திங்கள், 7 மார்ச், 2011

மகளிர் தின வாரம் - வலைச்சரமாகிறது முத்துச்சரம்

வலைச்சரம் மூலமாக உங்களை இந்த ஒருவாரமும் சந்திக்க இருப்பதில் அளவற்ற மகிழ்ச்சி. பதிவுலகம் வந்த மூன்று மாதங்களிலேயே சீனா சார் இந்த வாய்ப்பை வழங்கிய போது அதிகம் பேரை அறிந்திராத நிலையில் 'இன்னும் சிலகாலம் செல்லட்டுமே’ எனக் கேட்டுக் கொண்டது சரியா தவறா தெரியவில்லை. ஏனெனில் அதன் பிறகு வெவ்வேறு சமயங்களில் மூன்று முறை வாய்ப்பு தேடிவந்த போதும் ஏற்றுக் கொள்ள இயலாத சூழல். புரிந்தணர்வுடன் 'வலைச்சரம் காத்திருக்கும்’ எனப் பெருந்தன்மையுடன் சொன்ன சீனா சாரின் ஆசிகளுடன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டாயிற்று.

ஒருவகையில் தாமதமாகச் செய்வதன் பலன் இரண்டரையாண்டு வலையுலக வாசிப்பில் கூடுதலாகச் சிலரை அறிமுகப் படுத்தக் கிடைத்த நல்வாய்ப்பு என்றே கருதுகிறேன். அதுவுமின்றி மகளிர் தினம் இடம் பெறும் வாரத்தில் முதல் சில நாட்களை மகளிர் சிறப்புச்சரமாகத் தொடுக்க இருப்பதில் பெருமை அடைகிறேன். எங்கள் சக்தியை நாங்களே கொண்டாடிக் கொள்ளாவிட்டால் எப்படி:)?

இன்று முத்துச்சரம் ஒரு அறிமுகம். தொடர்ந்து வாசிப்பவர்களாகவே இருப்பினும் நீங்கள் தவறவிட்ட முத்துக்கள் சில கைகளுக்கு அகப்படக் கூடும்:)! ஆகவே வாருங்கள் வலைச்சரத்துக்கு, இன்று மட்டுமல்ல.. தினம் தினம் ஒருவாரத்துக்கு:)!!!
***

பி.கு: வலைச்சரத்தில் பதிந்த ஒவ்வொரு நாள் பதிவையும் வாசிப்பவர் வசதி கருதி, அதேநாட்களில் முத்துச்சரத்தில் இட்ட அறிவிப்புப் பதிவுகளில் இப்போது (14-11-2011) இணைத்துள்ளேன். வலைச்சரத்தில் வந்த கருத்துக்களைக் காண விரும்பினால் முந்தைய பத்தியில் இருக்கும் இணைப்புக்குச் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்:





வலைச்சரம் மூலமாக உங்களை இந்த ஒருவாரமும் சந்திக்க இருப்பதில் அளவற்ற மகிழ்ச்சி. பதிவுலகம் வந்த மூன்று மாதங்களிலேயே சீனா சார் இந்த வாய்ப்பை வழங்கிய போது அதிகம் பேரை அறிந்திராத நிலையில் 'இன்னும் சிலகாலம் செல்லட்டுமே’ எனக் கேட்டுக் கொண்டது சரியா தவறா தெரியவில்லை. ஏனெனில் அதன் பிறகு வெவ்வேறு சமயங்களில் மூன்று முறை வாய்ப்பு தேடிவந்த போதும் ஏற்றுக் கொள்ள இயலாத சூழல். புரிந்தணர்வுடன் 'வலைச்சரம் காத்திருக்கும்’ எனப் பெருந்தன்மையுடன் சொன்ன சீனா சாரின் ஆசிகளுடன் ஆசிரியர் பொறுப்பைத் தொடங்குகிறேன். ஒருவகையில் தாமதமாகச் செய்வதன் பலன் இரண்டரையாண்டு வலையுலக வாசிப்பில் கூடுதலாகச் சிலரை அறிமுகப் படுத்தக் கிடைத்த நல்வாய்ப்பு என்றே கருதுகிறேன்.

மகளிர் தினம் இடம் பெறும் இவ்வாரத்தில், முதல் சில நாட்களை மகளிர் சிறப்புச் சரமாகத் தொடுக்க இருப்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி, என்னைப் பற்றிய அறிமுகமாய் முத்துச்சரத்தின் சில முத்துக்கள்:

தீராத ஆர்வம்..பேனாவும் காமிராவும்..: “முடிவற்ற தேடலிலும், கற்றலிலுமே கலைகள் வளருகின்றன.

சென்ற வருட இறுதியில் கடந்த வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் ஒரு டைரிக்குறிப்பாக எழுதியது. இதுவே ஓரளவு என்னைப்பற்றிய அறிமுகத்தைத் தந்து விடும்.

மனதுக்குப் பிடித்தமான பதிவுகள் என பல இருப்பினும், சமூகம் மற்றும் வாழ்வு சார்ந்ததாக எழுதியவற்றில் சிலவற்றை முன் நிறுத்த விரும்புகிறேன்.

கட்டுரைகள்:

இவர்களும் நண்பர்களே:. “கடவுள் நம் மீது கொண்ட கருணையினால் நல்ல குடும்பம் பெற்றோர் குழந்தைகள் அமைய பெறுகிறோம். ஆனால் அப்படி அமையப் பெறாதவர்... ஏதோ ஒரு சமயத்தில் கடவுளின் கருணை சற்றே குறைந்ததனால் இப்போது ஆதரவற்றோர் இல்லங்களில். இருப்பினும் இவர்களை என்றைக்கும் கடவுளின் குழந்தைகளாகவே அறியப் பட வைத்து பாசம் காட்டுவதும் கடவுள்தான். அவரது தேவைகளை உணர்ந்து தீர்த்து வைக்கத் தூதுவர்களாய் பிற மனிதர்களாகிய நம்மை அனுப்புவதும் கடவுள்தான்.

இடுகையின் நோக்கம் தமிழ்மணம் விருது 2009-ல் சமூகம் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றதன் மூலம் பலரையும் சென்றடைந்ததில் மனதுக்கு ஒரு நிறைவு.

செல்வக் களஞ்சியங்கள்
: “எந்த எதிர்பார்ப்புகளுமின்றி குழந்தைகளுக்கு நாம் தரும் அன்பே பரிசுத்தமானது. அதில் ஆண் என்ன பெண் என்ன என நினைத்துப் பார்ப்போம்.”

இக்கருத்தை பலரிடம் எடுத்துச் சென்ற இணைய இதழ்களுக்கும், லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகைக்கும் நன்றி.
***
சதுரங்கப் பலகையில் சர்வ சுதந்திரமாய்...: “சதுரங்கப் பலகையில் எவருக்கும் இல்லாத சக்தி ராணிக்குதான் தரப்பட்டுள்ளது. மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்?

யூத்ஃபுல் விகடனில் வெளியாகி, பின்னர் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையின் புத்தாண்டு சிறப்பிதழ் மூலமாக ‘பெண்ணுக்குப் பேதம் வேண்டாம்’ எனப் பலரைச் சென்றடைந்த இக்கட்டுரை ‘பெண்ணியம்’ தளத்திலும்.
***
நல்வாழ்வு தந்தாயே நீயே!:“அம்மாக்கள் என்றைக்கும் அம்மாக்களாகவே இருக்கிறார்கள் தன்னலமற்ற பாசத்தைப் பொழிந்து கொண்டு. அதை நாம் பயன்படுத்திக் கொள்கிற மாதிரி எந்த சமயத்திலும் நடந்திடக் கூடாது. நாமும் ஆகி விட்டோம் பெற்றோராய்.

‘அம்மா அருமை எப்போ தெரியும்?’ ஆக லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையிலும், யூத்ஃபுல் விகடன் அன்னையர் தினச் சிறப்புப் பரிந்துரையிலும்.
***
உலகம் உய்ய..-தண்ணீர் தினத்துக்காக..”:“அழிக்கப்பட்டு வரும் காடுகரைகள், காணாமல் போய்க் கொண்டிருக்கும் விளை நிலங்கள், வெட்டி வீழ்த்தப்பட்டு வரும் மரங்கள், நதிகளில் கலக்கும் ஆலைக்கழிவுகள், மாசாகும் சுற்றுப்புறம் என ஒன்றை அடைய ஒன்றை அழித்து ஓடிக் கொண்டேயிருக்கிறோம்.., மேலேயும் போக முடியாமல் எந்தப் பக்கமும் திரும்ப வழியற்ற ஒருபுள்ளியில் நின்றுவிடக் கூடிய அபாயத்தை உணராமல்.

வந்து விட்டது கோடை. இந்நேரம் அவசியம் பகிர வேண்டிய பதிவுகளில் ஒன்றாக எண்ணுகிறேன். யூத்ஃபுல் விகடன் பரிந்துரையிலும், வெள்ளி நிலா இதழிலும்..
***
'திண்ணை நினைவுகள்'-கயல்விழி முத்துலெட்சுமிக்கு ராமலெட்சுமியின் கடிதம்

இக்கட்டுரையைக் குறிப்பிடாமல் கடந்து விட முடியாது. என் வலைப்பூவைப் பற்றி பேச ஆரம்பிக்கையில் பலரும் குறிப்பிட்டு சிலாகிக்கும் முதல் இடுகை இதுவாகவே இருக்கிறது பெரும்பாலும். பதிவிலிருக்கும் கடைசி பின்னூட்டங்களில் someone like you என்பவரின் ஒருசில வார்த்தைகள் மட்டும் இங்கே: “அந்தக் காலத்து classics திருவிளையாடல், காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம்.........வரிசையில் இந்தக் கடிதமும் ஒரு classic, ஒரு காவியம்.

கலைமகள் மாத இதழின் வலைப்பதிவர் அறிமுகத்திலும் பரிந்துரைக்கப் பட்ட இப்பதிவு, கலாச்சாரம் பிரிவில் தமிழ்மணம் விருது 2008-ன் இறுதிச் சுற்றை எட்டிய ஒன்றும் ஆகும்.

கவிதைகள்:
அழகிய வீரர்கள், ராணித்தேனீ - நவீன விருட்சம்

முகமூடிகள், நட்சத்திரங்கள் - உயிரோசை

பிறழாத பிரவாகம், கேள்விகளைத் தேடி..
- அகநாழிகை

ஒற்றைப் பேனாவின் மை - திண்ணை

நோட்டு மாலைகள், சீற்றம், பால்நிலா - யூத்ஃபுல் விகடன்

ஒரு நதியின் பயணம்
, பவனி - வடக்கு வாசல்

குழந்தைகளை அவதானித்தவையாக, ஆனந்த விகடன் சொல்வனத்தில் பொம்மையம்மா’, கல்கி கவிதை கஃபேயில்தவிப்பு’,‘குளிர்நிலவு’!


சிறுகதைகள்:
வயலோடு உறவாடி..- தினமணி கதிர்: “தோட்டத்தில் பம்பு செட்டுக் குளியல், பண்ணையில் துள்ளும் கன்றுகளோடு ஆட்டம், வயலில் வைக்கோற் போரையே சறுக்கு மரமாக்கி வழுக்கி ஆடியது, வாழை கொய்யா பப்பாளி இளநீர் என பறித்த கையோடு குளிரக் குளிர வயிற்றை நிரப்பியது எல்லாம் எப்போது நினைத்தாலும் மனது குளிர்ந்து போகும்.
***
பொட்டலம் : லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்:. “தம் போன்ற மக்களுக்கும் இதெல்லாம் சாத்தியம் எனக் கண்ட கனவு எல்லாம் கானல் நீரேதானா என்ற கேள்வி எழும்பியது.
***
உலகம் அழகானது - கலைமகள் தீபாவளி மலர்:“விலங்குகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? இவர்கள் போன்ற கடைக்கோடி மனிதர் முதல் கோடானு கோடீஸ்வரர் வரை ‘சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்’ என சொல்லித் தங்களை நியாயப்படுத்திக் கொண்டு, இவ்வுலகையே போட்டியும் பொறாமையும் நிறைந்ததாக்கி விட்டார்கள் என்றே தோன்றியது.
***
கைமாறு - தினமணி கதிர்:“தேவைக்கு உதவியா பெறப்படுற.. உயிர் காக்குற.. திரவம்..... பணம் கட்டி வாங்கினாலும் இது நீங்க இலவசமா எடுத்துக்கற மாதிரிதான். ஏன்னா நம்ம நாட்டில எல்லோருமே எதையுமே இலவசமா வாங்கி ருசி கண்டுட்டோம்.
***

ஆயர்ப்பாடி மாளிகையில்.. - தினமணி கதிர்
: “ஆயர்ப்பாடி மாளிகைகள் அன்பாலே நிறைந்து விட்டால் அங்கே கிருஷ்ணன், பலராம் மட்டுமில்லாமல் அவர்கள் நண்பர்களும் யசோதைக்கு தாய்மையைத் தர முடிகிற அதிசயமும், குடும்பத்தையே குதூகலிக்க வைக்க முடிகிற அற்புதமும்..
***
விசுவாசம் - கலைமகள்
விசுவாசங்கிறது ஒருவரோடு உயர்விலேயும் தாழ்விலேயும் கூடவே இருக்கிறது மட்டுமில்ல. நம்ம நலனுக்கு ஒவ்வாததாய் ஏதும் நடக்கையில் பெரிசு பண்ணாத இருக்கிறதுந்தான்.
***

நூல் விமர்சனங்கள்:
யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - நிலாரசிகன் சிறுகதைத் தொகுப்பு: “ . “..மாறுபட்ட களங்களில் இயல்பான அழகான எழுத்து நடையில். சிறுகதைப் பிரியர்களின் சேகரிப்பில் அவசியம் இருக்க வேண்டிய தொகுப்பு.
***
கோவில் மிருகம் - விநாயக முருகன் கவிதைத் தொகுப்பு :“அன்றாட அவலங்களை, மனிதரின் மறுபக்கங்களை, மடிந்து வரும் நேயங்களை ஒரு நெடும் பயணத்தில், பாரதியின் சீற்றம் கலந்த எள்ளலுடன், சமூக அக்கறையும் ஆதங்கமும் தொனிக்க..
***

இந்தத் தளத்தில் தொடர்ந்து இயங்க ஆசை. நேரமின்மையால் இயலவில்லை. வாசிப்புக்காக அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்கிற புதுவருட நிலைப்பாட்டினை செயல்படுத்த இயலாமல் இரண்டு மாதங்கள் ஓடிவிட்டிருந்தாலும் நம்பிக்கை உள்ளது:)!


புகைப்படங்கள்:
புகைப்படங்களை முத்துச்சரத்தில் PiT மாதாந்திரப் போட்டிப் பதிவுகளாகவும், பேசும் படங்களாகவும், ஃபிளிக்கர் தளத்தில் [http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/] காட்சிக் கவிதைகளாகவும் பகிர்ந்து வருகிறேன். போட்டிக்காக படத்தைக் கொடுப்பதுடன் நின்று விடாமல் ஒவ்வொரு முறையும் இயன்றவரை ஒன்றுக்கும் மேலான படங்களை ஆர்வத்துடன் தொகுத்து வழங்கியது நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் அவற்றில் பல யூத்ஃபுல் விகடன் பரிந்துரையில் இடம்பெற்றன. காட்சிப் படைப்புகளுக்காகத் தொடர்ந்து 2009 மற்றும் 2010-ல் கிடைத்த தமிழ்மணம் விருதுகளை மிகச் சிறந்த அங்கீகாரமாகக் கருதுகிறேன்!

தேவதை பத்திரிகை தனது ‘வலையோடு விளையாடு’ பக்கத்துக்காக முத்துச்சரத்தை அறிமுகம் செய்த வேளையில் இரண்டு பக்கங்களுக்கு நான் எடுத்தப் புகைப்படங்களை வெளியிட்டுச் சிறப்பித்திருந்தது.

மேலும்,

‘இந்த வார சிறந்த படம்’ ஆக PiT தளம் கெளரவித்த படம், “கடல வாங்குங்க

PiT தளத்தில் கற்ற பாடத்தால் பிற்தயாரிப்பு செய்ததில் பொலிவு பெற்று, பரிசாக ‘இந்த வார சிறந்த படமாய்’ தனிக்கவனம் பெற்ற “போகுமிடம் வெகு தூரமில்லை”. இப்பதிவில் ஃப்ளிக்கர் தளத்தில் எப்படிச் சேர வேண்டும் என்பது குறித்த விவரங்களையும் தந்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர்களுக்குப் பயனாகலாம்.

Land Mark{PiT]: தமிழ்மணம் விருது 2009-ல் வெள்ளிப் பதக்கம், யூத்ஃபுல் விகடன் பரிந்துரை

ஏரிக்கரைப் பூங்காற்றே-குமரகம் புகைப்படங்கள்
[PiT}: தமிழ்மணம் விருது 2010-ல் வெள்ளிப் பதக்கம், யூத்ஃபுல் விகடன் பரிந்துரை

தண்ணி காட்டறேன்[PiT]:கடல், ஏரி, குளம்,அருவி, வாய்க்கால், கிணறு, ஊற்று, பம்ப் செட் எதையும் விட்டு வைக்கவில்லை.

ஒற்றை[PiT]: சிங்கிள் சிங்கிளாய் சிலிர்ந்து நிற்கும் விலங்கு பறவைகளின் அணிவகுப்பு

உதய கீதங்களும் அந்தி ராகங்களும்
[PiT, யூத்ஃபுல் விகடன் பரிந்துரை]: வானின் வர்ண ஜாலங்கள்

இந்திய சிற்பக்கலையின் பெருமையை உலகுக்குக் காட்டும் வாய்ப்பாக அமைந்த பதிவுகள்:
1.வழிப்பாட்டுத் தலங்கள்[PiT, யூத்ஃபுல் விகடன் பரிந்துரை]
2.இறையும் கலையும் - நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள்

மலர்களைக் கண்டு மயங்காத மனமும் உண்டோ..!?!
1.பெங்களூரு லால்பாக்-குடியரசுதின மலர் கண்காட்சி 2010
2.2011 பெங்களூரு குடியரசு தின மலர் கண்காட்சி புகைப்படங்கள்
3.மொட்டு ஒண்ணு மெல்ல மெல்ல..

சமீபத்தில் ஓடும் [ஜெட் வேகத்தில் பறந்த என்றும் சொல்லலாம்] வண்டியிலிருந்து செய்த முயற்சியாக, அதிவேகத்தில் சிறையான எழிலோவியப் படங்கள்-கிருஷ்ணகிரி மாம்பழங்கள்.

சுய அறிமுகம் சுய புராணமாகி விட்டது! இருக்கட்டும் விடுங்களேன், மகளிர் தின வாரத்தில் எங்கள் சக்தியை நாங்களே கொண்டாடிக் கொள்ளாவிட்டால் எப்படி:)?

நாளை சந்திப்போம்!
*****

74 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..மகளிர் தினத்தன்றும் வலைச்சர ஆசிரியப்பணியில் ஜொலிக்கபோகின்றீர்கள்.செவ்வன பணியை தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. >>>எங்கள் சக்தியை நாங்களே கொண்டாடிக் கொள்ளாவிட்டால் எப்பூ..டி:)?


    ரைட்டு

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் .. This is Long overdue. அசத்துங்க

    பதிலளிநீக்கு
  4. சொன்னா நம்பமாட்டீங்க.. நேத்து வலைச்சரத்துல ஆசிரியர் பட்டியல்ல இருக்கற ஒவ்வொரு ஆசிரியரின் பதிவுகளையும் சும்மா வாசிச்சிக்கிட்டிருந்தேன். அட!!.. நம்ம ராமலஷ்மியை இதுல காணோமேன்னு நினைச்சுக்கிட்டேன். இன்னிக்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்க. ஒரு வாரமும் கலக்குங்க :-)))

    பதிலளிநீக்கு
  5. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    ராமலக்ஷ்மி மகளிர்தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.மகளிர்தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. மணமுள்ள மலர்களுடன் வளரட்டும் வலைச்சரம் வளமான உங்கள் கரங்களால்...
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள் மா ராமலக்ஷ்மி.
    மணம் வீசப் போகும் இந்த வாரம் இனிமையாகச் செல்லப் போகிறது.
    ஆவலுடன் காத்திருக்கிறோம். நீங்கள் இதுவரை வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றதில்லை என்பதே அதிசயம்.

    நிறைகுடம்.

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. மகளிர் தின வாரத்தில் உங்கள் தளம் வலைச்சரத்தில் வருவது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துகள் சிறக்கட்டும் உங்கள் பணி
    ஓங்கட்டும் உங்கள் நாமம்

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் மக்கா..

    பதிலளிநீக்கு
  13. அப்பாடி இந்த வலைப்பூவுக்கு வந்து எத்தனை நாள் ஆகுது. ரொம்ப நாள் கழிச்சு வர்ரேன். ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். ஏதோ நம்ம வீட்டுக்கு நாமே வந்த மாதிரி ஒரு உணர்வு. கண்டிப்பா வலைச்சரத்துக்கு தினமும் வந்துட்டா போச்சு!

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்கள் அக்கா :)

    முத்துச்சரத்தால் வலைச்சரம் ஜொலிக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  15. திறன் பட செய்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. அக்கா...மகளிர் தின வாழ்த்தும் வலைச்சர வாழ்த்தும் !

    பதிலளிநீக்கு
  17. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் பூங்கொத்தோடு!

    பதிலளிநீக்கு
  18. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி....எப்போதும் போலவே அசத்துங்கள்...

    பதிலளிநீக்கு
  20. வாழ்த்துக்கள் ராமலஷ்மி.

    பதிலளிநீக்கு
  21. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    ராமலக்ஷ்மி மகளிர்தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  22. வலைச்சர பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  23. இந்த ஏழு நாட்கள் ஏன் இன்னும் வரவில்லை என்று நான் பல நாள் நினைத்துக் கொண்டிருந்தேன். வாழ்த்துக்கள்.

    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  24. ஸாதிகா said...
    //வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..மகளிர் தினத்தன்றும் வலைச்சர ஆசிரியப்பணியில் ஜொலிக்கபோகின்றீர்கள்.செவ்வன பணியை தொடர வாழ்த்துக்கள்//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  25. சி.பி.செந்தில்குமார் said...
    //>>>எங்கள் சக்தியை நாங்களே கொண்டாடிக் கொள்ளாவிட்டால் எப்பூ..டி:)?


    ரைட்டு//

    நன்றி செந்தில்குமார்.

    பதிலளிநீக்கு
  26. மோகன் குமார் said...
    //வாழ்த்துகள் .. This is Long overdue. அசத்துங்க//

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  27. அமைதிச்சாரல் said...
    //சொன்னா நம்பமாட்டீங்க.. நேத்து வலைச்சரத்துல ஆசிரியர் பட்டியல்ல இருக்கற ஒவ்வொரு ஆசிரியரின் பதிவுகளையும் சும்மா வாசிச்சிக்கிட்டிருந்தேன். அட!!.. நம்ம ராமலஷ்மியை இதுல காணோமேன்னு நினைச்சுக்கிட்டேன். இன்னிக்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்க. ஒரு வாரமும் கலக்குங்க :-)))//

    மிக்க நன்றி அமைதிச்சாரல்:)!

    பதிலளிநீக்கு
  28. கோமதி அரசு said...
    //வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    ராமலக்ஷ்மி மகளிர்தின வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  29. சே.குமார் said...
    //வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.//

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  30. சமுத்ரா said...
    //மகளிர்தின வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி சமுத்ரா, தங்கள் முதல் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  31. தமிழ் உதயம் said...
    //மகிழ்ச்சி. வாழ்த்துகள்.மகளிர்தின வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  32. குமரி எஸ். நீலகண்டன் said...
    //மணமுள்ள மலர்களுடன் வளரட்டும் வலைச்சரம் வளமான உங்கள் கரங்களால்...
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி//

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  33. Chitra said...
    //Super! Congratulations!!!//

    நன்றி சித்ரா:)!

    பதிலளிநீக்கு
  34. Kanchana Radhakrishnan said...
    //அசத்துங்க//

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  35. வல்லிசிம்ஹன் said...
    //வாழ்த்துகள் மா ராமலக்ஷ்மி.
    மணம் வீசப் போகும் இந்த வாரம் இனிமையாகச் செல்லப் போகிறது.
    ஆவலுடன் காத்திருக்கிறோம். நீங்கள் இதுவரை வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றதில்லை என்பதே அதிசயம்.//

    எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும் என்பார்களே:)! நன்றி வல்லிமா.

    பதிலளிநீக்கு
  36. VELU.G said...
    //வாழ்த்துக்கள்//

    நன்றிங்க வேலு.

    பதிலளிநீக்கு
  37. கிரி said...
    //வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. மகளிர் தின வாரத்தில் உங்கள் தளம் வலைச்சரத்தில் வருவது மகிழ்ச்சி.//

    நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  38. நேசமுடன் ஹாசிம் said...
    //வாழ்த்துகள் சிறக்கட்டும் உங்கள் பணி
    ஓங்கட்டும் உங்கள் நாமம்//

    நன்றி ஹாசிம்.

    பதிலளிநீக்கு
  39. Kurinji said...
    //வாழ்த்துக்கள்!!!//

    நன்றி குறிஞ்சி.

    பதிலளிநீக்கு
  40. MANO நாஞ்சில் மனோ said...
    //வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் மக்கா..//

    மிக்க நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  41. அபி அப்பா said...
    //அப்பாடி இந்த வலைப்பூவுக்கு வந்து எத்தனை நாள் ஆகுது. ரொம்ப நாள் கழிச்சு வர்ரேன். ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். ஏதோ நம்ம வீட்டுக்கு நாமே வந்த மாதிரி ஒரு உணர்வு. கண்டிப்பா வலைச்சரத்துக்கு தினமும் வந்துட்டா போச்சு!//

    நன்றி அபி அப்பா:)!

    பதிலளிநீக்கு
  42. சுந்தரா said...
    //வாழ்த்துக்கள் அக்கா :)

    முத்துச்சரத்தால் வலைச்சரம் ஜொலிக்கட்டும்!//

    நன்றி சுந்தரா.

    பதிலளிநீக்கு
  43. சி.கருணாகரசு said...
    //திறன் பட செய்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.... வாழ்த்துக்கள்//

    நன்றி கருணாகரசு.

    பதிலளிநீக்கு
  44. சந்தனமுல்லை said...
    //நன்றி, வாழ்த்துகள், ராமலஷ்மி!//

    நன்றி முல்லை!

    பதிலளிநீக்கு
  45. ஹேமா said...
    //அக்கா...மகளிர் தின வாழ்த்தும் வலைச்சர வாழ்த்தும் !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  46. திகழ் said...
    //வாழ்த்துகள்//

    நன்றி திகழ்.

    பதிலளிநீக்கு
  47. அன்புடன் அருணா said...
    //வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் பூங்கொத்தோடு!//

    நன்றி அருணா:)!

    பதிலளிநீக்கு
  48. ஆயிஷா said...
    //வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.//

    நன்றி ஆயிஷா.

    பதிலளிநீக்கு
  49. S.Menaga said...
    //வாழ்த்துக்கள் அக்கா!!//

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  50. க.பாலாசி said...
    //வாழ்த்துக்கள் மேடம்..//

    நன்றி பாலாசி.

    பதிலளிநீக்கு
  51. ஈரோடு கதிர் said...
    //வாழ்த்துகள்//

    நன்றி கதிர்.

    பதிலளிநீக்கு
  52. T.V.ராதாகிருஷ்ணன் said...
    //வாழ்த்துகள்//

    நன்றி டிவிஆர் சார்!

    பதிலளிநீக்கு
  53. மாதேவி said...
    //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  54. பாச மலர் / Paasa Malar said...
    //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி....எப்போதும் போலவே அசத்துங்கள்...//

    நன்றி பாசமலர்.

    பதிலளிநீக்கு
  55. asiya omar said...
    //வாழ்த்துக்கள் ராமலஷ்மி.//

    நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  56. ஸ்ரீராம். said...
    //அட, வாழ்த்துக்கள்.//

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  57. இராஜராஜேஸ்வரி said...
    //வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    ராமலக்ஷ்மி மகளிர்தின வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  58. "உழவன்" "Uzhavan" said...
    //வலைச்சர பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துகள்!//

    நன்றி உழவன்.

    பதிலளிநீக்கு
  59. சகாதேவன் said...
    //இந்த ஏழு நாட்கள் ஏன் இன்னும் வரவில்லை என்று நான் பல நாள் நினைத்துக் கொண்டிருந்தேன். வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  60. தமிழ்மணம் இன்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.

    பதிலளிநீக்கு
  61. மகளிர் தின வாழ்த்துக்கள்.
    எங்கெ இங்கு மட்டும் காணவில்லையே என்று பல நாட்கள் நினைத்துண்டு.
    நினத்தேன். அது இன்று நடந்துவிட்டது.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin