//

    பார்த்தேன் சிங்கக் குட்டி. பட்டாம்பூச்சி விருதுப் பதிவில் எனக்கும் நவின்றிருக்கும் நன்றியை. மிக்க மகிழ்ச்சி.

    //பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.

    http://s1023.photobucket.com/albums/af360/singakkutti/?action=view&current=singakkutti-awad.gif//

    எனக்கு நட்சத்திர விருதா? அதற்கான தகுதி இருக்கிறதா எனத் தெரியவில்லை:)! ஆனாலும் உங்கள் அன்பான விருதை மகிழ்வுடன் பெற்றுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  74. @ வருண்,

    //இந்த தொடர் பதிவில் கலந்துக்க அழைத்துள்ளேன்.//

    தொடர் பதிவென்றாலே கழுவுகின்ற மீன்களில் நழுவுகின்ற மீனாயிற்றே நான்:)? ஆனாலும் உங்கள் அன்பான அழைப்புக்கு நன்றி. பார்க்கிறேன்.

    //நீங்க வெக்கேஷன்ல இருக்கீங்கனு தெரியும்!//

    வெகேஷன் முடிந்து திரும்பியாயிற்று. விடுப்பு தொடர்கிறது இன்னும் சில வாரகால கட்டாய ஓய்வாக..:)! ஓய்வு முடிந்தபின் சந்திக்கிறேன் அனைவரையும், கூடிய மட்டும் அவரவர் வலைப்பூக்களில்..!

    பதிலளிநீக்கு
  75. @ அந்தோணிமுத்து,

    தேடி விசாரித்தபடி இருக்கும் உங்கள் போன்ற நண்பர்களுக்காகவே சீக்கிரம் திரும்பி வருவேன்:)! நன்றி அந்தோணிமுத்து.

    பதிலளிநீக்கு
  76. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி ராமலக்ஷ்மி

    நன்றி...

    அவசியம் வருகிறேன்...

    இதோ படித்துக் கொண்டு இருக்கிறேன் .... மிக அருமையான சிந்தனை.. அது இப்படி இருந்து இருக்கலாம், இது இப்படி இருந்து இருக்கலாம், இவர் சரியில்லை அவர் சரியில்லை என்று பெரும்பாலோர் பல நேரங்களில் நம்பிக்கையற்று போகையில் - உங்களைப் போன்றோர் ஓர் உற்சாக டானிக்காக விளங்குகிறீர்கள்....

    எனக்கு ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது...

    " அரை குடுவை பழச் சாற்றை பார்க்கும் போது - பாதி குடுவை வெற்றிடத்தைக் காண்பவன் முட்டாள் , பாதி குடுவை பழச்சாற்றை ரசிப்பவனே அறிவாளி.."

    அந்த நம்பிக்கை பொய்க்காது என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.. (இந்த வரிக்கு உபயம் கமல்ஹாசன் )

    பதிலளிநீக்கு
  77. ஈ ரா said...

    //" அரை குடுவை பழச் சாற்றை பார்க்கும் போது - பாதி குடுவை வெற்றிடத்தைக் காண்பவன் முட்டாள் , பாதி குடுவை பழச்சாற்றை ரசிப்பவனே அறிவாளி.."//

    பதிவில் நான் சொல்ல முயன்றதை பாதிக் குடுவைப் பழச்சாறாகத் தந்து விட்டீர்கள். அருமை. நன்றி ஈ.ரா!

    பதிலளிநீக்கு
  78. மின்மடல் வழியாக..:
    //Hi Ramalakshmi,

    Congrats!

    Your story titled 'எப்போது கிடைக்கும் உண்மையான சுதந்திரம்?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 14th August 2009 10:56:41 AM GMT

    Here is the link to the story: http://www.tamilish.com/story/99324

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team//

    தகவலுக்கு நன்றி தமிழிஷ். வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin