புதன், 8 நவம்பர், 2017

கடவுளின் தாய்மொழி

#1
“அனுமானங்களில் நனைந்து நிற்பதை நாம் அறியாத வரையில் நம்மை நாம் அறிந்து கொள்ளவே முடியாது.” _Adrienne Rich

#2
"எந்தவொரு பிரச்சனையிலும் நீண்ட காலம் நின்று விட வேண்டாம், வாழ்க்கைப் படகு எப்போதுமே மிதமாகப் பயணிப்பதில்லை ஆதலால் மூழ்கிட நேரலாம்."

#3
“நம்மைப் பிரிப்பது நமக்கிடையேயான வித்தியாசங்கள் அல்ல. அவற்றை அங்கீகரிக்கவோ, ஒப்புக் கொள்ளவோ, கொண்டாடவோ முடியாத நம் இயலாமையே.”
_Audre Lorde


#4
“சிலரே மழையை உணர்ந்திடுவர். மற்றவரோ வெறுமனே  நனைந்திடுவர்.”_Bob Marley

#5
‘கடந்தவற்றை கடந்து வரக் கற்றுக் கொண்டால் மட்டுமே இன்றைய பயணம் இனிதாகத் தொடங்கும்' _ Steve Maraboli


#6
“என்னென்ன நவீன வசதிகளைக் கொண்ட ஒளிப்படக் கருவி என்பது முக்கியமே இல்லை, ஒரு ஒளிப்படத்தின் உருவாக்கம் ஒளிப்படக் கலைஞரிடத்திலேயே இருக்கிறது.”
_Doug Bartlow


#7
‘சற்றே காரசாரமாக வாழலாம் வாழ்க்கையை.’

#8
“நாம் ஒருவருக்கொருவர் வழங்கிக் கொள்ளும் அன்பளிப்பே, அமைதி" 
- Elie Wiesel


#9
“அன்பே ஆன்மாவின் ஒளி”

#10
“அமைதியே கடவுளின் தாய் மொழி”
_Saint John of the Cross

***

24 கருத்துகள்:

  1. வாசக‌ங்களும் புகைப்படங்களும் மிக மிக அருமை! ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன!

    பதிலளிநீக்கு
  2. வாசகங்களுக்கான புகைப்படங்களா வைஸ் வெர்சாவா

    பதிலளிநீக்கு
  3. தரப்பட்டிருக்கும் வாசகங்களும் படங்களுடன் அழகு.

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் அருமையான வாசகங்கள் படங்களும் அருமை 3வது படம் மிக அழகு

    பதிலளிநீக்கு
  5. புகைப்படங்களுக்கான சொற்றொடர்களா, சொற்றொடர்களுக்கான புகைப்படங்களா...வியந்தேன்.

    பதிலளிநீக்கு
  6. தன்னை உணர்தல், நகர்தல், சுயமழித்தல், பிறர் உணர்வு மதித்தல், மன்னிப்பு, விழிப்புணர்வு, சுவை, சமாதானம், இறைமை மற்றும் அதன் மொழி என அழகிய முத்துக்களால் கோர்க்கப்பட்ட மனதையும் உறவுகளையும் மேம்படுத்தும் அழகிய சரம். அருமையான தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  7. அனைத்துமே அழகு. அதுவும் மழை பற்றிய கருத்துக்கள் கவிதை !

    பதிலளிநீக்கு
  8. The last is confusing. You may have translated St John of the Cross mistakenly. You've adopted your title of the blog post from the last. I said 'mistakenly" because God is neither first nor the last; has no beginning and end; being the Ultimate Cause, there is no cause that has created God. So, to talk of a mother-tongue for God is simply outrageous nonsense. St John of the Cross being a great man of God centred spirituality, he wouldn't have used ''mother'' to God, unless he took Jesus as his God who had human parents whose mother-tongue is Aramic. God has no language to call his own. If God had had one, he would have reduced himself to the level of man. Why should man need to worship him at all? All languages are created by Man which he himself caused. Regarding silence, if you say silence is preferable to him, he has to dislike all noise: or regulated noise i.e. music. You're ruling out group prayers and hymns and divine music.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் என்பதே நம்பிக்கைதான். எந்த ஒரு வாக்கியமோ பொன்மொழியோ இலக்கியமோ அவரவருக்கான புரிதலுக்கென்று ஓர் சுதந்திரம் இருப்பதாக நினைக்கிறேன். கடைசி வாக்கியம் தவறாகச் சொல்லப் பட்டிருக்கிறது என்பது உங்கள் கருத்தாக இருக்குமானால் அது உங்கள் கருத்து என்ற வரையில் நான் மதிக்கிறேன். அதே நேரம் என் புரிதலை நான் தவறாக நினைக்கவில்லை. தாய்மொழி என்பது அவரவருக்கு நெருக்கமான விருப்பமான ஒன்று. அமைதி என நான் இங்கு பார்ப்பது மதத்தால் மனிதர்களுக்கிடையே வரும் சண்டை சச்சரவுகள், கலவரங்கள் அற்ற அமைதி. தன் பெயரால் நடக்கும் கலவரங்களை கடவுளே விரும்ப மாட்டார். அவர் தாய்மொழிக்கு நிகராகத் தனக்கு நெருக்கமாக நினைப்பது அந்த அமைதியை என்பதாகவே நான் அந்த வாக்கியத்தை எடுத்துக் கொண்டுள்ளேன். நன்றி.

      நீக்கு
    2. ஒரு பொருளுக்கு பல பரிமாணங்கள் எங்கு சாத்தியமோ - அல்லது ஒரெயொன்றுதான் சரி என்று உலகம் ஒத்துக்கொள்ளவில்லையே - அங்கு தான் கருத்து சுதந்திரம் கொடுக்கப்படும். உலகம் தட்டை என்று நம்பினார்கள். இல்லை உருண்டை என்று ஆதாரங்களோடு நிரூபித்தபின்னர் அங்கு இருவேறு கருத்துக்கள் வாரா. எவராவது உலகம் தட்டை என்று சொல்ல த‌னக்கு கருத்து சுதந்திரம் என்று சொன்னால் நகைச்சுவையே. அதேபோல தாய்-தந்தை இல்லா இறைவனை அவனுக்குத் தாயுண்டு; எனவே தாய்மொழியுமுண்டு என்றால் அது கருத்துச் சுதந்திரமாகாது.
      கடவுள் தாய்-தந்தை இல்லாதவன். உலகத்தோருக்கு அவனே தாய்-தந்தை. எனவே மாணிக்கவாசகர் - அம்மை-அப்பா என்றழைத்தார் ''அம்மையே அப்பா ஒப்பிலாமணியே'' ஓப்பாரும் மிக்காரும் இல்லா இறைவன். அவனை எவரும் தாய் தந்தையாக நின்று படைக்கவில்லை என்று பொருள்.

      அமைதி என்பது மத நல்லிணக்கம் என்ற பொருள் ஏற்கப்பாலது. மனிதர்களிடையே வேறுபட்ட சிந்தனைகள் இருக்கும் வரை மத வேறுபாடுகள் இருக்கும். அவ்வேறுபட்ட சிந்தனைகளை வைத்து படைத்தவன் இறைவன். ஆக, வேறுபாடில்லா தட்டையான மனித உலகம் என்பது இறைவனின் எண்ண்த்துக்கு எதிரானது. மத நல்லிணக்கத்தோடு இருந்தால்தான் இறைவன் மொழி (அப்படியே தலைப்பை இட்டிருக்கலாம் ''இறைவனின் ஒரே மொழி அமைதி'' தாய் என்ற் சொல தவிர்த்திருந்தால் வாதத்துக்கு இடமே இல்லை) என்றால், ஏன் நம்மை வேறுபட்ட சிந்தனைகளைக்கொண்டவர்களாக உருவாக்க வேண்டும்?

      மதநல்லிணக்கத்தோடு மனிதர்கள் அமைதியாக வாழவேண்டுமென்பது இறைவனின் விருப்பம் எனபது உங்கள் ஆசை. கருத்தன்று. ஏனென்றால், இறைவன் வேண்டுமென்றே மனித அமைதியைக் கெடுத்தவன். விருப்பு, வெறுப்பு, கோபம், குரோதம், என்று மனிதர்களை உணர்ச்சிகளோடு படைத்துவிட்டு, அவ்வுணர்ச்ச்களுக்கேற்ப சிந்தனைகளையும் உருவாக்க வைத்துவிட்டு, அமைதியைத்தான் விரும்புகிறேன் என்று இறைவன் சொல்வதாக நினைப்பதுதான் கருத்து சுதந்திரம். ஏனென்றால் நான் அப்படி நினைக்கவில்லை. என் கருத்து சுதந்திரத்தின்படி, மனிதர்களிடையே நல்லிணக்கமில்லையென்றால், வாழ்வை மகிழ்ச்சியாக வாழமுடியாது. எல்லாருமே அடித்துக்கொண்டு சாவார்கள். வாழ்வதெப்போது? எனவே மனிதரகள் வாழ நல்லிணக்கம் வேண்டும். இங்கே கடவுள் வரமாட்டார். Have you ever thought that if God had willed, he would have created all of us with the same thinking style and pattern so that all of us will agree with one another; and in matters of religion, there is an unanimous consensual one and single Religion for the people of the whole world for all times - past, present and future? It is ridiculous because in the scheme of things God has created, variety is the very basis. So, no peace will ever be possible. And from beginning to end of human race on earth, there will be quarrels, fights and wars. God is against our peace.

      நீக்கு
    3. மீண்டும் சொல்கிறேன். கடவுள் என்பதே நமது நம்பிக்கைதான். நிரூபிக்க பட்ட எதையும் நான் மறுத்துக் கொண்டிருக்கவில்லை. எந்தப் படத்துக்கு அந்த வாக்கியத்தைப் பயன்படுத்தியுள்ளேனோ அதிலிருக்கும் விநாயகருக்கு எனது இறை நம்பிக்கையின் படி அம்மையும் அப்பனும் உண்டு! ஒன்றே குலம் ஒருவனே தேவன் என சொன்னாலும் பல நம்பிக்கைகள், பல தெய்வங்கள், பல மதங்களோடுதான் மனிதர்களாகிய நாம் வாழ்ந்து வருகிறோம். அமைதி குறித்த என் புரிதல் என் ஆசையாகவே இருந்து விட்டுப் போகட்டும். அது என் வேண்டுதலும் கூட. இதற்கு மேல் விவாதிக்க விருப்பமில்லை. உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  9. ஒவ்வொரு வாசகங்களும் வெகு அருமை....

    படங்களோ அழகிலும் அழகு..

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin