வெள்ளி, 28 ஜனவரி, 2011

2011 பெங்களூரு குடியரசு தின மலர் கண்காட்சி புகைப்படங்கள் - ( Bangalore Lalbagh Flower Show )

வ்வொரு வருடமும் போலவே இலட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்று ஜனவரி 19 முதல் குடியரசு தினம் வரையிலாக நடந்து முடிந்தது பெங்களூரு மலர்க் கண்காட்சி.

1.வரவேற்கிறது லால்பாக்

2.அன்றைய இன்றைய தொடக்கங்கள்இந்த வருட மையக் கரு ‘அன்றைய பெங்களூருவின் தொடக்கமும், இன்றைய பெங்களூருவின் தொடக்கமும்’.

பெங்களூரின் நான்கு எல்லைகளையும் (இப்போது அவற்றைத் தாண்டி நகரம் வெகுதூரம் விரிந்து விட்டிருப்பது வேறு விஷயம்) வரையறுக்கும் விதமாக கெம்பகெளடா மண்டபங்கள் 1537 ஆம் ஆண்டு கெம்பகெளடா எனும் வீரனால் கட்டப் பட்டது. ஒன்று லால்பாக்கிலிருக்கும் பாறையொன்றின் மேலுள்ளது.

ஒரே தோற்றத்தில் அமைந்த மற்ற மூன்று மண்டபங்கள் முறையே கெம்பம்புத்தி ஏரி, அல்சூர் ஏரி, மேக்ரி சர்கிள் இவற்றின் அருகே அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியாக ஒற்றைப் பாறையைக் குடைந்து செய்யப் பட்டவை என்பதுவும் இவற்றின் சிறப்பு.

(பதிவின் முடிவில், நான்கில் இரண்டு மண்டபங்களின் படங்கள்.)

சரி, இன்றைய பெங்களூரின் தொடக்கம்? ஆம் வேறென்ன மெட்ரோதான். ஆக இவ்விரண்டுமே பார்வையாளர்களைக் கவரும் முக்கிய அம்சங்களாக அமைந்திருந்தன.

3.மெட்ரோ
இயற்கையைப் போற்றும் லால்பாக்கில் மெட்ரோவுக்கான ஆராதனை மேலே. இதன் வரவுக்காக பெங்களூர் இழந்த மரங்கள் ஆயிரக்கணக்கில். நகரங்களின் வளர்ச்சி என வருகையில் ‘தவிர்க்க முடியாதவை’ என்கிறார்கள். ஆகையாலே இப்போது கோடையில் தகிக்கிறது பெங்களூரு. காரணமாக இழந்த மரங்களே கை காட்டப் படுகின்றன.

நிலவுகிற இதமான தட்பவெப்பத்தால் 2009-10 ஆண்டில் சுமார் ஐந்தரை கோடி ரூபாய்க்கு அலங்கார மலர்களை பிற மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து நாட்டில் முன்னணியில் இருக்கிறதாம் ‘பெங்களூரு இன்டர்நேஷனல் ஃப்ளவர் ஆக்ஷன் நிறுவன‌ம்’. இதில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் எண்ணற்றோர். இதமான தட்பவெப்பம் இனி கனவாகிப் போகுமோ? மெட்ரோ திட்டம் முழுமையாக நிறைவேறும் வரை இழக்கவிருக்கும் மரங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ, தெரியாது.

பெங்களூர் எம் ஜி ரோடு, விதான் செளதா சாலை போன்ற பல முக்கிய இடங்கள் பழைய கம்பீரத்தை மெட்ரோ வரவினால் இழந்து விட்ட சூழலிலும், அதில் பயணிக்க மக்களிடையே ஒரு பரவசமான காத்திருப்பு நிலவுவதை மறுப்பதற்கில்லை. பாருங்கள் இங்கே, விட்டால் இந்த மலர் மெட்ரோவிலேயே ஏறி விடுவார்கள் போலிருக்கிறது.

4.இப்போ வருமோ எப்ப வருமோ
இதைப் படமாக்கிக் கொண்டிருந்த அதே ஞாயிறு ஜனவரி 23 மாலையில்தான் எம் ஜி ரோடில் நிஜ மெட்ரோவின் வெள்ளோட்டம் நடைபெற்றது. இயங்க ஆரம்பிக்க இன்னும் ஒருசில மாதங்கள் பிடிக்கலாம் என்கிறார்கள்.

5.மலர் வனம்

6.சிறப்பு விருந்தினராய் தேசியப் பறவைகள்

7.அலங்கார வளைவு

8. க்ளிக் க்ளிக்
காய்கள் பழங்களால் பல்வேறு அலங்கார வடிவங்கள்!
படமாக்கி மகிழும் பொது ஜனங்கள்!


9. பல்லைக் காட்டும் பரங்கிக்காய்

10. பெட்டூனியா மலர்களும் டிமோத்தி காக்டஸும்

11. பூங்குன்று

12.கண்ணாடி அரங்கைச் சுற்றி அலை மோதும் ஜனத்திரள்
ங்கே தெரிவது அரங்கிலிருந்து வெளியேறும் வழி. நேர் பின்புற வாசலே நுழையும் வழி. ஏறத்தாழ முக்கால் கிலோ மீட்டருக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த பின்னரே நுழைய இயன்றது. ஞாயிறு மாலை ஆயிற்றே. கூட்டத்திற்கு கேட்கவா வேண்டும்?!

கடந்தவருடம் குடியரசு தினத்தன்றே சென்றிருந்தேன். அன்றைய கூட்டத்துக்கு எவ்வளவோ தேவலாம். அன்று கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பேருந்துகளில் பள்ளி மாணக்கர் உட்பட பல்லாயிரக் கணக்கானவர்கள் வந்திருந்தனர்.

ஆனால் பெங்களூர் பந்த்தினால் கடந்த சனிக்கிழமை அன்று காலியாக இருந்ததாம் வரலாறு காணாத அதிசயமாய். அதுவே திரு. ஸ்ரீனிவாஸ் மற்றும் திரு.கிருஷ்ணமூர்த்தி போன்ற வயதானவர்களுக்கு குஷியாகி விட்டதாம். 460 ஏக்கர் தோட்டத்தை கூட்டமில்லாத சூழலில் ரசிக்க முடிந்ததெனப் பேட்டியளித்திருந்தார்கள். டொர்னட்டோவில் வசிக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு வருடமும் தவறாமல் மலர்கண்காட்சியைக் காண இந்தியா வருவதாகக் குறிப்பிட்டிருந்தது சுவாரஸ்யம்.
13. அக்கறை




ஆம், இப்படியான ஆசையுடன் எத்தனை பெரியவர்கள்? நாங்கள் காரை பார்க் செய்யும் போது இளைஞர் ஒருவர் தன் காரில் இருந்து மடக்கு சக்கர நாற்காலியை இறக்கிக் கொண்டிருந்தார். மைதானத்தினுள் ஆறேழு நாற்காலிகளைப் பார்க்க முடிந்தது. அந்தக் கூட்டத்திலும் வீட்டுப்பெரியவர்களை அக்கறையுடன் அழைத்து வந்து கண்காட்சியை ரசிக்க வைக்கிற இன்றைய தலைமுறையைக் காண்கையில் நெகிழ்வும் மகிழ்ச்சியும்.

அரங்கின் வெளியில் சிறுசிறு பிரிவுகளாய் தோட்டங்கள். தொட்டிகளிலே விதவிதமான மலர்கள் செடிகள் ரசிப்பதற்கும் விற்பனைக்கும். தனிமலர்கள் சில உங்கள் பார்வைக்கு:

14.ரோசாப்பூ


15. செகப்பூ

16. சிலிர்ப்பூ

17. மலர்ச்சி

18.குளிர்ச்சி

19. மனம் வருடும் இளம் வண்ணம்

20. குன்றின் மேல்.. மேற்கு எல்லைசில்அவுட் மரங்களின் பின்னால் ஒளிர்வதே ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டிருந்த லால்பாக் கெம்பகெளடா மண்டபம். இது நகரின் அன்றைய 'மேற்கு' எல்லை வரையறுப்பது என்றே எண்ணுகிறேன்.


வீட்டுக்கு வந்து மற்ற மூன்று மண்டபங்களும் எங்கே உள்ளன இணையத்தில் தேடிய போதுதான் அறிய வந்தேன் ஒன்று எங்கள் வீட்டுக்கு வெகு அருகாமையிலேயே ஐந்து நிமிடப் பயணத்தில் இருப்பதை. இணையத்தில் அதன் படம் கிடைத்தாலும் நேரில் சென்று நானே எடுத்துப் பதிய வேண்டுமெனும் ஆவலில் கிளம்பி விட்டேன் நேற்று மாலை, காமிராவும் கையுமாக அந்தப் பூங்காவை நோக்கி...

21. ரமண மகிரிஷி பூங்கா
மேக்ரி சர்கிள் அருகே பாலஸ் க்ரவுண்டின் எதிர்ப்புறம் அமைந்துள்ளது இப்பூங்கா. வாரநாள் ஆகையால் கூட்டமில்லை. வெகு நேர்த்தியாகப் பரமாரிக்கப் பட்டு வருவது நுழைந்ததுமே தெரிகிறது. அன்றைய பெங்களூரின் வடக்கு எல்லையை வரையறுக்க எழுந்த மண்டபத்தையும் பூங்காவையும் குடியரசு தினத்துக்காகச் சிறப்பாக அலங்கரித்திருந்தார்கள்.

22. ரம்மியமாய் வடக்கு எல்லை

மாலைச் சூரியனின் சாய்ந்த ஒளிக்கற்றைகள் மண்டபத்தையும் மலர்களையும் குளிப்பாட்டும் ரம்மியக் காட்சி.

இதோ அடுத்தடுத்து உங்களுக்காக அசலும் நகலும் ஒரே கோணத்தில்...,

23.மலர்கள் சூழ நிஜ மண்டபம்
24. மலராலேயே கண்காட்சி மண்டபம்


(இப்பதிவிலுள்ள படங்களை நகல் எடுத்து பிற தளங்களுக்குக் கொடுப்பதையோ, தங்கள் தளங்களில் வெளியிடுவதையோ தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.)


கடந்த வருட கண்காட்சிப் பதிவு இங்கே.

விழிகளுக்கு கிடைத்த விருந்தில் பிடித்ததென எதுவும்..?

67 கருத்துகள்:

 1. பூவுன்னா எனக்கு உயிர். அதனால,........ எல்லாமே பிடிச்சிருக்குங்க :-))

  உங்கூரு லால்பாக்கை ஒரே ஒரு தடவைதான் பாத்திருக்கேன். காலத்தால் கல்லான மரமொண்ணு இருக்கே.. அதை சுத்திச்சுத்தி வந்து படமெடுத்தது நினைவு வருது..

  பதிலளிநீக்கு
 2. இதுக்கு இதுக்குத்தானே காத்திருந்தேன்.....
  சூப்பர் அட்டகாசம் அற்புதம் ..

  பதிலளிநீக்கு
 3. படங்களும் அதற்கான விளக்கமும் அருமை .
  ஆனால்,சென்ற ஆண்டு இருந்த அழகு லால்பாகில் கண்காட்சி வடிவமைப்பு ,இந்த முறை கொஞ்சம் குறைச்சல் என்பதை,
  ராமலஷ்மி நேரில் பார்த்த நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்.
  [அதற்குள் ஒரு ஆண்டு ஓடிவிட்டதே]

  ஒற்றை மலர்கள் அத்தனையும் அழகு.

  பதிலளிநீக்கு
 4. ஒற்றைமலர்கள் ப்ளஸ் 7 வது படம் அலங்காரவளைவுக்கு என் ஓட்டு .

  பதிலளிநீக்கு
 5. படங்கள் எல்லாம் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது!!!!!!

  இனிய பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 6. //விழிகளுக்கு கிடைத்த விருந்தில் பிடித்ததென எதுவும்..?//....இந்த கேள்வி அவசியமில்லையே என்பதைப்போல அத்தனை படங்களும் பேரழகோடு மிளிர்கிறது.அதிலும் அந்த ஒற்றை மலர்கள் ஒவ்வொன்றும் கவிதை பேசுகிறது!

  பதிலளிநீக்கு
 7. படங்கள் கொள்லை அழகு... மிக நேர்த்தியா பதிவு செய்ய்திருக்கிங்க....

  பதிலளிநீக்கு
 8. அருமை.எல்லாப்படமுமே அழகு.பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. அழகு படங்கள்.அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 10. அழகு என்றால் பூக்கள்... பூக்கள் என்றால் அழகு...பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 11. அட்டகாசமான படங்கள்..ரொமப ழகா இருக்குக்கா.பகிர்வுக்கு நன்றி!!

  பதிலளிநீக்கு
 12. வீட்டுக்கருகே உள்ள மண்டபம் எது? படம் இந்தப் பதிவில் இருக்கின்றதா?

  பதிலளிநீக்கு
 13. அத்தனையும் அழகு.எல்லாப்படமுமே அழகு.பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. புகைப்படங்கள் அருமை. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. பூப்பதிவுக்கு எப்பவும் போல வேறென்ன?பூங்கொத்துதான்!

  பதிலளிநீக்கு
 16. புகைப்படங்கள் அனைத்தும் மிக அருமை ராமலக்ஷ்மி. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. பூக்கள்ள்ள்ள்ள்ள்ள்ள் அழகா இருக்கு அக்கா.

  பதிலளிநீக்கு
 18. Lovely photos, அக்கா.... அந்த பூக்கள் ...கொள்ளை அழகு!

  பதிலளிநீக்கு
 19. படங்கள் பிரம்மாண்டம், அழகு, துல்லியம்.
  தேசியப் பறவை நிஜமா...பொம்மை போல இருக்கு!
  ஃ போட்டோ எடுப்பதை எடுத்ததும் அழகு.
  சிலிர்க்க (அரிக்க)வைக்கும் டிமோத்தி காக்டஸ்!
  குடியரசு தினத்துக்கேல்லாம் இப்படி கொண்டாட்டமா...பரவாயில்லையே..
  செகப்பு அழகு..இளவண்ணமும்
  மண்டபமும் (எப்பவுமே அழகு) மலரால் மண்டபமும் அழகு..

  பதிலளிநீக்கு
 20. கொள்ளை அழகு படங்கள் அசத்தலாய் படமாக்கி இருக்கீங்க...கூடவே தகவல்களும் நல்லாயிருக்குங்க லஷ்மி

  பதிலளிநீக்கு
 21. //இணையத்தில் அதன் படம் கிடைத்தாலும் நேரில் சென்று நானே எடுத்துப் பதிய வேண்டுமெனும் ஆவலில் கிளம்பி விட்டேன் நேற்று மாலை, காமிராவும் கையுமாக அந்தப் பூங்காவை நோக்கி...//

  உங்களுடைய, இந்த மாதிரியான உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் இன்று முத்துசரம் பலராலும் விரும்பப்படுகிறது.

  //அந்தக் கூட்டத்திலும் வீட்டுப்பெரியவர்களை அக்கறையுடன் அழைத்து வந்து கண்காட்சியை ரசிக்க வைக்கிற இன்றைய தலைமுறையைக் காண்கையில் நெகிழ்வும் மகிழ்ச்சியும்//

  அதை பதிவு செய்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

  காட்சிகள் கண்களுக்கும் வருணனைகள் மனதுக்கும் நல்ல விருந்து!

  பதிலளிநீக்கு
 22. மிக அருமை... எனக்கு ஒரு சந்தேகம் உங்கள் கணவர் பிள்ளைகளை விட உங்கள் கேமராவே உங்களுடன் அதிக நேரம் இருக்கிறது என நினைக்கிறேன் சரியா அக்கா? ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 23. ராமலக்ஷ்மி, எல்லா பாடமும் அருமை.

  மலர்கள் படம் துல்லியமாக இருக்கிறது.
  பகிர்வுக்கு நன்றி ராமலட்சுமி.

  பதிலளிநீக்கு
 24. அருமையான பதிவு .. !
  நிக்கான்-ல கலக்க ஆரம்பிச்சிட்டீங்க ராமலக்ஷ்மி ..
  வாழ்த்துக்கள் !.

  பதிலளிநீக்கு
 25. ஹையோ...ஹையோ...!கண்களிரண்டும் பூத்துப் போச்சு...பூக்களைப் பாத்துப்பாத்து.
  அருமை..சூப்பர்...இன்னும் என்னவெல்லாம் உண்டோ அத்தனையும்!!!
  ரோசாப்பூவும் அதன் டிசைனும்...ஆஹா! கடவுளும் ஒரு சூப்பர் டிசைனர் என்று நிரூபித்திருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 26. படங்கள் எல்லாமே அட்டகாசம்...
  பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 27. எல்லாமே அழகுன்னாலும் தனித்தனியாகச் சிரிக்கிற பூக்கள் ரொம்ப ரொம்ப அழகு அக்கா.

  பதிலளிநீக்கு
 28. மனதை அள்ளும் மலர்கள் அழகோ அழகு! குறிப்பாக ஒற்றைப் பூக்களுக்கு நீங்க பெயர் சூட்டியிருந்த அழகையும் ரசனையையும் ரசித்தேன் :) நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 29. அடடா! அழகு அழகு!
  ஆமா அஞ்சு நிமிஷ நடை தூரத்தில பார்க் இருக்கு, இவ்வளோ நாள் தெரியாதா? அநியாயமா இல்லே? :-)

  பதிலளிநீக்கு
 30. அமைதிச்சாரல் said...
  //பூவுன்னா எனக்கு உயிர். அதனால,........ எல்லாமே பிடிச்சிருக்குங்க :-))

  உங்கூரு லால்பாக்கை ஒரே ஒரு தடவைதான் பாத்திருக்கேன். காலத்தால் கல்லான மரமொண்ணு இருக்கே.. அதை சுத்திச்சுத்தி வந்து படமெடுத்தது நினைவு வருது..//

  அதை நான் இன்னும் எடுக்கவில்லை. அடுத்த முறை எடுக்கப் பார்க்கிறேன். பதிவு பிடிச்சிருப்பது அறிந்து மகிழ்ச்சி. நன்றி சாரல்.

  பதிலளிநீக்கு
 31. புவனேஸ்வரி ராமநாதன் said...
  //அட்டகாசமான படங்கள்.//

  மிக்க நன்றி புவனேஸ்வரி:)!

  பதிலளிநீக்கு
 32. goma said...
  //இதுக்கு இதுக்குத்தானே காத்திருந்தேன்.....
  சூப்பர் அட்டகாசம் அற்புதம் ..

  படங்களும் அதற்கான விளக்கமும் அருமை.

  ஒற்றை மலர்கள் அத்தனையும் அழகு.

  ப்ளஸ் 7 வது படம் அலங்காரவளைவுக்கு என் ஓட்டு //

  மிக்க நன்றி:)!

  //ஆனால்,சென்ற ஆண்டு இருந்த அழகு லால்பாகில் கண்காட்சி வடிவமைப்பு ,இந்த முறை கொஞ்சம் குறைச்சல் என்பதை,

  ராமலஷ்மி நேரில் பார்த்த நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்.//

  உண்மைதான். சற்றே ஏமாற்றமாக கூட இருந்திருந்தது. வித்தியாசத்தை நன்கு கவனித்திருக்கிறீர்கள்:)!

  பதிலளிநீக்கு
 33. துளசி கோபால் said...
  //படங்கள் எல்லாம் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது!!!!!!

  இனிய பாராட்டுகள்!//

  மகிழ்ச்சியும் நன்றியும் மேடம்:)!

  பதிலளிநீக்கு
 34. மோகன் குமார் said...
  //As usual fantastic. I liked 16 & 17//

  மிக்க நன்றி மோகன்குமார். 16,17 மட்டும் Sony W80-ல் எடுத்தவை. மற்ற யாவும் DSLR. ஆனால் P&S படங்கள் அதனுடன் போட்டிபோட்டு முன்னணிக்கு வந்து விட்டன பாருங்கள் உங்கள் கணிப்பில்:)!

  பதிலளிநீக்கு
 35. Priya said...
  ***//விழிகளுக்கு கிடைத்த விருந்தில் பிடித்ததென எதுவும்..?//....இந்த கேள்வி அவசியமில்லையே என்பதைப்போல அத்தனை படங்களும் பேரழகோடு மிளிர்கிறது.அதிலும் அந்த ஒற்றை மலர்கள் ஒவ்வொன்றும் கவிதை பேசுகிறது!//***

  உங்கள் வருகையில் பாராட்டிலும் மிக்க மகிழ்ச்சி ப்ரியா:)!

  பதிலளிநீக்கு
 36. சி. கருணாகரசு said...
  //படங்கள் கொள்ளை அழகு... மிக நேர்த்தியா பதிவு செய்ய்திருக்கிங்க....//

  மிக்க நன்றி கருணாகரசு:)!

  பதிலளிநீக்கு
 37. asiya omar said...
  //அருமை.எல்லாப்படமுமே அழகு.பகிர்வுக்கு நன்றி.//

  நன்றி ஆசியா.

  பதிலளிநீக்கு
 38. தமிழ் உதயம் said...
  //அழகு என்றால் பூக்கள்... பூக்கள் என்றால் அழகு...பாராட்டுகள்!//

  மறுக்க இயலாது யாராலும்:)! நன்றி தமிழ் உதயம்.

  பதிலளிநீக்கு
 39. S.Menaga said...
  //அட்டகாசமான படங்கள்..ரொமப ழகா இருக்குக்கா.பகிர்வுக்கு நன்றி!!//

  நன்றி மேனகா.

  பதிலளிநீக்கு
 40. Kasu Sobhana said...
  //வீட்டுக்கருகே உள்ள மண்டபம் எது? படம் இந்தப் பதிவில் இருக்கின்றதா?//

  படங்கள் 21,22,23 மூன்றிலும் உள்ளன:)! வருகைக்கு நன்றி ஷோபனா.

  பதிலளிநீக்கு
 41. அம்பிகா said...
  //அத்தனையும் அழகு.எல்லாப்படமுமே அழகு.பகிர்வுக்கு நன்றி.//

  நன்றி அம்பிகா.

  பதிலளிநீக்கு
 42. மதுரை சரவணன் said...
  //புகைப்படங்கள் அருமை. வாழ்த்துக்கள்//

  நன்றி சரவணன்:)!

  பதிலளிநீக்கு
 43. அன்புடன் அருணா said...
  //பூப்பதிவுக்கு எப்பவும் போல வேறென்ன?பூங்கொத்துதான்!//

  நன்றி நன்றி அருணா:)!

  பதிலளிநீக்கு
 44. கோநா said...
  //புகைப்படங்கள் அனைத்தும் மிக அருமை ராமலக்ஷ்மி. வாழ்த்துக்கள்.//

  நன்றி கோநா.

  பதிலளிநீக்கு
 45. mervin anto said...
  //ARUMAI//

  மிக்க நன்றி மெர்வின்.

  பதிலளிநீக்கு
 46. சுசி said...
  //பூக்கள்ள்ள்ள்ள்ள்ள்ள் அழகா இருக்கு அக்கா.//

  நன்றி சுசி.

  பதிலளிநீக்கு
 47. Chitra said...
  //Lovely photos, அக்கா.... அந்த பூக்கள் ...கொள்ளை அழகு!//

  மிக்க நன்றி சித்ரா:)!

  பதிலளிநீக்கு
 48. ஸ்ரீராம். said...
  //படங்கள் பிரம்மாண்டம், அழகு, துல்லியம்.
  தேசியப் பறவை நிஜமா...பொம்மை போல இருக்கு!//

  பொம்மையா நிஜம் போல இருக்கு என சொல்லுங்க:))!

  //ஃ போட்டோ எடுப்பதை எடுத்ததும் அழகு.
  சிலிர்க்க (அரிக்க)வைக்கும் டிமோத்தி காக்டஸ்! குடியரசு தினத்துக்கேல்லாம் இப்படி கொண்டாட்டமா...பரவாயில்லையே.செகப்பு அழகு..இளவண்ணமும் மண்டபமும் (எப்பவுமே அழகு) மலரால் மண்டபமும் அழகு..//

  ரசித்தவற்றைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம். குடியரசு மற்றும் சுதந்திர தினம் இவ்விரண்டு நாட்களிலும் ஒவ்வொரு வருடமும் லால்பாக் கண்காட்சி கொண்டாட்டம் மிகப் பிரசித்தம். நேரமிருப்பின் கடந்த வருட கண்காட்சிப் பதிவைப் பாருங்கள். சுட்டி பதிவில் உள்ளது:)!

  பதிலளிநீக்கு
 49. தமிழரசி said...
  //கொள்ளை அழகு படங்கள் அசத்தலாய் படமாக்கி இருக்கீங்க...கூடவே தகவல்களும் நல்லாயிருக்குங்க லஷ்மி//

  மிக்க நன்றி தமிழரசி.

  பதிலளிநீக்கு
 50. அமைதி அப்பா said...
  ***/இணையத்தில் அதன் படம் கிடைத்தாலும் நேரில் சென்று நானே எடுத்துப் பதிய வேண்டுமெனும் ஆவலில் கிளம்பி விட்டேன் நேற்று மாலை, காமிராவும் கையுமாக அந்தப் பூங்காவை நோக்கி.../

  உங்களுடைய, இந்த மாதிரியான உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் இன்று முத்துசரம் பலராலும் விரும்பப்படுகிறது.//***

  உங்கள் போன்ற பலரின் தொடர் ஊக்கமே என்னை செலுத்துகிறது:)!

  ***//அந்தக் கூட்டத்திலும் வீட்டுப்பெரியவர்களை அக்கறையுடன் அழைத்து வந்து கண்காட்சியை ரசிக்க வைக்கிற இன்றைய தலைமுறையைக் காண்கையில் நெகிழ்வும் மகிழ்ச்சியும்//

  அதை பதிவு செய்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

  காட்சிகள் கண்களுக்கும் வருணனைகள் மனதுக்கும் நல்ல விருந்து!//***

  மிக்க நன்றி அமைதி அப்பா:)!

  பதிலளிநீக்கு
 51. சசிகுமார் said...
  //மிக அருமை... எனக்கு ஒரு சந்தேகம் உங்கள் கணவர் பிள்ளைகளை விட உங்கள் கேமராவே உங்களுடன் அதிக நேரம் இருக்கிறது என நினைக்கிறேன் சரியா அக்கா? ஹா ஹா ஹா//

  நன்றி சசிகுமார்! கவலைப் படாதீர்கள், நேரத்தை சரியாகவே கையாளுகிறேன்:))! மேலும் என் ஆர்வத்துக்கு எப்போதும் துணை வருபவர்கள் கணவரும் மகனும்:)!

  பதிலளிநீக்கு
 52. கோமதி அரசு said...
  //ராமலக்ஷ்மி, எல்லா படமும் அருமை.

  மலர்கள் படம் துல்லியமாக இருக்கிறது.
  பகிர்வுக்கு நன்றி ராமலட்சுமி.//

  மிக்க நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 53. James Vasanth said...
  //அருமையான பதிவு .. !
  நிக்கான்-ல கலக்க ஆரம்பிச்சிட்டீங்க ராமலக்ஷ்மி ..
  வாழ்த்துக்கள் !.//

  மிக்க நன்றி ஜேம்ஸ், தொடர்ந்து ஃப்ளிக்கரில் படங்களைக் கவனித்து, திருத்தம் ஆலோசனை சொல்லி, தந்து வருகிற ஊக்கத்துக்கும்:)!

  பதிலளிநீக்கு
 54. நானானி said...
  //ஹையோ...ஹையோ...!கண்களிரண்டும் பூத்துப் போச்சு...பூக்களைப் பாத்துப்பாத்து.
  அருமை..சூப்பர்...இன்னும் என்னவெல்லாம் உண்டோ அத்தனையும்!!!
  ரோசாப்பூவும் அதன் டிசைனும்...ஆஹா! கடவுளும் ஒரு சூப்பர் டிசைனர் என்று நிரூபித்திருக்கிறார்.//

  மிக்க நன்றி நானானி:)! அன்றைக்கு அந்த ஒற்றைப் பூ பலரின் மனதுக்குள்ளும் காமிராவுக்குள்ளும் சிறைப்பட்டது. ஆம், கடவுளின் படைத்த அற்புதங்களில் ஒன்றாக மலர்கள்.

  பதிலளிநீக்கு
 55. ஜிஜி said...
  //படங்கள் எல்லாமே அட்டகாசம்...
  பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்!//

  மிக்க நன்றி ஜிஜி:)!

  பதிலளிநீக்கு
 56. சுந்தரா said...
  //எல்லாமே அழகுன்னாலும் தனித்தனியாகச் சிரிக்கிற பூக்கள் ரொம்ப ரொம்ப அழகு அக்கா.//

  மிக்க நன்றி சுந்தரா:)!

  பதிலளிநீக்கு
 57. கவிநயா said...
  //மனதை அள்ளும் மலர்கள் அழகோ அழகு! குறிப்பாக ஒற்றைப் பூக்களுக்கு நீங்க பெயர் சூட்டியிருந்த அழகையும் ரசனையையும் ரசித்தேன் :) நன்றி ராமலக்ஷ்மி.//

  மகிழ்ச்சியும் நன்றியும் கவிநயா:)!

  பதிலளிநீக்கு
 58. திவா said...
  //அடடா! அழகு அழகு!
  ஆமா அஞ்சு நிமிஷ நடை தூரத்தில பார்க் இருக்கு, இவ்வளோ நாள் தெரியாதா? அநியாயமா இல்லே? :-)//

  மிக்க நன்றி திவா. நல்லாப் பாருங்க, அஞ்சு நிமிஷ நடை என்றா சொல்லியிருக்கிறேன்? அஞ்சு நிமிஷ (ட்ரைவ்) பயணத்தில்.. :))!

  பதிலளிநீக்கு
 59. தமிழ்மணத்தில் வாக்களித்த 14 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 31 பேருக்கும் என் நன்றி.

  பதிலளிநீக்கு
 60. ராமலக்ஷ்மி ஃபோட்டோ எடுக்குறதுல சக்கை போடு போடுறீங்க.. செம இம்ப்ரூவ்மென்ட் ..கலக்குங்க :-)

  பதிலளிநீக்கு
 61. @ கிரி,

  ஆரம்ப கால பிட் பதிவிலிருந்து கவனித்து வருகிற நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்:)! மிக்க நன்றி கிரி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin