ஞாயிறு, 27 மார்ச், 2016

மாம்பழம் சாப்பிடலாம் வாங்க..

பெங்களூரில் சென்ற வாரத்தில் தொடர்ந்து இரண்டு தினங்கள் இரவில் மட்டும் மழை. “அடிக்கிற வெயிலுக்குக் காலையிலும் கொஞ்சம் பெய்தால் நல்லாருக்குமே” என்ற போது “இது மாங்கா மழை. இப்படித்தான்.. லேசாப் பெய்ஞ்சு விட்டிரும்” என்றார் வீட்டுப் பணிகளில் எனக்கு உதவ வரும் பெண்மணி.

“மாங்கா மழையா.. அப்படின்னா..” ஆச்சரியமாய்க் கேட்டேன்.

“மாம்பழ சீஸன் நெருங்குதில்லையா? மரத்திலிருக்கும் மாங்காய்களப் பழுக்க வைக்கவும், சீஸன் வர்றத நமக்கு ஞாவப்படுத்தவும் வர்ற மழைக்குப் பேருதான் மாங்கா மழை” என்று சிரித்தார்.

அட.. ஆமாம். மாம்பழ சீஸன் வந்துட்டே இருக்கே. போன கோடை விடுமுறைக்கு தம்பி பெங்களூர் வந்திருந்தபோது எனக்கும் தங்கைக்கும் கொண்டு வந்த மாஞ்சோலை தோட்டத்து(விவரம் இறுதியில்) செந்தூர மாம்பழங்களும், அப்போது எடுத்த படங்களும் கூடவே நினைவுக்கு வர இதோ இந்தப் பகிர்வு.

பழங்களின் ராஜா மாம்பழம். அதை எப்படி ரசித்து ருசித்துச் சாப்பிடணும்னு காட்டுகிறார் எங்க வீட்டு இளவரசர். கூடவே அதன் நற்பலன்கள் என்னென்ன என்பதையும் தெரிஞ்சுக்கலாம் வாங்க....

[அனைத்துப் படங்களும் 35mm லென்ஸில் எடுக்கப்பட்டவை.
தகவல்கள்: இணையத்திலிருந்து..]
முதலில் ஒரு கோப்பை மாம்பழம் ( சுமார் 225 கிராம்) சாப்பிடுவதில் கிடைக்கிறது தினம் 105 கலோரிகள். அதில் என்ன என்னவெல்லாம் இருக்கின்றன என்பதை முதலில் பார்க்கலாம்:

 76% விட்டமின் C (ஆன்டி-ஆக்ஸிடன்ட், எதிர்ப்பு சக்தி அதிகரிக்க)
25% விட்டமின் A (ஆன்டி-ஆக்ஸிடன்ட், பார்வை சக்திக்கு)
11% விட்டமின் B6 + B விட்டமின்கள் (மூளையில் ஹார்மோன் உற்பத்திக்கு, இதயநோய் தடுப்புக்கு)
9% ப்ரோபயாடிக் ஃபைபர்
9% காப்பர் (முக்கிய என்ஸைம்கள் மற்றும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் பெருகிட)
7% பொட்டாஸியம் ( உடலில் அதிக அளவில் சேரும் சோடியத்தை பாலன்ஸ் செய்ய)
4% மெக்னீஸியம்

சுவையான தின்பண்டம்:


*சிப்ஸ், குக்கீஸ் என நொறுக்குத் தீனியைத் தேடாமல் மாம்பழத் துண்டுகளைச் சாப்பிட்டு மகிழுங்கள்.

எதிர்ப்பு சக்தி:
*அதிசயக்க வைக்கும் வகையில் ஏராளமான விட்டமின் சத்துக்களைக் கொண்டது மாம்பழம். விட்டமின் C மற்றும் A ஆகியவற்றோடு, இதிலுள்ள 25 விதமான carotenoids நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து நாம் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன.

தெளிவான பார்வை:

*தெரியுமா உங்களுக்கு?  வைட்டமின் "A" நிறைந்தது மாம்பழம். ஒருநாளில் நம் உடலுக்குத் தேவையான விட்டமின் A, ஒரு கோப்பை மாம்பழத் துண்டுகளில் நமக்குக் கிடைத்து விடுகின்றன. தெளிவான ஆரோக்கியமான கண்பார்வைக்கு உதவுவதோடு கண்கள் உலராமல் இருக்கவும் உதவுகிறது மாம்பழம்.

அழகான சருமம்:
*பழத்தில் இருக்கும் கரோட்டினாய்டு பீட்டா-கரோட்டீன் என்னும்
ஆன்டி ஆக்ஸிடன்ட் சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தோற்றப் பொலிவை அதிகரிக்கிறது.

கிடைக்கிறது பலம்:
*உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது மாம்பழத்தில். அனிமியாவை அண்ட விடாது.

ஞாபக சக்தி:
*படிப்பதெல்லாம் மறக்கிறதா? இதிலிருக்கும் க்ளூடமைன் ஆஸிட், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், நம் சிந்தனையை ஒருமுகமாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்ற புரோட்டின்.

மேலும்,
* இதிலிருக்கும் என்ஸைம்கள் புரோட்டினை உடைத்து ஜீரண சக்திக்கு உதவுகின்றன.

*பழத்தில் இருக்கும் ஏராளமான விட்டமின்களும் ஊட்டச் சத்துக்களும் வயிறு நிறைந்த உணர்வைத் தருகின்றன. அதிகப்படி கலோரிகளை எரித்து உடல் எடை குறைப்புக்கு உதவுகின்றன

* அதிகப்படியான அளவில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராடவும், சரும சுருக்கத்தைப் போக்கவும் உதவுகின்றன.
* இதிலிருக்கும் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள், உயர் இரத்த அழுத்தம், இதயப் பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கிறது.

* சருமத்திலிருக்கும் பருக்களை மட்டுமின்றி கரும்புள்ளிகளையும் நீக்க வல்லது. கோடையில் மாம்பழ ஃபேஷியல் மிகவும் பிரபலமானது. அவை உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்றி, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மாம்பழத்தை மெலிதாகச் சீவி அவற்றை முகத்தின் மேல் 10-15 நிமிடங்கள் வைத்திருந்து, பிறகு முகத்தைக் கழுவிப் பாருங்கள்.
*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் அதிலும் பச்சை மாங்காய் சளி மற்றும் இருமலுக்கு பெரிதும் சிறப்பான தீர்வைத் தரும்.

*மாம்பழமானாலும் சரி, மாங்காயாக இருந்தாலும் சரி. சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் பச்சை மாங்காயை நறுக்கி, நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைப் பருகி வந்தால், இதய நோய், மாரடைப்பு போன்றவை வராமல் இருக்குமெனக் கூறப்பட்டிருக்கிறது.

*கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள பெரிதும் உதவுகிறது மாம்பழம். உச்சி வெயில் தலைப் பிளக்கிறதா? மாம்பழத் துண்டுகளோடு சிறிது நீர், சர்க்கரை, தேன் சேர்த்து ஜூஸரில் சுற்றி அருந்தினால் சூடு தணியும்.

***






17 கருத்துகள்:

  1. எங்களூரிலும் அப்பூஸ்(அல்போன்சா) சீசன் ஆரம்பித்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே இன்னும் கடைகளுக்கு வரவில்லை. நன்றி சாந்தி :).

      நீக்கு
  2. இங்கு மாவடுக்கள் கண்ணில் பட்டுக் கொண்டிருந்தன. சீக்கிரம் பழங்களைக் காணலாம். சர்க்கரை வியாதிக்காரர்கள் மாம்பழம் சாப்பிடக் கூடாது என்றுதான் மருத்துவம் சொல்கிறது.

    இளவரசர் நவரசங்களையும் காட்டி போஸ் கொடுத்துச் சாப்பிட்டிருக்கிறார். அடுத்து ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்து, இதே போல போஸ் கொடுக்கச் சொன்னால் அவரும் ரசிப்பாரே.....!

    :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /சர்க்கரை வியாதி/ இணையத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பகிர்ந்திருந்தேன். அந்தக் குறிப்பை நீக்கி விட்டேன்.
      ஐஸ்க்ரீமா? நல்ல ஐடியா கொடுக்கிறீர்கள்:)!

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. எங்கள் வீட்டிலும் ஒரு மாமரம் இருக்கிறது. என்ன வெரைட்டி என்று தெரியாது. இப்போது காய்கள் தொங்குகின்றனைவை முத்ட்க்க்ஹிப் பழுக்க இன்னும் சில நாட்கள் ஆகலாம் காய்க்கும் காய்களில் எங்களுக்கு 20 சதவீதம் கிடைத்தாலே அதிகம் இப்போது பள்ளுஇ விடுமுறை துவங்குகிறது காய் உள்ள மரம் கல்லடி படுகிறதுகாய்கள் பழுத்தால் இனிப்பாக இருக்கும் மாம்பழ சீசனில் எங்கள் வீட்டு பழங்களே நாங்கள் சாப்பிடுவோம் காயாக இருக்கும் போது அதை ச்ற்றே வேகவைத்துத் தோல்நீக்கிஅதன் பல்ப்பை மிக்சியில் அரைத்து விழுதாக்கி வெல்லத்தையும் கலந்து வாசனைக்கு ஏலக்காய் சேர்த்து ஜூசாகக் குடித்தால் உடல் சூட்டுக்கு நல்லது என்பார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டிலேயே கிடைக்கும் பழம். கெமிகல் சேர்த்து பழுக்க வைத்ததோ என்கிற பயம் இன்றி சாப்பிடலாம். குறிப்புக்கு நன்றி GMB sir.

      நீக்கு
  4. அருமையான மாம்பழ பயன்கள். அழகான படங்கள்.
    உங்கள் தம்பிக்கு வாழ்த்துக்கள். மருமகனுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அருமை
    தங்கள் வீட்டு இளவரசருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. மாம்பழம்... சொல்லும்போதே நாவூறும்!! யாருக்குத்தான் பிடிக்காது... என்று சொல்ல வழியில்லை. பிடிக்காத ஆத்மாக்களும் உண்டு... அல்லது “மாம்பழப் பேய்கள்” போன்று உண்ணத் தெரியாதவர்களும் உண்டு எனச் சொல்லலாம்.... அவ்வ்வ்வ்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சரியம்தான். ஆனாலும் தனிப்பட்ட விருப்பு என ஒன்றிருக்கிறதே :)! நன்றி ஹுஸைனம்மா.

      நீக்கு
  7. படங்கள் ...ஆஹா... .ஓஹோ ....

    தகவல்கள் அருமை ....

    பதிலளிநீக்கு
  8. சாறு சொட்டச்சொட்ட மாம்பழத்தை ரசித்து ருசித்து உண்ணும் இளவரசரை ரசித்துப் படம்பிடித்திருக்கும் உங்கள் கரங்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin