ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

தனித்திரு விழித்திரு

என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 5)
#1 தும்பி
 Dragonfly
இவரின் உயிரியல் பெயர் Anisoptera . விர் விர்ரெனப் பறந்து விடுகிற இவரைப் படம் பிடிப்பது எளிதுதான். சில வாரங்களுக்கு முன் வீட்டுக்கு அருகேயிருக்கும் கே.ஆர்.புரம் ஏரிக்குச் சென்றிருந்தேன் பறவைகள் கண்ணில் அகப்படுமா எனப் பார்க்க.  நுழைவுச்சீட்டு வாங்கி பூங்கா வழியாக ஏரிக்கரையோரம் வெகுதூரம் நடந்தும் பறவைகள் கண்ணில் சிக்கவில்லை. ஆனால் வழியெங்கும் தட்டான்களின் ரீங்காரம். கவனித்ததில் ஒரு குச்சியின் மேல் வந்தமருகிற தட்டான் சில நொடிகளில் கிளம்பி ஹெலிகாப்டர் போல அந்தப் பகுதியிலேயே சற்று வட்டமடித்துவிட்டு, திரும்பவும் அதே குச்சிக்கே வந்து ஓய்வெடுக்கின்றன. தயாராகக் காத்திருந்து வேண்டிய கோணங்களில் எடுத்துக் கொண்டேன். அந்தப் பகிர்வு தனியாகப் பிறகு வரும்:).

வீட்டில் ஒருநாள் கணினியிலிருந்து கண்ணை அகற்றிய கணத்தில் சன்னல் வழியே தெரிந்தது மாமரக்கிளையின் குச்சி மேல் அமர்ந்திருந்த இந்த வண்ணத் தட்டான். பிற ஜந்துக்களைப் பார்த்தால் அவசரமாகக் கேமராவை எடுக்கச் செல்வேன். ஆனால் இது நிச்சயமாய் அதே இடத்தில் மீண்டும் வந்தமரும் என எண்ணியபடி நிதானமாக கேமராவை எடுத்து, மாங்குச்சியின் மஞ்சள் நிறத்துக்குப் பச்சைப் பின்னணி இருக்கட்டும் என, சன்னல் வழியாகவே ஜூம் எடுத்த படம்.


#2 மர வண்ண வெட்டுக்கிளி
Wood-colored Short-wing Grasshopper
#3
துள்ளி வேறிடம் நகர்ந்ததும் இன்னொரு க்ளிக்..




#4 பாம்பரணை
Coal skink 
“ஆ.. பயமாய் இல்லையா?” எனக் கேட்டிருந்தார் ஹுஸைனம்மா, Flickr-FB_யில் இதைப் பகிர்ந்திருந்த போது.  “மனதின் நடுக்கம் விரல்கள் வரைப் போகாமல் பார்த்துக்கிட்டாப் போதும்” என்றேன். ஹி.. சரிதானே?

#5
வெயிலில் எப்படி மினுமினுக்கிறார் பாருங்க..
இவரது உயிரியல் பெயர் Plestiodon anthracinus
#6 ஓணான்
தனித்திரு விழித்திரு
Garden Lizard
***

10 கருத்துகள்:

  1. துல்லியமான படங்கள். தும்பியைப் படம் பிடித்தது சாதனைதான். வெட்டுக்கிளி படத்தில் வாட்டர்மார்க்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை! :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெட்டுக்கிளியின் இரண்டு படங்களிலுமே உள்ளன. உற்றுப் பார்த்துக் கண்டு பிடியுங்கள்:).

      நன்றி.

      நீக்கு
    2. பின்னர் இணைத்தீர்களோ!! :)) (ஒரு டவுட்டுதேன்...)

      நீக்கு
    3. இல்லை. முன்னரே இருந்தன! பல சமயங்களில் நீங்கள் குறிப்பிட்டபின் சேர்த்தவற்றுக்கு நன்றி தெரிவித்திருக்கிறேன்:).

      நீக்கு
  2. தலைப்பு படங்கள் அதற்கான
    விளக்கங்கள் மிக மிக அருமை
    வாழ்த்துக்களுடன்....

    பதிலளிநீக்கு
  3. இவைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதிலும் படம்பிடிப்பதிலும் பொழுது போய் விடும் .....!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin