வியாழன், 6 அக்டோபர், 2011

ரெட் ஃப்ரேம்ஸ் போட்டி - அதீதம் ஃபோட்டோ கார்னர் - பிட் க்ரூப் பூல் - புகைப்படப் பிரியன்

ரெட் ஃப்ரேம்ஸ் புகைப்படப் போட்டி
பிறந்த மண்ணின் பெருமையை
வசிக்கும் ஊரின் அருமையை
பிடித்த ஊரின் அழகை
உலகுக்குச் சட்டமிட்டுக் காட்டுங்கள்!
மூன்று இலட்சம் பெறுமானமுள்ள பரிசுகளை அள்ளுங்கள்!


மேலும் விவரங்களுக்கு PiT-ல் நான் பதிந்த இடுகை இங்கே: ‘என் நகரின் காட்சிகள்’-ரெட் ஃப்ரேம்ஸ் புகைப்படப் போட்டி 2011


அதீதம் ஃபோட்டோ கார்னர்

புதுப் பொலிவுடன் மீண்டும் மலர்ந்த அதீதம் இணைய இதழின் இரண்டாம் பதிப்பிலிருந்து (முதல் பதிப்பில் ‘எல்லாம் வல்ல..’) அதன் ரெடி ஸ்டெடி க்ளிக் கார்னர் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருப்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி. ‘ராமலக்ஷ்மி ராஜன் ஃபோட்டோ கார்னர்” என்றே அதை முகப்பில் நிறுத்தியிருக்கும் அதீதத்துக்கும் இங்கு என் நன்றி.

PiT Group Pool
-வுடன் கைகோர்க்கிறது அதீதம்


ஃப்ளிக்கர் தளம் குறித்தும் அதில் பதியும் படங்களை PiT Pool-லில் பகிர்வது குறித்தும் “போகுமிடம் வெகுதூரமில்லை” எனும் என் இடுகையில் விரிவாகப் பகிர்ந்து கொண்டிருந்தேன். இந்த வாரப் படத் தேர்வு சில காரணங்களால் தொடராது போன சூழலில் மீண்டும் அதற்கு உயிர் கொடுக்கும் வண்ணமாக பிட் பூலில் பகிரப் படுபவற்றில் (இந்த வாரம்தான் என்றில்லாமல் நல்ல படங்கள் எவையும்) என் பார்வையில் சிறப்பானவை, கருத்தைக் கவர்ந்தவை தேர்வு செய்யப்பட்டு அதீதம் மாதமிருமுறை இணைய இதழில் இடம் பெறும். முன்னரே படத்தை எடுத்தவருக்குத் தகவல் தரப்பட்டு அனுமதியும் பெறப்படும். இதுவரை பிட் குளத்தில் நான் பிடித்தத் தங்க மீன்கள் எனது தலைப்பு மற்றும் வரிகளுடன் உங்கள் பார்வைக்கு:

அதீதம் ஜூலை II இதழில்..

1. குறையாத சந்தோஷம் (சரவணன் தண்டபாணி)


2. கரையாத கம்பீரம் (ஜேம்ஸ் வஸந்த்)


ஆகஸ்ட் I இதழில்..
அம்மா என்றால் அன்பு
1. (ஆன்டன் க்ரூஸ்)


2. (மல்லிகா-காவியம் ஃபோட்டோகிராபி)


ஆகஸ்ட் II சுதந்திர தினச் சிறப்பிதழில்..
கருவாயன் படங்கள்

தாய் மண்ணே வணக்கம்
***

நம்பிக்கை நட்சத்திரங்கள்

செப்டம்பர் I இதழில்..
சரவணன் தண்டபாணி படங்கள்
உழைப்பே வாழ்வில் ஒளியேற்றும்
***

இனிய தருணங்களின் அடையாளங்கள்
இடம் விட்டு அகன்ற பின்னும் அழியாமல்
***

செப்டம்பர் II இதழில்..

1. சுவடுகள்(ரமேஷ் கிருஷ்ணன்)அழுந்தப் பதித்து நடப்போம்
கடந்த பின்
எழுந்து நின்று பேர் சொல்லுட்டும்
நாம் விட்டுச் செல்லும் சுவடுகள்!
***

2. கரங்கள் (ஜீவா சுப்ரமணியன்)
துடிப்பான
உதவிக் கரங்களா?

அல்லது

படிப்பைத் துறந்து
உழைக்க வந்த
பிஞ்சுக் கரங்களா?
***

அக்டோபர் I ஃபோட்டோ கார்னரில் இடம்பெற்றிருக்கும் படங்களைக் காண இங்கே செல்லுங்களேன்:)! இனி வரும் பதிப்புகளிலும் என் தேர்வைக் காண வருவீர்கள் என நம்புகிறேன்:)!

தினம் தினம் படங்கள் பகிரப்பட்டு ஒருவருக்கொருவர் ஆலோசனைகள் பரிமாறி உற்சாகமாக இயங்கி வருகிறது பிட் பூல். ஃப்ளிக்கரில் இருக்கும் நண்பர்கள் அதில் இணையக் கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே இணைந்து படங்களை சேர்க்காமல் இருப்பீர்களாயின் சேர்த்து வரக் கேட்கிறேன். அதீதம் இதழ் கூடிய விரைவில் பிட் பூல் படங்களைத் தனது பக்கத்தில் Slide Show-ஆகக் காட்ட இசைந்துள்ளது. இதன் மூலமாக பிட் குடும்பத்தினரின் படங்கள் மேலும் பல பார்வையாளர்களைப் பெறுகிறது.

‘எனக்கு ஃப்ளிக்கரில் கணக்கு இல்லை, ஆனால் அதீதத்துக்கு படம் அனுப்ப ஆவல்’ என்பவர்களும் கவலைப்பட வேண்டாம். உங்கள் படங்களை articlesatheetham@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். இதே முகவரிக்கு உங்கள் கவிதை, கட்டுரை, கதைகள் மற்றும் புத்தக விமர்சனங்களை அனுப்புமாறும் அதீதம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது. படைப்புகள் இதுவரை வேறெங்கும் வெளிவராதவையாக இருக்க வேண்டுமென்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அதீதத்தில் வெளியான பிறகு உங்கள் தளங்களில் பதிந்து கொள்ளலாம்.


புகைப்படப் பிரியன்
ஃப்ளிக்கர் தளத்தின் ஒரு குறைபாடு 1GB-க்கு மேலே படங்கள் பகிர பணம் செலுத்தி நமது கணக்கை pro-account-ஆக upgrade செய்து கொள்ள வேண்டும். இதை விரும்பாத சிலர் 1 GB ஆனதும் நிறுத்தியோ அல்லது எப்போதேனும் மட்டுமோ படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். கேமராக்களில் டிஜிட்டல் புரட்சி வரவும் அதன் பயன்பாடுகள் மேலும் மேலும் சுலபமாக இன்று கேமரா இல்லாத நபரே இல்லை எனலாம். ஆர்வமாக படமாக்கி வருபவர் ஃப்ளிக்கர் தவிர்த்து படங்களைப் பகிர ஒரு தளம் இருக்கிறதா எனத் தேடக் கூடும். நீங்கள் அப்படியானவரா? உங்களுக்கு முகநூலில்(Face Book) கணக்கு உள்ளதா? கவலையை விடுங்கள். புகைப்படப் பிரியனில் இணைய விண்ணப்பம் அனுப்புங்கள்.புகைப்படக் கலைஞர் மெர்வின் ஆன்டோவினால் தமிழர்களுக்கெனப் பிரத்தியேகமாக ஆரம்பிக்கப் பட்டுள்ள Closed Group இது (இதன் admin பொறுப்பிலும் உள்ளேன்). இதில் படங்களைப் பகிர கண்டிப்பாக தமிழ் தெரிந்தவராக இருக்க வேண்டும். தமிழிலே உங்கள் கருத்துப் பரிமாற்றம் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி. தமிழ் எழுத்துரு இல்லையென்றாலும் ஆங்கிலத்தில் [தங்கலீஷாமே அதற்குப் பேரு:)] தட்டச்சுவதும் வரவேற்கப் படுகிறது. தினம் ஒரு நபருக்கு ஒரு படமே பகிர அனுமதி. குறிப்பாகப் பகிரும் படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும் என்பது சொல்லாமலே புரியப் பட வேண்டிய விதி. பிட் குழுவும் சரி, புகைப்படப் பிரியனும் சரி தமிழ் நண்பர்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவது அவரவர் மனங்களிலே.

இங்கும், கிடைக்கிற ஊக்கத்தில் மகிழ்ந்து ஆரம்பித்த சிலநாட்களிலேயே ஐநூறுக்கும் மேலானோர் இணைந்து உற்சாகமாகப் படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். கமெண்ட் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.


முகநூலில் PiT

ன்றைய இணைய உலகில் தவிர்க்க முடியாத அம்சமாகி விட்ட முகநூலில், தன் சேவையை நண்பர்களிடம் விரைந்து சேர்க்க PiT Page உருவாக்கப்பட்டுள்ளது. அதை Like செய்து உறுப்பினராகிக் கொள்ளுங்கள். PiT-ல் வெளியாகும் அனைத்துப் பதிவுகளும் இங்கே உடனுக்குடன் அப்டேட் ஆகும்.

புகைப்படக் கலை பற்றி அநேகமாக A to Z விரிவாக அலசப்பட்டு விட்டன PiT-ல். இப்போதைய வாசகர்களுக்காக முக்கியமான, அத்தியாவசியமான பதிவுகள் தேடி எடுக்கப்பட்டு இந்தப் பக்கத்தில் பகிரப் பட்டு வருகிறது PiT குழும உறுப்பினரால். இதை நன்கு பயன்படுத்திப் பலனடையக் கேட்டுக் கொள்கிறேன்.


அக்டோபர் 2011 PiT போட்டி:
றிவிப்பைப் பார்த்து விட்டீர்கள்தானே? மறந்து போனவற்றை நினைவு படுத்தி, காணமல் போனவற்றைக் கண்முன் கொண்டுவர ஆயத்தமாகி விட்டீர்கள்தானே? இம்மாதப் போட்டிக்கான எனது மாதிரிப் படங்களுடன் விரைவில் வருகிறேன்:)!

22 கருத்துகள்:

 1. நல்ல சப்ஜெக்ட் தேர்ந்தெடுத்து ,சரியாக ஃபோகஸ் செய்து, புகைப்படத் துறையில் ,உங்கள் ஆர்வத்தை அழகாக டெவலப் செய்து விட்டீர்கள் .பாராட்டுகள்.இன்னும் என்லார்ஜ் ஆக வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. ரெட் ஃப்ரேம்ஸ் போட்டியில் உங்களுக்கு உயர்ந்த பரிசு நிச்சயம்.. ராமலக்ஷ்மிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. அதீதம் இதழில் ஏற்றிருக்கும் பொறுப்புக்கு இனிய நல் வாழ்த்துக்கள்... மிகுந்த மகிழ்ச்சியான செய்தியும் கூட...

  பதிலளிநீக்கு
 4. அதீதம் தகவல் மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. அக்கா.. மிகப் பெரிய உதவி.. கண்டிப்பாக எல்லோருக்கும் பயனுள்ள பகிர்வு.

  பதிலளிநீக்கு
 6. அதீதம் இதழில் பொறுப்பேற்றுள்ள‌‌தற்கும் போட்டியில் பரிசு பெறுவதற்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 7. புதிய பொறுப்புகளில் திறம்பட மிளிர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. //ரெடி ஸ்டெடி க்ளிக் கார்னர் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருப்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி//

  மிக்க மகிழ்ச்சி மேடம்.

  தாங்கள் தேர்ந்தெடுத்த படங்கள் அனைத்தும் நன்று.

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள். மேலும் சிறப்புக்கள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 10. goma said...
  //நல்ல சப்ஜெக்ட் தேர்ந்தெடுத்து ,சரியாக ஃபோகஸ் செய்து, புகைப்படத் துறையில் ,உங்கள் ஆர்வத்தை அழகாக டெவலப் செய்து விட்டீர்கள் .பாராட்டுகள்.இன்னும் என்லார்ஜ் ஆக வாழ்த்துக்கள்//

  ரசித்தேன் புகைப்பட மொழியில் தந்திருக்கும் வாழ்த்தை:)! மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 11. குமரி எஸ். நீலகண்டன் said...
  //ரெட் ஃப்ரேம்ஸ் போட்டியில் உங்களுக்கு உயர்ந்த பரிசு நிச்சயம்.. ராமலக்ஷ்மிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்//

  அறிவிப்பாகப் பகிர்ந்தேன். கலந்து கொள்ளும் யோசனை இதுவரை இருக்கவில்லை. இப்போது எண்ணம் ஏற்பட்டுள்ளது:)!

  பதிலளிநீக்கு
 12. குமரி எஸ். நீலகண்டன் said...
  //அதீதம் இதழில் ஏற்றிருக்கும் பொறுப்புக்கு இனிய நல் வாழ்த்துக்கள்... மிகுந்த மகிழ்ச்சியான செய்தியும் கூட...//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 13. ஸ்ரீராம். said...
  //அதீதம் தகவல் மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள்.//

  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 14. தமிழ் உதயம் said...
  //மகிழ்ச்சி மேடம்...வாழ்த்துகள்.//

  நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 15. சுசி said...
  //அக்கா.. மிகப் பெரிய உதவி.. கண்டிப்பாக எல்லோருக்கும் பயனுள்ள பகிர்வு.//

  பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆசையும். நன்றி சுசி:)!

  பதிலளிநீக்கு
 16. சசிகுமார் said...
  //மிக அருமை..//

  நன்றி சசிகுமார்.

  பதிலளிநீக்கு
 17. மனோ சாமிநாதன் said...
  //அதீதம் இதழில் பொறுப்பேற்றுள்ள‌‌தற்கும் போட்டியில் பரிசு பெறுவதற்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!!//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 18. த. ஜார்ஜ் said...
  //புதிய பொறுப்புகளில் திறம்பட மிளிர வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 19. அமைதி அப்பா said...
  //தாங்கள் தேர்ந்தெடுத்த படங்கள் அனைத்தும் நன்று.//

  பாராட்டு படம் எடுத்தவர்களையே சாரும். பகிர்ந்திட எனக்கொரு வாய்ப்பு. கவனித்துக் குறிப்பிட்டிருப்பதற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 20. மாதேவி said...
  //வாழ்த்துக்கள். மேலும் சிறப்புக்கள் தொடரட்டும்.//

  நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin