Saturday, September 13, 2014

தூறல் 19: ‘சக்கர வியூகம்’ வெளியீடு; ஆறடி நிலம்; அடைக்கோழி; பாயுமொளி; மழை மாலை

மிழில் புகைப்படக்கலை (PiT) தளத்தை ஆரம்பித்தவரும், எழுத்தாளரும், கவிஞரும், அதீதம் மின்னிதழின் ஆசிரியர்களில் ஒருவரும், ஜீவ்ஸ் என இணைய உலகில் அறியப்படுகிறவருமான ஐயப்பன் கிருஷ்ணனின் முதல் நூலாக வெளியாகிறது “சக்கர வியூகம்”.
சுடச் சுடப் பிரதியை வாங்கிட இங்கே செல்லலாம் :)!

அகநாழிகைப் பதிப்பக வெளியீடான இந்த சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா நாளை மறுநாள் பெங்களூரில் நடைபெற உள்ளது:
நாள் : 14.09.2014 ஞாயிறு மாலை 5.30 மணி
இடம் :
CRMIT Solutions, 6th Floor, Business Park,
Near Central Silk Board Junction,
Plot No.244, Hosur Main Road,
Bangalore.

உடன் கவிஞர் செல்வராஜ் ஜெகதீசனின் “சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை” கவிதைத் தொகுப்பும் வெளியாகிறது. இது இவரது ஐந்தாவது கவிதைத் தொகுப்பு. ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’எனும் மூன்றாவது தொகுப்புக்கு நான் எழுதிய மதிப்புரை இங்கே.
பதிப்பாளருக்கும் எழுத்தாளர்கள் இருவருக்கும் நல்வாழ்த்துகள்! வாய்ப்புக் கிடைக்கும் பெங்களுர் நண்பர்கள் கலந்து கொள்ளுங்கள்.


ழுத்தாளரும் ஒளிப்படக் கலைஞருமான திரு. இரா.குணா அமுதன் அடை மழை சிறுகதைத் தொகுப்பைக் குறித்து ஃபேஸ் புக்-கில் பகிர்ந்த குறிப்பை இங்கு சேமித்து வைக்கிறேன்:
 23 ஆகஸ்ட் 2014

“இன்று மாலை சகோதரி இராமலட்சுமி அவர்கள் எழுதிய 'அடைமழை ' என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து'அடைக்கோழி ' என்ற சிறுகதை ஒன்றினைப் படிக்க நேர்ந்தது. பத்து வரிகளுக்குள் மையக்கருவை வைத்துவிட்டு வெறும் வார்த்தைகளால் பெரும்பாலான பக்கங்களை நிரப்பிச் செல்லும் எழுத்தாளர் இவர் அல்ல என்பதை இந்த ஒரு கதையே எனக்கு உணர்த்திவிட்டது. பிறரால் அடையாளம் காணப்பட முடியாத நுண்ணிய உணர்வுகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்டு.' பணம் ' என்பது மட்டுமே மொத்த வாழ்க்கையாக மாறிவிட்ட இன்றைய சமூகத்தில் தான் வளர்த்து வரும் கோழிகளை தன் பிள்ளைகளுக்கு நிகராக நேசிக்கும் ஒரு நேற்றைய மனுஷியின் உணர்வுகள் சற்றேனும் சீந்தப்படாமல் போவதில் ஆச்சரியம் என்ன இருக்கமுடியும்? இந்த உணர்விழையை மிகச் செறிவான சிறுகதையாக்கியிருக்கிறார். ஆனால் இக் கதை ஒரு அடைக்கோழியின் வாழ்வையும் , அதற்கேற்படும் நோய்களுக்கான நாட்டுமருத்துவத்தையும் உள்வாங்கியிருப்பது மிகுந்த வியப்பினை அளிக்கிறது.

பாராட்டுக்கள் சகோதரி !

வாசிப்பினை அனுபவமாகப் பாவிக்கும் வாசகர்களுக்கு இந்தச் சிறுகதைத் தொகுப்பினை சிபாரிசு செய்கிறேன்."
*

திரு. குணா அமுதன் அவர்களுக்கு என் நன்றி.

**
“அடை மழை”
பக்கங்கள்:112 விலை: 100

தபாலில் பெற்றிட :
aganazhigai@gmail.com

சென்னை மற்றும் தமிழகமெங்கும் உள்ள முக்கிய புத்தக நிலையங்களில் கிடைக்கும் விவரங்கள்இங்கே.சென்ற வாரத்தில் மழை தூறிக் கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுது. பெங்களூர் வந்திருந்த கவிஞர் நிலா ரசிகனை இங்கிருக்கும் நண்பர்கள் கோரமங்களா ஃபோரம் மாலில் சந்தித்தோம்.
#

கவிஞர்கள்: லக்ஷ்மி சாஹம்பரி, லாவண்யா சுந்தரராஜன், நிலாரசிகன், ரா.ராஜலிங்கம் ஆகியோருடன்.
நிலா ரசிகனின் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்குமென்பது முத்துச்சரத்தைத் தொடரும் பலருக்கும் தெரிந்த ஒன்றே:). 2010_ல் அவரின் பிறந்த தினத்தன்று நான் பரிசாக வழங்கிய ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’ சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனத்தைத் தொடர்ந்து 'வெயில் தின்ற மழை', 'மீன்கள் துள்ளும் நிசி' கவிதை நூல்கள் மற்றும் '361 டிகிரி' சிற்றிதழ் ஆகியவற்றுக்கும் விமர்சனங்களைப் பகிர்ந்திருக்கிறேன் இங்கு. சமீபத்திய வெளியீடு “கடலில் வசிக்கும் பறவை”. ஏற்கனவே வாசித்து இரசித்த ஒன்று. மதிப்புரை எழுத நினைத்திருக்கும் பட்டியலில் சேர்த்து வைத்த ஒன்று. அந்தக் கவிதைத் தொகுப்புடன்...

‘கடலில் வசிக்கும் பறவை’யுடன்

முழுக்க முழுக்க கவிதைகள் குறித்த கலந்துரையாடலாக நேரம் போனது தெரியாமல் பேசியிருந்து விட்டு, முழுமையாகப் பேசி முடிக்காத மன உணர்வுடன், தொடர இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமென்கிற நம்பிக்கையோடு விடைபெற்று வீடு திரும்பினோம்.

முதன்முதலில் பத்திரிகையில் என் எழுத்துக்கள் அரங்கேறியது வாசகர் கடிதங்களாகதான். பள்ளி நாட்களில் பாலமித்ரா, ரத்ன பாலா சிறுவர் இதழ்களில் பலமுறை நான் அஞ்சல் அட்டைகளில் எழுதி அனுப்பிய கடிதங்கள் வெளியாகிப் பரவசம் தந்திருக்கின்றன:). இன்று கணினியைத் தட்டியபடி அஞ்சல் அட்டை காலம் எல்லாம் முடிந்து விட்ட ஒன்று என என் போல உங்களில் சிலரும் நினைத்திருக்கக் கூடும். ஆனால் இன்றைக்கும் இருக்கிறார்கள், அஞ்சல் அட்டையில் கருத்துகளை எழுதி, அதுவும் பத்திரிகையை வாசித்த கையோடு அனுப்புகிறவர்கள். ஆகஸ்ட் 1-15 தோழி இதழில் வெளியான எனது “ஸ்டார் தோழி” நேர்காணல் குறித்து வந்த கடிதங்கள்.
#

 # இது மின்னஞ்சலில்..

எழுதிய இருவருக்கும், அனுப்பி வைத்த ஆசிரியருக்கு நன்றி.  சேமிப்புக்காக இங்கும் :).


ஆறடி நிலம்

சென்ற ஞாயிறுடன் நிறைவுற்றது தினகரன் வசந்தம் இதழில் நான் எழுதி வந்த நான்கு வாரக் குறுந்தொடர். ஒவ்வொரு பகுதியும் குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு இருக்க வேண்டியிருந்த அவசியத்தால் முடிந்தவரை சொல்ல நினைத்ததைச் சுருக்கமாகவே சொல்லியிருக்கிறேன். தொடர் முடிந்ததும் தொலைபேசியில் நிறைய பாராட்டுகள் வந்ததாக ஆசிரியர் தெரிவித்தது மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தந்தது:). மேலும் பாராட்டிய, நிறைகுறைகளை அலசி ஆலோசனைகளுடன் வாழ்த்துகள் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. பத்திரிகையில் தவற விட்டவர்களுக்காக கூடிய விரைவில் முத்துச்சரத்தில் கோத்து விடுகிறேன் ஒவ்வொரு பாகமாக.


படத்துளி:
“பாயு மொளி நீ யெனக்கு
பார்க்கும் விழி நானுனக்கு”
பாரதி கண்ணம்மா
(மகாக்கவியின் நினைவு தினத்தையொட்டி ஃப்ளிக்கரில் பகிர்ந்த படம்)
***
17 comments:

 1. “பாயு மொளி நீ யெனக்கு பார்க்கும் விழி நானுனக்கு”

  படம் அருமை..

  ReplyDelete
 2. புத்தகம் வெளியிடும் நண்பர்களுக்கு வாழ்த்துகள். உங்கள் விர்சனப் பகிர்தல் படித்து நிலா ரசிகன் புத்தகம் ஒன்றை நானும் வாங்கி இருக்கிறேன்.

  ரசிகையின் கடிதத்துக்கும் வாழ்த்துகள். :))))

  ReplyDelete
 3. இதன் மூலம் நண்பர் ஜீவ்ஸ்-க்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள விருப்பம் ஆனால்...... !?

  ReplyDelete
 4. நீங்கள் படமெடுக்கும் போது படத்தில் உள்ளவர்களும் மிக அழகாக ஆகி விடுகிறார்கள். என்ன வித்தையோ...!

  ReplyDelete
 5. ஜீவ்ஸிற்கு வாழ்த்துகள்>..........

  ReplyDelete
 6. புத்தகம் வெளியிடும் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.....

  ReplyDelete
 7. புத்தகம் வெளியிடும் ஜீவஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் ஸ்டார் தோழி கடிதம் அருமை. பாரதிகண்ணம்மா அழகு.
  தினகரன் பத்திரிக்கையில் வந்த தொடருக்கு வரவேற்பும், பாராட்டுகளும் மேலும் உங்களை கதை எழுத வைக்கும் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  உங்கள் வலைத்தளத்தில் கதையை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

  ReplyDelete
 8. @ஸ்ரீராம்.,

  ஆம், ‘வெயில் தின்ற மழை’.

  நன்றி ஸ்ரீராம் :)!

  ReplyDelete
 9. @G.M Balasubramaniam,

  தங்களுக்கு South Bangalore சற்று தொலைவுதான். வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டேன். நன்றி GMB sir.

  ReplyDelete
 10. @தருமி,

  நன்றி. இவர் நாட்டிய நங்கை. அழகுக்குக் கேட்கணுமா? TOI நடத்திய கீராமிய விழாவில், நிகழ்வு முடிந்து வெளியில் வந்த குழுவினர் ஜொலித்துக் கொண்டிருந்தார்கள் மாலைச் சூரியனின் ஒளியில். பயன்படுத்திக் கொண்டேன். சூரியனுக்குதான் நன்றி:)!

  ReplyDelete
 11. @கோமதி அரசு,

  விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி கோமதிம்மா.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin