வெள்ளி, 13 ஜூன், 2008

சிந்திக்க வைக்கும் சி.வா.ஜி

தொடர் விளையாட்டில் வல்லிசிம்ஹன் அழைப்பின் பேரில்
சி வா ஜி
வா யி லே
ஜி லே பி
என்ற தலைப்பில் எழுத அழைக்கப் பட்டேன்.
மேலும் கீழும், இடமும் வலமுமாய் மூன்று முறை வாசிக்கணுமா?
ஒரே முறையாய், முறையான வாழ்வின் தத்துவமாய்
பின் வருகின்ற கவிதையின் முதல் எழுத்துக்களை
மட்டும் கூட்டிக் கொண்டே செல்லுங்களேன் பார்ப்போம்.

சிரித்து வாழ வேண்டும்
வாழ்க்கையை பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
'ஜிம்'க்குப் போக வேண்டும்
வாழ்வின் ஆதாரம் ஆரோக்கியமாகும்!
லகுவாய் எதுவும் கிடைக்காது-ஆகையால்
லேசிலே முயற்சியை விடாதே!
'ஜில்'லென்று ஒரு வாழ்க்கை அமைய
லேட்டாய் செய்யலாம் என எவ்வேலையையும்
பின் தள்ளிப் போடாதே !
*** *** ***
இப்படியாக சிம்பிளாய் வந்து விட்டார் என் சி.வா.ஜி.-இந்த
சிவாஜி சந்திக்க அல்ல சிந்திக்க!
வாயிலே நல்வார்த்தை வருமா சபாஷென?-இங்கு
ஜிலேபி ருசிக்க அல்ல ரசிக்க!
*** *** ***

இப்போது இத்தலைப்பில் சங்கலித் தொடராய் எழுதிட நான் அழைப்பது சதங்கா, கவிநயா, கயல்விழி முத்துலெட்சுமி.

52 கருத்துகள்:

 1. நன்று நன்று ராமலக்ஷ்மி - இப்போ எல்லாம் பதிவு போடுறது ரொம்ப சுலபமாயிடுச்சில்ல - நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. நன்றாக வார்த்தைகளைத் தொடுத்திருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி.
  எனக்கே யாரோ சொல்லிவச்சு உபதேசம் சொன்னா மாதிரி இருக்கிறது.

  வேலைகளைத் தள்ளிப் போடுவதில் நான் சமர்த்து.
  அப்புறம் மாங்கு மாங்குனு செய்வேன்.

  சிந்திக்கும் சிவாஜியைச் சந்திக்க வைத்த்தற்கு ரொம்ப நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ம். கூப்பிட்டுட்டீங்களா.. இது நம் கைக்கு வந்தா எதுவும் எழுத வராதேன்னு யோசிச்சிட்டே இருந்தேன்.ஒன்னுமேதோணல.. கொஞ்சம் டைம் குடுங்க.. லேசிலே முயற்சியை விடாதேன்னு வேற சொல்லிட்டீங்க..

  உங்க சிவாஜி வாயிலே ஜிலேபி ரொம்ப எளிமையா இருந்தாலும் கருத்து நல்லா இருக்கு..

  பதிலளிநீக்கு
 4. கவிதை எழுதறவங்களுக்கு சொல்லியா தரணும்? :))

  ஆனாலும் உங்கள் கவிதையில் பிழை உள்ளது. பொருளில் இல்லை, சொல்லில் தான். இருந்தாலும் மன்னிக்கபடலாம்.

  எங்கே ஆயிரம் பொற்காசு?னு எல்லாம் கேக்கபடாது. :))

  ஜிம் என்ற ஆங்கில வார்த்தை வந்து விழுந்து இருக்கே! அத தான் சொல்றேன். :p

  பதிலளிநீக்கு
 5. சீனா said...
  //நன்று நன்று ராமலக்ஷ்மி//

  முதன் முறையாக 'முதல் வருகை'யில் சீனா அதுவும் 'நன்று நன்று' என்றபடி. நன்றி நன்றி!

  //இப்போ எல்லாம் பதிவு போடுறது ரொம்ப சுலபமாயிடுச்சில்ல.//

  என்ன செய்வது சார், சவாலை சமாளிக்க நீண்ட கதையைத்தான் யோசித்திருந்தேன். நேரமின்மையாலும், வல்லியம்மாவுக்குத் தந்த வாக்கை காப்பாற்றும் கடமை உணர்ச்சியாலும் :)) தொடர் விளையாட்டு வார்த்தை விளையாட்டாகி விட்டது.

  //நல்வாழ்த்துகள்//

  வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. கயல்விழி முத்துலெட்சுமி said..
  //ம். கூப்பிட்டுட்டீங்களா.. இது நம் கைக்கு வந்தா எதுவும் எழுத வராதேன்னு யோசிச்சிட்டே இருந்தேன்.ஒன்னுமேதோணல.. ம்//

  வைத்து விட்டேனா ஆ(அழை)ப்பு?

  //கொஞ்சம் டைம் குடுங்க.. லேசிலே முயற்சியை விடாதேன்னு வேற சொல்லிட்டீங்க..//

  அப்போ ஆப்புக்கு பச்சைக் கொடிதான்! மிக்க நன்றி மேடம்.

  //எளிமையா இருந்தாலும் கருத்து நல்லா இருக்கு..//

  இத இத இந்த நல்வார்த்தையத்தான் வேணுமின்னு கேட்டிருந்தேன்.

  பதிலளிநீக்கு
 7. வல்லிசிம்ஹன் said..//நன்றாக வார்த்தைகளைத் தொடுத்திருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி.//

  என் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றி விட்டேன் என எடுத்துக் கொள்ளலாம்தானே?

  பதிலளிநீக்கு
 8. ambi said..
  //எங்கே ஆயிரம் பொற்காசு?னு எல்லாம் கேக்கபடாது. :))//

  ஒவ்வொரு பின்னூட்டத்திலும் தருமி நம்மை விடவே மாட்டார் போலிருக்கே!

  //ஜிம் என்ற ஆங்கில வார்த்தை வந்து விழுந்து இருக்கே!//

  'ஜிம்'மட்டுமல்ல 'ஜில்'லும் non தமிழ்தான். 'சிவாசி வாயிலே சிலேபி'
  சொல்லிப் பாருங்க. நல்லாவா இருக்கு?

  பதிலளிநீக்கு
 9. //'சிவாசி வாயிலே சிலேபி'
  சொல்லிப் பாருங்க. நல்லாவா இருக்கு?
  //

  :)))


  இத மருத்துவர் கேக்கனும். அப்ப இருக்கு உங்களுக்கு. :)

  பதிலளிநீக்கு
 10. ambi said...//அப்ப இருக்கு உங்களுக்கு. :)//

  நீங்களே போட்டுக் கொடுத்து, தட்டியும் எழுதிக் கையில் கொடுத்திருவீங்க போலிருக்கே!

  பதிலளிநீக்கு
 11. இந்த மொக்கை தலைப்பையும் இப்படி மாத்திட்டீங்களே!! :))

  பதிலளிநீக்கு
 12. சூப்பர் ராமலக்ஷ்மி! (சுத்தத் தமிழுக்கு மன்னிக்கவும்!). இ. கொ. அவர்கள் சொன்னதை நானும் ரிப்பீட்டிக்கிறேன்: இந்த மொக்கை தலைப்பையும் இப்படி மாத்திட்டீங்களே!! :)) அப்படியே என்னையும் தாராளமா மாட்டி விட்டுட்டீங்க! உங்க அளவு இல்லன்னாலும் முயற்சி செய்யறேன்பா!

  பதிலளிநீக்கு
 13. இலவசக்கொத்தனார் said...
  //இந்த மொக்கை தலைப்பையும் இப்படி மாத்திட்டீங்களே!! :))//

  'சிவாஜி'க்குப் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கி வைத்தவரே பாராட்டி விட்டார். அப்போ நான் பாஸ்தானே!

  பதிலளிநீக்கு
 14. கவிநயா said...
  //சூப்பர் ராமலக்ஷ்மி! (சுத்தத் தமிழுக்கு மன்னிக்கவும்!).//

  'சா'க்கிரதை 'சா'க்கிரதை கவிநயா. அம்பி கவனிக்கிறார்.

  //அப்படியே என்னையும் தாராளமா மாட்டி விட்டுட்டீங்க!//

  அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி கவிநயா! கவியாலே
  எல்லோரையும் கட்டிப் போடும் கவிநயாவால் முடியாதது என ஏதுமிருக்கா என்ன?

  பதிலளிநீக்கு
 15. வந்திட்டேன். படிச்சிட்டேன். இப்ப சுத்திக்கிட்டு இருக்கேன். சீக்கிரம் உங்க எல்லாருக்கும் வினியோகிக்கறேன், நல்ல காரமான ஜிலேபி. வல்லிம்மா போன்றோருக்கு தான் சுகர் ஒத்துக்காதே :)))

  பதிலளிநீக்கு
 16. சொல்ல மறந்துவிட்டேன். சுத்து சுத்துனு சுத்தலேன்னாலும், அளவா சுத்தி பொருள் பட (இந்த மொக்கையையும்கு ரிப்பீட்டேய்) தந்தது இனிமை மேடம்.

  பதிலளிநீக்கு
 17. ஜிலேபி ரெடியாயிடுச்சுங்க. வந்து சாப்பிட்டு பார்க்கவும்:

  http://kavinaya.blogspot.com/2008/06/blog-post_13.html

  பதிலளிநீக்கு
 18. வந்து ஒரு மாதம்தான் என்றாலும்...நிறைய கருத்தெல்லாம் சொல்லிருக்கிங்க...
  அதனால நீங்க யுகேஜி எல்கேஜி எல்லாம தாண்டியாச்சு...:)

  பதிலளிநீக்கு
 19. சதங்கா said..//அளவா சுத்தி பொருள் பட(இந்த 'மொக்கையையும்'கு ரிப்பீட்டேய்) தந்தது இனிமை மேடம்.//

  நன்றி சதங்கா. எல்லோருக்கும் பிடித்திருந்தால் சந்தோஷம்தான்!

  பதிலளிநீக்கு
 20. ராமலஷ்மி!!
  ஜிலேபியை சிவாஜி வாயில் போடாமல்
  பதிவர்கள் அனைவரின் வாயிலும் போட்டு, அவர்களை யோஜிக்கவும்...அம்மாடீ...யோசிக்கவும் வைத்துவிட்டீர்கள்! குறிப்பாக வல்லிம்மாவை!!!

  பதிலளிநீக்கு
 21. அருமை. கவிதையை சிவாஜி வாயிலே ஜிலேபி- கவிதையை மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 22. கவிநயா said...//ஜிலேபி ரெடியாயிடுச்சுங்க. வந்து சாப்பிட்டு பார்க்கவும்:)//

  இங்கே வந்த பார்ஸலைப் பார்க்கும் முன்னரே அங்கே வந்து சாப்பிட்டுப் பாராட்டியும் விட்டேன்ல..!

  பதிலளிநீக்கு
 23. தமிழன் said..//கருத்து கருத்து...//

  தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தமிழன்.

  //யுகேஜி எல்கேஜி எல்லாம தாண்டியாச்சு...:)//

  அப்போ 1ஆம் வகுப்பென வைத்துக் கொள்ளலாம். அந்த வகுப்பில்தான் நாம்
  'அறம் செய்ய விரும்பு'
  'ஆறுவது சினம்'- என ஒளவையாரின் ஆத்திச் சூடியைக் கற்றோம். தமிழின் உயிர் எழுத்துக்களை ஆரம்பமாகக் கொண்டு அழகான உத்தியுடன் அற்புதமாய் பாடியிருப்பார். அந்த உத்திதான் இப் பதிவிலே கை கொடுத்தது. உத்திக்கு வித்திட்டமைக்கு ஒளவைப் பாட்டிக்கும், வாய்ப்பை ஏற்படுத்தியமைக்கு வல்லிம்மாவுக்கும் என் நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 24. நானானி said..
  //யோஜிக்கவும்...அம்மாடீ...யோசிக்கவும் வைத்துவிட்டீர்கள்!குறிப்பாக வல்லிம்மாவை!!!//

  பரவாயில்லை, நீங்களும் 'சா'க்கிரைதையாகத்தான் பின்னூட்டமிடுகிறீர்கள்:)! யோசிக்க வைத்ததாக ஒப்புக் கொண்டது வல்லிம்மாவின் பெருந்தன்மை. நான் வழங்கியது யோசனை என்றால் கவிநயா வழங்கியிருப்பது 'போதனை'!
  போய் அவசியம் பாருங்கள் நானானி!

  அடுத்து சதங்காவும் காரசார (கண்ணில் நீர் வருமா சதங்கா?) ஜிலேபியுடம் வருவார், காத்திருங்கள்.

  பதிலளிநீக்கு
 25. அகரம் அமுதா said...//அருமை. கவிதையை சிவாஜி வாயிலே ஜிலேபி- கவிதையை மிகவும் ரசித்தேன்.//

  முதல் வருகைக்கும், ரசித்துப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி அமுதா!

  பதிலளிநீக்கு
 26. \\லேட்டாய் செய்யலாம் என எவ்வேலையையும்
  பின் தள்ளிப் போடாதே \\ எனக்கு நல்ல அறிவுரை, நாளைக்குப்பாக்கலாம் அப்படின்னு பல வேலைகள் தள்ளிப்போடுவேன். எல்லாம் ஒரே நாள்ல குவியும்.

  பதிலளிநீக்கு
 27. ஜிலேபி, ஜிலேபிய்ய்ய்ய், ஜூடான ஜிலெபிய்ய்ய்ய்

  http://vazhakkampol.blogspot.com/2008/06/blog-post_15.html

  பதிலளிநீக்கு
 28. //சின்ன அம்மிணி said...
  \\லேட்டாய் செய்யலாம் என எவ்வேலையையும்
  பின் தள்ளிப் போடாதே\\ எனக்கு நல்ல அறிவுரை..//

  நல்லது அம்மணி. வல்லிம்மாவும் இதையே சொல்லியிருந்தாங்க. கயல்விழி மேடம் 'லேசிலே முயற்சியை' விட மாட்டேன்னு சொல்லியிருக்காங்க. பதிவு நாலு பேருக்கு நல்ல (தெரிந்தவைதான் என்றாலும்) விஷயங்களை ஞாபகப் படுத்தினால் அதுவே பதிவுக்கு வெற்றி.
  முதல் வருகைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 29. சதங்கா said...
  //ஜிலேபி, ஜிலேபிய்ய்ய்ய், ஜூடான ஜிலெபிய்ய்ய்ய்//

  ஜூடாக மட்டுமல்ல, ஜுவையாக ஜூப்பராக இருந்தது:))! பெரிய ஜிலேபி, தங்கத் தாம்பாளத்தில், பட்டத்து ஆனை மேல், தருமியின் சிலேடை பாட்டில்..எனக் கற்பனையில் கலக்கி அழைப்பு விடுத்த எனக்கு கவிநயா போலவே பெருமை சேர்த்து விட்டார். எல்லோரும் அந்த ஜிலேபியைக் க(உ)ண்டு களியுங்கள்!

  பதிலளிநீக்கு
 30. சென்ஷி said...
  //கலக்கல் :)) //

  (சிலேபி) சுத்தல் கலக்கலில் முடிந்ததில் எனக்கும் திருப்தியே. நன்றி சென்ஷி.

  பதிலளிநீக்கு
 31. http://sirumuyarchi.blogspot.com/2008/06/blog-post_18.html பையனுக்கு உடம்பு சரியில்லைப்பா.. எப்படியோ லேட்டா ஒரு கதை...

  பதிலளிநீக்கு
 32. சிவாஜி வாயில நல்லா ஜிலேபி குடுத்துட்டீங்க!!!

  பரவால்ல நான்லாம் அல்வாவை குடுத்து ஜிலேபிநு ஏமாத்தினதுக்கு இது எவ்வளவோ சூப்பர்.

  பதிலளிநீக்கு
 33. கயல்விழி முத்துலெட்சுமி said...
  //பையனுக்கு உடம்பு சரியில்லைப்பா.. எப்படியோ லேட்டா ஒரு கதை...//


  லேட்டாக வந்தாலும் ஹாட்டான ஜிலேபி. கடைசி வரியிலே ஒரு சுத்து சுத்தீடீங்களே, சூப்பராய்.

  பையன் சீக்கிரமே குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 34. மங்களூர் சிவா said...
  //சிவாஜி வாயில நல்லா ஜிலேபி குடுத்துட்டீங்க!!!//

  நன்றி ம.சிவா!

  //பரவால்ல நான்லாம் அல்வாவை குடுத்து ஜிலேபிநு ஏமாத்தினதுக்கு இது எவ்வளவோ சூப்பர்.//

  ஆமாங்க, போய் பார்த்து கொடுத்தது அல்வாதான்:( என ஊர்ஜிதப் படுத்திட்டு வந்தேன். சரி விடுங்க, சவாலை சமாளிக்காம இருப்பதை விட ஏதோ ஒரு ஸ்வீட் கொடுத்து விட்டீர்களே:)!

  பதிலளிநீக்கு
 35. //லேட்டாய் செய்யலாம் என எவ்வேலையையும்
  பின் தள்ளிப் போடாதே !
  //

  ஹய்யோ! ஹய்யோ! ஒரே சிப்பு சிப்பா வருது! நமக்கு லேட்னா என்னானே தெரியாது :) ;).

  இப்படி எல்லாம் கூட இருக்காங்களா என்ன?

  யாருப்பா அது! இந்தப் பதிவு போட்டு, 6 நாளாச்சு, ஏன் லேட்டா பின்னூட்டம் போடுறன்னு கேக்குறது?

  நோ!நோ! இது ரொம்ப சீக்கிரம்.நானானி அம்மாவக் கேளுங்க, அவுங்க அழைப்பையே நான் 8 நாள் கழுச்சுத் தான் பார்த்தேன். :(

  ஹய்யோ! ஹய்யோ! ஒரே சிப்பு சிப்பா வருது! நமக்கு லேட்னா என்னானே தெரியாது :) ;).

  பதிலளிநீக்கு
 36. எப்படிங்க....இல்ல தெரியாமத் தான் கேக்குறேன்....எப்படி இப்படி எல்லாம்?....உண்மையச் சொல்லுங்க ரூம் போட்டுத் தானே சுத்தினீங்க ஜிலேபி.

  :))))).....எளிமையா ஆனா ரொம்ப நல்லா இருக்கு ராமலக்ஷ்மி! எனக்கே எனக்கா எழுதுன மாதிரி இருக்கு! உண்மை தான்.

  தப்பா எடுத்துக்காதீங்க! PIT பதிவு பாத்துட்டு ஓடிட்டேன்.:(

  பதிலளிநீக்கு
 37. அல்வா குடுத்தேன்னு சொல்லியும் வந்து அந்த அல்வாவை படிச்சிருக்கீங்களெ

  :))))

  பதிலளிநீக்கு
 38. நல்லா இருக்கே இந்த வார்த்தை விளையாட்டும்!!!!

  பதிலளிநீக்கு
 39. ////NewBee said...
  //லேட்டாய் செய்யலாம் என எவ்வேலையையும்
  பின் தள்ளிப் போடாதே !//

  ஹய்யோ! ஹய்யோ! ஒரே சிப்பு சிப்பா வருது! நமக்கு லேட்னா என்னானே தெரியாது :) ;).////

  இதானே வேண்டாங்கிறது...

  //எனக்கே எனக்கா எழுதுன மாதிரி இருக்கு! உண்மை தான்.//

  அப்படி வாங்க வழிக்கு. ஸோ, புதுவண்டு சிந்தனைத் தேன் துளியினை ஏற்றுக் கொண்டது.

  பதிலளிநீக்கு
 40. மங்களூர் சிவா said...
  //அல்வா குடுத்தேன்னு சொல்லியும் வந்து அந்த அல்வாவை படிச்சிருக்கீங்களெ//

  எல்லாம் ஒரு ஆர்வந்தேன்.

  பதிலளிநீக்கு
 41. அபி அப்பா said...
  //நல்லா இருக்கே இந்த வார்த்தை விளையாட்டும்!!!!//

  நல்லா இருக்கே உங்க முதல் வரவும் பாராட்டும்:)!

  பதிலளிநீக்கு
 42. ##ராமலக்ஷ்மி said...
  அபி அப்பா said...
  //நல்லா இருக்கே இந்த வார்த்தை விளையாட்டும்!!!!//

  நல்லா இருக்கே உங்க முதல் வரவும் பாராட்டும்:)!

  June 21, 2008 3:59 PM
  ##

  அட இல்லப்பா! நமக்கு இப்பத்தான் நேரம் கிடைச்சுது! அதான் லேட்! இனிமுதம் பந்திக்கு இருக்கேன் ஓக்கே:-))

  இப்படிக்கு
  அபிஅப்பா

  பதிலளிநீக்கு
 43. ராமலக்ஷ்மி said...
  //அட இல்லப்பா! நமக்கு இப்பத்தான் நேரம் கிடைச்சுது! அதான் லேட்! இனிமுதம் பந்திக்கு இருக்கேன் ஓக்கே:-))

  இப்படிக்கு
  அபிஅப்பா//

  ஆகா மிக்க மகிழ்ச்சி அபிஅப்பா! காத்திருக்கிறேன். தேங்க்யூ:-))

  பதிலளிநீக்கு
 44. ஒரு நவீன ஆத்திச்சூடி படித்த திருப்தி!

  பதிலளிநீக்கு
 45. முதல் மறு மொழி முதல் முறையாக ராமலக்ஷ்மியின் பதிவில் இட்ட பிறகு இன்று வந்தேன்.

  படியுங்களேன் எனது மொக்கையையும்

  http://cheenakay.blogspot.com

  பதிலளிநீக்கு
 46. cheena (சீனா) said...
  //முதல் மறு மொழி முதல் முறையாக ராமலக்ஷ்மியின் பதிவில் இட்ட பிறகு இன்று வந்தேன்.//

  முதல் மறுமொழி முடியாது போனாலும், முடியும் போது முத்துச் சரம் வந்து தங்கள் முத்தான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டாலே போதும். இத்தகைய நல்வாழ்த்துக்கள் ஊக்கத்தையும் உவகையையும் ஒருசேர அளிக்கின்றன.

  //படியுங்களேன் எனது மொக்கையையும்

  http://cheenakay.blogspot.com//

  தாங்கள் அசை போடுபவற்றையும் ஆர்வத்துடன் கவனித்துதான் வருகிறேன். சிவாஜியையும் விட்டு வைக்கவில்லை. பின்னூட்டத்தில் எனது கருத்தை ஏற்று நாம கட்சி சேரலாம்னு சொல்லியிருந்தீர்களே:) !

  பதிலளிநீக்கு
 47. அன்பின் ராமலக்ஷ்மி

  சிந்திக்க வைக்கும் சிவாஜி நன்றாகவே இருந்தது. வித்தியாசமான முறையில் பதிவு இடப்பட்டிருக்கிறது.

  எனது பதிவினையும் காண்க

  http://ennassiraku.blogspot.com
  http://pattaraivumpaadamum.blogspot.com

  பதிலளிநீக்கு
 48. பரிசல்காரன் said...
  //ஒரு நவீன ஆத்திச்சூடி படித்த திருப்தி!//

  நன்றி பரிசல்காரரே! ஆத்திச்சூடி அளவுக்கே உயர்த்தி விட்டீர்களே! அதன் உத்தியில் எழுதப் பட்டது, அவ்வளவுதான்!

  பதிலளிநீக்கு
 49. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி செல்விஷங்கர்.

  //எனது பதிவினையும் காண்க //

  சதங்காவால் எழுத அழைக்கப் பட்டவராச்சே. இன்னுமா பார்க்காமலிருப்பேன். பின்னூட்டமும் இட்டிருக்கிறேன் செல்வி!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin