Wednesday, July 22, 2009

LAND MARK - July PiT மெகா போட்டிக்கு

இம்மாதம் மெகாப் போட்டி. தலைப்பு: LANDMARK. பெங்களூரில் கடந்த ஒருவாரமாக வானம் மப்பும் மந்தாரமுமாகவே காணப்படுவதால் விதான் செளதா, விகாஸ் செளதா, UB City இவற்றைப் படம் பிடிக்க நினைத்து முடியாமல் போகவே, வழக்கம் போல் ஏற்கனவே எடுத்தவற்றில் தேர்ந்தெடுத்தது. ஒன்றிரண்டு மீள்படங்கள்,தலைப்புக்குப் பொருத்தமாய்த் தோன்றியதால்:)! ‘

[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரியுமாயின் உலவியில் 'view' க்ளிக் செய்து அதில் 'zoom-zoom in' செய்து காணக் கேட்டுக் கொள்கிறேன்.]


வங்கக் கடல் மீதினில்..


பல்லவர் பெருமையைப் பறைசாற்றும் கடற்கரைக் கோவில்அலைகடல் ஓரம் கலையழகுக் கோபுரம்[கடந்த PiT பதிவில் போட்டிக்கு அன்றி பார்வைக்கு வைத்ததில், பலருக்கும் பிடித்திருந்த இப்படமே மெகாவிற்கான என் தேர்வாக உள்ளது.]

முக்கடலும் சங்கமிக்கும் முனையினில்..


உட்கார்ந்து ஒரு ஞானி தியானித்ததால்
உலகப் புகழ் பெற்றது ஒரு பாறை!
உலகப் புகழ் பெற்ற குறளை
எழுதிய ஞானி எழுந்து நிற்பதால்
முக்(கியத்துவம்)தி பெற்றது மறு பாறை!

***

விவேகானந்தா மணிமண்டபம்***


1330 ஈரடிகளைத் தந்திட்ட ஐயனுக்கு
133 அடி உயரத்தில் செய்யப்பட்டிருக்கும் மரியாதை


***

தன்னை உணர.. ஞானம் பெற.. தியானமே வழிமைசூரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் "பைலாகுப்பே' என்னும் ஊரில், குஷால் நகர் என்னுமிடத்தில் உள்ளது இந்தத் தங்கக் கோவில். திபெத்திலிருந்து இந்தியா வந்து இப்பக்கம் குடியேறிய திபெத்தியர் கட்டியுள்ள பௌத்த மதக் கோவில்.

மிகப்பெரிய வளாகத்தில் வெவ்வேறு மண்டபங்களாக அமைந்துள்ளது. புத்த மதத்தின் மிக முக்கியமான அம்சம் தியானம். தன்னை உணர, ஞானம் பெற, புத்தரை அடைய, புத்தராக மாற தியானம் உதவுகிறது என்பது இவர்களுடைய கொள்கை. மேல் இருப்பது பிரதான தியான மண்டபம்.
***


தர்மச் சக்கரத்துடன் தங்கப் கோபுரம்
கோவிலின் இன்னொரு மண்டபம் இது. கோபுரம் தங்க நிறத்தில் மூன்று அடுக்குகள் கொண்டதாக அமைந்துள்ளது. உச்சியில் காணப்படும் தர்மச் சக்கரம் புனிதச் சின்னமாக மதிக்கப் படுகிறது.

கோபுரஉச்சியிலிருந்து கீழே உள்ள பாகங்களை இணைக்கிற விதமாய் பல வண்ணத் துணியினாலான நான்கு தோரணக் கொடிகள் உள்ளதை இரண்டு படங்களிலுமே காணலாம். அவை வெறும் அலங்காரக் கொடிகள் அல்லவாம். வழிபாட்டில் பயன்படுத்தப்படும் அர்த்தமுள்ள கொடிகளாம்.
ஹலேபீடு ஹொய்சாலேஷ்வரர்கர்நாடகாவில் சிற்பக் கலைக் களஞ்சியமாகப் போற்றப்படும் இக்கோவிலின் சுவர்களில் இந்துமதப் புராணக் கதைகளை விளக்கும் பறவைகள், விலங்குகள், நடன உருவங்கள் உள்ளிட்ட எண்ணிலடங்கா சிற்பங்களைக் காணலாம். எந்த இரண்டு சிற்பங்களும் ஒன்றைப் போல ஒன்றில்லாதவாறு வடிவமைக்கப்பட்டிருப்பது இவற்றின் தனிச் சிறப்பு.


ஷ்ராவணபெலகுலா கோமதீஸ்வரர்பெங்களூரிலிருந்து 153 கி.மீ. தொலைவிலும் உள்ள சந்திரகிரி எனும் குன்றின் மேல் எழுதருளியுள்ள கோமதீஸ்வரர் திருவுருவம் உலகப் புகழ் வாய்ந்ததாகும். ஒற்றைக் கல்லாலான இதன் உயரம் 57 அடி.

தீர்த்தங்கரராகிய கோமதீஸ்வர் கடுந்தவம் புரிகையில் அவரைச் சுற்றி எறும்புப் புற்று தோன்றி தலைப்பாகம் வரை மறைத்திருந்ததாகவும், உடலில் கொடிகள் படர்ந்து சுற்றிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. சிலையும் அந்த கோலத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பன்னிரெண்டு வருடங்களுக்கொருமுறை நடத்தப்படும் மகாமஸ்தக அபிஷேகத்தின் போது திருமுடி அருகே பக்தர் நின்று அபிஷேகம் செய்ய அந்த உயரத்துக்கு தளம் அமைத்து வசதி செய்து தரப்படுகிறது. 2006-ல் அவ்விழாவையொட்டி சென்றிருந்த போது எடுத்த படமே இது.

தீயசக்திகளுக்கு சிம்மசொப்பனமாய் மகிஷாசுரன்
மைசூர் சாமுண்டீஸ்வரியைத் தரிசிக்க குன்றேறி வருபவர்களைக் கோவிலுக்கு வெளியே இருந்து வரவேற்கும் நெடிந்துயர்ந்த மகிஷாசுரனை, வெருண்டோ வியந்தோ (முகம் தெரியவில்லை பாருங்கள்) வேடிக்கைப் பார்க்கும் ஒரு பாப்பாவுக்கு முத்தாய்ப்பாய் ஒரு பாட்டு சொல்லிப் பதிவினை முடிக்கிறேன்..வீரனாய் சூரனாய்.. [பாப்பா பாட்டு]


காவல் தெய்வம் கைகளில் அரிவாள்
தீயன செய்வோரை ஓட விரட்டிடத்தான்;
உருட்டிமுழிக்கும் பார்வையும் மீசையும்
பாவம் பண்ணுபவர் பயங்கொள்ளத்தான்;
கைக்குள்அடக்கி வைத்திருக்கும்நாகம்
'அடக்குவேன் உமையும் அப்படியே'
என்று அசுரரை மிரட்டிடத்தான்-ஆனால்
வீரனுக்கு அழகு ஆயுதம் ஏந்துதல்
சூரனுக்குஅடையாளம் அடுத்தவரை ஆளுதல்
எனும் எண்ணந்தனை வளர்த்திடாதே பாப்பா!
மாலையும் மரியாதையும் கிடைக்குமென்ற
மாயவலையில் வீழ்ந்திடாதே பாப்பா!
தெய்வத்தின் நியாயத்தை உன்னோடு
பொருத்திப் பார்த்திடலாகாது பாப்பா!
துளிர்த்து வரும் உன் தலைமுறையாவது
தீவிரவாதத்தைத் தொலைத்து முழுகட்டும்பாப்பா!
அறிவிலும் ஆற்றலிலும் வீரராய் சூரராய்-
அன்பாலும் பண்பாலும் அனைவர் மனங்களையும்
வென்றிடத் தெரிந்த தீரராய்த் திகழட்டும்பாப்பா!

***

*26/11 நிகழ்வில் கைதான இளைஞன் நேற்றுமுன்தினம் மடைதிறந்த வெள்ளம் போலத் தந்திருக்கும் வாக்குமூலமும், மனசாட்சியற்ற செயல்களின் இலக்கும் கலங்கடிக்க வைப்பதாக உள்ளது. உருவாகி வரும் இளைய சமுதாயம் வாழ வேண்டும் வளமாக, நல்வழியில் நடைபோட்டு!

நன்றி விகடன்! • தமிழ்மணம் திரட்டி நடத்திய தமிழ்மணம் விருது 2009 போட்டியில், காட்சிப் படைப்புகள் பிரிவில் இரண்டாம் பரிசாக வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற பதிவு! இதற்காக ரூ.ஐநூறு பெறுமானமுள்ள புத்தக கூப்பனை அனுப்பி வைத்த தமிழ் மணத்துக்கும், வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்!

87 comments:

 1. முதல் படம் புதுக் கோணத்தில் அருமை.

  ReplyDelete
 2. அழகான படங்கள்! ரசிக்க தந்தமைக்கு நன்றி! :-)

  ReplyDelete
 3. கோமதீஸ்வரர் போட்டோ சூப்பர்!

  அய்யன் திருவள்ளுவர் ஏன் ஸ்கஃஃபோல்டிங்க் உள்ள இருக்காரு, ஏதாவது பராமரிப்பு பணியா?


  அட மீ த பஷ்ட்டா???

  ReplyDelete
 4. படங்கள் எல்லாம் அருமையாக உள்ளன :)

  ReplyDelete
 5. பாப்பா பாட்டு

  பாப்பாக்களுக்கு மட்டுமல்ல

  பார்வையாளர்களுக்கும் தான்......

  இரண்டாவது படம் ஏதோ சொல்கிறது....

  மேடம் பெங்களூர் மஹாலட்சுமி கோவிலில் இருக்கும் ஆஞ்சனேயரை படம்பிடித்திருக்கலாமே ஒரே கல்லில் செதுக்கிய அந்த சிற்பம் அற்புதமானது......

  ReplyDelete
 6. ரொம்ப நல்லா இருக்கு எல்லாப் புகைப்படங்களும். முதல் புகைப்படம் இது வரை நான் பார்த்திராத கோணம்.

  மெகா தேர்வு வெற்றி பெற வாழ்த்துகள். அந்த இரு பறவைகளும் இருப்பது கூடுதல் அழகு.

  //தெய்வத்தின் நியாயத்தை உன்னோடு
  பொருத்திப் பார்த்திடலாகாது பாப்பா!//

  வாவ். hats off.


  அனுஜன்யா

  ReplyDelete
 7. படங்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி.
  என் வலையத்துக்கு ஒருமுறை வாருங்கள். அங்கு ஒரு செய்தி காத்திருக்கிறது.

  ReplyDelete
 8. எல்லா படமும் நல்லா இருக்கு. ஹலேபீடு எனக்கு பிடித்த இடங்களில் ஒண்ணு.

  ReplyDelete
 9. படங்கள் அத்தனையும் அருமை

  குறிப்பாக Halebidu யில் Hoysaleshwara Temple
  யின் நுழைவாயிலில் இருபுறம் மலர்களும்
  தென்னை மரங்களும் சூழ்நத அந்தப் படம் அற்புதம்

  ReplyDelete
 10. எல்லா படங்களும் அருமை.. முதல் ரொம்ப நல்லா இருக்கு

  ReplyDelete
 11. எல்லாப் படமும் நல்லாவே இருக்கு.. மகிஷாசுரனை நல்லா எடுத்திருக்கீங்க..

  ReplyDelete
 12. என்ன இவளவு படம் எடுத்திருக்கீங்க.
  அந்த திபெத்காரங்க இருக்க இன்னொரு இடம் உடையார்பாளையம் மைசூருக்கும் ஹாசனூருக்கும் இடைல இருக்கு அந்த கோவிலும் இந்தமாதிரி தான் இருக்கும்.
  என்னோட சாய்ஸ் அந்த மகாபல்லிபுரம் கோபுரம்.
  வெற்றிக்கு வாழ்துக்கள்கா

  ReplyDelete
 13. கோபுரங்கள் சாய்வதில்லை, நல்ல தேர்வு. :))

  மத்த படங்களும், (கவிதையும் தான்) ரொம்ப அருமை.

  ReplyDelete
 14. ஆஹா! இதுக்கு பேரு தான் படம் காட்டுறதா! :-)

  ராமலக்ஷ்மி பட்டய கிளப்புறீங்க போங்க...அனைத்து படங்களும் சூப்பர்..பளிச்சுன்னு இருக்கு..

  (இது டெம்ப்ளேட் பின்னூட்டம் அல்ல..நிஜ பின்னூட்டம் :-D)

  ReplyDelete
 15. பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படம்,புத்தர் & அய்யனார் கலக்கல் அக்கா :)

  ReplyDelete
 16. அழகான படம்..நல்ல தெரிவு..வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோதரி !

  ReplyDelete
 17. இப்பத் தான் கவனிச்சேன். ஹலபேடு ரெண்டு படத்துலயும் டி-ஷர்ட் அணிந்து கேமிராவுக்கு (எதிர்ப் பக்கமாய்) போஸ் குடுக்கறது உங்க மகர்ரா? :))

  ReplyDelete
 18. அத்தனை இடத்திற்கும் போய் இருக்கிறேன், உங்கள் படங்களை என்னை, மலரும் நினைவுகளில் மூல்கடித்து விட்டது. நல்ல படங்கள்.

  ReplyDelete
 19. அச்சோ...! புகைப்படங்கள் அத்தனையும்.... அள்ளிச் செல்கிறது மனதை.
  இத்தனைத் திறமைகளா... உங்களுக்குள்?
  எனும் பிரமிப்பும்...
  கூடவே கொஞ்சம் பொறாமையும் வருகிறது.

  வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 20. முதல் படம் அம்சமான கோணம்! போட்டிக்கான படம் இன்னும் கொஞ்சம் தள்ளி இருந்து எடுத்து இருக்கனுமோன்னு தோனுது..:)
  அய்யனார் செம கலக்கல்!

  ReplyDelete
 21. புகைப்படங்கள் அனைத்தும் அழகு.

  ReplyDelete
 22. எல்லா படங்களுமே அருமையா இருக்குங்க சகோதரி....!! அதற்க்கு விளக்கங்களும் அருமை......!!


  வெற்றி பெற வாழ்த்துக்கள்.....!!!

  வாழ்க வளமுடன்.....!!!

  ReplyDelete
 23. பார்த்தேன். படங்கள் அனைத்தும் அருமை. கொஞ்சம் பொறுங்க, வந்து டீடெய்லா கமெண்டுகிறேன்.

  ReplyDelete
 24. எல்லா படங்களும் நன்றாக இருந்தன.
  பாப்பா பாட்டு அருமை.

  ReplyDelete
 25. அனைத்து படங்களும் அருமை....... பளிச்......... பளிச்....... வெற்றி பெற்று விடுவதற்கான சாத்திய கூறுகள் உள்ள படங்கள்.....

  மகிஷாசுரன் படம் வாவ்.........

  ஐயனுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு?? ஏதேனும் பராமரிப்பு பனி நடக்கிறதா?

  //மைசூரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் "பைலாகுப்பே' என்னும் ஊரில், குஷால் நகர் என்னுமிடத்தில் உள்ளது இந்தத் தங்கக் கோவில். திபெத்திலிருந்து இந்தியா வந்து இப்பக்கம் குடியேறிய திபெத்தியர் கட்டியுள்ள பௌத்த மதக் கோவில்.//

  அருமையான புகைப்படம்....முழு வியூவில் அமைந்துள்ளது....

  //ஹலேபீடு ஹொய்சாலேஷ்வரர்//

  இந்த இரண்டு புகைப்படங்களும் அருமை..... இங்கேதான் "அருணாசலம்" அறிமுக பாடல் எடுக்கப்பட்டதா??

  //பெங்களூரிலிருந்து 153 கி.மீ. தொலைவிலும் உள்ள சந்திரகிரி எனும் குன்றின் மேல் எழுதருளியுள்ள கோமதீஸ்வரர் திருவுருவம் உலகப் புகழ் வாய்ந்ததாகும். ஒற்றைக் கல்லாலான இதன் உயரம் 50 அடி.//

  மிக பிரம்மாண்டம்.....

  //தீயசக்திகளுக்கு சிம்மசொப்பனமாய் மகிஷாசுரன்

  மைசூர் சாமுண்டீஸ்வரியைத் தரிசிக்க குன்றேறி வருபவர்களைக் கோவிலுக்கு வெளியே இருந்து வரவேற்கும் நெடிந்துயர்ந்த மகிஷாசுரனை, வெருண்டோ வியந்தோ (முகம் தெரியவில்லை பாருங்கள்) //

  சூப்பராக எடுக்கப்பட்டு உள்ளது.... இந்த முழு உருவ படம்.....

  எல்லா படங்களும் அருமை.... கூடவே இந்த பாப்பா பாடல்...

  //துளிர்த்து வரும் உன் தலைமுறையாவது
  தீவிரவாதத்தைத் தொலைத்து முழுகட்டும் பாப்பா!//

  அருமையான வரிகள்.....

  வெற்றி பெற வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி மேடம். ......

  ReplyDelete
 26. goma said...

  //முதல் படம் புதுக் கோணத்தில் அருமை.//

  கோவிலின் மிக அருகே அமைந்த ஜி.ஆர்.டி பீச் ரிசார்டில் தங்கியிருந்த போது எடுத்த படம்.

  ஜூலைக் காற்றாக கடந்த பதிவில் வந்து 'எங்கே பிட் ஆல்பம்’ எனக் கேள்வி எழுப்பி, பதிவிட உந்துதலாக இருந்ததற்கும், முதல் வருகையாகப் பாராட்டைப் பதிந்ததற்கும் மிக்க நன்றி கோமா!

  ReplyDelete
 27. சந்தனமுல்லை said...

  //அழகான படங்கள்! ரசிக்க தந்தமைக்கு நன்றி! :-)//

  பாராட்டுக்கு நன்றி முல்லை!

  ReplyDelete
 28. அபி அப்பா said...

  // கோமதீஸ்வரர் போட்டோ சூப்பர்!//

  பிடித்திருக்கிறதா, நன்றி!

  //அட மீ த பஷ்ட்டா???//

  முதல் வருகையாய் அருள் தந்த கோமதீஸ்வரிதான் ஃபஸ்ட்:)!

  //அய்யன் திருவள்ளுவர் ஏன் ஸ்கஃஃபோல்டிங்க் உள்ள இருக்காரு, ஏதாவது பராமரிப்பு பணியா?//

  ஆமாம், ஐந்து வருடம் முன்னர் எடுத்த படம் அது.

  ReplyDelete
 29. நாகை சிவா said...

  //படங்கள் எல்லாம் அருமையாக உள்ளன :)//

  யூத்ஃபுல் விகடனில் உங்கள் புகைப்படத் தொகுப்பினை அடிக்கடி பார்க்கிறேன். உங்களிடமிருந்து வரும் பாராட்டு மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி சிவா!

  ReplyDelete
 30. பிரியமுடன்.........வசந்த் said...

  //பாப்பா பாட்டு

  பாப்பாக்களுக்கு மட்டுமல்ல

  பார்வையாளர்களுக்கும் தான்......//

  பாரதியின் பாப்பா பாட்டிலும் எத்தனையோ கருத்துக்கள் அப்படித்தானே? நன்றி வசந்த்!

  //இரண்டாவது படம் ஏதோ சொல்கிறது....//

  பரிசு கிடைக்கும் என்றா:)? திகழ்மிளிர் சிரிப்பார். விடுங்கள்:)! ஆனால் கலையழகுக் கோபுரத்தின் பின்னே வானும் மேகமும் கூடவே பறவைகளும் எனக்கும் பிடித்துப் போயிருக்கு ஒரு கவிதை போல.

  //மேடம் பெங்களூர் மஹாலட்சுமி கோவிலில் இருக்கும் ஆஞ்சனேயரை படம்பிடித்திருக்கலாமே ஒரே கல்லில் செதுக்கிய அந்த சிற்பம் அற்புதமானது......//

  நான் சென்றதில்லையே:(? கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 31. அனுஜன்யா said...

  // ரொம்ப நல்லா இருக்கு எல்லாப் புகைப்படங்களும்.//

  நன்றி. சீக்கிரமே வந்து விட்டீர்கள் இம்முறை!

  //முதல் புகைப்படம் இது வரை நான் பார்த்திராத கோணம்.//

  கோமாவும் சொல்லியிருக்காங்க. மிக அருகில் உள்ள ஜி.ஆர்.டி டெம்பிள் பீச் ரிசார்டிலிருந்து எடுத்தது.

  //மெகா தேர்வு வெற்றி பெற வாழ்த்துகள். அந்த இரு பறவைகளும் இருப்பது கூடுதல் அழகு.//

  ஆமாம், அதை கடந்த பதிவிலே சிலாகித்துச் சொல்லியிருந்தீர்கள். அதுவும் மெகாவுக்கு இப்படம் தேர்வானதற்கு ஒரு காரணம்.

  *** //தெய்வத்தின் நியாயத்தை உன்னோடு
  பொருத்திப் பார்த்திடலாகாது பாப்பா!//

  வாவ். hats off. ***

  இப்படி நியாயப் படுத்தி நிறைய பேர் தவறுகள் செய்தபடி:(! எடுத்துப் பாராட்டியமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அனுஜன்யா.

  ReplyDelete
 32. ஜெஸ்வந்தி said...

  // படங்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி.//

  இரண்டையும் ரசித்தமைக்கு நன்றி!

  // என் வலையத்துக்கு ஒருமுறை வாருங்கள். அங்கு ஒரு செய்தி காத்திருக்கிறது.//

  தாங்கள் அன்போடு அளித்த சுவாரஸ்ய வலைப்பதிவர் விருதை மகிழ்ச்சியுடன் ஏற்று முகப்பிலும் ஏற்றியிருக்கிறேன், மிகவும் நன்றி ஜெஸ்வந்தி!

  ReplyDelete
 33. sindhusubash said...

  //எல்லா படமும் நல்லா இருக்கு. ஹலேபீடு எனக்கு பிடித்த இடங்களில் ஒண்ணு.//

  நீங்களும் முன்னர் வசித்தது பெங்களூர் ஆச்சே. முதலில் ஹலிபேடு எனக் குறிப்பிட்டிருந்தேன். உங்கள் பின்னூட்டம் பார்த்த பிறகே பிழையை உணர்ந்தேன். கன்னடத்தில் ஹலேபீடு என்றால் ‘பழைய வீடு’ என அறிந்தேன். நன்றி சிந்து!

  ReplyDelete
 34. திகழ்மிளிர் said...

  // படங்கள் அத்தனையும் அருமை//

  நன்றி திகழ்மிளிர்.

  //குறிப்பாக Halebidu யில் Hoysaleshwara Temple
  யின் நுழைவாயிலில் இருபுறம் மலர்களும்
  தென்னை மரங்களும் சூழ்நத அந்தப் படம் அற்புதம்//

  குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கு மிகவும் நன்றி:)!

  ReplyDelete
 35. திகழ்மிளிர் said...

  // வாழ்த்துகள்//

  நன்றி, இன்னும் உங்கள் படம் லிஸ்டாகவில்லையே? தொகுப்பில் எந்தப் படத்தைக் கொடுப்பதாக இருக்கிறீர்கள்? உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 36. ஆ.ஞானசேகரன் said...

  //எல்லா படங்களும் அருமை.. முதல் ரொம்ப நல்லா இருக்கு//

  முதல் படத்துக்கு கிடைத்த மூன்றாவது பாராட்டு:)! நன்றி ஞானசேகரன்!

  ReplyDelete
 37. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  // எல்லாப் படமும் நல்லாவே இருக்கு.. மகிஷாசுரனை நல்லா எடுத்திருக்கீங்க..//

  அசத்தலாக எழுந்து நிற்கிறார், இல்லையா? நன்றி முத்துலெட்சுமி:)!

  ReplyDelete
 38. கார்த்திக் said...

  // என்ன இவளவு படம் எடுத்திருக்கீங்க.//

  “கொடுத்திருக்கீங்க” என கேளுங்க:)! இதற்காக எடுக்கவில்லை கார்த்திக். பல்வேறு சமயங்களில் எடுத்தவற்றின் தொகுப்பு!

  //அந்த திபெத்காரங்க இருக்க இன்னொரு இடம் உடையார்பாளையம் மைசூருக்கும் ஹாசனூருக்கும் இடைல இருக்கு அந்த கோவிலும் இந்தமாதிரி தான் இருக்கும்.//

  பெயர் தெரிந்தால் சொல்லுங்கள். நான் போனதில்லையே!

  //என்னோட சாய்ஸ் அந்த மகாபல்லிபுரம் கோபுரம்.
  வெற்றிக்கு வாழ்துக்கள்கா//

  கொடுத்திடலாம் அதையே:), நன்றி கார்த்திக்!

  ReplyDelete
 39. ambi said...

  //கோபுரங்கள் சாய்வதில்லை, நல்ல தேர்வு. :))//

  அழகா சொல்லிட்டீங்க:)!
  //மத்த படங்களும், (கவிதையும் தான்) ரொம்ப அருமை.//

  நன்றி அம்பி!

  //இப்பத் தான் கவனிச்சேன். ஹலபேடு ரெண்டு படத்துலயும் டி-ஷர்ட் அணிந்து கேமிராவுக்கு (எதிர்ப் பக்கமாய்) போஸ் குடுக்கறது உங்க மகர்ரா? :))//

  ஆகா, கூர்மையா கவனிச்சிருக்கீங்களே:)! 'லாங் ஷாட்டில்தானே தெரிகிறாய்' என அனுமதியோடு வெளியிட்ட படம்:)!

  ReplyDelete
 40. கிரி said...

  //ஆஹா! இதுக்கு பேரு தான் படம் காட்டுறதா! :-)//

  :)!

  //ராமலக்ஷ்மி பட்டய கிளப்புறீங்க போங்க...அனைத்து படங்களும் சூப்பர்..பளிச்சுன்னு இருக்கு..//

  நன்றி கிரி!

  //(இது டெம்ப்ளேட் பின்னூட்டம் அல்ல..நிஜ பின்னூட்டம் :-D)//

  நிஜமாகவே நம்பிட்டேன்:)!

  ReplyDelete
 41. ஆயில்யன் said...

  // பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படம்,புத்தர் & அய்யனார் கலக்கல் அக்கா :)//

  அய்யனாரும் இப்படியேதான் தோற்றம் தருவார். ஆனால் இவரை மகிஷாசுரர் என்றே சொல்றாங்க! பாராட்டுக்கு நன்றி ஆயில்யன்.

  ReplyDelete
 42. எம்.ரிஷான் ஷெரீப் said...

  //அழகான படம்..நல்ல தெரிவு..வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோதரி !//

  பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரிஷான்!

  ReplyDelete
 43. சங்கர் தியாகராஜன் said...

  //அத்தனை இடத்திற்கும் போய் இருக்கிறேன், உங்கள் படங்களை என்னை, மலரும் நினைவுகளில் மூழ்கடித்து விட்டது.//

  மகிழ்ச்சி.

  //நல்ல படங்கள்.//

  தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

  ReplyDelete
 44. Positive Anthony Muthu said...

  //அச்சோ...! புகைப்படங்கள் அத்தனையும்.... அள்ளிச் செல்கிறது மனதை.//

  உங்களை மகிழ வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி அந்தோணி முத்து:)!


  //இத்தனைத் திறமைகளா... உங்களுக்குள்? எனும் பிரமிப்பும்...
  கூடவே கொஞ்சம் பொறாமையும் வருகிறது.

  வாழ்த்துக்கள்...!//

  நல்ல பாராட்டு:)! வாழ்த்துக்கும் நன்றி!

  ReplyDelete
 45. தமிழ் பிரியன் said...

  // முதல் படம் அம்சமான கோணம்!//

  நன்றி.

  //போட்டிக்கான படம் இன்னும் கொஞ்சம் தள்ளி இருந்து எடுத்து இருக்கனுமோன்னு தோனுது..:)//

  கோபுரத்தையும் பறவைகளையும் குறிப்பாக கவர் செய்யநினைத்து எடுத்தது.

  // அய்யனார் செம கலக்கல்!//

  அய்யனாராகி விட்ட மகிஷாசுரர் பலரின் மனதையும் கவர்ந்து விட்டிருக்கிறார்:)!

  ReplyDelete
 46. மணிநரேன் said...

  // புகைப்படங்கள் அனைத்தும் அழகு.//

  மிகவும் நன்றி மணிநரேன்!

  ReplyDelete
 47. லவ்டேல் மேடி said...

  //எல்லா படங்களுமே அருமையா இருக்குங்க சகோதரி....!! அதற்க்கு விளக்கங்களும் அருமை......!!//

  படங்களோடு விளக்கங்களையும் கவனித்துப் பாராட்டியிருப்பதற்கும்,
  நல்வாழ்த்துக்களுக்கும் தொடர் வருகைக்கும் நன்றி மேடி!

  ReplyDelete
 48. சதங்கா (Sathanga) said...

  //பார்த்தேன். படங்கள் அனைத்தும் அருமை.//

  நன்றி சதங்கா!

  //கொஞ்சம் பொறுங்க, வந்து டீடெய்லா கமெண்டுகிறேன்.//

  மெதுவா வாங்க:)!

  ReplyDelete
 49. கோமதி அரசு said...

  //எல்லா படங்களும் நன்றாக இருந்தன. பாப்பா பாட்டு அருமை.//

  நன்றி கோமதி அரசு, படங்களைப் பாராட்டியிருப்பதற்கும் பாப்பா பாட்டை ரசித்தமைக்கும்!

  ReplyDelete
 50. R.Gopi said...

  //அனைத்து படங்களும் அருமை....... பளிச்......... பளிச்.......//

  ஒவ்வொரு படத்தையும் தனித்தனியே பாராட்டியிருக்கும் உங்க பின்னூட்டமும் பளிச் பளிச்தான்:)!

  //மகிஷாசுரன் படம் வாவ்...//

  பலருக்கும் பிடித்துவிட்டிருக்கிறது.

  //ஐயனுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு?? ஏதேனும் பராமரிப்பு பணி நடக்கிறதா?//

  இப்போதல்ல, 2004ஆம் ஆண்டு பராமரிப்புப் பணியில் இருந்த போது எடுத்தபடம்.

  //இங்கேதான் "அருணாசலம்" அறிமுக பாடல் எடுக்கப்பட்டதா??//

  ரஜனி ரசிகர் நீங்கள், எவ்வளவு கூர்மையாக கவனித்து வைத்திருந்திருக்கிறீர்கள் பாடல் காட்சியை:)? இருக்கலாம். பல திரைப் பாடல்கள் இங்கு படமாக்கப் பட்டுள்ளன.

  ***/எல்லா படங்களும் அருமை.... கூடவே இந்த பாப்பா பாடல்...

  //துளிர்த்து வரும் உன் தலைமுறையாவது
  தீவிரவாதத்தைத் தொலைத்து முழுகட்டும் பாப்பா!//

  அருமையான வரிகள்...../***

  நன்றி கோபி, வாழ்த்துக்களுக்கும்:)!

  ReplyDelete
 51. அற்புதமான படங்கள்..

  ReplyDelete
 52. கோபுரமும், கோமதீஸ்வரரும் நெஞ்சை அள்ளுகிறார்கள்.

  நல்ல இயற்கை லைட்டிங்கில் எடுத்த திபேத்தியர்களின் கோவிலும் அருமை.

  //சூரனுக்குஅடையாளம் அடுத்தவரை ஆளுதல்
  எனும் எண்ணந்தனை வளர்த்திடாதே பாப்பா!//

  தவறான எண்ணங்கள் குழந்தையூனுள் செல்வதை உணர்ந்து அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  //மாலையும் மரியாதையும் கிடைக்குமென்ற
  மாயவலையில் வீழ்ந்திடாதே பாப்பா!//

  அற்புதம்.

  பிஞ்சில் தெரியாவிட்டாலும்,
  பின்னாளில் உணர்ந்து கொள்ளு பாப்பா !

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 53. கார்த்தி said...

  //அற்புதமான படங்கள்..//

  நன்றி கார்த்தி. வலைப்பூவுக்கு தங்கள் முதல் வருகை, அதற்கும் நன்றி.

  ReplyDelete
 54. போட்டோ கிராபில நீங்க கிங் தான்.. சாரி குயினுதான் :-).. எல்லா படங்களையும் அருமையாக எடுத்துள்ளீர்கள்.
  கன்னியாகுமரி போயி ரொம்ம்ம்ம்ம்ப நாள் ஆச்சு போல.. :-)

  ReplyDelete
 55. சதங்கா (Sathanga) said...

  // கோபுரமும், கோமதீஸ்வரரும் நெஞ்சை அள்ளுகிறார்கள்.

  நல்ல இயற்கை லைட்டிங்கில் எடுத்த திபேத்தியர்களின் கோவிலும் அருமை. //

  நன்றி சதங்கா!

  //பிஞ்சில் தெரியாவிட்டாலும்,
  பின்னாளில் உணர்ந்து கொள்ளு பாப்பா !//

  பாப்பா பாட்டுக்கு பதமான பாராட்டு! நன்றாகச் சொல்லி விட்டீர்கள்! வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 56. " உழவன் " " Uzhavan " said...

  // போட்டோ கிராபில நீங்க கிங் தான்.. சாரி குயினுதான் :-).. //

  ஹி, கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறதே:)!

  //எல்லா படங்களையும் அருமையாக எடுத்துள்ளீர்கள்.//

  நன்றி உழவன்!

  // கன்னியாகுமரி போயி ரொம்ம்ம்ம்ம்ப நாள் ஆச்சு போல.. :-)//

  சரியா கண்டு பிடிச்சிட்டீங்க. 2004-ல் எடுத்த படங்கள் அவை.

  ReplyDelete
 57. //// கன்னியாகுமரி போயி ரொம்ம்ம்ம்ம்ப நாள் ஆச்சு போல.. :-)//

  சரியா கண்டு பிடிச்சிட்டீங்க. 2004-ல் எடுத்த படங்கள் அவை. //  திருவள்ளுவர் சிலையின் கட்டுமானப்பணிகள் நடந்துகொண்டிருப்பது படத்தில் தெரிந்தது. அதான் கேட்டேன்.

  ReplyDelete
 58. " உழவன் " " Uzhavan " said...

  // திருவள்ளுவர் சிலையின் கட்டுமானப்பணிகள் நடந்துகொண்டிருப்பது படத்தில் தெரிந்தது. அதான் கேட்டேன்.//

  அதனால்தான் கேட்டிருப்பீர்கள் என நானும் ஊகித்தேன்:)! ஆனால் சிலை திறக்கப் பட்டது 2000ஆம் ஆண்டு. ஆக, கட்டுமானப் பணியன்று. நாங்கள் சென்ற சமயம் பராமரிப்புப் பணி நடந்து கொண்டிருந்தது.

  ReplyDelete
 59. எல்லா புகைப்படங்களும் நல்லா இருக்குங்க .....எப்பாவது வந்து நேரில் பார்த்தா உங்கள பதிவு மனதில் கண்டிப்பாய் வரும் ..நன்றி :-)

  ReplyDelete
 60. சிங்கக்குட்டி said...

  // எல்லா புகைப்படங்களும் நல்லா இருக்குங்க .....எப்பாவது வந்து நேரில் பார்த்தா உங்கள பதிவு மனதில் கண்டிப்பாய் வரும் ..நன்றி :-)//

  நன்றி சிங்கக் குட்டி. நேரிலே இவ்விடங்களைப் பார்க்கிற வாய்ப்பு சீக்கிரமே வர வாழ்த்துகிறேன்:)!

  ReplyDelete
 61. ஒவ்வொரு படத்தையும் ரசிதது எடுத்து இருக்கீங்க. ஆமாக்கா உங்களுக்கு எப்படி டைம் கிடைக்குது?

  ReplyDelete
 62. கடையம் ஆனந்த் said...

  //ஒவ்வொரு படத்தையும் ரசிதது எடுத்து இருக்கீங்க.//

  நன்றி ஆனந்த்.

  // ஆமாக்கா உங்களுக்கு எப்படி டைம் கிடைக்குது? //

  என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்:)? போட்டிக்காக எடுத்தவை இல்லை. பல்வேறு சமயங்களில் இவ்விடங்களுக்கு சென்றிருந்த போது க்ளிக்கியவைதான்:)!

  ReplyDelete
 63. அருமையான பதிவு அக்கா. நேரே போய் பார்த்தா மாதிரி இருக்கு. கோபுரம் அருமை.

  ReplyDelete
 64. அனைத்து படங்களும் அழகு. எப்போ படம் எடுத்தாலும் சிரத்தையாக எடுக்கிறீங்கன்னு தெரியுது :)

  //வீரனுக்கு அழகு ஆயுதம் ஏந்துதல்
  சூரனுக்குஅடையாளம் அடுத்தவரை ஆளுதல்
  எனும் எண்ணந்தனை வளர்த்திடாதே பாப்பா!//

  பாப்பா பாட்டும் நன்று.

  ReplyDelete
 65. படங்கள் அருமை ராமலக்ஷ்மி...

  ReplyDelete
 66. என்னக்கா ஆளே காணும்... அடுத்த பதிவு எப்போது? நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 67. பூங்கொத்துக்களுடன் விருதும் கொடுத்திருக்கேன் வாங்கிக்கோங்க!!!

  ReplyDelete
 68. சுசி said...

  // அருமையான பதிவு அக்கா. நேரே போய் பார்த்தா மாதிரி இருக்கு. கோபுரம் அருமை.//

  பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி சுசி!

  ReplyDelete
 69. கவிநயா said...

  //அனைத்து படங்களும் அழகு. எப்போ படம் எடுத்தாலும் சிரத்தையாக எடுக்கிறீங்கன்னு தெரியுது :)//

  ஹி, சிரத்தையாக எடுக்கிறேன் பேர்வழி எனத் திருப்தி வரும் வரை அந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்ல:)!

  //பாப்பா பாட்டும் நன்று.//

  பாப்பா பாட்டு உங்கள் பாராட்டுக்காகவே காத்திருந்தது:)! மிக்க நன்றி கவிநயா!

  ReplyDelete
 70. பாச மலர் said...

  //படங்கள் அருமை ராமலக்ஷ்மி...//

  பாராட்டுக்கும் ரசிப்புக்கும் நன்றி பாசமலர்.

  ReplyDelete
 71. கடையம் ஆனந்த் said...

  //நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்//

  நன்றி ஆனந்த், உங்களுக்கும் என் நண்பர் தின நல்வாழ்த்துக்கள்!

  //என்னக்கா ஆளே காணும்... அடுத்த பதிவு எப்போது? //

  பத்து நாட்களாய் ஊரில் இல்லை. சீக்கிரமே வரும் அடுத்த பதிவு:)!

  ReplyDelete
 72. அன்புடன் அருணா said...

  // பூங்கொத்துக்களுடன் விருதும் கொடுத்திருக்கேன் வாங்கிக்கோங்க!!!//

  தங்கள் பதிவிலே கண்டு, அன்போடு அளித்த விருதுகளை அள்ளிக் கொண்டு வந்துவிட்டேன்:)! மிக்க நன்றி அருணா!

  ReplyDelete
 73. அந்த முதல் படம் ரொம்ப அழகா இருக்கு...

  (தமிழ்மணம் போட்டிக்கு அனுப்பிருக்கீங்க போல...வெற்றி பெற வாழ்த்துக்கள்)

  ReplyDelete
 74. அது சரி said..

  //அந்த முதல் படம் ரொம்ப அழகா இருக்கு...//

  நன்றி. Crop செய்த படம்தான் என்றாலும் வித்தியாசமான கோணத்தால் கவருவதாக இன்னும் சிலரும் சொல்லியிருக்கிறார்கள்.

  //(தமிழ்மணம் போட்டிக்கு அனுப்பிருக்கீங்க போல...வெற்றி பெற வாழ்த்துக்கள்) //

  ஆமாங்க:), சென்ற ஆண்டு இதே பிரிவில் நாலாவது இடம் கிடைத்த தைரியத்தில் அனுப்பிவிட்டிருக்கிறேன்.
  போட்டியின் வெற்றிக்கென வந்திருக்கும் முதல் வாழ்த்துக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
 75. படங்களுக்கு கவித்துவமான விளக்கம் மிகவும் அருமை... எப்படிப் பார்த்தாலும் மாமல்லபுரக் கொவிலுக்கு வேறு எதுவும் ஈடாகாது!

  ReplyDelete
 76. தமிழ்மணம் விருதுகளில் இந்த இடுகைக்கு இரண்டாம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 77. தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

  :)

  தோழன்
  பாலா

  ReplyDelete
 78. ஹைய்யா..ராமலக்ஷ்மி மேடம் ஜெயிச்சுட்டாங்க.....வாழ்த்துகள் மேடம்...

  ReplyDelete
 79. வெற்றிக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 80. தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம்..

  ReplyDelete
 81. வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

  //படங்களுக்கு கவித்துவமான விளக்கம் மிகவும் அருமை... எப்படிப் பார்த்தாலும் மாமல்லபுரக் கொவிலுக்கு வேறு எதுவும் ஈடாகாது!//

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவுதமன்.

  ReplyDelete
 82. சரண் said...

  //தமிழ்மணம் விருதுகளில் இந்த இடுகைக்கு இரண்டாம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி சரண்!

  ReplyDelete
 83. ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

  //தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

  :)

  தோழன்
  பாலா//

  உங்கள் வாழ்த்து மகிழ்ச்சியைத் தருகிறது:). மிக்க நன்றி.

  ReplyDelete
 84. பிரியமுடன்...வசந்த் said...

  //ஹைய்யா..ராமலக்ஷ்மி மேடம் ஜெயிச்சுட்டாங்க.....வாழ்த்துகள் மேடம்...//

  வெற்றி பெற்றதை பின்னூட்டங்கள் மூலமாகவே அறிந்து மகிழ்ந்த வேளையில், உங்களது இந்தக் குதூகலம் தருகிறது நெகிழ்வு. மிக்க நன்றி வசந்த்!

  ReplyDelete
 85. திகழ் said...

  //வெற்றிக்கு வாழ்த்துகள்//

  நன்றி திகழ்.

  ReplyDelete
 86. வெண்பூ said...

  //தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம்..//

  நன்றி வெண்பூ. முத்துச்சரத்தை தொடர்ந்த முதல் நான்கு பேர்களில் ஒருவரான உங்கள் வாழ்த்தில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி:)!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin