தொழுவோம்
நீயில்லாத இடமேயில்லை...
*** *** ***
துதிப்போம்
தேவனே என்னைப் பாருங்கள்...*** *** ***
தரிசிப்போம்
தரிசிப்போம்
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்...
*** *** ***
தியானிப்போம்
*** *** ***
தியானிப்போம்
புத்தம் சரணம் கச்சாமி...
*** *** ***
*** *** ***
பொன்னான போதனைகளைத் தந்தவருக்கு பொன்னால் ஆன சிலை
மெய்ப் பொருள் தேடி..
*** *** ***
*** *** ***
குமரிக் கடலினிலே..
விவேகத்துக்கு வழி காட்டிய விவேகானந்தா வீற்றிருந்த பாறை
தியானத்தின் மேன்மையைச் சொல்லிட
எழுந்து நிற்கும் மணி மண்டபம்
*** *** ***
1330 ஈரடிகளைத் தந்திட்ட ஐயனுக்கு 133 அடி உயரத்தில் மரியாதை
எழுந்து நிற்கும் மணி மண்டபம்
*** *** ***
1330 ஈரடிகளைத் தந்திட்ட ஐயனுக்கு 133 அடி உயரத்தில் மரியாதை
கட்டுக் கோப்பான
வாழ்க்கைக்கு
வழி சொல்லும்
ஈரடிக் குறள்தனைப்
பேணி நாம்
போற்றி வர
அதைத் தந்திட்ட
ஐயனைப்
போற்றிப் பேணிடச்
சுற்றி வரக்
கட்டமைப்பு!*** *** ***
சுற்றிப் படிக்கட்டு நீயும் வெற்றிக் கொடி கட்டு
குட்டையில் முடிந்து விடுவதில்லை வாழ்க்கை-
வெளி உலகில் எங்கெங்கும்
கொட்டிக் கிடக்கின்ற வாய்ப்புக்களைத் தேடி
எட்டியெட்டி முயற்சியுடன் ஏறிடவே
சுற்றி வரப் படிக்கட்டு- அதை
நன்கு புரிந்து நீயும்
வெற்றிக் கொடி கட்டு!
வெளி உலகில் எங்கெங்கும்
கொட்டிக் கிடக்கின்ற வாய்ப்புக்களைத் தேடி
எட்டியெட்டி முயற்சியுடன் ஏறிடவே
சுற்றி வரப் படிக்கட்டு- அதை
நன்கு புரிந்து நீயும்
வெற்றிக் கொடி கட்டு!
*** *** ***
ஓம்காரேஷ்வரா
ஓம் எனும் ஓங்கார ஒலி எழும்
இக்கோவிலின் சிறப்பென்ன அறிவீரா?
நாம் என்றும் ஒற்றுமையாய்
வாழ்ந்திட வேண்டுமென
வலியுறுத்தும் விதமாக-
இரு மதக் கட்டிடக் கலையும்
கலந்து இணைந்து எழுந்து நின்று-
இப்பதிவின் தலைப்புக்கும்
பொருத்தமாக... புறப்படுகிறது
போட்டிக்கு [கடைசி தின
நீட்டிப்பை அறிந்ததும்]!
*** *** ***
[தமிழ்மணம் அறிவித்த ‘விருதுகள் 2008’-ல் 'காட்சிப் படைப்புகள்’ பிரிவில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது இப்பதிவு.]
சூப்பர்கா....அந்த குட்டி பையனின் தியானம் ஓரு கவிதை..
பதிலளிநீக்குஅமக்களப் படுத்திட்டீங்க.
பதிலளிநீக்குபோட்டிக்கான படம், ஓ.கே.
விவேகானந்தர் பாறை அமக்களம்.
அருமை அனைத்துப் போட்டோக்களும்!!
பதிலளிநீக்குகுறிப்பாக, குட்டிப் பையனின் தியானம்!! :-)
அழகான படங்கள் அவற்றுடன் நீங்கள் அவற்றை இணைத்திருக்கும் தீம் நன்றாக உள்ளது மேடம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஏன் முஸ்லீம் படம் மட்டும் முதலில்???
பதிலளிநீக்குகோவில் மூன்றவதா???
என்ன நியாயம் இது
எல்லாப் படங்களும் பிரமாதம். பொருத்தமான வார்த்தைப் பிரயோகம். 'ஆலய மணியின்' பாடலிசை மனதுள் இன்று முழுவதும் இருக்கும்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள். ஆல் த பெஸ்ட்.
அனுஜன்யா
புதுகை.அப்துல்லா said....
பதிலளிநீக்கு//அந்த குட்டி பையனின் தியானம் ஓரு கவிதை..//
எனக்கும் அவ்வாறே தோன்றியதால்தான் பதிவில் இணைத்தேன். ரசிப்புக்கு நன்றி அப்துல்லா.
SurveySan said...
பதிலளிநீக்கு//அமக்களப் படுத்திட்டீங்க.//
இந்த இரண்டு வார்த்தை போதுமே, அதுவும் உங்களிடமிருந்து :))!
//போட்டிக்கான படம், ஓ.கே. //
ஆமாம். ஏதோ ஓ.கே என சொல்லும் அளவில்தான் இருப்பது எனக்கும் தெரிகிறது:).
ஏற்கனவே எடுத்த படங்களிலிருந்து தேர்வு செய்தவைதான் அத்தனையும்.
//விவேகானந்தர் பாறை அமக்களம்.//
எனக்கும் பிடித்த படம் அதுவே. நல்ல கோணம். ஆனால் டிஜிட்டலில் எடுத்தது அல்ல. ரோல் ஃபிலிமில் எடுத்த படத்தை ஸ்கேன் செய்த போது க்ளாரிட்டி ரொம்பக் கம்மியாகத் தோன்றியதால் புத்தரைக் கொடுக்க முடிவு செய்தேன்.
கருத்துகளுக்கு நன்றி சர்வேசன்.
சந்தனமுல்லை said...
பதிலளிநீக்கு//அருமை அனைத்துப் போட்டோக்களும்!! //
நன்றி சந்தனமுல்லை.
//குறிப்பாக, குட்டிப் பையனின் தியானம்!! :-)//
உங்களுக்கு அது ரொம்பப் பிடித்ததில் வியப்பேயில்லை:)! பப்புவிடமும் காட்டுங்கள்.
வெண்பூ said...
பதிலளிநீக்கு//அழகான படங்கள் அவற்றுடன் நீங்கள் அவற்றை இணைத்திருக்கும் தீம் நன்றாக உள்ளது மேடம்.//
நன்றி வெண்பூ. எம்மதமும் சம்மதமாய் இருப்போம்.
//வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
வாழ்த்துகளுக்கும் நன்றி.
அரவிந்தன் நீலகண்டன் said...
பதிலளிநீக்கு//ஏன் முஸ்லீம் படம் மட்டும் முதலில்???//
புரியவில்லை, இரட்டை ஹீரோ படங்களில் யார் பெயர் டைட்டிலில் முதலில் வரணும் என்கிற மாதிரி:(?
//கோவில் மூன்றவதா???//
இங்கே முதல் மூன்றாவதெல்லாம் எதற்கு பார்க்கணும் அரவிந்தன்?
ஒருவனே குலம் ஒருவனே தேவன். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. அதை மதிப்பதுதான் மனிதம். வழி படுவோம் வழிபட வழி விடுவோம்.
//என்ன நியாயம் இது//
நம்ம வீட்டு விருந்துக்கு நண்பர்களை அழைக்கையில் அவர்கள் சாப்பிடாமல் நாம் சாப்பிட அமருவோமா? அது மரியாதையா? அப்படிப் பட்ட மரியாதையைத்தான் தந்திருக்கிறேன்.
//ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்கு//அரவிந்தன் நீலகண்டன் said...
என்ன நியாயம் இது//
நம்ம வீட்டு விருந்துக்கு நண்பர்களை அழைக்கையில் அவர்கள் சாப்பிடாமல் நாம் சாப்பிட அமருவோமா? அது மரியாதையா? அப்படிப் பட்ட மரியாதையைத்தான் தந்திருக்கிறேன்.
//
அட்டகாசமான பதில் மேடம். எனக்கு அவரது பின்னூட்டம் பார்த்த உடனே கோபம் வந்தது. உங்களின் கோபமில்லாத தெளிவான நெத்தியடி பதில் சூப்பர்.
அனுஜன்யா said...
பதிலளிநீக்கு//எல்லாப் படங்களும் பிரமாதம். பொருத்தமான வார்த்தைப் பிரயோகம்.//
பாராட்டுக்கும் ரசிப்புக்கும் நன்றி அனுஜன்யா.
//'ஆலய மணியின்' பாடலிசை மனதுள் இன்று முழுவதும் இருக்கும்.//
நமக்குப் பிடித்த பாடல் வரிகள் கண்ணில் பட்டாலோ காதில் விழுந்தாலோ அன்று முழுக்க அதே ஹம்மிங்தான். சில நேரம் எப்படி இன்று ஆரம்பமானது என்று கூட யோசிப்பதுண்டு, இல்லையா:))?
//வாழ்த்துக்கள். ஆல் த பெஸ்ட்.//
நன்றி.
வெண்பூ said...
பதிலளிநீக்கு//உங்களின் கோபமில்லாத தெளிவான நெத்தியடி பதில்//
பாருங்க நீங்களே அழகான ஒரு நெத்தியடி தத்துவத்தைச் சொல்லி விட்டீர்கள். நாமும் கோபப் பட்டால் தெளிவு கிடைக்காதுதானே:)!
சூப்பரா இருக்கு....
பதிலளிநீக்குஎல்ல போட்டேஸும் சும்மா அதிருது.
கலக்கலான படங்கள் அக்கா! நல்ல தேர்ந்த புகைப்படக்காரர்களின் கைவண்ணம் உங்களிடம் உள்ளது!
பதிலளிநீக்கு///ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்குஅரவிந்தன் நீலகண்டன் said...
//ஏன் முஸ்லீம் படம் மட்டும் முதலில்???//
புரியவில்லை, இரட்டை ஹீரோ படங்களில் யார் பெயர் டைட்டிலில் முதலில் வரணும் என்கிற மாதிரி:(?
//கோவில் மூன்றவதா???//
இங்கே முதல் மூன்றாவதெல்லாம் எதற்கு பார்க்கணும் அரவிந்தன்?
ஒருவனே குலம் ஒருவனே தேவன். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. அதை மதிப்பதுதான் மனிதம். வழி படுவோம் வழிபட வழி விடுவோம்.
//என்ன நியாயம் இது//
நம்ம வீட்டு விருந்துக்கு நண்பர்களை அழைக்கையில் அவர்கள் சாப்பிடாமல் நாம் சாப்பிட அமருவோமா? அது மரியாதையா? அப்படிப் பட்ட மரியாதையைத்தான் தந்திருக்கிறேன்.////
அழகான பதில்... அக்காவின் உணர்வுக்கு மரியாதை.. :)
குரங்கு said...
பதிலளிநீக்கு//சூப்பரா இருக்கு....
எல்ல போட்டேஸும் சும்மா அதிருது. //
முதல் வருகைக்கும் அதிரடியான பாராட்டுக்கும் நன்றி.
அழகான படங்கள். அமக்களப் படுத்திட்டீங்க அக்கா!. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎப்பவும் போல அருமையான போட்டோஸ்:)
பதிலளிநீக்குsuper collection .
பதிலளிநீக்குbest wishes from goma
அருமை ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குஎனக்கும் "மெய்ப் பொருள் தேடி" படம்தான் ரொம்ப பிடித்தது. அப்புறம் கடைசிப் படத்துக்கு உள்ள கவிதை!
//குட்டையில் முடிந்து விடுவதில்லை வாழ்க்கை-
வெளி உலகில் எங்கெங்கும்
கொட்டிக் கிடக்கின்ற வாய்ப்புக்களைத் தேடி
எட்டியெட்டி முயற்சியுடன் ஏறிடவே
சுற்றி வரப் படிக்கட்டு- அதை
நன்கு புரிந்து நீயும்
வெற்றிக் கொடி கட்டு!//
வாழ்த்துகள்!
ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்குதமிழ் பிரியன் said...
//கலக்கலான படங்கள் அக்கா! நல்ல தேர்ந்த புகைப்படக்காரர்களின் கைவண்ணம் உங்களிடம் உள்ளது! //
நன்றி தமிழ் பிரியன்.
//அழகான பதில்... அக்காவின் உணர்வுக்கு மரியாதை.. :) //
நல்லது. எல்லோரும் அடுத்தவர் உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மரியாதை தந்தே வாழ்வோம். இப்பதிவுக்கான தலைப்பே முதலில் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதாகத்தான் யோசித்து வைத்திருந்தேன்[பின்னூட்டத்தில் 'ஒருவனே குலம்' என அவசரத்தில் தட்டச்சாகியிருக்கிறது]. சமீபத்தில் துளசி மேடத்தின் மரத்தடி நினைவுகளான "சர்வ மதமும் சம்மதம்" படித்த போதுதான் "எம்மதமும் எமக்கு.." என்ற இந்த தலைப்பு 'க்ளிக்' ஆனது. அவருக்கு நன்றி. வேற்றுமைகளுக்குள் ஒற்றுமையாக வாழ்வதுதான் நம் நாட்டின் தனிச் சிறப்பாக இருந்தது. அது என்றைக்கும் தொடர வேண்டுமென்கிற ஆசையைப் பதிவாக்கி பரப்பிட முனைந்திருக்கிறேன். அவ்வளவுதான். அதற்கும் ஒரு எதிர்ப்பெனில் அந்த உணர்வுக்கும் மதிப்பளித்து விளக்கம் தந்தாயிற்று. அத்துடன் ஒதுங்கிடுவோம்.
கடையம் ஆனந்த் said...
பதிலளிநீக்கு//அழகான படங்கள். அமக்களப் படுத்திட்டீங்க அக்கா!. வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
ரசிப்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஆனந்த்.
ராமலக்ஷ்மி,
பதிலளிநீக்குஅரவிந்தன் நீலகண்டன் என்னும் பதிவரின் மதம் பற்றிய சார்பு நிலை ஓரளவு அனைவருக்கும் தெரிந்ததே. ஆயினும் அவரது வாதங்கள் பெரும்பாலும் தர்க்க ரீதியில் ஓரளவு ஆழமானதாக இருக்கும். இப்படி தட்டையாக ஒரு பின்னூட்டம் அவர் போட்டிருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. மேலும், அவர் தனது வலைப்பதிவிலிருந்து பின்னூட்டம் போடுவார் பொதுவாக. ஆதலால், என் கணிப்பில் இது வேறு யாரோ விஷமிகள் வேலையாக இருக்கலாம். ஆனால், யார் போட்டிருந்தாலும் வெட்கப்படவேண்டிய அணுகுமுறை இது. உங்கள் பதிலும், மற்றவர்களின் ஆதரவுப் பின்னூட்டங்களும் பெரிய ஆறுதல்.
அந்தக் குட்டிப் பையனைப்பற்றி நானும் சொல்ல நினைத்து, மறந்து விட்டேன். அருமையான, வசீகரிக்கும் முகம்/புகைப்படம்.
அனுஜன்யா
அனுஜன்யா said...
பதிலளிநீக்கு//இப்படி தட்டையாக ஒரு பின்னூட்டம் அவர் போட்டிருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. மேலும், அவர் தனது வலைப்பதிவிலிருந்து பின்னூட்டம் போடுவார் பொதுவாக. என் கணிப்பில் இது வேறு யாரோ விஷமிகள் வேலையாக இருக்கலாம்.//
பெயரை க்ளிக்கிட்ட போது அவரது வலைப்பூவூக்கு இட்டுச் சென்றது. வேறு யாரேனும் இப்படிச் செய்திருக்கும் பட்சத்தில் அது மிகவும் வருந்தத் தக்கதே.
//ஆனால், யார் போட்டிருந்தாலும் வெட்கப்படவேண்டிய அணுகுமுறை இது.//
உண்மைதான். கேட்டவர் யாரோ அவருக்கேதான் அளிக்கப் பட்ட பதில்களும்.
//உங்கள் பதிலும், மற்றவர்களின் ஆதரவுப் பின்னூட்டங்களும் பெரிய ஆறுதல்.//
தமிழ் பிரியன் சொன்னதும் 'திரும்பவும் தேடி வந்து' நீங்கள் வெண்பூ ஆகியோர் சொல்லிய கருத்துக்களும் எனக்கும் பெரிய ஆறுதல். மூவருக்கும் நன்றி.
//அந்தக் குட்டிப் பையனைப்பற்றி நானும் சொல்ல நினைத்து, மறந்து விட்டேன். அருமையான, வசீகரிக்கும் முகம்/புகைப்படம். //
குட்டிப் பையனிடமே இதைத் தெரியப் படுத்தி விடுகிறேன்:))!
Ramya Ramani said...
பதிலளிநீக்கு//எப்பவும் போல அருமையான போட்டோஸ்:)//
வாங்க ரம்யா. பாராட்டுக்கு நன்றி.
goma said...
பதிலளிநீக்கு//super collection .
best wishes from goma//
Happy to get a comment like this from a PiT contest Prize Winner.
Thanks a lot Goma.
///அரவிந்தன் நீலகண்டன் said...
பதிலளிநீக்குஏன் முஸ்லீம் படம் மட்டும் முதலில்???
கோவில் மூன்றவதா???
என்ன நியாயம் இது
///
இது அரவிந்தன் நீலகண்டன் பின்னூட்டமாக இல்லை. வேறு விஷமிகளின் வேலை.
உங்களுடைய பதில் சரியாக இருந்தது.
எல்லா மதமும் என் மதமே, எதுவும் எனக்கு சம்மதமே !!
கவிநயா said...
பதிலளிநீக்கு//அருமை ராமலக்ஷ்மி.
எனக்கும் "மெய்ப் பொருள் தேடி" படம்தான் ரொம்ப பிடித்தது.//
இதோ இப்போது அனுஜன்யாவும் திரும்பவும் "பதிவு தேடி" வந்து இதையே சொல்லியிருக்கிறார்!
//அப்புறம் கடைசிப் படத்துக்கு உள்ள கவிதை!//
உங்களுக்கு அது பிடிக்கும் என நானும் நினைத்தேன்.நன்றி கவிநயா வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்.
எனக்கு அந்த குட்டி பய்யன் படம் ரொம்ப பிடித்தது ..ரொம்ப இயல்பா இருக்கு..
பதிலளிநீக்குகாரணம்
பொதுவாக பசங்க தியானம் பண்ணுறேன்னு பெரியவங்கள பார்த்து இறுக்கமா கண்ணை மூடிட்டு எப்படா கண்ணை திறக்கலாம் என்று வெகுளித்தனமாக இருப்பார்கள் (தியானம் செய்ய தெரியாமல்) அது அப்படியே இந்த படத்தில் பிரதிபலித்துள்ளது.
இயல்பான படம்
கட்டமைப்பு தலைப்பில் போட்டியென்றால் கட்டுமானப் பணியில் இருக்கும் வள்ளுவர் சிலை பொருத்தமான படம்
பதிலளிநீக்குவெற்றிக் கொடி கட்டு! படமும் அருமை.உங்கள் கவிதைகளைப் பாராட்டுவது இந்த மீன் அழகாக நீந்துகிறது என்பதற்கு ஒப்பாகும்.இருந்தாலும் படமும் கவிதையும் ஒன்றாகக் க்ளிக் ஆகி வருவது பாராட்டுக்கு உரியது.
பதிலளிநீக்குபடிப்படியாய்,ஏறி வெற்றிக் கொடி கட்ட என் வாழ்த்துக்கள் .
Jeeves said...
பதிலளிநீக்கு//இது அரவிந்தன் நீலகண்டன் பின்னூட்டமாக இல்லை. வேறு விஷமிகளின் வேலை.//
நீங்கள் இத்தனை பேர் சொல்லும் போது சரியாகத்தான் இருக்கும் ஜீவ்ஸ். எனக்கு அவரது வலைப்பூவின் அறிமுகம் இல்லாததால் அவரைப் பற்றி எதுவும் தெரியாது. அவராக நினைத்து முதலில் பதில் அளிக்க நேர்ந்தமைக்கும் வருந்துகிறேன்.
//உங்களுடைய பதில் சரியாக இருந்தது.//
யார் மனமும் புண்பட்டு விடக் கூடாதென்பதில் கவனம் எடுத்து வருகிறேன். நன்றி.
//எல்லா மதமும் என் மதமே, எதுவும் எனக்கு சம்மதமே !! //
பாரத விலாஸ் படத்தில் பாடுவார்களே:))! எனக்கொரு 9 வயதிருக்கையில் வந்த படம். அப்போதே அந்த படம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது:))!
நலமா? :)
பதிலளிநீக்குமெகாப்போட்டி முதல் சுற்றில் வெற்றி பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் :)
இறுதிச்சுற்றுப் படங்களும் அருமை :); பின்னூட்ட பதில்களும் அருமை.
வெற்றிபெற வாழ்த்துகள்.
கிரி said...
பதிலளிநீக்கு//பொதுவாக பசங்க தியானம் பண்ணுறேன்னு பெரியவங்கள பார்த்து இறுக்கமா கண்ணை மூடிட்டு எப்படா கண்ணை திறக்கலாம் என்று வெகுளித்தனமாக இருப்பார்கள் (தியானம் செய்ய தெரியாமல்) அது அப்படியே இந்த படத்தில் பிரதிபலித்துள்ளது.//
ரொம்பச் சரி. எத்தனை அழகாய் அதைச் சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் சற்று உற்றுப் பாருங்களேன். திருப்தி கலந்த சின்ன சந்தோஷத்தைக் கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டு சின்சியரா போஸ் கொடுக்க முயற்சிப்பதை...
இங்கே என் பெரிய தங்கையின் pent house terrace garden அது. சமீபத்தில் விடுமுறைக்கு சின்னதங்கை வந்திருக்கையில் அவளது இளைய மகனான இவன் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருக்கையில் மற்ற பசங்க இதே போல போஸ் கொடுத்து ஃபோட்டோ செஷன் முடித்துக் கொண்டு விட்டார்களாம். நண்பகலில் நான் அங்கு போகையில் இவன் சோகமாக இருப்பதன் காரணம் கேட்டறிந்து முதல் வேலையாக அவனை அழைத்துச் சென்று எடுத்த ஃபோட்டோ. இப்போ மறுபடி உற்றுப் பாருங்கள்:))!
//எனக்கு அந்த குட்டி பய்யன் படம் ரொம்ப பிடித்தது ..ரொம்ப இயல்பா இருக்கு..//
எல்லோர் சொன்னதையும் அவனுக்குச் சொல்கிறேன். ரொம்பவே சந்தோஷப் படுவான்.
goma said...
பதிலளிநீக்கு//கட்டமைப்பு தலைப்பில் போட்டியென்றால் கட்டுமானப் பணியில் இருக்கும் வள்ளுவர் சிலை பொருத்தமான படம்//
அந்த எண்ணத்தில்தான் அதையும் சேர்த்தேன்.
எல்லப்படங்களும் நல்லா இருக்கு சகோதரி. :)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
goma said...
பதிலளிநீக்கு//உங்கள் கவிதைகளைப் பாராட்டுவது இந்த மீன் அழகாக நீந்துகிறது என்பதற்கு ஒப்பாகும்.//
உங்கள் பாராட்டுக்களே கவித்துவமாக உள்ளன.
//படிப்படியாய்,ஏறி வெற்றிக் கொடி கட்ட என் வாழ்த்துக்கள் .//
தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி கோமா.
valthukkal
பதிலளிநீக்குmanithan manithanaka valavendum
all the best
ismath dubai
www.kiliyanur-ismath.blogspot.com
Nice Work :)
பதிலளிநீக்குAll the Best !!!
Mãstän said...
பதிலளிநீக்கு//எல்லப்படங்களும் நல்லா இருக்கு சகோதரி. :)
வாழ்த்துக்கள்.//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
எத்தனை படங்கள் ராமலக்ஷ்மி. அத்தனையும் சூப்பர். அடடா பதிவே வரக்காணோமேனூ பார்த்தேன். நல்ல அழகா நிதானமாப் ப்படங்கள் எடுத்து போட்டு இருக்கீங்க.
பதிலளிநீக்குஅந்தக் குளப்படியூம், தியானச் சிறுவனும் அற்புதம்மா.
அழகு அழகு. பிரமாதம்.
மனம் நிறைந்த வாழ்த்துகள்.
வெற்றிபெற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபடங்கள் அருமை
kiliyanur ismath said...
பதிலளிநீக்கு//valthukkal
manithan manithanaka valavendum//
'மனிதன் மனிதனாக வாழ வேண்டும்'.
நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
nathas said...
பதிலளிநீக்கு//Nice Work :)//
உங்களைப் போன்ற வல்லுநர்கள் வந்து இப்படிப் பாராட்டுவதே பரிசு கிடைத்த மகிழ்ச்சியைக் கொடுத்து விட்டது:)!
//All the Best !!!//
Thanks nathas.
வரணும் வல்லிம்மா. பாராட்டுக்கு நன்றி.
பதிலளிநீக்கு//நல்ல அழகா நிதானமாப் ப்படங்கள் எடுத்து போட்டு இருக்கீங்க.//
ஆமாம்:)). எல்லாமே முன்னரே எடுத்தவைதான். நிதானமா தேடி தேர்வு செய்தேன்.
//அந்தக் குளப்படியூம், தியானச் சிறுவனும் அற்புதம்மா.//
நன்றி வாழ்த்துகளுக்கும்!
hisubash said...
பதிலளிநீக்கு//வெற்றிபெற வாழ்த்துக்கள்
படங்கள் அருமை//
வாழ்த்துக்களுக்கும் ரசித்தமைக்கும் நன்றி.
NewBee said...
பதிலளிநீக்கு//நலமா? :)//
நலமே புதுவண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் ரீங்காரம் கேட்கவே இனிமை. டூர் நன்றாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்:)).
//மெகாப்போட்டி முதல் சுற்றில் வெற்றி பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் :)//
நினைவு வைத்து வாழ்த்தியமைக்கு நன்றி நன்றி.
//இறுதிச்சுற்றுப் படங்களும் அருமை :); பின்னூட்ட பதில்களும் அருமை.
வெற்றிபெற வாழ்த்துகள்.//
ரசிப்புக்கும் வாழ்த்துக்கும் மறுபடி நன்றி.
அந்த "மாதா கோயில்" எங்குள்ளாது? அப்படியே எங்க ஊர் கோவிலின் - சில வேற்றுமைகள் தவிர்த்து - நகலாக உள்ளதே.
பதிலளிநீக்குஎங்க ஊர் கோவில் பார்க்க;
http://dharumi.blogspot.com/2005/10/82-2.html
ரா அக்கா, படங்கள் நல்லா இருக்கு.
பதிலளிநீக்குநானா இருந்தா 'சுற்றிப் படிக்கட்டு ' இதையே போட்டிக்கு கொடுத்து இருப்பேன்.
பயல் முகத்தில் ஒரு சின்ன குறும்பு! நல்லா இருக்கு. காலைல சுறுசுறுப்பா சீக்கிரம்
எழுந்திருக்க சொல்லுங்க!
கலக்கறீங்க. புத்தரை சுத்தி கலர்ஸ் அருமையா வந்திருக்கு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
டெம்ப்ளேட் கொஞ்சம் படுத்துது போல? மாத்திப்பாருங்க
உங்களுடைய படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரிப்படம் உங்களை நான் ரொம்ப நல்லவங்கனு நான் சொல்றேன் வெற்றி பெற வாழ்த்துகள்
பதிலளிநீக்குPmt.
போட்டிக்கு மாற்றலாம்னா, என்னோட பரிந்துரை விவேகானந்தர் பாறை படம்தாங்க. கொஞ்சம் வானத்தோட டோனிங் குறைச்சா அட்டகாசமா இருக்கும்.
பதிலளிநீக்குகுறும்பான குட்டிபையனும் புத்தரும் உயிரோட்டமான புகைப்படம்
ஆஹா! ஏன் கடேசி நாளுக்கு முன்னாடியே படம் போட மாட்றாங்கன்னு புரிஞ்சு போச்சு!
பதிலளிநீக்குஆளுக்கு ஆள் ரசனை மாறுது. இது பரவாயில்ல அது பரவாயில்லன்னு சொல்ல சொல்ல குழம்பும்.
போட்டியாளர்களே, இனிமே போட்டிக்கான ஒரே ஒரு படத்தை மட்டும் போடுங்க.
:-))
தருமி said...
பதிலளிநீக்கு//அந்த "மாதா கோயில்" எங்குள்ளாது?//
மைசூர் தேவாலயம்.
//அப்படியே எங்க ஊர் கோவிலின் - சில வேற்றுமைகள் தவிர்த்து - நகலாக உள்ளதே.//
உண்மைதான். உங்கள் பதிவில் பார்த்தேன். ஜன்னல் அமைப்புகள் தவிர்த்து அசப்பில் இப்படியேதான் இருக்கிறது.
திவா said...
பதிலளிநீக்கு//ரா அக்கா, படங்கள் நல்லா இருக்கு.//
நன்றி.
//நானா இருந்தா 'சுற்றிப் படிக்கட்டு ' இதையே போட்டிக்கு கொடுத்து இருப்பேன்.//
இப்படிச் சொன்ன நீங்களேதான்....
//ஆஹா! ஏன் கடேசி நாளுக்கு முன்னாடியே படம் போட மாட்றாங்கன்னு புரிஞ்சு போச்சு!
ஆளுக்கு ஆள் ரசனை மாறுது. இது பரவாயில்ல அது பரவாயில்லன்னு சொல்ல சொல்ல குழம்பும். //
திரும்ப வந்து இப்படியும் சொல்லி விட்டீர்களே:))! வாஸ்தவம்தான். போன PiT-பதிவிலே ரொம்பவே குழப்பமாகி விட்டது எனக்கு. ஆகையால்தான் இம்முறை எண்ணித் துணிந்த இடத்திலேயே நின்று விட்டேன். ஆனாலும் படிக்கட்டுப் படத்தை நான் flickr-ல் ஏற்றிய சில மணிகளிலேயே அதை ஒருவர் தனது favorites-ல் இணைத்துக் கொண்டது மகிழ்ச்சியைத் தந்தது. முழுமையான கோணத்தில் எடுத்திருந்தால் அதையே கொடுத்திருந்திருக்கலாம்தான். எடுத்த சமயத்தில் அப்படியெல்லாம் அக்கறைப் படவில்லை. இப்படி blog, PiT,flickr பக்கமெல்லாம் வருவேன் என நினைத்தும் பார்த்திராத நேரங்கள்:)))!
//போட்டியாளர்களே, இனிமே போட்டிக்கான ஒரே ஒரு படத்தை மட்டும் போடுங்க.:-))//
அதுசரி :))! அப்போ கைவசமிருக்கும் படங்களை எப்படி எப்போ பார்வைக்கு வைக்கிறதாம்:(( ?
திவா said...
பதிலளிநீக்கு//பயல் முகத்தில் ஒரு சின்ன குறும்பு! நல்லா இருக்கு. காலைல சுறுசுறுப்பா சீக்கிரம்
எழுந்திருக்க சொல்லுங்க! //
நல்ல சுறுசுறுப்பான மட்டுமல்ல துறுதுறுப்பான பையனும் கூடதான், திவா. இரண்டே வார விடுமுறையாக US-லிருந்து வந்திருந்தான். பாவம் Jet lag படுத்திய பாடு. அவன் அண்ணன் ஓரளவு adjust ஆகி விடுவான். இவன் இரவெல்லாம் விழித்திருந்து விட்டு [என் அம்மாவை எழுப்பி இடையிடையே lemonade வேறு குடித்துக் கொள்வான்:))] அதிகாலையில்தான் துயில ஆரம்பிப்பான்.
//உங்களைப் போன்ற வல்லுநர்கள் வந்து இப்படிப் பாராட்டுவதே பரிசு கிடைத்த மகிழ்ச்சியைக் கொடுத்து விட்டது:)!//
பதிலளிநீக்குஅவ்வ்வ்வ்... வல்லுனரா? இது நெம்ப ஓவரு :(
நானும் ஒரு அப்ரன்டீசு தாங்க :)
சுற்றிப் படி கட்டு,
பதிலளிநீக்குவெற்றிக் கொடி கட்டு,
பரிசைப் பற்றிவிடு.
சகாதேவன்
எப்படியக்கா இவ்வளவு அழகாக, படத்திற்கு மிகப் பொருத்தமாக எழுதுறீங்க?
பதிலளிநீக்குஎனக்கும் கொஞ்சம் இப்படியெல்லாம் தோணுது.. எழுத உக்காந்தா.. வார்தைகள் வராம நகைப்புக்குறியதா போயுடுது..
நீங்க நம்ம படத்துக்கும் வந்து இந்த மாதிரி அழகா கவிதை சொல்லுங்க அக்கா.. please....!
pmt said...
பதிலளிநீக்கு//உங்களுடைய படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரிப்படம் உங்களை நான் ரொம்ப நல்லவங்கனு நான் சொல்றேன் வெற்றி பெற வாழ்த்துகள்//
எல்லோரும் நல்லவரே pmt! ஏதேதோ வருத்தங்கள் சிலரை எப்படியெப்படியோ மாற்றி விடுகிறது. வாழ்க்கையை எதிர் கொண்டு எந்த சந்தர்ப்பத்திலும் மனிதத்தை இழக்காமல் இருப்போமாக! படங்களைப் பாராட்டியிருப்பதற்கும் வாழ்த்துக்களுக்கும்
மிக்க நன்றி.
Sathia said...
பதிலளிநீக்கு//போட்டிக்கு மாற்றலாம்னா, என்னோட பரிந்துரை விவேகானந்தர் பாறை படம்தாங்க. கொஞ்சம் வானத்தோட டோனிங் குறைச்சா அட்டகாசமா இருக்கும்.//
உண்மைதான். சர்வேசனும் அதைப் பாராட்டியிருக்கிறார். க்ளாரிட்டி குறைவாக இருப்பதாய் தோன்றியதால்தான் அதைத் தேர்வு செய்யவில்லை. பாராட்டுக்கு ரொம்ப நன்றி.
//குறும்பான குட்டிபையனும் புத்தரும் உயிரோட்டமான புகைப்படம்//
ஆக பலபேரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது இப்படம்:))!
nathas said
பதிலளிநீக்கு//அவ்வ்வ்வ்... வல்லுனரா? இது நெம்ப ஓவரு :(
நானும் ஒரு அப்ரன்டீசு தாங்க :) //
சரிதான்:), அட்டகாசமா படம் எடுக்கும் நீங்கெல்லாம் அப்ரன்டீசுன்னா நாங்கல்லால் எங்களை என்னான்னு சொல்லிக்கறதாம்:(?
சகாதேவன் said...
பதிலளிநீக்கு//சுற்றிப் படி கட்டு,
வெற்றிக் கொடி கட்டு,
பரிசைப் பற்றிவிடு. //
நன்றி, அருமையா ஹின்ட் கொடுத்திருக்கிறீர்கள்:))! கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் 3..2..1...குழப்பம் ஆரம்பமாகி விட்டதுங்கோ! யோசிக்கிறேன்:)!
நந்து f/o நிலா said...
பதிலளிநீக்கு//கலக்கறீங்க.//
வாங்க நந்து. எனது போன Pit பதிவிலே நீங்க பரிந்துரை செய்த வண்ணமே இங்கே முதல் படத்துக்கு பிற்தயாரிப்பு செய்திருக்கிறேன். அப்படம் வீட்டின் பால்கனியிலிருந்து எடுத்தது.
புத்தரை சுத்தி கலர்ஸ் அருமையா வந்திருக்கு.//
புத்தர் படத்தையும் பாராட்டியிருப்பது சந்தோஷம்:))! அத்துடன் நீங்களாகவே நேற்று என் flickr தளத்தைத் தேடிப் பிடித்து உங்கள் favorites-ல் இணைத்திட்டிருப்பது அதை விட சந்தோஷம்:)))!
//வாழ்த்துக்கள்.//
நன்றி.
//டெம்ப்ளேட் கொஞ்சம் படுத்துது போல? மாத்திப்பாருங்க//
பலரும் சொல்லி விட்டார்கள். மாற்றலாம் என கை வைத்தால் பெரிய குளறுபடி ஆகிறது:(. அதனால் அப்படியே விட்டு விட்டேன்:).
சூர்யா ...
பதிலளிநீக்கு//எப்படியக்கா இவ்வளவு அழகாக, படத்திற்கு மிகப் பொருத்தமாக எழுதுறீங்க?//
அந்த நேரத்தில் தோன்றுவதுதான் சூர்யா.
//எனக்கும் கொஞ்சம் இப்படியெல்லாம் தோணுது.. எழுத உக்காந்தா.. வார்தைகள் வராம நகைப்புக்குறியதா போயுடுது..//
அப்படியென நீங்களாகவே நினைத்துக் கொண்டால் எப்படி? அழகாப் படம் எடுக்கிற உங்களால் முயற்சித்தால் அருமையாக எழுதவும் முடியும். இந்த முறை எங்கள் ஊர் [நமது ஊர்??] நெல்லயப்பர் கோவில் ஆயிரம்கால் மண்டபம், அற்புதமா எடுத்திருக்கிறீர்கள். நெல்லையப்பர் பரிசைப் பெற்றுத் தந்திடுவார். வாழ்த்துக்கள்!
எல்லப்படங்களும் நல்லா இருக்கு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
படங்கள்
பதிலளிநீக்குஓவ்வொன்றும்
அருமை
வாழ்த்துகள்
சுவனப்பிரியன் said...
பதிலளிநீக்கு//எல்லப்படங்களும் நல்லா இருக்கு
வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுவனப்பிரியன்.
திகழ்மிளிர் said...
பதிலளிநீக்கு//படங்கள்
ஓவ்வொன்றும்
அருமை
வாழ்த்துகள்//
நன்றி திகழ்மிளிர். உங்கள் profile-லில் இருக்கும் விதான் செளதா படம் கூட ரொம்ப அருமை இந்த பிட் போட்டித் தலைப்புக்குப் பொருந்தும் விதமாக..
வள்ளுவர் படம் அருமை. ஆனால் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருப்பது போல தெரிகிறது. முழுமையடைந்ததாய் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குபின்னூட்டம் பெரியசாமி.. said...
பதிலளிநீக்கு//வள்ளுவர் படம் அருமை.//
நன்றி.
//ஆனால் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருப்பது போல தெரிகிறது. முழுமையடைந்ததாய் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.//
உண்மைதான் அது ஒரு அழகு. ஆனால் சுற்றி வர இருந்த கட்டமைப்புக்காகவே இங்கே இந்த படத்தைத் தேர்வு செய்தேன்...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பெரியசாமி.
அனைத்து படங்களும் சூப்பரோ சூப்பர்! பதிவின் தலைப்பும் சும்மா நச்!
பதிலளிநீக்குஇதில் ஒன்னை தேர்ந்தெடுத்து போட்டிக்கு அனுப்ப சொல்லி என்னை கேட்டால், நான் "விவேகத்துக்கு வழி காட்டிய விவேகானந்தா வீற்றிருந்த பாறை" படத்தை தான் அனுப்பி இருப்பேன்! கோபுரத்தின் சிகப்பு கலரும், நீல மேகமும், படத்தின் பொதிவும்(composition) சூப்பர்!
Sathiya said...
பதிலளிநீக்கு//அனைத்து படங்களும் சூப்பரோ சூப்பர்! பதிவின் தலைப்பும் சும்மா நச்!//
நன்றி நன்றி. கவனித்தீர்களா. நீங்கள் எனது ஜூலை பிட் பதிவில் பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து இப்போது எல்லா
படங்களுக்கும் பார்டர் சேர்க்கிறேன்:)!
//இதில் ஒன்னை தேர்ந்தெடுத்து போட்டிக்கு அனுப்ப சொல்லி என்னை கேட்டால், நான் "விவேகத்துக்கு வழி காட்டிய விவேகானந்தா வீற்றிருந்த பாறை" படத்தை தான் அனுப்பி இருப்பேன்! கோபுரத்தின் சிகப்பு கலரும், நீல மேகமும், படத்தின் பொதிவும்(composition) சூப்பர்!//
இந்தப் படம் பலருக்கும் பிடித்துப் போனதே எனக்கான பரிசாக எடுத்துக் கொள்கிறேன். இப்போதுதான் ஓம்காரேஷ்வரரை போட்டியில் நிறுத்தி விட்டு வந்தேன். மறுபடி 'ஹி ஹி.. விவேகானந்தர் ப்ளீஸ்' என்றால் அப்புறம் என்னைப் போட்டிப் பக்கமே விட மாட்டாங்கப்பா:))!
காமென்ட்ஸே இல்லியே ன்னு வருத்தப்பட்டவங்க எல்லாம் து.கா து.கா ன்னு ஓடப்போறாங்க. :-))
பதிலளிநீக்குதிவா, படங்களின் எண்ணிக்கை அதிகமானதும் பார்வையாளர்களின் மாறுபட்ட ரசனைகளைச் சொல்லும் கருத்துக்களினாலும் இருக்கலாம். நன்றி.
பதிலளிநீக்குகடைசியாகச் சேர்த்த கடைசிப் படத்தைப் பற்றி எனது flickr தளத்தில்...
பதிலளிநீக்குNandhu F/o Nila says:
சூப்பர்.
இன்னும் கொஞ்சம் உயரமான இடம் கிடைத்து அங்கிருந்து படம் எடுத்திருந்தால் அல்லது கீழேயே க்ரில்லுக்கு மேலே வைத்து எடுத்திருந்தால் இன்னும் அட்டகாசமான படமாகியிருக்கும்.
இப்போதே எவ்வளவு முடியுமோ அவ்வளவுதூரம் தள்ளி நின்றுதான் எடுதிருப்பீங்க போல?
Nandhu F/o Nila says:
பதிலளிநீக்கு//இன்னும் கொஞ்சம் உயரமான இடம் கிடைத்து அங்கிருந்து படம் எடுத்திருந்தால்//
நான் நின்றிருந்ததுதான் உயரமான இடம். அந்த இடத்தில்தான் சுவாமியின் மூலஸ்தானம் உள்ள கட்டிடம் இருக்கிறது.
//கீழேயே க்ரில்லுக்கு மேலே வைத்து எடுத்திருந்தால்//
பாருங்க:), அப்போது அப்படி முயற்சிக்கும் யோசனை வரவில்லை.
//இப்போதே எவ்வளவு முடியுமோ அவ்வளவுதூரம் தள்ளி நின்றுதான் எடுதிருப்பீங்க போல?//
உண்மைதான். அப்போதுதானே கோவிலுடன் தண்ணீரில் தெரியும் முழு பிம்பத்தையும் கவர் செய்ய முடியும்:)!
Dear blogger,
பதிலளிநீக்குNo it is not my comment. As i am busy with many works, i am off from blogging world for quite some time. so obviously someone else is doing the mischief. I have nothing to say either about your stand or about the order of the photos. Its your freedom. I care not a paise. So please be assured that any comment that appears anywhere for the next one year will not be my comment.
s. aravindan neelakandan
s. aravindan neelakandan,
பதிலளிநீக்குவணக்கம். நானும் அதை தாமதமாகவே உணர்ந்தேன். இது தங்களது கமென்டாக இருக்க வாய்ப்பில்லை என தெளிவு படுத்தியவர்களுக்கும் என் நன்றி. அதன் பிறகு இது சம்பந்தமாகவே வந்த பல பின்னூட்டங்களை நான் மட்டுறுத்தி விட்டேன்.
அனுஜன்யாவுக்கு அளித்த பதிலில்,
//கேட்டவர் யாரோ அவருக்கேதான் அளிக்கப் பட்ட பதில்களும்.//
ஜீவ்ஸுக்கு அளிக்கப்பட்ட பதிலில்,
//எனக்கு அவரது வலைப்பூவின் அறிமுகம் இல்லாததால் அவரைப் பற்றி எதுவும் தெரியாது. அவராக நினைத்து முதலில் பதில் அளிக்க நேர்ந்தமைக்கும் வருந்துகிறேன்//
என்றும் குறிப்பிட்டிருந்ததைக் கவனியுங்கள். அது உண்மையில் வருத்தப் பட்டு கூறியதே.
மேலும் பதிவுலகம் வந்து மூன்றரை மாதங்களே ஆவதால் பல விஷயங்கள் சரியாகப் புரிய வராததும் ஒரு காரணம். தங்கள் பெயரை உபயோகித்து இடப் பட்ட அந்த பின்னூட்டத்தில் பெயரை கிளிக் செய்தால் அது உங்கள் பதிவுக்கு இட்டுச் செல்கிறதேயன்றி Profile-க்கு இட்டுச் செல்லவில்லை. இது பதிவுலக நண்பர் எனக்கு விளக்கியது. அதே போல உங்கள் பெயருக்கு அருகில் Blogger symbol வரவில்லை. இது என் மகன் கவனித்து எனக்கு விளக்கியது. இதை நான் ஏன் இத்தனை விளக்கமாகச் சொல்கிறேன் என்றால் இது போன்ற அனுபவங்கள் வேறு யாருக்கும் வரக் கூடுமாயின் அவர்கள் சுதாகரித்துக் கொண்டு விஷமத்தனமான அனானி பின்னூட்டம் என முதலிலேயே அடையாளம் கண்டு மட்டுறுத்தி விடலாம் அல்லவா?
நீங்கள் இங்கு அளித்திருக்கும் விளக்கமும் தேவையானதே. இதே போல அந்த நபர் உங்கள் பெயரை வேறெங்கும் உபயோகித்தால் பதிவர்கள் உடனே புரிந்திட உதவிடும். உங்கள் மனம் வருத்தப் பட முதலில் நான் அளிக்க நேர்ந்த பதில் காரணமாயிருக்குமானால் அதற்காக வருந்துகிறேன்.
எல்லாப்படங்களும் நல்லா இருக்கு..:) நல்ல கலெக்ஷன் அசத்துங்க..
பதிலளிநீக்குமுத்துலெட்சுமி-கயல்விழி said...
பதிலளிநீக்கு//எல்லாப்படங்களும் நல்லா இருக்கு..:) நல்ல கலெக்ஷன் அசத்துங்க.. //
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி முத்துலெட்சுமி.
ராமலக்ஷ்மி,
பதிலளிநீக்குநான் சந்தேகித்தபடியே ஒரு விஷமி இத்தகைய கீழ்த்தரமான செயல்களைச் செய்வது வருத்தம் அளிக்கிறது. படிப்புக்கும் ஒழுக்கத்துக்கும் தொடர்பில்லையோ என்று தோன்றுகிறது. ஒரு புறம் தொழில் நுட்பமும், இலகுவும், விரைவும் இணையத்தின் சௌகரியங்கள்; உங்களைப்போன்ற இல்லத்தரசிகளும், பெண்களும் தங்கள் குரலை தைரியமாய்ச் சொல்லிட ஒரு தளம் இருப்பினும், இது போன்ற விஷமிகள் உலாவுவது, எல்லோரும், குறிப்பாக பெண்கள் மிக எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா. இனி கவனத்துடன் பயணிப்பேன். இந்த சலசலப்பை எல்லாம் தாண்டி என் படம் இன்று வெளியான மெகா போட்டி முடிவில் நாலிலிருந்து பத்தாவது இடத்துக்குள் வந்திருப்பது மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. சர்வேசன் படத்துக்கான விமர்சனமாக //arumaiyana padam - i love the reflection. Person in that composition adds value to that.// எனக் குறிப்பிட்டிருப்பது கூடுதல் சந்தோஷம்:))!
பதிலளிநீக்குநேற்று CVR வெளியிட்டிருக்கும் 'மெகாபோட்டிப் படங்கள் -சில கருத்துக்கள்' பதிவில், போட்டியில் கலந்து கொண்ட இப்பதிவின் கடைசிப் படத்துக்கான கருத்தாக
பதிலளிநீக்கு//Loved it!!! Wonderful composition and great reflection.Weight very nicely spread out! Top shot//
எனக் கூறியிருக்கிறார்.
நன்றி CVR!
ஆஹா ஒரு சலசலப்பு ஏற்பட்டு, அதை அழகாக கையாண்டு, யார் மனதையும் புண்படுத்திவிடக்கூடாது என்று நல்லெண்ணத்தில், பதிவையும், படங்களையும் தாண்டி "வெற்றி கொடி கட்டுகிறது" பின்னூட்டங்களும், உங்கள் பதில்களும்.
பதிலளிநீக்குபடங்களின் கலெக்ஷன் கண்ணக் கட்டுதே. ஸ்ஸ்ஸ்ஸ்... அருமையான படங்கள் அத்தனையும். எங்களுக்கும் அந்த குறும்பு சிறுவனின் தியான போஸ் ரொம்ப பிடித்திருக்கிறது.
இந்த முறை லேட்டா வந்திருக்கிறேன், அதனால் அடுத்த போட்டியில் வெல்ல இப்பவே "அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !"
சிங்கை இந்திய பயணங்கள் முடிந்து வந்த கையோடு பதிவுகளைப் பார்த்துப் பாராட்டியிருப்பதற்கு நன்றி சதங்கா.
பதிலளிநீக்குசிறுவன் எல்லோரையும் கவர்ந்து விட்டிருக்கிறான்:)!
வாழ்த்துக்களுக்கும் நன்றி!