முப்பெரும் தேவியர்
கடந்த இரண்டு வருடங்களாக அவரவர் வீட்டில் சிறிய அளவில் கொலு வைத்து யாரையும் அழைக்க வழியின்றி எங்கு செல்லவும் வழியின்றி நவராத்திரியை வழிபாட்டினைச் செய்தவர்கள் இந்த வருடம் ஆசுவாசமாகி கொண்டாட்ட மனநிலைக்கு வந்திருப்பது ஆரோக்கியமான நேர்மறை அதிர்வலைகளைப் பரப்பியுள்ளது (positive vibes) என்றே சொல்ல வேண்டும்.
நான் சென்று பார்த்த கொலுக்களின் படங்களில் சில முன்னோட்டமாக இந்தப் பதிவில், விஜயதசமி வாழ்த்துகளுடன்..!
தங்கை வீட்டுக் கொலு
கடந்த ஐந்து வருடங்களாகக் கொலு வைத்து வருகிறார் தங்கை.
அது குறித்த முந்தைய பதிவுகள் சில:ஏரி குளங்களும்.. நவராத்திரி கொலுப் பொம்மைகளும்.. - 2017
நவராத்திரி வாழ்த்துகள் ! - 2018
இந்த வருடக் கொலு:
ஒரு ஒழுங்கோடும் ஆர்வத்தோடும் மட்டுமின்றி ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாகக் கவனித்து ரசனையோடு தங்கை வைக்கும் கொலு அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
கீழ் வரும் படத்தில் படிக்கட்டில் இருக்கும் பொம்மைகள் பலவற்றைத் தனித்தனியாகப் படமெடுத்து முன்னரே முந்தைய பதிவுகளில் தந்திருக்கிறேன்.
மைசூர் தசராவைக் கருவாகக் கொண்டு உருவானது இடப் பக்கம் இருக்கும் பொம்மைக் காட்சி. மைசூர் சாமுண்டி மலை மற்றும் சுற்றியுள்ள கிராமத்தையும் காணலாம்;
#2
கீழ்வரும் படத்தில் இடப் பக்கம் இருப்பவை கிருஷ்ணாவதாரக் காட்சிகள். இந்த வருடம் புதிதாகக் கொலுவில் சேர்க்கப்பட்டவை. அனைத்துப் பொம்மைகளும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பின்னொரு சமயம் தனித் தனிக் காட்சிகளாகப் பகிர்ந்திடுவேன்:).
#3
துர்கா தேவி
#4
#5
சரஸ்வதி தேவி
#6
மேலும் புதிய வரவுகளாகக் கனிந்த முகங்களோடு,
நாரத முனிவர்
#7
ஓளவையார்
#8
அண்ணன் வீட்டுக் கொலு
அண்ணனும் (பெரியம்மா மகன்), மதினியும் (அண்ணி) கடந்த 32 வருடங்களாகத் தவறாமல் கொலு வைத்து வருகிறார்கள். இந்த வருடம் மகளின் பிரசவத்திற்காக அமெரிக்கா சென்றிருந்தவர்கள் சரியாகக் கொலுவுக்கு முன் தினம் வீடு திரும்பி இரவோடு இரவாக வைத்த 33_ஆம் வருடக் கொலு :).
#9
இந்தக் கொலுவின் விசேஷங்களில் ஒன்று பல பொம்மைகள் 50 முதல் 80 வருடப் பழமை வாய்ந்தவை.
குறிப்பாக கீழ் காணும் ராமக் கிருஷ்ண பரமஹம்சர் பொம்மைக்கு 80 வயதுக்கும் மேலிருக்குமாம். கடந்த இரு பத்தாண்டுகளில் வண்ணம் மட்டும் பூசியிருக்கிறார்கள்.
# 10
ராமக் கிருஷ்ண பரமஹம்சர்
#11
எனது வீட்டில் சரஸ்வதி பூஜை வழிபாடு:
தங்கை வீட்டுக் கொலுவில், நான் :)!
*
தொட்டது துலங்கட்டும்..!
அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துகள்!
**
விஜயதசமி வாழ்த்துகள். பொம்மைகள் திருத்தமான, சிறப்பான முக அமைப்புடன் இருக்கின்றன.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபொம்மைகள் அனைத்தும் அழகு. உங்கள் தங்கை வீட்டுக் கொலு சிறப்பாக இருக்கிறது. நேர்த்தியுடன்.
பதிலளிநீக்குஅண்ணன் வீட்டுக் கொலு பொம்மைகள் 50 முதல் 80 வருட பழமை என்பது ஆச்சரியம் மற்றும் நல்ல பராமரிப்பு...அழகாகவே இருக்கின்றன ஓல்ட் இஸ் கோல்ட்!!
உங்கள் வீட்டுப் பூஜை அம்சமாக இருக்கிறது.
தங்கை வீட்டுப் பழைய சுட்டியும் பார்க்கிறேன். எனக்கும் கொலு வைப்பது மிகவும் பிடிக்கும் பார்க்கவும் மிகவும் பிடிக்கும். குறிப்பாக குளம் ஏரி பார்க் என்று சில தீமாட்டிக்காகவும்...ஆனால் வைக்கும் சூழல் இல்லை.
விஜயதசமி வாழ்த்துகள்
கீதா
தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கீதா.
நீக்குமிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் அமைந்திருக்கிறது. விஜயதசமி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
நீக்குஅந்தச் சுட்டியும் சென்று பார்த்துவிட்டு வந்தேன். உங்கள் விளக்கங்களை அப்படியே டிட்டோ செய்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை இது. 9 நாட்களும் ஜே ஜே என்று இருக்கும்.
பதிலளிநீக்குஎல்லாப் பண்டிகைகளும் சிறப்புதான் என்றாலும் நவராத்திரி என்பது சமூகத்தில் ஒருவருக்கொருவர் சந்திப்பு, நட்பு வளர்த்தல், ந்க்ரியேட்டிவிட்டியை ஊக்குவித்தல், அதன் வெளிப்பாடு என்பதில் தனிச் சிறப்பு வாய்ந்த விழா பொங்கலும் கிட்டத்தட்ட அதே போன்றான ஒன்று.
படங்களை ரசித்தேன்
கீதா
நேரம் எடுத்து முந்தைய பதிவையும் பார்த்து அளித்திருக்கும் கருத்துக்கு நன்றி:).
நீக்குகொலு காட்சிகள் அனைத்தும் அழகு. 50 வருடத்திற்கும் மேலான பொம்மைகள் பார்க்கவே அழகு. பராமரிப்பதில் இருக்கும் சிரமங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ஒவ்வொரு வருடமும் அணுகாமல் இதைச் செய்யும் அனைத்து நபர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஆம், ஒவ்வொரு வருடமும் தொடருகின்ற ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள். கருத்துக்கு நன்றி வெங்கட்.
நீக்குநவராத்திரி கொலு படங்கள் மிகவும் அழகு.
பதிலளிநீக்குமுகநூலில் பார்த்து விட்டதால் இங்கு பார்த்து கருத்து தெரிவித்து விட்டேன் என்று நினைத்தேன்.
பழைய பொம்மைகள் அழகு. தங்கை வீட்டு கொலுவும், மதினி வீட்டு கொலுவும் அழகு.
உங்கள் வீட்டு அம்மன் படம் மிக அருமை. உங்கள் படமும் அழகு.
கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குதொட்டது எல்லாம் துலங்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்கு