வியாழன், 21 ஜூலை, 2011

மயிலே மயிலே

கணினியில் பழைய தொகுப்புகளில் படம் ஏதோ தேடுகையில் வந்து மாட்டின ‘என்னைப் பார் என் அழகைப் பார்’ என சில மயில் படங்கள். 2006-ஆம் ஆண்டு பெங்களூரு பனர்கட்டா தேசியப் பூங்காவில் எடுத்த படங்கள் முதல் மூன்றும். ஆண்டவனின் படைப்புகளில் அசர வைக்கும் பறவை.

#1. மயிலா, இது ஒயில்!


#2. பீடு நடை



#3. ஒய்யாரத்தில்..


பனர்கட்டா பூங்காவுக்கு சென்றும் வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது வெள்ளை மயிலும் இருந்தது. தோகைவிரித்தாடிய அம்மயிலை அசையும் படமாக எடுத்ததில் நிழற்படமெடுக்க விட்டுப் போயிற்று. இப்போது வெள்ளை மயில் இருக்கிறதா தெரியவில்லை. பச்சை வண்ண மயில் நிச்சயம் இருக்கும். ‘மயிலே மயிலே இறகு போடு’ எனக் கேட்காமல் ‘எனக்காகத் தோகை விரித்தாடு’ எனக் கேட்டு நிழற்படமாகக் காட்சிப் படுத்திட ஆசை:)!


#4. மனங்கவருது
மயில்கழுத்தின் வண்ணம்
வியக்க வைக்குது முதுகிலே
இறைவன் தீட்டிய சித்திரம்
இரண்டு வருடம் முன் திருச்செந்தூரில் எடுத்த படம். முருகன் பக்தர்களைக் காணப் புறப்படும் வரை புல் தரையில் மேய்ந்து கொண்டிருந்தார் மயிலார்.

தேசியப் பறவைக்கு லால்பாக் மலர்கண்காட்சியில் அளிக்கப்பட்டிருந்த அங்கீகாரம்.

#5 . ‘இதோஓஓஒ.. பாரு. இதுதான் மயிலு..’
மனிதர்கள் வேட்டையாடுவதாலும், உகந்த வாழ்வி்டங்கள் குறைந்து வருவதாலும் பச்சை மயில் இனம் அழியும் அபாயம் இருப்பதாக IUCN, the International Union for Conservation of Nature அறிவித்திருப்பது வருத்தமான செய்தி. நிழற்படங்களிலும், இப்படிப் பொம்மைகளாகவுமே வரும் சந்ததிக்கு காட்டுமாறு ஆகிவிடக் கூடாது மயில் இனமும்.
***

53 கருத்துகள்:

  1. அழகான படங்கள் தொகை விரிக்கும் காட்சி சிக்க வில்லையோ இன்னும் அழகாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. மயிலே மயிலே என்று தலைப்பிட்டு பூந்தளிர் படப் பாடலை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். அருமையான, அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
  3. மயில் படங்கள் மனதை அள்ளிச்செல்கின்றதே.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் மிகவும் அழகாக உள்ளன.

    பதிலளிநீக்கு
  5. மயில் படத்தில் பார்த்தாலே அழகு. நேரில் பார்த்தால் பலமணி நேரம் பார்த்துக்கொண்டே இருக்கனும் போலத் தோன்றுவதுண்டு. நல்ல அழகிய பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் ஒயிலாக இருக்கின்றது..:)

    மயிலேமயிலே பாட்டை நினைவுபடுத்திட்டீங்க.

    பதிலளிநீக்கு
  7. மயில்கள் அழகானவை... எங்கள் ஊரில் அதிகம் காணப்படும். அது தோகை விரித்து ஆடும் அழகே தனி... படங்கள் மயில்களாய்...

    பதிலளிநீக்கு
  8. அழகான மயில் புகைப்படங்கள்!!

    பதிலளிநீக்கு
  9. உங்க காமிரா தோகைவிரித்தாடும் மயிலையும், பிடிச்சிட்டு வரும் அந்த நாளுக்காக.. காத்திருக்க ஆரம்பிச்சிட்டேன் :-)

    பதிலளிநீக்கு
  10. நேரிலோ படத்திலோ, எப்படிப் பார்த்தாலும் மயில் அழகுதான் அக்கா.

    பதிலளிநீக்கு
  11. மயில்களின் படங்கள் அழகாக இருக்கின்றன. தமிழ் உதயம் ரமேஷ் பூந்தளிர் படத்தில் சொல்லும் பாடல் என்ன என்று தெரியவில்லை! எனக்கு ஞாபகம் வரும் பாடல் கடவுள் அமைத்த மேடை படத்தில் வரும் 'மயிலே மயிலே உன் தோகை எங்கே' பாடல்தான். ஆனால் இங்குள்ள மயில்கள் தொகையுடன் இருப்பதால் பாடல் செலெக்ஷனை மாற்றி 'தோகை இளமையில் ஆடி வருகுது வானில் மழை வருமோ' என்ற பாடலை தெரிவு செய்கிறேன்!!

    பதிலளிநீக்கு
  12. அழகு மயிலின் அற்புதப் படங்க்களுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. மயிலக்கா என்றாலே அழகுதான்.ஒய்யாரத்தில் மிக அழகு !

    பதிலளிநீக்கு
  14. மயில் என்ன ஒரு அழகான பறவை!!!!எனக்கு மூணாவது படம் ரொம்பப் பிடிச்சுருக்கு. இதுவரை பார்க்கக் கிடைக்காத பாகம்.

    ராஜஸ்தான் பக்கம் ஏகப்பட்ட மயில்கள் இருக்கு!

    நேத்துதான் என் மயிலிறகுக் கலெக்ஷனை நம்ம முருகனுக்குக் கொடுத்துட்டுவந்தேன்.

    எங்கூருலே ஒரு தனியார் Zooவில் மயில் இருக்குதுங்க.வெள்ளை மயில்கூட இருக்கு!

    பதிலளிநீக்கு
  15. மயிலே மயிலே உனகனந்த கோடி நமஸ்காரம்.......ராமலஷ்மி கேமராவுடன் வரக் கூவுவாய்.....[மற்ற பறவைகளின் கோரஸ்]

    பதிலளிநீக்கு
  16. http://jaffnawin.com/moreartical.php?newsid=3036&cat=miracle&sel=current&subcat=13

    albino peacock என்று வழங்கப்படும் வெண்ணிற மயில்களின் யூடியூப் காணொளிகளுக்கு இன்னொரு சுட்டி http://www.youtube.com/watch?v=pbVILEZYHKU&feature=player_embedded#at=24

    பதிலளிநீக்கு
  17. மயில்கள் அனைத்தும் அழகு என்றாலும் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் அந்த வெள்லை மயில் மிக அழகு! வெள்ளை மயில் பற்றிய விபரம் எனக்குப் புதிதாயும் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  18. அருமையான பகிர்வு நன்றி!!!

    பதிலளிநீக்கு
  19. சசிகுமார் said...
    //அழகான படங்கள் தோகை விரிக்கும் காட்சி சிக்க வில்லையோ இன்னும் அழகாக இருந்திருக்கும்.//

    நன்றி சசிகுமார். வாய்ப்புக் கிடைக்கும்போது எடுக்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  20. தமிழ் உதயம் said...
    //மயிலே மயிலே என்று தலைப்பிட்டு பூந்தளிர் படப் பாடலை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். அருமையான, அழகான படங்கள்.//

    மிக்க நன்றி தமிழ் உதயம்:)!

    பதிலளிநீக்கு
  21. ஸாதிகா said...
    //மயில் படங்கள் மனதை அள்ளிச் செல்கின்றதே.//

    நன்றி ஸாதிகா:)!

    பதிலளிநீக்கு
  22. kggouthaman said...
    //படங்கள் மிகவும் அழகாக உள்ளன.//

    மிக்க நன்றி கெளதமன்:)!

    பதிலளிநீக்கு
  23. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //மயில் படத்தில் பார்த்தாலே அழகு. நேரில் பார்த்தால் பலமணி நேரம் பார்த்துக்கொண்டே இருக்கனும் போலத் தோன்றுவதுண்டு. நல்ல அழகிய பதிவுக்கு நன்றி.//

    ஆம் எப்படிப் பார்த்தாலும் அழகுதான் மயில்! நன்றிங்க vgk.

    பதிலளிநீக்கு
  24. மோகன் குமார் said...
    //Fantastic photos.//

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  25. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //படங்கள் ஒயிலாக இருக்கின்றது..:)

    மயிலேமயிலே பாட்டை நினைவுபடுத்திட்டீங்க.//

    நன்றி முத்துலெட்சுமி:)! தேன் கிண்ணத்தில் அந்த பாடல் உள்ளதா:)?

    பதிலளிநீக்கு
  26. சே.குமார் said...
    //மயில்கள் அழகானவை... எங்கள் ஊரில் அதிகம் காணப்படும். அது தோகை விரித்து ஆடும் அழகே தனி... படங்கள் மயில்களாய்...//

    இப்போது எண்ணிக்கையில் குறைந்து வருவதாகச் சொல்லுகிறார்கள். மனிதர்கள் மனம் வைக்க வேண்டியுள்ளது மயில்கள் வாழ. மிக்க நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  27. S.Menaga said...
    //அழகான மயில் புகைப்படங்கள்!!//

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  28. அமைதிச்சாரல் said...
    //உங்க காமிரா தோகைவிரித்தாடும் மயிலையும், பிடிச்சிட்டு வரும் அந்த நாளுக்காக.. காத்திருக்க ஆரம்பிச்சிட்டேன் :-)//

    ஆஹா, உங்க வார்த்தை பலிக்கட்டும்:)! நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  29. அமைதிச்சாரல் said...
    //உங்க காமிரா தோகைவிரித்தாடும் மயிலையும், பிடிச்சிட்டு வரும் அந்த நாளுக்காக.. காத்திருக்க ஆரம்பிச்சிட்டேன் :-)//

    ஆஹா, உங்க வார்த்தை பலிக்கட்டும்:)! நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  30. சுந்தரா said...
    //நேரிலோ படத்திலோ, எப்படிப் பார்த்தாலும் மயில் அழகுதான் அக்கா.//

    ஆமாம் சுந்தரா. ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. சமுத்ரா said...
    //அழகான படங்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சமுத்ரா.

    பதிலளிநீக்கு
  32. ஸ்ரீராம். said...
    //மயில்களின் படங்கள் அழகாக இருக்கின்றன. தமிழ் உதயம் ரமேஷ் பூந்தளிர் படத்தில் சொல்லும் பாடல் என்ன என்று தெரியவில்லை! எனக்கு ஞாபகம் வரும் பாடல் கடவுள் அமைத்த மேடை படத்தில் வரும் 'மயிலே மயிலே உன் தோகை எங்கே' பாடல்தான். ஆனால் இங்குள்ள மயில்கள் தொகையுடன் இருப்பதால் பாடல் செலெக்ஷனை மாற்றி 'தோகை இளமையில் ஆடி வருகுது வானில் மழை வருமோ' என்ற பாடலை தெரிவு செய்கிறேன்!!//

    ஹி எனக்கும் அந்தப் பாடல் தெரியவில்லை. முத்துலெட்சுமி சொல்வதும் அதைத்தான் என எண்ணுகிறேன். யாரேனும் லிங்க் கொடுத்தால் கேட்க ஆசைதான்.

    உங்கள் பாடல் தேர்வும் மிக அருமை:)! நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  33. இராஜராஜேஸ்வரி said...
    //அழகு மயிலின் அற்புதப் படங்க்களுக்குப் பாராட்டுக்கள்.//

    நன்றிங்க இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  34. ஹேமா said...
    //மயிலக்கா என்றாலே அழகுதான்.ஒய்யாரத்தில் மிக அழகு !//

    ’கையில புடிக்க முடியாது’ என்பார்களே அது போல அமர்ந்துள்ளது பாருங்களேன்:)! நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  35. துளசி கோபால் said...
    //மயில் என்ன ஒரு அழகான பறவை!!!!எனக்கு மூணாவது படம் ரொம்பப் பிடிச்சுருக்கு. இதுவரை பார்க்கக் கிடைக்காத பாகம்.

    ராஜஸ்தான் பக்கம் ஏகப்பட்ட மயில்கள் இருக்கு!

    நேத்துதான் என் மயிலிறகுக் கலெக்ஷனை நம்ம முருகனுக்குக் கொடுத்துட்டுவந்தேன்.

    எங்கூருலே ஒரு தனியார் Zooவில் மயில் இருக்குதுங்க.வெள்ளை மயில்கூட இருக்கு!//

    நேரில் கவனிக்கத் தவறும் அழகு எல்லாம் அதே காட்சியை மீண்டும் படங்களில் பார்க்கும்போது ரசிக்க கிடைப்பதாய் தோன்றும் சமயங்களில். முருகனுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். வெள்ளை மயிலும் அழகே.

    பகிர்வுக்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  36. goma said...
    //மயிலே மயிலே உனகனந்த கோடி நமஸ்காரம்.......ராமலஷ்மி கேமராவுடன் வரக் கூவுவாய்.....[மற்ற பறவைகளின் கோரஸ்]//

    பறவைகளின் சப்போர்ட் இருக்கும்போது கவலையில்லை:)! மிக்க நன்றி கோமாம்மா.

    பதிலளிநீக்கு
  37. பாலராஜன்கீதா said...
    //http://jaffnawin.com/moreartical.php?newsid=3036&cat=miracle&sel=current&subcat=13

    albino peacock என்று வழங்கப்படும் வெண்ணிற மயில்களின் யூடியூப் காணொளிகளுக்கு இன்னொரு சுட்டி http://www.youtube.com/watch?v=pbVILEZYHKU&feature=player_embedded#at=24//

    வருகைக்கும் சுட்டிக்கும் மிக்க நன்றி:)! கண்ணைப் பறிக்கும் பிரகாசமான வானத்து நட்சத்திரங்கள் போலுள்ளது அவற்றின் விரிந்த தோகை:)!

    பதிலளிநீக்கு
  38. மனோ சாமிநாதன் said...

    //மயில்கள் அனைத்தும் அழகு என்றாலும் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் அந்த வெள்லை மயில் மிக அழகு! வெள்ளை மயில் பற்றிய விபரம் எனக்குப் புதிதாயும் இருக்கிறது!//

    மிக்க நன்றி மனோ சாமிநாதன். அதுவும் நீல மயிலே. முதுகும் தோதையின் பின் புறமும் வெள்ளையாகத் தெரிகின்றன.

    தோகை விரித்தாடும் வெள்ளை மயில் பாலராஜன் கீதா கொடுத்திருக்கும் சுட்டியில் கிடைக்கிறது. நேரமிருப்பின் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  39. யு டான்ஸில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி:)!

    பதிலளிநீக்கு
  40. வெள்ளை மயிலைக் காணோமே என்று நினைக்கும்போதே நீங்களும் சொல்லிட்டீங்க!! :-)))))

    ஆனாலும், கலர் மயில்தான் அழகு, ஆட்டம், கலக்கலுக்கு அடையாளம். வெள்ளை, அமைதி, அடக்கம்(!!), சோகம்கூட.. ;-)))))

    பதிலளிநீக்கு
  41. படங்கள் அனைத்தும் அருமை!


    //நிழற்படங்களிலும், இப்படிப் பொம்மைகளாகவுமே வரும் சந்ததிக்கு காட்டுமாறு ஆகிவிடக் கூடாது மயில்//

    இதைப் படித்தவுடன் மனசு கொஞ்சம் சங்கடப்படத்தான் செய்கிறது. உங்களுடைய தொலைநோக்குப் பார்வை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

    பதிலளிநீக்கு
  42. ஹுஸைனம்மா said...
    //வெள்ளை மயிலைக் காணோமே என்று நினைக்கும்போதே நீங்களும் சொல்லிட்டீங்க!! :-)))))

    ஆனாலும், கலர் மயில்தான் அழகு, ஆட்டம், கலக்கலுக்கு அடையாளம். வெள்ளை, அமைதி, அடக்கம்(!!), சோகம்கூட.. ;-)))))//

    சோகமுமா? ஏன்:)? வெள்ளை மயில் தோகை எங்கும் நட்சத்திரங்கள் எனத் தோணுது எனக்கு:) அதுவும் ஒரு அழகு.

    நன்றி ஹூஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  43. Rathnavel said...
    //அருமை.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  44. அமைதி அப்பா said...
    ***/படங்கள் அனைத்தும் அருமை!


    //நிழற்படங்களிலும், இப்படிப் பொம்மைகளாகவுமே வரும் சந்ததிக்கு காட்டுமாறு ஆகிவிடக் கூடாது மயில்//

    இதைப் படித்தவுடன் மனசு கொஞ்சம் சங்கடப்படத்தான் செய்கிறது. உங்களுடைய தொலைநோக்குப் பார்வை பாராட்டப்பட வேண்டிய ஒன்று./***

    IUCN ஆய்வு நடத்தியே சொல்லி விட்டுள்ளதே. நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  45. Kanchana Radhakrishnan said...
    //படங்கள் அருமை.//

    மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  46. இராஜராஜேஸ்வரி said...
    //ஒயிலான மயில் அழகு...//

    மகிழ்ச்சியும் நன்றியும்ங்க இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  47. Jaleela Kamal said...
    //அழகு மயில்.//

    நலமா:)? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜலீலா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin