செவ்வாய், 1 ஜூலை, 2008

'திண்ணை நினைவுகள்'-கயல்விழி முத்துலெட்சுமிக்கு ராமலெட்சுமியின் கடிதம்

பாலபாரதி தன் 'விடுபட்டவை 05 ஜூன் 2008’ பதிவில் தமிழர்களின் அடையாளமாய் திண்ணையைக் குறிப்பிட்டு, மாறி வரும் கலாச்சாரத்தால் மறைந்து வரும் திண்ணையைப் பற்றி எழுதிடுமாறு அனைவரையும் அழைத்து தொடர் பதிவைத் தொடங்கி வைக்க, மலரும் நினைவுகளில் பலரும் திளைத்துப் பதிவிட்டிருந்தாலும் என்னை எழுதத் தூண்டியது, முதன் முதலில் நான் வாசித்த கயல்விழி முத்துலட்சுமியின் 'லட்சியக் கனவு திண்ணை வச்ச வீடு'ம், அவரைத் தூண்டிய பாலபாரதி, முரளிக் கண்ணன் ஆகியோரின் பதிவுகளும்தான். இப்பதிவை கயல்விழிக்கோர் கடிதமாகவே வரைய விரும்புகிறேன்.

அன்புள்ள கயல்விழி முத்துலெட்சுமிக்கு,
"திண்ணை வச்சு முற்றம் வச்சி .. வீட்டுக்குள்ள ஊஞ்சல் போட்டு" என்ற உங்கள் லட்சியக் கனவோடு ஆரம்பிக்கிறது உங்கள் பதிவு. இவை எல்லாமே நாங்கள் பிறந்து வளர்ந்த வீட்டில் உண்டு. அந்த வீட்டைப் பற்றிய நினைவுகள் மங்காமல் மாறாமல் இருந்தாலும், தங்கள் வர்ணனைகளும் ஏக்கங்களும் அவற்றின் அருமையை மென்மேலும் உணர வைத்தன.

[1. திண்ணை தொடங்கும் வெளிவாசல்]
கயல்விழி! எங்கள் வீடும் ரோட்டை விட உயரமான ஒரு மேடை லெவலில்தான் ஆரம்பிக்கும். வீட்டு வாசலின் இடப்புறத் திண்ணை ஒருவர் மட்டும் அமரும் படியான சாய்வுத் திண்டு கொண்டதாகும். வலப்புறத் திண்ணை சுமார் முப்பத்தைந்து அடிகளுக்கு வீட்டின் நீளத்துக்கு நீண்டு செல்லும். இப்படியாகத் தெருவில் ஐந்தாறு வீடுகள் தொடர்ந்து வாசல் விட்டு வாசல் திண்ணைகளாலேயே இணைக்கப் பட்டிருக்கும்.

என் வீட்டுக்கு விடுமுறைக்கு வரும் அத்தைமார், சித்தப்பா ஊருக்குச் செல்ல ஸ்டேஷனுக்குக் கிளம்புகையில் கார் ரோடிலே செல்ல நாங்கள் காரின் வேகத்துக்கு 'டாட்டா டாட்டா' என்றபடி இந்த தொடர் திண்ணை மேல் ஓடி கடைசி வீட்டுத் திண்ணை விளிம்பில் சடன் ப்ரேக் போட்டு (கார் அல்ல,நாங்கள்) நிற்போம். 'இனி அடுத்த விடுமுறையில்தானா பார்ப்போம்' என ஏக்கத்துடன் நிற்கும் எங்களைப் பார்த்து தெருமுனையில் கார் திரும்பும் வரை அவர்களும் அதே ஆதங்கத்துடன் கை அசைத்தபடியே செல்வார்கள்.

வாசலின் இரு புறமும் உள்ள சுவற்றில் தெரிகிற மாடப் பிறைகளில் கார்த்திகை மாத மாலைப் பொழுதுகளில் அகல் விளக்கேற்றி வைத்திருப்போம்.

திருவிழா சமயங்களில் அற்புதமாய் அலங்கரிக்கப் பட்ட சப்பரங்கள்(சாமி உலா) நடுநிசி தாண்டி மேளதாளத்துடன் வரும். தெருமுனையில் மேளச் சத்தம் கேட்கும் போதே துள்ளி எழுந்து முகத்தைக் கழுவிக் கொண்டு வாசலுக்குச் சென்றால் தெருத் திண்ணைகள் யாவும் நிரம்பியிருக்கும். கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என அமர்க்களப்படும். சாமி வீடு தேடி வந்து அருள் பாலித்துச் செல்வார்.

சரி, வீட்டுக்குள் போவோமா கயல்விழி முத்துலெட்சுமி?

படியேறி வீட்டினுள் வந்தால் பெரிய முற்றம் வரும். அதுவே எங்கள் விளையாட்டுக் களமாகத் திகழ்ந்தது. பாண்டி, கண்ணாமூச்சி, தொட்டுப் பிடிச்சு, கல்லா மண்ணா, கலர் கலர் வாட் கலர், ஷட்டில் மட்டுமின்றி அண்ணன்மாருக்கு ஈடுகொடுத்து ஹாக்கி, கில்லி விளையாடுவதிலும் கில்லாடிகளாக இருந்தோம். முற்றத்திலிருந்து இன்னொரு மேடையாக நீங்கள் குறிப்பிட்டிருந்த உள்திண்ணை. அதன் பிறகு வீடு இரண்டு கட்டாகப் பிரிந்து முறையே நான்கு நான்கு கட்டுகள் கொண்டு கடைசி அறையில் மீண்டும் ஒன்றாக இணையும். அதை அடுத்து பின்திண்ணை, பிறகு பின்முற்றம். பின்முற்றத்தை ஒட்டி அடுக்களை. அதன் பிறகு ஒரு படி இறங்கினால் மாட்டுத் தொழுவம். இன்னும் ஒரு படி இறங்கினால் நான்கடி உயர ட்ரம்மில் வென்னீர் போடும் அடுப்பு, கிணற்றடி, குளியலறைகள். இவை எல்லாம் தாண்டி பின்வாசல் பின்தெருவில் திறக்கும்.

வீட்டின் இடப் புற வரிசையை தெற்கு வீடு என்றும் வலப் புற வரிசையை வடக்கு வீடு என்றும் குறிப்பிடுவார்கள். வீட்டின் வெளிவாசலுக்கு நேராக பெரிய (அகன்ற) முடுக்கும், முற்றத்திலிருந்து தெற்குவீட்டின் இடப்புறமாகச் சின்ன (சற்றே குறுகிய) முடுக்கும் வீட்டின் பின்திண்ணைக்கு இட்டுச் செல்லும்.

முற்றத்திலிருந்து இரு வீட்டு வாசலுக்கும் நேராக உள்திண்ணையில் ஏறிட இடப் புறமும் வலப் புறமும் படிக்கட்டுக்கள் உண்டு. இத்திண்ணையில் ஐந்து உயரமான வழவழத்தத் தூண்களும் இடமும் வலமும் கடைசித் தூண்கள் அரைத் தூண்களாகவும் (கீழ் வரும் படத்தில் அரைத் தூணைக் காண்க) வடிவமைக்கப் பட்டிருக்கும்.
[2. முற்றத்தில் தெற்கு வீட்டுப் படிக்கட்டில் மத்தாப்புக் கொளுத்தும் சின்ன வயது அண்ணன்மாரு..]

[3. முற்றத்தில் வடக்கு வீட்டுப் படிக்கட்டில் வரிசையாக..]மேலுள்ள படத்தில் வலப்புறம் காணப்படும் நாற்காலியில்தான் என் தாத்தா அமர்ந்து செய்தித்தாள் வாசிப்பார்கள்.

அவரைச் சந்திக்க வருபவர்கள் இடப்புறம் போடப் பட்டிருந்த நீண்ட பெஞ்சிலே காத்திருப்பர்.

[4. பெரியத்தையுடன் அந்த பெஞ்சிலே..]
'திணணை மேல் திண்ணை'யாக விளங்கிய அந்த பெஞ்சுக்கு வேறொரு உபயோகமும் இருந்தது. என் தாத்தா அலுவலகம் சென்றதும் அந்த பெஞ்சை இழுத்து ஒரு பக்கத்தை உள்திண்ணை மேலும் மறுபக்கத்தை முற்றத்திலுமாய் இறக்கி வைத்து சறுக்கு மரம் விளையாடுவோம். மதிய சாப்பாட்டுக்குத் தாத்தா வரும் முன்னர் அது பழைய இடத்துக்குத் திரும்பி விடும். எங்கள் குறும்பு விளையாட்டுக்கள் எதையும் தாத்தா கண்டிப்பதில்லை என்றாலும் கூட அப்படி ஒரு மரியாதையை மனதிலே வளர்த்து விட்டிருந்தார்கள் அம்மாவும் சின்னபெரியம்மாவும்.

சறுக்கு மரம் பற்றிச் சொல்லியாயிற்று. அடுத்து வழுக்கு மரம். என் அண்ணன்மார் இருவருக்கும் அந்த வழுவழுத்தத் தூண்களின் மேல் உச்சி வரைத் தவ்வி தவ்வி ஏறி 'சர்'ரென வழுக்குவது பிடித்தமான விளையாட்டு. சிறுமியரான எங்களுக்கோ வியப்புத் தாங்காது. முயற்சி செய்துதான் பார்ப்போமே என முயன்றால் முதுகில்தான் விழும்..

[5. என் சித்தப்பாவின் தலை தீபாவளிப் படத்தில் தூண்களின் முழுத் தோற்றம்..]
முரளிக் கண்ணன் தனது பதிவிலே பொங்கல், தீபாவளி சமயங்களிலே திண்ணையோடான வசந்த காலங்களை நினைவு கூர்ந்திருந்தார். பொங்கலுக்கு முன் தினம் முற்றத்தை அடைக்குமாறு அக்கா சுண்ணாம்புக் கோலமிடும் அழகை உள்திண்ணையில் கூடி நின்று ரசிப்போம். மறுநாள் காலை அம்மா, பெரியம்மா முற்றத்தில் பொங்கலிட உள்திண்ணையிலே காலாட்டியபடி கரும்பு சாப்பிடுவோம்.

உள்திண்ணையின் வலது ஓரத்தில் நாலுக்கு நாலு சதுர அடியில் 'சிறுவீடு' என்ற கட்டுமானம் நிரந்தரமாக இருக்கும். ஒரு பெரிய ஹால், சாப்பாட்டு அறை, அடுப்பங்கரை ஆகியவை அடங்கிய ஒரு வீட்டின் லே-அவுட்டுக்கான வரைபடம் போலிருக்கும். இன்னும் விளக்கமாய் சொல்வதானால் வரைபடக் கோடு என்பது மூன்றங்குல உயரம் இரண்டங்குல அகலத்திலான ஒரு கட்டுமானமாக இருக்கும். பொங்கலன்றோ மறுநாளோ வீட்டுச் சிறுமியர் அதில் பொங்கலிட வேண்டுமென்பது ஐதீகம். பொங்கலுக்கு முதல் நாள் சிறுவீட்டிலும் காவி அடித்து எங்கள் கை வண்ணத்திலேயே கோலமுமிட வைப்பார்கள். சின்ன சைஸ் காவி அடித்த அடுப்புக் கட்டிகள் பிரத்தியேகமாகத் தயாரிக்கப் பட்டு வரும். ஆனால் எங்கள் சின்னஞ்சிறு கைகளைப் பொங்கலிட வைத்துச் சிரமப் படுத்த வேண்டாமென அடுப்பில் சிறு பானையேற்றி பால் காய்ச்சி வெல்லம் சேர்க்க வைப்பார்கள்.
[6. சிறுவீட்டுப் பொங்கலிட்டக் களிப்பில் சிறுமியர் நாங்கள்..]

பொங்கலன்று பெரிய பெரியப்பா, சித்தப்பா மற்றும் உறவினரெல்லா...ம் குடும்பத்துடன் வந்திருப்பாக.. வாம்மா மின்னல்.. எனக் கூப்பிடும் முன் நாங்கள் காய்ச்சிய பாலை டம்ளர்களில் ஊற்றி ட்ரேயில் வைத்து எங்கள் கையால் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். அந்த வயதில் படபடக்கும் நீளப் பட்டுப் பாவாடை தடுக்கிடாமல் பால் அலும்பிடாமல் கவனமாக ட்ரேயை எடுத்துச் செல்வதே ஒரு சவலாக இருக்கும். வழக்கமாக பொங்கலன்று வீட்டுக்கு வாழ்த்த, வாழ்த்துப் பெற வருபவர்களுக்கு மட்டுமின்றி எங்களுக்கும் வீட்டுப் பெரியவர்கள் ஒரு சிறுதொகை பொங்கப்படியாக தருவது வழக்கம். சிறுவீட்டுப் பொங்கப்படி என சிறுமியருக்கு கூடுதலாய் கிடைக்கும் வரும்படி அண்ணன்மார் காதில் புகை கிளப்பும்.

தீபாவளி அன்று, பெரிய பெரியப்பாவின் பிள்ளைகளும் வந்திருக்க அண்ணன்மார் எண்ணிக்கை கூடி விடும். அண்ணன்மார் கூட்டணி முற்றத்தில் அட்டகாசமாய் வெடிவெடிக்க தங்கையர் கூட்டணியோ காதுகளைக் கையால் பொத்திய படி, பாதுகாப்பாய் உள்திண்ணையிலே நின்று கண்டு களிக்கும்.
[7. மகிழ்ச்சி பொங்க மத்தாப்பு பத்திரமாய் திண்ணை மேல் நின்று..]

கயல்விழி! உங்கள் பதிவில் காட்டியிருந்தாற் போன்ற அகன்ற ஊஞ்சல் எம் வீட்டில் கிடையாது. ஆனால் முப்பதடிக்கு அகன்ற அந்த உள்திண்ணையின் நடுவில், நீள வாக்கில் வீசி வீசி ஆடும் வகையில், ஒருவர் மட்டுமே அமர்ந்து ஆடுகிற படியான ஊஞ்சல் உத்திரத்திலே கட்டி வைக்கப் பட்டிருக்கும். படையப்பா படத்தில் நீலாம்பரியைப் பார்க்க வரும் படையப்பா உட்கார நாற்காலி தரப் படாது போகையில் ஸ்டைலாக துண்டால் இறக்கி விடுவாரே, அது போலத் தேவைப் படும் போது இறக்கி விடப் படும். இறக்கி விடப் பெரியவர்கள் அருகில் இல்லையெனில், பாசத்தங்கையர் இட்ட ஏவலை ஏற்று முடிக்க அண்ணன்மாரே விடுவிடுவென தூணில் ஏறி ஊஞ்சலை கீழிறக்கி விட்டு உல்லாசமாய் வழுக்கியபடி வந்து தரை சேருவர். பிரதி உபகாரமாய் முதலாட்டம் அவர்களுக்கே. ரெண்டாவது எம்பில் காலால் உத்திரத்தைத் தொட்டுத் திரும்புவர். அதை போல செய்ய முயன்று நாங்கள் 'தொபகடீர்' ஆன அனுபவங்களும் உண்டு.

[8. உள்திண்ணை தூணில் சாய்ந்து முற்றத்தைப் பார்த்தபடி இளம் பிராயத்தில் என் தந்தை]
மேலுள்ள படமானது வடக்கு வீட்டின் பாட்டாலை(பாடசாலை)யின் உள்ளிருந்து எடுக்கப் பட்டது. கனமான செட்டிநாட்டு வகைக் கதவும், கூடவே காற்றோட்டத்துக்கான அளிக்கதவும் தெரிகிறது பாருங்கள். அந்தக் கனத்தக் கதவில் குறுக்கு வாக்கிலே 'அடியில் நடுவில் மேலே' என மூன்று மூன்று குமிழ்களுடன் கடைசல் வேலைப்பாட்டுடனான மரச் சட்டங்கள் இருக்கும். [படத்தில் தெரிவது நடுச் சட்டம்]. நாங்கள் கீழ் சட்டத்தில் ஒரு கால் வைத்து ஏறி நடுப்பகுதியைப் பற்றிக் கொண்டு மறு கால் வைத்துத் தரையைத் தள்ளினால் முன்னும் பின்னுமாகப் போவோமே.. அரை வட்டமடிக்கும் ராட்டினம்(மெர்ரி கோ ரவுன்ட்) போல. இப்படியாகக் குழந்தைகள் கூடி வாழ்ந்து, குதூகலத்துக்கும் குறைவில்லாத அந்த நாளில் சிறுவர் பூங்காக்களுக்கும் அம்யூஸ்மெண்ட் பூங்காக்களுக்குமான தேவை கூட இருக்கவில்லை.

வழவழப்பான தூண்கள், ஊஞ்சல் வரிசையில் 'சிகப்பு' சிமென்ட் தரையைப் பற்றி சிலாகித்திருந்தீர்கள், இல்லையா கயல்விழி? எம் வீட்டின் பின் முற்றத்தை ஒட்டிய உள்திண்ணை வழுவழுப்பான 'பச்சை' நிற சிமென்ட் தரையால் ஆனது. இந்தப் பின்திண்ணையை 'சிமெண்ட் தரை' என்றேதான் அழைப்போம். இங்கும் ஒரு ஒற்றை ஊஞ்சல் உண்டு.

கோடை காலத்தில் வற்றலுக்கு கூழ் காய்ச்சுவது (எனது கூழ்ச் சறுக்கு பதிவில் குறிப்பிட்டிருப்பேன்) பின் முற்றத்தில்தான். அண்டாவில் காய்ச்சப் படும் கூழின் மேல் படரும் சுவையான கூழாடைக்காக சின்னக் கிண்ணங்களுடன் வரிசையாக பின் திண்ணையில் அமர்ந்திருப்போம். பின் முற்றத்தில்தான் பலகாரம் செய்ய வருபவர்களுக்கும் ஸ்பெஷல் அடுப்பு அமைத்துத் தரப் படும். வல்லநாட்டம்மா என அவர் ஊர் பெயரால் அழைக்கப்பட்ட பெண்மணி முறுக்கு சுற்றுவதில் வல்லவர். எண்ணெய் காய்ந்ததும் முதல் சுற்றில் சுட்டெடுத்துத் தரும் 'வெந்தும் வேகாத' முறுக்குக்காகக் கையில் தட்டுடன், அவர்கள் விறுவிறுவென நேர்த்தியாக முறுக்கு சுற்றும் அழகை வியந்தபடி இப் பின் திண்ணையிலே காத்திருப்போம்.


[9. பெரியம்மாவும் அம்மாவும் 'பின்திண்ணை'யில்..ஒரு பொங்கல் நன்னாளில்..]

பின் முற்றம் வழியே எட்டிப் பார்க்கும் முழு நிலாவைக் கண்டதும் யாருக்காவது எட்டிப் பார்த்து விடும் நிலாச் சோற்று ஆசை. மேல் தட்டட்டியில் (மொட்டை மாடியில்) என ப்ளான் பண்ணாத சமயமாயிருக்கும். சரின்னு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஃபாஸ்டா ரெடியாகி விடும் இந்த நிலாச்சோறு. பின்(அறை)கட்டு மின் விளக்குகளை அணைத்து விட்டு நிலாக் காயும் சிமென்ட் தரையிலே பெரியம்மாவோ, அம்மாவோ ஒரே சட்டியில் சோற்றைப் பிசைந்து உருட்டிப் போட வட்டமாக அமர்ந்து கவளம் கவளமாக வாங்கி உள்ளே தள்ளுவோம். கோடை கால இரவுகளில் குளிர்ச்சிகாக சுவையான நீத்தண்ணியை (நீருஞ்சோறும்) சின்ன வெங்காயத்தை அவ்வப்போது கடித்தபடி ஒரு உறிஞ்சு உறிஞ்சுவோம். வீட்டின் பின்புற ரோடு தாண்டி இருந்த பிள்ளையார் கோவிலின் பரந்து விரிந்த அரச மரமும், பக்கத்து வீட்டு வேப்ப மரமும் பின் முற்றத்தில் எட்டிப் பார்க்கும். நிலவொளியில் அவை அசைந்தாடுகையில் அதிலுறங்கும் பறவைகள் கூடத் தெரியும்.

எல்லாவற்றையும் சொன்ன நான் மணமேடை எனும் 'மணவட'யைப் பற்றிச் சொல்லா விட்டால் மனசு ஆறாது. முன் முற்றத்தில் அமைந்திருந்த இந்த மணவடயிலேதான் வீட்டின் முதல் திருமணங்கள் (பெரியப்பாமார்,பெரியத்தை ஆகியோரது) நடந்தனவாம். மற்ற சமயங்களில் இது நாங்கள் அமர்ந்து விளையாடும் ஒரு "சதுரத் திண்ணை"யாக பல சந்தோஷத் தருணங்களின் சாட்சியாக இருந்தது.
[10. இப்படி ஒரு சமர்த்தாய் சண்டையேதுமின்றி இன்டோர் கேம்ஸ்..கண்ணே பட்டுடும் போலில்லே..]
சிறுவர்கள் நாங்கள் இப்படிச் சமர்த்தாய் அமர்ந்து விளையாடப் பயன்பட்ட அது பெரியவர்களுக்கும் கேரம், சைனீஸ்சக்கர்ஸ்,தாயம் போன்ற பல ஆட்டங்களை விளையாடும் தளமாக இருந்தது. பார்வையாளர்கள் நாலா பக்கமும் சூழ்ந்திருந்து ரசிக்க, உற்சாகப் படுத்த வசதியான அமைப்பாகவும் அது விளங்கியது. அப்படி விளையாட்டுக்கள் அமர்க்களப்பட்ட போது நடந்த ஒரு சின்ன சம்பவத்தை விவரிக்க ஆசைப் படுகிறேன், அதுவும் ஒரு தலைமுறை முன்னே போய். என் ஆச்சி (அப்பாவின் தாயார்-அவரது பெயரைத்தான் எனக்கு வைத்திருக்கிறார்கள் 'ராமலக்ஷ்மி' என) தனது குழந்தைகளுடனும், தனது மைத்துனரின் குழந்தைகளுடனும் ஒரு சமயம் தாயக் கட்டம் ஆடிக் கொண்டிருந்தார்களாம். அப்போது பதின்மத்தின் தொடக்கத்திலிருந்த என் அப்பா, தனது முறை வந்தும் கவனியாது இருக்க, ஆச்சி அவரது தோளில் தட்டி 'ஆடு ஆடு' என்றார்களாம். உடனே என் அப்பா 'சட்'டென எழுந்து ஒரு ஆட்டம் (நாட்டியம்) ஆடி அமர, அந்த இடத்தில் எழும்பிய சிரிப்பலை அடங்க வெகு நேரமாயிற்றாம்.

விளையாட்டுத் தளமாக மட்டுமின்றி இம்மேடை எங்களுக்கு முக்கியமான புகைப்படக் களமாகவும் விளங்கி வந்தது. பல்வேறு காலக் கட்டங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில் இதனைக் களமாகக் கொண்டு எடுத்த க்ரூப் ஃபோட்டோக்கள் கணக்கிலடங்கா. மேடையில் அமர்ந்து ஒருவரிசை, ஏறி நின்று ஒரு வரிசை,முன்னால் சேர் போட்டு ஒரு வரிசை, தரையில் அமர்ந்து ஒரு வரிசை என கிட்டத் தட்ட 20,25 பேர் அடங்கும் படியான படங்கள் பலவும் இதில் அடங்கும்.
[10. ஒரு பிறந்த தினத்தன்று..]
மேலுள்ள படத்தில், மேடையின் பின் பக்கம் ஒரு எட்டடி தள்ளி வரும் சுவற்றில் எங்களுக்கென்றே எம் தந்தை ஆர்டர் செய்து வாங்கி மாட்டியிருந்த கரும்பலகையைப் பாருங்கள். அப்படியே மறுபக்கம் அபவ் டர்ன் செய்து மாணாக்கர் உட்கார வகுப்பறை ஆகிவிடும் அவ்விடம். பெரும்பாலும் நான்தான் டீச்சர்.


[11. 'சதுரத் திண்ணை'யாக நான் பார்க்கும் 'மணவட' மேலே அக்காவின் கோல மரியாதை..]
இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். எழுத எடுக்கும் நேரத்தை விட அந்த நினைவுகளிலிருந்து விடுபட்டு வர பிடிக்கின்ற நேரம் அதிகமாகி விடுகிறது.

பிறந்த ஊரை விட்டுப் பெருநகரங்களில் அடுக்குமாடிக் கட்டிடங்களில் குடியிருப்போர் பலருக்கும், பால்கனிகள்தான் முற்றத்துக்கும், திண்ணைக்கும் ஓரளவுக்கு மாற்றாக விளங்குவதாய் நான் நினைக்கிறேன். எவ்வாறெனில், வெளி உலகை வாசிக்க உதவிய வெளித் திண்ணை போல உலகைக் பார்க்கவும், மக்களைப் படிக்கவும் பால்கனிகள் உதவுகின்றன. அது போல, முற்றத்திலிருந்து அன்று நாம் ரசித்த முழு நிலாவையும், மின்னும் நட்சத்திரங்களையும், விரிந்த வானையும், மேகக் கூட்டங்களையும் நம் கண்ணுக்கு அவை காட்டுவதோடின்றி மனதுக்கு இதமான மழைச் சாரலையும் நம் கைக்குக் கொண்டு வருகின்றன. ஆகக் கைக்கு கிடைத்தவற்றில் திருப்தி பட்டு வாய்க்கு எட்டாதவற்றிற்காக வருத்தப் படாமல் வாழ்க்கையை வாழத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். வேறு வழி?

சற்றே நீண்ட கடிதமாகி விட்டதற்கும், தங்கள் திண்ணை பதிவின் பின்னூட்டதில் நானாகவே வந்து வாக்குக் கொடுத்து வாரங்கள் மூன்று ஓடி விட்ட தாமதத்திற்காகவும் மன்னியுங்கள் கயல்விழி முத்துலெட்சுமி.

இப்படிக்கு,
ராமலக்ஷ்மி.

பி.கு:திண்ணை என்றதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நினைவுகள் கனவுகள். தான் படைத்த திண்ணையிலே நாம் படைக்கும் திண்ணைகளுக்காக இடம் அமைத்துக் காத்திருக்கிறார் பாலபாரதி. யார் யாருக்கு விருப்பமோ, இந்தச் சங்கலியைத் தொடந்து அதை பாலபாரதியின் திண்ணையிலே பதிந்தும் வைக்குமாறு விண்ணப்பித்து முடிக்கின்றேன்.
***


  • தமிழ்மணம் அறிவித்த ‘விருதுகள் 2008’-ல் 'கலாச்சாரம்’ பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது இப்பதிவு.


நன்றி விகடன்!



136 கருத்துகள்:

  1. அற்புதம்!!ராமலஷ்மி!! அற்புதம்!!
    இது ஒரு தொடரா? நானும் எங்கள் திண்ணை வச்ச வீடு பற்றி எழுதலாமா?

    பதிலளிநீக்கு
  2. நல்லாருக்கு ரசித்து படித்தேன் ராமலெட்சுமி

    படங்கள் அருமை

    பதிலளிநீக்கு
  3. பதிவே போடலைனு கேட்டேன் ..அதுக்கு இப்படி ஒரு தாறுமாறா பதிவு போட்டு கலக்கிட்டீங்க...இருங்க துண்டு போட்டுட்டு போறேன்.

    திரும்ப வந்து விரிவா பதில் போடுறேன் :-))

    பதிலளிநீக்கு
  4. அக்கா! படத்தோடு பெரிதாக சூப்பரா இருக்கு திண்ணை நினைவுகள். கயலக்கா முழுவதும் படிப்பார்கள் என்று நம்புகிறேன்... ;))

    பதிலளிநீக்கு
  5. அன்பின் ராமலக்ஷ்மி,

    அருமையான நடையில் 'திண்னை'யுடனான உங்கள் பால்யத்தை விவரித்திருக்கிறீர்கள்.
    நடப்பின் காலத்தை மறந்து படங்களைப் பார்த்து ரசித்தவாறே உங்களுடனேயே பயணித்தேன்.
    இது போன்ற வீடுகள் 'விசு'வின் சினிமாக்கள்,அனுராதா ரமணன்,வாசந்தி போன்றோரின் எழுத்துக்கள் மூலமே எனக்கு அதிகளவில் பரிச்சயம்.

    இப்பொழுது வந்தாலும் அந்த வீட்டைப் பார்க்கலாம் தானே..?

    கரும்பலகைக்கு முன்னால் உள்ள சிறுமிகளில் நீள்கூந்தல் நீங்களென நினைக்கிறேன்.

    வருடங்கள் பல கடந்தும் புகைப்படங்களைப் பாதுகாத்து வைத்திருப்பது பாராட்டுக்குரியது சகோதரி..

    பாராட்டுக்கள் உங்கள் எழுத்துக்களுக்கும்,நினைவுகளுக்கும் கூடத்தான் !

    பதிலளிநீக்கு
  6. அன்பு ராம லெட்சுமிக்கு

    கடிதம் கண்டேன். நினைவுகளின் கூட பயணித்ததால் இந்தபதிவெழுத தாமதமாகி இருக்கும் என்று புரிந்து கொண்டேன்.. பழய புகைப்படங்கள் தான் முதலில் மனதை கொள்ளை கொள்கிறது .. எல்லாரிடமும் அந்தகாலத்தில் இருக்கும் ஒரு அடக்கமான அழகு மிளிர்கிறது.. உங்கள் வீடு மிக அழகு.. அதும் பச்சை தரையா ம்..குறித்துக்கொள்கிறேன்.. நீங்கள் திண்ணை திண்ணையாக ஓடி வழியனுப்பும் காட்சி மனக்கன்ணில் ஓடியது.. மணவடை .. ஆச்சி பதங்கள் ...நீங்களும் திருநெல்வேலிக்காரரோ..
    உங்கள் பெரியத்தையைப் பார்த்தால் அப்படியே என் ஆச்சியைப்போலவே இருக்காங்க.. :)
    நன்றி
    கயல்விழி முத்துலெட்சுமி

    பதிலளிநீக்கு
  7. யப்பா, ஒரு கருப்பு வெள்ளை காவியமே படைத்து விட்டீர்கள் லேடி பாரதி ராஜா. :))


    நெல்லையில் திண்ணைகள் உள்ள வீடுகள் அதிகம் இல்லையா?

    பி.கு: முத்தக்காவுக்கு ஒரு பாட்டில் ஜெலுசில் பார்சல். :p

    பதிலளிநீக்கு
  8. திண்ணை நினைவுகள்,பெருமை பொங்க சொல்லும் இளம்வயது கால அனுபவங்கள் அதுவும் வித்தியாசமாய் மடலில் மலர்ந்திருக்கிறது சூப்பர்!

    என்னை பொறாமையடைய செய்தது புகைப்படங்கள்தான்! எத்தனை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள் சொத்துக்களாய்....!

    வாழ்த்துக்களுடன்...!

    பதிலளிநீக்கு
  9. மெதுவா முழுதும் படித்து, கருத்துக்களைப் பகிர்கிறேன். மேலாக படம் பார்த்தாலே தெரியுது, கொஞ்சம் ஆழமான பதிவு தான் என்று :)))

    பதிலளிநீக்கு
  10. என்னங்க்கா இம்மாம் பெரிய பதிவா போட்டுடீங்க.. மெதுவாத்தேன் எல்லாம் படிக்கனும்.
    ஆனா படங்களெல்லாம் கவிதைங்க..இதெல்லாம் பொக்கிஷங்கள்..
    முழுதும் படிச்ச பின்னாடி நல்லா விளாவாரியா எழுதறேன்..

    பதிலளிநீக்கு
  11. நானானி said...
    //இது ஒரு தொடரா?//

    ஆமாம் நானானி, பாலபாரதி ஆரம்பித்து வைத்த சங்கலித் தொடர்.

    //நானும் எங்கள் திண்ணை வச்ச வீடு பற்றி எழுதலாமா?//

    பேஷா..பேஷா..நீங்க எழுதினா ரொம்ப நன்னாயிருக்கும் நானானி!

    பதிலளிநீக்கு
  12. அதிஷா said...
    //நல்லாருக்கு ரசித்து படித்தேன்//

    ரசித்துப் பாராட்டியமைக்கு நன்றி அதிஷா!

    பதிலளிநீக்கு
  13. கிரி said...
    //அதுக்கு இப்படி ஒரு தாறுமாறா பதிவு போட்டு கலக்கிட்டீங்க...இருங்க துண்டு போட்டுட்டு போறேன்.
    திரும்ப வந்து விரிவா பதில் போடுறேன் :-))//

    சரி கிரி, துண்டை பத்திரமா பாத்துக்கறேன். ஆன பதில் ஏறுமாறா இருக்காதுதானே:))?

    பதிலளிநீக்கு
  14. எண்ண அலைகள், திண்ணையில் வந்து வந்து ,அடித்து ஒரு இனிய சுனாமியாக்கி விட்டது.இது போல் அடிக்கடி அடிக்கட்டும் ஆனந்த சுனாமி

    பதிலளிநீக்கு
  15. சின்னச் சின்னத் திண்ணைகள் ‍
    சிங்கார நினைவுகள் = அக்காலச்
    சரித்திரம் சொல்லும்
    செப்பு ஓலைச் சுவடிகள்.

    சின்னச் சின்னத் திண்ணையிலே
    வண்ண வண்ணக் கோலங்கள்
    எத்தனையோ தலைமுறைகள்
    அத்தனையும் அது அறியும்.

    அப்பாவின் சாதனைகள்
    அண்ணன்மாரின் சாகசங்கள்
    அன்புடனே அம்மா தந்த
    அந்த ஒரு முத்தமுமே
    அத்திண்ணை அறியாதில்லை.

    என் அத்தை மடி மெத்தையாக‌
    என் அண்ணன் ஆசானாக
    என் அருகில் இருந்ததும் இத்
    திண்ணை தந்த சுகம் தானே !

    கருப்பு வெள்ளை போட்டோக்கள்
    காண இயலா காட்சிகள்
    கரும்பனைய நிகழ்ச்சிகள் காட்டும்
    கரும்பலகை திண்ணை தானே.

    வாடி நீ போவாதே . வாடாமல்லி நீ மகராசி.
    நாடாளுமரசன் உனை
    நாடி வருவான் என
    நாடி சோசிய கிழவி
    நல்வார்த்தை நாலு சொன்னதும்
    இங்கேதான், இத்திண்ணையில்தான்.


    வருடங்கள் ஓடிவிடும் = நாம் நடந்த‌
    தடங்களங்கே தங்கிவிடும்
    சிறியோரும் பெரியோரானார்.
    சின்னத்திண்ணை சிரித்தே நிற்கும்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    பி.கு: கல்கியின் தொடர்கதை ஒன்றைப்படிப்பது போன்று இருந்தது.
    ரசித்துப் படிக்கவேண்டிய கதை அல்ல. நிஜம்.

    பதிலளிநீக்கு
  16. தமிழ் பிரியன் said...
    //படத்தோடு பெரிதாக சூப்பரா இருக்கு திண்ணை நினைவுகள்.//

    முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தமிழ் பிரியன்.

    //கயலக்கா முழுவதும் படிப்பார்கள் என்று நம்புகிறேன்... ;))//

    அப்ப உங்களுக்கு பொறுமையில்ல..:))! பரவாயில்லை. சற்றே நீண்ட கடிதமாகி விட்டது என கயல்விழியிடம் கடிதத்திலேயே கூறியிருக்கிறேன். இது போன்ற நினைவுகளைச் சுருக்கமாகச் சொன்னால் நிறைவாக இருக்காதே தமிழ் பிரியன்!

    பதிலளிநீக்கு
  17. கயல்விழி, நான் எழுதிய கடிதத்துக்கு பதில் மடலாக தங்கள் மறுமொழி மலர்ந்திருப்பது மகிழ்ச்சியூட்டுகிறது.

    //நினைவுகளின் கூட பயணித்ததால் இந்தபதிவெழுத தாமதமாகி இருக்கும் என்று புரிந்து கொண்டேன்..//

    புரிதலுக்கு மிகவும் நன்றி.

    //மணவடை .. ஆச்சி பதங்கள் ...நீங்களும் திருநெல்வேலிக்காரரோ.. //

    திருநெல்வேலியேதான்!

    //உங்கள் பெரியத்தையைப் பார்த்தால் அப்படியே என் ஆச்சியைப்போலவே இருக்காங்க.. :)//

    சந்தோஷம் கயல்விழி. அவர்களும் இப்போது ஒரு 'அன்பான ஆச்சி' ஆகி விட்டார்கள். அவர்கள் பேத்தியின் சிரிப்பில் அச்சு அசல் அப்படியே என்னைப் பார்ப்பதாகக் கூறுவது எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  18. ambi said...
    //யப்பா, ஒரு கருப்பு வெள்ளை காவியமே படைத்து விட்டீர்கள்// //லேடி பாரதி ராஜா. :))//

    கருப்பு வெள்ளைதான் காலத்துக்கும் அழியாத காவியம் படைக்கும் என என்னைப் போலவே உங்களுக்கும் தோன்றியதில் மகிழ்ச்சி அம்பி!

    //லேடி பாரதி ராஜா. :))//

    பாராட்டுதானே, அப்ப சரி:) !

    //நெல்லையில் திண்ணைகள் உள்ள வீடுகள் அதிகம் இல்லையா?//

    ஆமாமாம். ஆரம்பமே தொடர்திண்ணைகளைப் பற்றித்தானே..!

    //பி.கு: முத்தக்காவுக்கு ஒரு பாட்டில் ஜெலுசில் பார்சல். :p//

    குறித்துக் கொள்ள 'பச்சை சிமென்ட் தரை' எனக் கிடைத்த பாயின்டில் ஜெலுசில் எல்லாம் தேவையிருக்காது. இல்லையா கயல்விழி?

    பதிலளிநீக்கு
  19. ஆயில்யன் said...
    //என்னை பொறாமையடைய செய்தது புகைப்படங்கள்தான்! எத்தனை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள் சொத்துக்களாய்....!//

    ஆமாம் ஆயில்யன். உன்னிடமிருந்தால்தான் பத்திரமாக இருக்கும், நாங்களும் வேண்டும் போது பார்த்துக் கொள்ளலாம் என யாரும் பங்குக்குக் கூட வராத சொத்துக்கள்! ஆகவே பொக்கிஷமாய் பாதுகாக்கிறேன். ரிஷானுக்கு அளித்த பதிலையும் பாருங்கள்.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  20. சதங்கா (Sathanga) said...
    //மெதுவா முழுதும் படித்து, கருத்துக்களைப் பகிர்கிறேன்.//

    அவசரமில்லை சதங்கா, அப்படியே ஆகட்டும். அவசரமாக எழுதிக் கொண்டிருக்கிறேன் பதில்களை , ஏனெனில் பதிவோடு பின்னூட்டங்களையும் ரசிப்பவராயிற்றே நீங்கள்!

    பதிலளிநீக்கு
  21. சூர்யா said...
    //என்னங்க்கா இம்மாம் பெரிய பதிவா போட்டுடீங்க..//

    இதெல்லாம் சின்னதா போட்டா சிறப்பா வராதே!

    //ஆனா படங்களெல்லாம் கவிதைங்க..//

    நன்றி!

    //இதெல்லாம் பொக்கிஷங்கள்..//

    அப்படித்தான் நினைத்துப் பாதுகாக்கிறேன் படங்களோடு நினைவுகளையும்.

    பதிலளிநீக்கு
  22. goma said...
    //எண்ண அலைகள், திண்ணையில் வந்து வந்து ,அடித்து ஒரு இனிய சுனாமியாக்கி விட்டது.இது போல் அடிக்கடி அடிக்கட்டும் ஆனந்த சுனாமி//

    சுனாமியா..? ஆனா 'இனிய' என்று சொல்லி 'ஆனந்த'த்துக்குள்ளாக்கி விட்டீர்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  23. இன்னைக்கு முழுதும் உட்கார்ந்தாலும்
    திண்ணையிலிருந்து பதில் வருமா
    தெரியலையே ! இல்லை
    ராமனுக்கும் இலக்குமிக்கும்
    இந்த குசேலன் தங்கி இருக்கும்
    தஞ்சைக்கு வழி தெரியலையோ ?

    லாரி ஸ்ட்றைக் என்னு சொல்றாக !
    ஒருவேளை வர வழிலே
    பெட்ரோல் இல்லாம
    பொட்டுனு நின்னு போச்சோ !

    கரென்ட் வேற நின்னு போச்சு !
    களைப்பு மிகுதி ஆகிப்போச்சு !
    தின்ன ரண்டு முறுக்கு கொண்டா = நான்
    திண்ணையிலே உட்காந்துகீனேன்.

    சுப்பு
    தஞ்சை.



    y

    பதிலளிநீக்கு
  24. அருமையான உருக்கமான பாடலால் என் உள்ளத்தைத் தொட்டு விட்டீர்கள் ஐயா!

    கயல்விழி, ஆயில்யன் ஆகியோரது திண்ணைப் பதிவுகளில் மறுமொழியாய் தாங்கள் இட்ட பாடல்களால் கவரப் பட்டு உங்களை திண்ணை பதிவிடுமாறு கோரிக்கை வைக்க, நீங்கள் அழைப்பு அனுப்பியிருந்தீர்கள் இவ்வாறாக,

    //நீங்க கேட்டிருந்தபடி ஒரு பதிவு "திண்ணை" பத்தி போடலாமான்னு
    யோசிச்சப்போ ஒரு ஹாட் டாபிக் இங்கே டிஸ்கஸ் ஆவுது.

    விண்ணை நோக்கி எழும் ஆவேச விவாதம் எல்லாம்
    திண்ணையில் நடப்பது தான் சரின்னு நினைச்சு

    ஒன்றுக்கு இரண்டாக திண்ணை போட்டிருக்கேன்.

    எல்லாரும் வந்து உட்கார்ந்து டிஸ்கஸ் செய்ய அதே சமயம்
    கொஞ்சம் ம்யூசிக்கும் கேட்டுக்கலாம்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://movieraghas.blogspot.com
    http://vazhvuneri.blogspot.com //

    நானும் தங்கள் அழைப்பை ஏற்று http://movieraghas.blogspot.com/2008/06/sruthi-bedam-or-graha-bedam.html வந்து, கேட்டுக் கொண்டபடி திண்ணையிலே இளைப்பாறி எனக்குப் பிடித்த 'அந்திமழை' பாடலையும் கேட்டுச் சென்றேன்.

    இப்பதிவுக்கான விஷயங்கள் மனதிலே ரெடியாகி விட்டிருந்தாலும் ஏதேதோ காரணங்களால் பதிவு தள்ளிப் போக, (என் கதைக்கு இட்டிருந்தபடியால்) பப்ளிஷ் பண்ணாத தங்கள் கமென்ட் "எப்போது திண்ணை?" என அடிக்கடி எனக்கு நினைவூட்டிக் கொண்டேயிருந்தது என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

    //கல்கியின் தொடர்கதை ஒன்றைப்படிப்பது போன்று இருந்தது.//

    ரொம்ப ரொம்ப பெரிய வார்த்தை சொல்லிப் பாராட்டியிருக்கிறீர்கள், நன்றி சூரி ஐயா!

    பதிலளிநீக்கு
  25. sury said...
    //இன்னைக்கு முழுதும் உட்கார்ந்தாலும்
    திண்ணையிலிருந்து பதில் வருமா
    தெரியலையே !//

    அடடா! ஆயாசப்பட வைத்து விட்டேனா, ஆனால் அதிலும் ஒரு நன்மை பாருங்க, அடுத்து அழகாய் இப்படியொரு பாடல்.

    மன்னிக்கணும். வரிசையாய் ஒவ்வொருவருக்காய் பதில் இட்டு வந்தேன். தங்களுக்குச் சற்றே நீண்ட பதிலாகவே அளித்து விட்டுச் சென்று பார்த்தால் தங்கள் அடுத்த மடல்.

    // தின்ன ரண்டு முறுக்கு கொண்டா = நான்
    திண்ணையிலே உட்காந்துகீனேன்.//

    முறுக்குதானே, இருக்கு ஐயா, போனவாரம் சென்னையிலிருந்து பெங்களூரில் (அப்போ பெட்ரோல் தட்டுப்பாடெல்லாம் இல்லை. சவுகரியமா வந்து சேர்ந்தாங்க) என் வீட்டுக்கு வந்திருந்த அத்தை ஆசையுடன் கொண்டு தந்த கைமுறுக்கு கை வசமிருக்கு இதோ தந்திருக்கிறேன். @@@@. மீனாட்சிப் பாட்டிக்கும் தரவும்.

    பதிலளிநீக்கு
  26. ஆஹா ராமலஷ்மி மேடம், முதல் பாராட்டு ஆயில்யன் சொன்ன மாதிரி புகைப்படப் பொக்கிஷங்கள். இரண்டாவது அத்தனை ஞாபகம் கொண்டு இஞ்ச் பை இஞ்ச் திண்ணை பற்றின செய்திகள்.

    நான் ஒரு கதை எழுதி, அது பாதியில் இருக்கிறது (செட்டி நாட்டு வீடுகள் பற்றி), அதில நீங்கள் குறிப்பிட்ட, இந்த டாட்டா காட்டறது, திண்ணை நீண்டு அடுத்த தெரு வரை செல்வது, உள் திண்ணை, வெளித் திண்ணை, விளையாட்டு அரங்கம் பற்றி எல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். நாங்க உள் வீட்டிலேயே கிரிக்கெட் எல்லாம் விளையாடுவோம். ஹூம்ம்ம்ம், கொசுவத்தி பற்றவைத்து விட்டீர்கள் :)))

    சூரி ஐயா மெட்டுக் கட்டிப் பாட்டுப் பாடிட்டாரா, சூப்பர் தான்.

    அம்பியின் //லேடி பாரதிராஜா//வுக்கு ரிப்பீட்டேய் ....

    மறுமொழியை ரசிக்கவில்லையெனில் அடுத்த படைப்பு நல்லதாக இருக்குமா என்ன ??!!! அதான் :)))

    பதிலளிநீக்கு
  27. பொறாமை கொள்ள வைக்கும் உங்கள் உறவுப் பட்டாளங்கள் பற்றி சொல்லலை என்றால் நல்லாயிருக்காது !!!!

    பதிலளிநீக்கு
  28. எம்.ரிஷான் ஷெரீப் said...
    //இப்பொழுது வந்தாலும் அந்த வீட்டைப் பார்க்கலாம் தானே..?//

    தாரளமாக, இந்தியா வரும் போது சொல்லுங்கள். திருநெல்வேலியில் இருக்கும் அவ்வீட்டில் இப்போது எனது சின்னபெரியப்பாவும் பெரியம்மாவும் தனது மகன் குடும்பத்துடன் இருக்கிறார்கள். உங்களை அழைத்துச் சென்றால் சந்தோஷப் படுவார்கள். அண்ணன் அந்த வீட்டின் பாரம்பரிய அழகுக்குப் பங்கம் வராதபடி அதைப் புதுப்பித்திருப்பது குறிப்பிடத் தக்கது. 'தொடர்திண்ணை'களையும், முற்றத்தையும், ஏழு தூண்களும் தெரியுமாறு உள்திண்ணையின் வடிவத்தையும் காட்ட, கேட்டால் மதினி உடனே புகைப்படம் எடுத்து மெயிலில் அனுப்புவார்கள்தான். ஆனால் மலரும் நினைவுகளுக்கு கருப்பு வெள்ளை படங்கள் தரும் effect தனிதான், என்ன சொல்கிறீர்கள் ரிஷான்?

    //கரும்பலகைக்கு முன்னால் உள்ள சிறுமிகளில் நீள்கூந்தல் நீங்களென நினைக்கிறேன்.//

    100/100 :)) !

    //வருடங்கள் பல கடந்தும் புகைப்படங்களைப் பாதுகாத்து வைத்திருப்பது பாராட்டுக்குரியது சகோதரி..//

    சூர்யா சொல்லியிருப்பது போல அவை பொக்கிஷங்கள். எந்தப் பொருளையும் அதன் அருமை உணர்ந்து 'பந்தோஸ்தாய்' (பத்திரமாய்) வைத்திருக்க வேண்டும் என்பது எனக்கு என் தாத்தா அடிக்கடி வலியுறுத்துவார்கள். அதில் வந்த பழக்கம்.


    இப்போது us-ல் இருக்கும் என் சின்னத் தங்கை என் வீட்டு வரும் போதெல்லாம் வந்த ஓரிரு மணிகளில் காணாமல் போய் விடுவாள். எங்கே என்று பார்த்தால் எனது புகைப் பட அலமாரிக்குள் புகுந்து அந்த மலரும் நினைவுகளில் தன்னை மறந்து பேச்சற்றுக் கிடப்பாள்! என் வீட்டுக்கு வரும் அத்தைமார்களும் அந்த அலமாரி பிடித்தமானது!

    //பாராட்டுக்கள் உங்கள் எழுத்துக்களுக்கும்,நினைவுகளுக்கும் கூடத்தான் !//

    மிகப் பொறுமையாக பதிவைப் படித்துப் பாராட்டியமைக்கு நன்றி ரிஷான்!

    July 2, 2008 1:45 PM

    பதிலளிநீக்கு
  29. சதங்கா said...
    //நான் ஒரு கதை எழுதி, அது பாதியில் இருக்கிறது (செட்டி நாட்டு வீடுகள் பற்றி)அதில நீங்கள் குறிப்பிட்ட, இந்த டாட்டா காட்டறது, திண்ணை நீண்டு அடுத்த தெரு வரை செல்வது, உள் திண்ணை, வெளித் திண்ணை, விளையாட்டு அரங்கம் பற்றி எல்லாம் எழுதி வைத்திருக்கிறேன்.//

    ஆகா அருமை, சீக்கிரம் முடித்து அதையும் 'திண்ணை'ச் சங்கலியில் கோர்க்க முடியுமா பாருங்கள் (ரிஷானும் அதிஷாவும் கதைகளால் கோர்த்த மாதிரி).

    //நாங்க உள் வீட்டிலேயே கிரிக்கெட் எல்லாம் விளையாடுவோம்.//

    அதென்னவோ ஹாக்கி, கில்லி ஆட்டங்களில் எங்களைச் சேர்த்துக் கொள்ளும் அண்ணன்மார் கிரிக்கெட்டில் மட்டும் சேர்த்துக் கொள்வதில்லை:(! நாங்க ஆடும் உப்புக்குச் சப்பாணி ஆட்டம் அதற்கு உதவாது என்பதாலோ என்னவோ:)?

    'வழக்கம் போல்' மறுமொழிகளையும் சேர்த்து ரசித்தமைக்கு நன்றி சதங்கா!

    பதிலளிநீக்கு
  30. சதங்கா (Sathanga) said...
    //பொறாமை கொள்ள வைக்கும் உங்கள் உறவுப் பட்டாளங்கள் பற்றி சொல்லலை என்றால் நல்லாயிருக்காது !!!!//

    கூட்டுக் குடும்பமாக வாழ்வதே ஒரு குதூகலம்தான் இல்லையா சதங்கா! அத்தகைய வாய்ப்புக் கிடைக்காத என் மகனுக்காக நான் அடிக்கடி வருத்தப் படுவதுண்டு.

    பதிலளிநீக்கு
  31. ராமலஷ்மி! நல்ல பதிவு. படங்களும் அருமை. நகரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு திண்ணை வைத்த வீடு, கல்கி போன்று பழைய
    எழுத்தாளர்களின் கதையில் படித்ததுதான். ஆமாம், படங்களில் நீங்கள் இல்லையா?

    பதிலளிநீக்கு
  32. //சரி கிரி, துண்டை பத்திரமா பாத்துக்கறேன். ஆன பதில் ஏறுமாறா இருக்காதுதானே:))?//

    :-)))) No Comments

    //தீபாவளி அன்று, பெரிய பெரியப்பாவின் பிள்ளைகளும் வந்திருக்க அண்ணன்மார் எண்ணிக்கை கூடி விடும். அண்ணன்மார் கூட்டணி முற்றத்தில் அட்டகாசமாய் வெடிவெடிக்க தங்கையர் கூட்டணியோ காதுகளைக் கையால் பொத்திய படி, பாதுகாப்பாய் திண்ணையிலே நின்று கண்டு களிக்கும்//

    இதில் கிடைக்கும் ஆனந்தமே தனி சுகம் தான் :-)

    //இப்படி ஒரு சமர்த்தாய் சண்டையேதுமின்றி இன்டோர் கேம்ஸ்..கண்ணே பட்டுடும் போலில்லே//

    ஆமா சுத்தி போடுங்க :-)

    //சைனீஸ்சக்கர்ஸ்//

    அப்ப இது ரொம்ப பிரபலம் :-)

    //இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். எழுத எடுக்கும் நேரத்தை விட அந்த நினைவுகளிலிருந்து விடுபட்டு வர பிடிக்கின்ற நேரம் அதிகமாகி விடுகிறது.//

    கலக்குறீங்க

    //சற்றே நீண்ட கடிதமாகி விட்டதற்கும், தங்கள் திண்ணை பதிவின் பின்னூட்டதில் நானாகவே வந்து வாக்குக் கொடுத்து வாரங்கள் மூன்று ஓடி விட்ட தாமதத்திற்காகவும் மன்னியுங்கள் கயல்விழி முத்துலெட்சுமி.//

    கவலையே படாதீங்க... கண்டிப்பாக தவறாக நினைக்கமாட்டார்கள்..எப்படி இந்த மாதிரி பொறுமையாக எழுதினீர்கள் என்று ஆச்சர்யப்பட்டு இருப்பார்கள்.

    ராமலக்ஷ்மி இப்படி அட்டகாச பதிவு எழுதியதிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். அடுத்தாக நீங்கள் பதிந்து இருக்கும் படங்களை பற்றி கூறியே ஆக வேண்டும்..அருமையான மற்றும் இயல்பான படங்கள், கருப்பு வெள்ளை படங்களின் அழகு எப்போதுமே குறையாது என்பதிற்கு இவைகளே சாட்சி.

    நீங்கள் உங்கள் இளமை காலத்தை மிக சந்தோசமாக அனைவருடனும் மன நிறைவுடனும் கடந்து வந்துளீர்கள் என்பது உங்கள் பதிவிலேயே தெரிகிறது. கூட்டு குடும்பத்தில் கிடைக்கும் மன நிறைவிற்கு இணை எதுவுமில்லை.

    அப்புறம் இன்னொருவாட்டி சொல்லிக்கிறேன் உங்களோட அனைத்து படங்களும் கலக்கல் :-)))

    தொடர்ந்து இதை போல நல்லா பதிவுகளாக எழுத என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  33. ramachandranusha(உஷா) said...
    //ராமலஷ்மி! நல்ல பதிவு. படங்களும் அருமை. நகரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு திண்ணை வைத்த வீடு, கல்கி போன்று பழைய
    எழுத்தாளர்களின் கதையில் படித்ததுதான்.//

    அது போன்ற வீட்டில் வளர்ந்து விட்டு இன்று நகரங்களில் வாழும் போது அதன் அருமை இன்னும் அதிகமாவது போன்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை உஷா!

    ////ஆமாம், படங்களில் நீங்கள் இல்லையா?//

    நான் இல்லாமலா? முதல் படத்தில் தந்தை என்னைக் கையில் தூக்கிக் கொண்டிருக்க, மூன்றாவதில் முற்றத்துப் படியில் நான் எனது கையைத் தூக்கிக் கொண்டு...

    பெஞ்சிலே பெரியத்தையுடன்,சதுரத் திண்ணையில் சமர்த்தாய் அமர்ந்து விளையாடும் அரை வட்டத்தில் வலது ஓரத்தில், அப்புறமாய் ரிஷான் சரியாக கெஸ் பண்ணிய மாதிரி பிறந்ததினப் படத்தில் நீள் கூந்தலுடன். இப்போ அந்தக் கூந்தல் எவ்வளவு நீளம்னு கேட்காதீங்க:(. கூந்தலின் அழகும் அடர்த்தியும் அம்மா கையால் அக்கறையுடன் பேணப் பட்ட காலம் வரைதான்.

    முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  34. அருமை. சற்றேறக்குறைய இது போன்றது தான் எங்களின் கதையும். ஹ்ம்ம்ம்ம் அது ஒரு அழகிய நிலாக்காலம். இனி வருமா ?

    பதிலளிநீக்கு
  35. கிரி said...
    //எப்படி இந்த மாதிரி பொறுமையாக எழுதினீர்கள் என்று ஆச்சர்யப்பட்டு இருப்பார்கள்.//

    அதைப் பொறுமையாய் படித்து இட்டிருக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி கிரி.

    // அடுத்தாக நீங்கள் பதிந்து இருக்கும் படங்களை பற்றி கூறியே ஆக வேண்டும்..அருமையான மற்றும் இயல்பான படங்கள், கருப்பு வெள்ளை படங்களின் அழகு எப்போதுமே குறையாது என்பதிற்கு இவைகளே சாட்சி.//

    உண்மைதான் கிரி. எனது கருத்தும் அதுதான். அவற்றைப் பற்றி அம்பி, ஆயில்யன்,ரிஷான் மற்றும் உஷாவுக்கு அளித்த பதில்களில் கூறியிருக்கிறேன் கிரி. படித்து கொள்வீர்களா?

    //கூட்டு குடும்பத்தில் கிடைக்கும் மன நிறைவிற்கு இணை எதுவுமில்லை.//

    ஆமாம். ஆனால், இந்த அருமையான அமைப்பைக் காலம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறதே!

    தங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  36. அன்பு ராமலக்ஷ்மி,
    எதைச் சொல்ல எதைவிட. காவியம் படைத்துவிட்டீர்கள் அம்மா.
    அன்பு,அழகு,அருமை சின்னப் பெரியப்பா,பெரிய சித்தப்பா.

    சாமி கண்ணு பட்டுடும்மா.
    நல்லா இருக்கணும் உங்க குடும்பம்.
    கறுப்பு வெள்ளைப் படங்கள் கண்ணிலேயே நிற்கின்றன.
    கொஞ்சம் நிதானித்துக் கொண்டு மீண்டும் படிக்கப் போறேன்.
    நன்றி நன்றி நன்றி.

    பதிலளிநீக்கு
  37. முதலில் நன்றிகள்.. என் ஆசையை நிறைவேற்ற.. நினைவுகளில் மூழ்கி முத்து எடுத்தமைக்கு!

    அடுத்து, பல சம்பவங்கள் நினைவுக்கு வந்து போயின.. உள்திண்ணை போன்ற சமாச்சாரங்கள். அதுபோல//பிரதி உபகாரமாய் முதலாட்டம் அவர்களுக்கே. ரெண்டாவது எம்பில் காலால் உத்திரத்தைத் தொட்டுத் திரும்புவர். அதை போல செய்ய முயன்று நாங்கள் 'தொபகடீர்' ஆன அனுபவங்களும் உண்டு.// எனக்கும் கூட உண்டு! :)

    புகைப்படங்களைத் தேடி வலையேற்றியமைக்கு ஆயிரம் நன்றிகள். என் பால்யகாலத்திற்கு சென்று வந்தேன். பெரிய குடும்பத்தில் இருந்து வந்த நான் அந்த நினைவுகளை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன். குடும்பத்துக்கு அடக்கமான பிள்ளையாக இருந்திருந்திருக்கலாம். எல்லா உறவுகளும் கூடவே இருந்திருக்கும். :(

    சரி... விடுங்க.. ஆனாலும் அசத்தம் பொக்கிஷம் உங்கள் பதிவு.

    மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  38. அருமை! அருமை!! பல நினைவுகளைக் கிளறி விட்டுட்டீங்க :))

    பதிலளிநீக்கு
  39. அற்புதமான பதிவு...

    ஒரு வாழ்க்கையை முழுவதும் ரசித்து வாழ்ந்து முடித்த திருப்தி கிடைத்தது உங்கள் பதிவிலிருந்தும் புகைப்படங்களிலிருந்தும். அத்தனை உயிர்ப்பானதொரு கடிதமாக அமைந்துள்ளது உங்கள் பதிவு.

    வாழ்த்துக்கள் அம்மா.

    பதிலளிநீக்கு
  40. அரிய கருப்பு வெள்ளைப் படங்களையும், வண்ணம் குலையாத எண்ணங்களையும் தொகுத்து, அற்புதமாகப் பதித்திருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  41. //ஆகா அருமை, சீக்கிரம் முடித்து அதையும் 'திண்ணை'ச் சங்கலியில் கோர்க்க முடியுமா பாருங்கள் (ரிஷானும் அதிஷாவும் கதைகளால் கோர்த்த மாதிரி).//

    கதை நீண்டு கொண்டே செல்கிறது, ஒரு புதினமா ஆக்கிரலாமானு யோசிச்சிக்கிட்டு இருக்கேன். முடியலன திண்ணையாக்கிருவோம் :)))

    பதிலளிநீக்கு
  42. பேருந்து, சிற்றுந்து எல்லாம் இல்லாத காலத்தில், நடந்தே ஊருக்கு செல்பவர்கள்,இளைப்பாறவும், இரவில் படுத்து தூங்கிச் செல்லவும் எல்லா வீடுகளிலும் திண்ணை கட்டினார்கள் என்று சொல்வார்கள். இனி திண்ணை என்றால் என்ன என்றே வரும் தலைமுறைக்கு தெரியாமல் போய்விடும்.
    அது போல் கூட்டு குடும்பம் இல்லாமல் ஆகுமோ?
    உங்கள் மலரும் நினைவுகளை அருமையாக எழுதி போட்டோக்களுடன் பதிவு செய்திருக்கிறீர்கள்.
    பாராட்டுக்கள்.
    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  43. மிகவும் ரசித்தேன் ராமலக்ஷ்மி! :)

    படங்கள் அருமை. மலரும் நினைவுகளில் பாசம் பொழிகிறது. :)

    க/வெ படங்களில், அக்கால வாழ்க்கையின் வண்ணங்கள் தெரிகின்றன.

    வாழ்த்துகள்.:)

    பதிலளிநீக்கு
  44. Jeeves said...//அது ஒரு அழகிய நிலாக்காலம்.//

    அழகாய் சொல்லி விட்டீர்கள் ஜீவ்ஸ். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  45. வல்லிசிம்ஹன் said...
    //நல்லா இருக்கணும் உங்க குடும்பம்.//

    இதை விட வேறென்ன வேணும்? வல்லிம்மா வாழ்த்த வரக் காணுமேன்னு வழி மேலே விழி வைத்துத் திண்ணையிலேயே காத்திருந்தேனாக்கும்:)!

    பதிலளிநீக்கு
  46. யெஸ்.பாலபாரதி ♠ said...

    //முதலில் நன்றிகள்.. என் ஆசையை நிறைவேற்ற.. நினைவுகளில் மூழ்கி முத்து எடுத்தமைக்கு!//


    இப்படி என் முத்துச் சரத்திலே ஒரு முத்தைக் கோர்க்க வாய்ப்பு அளித்ததற்கு நான் அல்லவா தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இத் தொடர் பதிவுக்கு பிள்ளையார் சுழியிட்டுத் தொடங்கி வைத்த தாங்கள் என்ன சொல்லப் போகிறீர்களோ எனக் காத்திருந்தேன்.


    //பொக்கிஷம் உங்கள் பதிவு.// என்ற பாராட்டைப் பெற்றதிலும், தங்களையும் சில கணங்கள் உங்களது பால்ய காலத்துக்கு இட்டுச் செல்ல முடிந்தமைக்கும் மகிழ்ச்சியுறுகிறேன். நன்றிகள் பலப்பல.

    பதிலளிநீக்கு
  47. கப்பி பய said...
    //அருமை! அருமை!! பல நினைவுகளைக் கிளறி விட்டுட்டீங்க :))//

    கிளறப் பட்ட நினைவுகளும் அருமையாகத்தான் இருந்திருக்கும். இல்லையா?

    முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  48. சென்ஷி said...

    //ஒரு வாழ்க்கையை முழுவதும் ரசித்து வாழ்ந்து முடித்த திருப்தி கிடைத்தது உங்கள் பதிவிலிருந்தும் புகைப்படங்களிலிருந்தும்.//


    நன்றி சென்ஷி, பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும்.

    பதிலளிநீக்கு
  49. இன்னிப் போல என்னிக்கும் நல்லா இருக்கணும் ஒத்துமையாக.
    சரிதானா மகளே.:)

    பதிலளிநீக்கு
  50. கவிநயா said...
    //அரிய கருப்பு வெள்ளைப் படங்களையும், வண்ணம் குலையாத எண்ணங்களையும் தொகுத்து, அற்புதமாகப் பதித்திருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி. //

    படங்கள் கருப்பு வெள்ளையாய் இருந்தாலும் எண்ணங்களின் வண்ணங்கள் குலையவில்லை, மங்கவுமில்லை. அதைப் புரிந்து இட்டிருக்கும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கவிநயா.

    பதிலளிநீக்கு
  51. சதங்கா, தாங்கள் எழுதி வரும் புதினத்துக்காகத் தமிழ் மணம் காத்திருக்கிறது.

    //முடியலன திண்ணையாக்கிருவோம் :)))//

    எப்படிச் செய்தாலும் ரசிக்கும்படி செய்வீர்கள் எனத் தெரியும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  52. சகாதேவன் said...//பேருந்து, சிற்றுந்து எல்லாம் இல்லாத காலத்தில், நடந்தே ஊருக்கு செல்பவர்கள்,இளைப்பாறவும், இரவில் படுத்து தூங்கிச் செல்லவும் எல்லா வீடுகளிலும் திண்ணை கட்டினார்கள் என்று சொல்வார்கள்.//

    நீங்கள் சொல்வது சரி. அப்படித்தான் நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். வழிப் போக்கர்களுக்காகத் தண்ணீர் பானையும் வைத்திருப்பார்களாம்.

    //இனி திண்ணை என்றால் என்ன என்றே வரும் தலைமுறைக்கு தெரியாமல் போய்விடும்.
    அது போல் கூட்டு குடும்பம் இல்லாமல் ஆகுமோ? //

    இன்றைய கட்டிடக் கட்டுமான திட்டங்களில் திண்ணைக்கு இடமில்லாமல் போனது போல, கட்டுக்கோப்பான கூட்டுக் குடும்ப அமைப்புக்கும் மக்கள் மனதில் இடம் இல்லாமல் போய் விடுமோ என்ற நியாயமான ஐயத்தை எழுப்பியிருக்கிறீர்கள். பணி நிமித்தம் வேறு ஊர்களில் வாழ நேர்வது தவிர்க்க முடியாதது. எனது குடும்பத்தில் இன்றைக்கும் பெரியப்பாமார், பெரியத்தை,அம்மா,சித்தப்பா ஆகியோர் தத்தமது மகன்களுடன் இந்த அமைப்பில் வாழ்ந்து பாரம்பரியத்தைப் பாதுகாத்து வருகிறார்கள். ஏன், பெரு நகரங்களிலும் கூட பல வட இந்தியக் குடும்பங்கள் இந்த அமைப்பைக் கட்டிக் காத்து வருவதைப் பார்க்கிறேன். இது இல்லாமலே போய் விடக் கூடாது என்பது என் அவா!

    தங்களது பதிவில், பேத்திகளுடன் தாங்கள் மயில்களுக்கு தீனி போடும் சம்பவத்தைப் படித்தபோது எனக்கு என் தாத்தாவின் நினைவு வந்து விட்டது.

    பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகாதேவன்!

    பதிலளிநீக்கு
  53. newbee said..
    //க/வெ படங்களில், அக்கால வாழ்க்கையின் வண்ணங்கள் தெரிகின்றன.//

    ஆம் புதுவண்டு,அவை வானவில் வண்ணங்கள்! கவிநயாவைப் போலவே இதைத் தாங்களும் சரியாகப் புரிந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  54. வல்லிசிம்ஹன் said...
    //இன்னிப் போல என்னிக்கும் நல்லா இருக்கணும் ஒத்துமையாக.
    சரிதானா மகளே.:)//

    அம்மா சொல்லைத் தட்ட முடியுமா:)!

    பதிலளிநீக்கு
  55. //வலப்புறத் திண்ணை சுமார் முப்பத்தைந்து அடிகளுக்கு வீட்டின் நீளத்துக்கு நீண்டு செல்லும். இப்படியாகத் தெருவில் ஐந்தாறு வீடுகள் தொடர்ந்து வாசல் விட்டு வாசல் திண்ணைகளாலேயே இணைக்கப் பட்டிருக்கும்.//

    நான் வர்றதுக்குள்ளே எல்லா வீட்டுத்திண்ணைலேயும் விருந்தினர் வந்துவிட்டார்களே ! தெரு பூரா
    நிரம்பி வழியறதே !
    சதங்கா ! முத்து லக்ஷ்மி, கவி நயா, க்ருத்திகா, ராம லக்ஷ்மி, அமுதா, அதிஷா,சூர்யா, கோமா, உஷா!
    பாட்டி வயசானவ வந்திருக்கேன். உட்கார கொஞ்சம் இடம் கொடேன்.
    ராமலக்ஷ்மி அம்மா, எல்லாருக்கும் மோர், காபி எதுனாச்சியும் கொடுத்திருப்பியே ! எனக்கு
    கொஞ்சமா டீ போட்டுண்டு வாயேன். அதுவரைக்கும் இங்கே காலை நீட்டின்டு கொஞ்சம்
    வந்த களைப்பு தீர ஆசுவாசப் படுத்திக்கறேன்.
    அப்பா ! என்ன வெயில் ! என்ன வெயில் !!
    இத்தனை பெரிசு திண்ணை போட்டிருக்காங்க அதனால பொழச்சோம்.
    ஒரு திண்ணை ஞாபகம் வந்தா அந்த திண்ணைலே உட்கார்ந்த நூறு சொந்தம் ஞாபகம்
    வருதுல்ல ?

    மீனாட்சி பாட்டி.
    தஞ்சை.
    http://vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  56. ராமலஷ்மி
    அருமையா எழுதி இருக்கீங்க....ஆடம்பரமில்லாத எதார்த்த எழுத்து உங்களுது....மனசை அடைகிறது அதனாலேயே!! திண்ணைகள் எங்கள்ஸ்ரீரங்கத்தில் வீதி வீடுகளில் மிகவும் பிரபலம்! பெங்களூரில் எங்கள் காலனியில் பல வீடுகளில் திண்ணை இருக்கு(எங்க வீட்ல இல்ல)
    அங்கபோய் உட்கார்ந்து அவ்வப்போது பேசி மகிழ்கிறோம்...திண்ணைபோல ஊஞ்சல் நினைவுகளும் இருக்கும் அல்லவா?

    பதிலளிநீக்கு
  57. மீனாட்சி பாட்டி என்ன சொல்கிறார்கள் என்றால்...
    //நான் வர்றதுக்குள்ளே எல்லா வீட்டுத்திண்ணைலேயும் விருந்தினர் வந்துவிட்டார்களே ! //
    //பாட்டி வயசானவ வந்திருக்கேன். உட்கார கொஞ்சம் இடம் கொடேன்.//

    எத்தனை பேர் வந்திருந்தாலும்தான் என்ன பாட்டி, பெரியவங்க நீங்க வந்ததும் அத்தனை பேரும் எழுந்து நின்று மரியாதை செய்து உங்களை உட்கார வைக்க மாட்டோமா? நம்ம திண்ணையின் பண்பாடும் பாரம்பரியமுமே அதுதானே?

    //எனக்கு கொஞ்சமா டீ போட்டுண்டு வாயேன். //

    இதோ....ஒரு நொடியில்...சூரி அய்யாவிடம் அனுப்பி வைத்த முறுக்குகள் கிடைத்தனவா? இருவரும் வந்திருந்து என் திண்ணையை கௌரவப் படுத்தி விட்டீர்கள்.

    //இத்தனை பெரிசு திண்ணை போட்டிருக்காங்க அதனால பொழச்சோம்.
    ஒரு திண்ணை ஞாபகம் வந்தா அந்த திண்ணைலே உட்கார்ந்த நூறு சொந்தம் ஞாபகம்//

    நூற்றில் ஒரு வார்த்தை! அற்புதமாய் சொல்லியிருக்கிறீர்கள். திண்ணை மட்டுமின்றி எம் தாத்தாவுக்கு மனசும் பெரிசா இருந்ததால் நூறு சொந்தங்களும் இன்றும் அவரைப் போற்றி வாழ்கிறோம் பாட்டி.

    பதிலளிநீக்கு
  58. ///யப்பா, ஒரு கருப்பு வெள்ளை காவியமே படைத்து விட்டீர்கள் லேடி பாரதி ராஜா. :))///

    Repeattu...

    Awesome!

    பதிலளிநீக்கு
  59. //எத்தனை பேர் வந்திருந்தாலும்தான் என்ன பாட்டி, பெரியவங்க நீங்க வந்ததும் அத்தனை பேரும் எழுந்து நின்று மரியாதை செய்து உங்களை உட்கார வைக்க மாட்டோமா? நம்ம திண்ணையின் பண்பாடும் பாரம்பரியமுமே அதுதானே?//

    ரிப்பீட்டேய்! :)

    ராமலக்ஷ்மி, அப்படியே எனக்கும் ஜூடா ஒரு டீ! போட்டு வைங்க. நான் போய் இன்னும் கொஞ்சம் ஆணி பிடுங்கிட்டு வந்துர்றேன் :)

    பதிலளிநீக்கு
  60. ஆவணப் படம் பார்ப்பதுபோல் ஆவலோடு படித்தேன், அருமை. Well Documented, Indeed.

    பதிலளிநீக்கு
  61. நானும் ஊஞ்சலில் உயரேபோய் கீழே வரும் போது தரைப்பந்தை எடுக்க அண்ணன்மார்களுடன் போட்டி இட்டிருகிறேன். திண்ணையில் கரிகாக்கூடையை இறக்கி வைத்துவிட்டு பாட்டியிடம் மோர் வாங்கி ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் பெண்கள் முதல் நினைவில் வந்தார்கல் இந்த பதிவை படித்தவுடன். அருமை.

    பதிலளிநீக்கு
  62. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஷைலஜா. உங்கள் மனதைப் தொடும்படி பதிவு அமைந்ததிருப்பது மிக்க மகிழ்ச்சி.

    //பெங்களூரில் எங்கள் காலனியில் பல வீடுகளில் திண்ணை இருக்கு//

    ஆச்சரியமா இருக்கிறதே ஷைலஜா. பெங்களூர் வந்த பதினேழு வருடங்களில் திண்ணை வைத்த வீடுகள் என் கண்ணில் படவேயில்லையே. நீங்கள் எந்தப் பகுதியில் வசிக்கிறீர்கள்? திண்ணைகளைப் பார்ப்பதற்காகவாவது ஒரு விசிட் அடித்து விட வேண்டியதுதான்:))!

    //திண்ணைபோல ஊஞ்சல் நினைவுகளும் இருக்கும் அல்லவா//

    ஆம். அதைத்தான் உள்திண்ணை நிகழ்வுகளின் ஒரு பாகமாகச் சொல்லியிருக்கிறேன். அதைப் படித்து பாலபாரதி, பத்மா அர்விந்த் ஆகியோரின் நினைவுகள் கிளறப்பட்டது போல உங்களுக்கும் ஊஞ்சல் நினைவுகள் உண்டா ஷைலஜா?

    பதிலளிநீக்கு
  63. //எப்படிச் செய்தாலும் ரசிக்கும்படி செய்வீர்கள் எனத் தெரியும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!//

    ஆஹா. என்ன ஒரு நம்பிக்கை. வாழ்த்துக்களுக்கு நன்றிங்க. கண்டிப்பா நல்ல செய்திருவோம்.

    பதிலளிநீக்கு
  64. கவிநயா, நம் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் வழிமொழிவதற்காகவே மறுபடி என் திண்ணையைத் தேடி வந்த உங்களுக்கு தேநீர் சுடச் சுட ரெடியாகிறது:))!

    பதிலளிநீக்கு
  65. பத்மா அர்விந்த் said... //நானும் ஊஞ்சலில் உயரேபோய் கீழே வரும் போது தரைப்பந்தை எடுக்க அண்ணன்மார்களுடன் போட்டி இட்டிருகிறேன்.//

    ஆகா வாருங்கள் பத்மா! எங்களைப் போலத்தானா நீங்களும்? :))! நினைத்தாலே இனிக்கும் நாட்கள் அவையல்லவா?

    பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  66. ஜீவா (Jeeva Venkataraman) said...

    //ஆவணப் படம் பார்ப்பதுபோல் ஆவலோடு படித்தேன், அருமை.//

    ஆவணப்படம் அருமையாக இருந்ததன்றாலே அவார்ட் கிடைக்கும்தானே ஜீவா:)) ?
    பாராட்டுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  67. July 4, 2008 6:43 AM
    ராமலக்ஷ்மி said...
    முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஷைலஜா. உங்கள் மனதைப் தொடும்படி பதிவு அமைந்ததிருப்பது மிக்க மகிழ்ச்சி.
    ஆச்சரியமா இருக்கிறதே ஷைலஜா. பெங்களூர் வந்த பதினேழு வருடங்களில் திண்ணை வைத்த வீடுகள் என் கண்ணில் படவேயில்லையே. நீங்கள் எந்தப் பகுதியில் வசிக்கிறீர்கள்? //>>>

    பிடிஎம் ல இருக்கேன்.ஊர்ல இருக்கறாப்லரொம்ப பெருசா திண்ணை இல்ல...ஆஸ்பித்ரி பெஞ்ச் மாதிரி கல் மேடை இங்க என் தோழிகள் சிலர்வீட்ல இருக்கு.அதுலகுளிர் குறைவான நாட்களிலுட்கார்ந்து கொஞ்சம் வம்பு.காம் நடத்துவோம்:):)

    //திண்ணைகளைப் பார்ப்பதற்காகவாவது ஒரு விசிட் அடித்து விட வேண்டியதுதான்:))!//

    இல்லேன்னாலும் வாங்க ராமலஷ்மி..
    ஒரே ஊர்ல இருத்துட்டு இப்போதான் உங்கள தெரிஞ்சிக்கறேன் நான்.நீங்க எந்தப்பகுதி?

    . //அதைப் படித்து பாலபாரதி, பத்மா அர்விந்த் ஆகியோரின் நினைவுகள் கிளறப்பட்டது போல உங்களுக்கும் ஊஞ்சல் நினைவுகள் உண்டா ஷைலஜா//

    நிறைய இருக்கு ....நினைவுகளே ஊஞ்சல்தானே? கொஞ்சம் பின்னோக்கி ஊஞ்சலை வீசினால் ஊர்க்கதை சொல்லலாம்..முதல்ல திண்ணைல உட்கார்ந்துட்டு வரேன் இருங்க!!நன்றி மடலிட்டதற்கு.

    பதிலளிநீக்கு
  68. July 2, 2008 5:10 PM
    சதங்கா said...//நான் ஒரு கதை எழுதி, அது பாதியில் இருக்கிறது (செட்டி நாட்டு வீடுகள் பற்றி)//

    July 4, 2008 5:42 PM
    சதங்கா said...////கண்டிப்பா நல்ல செய்திருவோம்.//

    நல்லது சதங்கா. நல்லாவே செய்வீங்க. தெரியும். சீக்கிரமாவும் செய்யுங்க. செட்டிநாட்டு வீடுகள் பற்றியும், பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள் பற்றியும் உங்கள் வாயிலாக அறிய ஆவலாகக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  69. ( இது ஓர் கற்பனை உரையாடல். )

    காட்சி 1: இடம்: மேடம் ராம லக்ஷ்மி வீட்டுத் திண்ணை. மீனாட்சி பாட்டி திண்ணையிலே தூங்கிப்போய் விட்டாள். ( பாவம், பாட்டி, டிஸ்டர்ப் பண்ணாதீங்க‌க் கா, எழுந்திருக்கும்பொழுது எழுந்திருக்கட்டும், நம்ம பேசிட்டிருப்போம் என்று ,முடிவு செய்தார்கள் ) ஒரு எட்டு மணி நேரம் கழித்து எழுந்து பார்க்கிறாள். இன்னமும் திண்ணையிலே அத்தனை பேரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
    மேடம் ராமலக்ஷ்மிக்குத் தலை கால் புரியாமல் அவ்வளவு சந்தோஷம். கா, மி, ஷா, லி்மா,
    ஜா, மா, யா, ஷ‌ா, எல்லோருமே மலரும் திண்ணை நினைவுகளுடன் உற்சாகமாக,
    உறக்கமின்றி அளவளாவ, அவ்வப்போது ஹோஸ்ட் மேடம் ராம லக்ஷ்மி பலவிதமான இட்லி, தோசை, பூரி, என்று கொண்டுவந்து உப‌சரிக்கிறாள்.
    பல பேச்சுக் குரல்கள் கேட்கின்றன:
    யார் யார் பேசுறது என்று தெரியவில்லை. மீனாட்சி பாட்டி காது மெஷின் கொண்டு வரலை.
    உத்தேசமா இது போலக் கேட்டது.

    அடடா ! இது போல வருசத்துக்கு ஒரு தரமாச்சும் ஒரு வெகேஷன் இருந்ததுன்னா,
    எத்தனை நன்னாயிருக்கும் !

    மூணு மாசத்திற்கு ஒரு தரம் நம்ம கூடிடவேண்டி தான்.

    அடுத்த தரம் எங்க வீட்டுத் திண்ணையிலே !

    அது இவ்வளவு பெரிசா இருக்குமாடி ?

    யே... பெரிசாவா ? இத்தவிட பத்து பங்கு பெரிசாக்கும். அதுலே உக்காரவே கொடுத்து வச்சிருக்கணும்.

    அதெல்லாம் சரி, இப்பதான்டி நிம்மதியாய் இருக்கு ...
    ஏங்க அப்படி சொல்றீங்க ?
    ஒரு புடுங்கலும் இல்லை ( எல்லோரும் சிரிக்கிறார்கள் )
    வர்றோம். ஆனா இதே போல நல்ல சூடா இட்லி கிடைக்குமா சொல்.
    இட்லியைவிட கொத்சு தான்டி பெஸ்ட்.
    எப்படிடி பண்ற
    துளசி டீச்சர் சொன்னபடியே செஞ்சேனா, சரியா வருது.
    அந்த துளசி டீச்சர் தான் வல்லே

    மீனாட்சி பாட்டி: அடடா ! இந்த கிழவன் என்ன பண்றாரோ தெரியலையே ! சாப்பிட்டாரா ! ஹார்ட்
    மாத்திரை, தூக்க மாத்திரை எல்லாம் சாப்பிட்டாரா தெரியலையே !
    ராம லக்ஷ்மி ! இந்த செல் லுலே எங்க வீட்டுக்காரருக்கு ஒரு கால் போடு. நம்பரா ! அதுலேயே இருக்கும்பாரு!
    944990019929 .. போட்டீங்களா ?

    ( மீனாட்சி பாட்டி செல்லைக் கையில் எடுத்துப் பேச காதில் வைத்துக்கொள்கிறாள் )

    மற்ற எல்லோருமே கோரஸாக : நானும் கேட்கணுமே .
    ( எல்லோரும் அவரவர் ஹப்பி க்கு செல் போடுகிறார்கள் )
    எல்லோரும் : என்னது ! ஸ்விச் ஆஃப் நே சொல்லுது ! என்ன ஆச்சு இவருக்கு !
    என்னது எல்லாருடைய செல்லுமே ஸ்விச் ஆஃப்ஃபா ? என்ன ஆச்சு எல்லாருக்கும் ???? !!!
    ( ஒரு பதட்டம் நிலவுகிறது)

    மீனாட்சி பாட்டி: ( செல் போன் கான்வர்சேஷனை
    முடித்துவிட்டு அவர்களைப்பார்த்து )ஓண்ணும் ஆகலை. எல்லாரும் நல்ல படியா இருக்காங்க..கவலைப்படாதீக.
    எல்லோரும்: உங்களுக்கு எப்படி பாட்டி தெரியும் ?
    மீ. பா: எப்படி தெரியுமாவா ? எங்க வீட்டுத் திண்ணைலே தானே எல்லாரும் உட்கார்ந்து இருக்காங்க.
    எல்லோரும்: என்ன செய்யராக ...
    மீ. பா: என்ன எல்லோரும் 48 மணி நேரமா சீட்டுக் கட்டு ரம்மி ஆடிக்கினு இருக்காங்க. தஞ்சாவூர்லே
    ஒவ்வொரு திண்ணையிலேயும் இது இல்லேன்னா வேற என்ன ?
    எல்லோரும் : அப்படியா .. நாங்க சீக்கிறம் போவணும்.
    மீ.பா : வைட். வைட். ' எங்களை இன்னும் ஒரு இரண்டு நாளைக்கு டிஸ்டர்ப் பண்ணாதீங்க' ன்னு
    எல்லோரும் அவங்கவங்க ரெஸ்பெக்டிவ்வுக்கு சொல்லசொல்றாங்களாம், எங்க வீட்டுக் கிழம்
    சொல்லுது.
    எல்லோரும் : அது சரி, விட்டா போச்சு. இப்பவே கிளம்பி ஒரு கை பாத்துடணும்.
    (அவசர அவசரமாக கிளம்புகிறார்கள். )
    மீ.பா: நானும் கிளம்பறேன். வந்தவங்களுக்கெல்லாம் மஞ்சள், குங்குவம், ஒரு ரவிக்கைத் துண்டு
    வெச்சுக்குடு. எல்லோரும் எல்லாம் பெற்று சீரும் சிறப்புமா வாழணும். அந்த சமயபுரம் மாரியாத்தா உங்களை எல்லாரையும் அமோகமா காப்பாத்துவா.
    ரா. ல: எல்லோரும் அந்த அம்மன் மேல ஒரு பாட்டு பாடலாமா ?
    மீ. பா: அத தான் கவி நயா மேடம் எழுதி என்னோட மருமவ பாடி இருக்காளே ! நீங்க கேட்கலையா ?
    இங்க கேளுங்க:
    http://www.youtube.com/watch?v=6e69pNPHQu0

    மீனாட்சி பாட்டி.
    முகாம்:

    பதிலளிநீக்கு
  70. அம்மமமமாடி! இம்மாம் பெரிய கட்டுரையா! அதனாலதான் அதுக்குப் பேர் கட்டு உரையா? படித்தேன் சுவைக்கும் படியிருந்தது! வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  71. paattiennasolkiral said... //( இது ஓர் கற்பனை உரையாடல். )//

    கற்பனை எனக் கூறியிருந்தாலும் நிஜத்திலே நடந்த சந்தோஷத்தைக் கொடுத்து விட்டது பாட்டி.

    //இது போல வருசத்துக்கு ஒரு தரமாச்சும் ஒரு வெகேஷன் இருந்ததுன்னா, எத்தனை நன்னாயிருக்கும் !

    மூணு மாசத்திற்கு ஒரு தரம் நம்ம கூடிடவேண்டி தான்.

    அடுத்த தரம் எங்க வீட்டுத் திண்ணையிலே !//

    சரியாதான் சொல்லியிருக்கீங்க, அதான் சந்தோஷமாய் அடிக்கடி கூடுகிறோமே பாட்டி யாருடைய திண்ணையி(பதிவி)லாவது...:)) !

    //இட்லியைவிட கொத்சு தான்டி பெஸ்ட்.

    எப்படிடி பண்ற

    துளசி டீச்சர் சொன்னபடியே செஞ்சேனா, சரியா வருது.

    அந்த துளசி டீச்சர் தான் வல்லே//

    அவங்கதான் 'பை பை' சொல்லிட்டு பத்து நாளுக்கு வெளியூர் போயிருக்காங்களே பாட்டி. வந்ததுமா வருவாங்க தன் கையாலேயே இட்லி கொத்சு செஞ்சு தர, அப்போ மறுபடியும் கூடலாம்..ஜாலியாக..

    //எங்க வீட்டுத் திண்ணைலே தானே எல்லாரும் உட்கார்ந்து இருக்காங்க.//

    இது நல்ல ட்விஸ்ட் பாட்டி:))))))))! ரசித்தேன். சரி ரெண்டு நாள் இருக்கட்டும் சூரி சாருக்கு கம்பெனி கொடுக்க..

    //கவி நயா மேடம் எழுதி என்னோட மருமவ பாடி இருக்காளே ! நீங்க கேட்கலையா ?//

    ஆகா கேட்டுட்டுதான் எழுத வந்தேன். அற்புதமாகவும் இனிமையாகவும் பாடியிருக்கிறார்கள் ஆயிரம் கண்ணுடையாளை. நான் வணங்கும் ராஜேஸ்வரியை [பாருங்களேன் இங்கே:http://tamilamudam.blogspot.com/2008/05/pit_8670.html] தினம் பாட ஒரு பாட்டு கிடைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  72. அற்புதம். அப்படியே என் பால்ய கால திண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  73. அருமையான பதிவு.

    நம்மூர்ல திண்ணைய திரணைன்னுதா சொல்லுவோமில்லையா?

    'சப்பரம்' ஊருக்கு போகத்தூண்டிய வார்த்தை.

    கிளித்தட்டு விளையாடியிருபீர்களே?

    பையன்கள் இன்னும் செல்லாங்குச்சி விள்யாடுகிறார்களா?.

    நாற்றுப் புடுங்கி நட்டாற்போல்

    சொந்த இடம்விடமுடியாமல்
    வந்த இடமும் ஒட்டாமல்

    சுயமற்றதாகிவிட்டது வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
  74. SUPER!!!!!!

    will write a detailed feedback in few days time.

    with love,
    Tulsi(from FIJI)

    பதிலளிநீக்கு
  75. அருமையான பதிவு திருமதி.ராமலெட்சுமி அவர்களே. அந்த கால வீடு அமைப்புகளைப்பற்றி நிறைய தெரிந்துக்கொண்டேன். கூடவே நீங்கள் இணைத்திருக்கும் பழைய கால படங்கள் ரொம்ப க்யூட்.

    பதிலளிநீக்கு
  76. ஷைலஜா said...//நினைவுகளே ஊஞ்சல்தானே? //

    ரசித்தேன். ரொம்ப சரி ஷைலஜா.

    //கொஞ்சம் பின்னோக்கி ஊஞ்சலை வீசினால் ஊர்க்கதை சொல்லலாம்.. முதல்ல திண்ணைல உட்கார்ந்துட்டு வரேன்//

    அப்போ ஊஞ்சல் முன்னோக்கி வரும் போது திண்ணையோடு இன்ன பிற ஊர்க் கதைகளை அழகாய்ப் பதிவிட ஷைலஜா வந்து கொண்டே இருக்கிறார்கள்..! அப்படித்தானே ஷைலஜா?

    //நீங்க எந்தப்பகுதி?//

    ரவீந்திரநாத் தாகூர் நகர். கவிஞரின் பெயர் கொண்ட காலனியில் குடியிருப்போர் எல்லாம் கவிஞராகி விட முடியாதுதான்:))! ஆனாலும் தேசிய கீதம் தந்தவர் பெயர் கொண்ட நகரிலே குடியிருப்பதில் ஒரு சின்ன சந்தோஷம். சந்திக்கலாம் நாம் சமயத்தை ஏற்படுத்திக் கொண்டு. நன்றி ஷைலஜா.

    பதிலளிநீக்கு
  77. அகரம்.அமுதா said...//இம்மாம் பெரிய கட்டுரையா! அதனாலதான் அதுக்குப் பேர் கட்டு உரையா? படித்தேன் சுவைக்கும் படியிருந்தது! வாழ்த்துக்கள்//

    மனமெனும் நூலகத்தில் இருக்கும் நினைவெனும் நூற்கட்டுக்களைப் பிரித்துப் பார்க்கையில் கட்டுக் கட்டாய் எழும்பும் அலைகள் கட்டு உரையை சற்றுப் பெரிதாகத்தான் ஆக்கி விட்டது. ஆயினும் பொறுமையாகப் படித்துச் சுவைத்தமைக்கு நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  78. வெண்பூ, இதே போன்ற திண்ணை வீட்டில் வளர்ந்த அனுபவம் உங்களுக்கும் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  79. பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் நன்றி வடகரை வேலன்.

    'திரணை' என்பது இப்போதுதான் கேள்விப் படுகிறேன். அதுதான் மருவி 'திண்ணை' ஆயிற்றோ?

    //பையன்கள் இன்னும் செல்லாங்குச்சி விள்யாடுகிறார்களா?.//

    கில்லி ஆட்டத்தைத்தான் அப்படி குறிப்பிடுகிறீர்களா எனத் தெரியவில்லை. டவுண் வாழ்வின் பாதிப்பு அத்தனை வராத கிராமப் புறங்களில் அந்த ஆட்டம் இன்னும் களை கட்டிக் கொண்டிருப்பதாக விகடனில் படித்தேன்.

    //நாற்றுப் புடுங்கி நட்டாற்போல்
    சொந்த இடம்விடமுடியாமல்
    வந்த இடமும் ஒட்டாமல்
    சுயமற்றதாகிவிட்டது வாழ்க்கை. //

    எத்தனை அழகாய் சொல்லி விட்டீர்கள். நன்றி வேலன்!

    பதிலளிநீக்கு
  80. துளசி கோபால்said...
    //SUPER!!!!!!//

    Thanks a lot. It is so nice of you to send a note from FIJI.

    //will write a detailed feedback in few days time.//

    I'm already happy about the 'remarks' given by you, dear teacher. Now awaiting the exact 'marks' I'm going to get:))!

    with regards,
    Ramalakshmi.

    பதிலளிநீக்கு
  81. கண் கலங்க வெச்சுட்டீங்க... புகைப்படங்கள் அழகு... எழுத்துக்கள் தொடர, புன்னகை பரப்ப வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  82. முரளிகண்ணன் said...
    //அருமையான பதிவு அட்டகாசம்//

    நன்றி! பாராட்டுக்கும் இப்பதிவுக்கு அடிக்கல் நாட்டியதற்கும் !

    பதிலளிநீக்கு
  83. கயல்விழி said...
    //அருமையான பதிவு..அந்த கால வீடு அமைப்புகளைப்பற்றி நிறைய தெரிந்துக்கொண்டேன்.//

    அப்படியா, சந்தோஷம் கயல்விழி. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  84. Natty said...
    //கண் கலங்க வெச்சுட்டீங்க... புகைப்படங்கள் அழகு... எழுத்துக்கள் தொடர, புன்னகை பரப்ப வாழ்த்துக்கள்.//

    அதற்கென்ன..தொடர்ந்திருவோம். பரப்பிருவோம்:))!

    தங்கள் "எண்ணங்கள்.. எழுத்தானால்.." http://ennangal-ezhuthanal.blogspot.com/2008/07/blog-post_08.html வலைப்பூவை எட்டிப் பார்த்து விட்டு வந்தேன். திண்ணையைப் பற்றிய தங்கள் 'எண்ணங்களை' அற்புதமாக 'எழுத்திலே' வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் natty!

    பதிலளிநீக்கு
  85. //கயல்விழி முத்துலெட்சுமி said...
    அன்பு ராம லெட்சுமிக்கு

    கடிதம் கண்டேன். நினைவுகளின் கூட பயணித்ததால் இந்தபதிவெழுத தாமதமாகி இருக்கும் என்று புரிந்து கொண்டேன்.. பழய புகைப்படங்கள் தான் முதலில் மனதை கொள்ளை கொள்கிறது .. எல்லாரிடமும் அந்தகாலத்தில் இருக்கும் ஒரு அடக்கமான அழகு மிளிர்கிறது.. உங்கள் வீடு மிக அழகு.. அதும் பச்சை தரையா ம்..குறித்துக்கொள்கிறேன்.. நீங்கள் திண்ணை திண்ணையாக ஓடி வழியனுப்பும் காட்சி மனக்கன்ணில் ஓடியது.. மணவடை .. ஆச்சி பதங்கள் ...நீங்களும் திருநெல்வேலிக்காரரோ..
    உங்கள் பெரியத்தையைப் பார்த்தால் அப்படியே என் ஆச்சியைப்போலவே இருக்காங்க.. :)
    நன்றி
    கயல்விழி முத்துலெட்சுமி//


    சகதோரிகள் தரணி போற்றும் பரணி பாயும் நெல்லையை சேர்ந்தவர் என்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. எழுத்துநடையிலே நம் நெல்லையின் மண்வாசம் மணக்கிறதே.வாழ்த்துக்கள்


    பிளாஸ்டிக் அரக்கனின் கூற்று:-

    1.மனித குலத்தை அழிப்பேன்= to destroy mankind

    2.மனிதனை அளிப்பேன் = to donate man to நீரில்லாச் சூழ்நிலைக்கு, மாசு பட்ட உலகுக்கு

    அன்புடன்
    தி.விஜய்

    pugaippezhai.blogspot.com

    பதிலளிநீக்கு
  86. விஜய் said...//சகோதரிகள் தரணி போற்றும் பரணி பாயும் நெல்லையை சேர்ந்தவர் என்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. எழுத்துநடையிலே நம் நெல்லையின் மண்வாசம் மணக்கிறதே.வாழ்த்துக்கள்//

    நன்றி விஜய். தாங்களும் நெல்லை என அறிந்தேன்.

    உங்கள் பதிவில் எழுப்பப் பட்ட வினாவுக்கு தேடி வந்து தந்திருக்கும் விடைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  87. எல்லாப் பின்னூட்டங்களும் சூப்பரோ சூப்பர். மீனாட்சி( எனக்கு மட்டும் அக்கா)பாட்டி இப்படி ஒரு அருமையான பதிவையே பின்னூட்டமாப் போட்டா எப்படி?

    ஆமாம். நான் ஊரில் இல்லாததை எல்லாரும் ரொம்பவே சந்தோஷமாக் கொண்டாடி இருக்கீங்க. இதுலே கயலு சும்மானாச்சுக்கும் சொல்றது அழுதகண்ணும் முகமும் பளபளப்பா இருக்குமாம். நல்லா இருக்கே கதை:-)

    உள்திண்ணை மட்டுமில்லை, எங்க வீட்டு வெளித்திண்ணையில் ராமர் காலம் தங்குனதுகூட இப்ப ஞாபகம் வருதே......

    அக்கா வீட்டுலே அடுப்பங்கரையில் உள் திண்ணை நல்லா டபுள் பெட் போடும் அளவு.

    ஐயோ.......... கொசுவத்திக்கே இப்படி கொசுவத்தியா?:-))))

    பதிலளிநீக்கு
  88. துளசி கோபால் said... //எல்லாப் பின்னூட்டங்களும் சூப்பரோ சூப்பர். //

    எல்லோருக்கும்தான் எத்தனை எத்தனை விதமான நினைவலைகள் உயரக் கிளம்பி விட்டன. அத்தனைக்கும் ரசித்துப் பின்னூட்டமிட்டேன் மேடம்.

    //மீனாட்சி( எனக்கு மட்டும் அக்கா)பாட்டி இப்படி ஒரு அருமையான பதிவையே பின்னூட்டமாப் போட்டா எப்படி?//

    ஆமாம் அதையேதான் நானும் நினைத்தேன். மிக அருமையான பதிவாக அமைந்திருக்க வேண்டிய பின்னூட்டம்.

    சூரி அய்யா எனது பதிவையே பாட்டாக அருளிய விதமும் அற்புதம்.

    //ஐயோ.......... கொசுவத்திக்கே இப்படி கொசுவத்தியா?:-))))//

    எல்லோருக்கும் அந்த வித்தையைச் சொல்லிக் கொடுத்ததே தாங்கள்தானே:))! வத்தி ஏற்றியதில் எழும்பிய புகைமண்டலம் உங்கள் வரவுக்காகக் காத்திருந்து இப்போது அடங்கி நிறைவு பெறகிறது. மறுபடியும் நன்றி!

    பதிலளிநீக்கு
  89. 90 பின்னூட்டங்களுக்கு பிறகு வந்திருக்கிறேன் சூப்பர் பதிவு! பழைய நினைவுகள் எப்பொழுதுமே இனிமையும் நிறைவும் தருபவைதான் கலக்குறிங்க...:)
    ரசிச்சு,அனுபவிச்சு படிச்சேன் இருந்தும் என்னுடைய திண்ணை நிநைவுகள் சரிவர என் மனதில் இல்லை என்பது கவலை தருகிறது இருந்தாலும் இருக்கிற நினைவுகளை கட்டாயம் பதிய வேண்டும்...

    பதிலளிநீக்கு
  90. அது என்ன ஈ மெயில் ? புரியலையே ?
    திண்ணையிலே அக்காடா என்று உட்கார்ந்திருந்தா
    மத்தியானம் ஒரு மூணு மணிக்கு அந்த தபால்காரன்
    பாட்டி இந்தா உனக்கு உன் பேரன் எழுதியிருக்கான்னு
    சொல்லி கடுதாசியை வாசிச்சுக் காட்டியும் போவாங்க.
    அந்த மெயிலா ?
    அந்த காலத்துலே ராமேஸ்வரத்துக்கும் மெட்ராஸுக்கும்
    ஒரு போட் மெயில் ஓடிட்டிருந்தது. அதுவா ?

    இப்பவெல்லாம் இன்டர்னெட்டுலே சடார்னு
    ஒரு செகன்டுலே உலகம் முழுக்க தெரிஞ்சுடரதே
    அதையா ?
    என்னவோ வயசாயிடுச்சா ! ஒண்ணும் சரியா
    புரியல்லை.
    அங்கே துளசி டீச்சர் வேற சில தீவுகள் ஆள் அரவமே இல்லைன்னு
    சொல்லியிருக்காங்க, அவங்க பிஜிக்குப் போனபோது பாத்தாங்களாம்.
    அங்கே குடியிருக்க போனா தபால் எல்லாம் எப்படி வரும்னு
    ரோசனை செஞ்சபோதுதான் தெரிஞ்சது.
    என்னோட ஈ மெயில் தானே ?
    எம்55என்1எஸ் யூ ஆர் ஒய்
    ஈக்கு பதிலா ஜின்னு போட்டுக்கணும்.
    சுப்பு தாத்தா.
    சொல்ல மறந்துட்டேனே ! 5 க்குப் பதிலா
    அஞ்சாவதா வர
    ஆங்கில எழுத்தைப் போடக்கூடாது.
    அதற்குப் பதிலா, அஞ்சு உயிர் எழுத்திலே
    இரண்டாவது வெளவல் ( வெளவால் இல்லை )
    போடணும். இத்தனை போர் அடிப்பவர்
    ஈ மெயில் எதற்கு ! !!

    பதிலளிநீக்கு
  91. தமிழன்... said...
    //ரசிச்சு,அனுபவிச்சு படிச்சேன் இருந்தும் என்னுடைய திண்ணை நினைவுகள் சரிவர என் மனதில் இல்லை என்பது கவலை தருகிறது இருந்தாலும் இருக்கிற நினைவுகளை கட்டாயம் பதிய வேண்டும்...//

    எந்த நினைவு மறந்தாலும் இந்த இளம் பிராய நினைவுகள் மறையாது தமிழன். நினைவு படுத்தித் திண்ணையைப் படைத்ததும் தெரிவியுங்கள்.

    இலங்கையிலும் இது போன்ற திண்ணை கட்டுமான வீடுகள் உண்டு என்பதையும் ரிஷானின் கதை மூலம் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  92. sury said...
    //திண்ணையிலே அக்காடா என்று உட்கார்ந்திருந்தா
    மத்தியானம் ஒரு மூணு மணிக்கு அந்த தபால்காரன்
    பாட்டி இந்தா உனக்கு உன் பேரன் எழுதியிருக்கான்னு
    சொல்லி கடுதாசியை வாசிச்சுக் காட்டியும் போவாங்க.//

    ஆமாம் திண்ணையில் அமர்ந்து தபால்காரருக்குக் காத்திருந்து அவரது கையால் கடிதங்களைப் பெற்ற காலமும், நண்பர் போல நடத்தப் பட்ட அவரை வாசிக்கச் சொல்லிக் கேட்ட காலம் மட்டுமா போயிற்று? பின்னர் அவரவர் வீட்டு பூட்டிய வெளிக் கதவுகளிலோ அல்லது குடியிருப்பின் கீழ்தளத்திலோ தனித்தனியாகத் தரப் பட்டிருக்கும் கடிதப் பெட்டிக்கு வந்து சேரும் அம்மா, தங்கை,அத்தைமாரின் நீண்ட அன்புக் கடிதங்களைக் காண ஒவ்வொரு மாலையும் ஆவலுடன் ஓடிச் சென்று 'செக்' செய்த காலமும் போயிற்று. இப்போதெல்லாம் அவை வங்கி ஸ்டேட்மென்ட்களுக்கும்(வேண்டுவோருக்கு வங்கிகள் ஈ ஸ்டேட்மெண்ட் தர ஆரம்பித்து விட்டன), விளம்பர நோட்டீஸ்களுக்கும்தான் என்றாகி விட்டது. கடிதப் பொட்டிக்கு பதில் கணினிப் பொட்டியைத் தட்டி மெயில் செக் செய்கிறோம். அதுவும் ஆங்கிலத்தில் ஐந்தாறு வரிகளை. கடிதங்களோடு மறந்து போயிருந்த தமிழ், யூனிகோட் வந்ததோ தழைத்ததோ!

    எனது எழுத்து ஆர்வத்துக்கு பிள்ளையார் சுழியிட்டதும் என் வீட்டுக்குப் பின் தெருவில் இரண்டு மூன்று வீடுகள் தள்ளி ஒரு வீட்டின் உயரமான (ஆறேழு ஸ்டீப்பான படிகள் ஏற வேண்டும்) பின் திண்ணையில் அறையாக்கப் பட்டு இயங்கி வந்த போஸ்ட் ஆபிஸ்தான். பத்து வயதாயிருக்கையிலே அங்கு சென்று பதினைந்து பைசாக்குக் கிடைக்கும் போஸ்ட் கார்டுகள் நிறைய வாங்கி வைத்துக் கொண்டு மாலைமுரசு சட்டாம்பிள்ளைக்கு கேள்விகள், பாலமித்ரா, ரத்ன பாலா, கோகுலம் சிறுவர் இதழ்களுக்கு வாசகர் கடிதங்கள் எழுதி, போகிற வழியில் அரச மரத்து பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு என் கையால் போஸ்ட் செய்து விட்டு வருவேன். பிள்ளையார் அருளால் அவை யாவுமே வெளிவந்து சிறுசன்மானமும் வரும். சிலவற்றின் மனி ஆர்டர் ரசீது இன்னும் என் வசம்:)!. பின் சில வருடங்களில் அப்பழக்கம் நின்று போய் விட்டது. ஆக, இந்தப் பின்னூட்ட ஆர்வம் பத்து வயதிலேயே ஆரம்பமாகி விட்டிருந்தது பின் திண்ணை தபால் அலுவலகத் தயவில்.

    //இத்தனை போர் அடிப்பவர்
    ஈ மெயில் எதற்கு ! !!//

    தமிழ்மணத்தில் யாருமே முந்தைய பிந்தைய தலைமுறைகளை போர் ஆக நினைப்பதில்லை. உறவுகள் கூடி மகிழ்ந்த நம் பாரம்பரியமான் திண்ணை மறைந்து வந்தாலும் தமிழ்மணம் "பின்னூட்டப் பரிவர்த்தனை" எனும் "திண்ணை"யை நமக்குத் தந்து எத்தனை உறவைகளை அதிலே கூட வைத்திருக்கிறது. அதில் நாம் நம் படைப்புகளை மட்டுமா பகிர்ந்து கொள்கிறோம்? தாத்தா, பாட்டி,பெற்றோர் என்றும், மகனே மகளே என்றும், அக்கா தங்கை, அண்ணன் தம்பி, குரு சிஷ்யரெனவும் உறவும் அன்பும் அல்லவா பாராட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க தமிழ்மண சேவை!

    //அங்கே துளசி டீச்சர் வேற சில தீவுகள் ஆள் அரவமே இல்லைன்னு சொல்லியிருக்காங்க, அவங்க பிஜிக்குப் போனபோது பாத்தாங்களாம். அங்கே குடியிருக்க போனா தபால் எல்லாம் எப்படி வரும்னு ரோசனை செஞ்சபோதுதான் தெரிஞ்சது.//

    கரெக்ட் அய்யா. அந்த வகையில் நிமிடத்தில் அல்ல நொடியில் உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ள முடிகிற வசதியை நினைக்கையில் மற்ற வருத்தங்களைப் பின்னுக்குத் தள்ளிதான் வைக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய விஞ்ஞான வளர்ச்சி இல்லையெனில் நீங்களும் நானும் இப்படி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்திருப்போமா? தாங்கள் தங்கள் மெயில் ஐடியை இப்படி சுவாரஸ்யமான புதிராகத் தெரிவித்திருக்க முடியுமா? ஆகையால் வாழ்க சொல்வோம் விஞ்ஞான வளர்ச்சிக்கும்.
    நண்பர்களே, தாத்தா புதிராகத் தந்ததைப் பிடியாகப் பிடித்துக் கொண்டு நான் விடையைக் கண்டு கொண்டேன்:))! அப்ப நீங்க...?

    பதிலளிநீக்கு
  93. எனது எழுத்து ஆர்வத்துக்கு பிள்ளையார் சுழியிட்டதும் என் வீட்டுக்குப் பின் தெருவில் இரண்டு மூன்று வீடுகள் தள்ளி ஒரு வீட்டின் உயரமான (ஆறேழு ஸ்டீப்பான படிகள் ஏற வேண்டும்) பின் திண்ணையில் அறையாக்கப் பட்டு இயங்கி வந்த போஸ்ட் ஆபிஸ்தான். //
    எந்த ஊர் போஸ்ட் ஆஃபீஸ்?
    போஸ்ட்மாஸ்டர் பொண்ணுங்கறதனால உரிமையாக் கேக்கிறேன்.:)

    சூரி சார் பதில்,மீனாட்சி அக்கா பதில் இன்னும் எல்லோரோட கடஹியும் பின்னூட்டமா வந்து படிக்கவே அருமையாகிவிட்ட இந்தத் திண்ணைப் பதிவு தனிப்பூங்கா என்று அழைக்கப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  94. வல்லிசிம்ஹன் said...
    //எந்த ஊர் போஸ்ட் ஆஃபீஸ்?
    போஸ்ட்மாஸ்டர் பொண்ணுங்கறதனால உரிமையாக் கேக்கிறேன்.:)//

    அப்படியா வல்லிம்மா! வேறெங்கே திருநெல்வேலியில்தான். மதுரை ரோடிலே சிறு அளவில் இயங்கி வந்த போஸ்ட் ஆபிஸ் அது. ஒரே ஒரு நபர்தான் அங்கு எல்லாமே.

    //சூரி சார் பதில்,மீனாட்சி அக்கா பதில் இன்னும் எல்லோரோட கடஹியும் பின்னூட்டமா வந்து படிக்கவே அருமையாகிவிட்ட இந்தத் திண்ணைப் பதிவு தனிப்பூங்கா என்று அழைக்கப் போகிறேன்.//

    "தனிப்பூங்கா"! அழகான வார்த்தை. எத்தனையோ பேரின் திண்ணை நினைவுகளைத் திரட்டி விட்ட அத்தனை பின்னூட்டங்களையும் தொகுத்து ஒரு 'தனிப்பூங்கா'வாகவே தரலாமோ வல்லிம்மா?

    பதிலளிநீக்கு
  95. என்ன துளசி இப்படி சொல்லிட்டீங்க.. பாருங்க என் பேரை தலைப்பா போட்டு பதிவு போட்டிருக்காங்க ராமலெட்சுமி... நீங்க சீக்கிரவந்து 90 கமெண்டுக்கப்பரமாவது படிக்க முடிந்ததே.. இல்லன்னா இது எப்படி உங்களுக்கு தெரியும்.. நான் நாலு போஸ்ட் போட்டு எதுக்கும் உங்க பின்னூட்டம் வராம நான் அழுதது எனக்குத்தானே தெரியும்.. நான் பொய்யெல்லாம் சொல்லமாட்டேனாக்கும்..
    ராமலக்ஷ்மி
    100? யாரு

    பதிலளிநீக்கு
  96. கயல்விழி முத்துலெட்சுமி said...
    //பாருங்க என் பேரை தலைப்பா போட்டு பதிவு போட்டிருக்காங்க ராமலெட்சுமி...//

    அதில் உங்களுக்கு சந்தோஷம்தானா கயல்விழி? நமது பள்ளிப் பருவத்தில் ஒரு தலைப்பைக் கொடுத்து தோழிக்குக் கடிதமாக வரையச் சொல்வார்கள். இந்தப் பதிவுக்கான "பொறி"யை தங்கள் பதிவிலிருந்துதானே பெற்றேன். ஆகையால் உங்களுக்கு எழுதும் மடலாகவே மலர்ந்து விட்டது இப்பதிவு. ஆயில்யன் //திண்ணை நினைவுகள்,பெருமை பொங்க சொல்லும் இளம்வயது கால அனுபவங்கள் அதுவும் வித்தியாசமாய் மடலில் மலர்ந்திருக்கிறது சூப்பர்! // எனப் பாராட்டியிருந்தார். "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்பார்கள். நான் எல்லாப் பாராட்டும் தங்களுக்கே என்கிறேன்.

    //நீங்க சீக்கிரவந்து 90 கமெண்டுக்கப்பரமாவது படிக்க முடிந்ததே.. //

    துளசி மேடம் Fuji-யிலிருந்து சரியாக 75-ஆவதாக வந்து சூப்பர் என ரிமார்க்ஸ் கொடுத்துச் சென்றதையும் நான் சொல்லியாக வேண்டும்.

    //இல்லன்னா இது எப்படி உங்களுக்கு தெரியும்.. //

    அதானே:))!

    //நான் நாலு போஸ்ட் போட்டு எதுக்கும் உங்க பின்னூட்டம் வராம நான் அழுதது எனக்குத்தானே தெரியும்.. நான் பொய்யெல்லாம் சொல்லமாட்டேனாக்கும்..//

    எத்தனை பேர் வந்தாலும் ஆசிரியை வந்து ஒரு எட்டு பார்த்துச் சென்றால்தான் மனசு ஆறுகிறது இல்லையா கயல்விழி? ஆனால் கூடிக் கொண்டே போகும் மாணாக்கர் எண்ணிக்கை கண்டு அசராமல் "நோ அட்மிஷன்" போர்ட் போடாமல், எல்லோரையும் திருப்தி படுத்திக் கொண்டேயிருக்கிறார்களே, அதான் துளசி டீச்சர்!

    //ராமலக்ஷ்மி
    100? யாரு//

    ஆமா, யாரு நூறு??

    பதிலளிநீக்கு
  97. அட நிஜமாவே நாந்தான் போலிருக்கே

    பதிலளிநீக்கு
  98. //ஆமா, யாரு நூறு?? //

    நானாத்தான் இருக்கணும்.

    பதிலளிநீக்கு
  99. ////ராமலக்ஷ்மி
    100? யாரு//

    ஆமா, யாரு நூறு??//

    அபிஅப்பாவின் அட்டெண்டன்ஸ்

    பதிலளிநீக்கு
  100. இந்த அருமையான பதிவை லேட்டா படிச்சதாலே நானே 100 மில்லி அடிச்சு சாந்தப்படுத்திகறேன்:-))

    அபிஅப்பா
    (பெச்சிங்க)

    பதிலளிநீக்கு
  101. பத்து பத்து நிமிட வித்தியாசத்தில் வெண்பூவும், அபி அப்பாவும் பின் தங்கி விட இதோ இதோ..."அது ஒரு அழகிய நிலாக் காலம்" என முப்பத்து நாலாவதாக வந்து அழகாகக் கூறிய ஜீவ்ஸ்தான் நூறாவது! வாழ்த்துக்கள் ஜீவ்ஸ். இப்பதிவு நூறு முறை நம் "கனவிலும் நினைவிலும் உலா"ப் போய் விட்டது! எல்லோருக்கும் என் நன்றி!

    பதிலளிநீக்கு
  102. //அபிஅப்பா
    (பெச்சிங்க) //

    சரியாப்போச்சு. 100 மில்லி பெப்ஸிக்கே நாக்குக் குழறியிருக்கே அபி அப்பாவுக்கு:-)))))

    பதிலளிநீக்கு
  103. நூறைத் தவற விட்டாலும் உடனே நட்புக் கரங்களை நீட்டியதற்கு நன்றி வெண்பூ, அபி அப்பா!

    பதிலளிநீக்கு
  104. ஆஹா சென்சுரி போட்ருச்சா திண்ணை. சூப்பர். சரி நூத்தி எட்டு தேங்கா உடைத்து திருஷ்டி சுத்திப் போடுங்கள். உங்க பின்னூட்டம் நூத்தி எட்டுல்ல :))))

    பதிலளிநீக்கு
  105. //பாலமித்ரா, ரத்ன பாலா, கோகுலம் சிறுவர் இதழ்களுக்கு வாசகர் கடிதங்கள் எழுதி, போகிற வழியில் அரச மரத்து பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு என் கையால் போஸ்ட் செய்து விட்டு வருவேன். பிள்ளையார் அருளால் அவை யாவுமே வெளிவந்து சிறுசன்மானமும் வரும். சிலவற்றின் மனி ஆர்டர் ரசீது இன்னும் என் வசம்:)!.//

    அடடா நானும். ஆனால் பரிசெல்லாம் கிடைத்ததில்லை :(( காரணம் இப்ப தான் புரிகிறது. படைப்புக்கு இல்லை பரிசு. ஆண்டவன் அருளுக்குத் தான் :)))

    பதிலளிநீக்கு
  106. துளசி கோபால் said...
    //சரியாப்போச்சு. 100 மில்லி பெப்ஸிக்கே//

    'சட்'டென வந்து அது பெப்ஸி எனப் 'பட்'டென புரிய வைத்து விட்டீர்களே! அதான் டீச்சர்:))!

    பதிலளிநீக்கு
  107. சதங்கா (Sathanga) said...
    //ஆஹா சென்சுரி போட்ருச்சா திண்ணை. சூப்பர்.//

    ஆமாம் சதங்கா. சரிக்குச் சரி எனது பதில்களும் இதில் அடக்கம் என்கிற வகையில்தான் நூறைத் தாண்டிக் கருத்து பரிமாற்றங்கள் நடந்து விட்டன. முதல் மூன்று நாட்களில் அரை சதம் அடித்து, பின் வார இறுதியில் சரியாக 75-ஆகி, இரண்டாம் வார முடிவில் 100-த் தாண்டி விட்டது. இதில் என் வலைப் பூவுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்களுடன், புதிதாக வந்தவர்கள், ஒருமுறைக்கு மேல் கருத்துக்கு மறுகருத்து என பரிமாறிக் கொண்டவர்கள் எல்லோரும் அடக்கம். அத்தனை பேருக்கும் என் அன்பான நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  108. சதங்கா (Sathanga) said...
    // படைப்புக்கு இல்லை பரிசு. ஆண்டவன் அருளுக்குத் தான் :)))//

    ரொம்பச் சரி:))! அதே பிள்ளையார்தான் இந்த 108-க்கும் காரணமானவர்!

    பதிலளிநீக்கு
  109. மிக மிக அருமையான அழகான பதிவு. புகைப்படங்கள் மேலும் அணி செய்கின்றன. அந்த வீட்டில் வாழ்ந்தாற் போல் உணர்வை ஏற்படுத்தி உள்ளது உங்கள் நடை. வீட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. போற்றிப் பாதுக்காக்கப்பட வேண்டிய அற்புதமான நினைவுகள். பகிர்ந்து கோண்டதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  110. அமுதா said...

    //போற்றிப் பாதுக்காக்கப்பட வேண்டிய அற்புதமான நினைவுகள். பகிர்ந்து கோண்டதற்கு நன்றி//

    அந்த எண்ணத்திலே பதியப் பட்டவைதான் இந்த திண்ணை நினைவுகள். உங்கள் ஆழமான ரசிப்புக்கும் ஆத்மார்த்தமான பாராட்டுக்கும் மிக்க நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  111. அழகான பதிவு மேடம். புகைப்படங்கள் வேறு வெகு அழகு. தமிம்மண விருதுமா! மகிழ்வாய் உணர்கிறேன். வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
  112. " உழவன் " " Uzhavan " said...

    //அழகான பதிவு மேடம். புகைப்படங்கள் வேறு வெகு அழகு.//

    முதல் படத்தில், உங்கள் கவிதையில் சொல்லியிருந்த மாடப்பிறையைப் பார்த்து ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    //தமிம்மண விருதுமா! மகிழ்வாய் உணர்கிறேன்.//

    ஆம் மூன்றாவது இடத்தில் இப்பதிவு.
    தமிழ்மண விருது 2009-க்கான அறிவிப்பும் இன்று வெளிவந்துள்ளது. பாருங்கள்:)!

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி உழவன்.

    பதிலளிநீக்கு
  113. தேன்...தேன்..தேன்.
    படித்தேன்.மகிழ்ந்தேன்.நெகிழ்ந்தேன்.

    படங்கள் அனைத்தும் அப்படியே சிறுவயதில் விடுமுறைக்கு சென்று ஆட்டம் போட்ட எனது அம்மா வீட்டை நினைவுபடுத்தின.

    நானும் திருநெல்வேலி தானுங்க.

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  114. துபாய் ராஜா said...

    //தேன்...தேன்..தேன்.
    படித்தேன்.மகிழ்ந்தேன்.நெகிழ்ந்தேன்.

    படங்கள் அனைத்தும் அப்படியே சிறுவயதில் விடுமுறைக்கு சென்று ஆட்டம் போட்ட எனது அம்மா வீட்டை நினைவுபடுத்தின.

    நானும் திருநெல்வேலி தானுங்க.

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

    நன்றிகள் துபாய் ராஜா! நம்ம ஊர் என்பதில் கூடுதல் சந்தோஷம்:)!

    பதிலளிநீக்கு
  115. அழகு அழகு.

    என்னுடைய பெரியப்பா, சிற்றப்பா, அத்தை பசங்க எல்லோரும் ரொம்ப வருடம் திருநெல்வேலி வாசம். அல்லது வருடாவருடம் லீவுக்கு போவார்கள். நான் எப்போதாவது தான் சென்னையில் இருந்து போவோம். பழைய நினைவுகளை மீட்டும் உங்கள் இடுகைக்கு அழைத்து சென்ற உங்களுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    - சாய்

    பதிலளிநீக்கு
  116. @ சாய்ராம் கோபாலான்,

    பழைய நினைவுகள் என்றைக்கும் சுகமே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாய்ராம்.

    பதிலளிநீக்கு
  117. அற்புதமாய் பதிந்துள்ளீர்கள் நினைவுகளை. நிழற்படங்கள் மிகவும் அருமை. இப்போதே பாலபாரதியின் இடுகையோடு சேர்த்து விடுகிறேன்......

    பதிலளிநீக்கு
  118. திண்ணை பற்றிய நினைவுகள் எங்களுக்கெல்லாம் இது போன்ற அனுபவங்கள் கிடைக்கவில்லையே என்று ஏங்க வைத்திருக்கிறன்றன.கடந்த மாதமே கலைமகளில் கட்டுரையைப் படித்தேன்.இந்த மாதம் இன்னும் படிக்கவில்லை. எண்ணிக்கையில் அடங்காத அளவில் வலைப்பூக்கள் இருக்கும்போது இது மாதிரியான அறிமுக கட்டுரைகள் அவசியம்.எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைக்காமல் குறைவாக எழுதினாலும் உருப்படியாக எழுத வேண்டும் என்ற எண்ணம் வரும் வகையில் இருந்த பதிவுகளில்இதுவும் ஒன்று.

    வருஷம் 16 ,கிங்,பெரிய குடும்பம், விசு படங்கள் ,சில நாவல்கள் போன்றவற்றை அதில் இருக்கும் கூட்டுக்குடும்பம் மற்றும் ஒரு உயிரான வீடு போன்ற காரணங்களுக்காகவே மிகவும் விரும்பி படிப்பேன்/பார்ப்பேன்.

    இது போன்ற ஒரு சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த நீங்கள் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.இருநூறு சதுர அடி அளவில் சிறு வீட்டில் சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்த என்னுடைய ஏக்கங்களை எல்லாம் கூட்டுக்குடும்ப பின்னணியில் அங்கே உள்ள கொண்டாட்டங்களை மையமாக வைத்து கதைகள் எழுதி ஆறுதல் அடைவதுதான் இனி என்னால் செய்ய முடிந்த விஷயம்.

    கருப்பு வெள்ளை படங்களில் இவ்வளவு வண்ணமயமான வாழ்க்கை இருந்திருப்பதை எல்லாரும் உணர்ந்திருக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  119. இந்தக் கடிதத்தை 2008ல் நீங்க எழுதியபோதே படித்திருக்கிறேன் - பல முறை.

    இப்பவும் படித்துக் கொண்டே இருக்கிறேன் - பல முறை. அந்தக் காலத்து classics திருவிளையாடல், காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம் (இன்னும் பல) எப்ப பார்த்தாலும் முதல் தடவை பார்ப்பது போல் விறுவிறுப்பு, காமெடியா இருக்கும். அதே வரிசையில் இந்தக் கடிதமும் ஒரு classic, ஒரு காவியம். எப்ப படித்தாலும் முதல் தடவை போல ரசிக்க முடியுது.

    Hats off on a wonderful piece of art!

    பதிலளிநீக்கு
  120. மகிழ்ச்சி பொங்க மத்தாப்பு பத்திரமாய் திண்ணை மேல் நின்று.//

    அந்த சிறுமியின்(தங்களின்)சிரிப்பு ஒன்றே உங்கள் பள்ளிப்பருவம் எவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.

    ***********************

    //ஓடி கடைசி வீட்டுத் திண்ணை விளிம்பில் சடன் ப்ரேக் போட்டு (கார் அல்ல,நாங்கள்) நிற்போம்.//

    இந்த வரிகள் படிப்பவரையும் குழந்தையாக்கி விடுகிறது.

    *******************

    //இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். எழுத எடுக்கும் நேரத்தை விட அந்த நினைவுகளிலிருந்து விடுபட்டு வர பிடிக்கின்ற நேரம் அதிகமாகி விடுகிறது.//

    உண்மைதான். இந்தப் பதிவைப் படிக்க ஆரம்பிக்கும் பொழுதே எங்களுடைய பள்ளிப்பருவ நினைவுகள் இடையில் வந்து வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.

    உங்களுடைய பின்னூட்டத்தின் பதில்களே ஒரு பதிவு போலாகிவிட்டது.

    இந்தப் பதிவு எழுதப்பட்ட நாட்களில் பிளாக் என்பதையே நான் அறிந்திருக்கவில்லை. தாங்கள் எல்லாம் எந்தனை மூத்தவர்கள்(சீனியர்)என்பதும், நான் ஒரு கத்துக்குட்டி என்பதும் விளங்குகிறது.

    *******************

    //பாலமித்ரா, ரத்ன பாலா, கோகுலம் சிறுவர் இதழ்களுக்கு வாசகர் கடிதங்கள் எழுதி, போகிற வழியில் அரச மரத்து பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு என் கையால் போஸ்ட் செய்து விட்டு வருவேன். பிள்ளையார் அருளால் அவை யாவுமே வெளிவந்து சிறுசன்மானமும் வரும். சிலவற்றின் மனி ஆர்டர் ரசீது இன்னும் என் வசம்:)!.//

    விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது இதுதானோ?!

    பதிலளிநீக்கு
  121. பொக்கிஷப் பதிவு!!!!. மிக நீண்ட தூரம் நினைவலைகளில் பின்னோக்கிச் சென்று மீண்டேன்!!!!...பின்னூட்டங்களும் அருமையாக இருக்கின்றன. திரும்ப திரும்ப படிக்கத் தூண்டும் பதிவு!!!!. பகிர்வுக்கு மிக்க நன்றி!!!!

    பதிலளிநீக்கு

  122. பார்வதி இராமச்சந்திரன் அவர்கள் பின்நூட்டத்தைப்பார்த்து விட்டு நானும் அங்கு பதிவையும் நூற்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்களையும் எனது உட்பட மறுபடியும் படித்து ரசித்தேன்.

    சுப்பு ரத்தினம் என்ற பெயரில் இருந்த என்னை கவி நயா அவர்கள் கேசட்டில் கொடுத்து என்னை சுப்பு தாத்தா என்று பெயர் மாற்றம் செய்து விட்டார்கள் எனினும் அந்த சுப்பு ரத்தினம் என்ற பெயரிலே அந்த ஆண்டுகளிலே குறிப்பாக, திண்ணை பற்றிய பதிவுகளுக்கு எழுதிய பின்னூட்டங்கள் எல்லாமே அந்தக்காலத்துக்கு கொண்டு சென்று விட்டது.

    மறுமுறை இந்த பதிவினை படித்து மகிழ வாய்ப்பு தந்த பார்வதி ராம சந்திரன் அவர்களுக்கு நன்றி.

    சுப்பு தாத்தா.@ subbu rathinam
    மீனாட்சி பாட்டி.

    பதிலளிநீக்கு
  123. @திருவாரூரிலிருந்து சரவணன்,

    நன்றி சரவணன். கதைகளில் கொண்டு வாருங்கள் நினைவுகளை. வாசிக்கக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  124. படித்து முடித்தவுடன் என்ன பின்னுட்டம் எழுதுவதுன்னே தெரியவில்லை! காலம் கடந்தும் நிற்பது அழகிய நினைவுகள் மட்டுமல்ல, அற்புதமான எழுத்தும்தான். எத்தனைப் பேரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளீர்கள்...,

    பதிலளிநீக்கு
  125. இந்தப் பதிவு படித்து பின்னூட்டமிட்ட நினைவு இருக்கிறது. இப்போது தேடிப்பார்க்கிறேன், காணோமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதன் இணைப்புக் கொடுக்கப்பட்ட பதிவுகளில் இட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin