செவ்வாய், 28 ஏப்ரல், 2009

நேர்க்கம்பியின் நிழல்கள்



தகிக்கின்ற சூரியனின்
தங்க ஒளிக்கீற்றுகள்
சன்னல் வழிப்பாய்கையில்-
வளைந்து குழைந்த
திரைச்சீலை மேலே
நெளிந்தே விழுகின்றன
நேர்க்கம்பியின் நிழல்கள்.

மின்னலென் வெட்டுகிறது
மூளைக்குள் சிந்தனையொன்று-
“பார்த்துப் பழகு”!

நேர்ப்பாதையிலே
செல்லுபவராய்
நாம் இருந்தாலும்-
பார்ப்பவருக்கு
கம்பியின் நெளிந்த நிழல்
போலவே கேள்விக்குறியாவோம்











சென்றுநாம் சேர்கின்ற கூட்டத்தார்-
வசதிக்கும் வாய்ப்புக்கும்
வளைந்து நெளிந்த
குறுக்குப் பாதையைத்
தேர்ந்தெடுப்பவரானால்!

*** *** ***




இக்கவிதை ஏப்ரல் 2009 மனிதம் மின்னிதழிலும், 29 ஏப்ரல் 2009 யூத்ஃபுல் விகடன் இணைய தளத்திலும் வெளியாகியுள்ளது. விகடனில்:

48 கருத்துகள்:

  1. //நேர்ப்பாதையிலே
    செல்லுபவராய்
    நாம் இருந்தாலும்-
    பார்ப்பவருக்கு
    கம்பியின் நெளிந்த நிழல்
    போலவே கேள்விக்குறியாவோம்///

    உண்மை
    படமும்,கவிதையும் அருமை....

    //மனிதம் மின்னிதழிலும், 29 ஏப்ரல் 2009 யூத்ஃபுல் விகடன் இணைய தளத்திலும் வெளியாகியுள்ளது//

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. படத்துடன் கவிதையில் நல்ல கருத்துக்கள் பொதிந்து கிடக்கிறதே? நல்ல உவமை. நல்லாயிருக்கு அக்கா.

    பதிலளிநீக்கு
  3. நான் தான் முதல் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. //நேர்ப்பாதையிலே
    செல்லுபவராய்
    நாம் இருந்தாலும்-
    பார்ப்பவருக்கு
    கம்பியின் நெளிந்த நிழல்
    போலவே கேள்விக்குறியாவோம்//

    அசத்தல் :-) ..பார்வைகள் வேறு "ஒவ்வொருவருக்கும்"

    பதிலளிநீக்கு
  5. ஜீவராஜ் முதலாவது வந்து விட்டாரே? சரி பரவாயில்லை. 1 பெரிசா, 2 பெருசா? ம்...ம்... 2 தான் பெருசு. சமாதானம் ஆயிடுச்சு. நான் அப்புறமா வர்ரேன்.

    பதிலளிநீக்கு
  6. எனது தற்போதைய உணர்வை தங்கள் கவிதை பிரதிபலிக்கின்றது அக்கா!

    பதிலளிநீக்கு
  7. சிச்சுவேஷனல் கவிதையா நல்ல டைமிங்க்ல சூப்பராய் இருக்கு !

    நிறைய நிறையா புரியுது :))

    பதிலளிநீக்கு
  8. //தமிழ் பிரியன் said...
    எனது தற்போதைய உணர்வை தங்கள் கவிதை பிரதிபலிக்கின்றது அக்கா!
    //

    ஆமாம் இவர் இருக்கும் நிலையை உணர்வை புரியவைக்கிறது !

    நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் இவர் பிசியென்று ஆனால் இவர் பிசியென்ற கம்பியினை காட்டிவிட்டு தூங்கிக்கொண்டிருக்கிறார் வளைந்த கம்பியாக - தம்பி!

    பதிலளிநீக்கு
  9. //
    தகிக்கின்ற சூரியனின்
    தங்க ஒளிக்கீற்றுகள்
    சன்னல் வழிப்பாய்கையில்-
    வளைந்து குழைந்த
    திரைச்சீலை மேலே
    நெளிந்தே விழுகின்றன
    நேர்க்கம்பியின் நிழல்கள்.
    //

    ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு
    உண்மையின் உண்மையான தோற்றம்
    அளித்த பாங்கு வெகு அருமை.

    பதிலளிநீக்கு
  10. //
    மின்னலென் வெட்டுகிறது
    மூளைக்குள் சிந்தனையொன்று-
    “பார்த்துப் பழகு”!
    //

    அவசியமான, தெளிவான விழிப்புணர்வை உணர்த்தும் மின்னல்
    அருமை அருமை சகோதரி!

    பதிலளிநீக்கு
  11. //
    நேர்ப்பாதையிலே
    செல்லுபவராய்
    நாம் இருந்தாலும்-
    பார்ப்பவருக்கு
    கம்பியின் நெளிந்த நிழல்
    போலவே கேள்விக்குறியாவோம்
    //

    பார்ப்பவர்களுக்கு கேள்விக்குறியானாலும்
    நமக்கு நன்மையை பயக்கும் அல்லவா??

    தீமையை அகற்றும் சக்தி நேர்பாதைக்கு உண்டு அல்லாவா ??

    பதிலளிநீக்கு
  12. //
    சென்றுநாம் சேர்கின்ற கூட்டத்தார்-
    வசதிக்கும் வாய்ப்புக்கும்
    வளைந்து நெளிந்த
    குறுக்குப் பாதையைத்
    தேர்ந்தெடுப்பவரானால்!
    //

    யாராலும் நம்மை காப்பற்ற முடியாது
    நாமே நமக்கு கெடுதல்கள் செய்து
    கொள்ளுவது போல ஆகும் இல்லையா சகோதரி??

    பதிலளிநீக்கு
  13. //மனிதம் மின்னிதழிலும், 29 ஏப்ரல் 2009 யூத்ஃபுல் விகடன் இணைய தளத்திலும் வெளியாகியுள்ளது
    //

    அருமையான படங்கள்
    அருமையான கவிதை

    உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்
    என் மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கின்றது.

    உங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி!

    பதிலளிநீக்கு
  14. அருமையான படம்....அருமையான கருத்து....
    அன்புடன் அருணா

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துகள்

    அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  16. //பார்த்துப் பழகு

    சரியாச் சொன்னீங்க. படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  17. கருத்துகள் பொதிந்த சரம்! சிந்தனையைத் தூண்டுகிறது!

    பதிலளிநீக்கு
  18. அட சாமி.... கம்பியகோடா உட்டுவெக்க மாட்டீங்கறீங்க.....!! நெம்ப டூ-மச்....!!!! இருந்தாலும் சொல்லிய கவிதை கருத்து நெம்ப .... நெம்ப சூப்பர்.....!! வாழ்த்துக்கள்....!!!



    இருந்தாளுமும் " இளமை வெகு இனிது " போல வராது....!!! ஆவ்வ்வ்....!!!!

    பதிலளிநீக்கு
  19. நீங்கள் படம் பிடித்தது விட்டுக் கம்பியின் நிழல்களை மட்டுமல்ல; மனிதர்களையும் தான்.

    //“பார்த்துப் பழகு”! //

    அழகு :-)

    பதிலளிநீக்கு
  20. ராமலக்ஷ்மி:

    அறிவியல் கலந்த அழகான ஆக்கம் உங்கள் கவிதை!:-)

    ***நேர்ப்பாதையிலே
    செல்லுபவராய்
    நாம் இருந்தாலும்-
    பார்ப்பவருக்கு
    கம்பியின் நெளிந்த நிழல்
    போலவே கேள்விக்குறியாவோம்
    சென்றுநாம் சேர்கின்ற கூட்டத்தார்-
    வசதிக்கும் வாய்ப்புக்கும்
    வளைந்து நெளிந்த
    குறுக்குப் பாதையைத்
    தேர்ந்தெடுப்பவரானால்!***

    ஆமாம், "நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி" என்று பாரதி சொன்னதுபோல் "கோணல் பார்வை" பார்க்கும் பலர் இருக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை!

    பதிலளிநீக்கு
  21. த.ஜீவராஜ் said...

    //உண்மை
    படமும்,கவிதையும் அருமை..//

    கருத்துக்கும் தங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஜீவராஜ்.

    பதிலளிநீக்கு
  22. கடையம் ஆனந்த் said...
    //nice post//

    நன்றி:)!

    //படத்துடன் கவிதையில் நல்ல கருத்துக்கள் பொதிந்து கிடக்கிறதே? நல்ல உவமை. நல்லாயிருக்கு அக்கா.//

    பார்த்த நிழலுக்காகப் படம்.

    எடுத்தப் படத்துக்காக கவிதை:)!

    உங்களுக்குப் பிடித்துப் போனதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  23. கடையம் ஆனந்த் said...

    //நான் தான் முதல் என்று நினைக்கிறேன்.//

    நினைத்தது தவறென்று நீங்களே இதோ சொல்லி விட்டீர்கள்:

    //ஜீவராஜ் முதலாவது வந்து விட்டாரே? சரி பரவாயில்லை. 1 பெரிசா, 2 பெருசா? ம்...ம்... 2 தான் பெருசு. சமாதானம் ஆயிடுச்சு. நான் அப்புறமா வர்ரேன்.//

    ரெண்டுதான் பெரிசு:)! எப்போது வந்தால் என்ன ஆனந்த். எல்லார் கருத்தும் எனக்கு ஸ்பெஷலே:)!

    பதிலளிநீக்கு
  24. கிரி said...
    //அசத்தல் :-)..//

    நன்றி கிரி:)!

    //பார்வைகள் வேறு "ஒவ்வொருவருக்கும்"//

    உண்மைதான். "பனை மரத்துக்குக் கீழ் நின்று பாலைப் பருகினாலும்.." கதைதான்.

    பதிலளிநீக்கு
  25. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியோ
    உங்கள் வீட்டுக் கர்ட்டன்?
    கதிரவன் வெளிச்சமும்
    உங்களுக்குக் கருத்துகளைச் சொல்லிச் செல்கிறதோ.
    திண்மைச் சிந்தனை வடிக்கும் ஓவியம் ஒன்றோன்றும் பூரிக்க வைக்கிறது ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  26. தமிழ் பிரியன் said...

    //எனது தற்போதைய உணர்வை தங்கள் கவிதை பிரதிபலிக்கின்றது அக்கா!//

    எல்லோரது வாழ்விலும் எப்போதாவது உணர நேரும் உண்மைதான் இது தமிழ் பிரியன்.

    பதிலளிநீக்கு
  27. ஆயில்யன் said...

    //சிச்சுவேஷனல் கவிதையா நல்ல டைமிங்க்ல சூப்பராய் இருக்கு !//

    நன்றி ஆயில்யன்.

    //நிறைய நிறையா புரியுது :))//

    கேட்க நிறைவா இருக்கு:)!

    பதிலளிநீக்கு
  28. ஆயில்யன் said...
    //நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் இவர் பிசியென்று ஆனால் இவர் பிசியென்ற கம்பியினை காட்டிவிட்டு தூங்கிக்கொண்டிருக்கிறார் வளைந்த கம்பியாக//

    அவருக்கு உங்கள் 'கோபம்' பதிவில் ‘மீள்பதிவிடும்’ யோசனையைக் கூறி மியூசிக் எல்லாம் ஸ்டார்ட் செய்து வைத்தேன்:)! கவனித்தாரா தெரியவில்லையே:( !

    பதிலளிநீக்கு
  29. RAMYA said...
    ***\ //மின்னலென் வெட்டுகிறது
    மூளைக்குள் சிந்தனையொன்று-
    “பார்த்துப் பழகு”!//

    அவசியமான, தெளிவான விழிப்புணர்வை உணர்த்தும் மின்னல். அருமை அருமை சகோதரி!***\

    மின்னல் சிந்தனை சரிதான் இல்லையா:)?

    //பார்ப்பவர்களுக்கு கேள்விக்குறியானாலும்
    நமக்கு நன்மையை பயக்கும் அல்லவா??

    தீமையை அகற்றும் சக்தி நேர்பாதைக்கு உண்டு அல்லாவா ??//

    நிச்சயமாக..

    ***\//சென்றுநாம் சேர்கின்ற கூட்டத்தார்-
    வசதிக்கும் வாய்ப்புக்கும்
    வளைந்து நெளிந்த
    குறுக்குப் பாதையைத்
    தேர்ந்தெடுப்பவரானால்!//

    யாராலும் நம்மை காப்பற்ற முடியாது
    நாமே நமக்கு கெடுதல்கள் செய்து
    கொள்ளுவது போல ஆகும் இல்லையா சகோதரி??***\

    ஆமாம் ரம்யா. 'பார்த்துப் பழகு'தல் உத்தமம். தெரியாமல் சேர நேர்ந்தாலும் தெளிந்த பிறகு விலகினாலும் நம்மைக் காத்துக் கொள்ள இருக்கிறது வாய்ப்பு.

    தங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் என் நன்றிகள் ரம்யா.

    பதிலளிநீக்கு
  30. அன்புடன் அருணா said...

    //அருமையான படம்....அருமையான கருத்து....//

    பாராட்டுக்கு நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  31. திகழ்மிளிர் said...

    //வாழ்த்துகள்

    அருமையான கவிதை//

    வருகைக்கும் தொடர் ஊக்கத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திகழ்மிளிர்.

    பதிலளிநீக்கு
  32. முத்துலெட்சுமி-கயல்விழி said...

    //வழமை போல கருத்தாழமிக்க கவிதை..//

    நன்றி முத்துலெட்சுமி:)!

    பதிலளிநீக்கு
  33. Truth said...

    / //பார்த்துப் பழகு/

    சரியாச் சொன்னீங்க. படங்களும் அருமை.// /

    நன்றி ட்ரூத். படங்கள் நான் எடுத்தவை என உங்களுக்குச் சொல்லத் தேவையில்லைதானே:)!

    பதிலளிநீக்கு
  34. சந்தனமுல்லை said...

    //கருத்துகள் பொதிந்த சரம்! சிந்தனையைத் தூண்டுகிறது!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முல்லை.

    பதிலளிநீக்கு
  35. லவ்டேல் மேடி said...

    //அட சாமி.... கம்பியகோடா உட்டுவெக்க மாட்டீங்கறீங்க.....!! நெம்ப டூ-மச்....!!!!//

    :)))!

    //இருந்தாலும் சொல்லிய கவிதை கருத்து நெம்ப .... நெம்ப சூப்பர்.....!! வாழ்த்துக்கள்....!!!//

    அப்பாடா, நன்றி மேடி:)!

    //இருந்தாளுமும் " இளமை வெகு இனிது " போல வராது....!!! ஆவ்வ்வ்....!!!!//

    புரியுது புரிய்து, எனது கவிதைகளிலே அதுதான் உங்கள் ALL TIME FAVOURITE என எனக்கு நன்றாகத் தெரியுமே:))!

    பதிலளிநீக்கு
  36. " உழவன் " " Uzhavan " said...

    ***//நீங்கள் படம் பிடித்தது விட்டுக் கம்பியின் நிழல்களை மட்டுமல்ல; மனிதர்களையும் தான்.//***

    மனிதர்களைப் பற்றி உணர்ந்திருந்தது நிழல்களைப் பார்த்ததும் படமாக மனதில் விரிந்துவிட்டது என்றும் கொள்ளலாமோ:)!?

    ***/ //“பார்த்துப் பழகு”! //

    அழகு :-) /***

    நன்றி உழவன்.

    பதிலளிநீக்கு
  37. வருண் said...

    //அறிவியல் கலந்த அழகான ஆக்கம் உங்கள் கவிதை!:-)//

    நன்றி வருண்.

    //ஆமாம், "நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி" என்று பாரதி சொன்னதுபோல் "கோணல் பார்வை" பார்க்கும் பலர் இருக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை!//

    ஆம், அவசர வாழ்வில் ஆராயாமல் அள்ளித் தெளிப்பார்கள் வார்த்தைகளை:(!

    பதிலளிநீக்கு
  38. வல்லிசிம்ஹன் said...

    //கம்பன் வீட்டுக் கட்டுத்தறியோ
    உங்கள் வீட்டுக் கர்ட்டன்?//

    :)!

    //கதிரவன் வெளிச்சமும்
    உங்களுக்குக் கருத்துகளைச் சொல்லிச் செல்கிறதோ.//

    ஹி, ஆமாம் வல்லிம்மா.

    //திண்மைச் சிந்தனை வடிக்கும் ஓவியம் ஒன்றோன்றும் பூரிக்க வைக்கிறது//

    உங்கள் தொடர் ஊக்கத்துக்கு என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  39. 'பார்வைகள் பலவிதம்'ங்கறத சொல்லும் அழகான கவிதை வரிகள்.

    பதிலளிநீக்கு
  40. சதங்கா (Sathanga) said...

    //'பார்வைகள் பலவிதம்'ங்கறத சொல்லும் அழகான கவிதை வரிகள்.//

    நன்றி சதங்கா. பார்வைகள் பலவிதம்தான். அதுவும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாய்..!

    பதிலளிநீக்கு
  41. கவிஞனின் பார்வையில் படுவதெல்லாம் கவிதையாகிவிடும் என்ற கருத்து தங்கள் கவிதையில் மெய்பிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான பார்வை! அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  42. குடந்தைஅன்புமணி said...

    //வித்தியாசமான பார்வை! அருமையாக உள்ளது.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்புமணி.

    பதிலளிநீக்கு
  43. /*நெளிந்தே விழுகின்றன
    நேர்க்கம்பியின் நிழல்கள்.

    மின்னலென் வெட்டுகிறது
    மூளைக்குள் சிந்தனையொன்று-
    “பார்த்துப் பழகு”! */

    அருமையாகச் சொன்னீர்கள். நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  44. அமுதா said...

    //அருமையாகச் சொன்னீர்கள். நல்ல கவிதை//

    நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  45. வாவ், ரொம்ம நல்லா வந்திருக்கு சகோ. புகைப்படமும் அருமை. கவிதையும் அட்டகாசம். அதான் டபுள் ஓகே ஆகிவிட்டது. (மனிதம்/விகடன்). கலக்குங்க :)

    அனுஜன்யா

    மாறாதது - என்னுடைய தாமதம் :)

    பதிலளிநீக்கு
  46. அனுஜன்யா said...

    //வாவ், ரொம்ம நல்லா வந்திருக்கு சகோ. புகைப்படமும் அருமை. கவிதையும் அட்டகாசம். அதான் டபுள் ஓகே ஆகிவிட்டது. (மனிதம்/விகடன்). கலக்குங்க :)//

    டபுள் நன்றிங்க:)!

    //மாறாதது - என்னுடைய தாமதம்:)//

    ஊக்கமும்:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin