அழுத சிவந்த கண்களும் அடக்க முடியாத விம்மலுமாய் வீட்டினுள் நுழைந்த அஜீத்தை லேசாக திரும்பிப் பார்த்து விட்டு அடுப்பில் வைத்திருந்த குழம்பைக் கிண்டுவதில் மும்முரமானாள் சீதா.
"என்னா இன்னிக்கு எவங்கிட்டே மாட்டுனே? ஆம்புளப் புள்ளன்னா கொஞ்சமாவது அடாவடியா நிக்கத் தெரியணுமடா! வெளையாடப் போற இடத்தில இப்படியா தெனசரி அடி வாங்கிட்டு வருவே?"
வழக்கமாய் வந்ததும் வராததுமாய் பையை ஒரு மூலையில் வீசி விட்டு தன் காலை கட்டியபடி அன்றைய நிகழ்வுகளை சந்தோஷமானதோ சங்கடமானதோ ஓடி வந்து சொல்லும் பிள்ளை, குரல் கொடுத்து பத்து நிமிடமாகியும் வராததால் அடுப்பை அணைத்து விட்டு தடுப்புக்கு அந்தப் பக்கம் வந்தாள் சீதா.
ஒரே அறையைக் கொண்ட வீடுதான். ஒரு தட்டியால் மறைக்கப் பட்ட அடுப்படி. மீதியிருந்த பத்தடிக்கு பத்தடிதான் அவர்கள் அடைந்து வாழும் கொட்டடி.
நாலாவது படிக்கும் அஜீத் நாலு நாளுக்கு ஒருமுறை ‘இன்னிக்கு சுந்தரு தள்ளி விட்டதில பேந்துடுச்சு முட்டி, கைலாசு குட்டியதில புடைச்சிருச்சு தலை, முகுந்து கிள்ளியதில கன்னிப் போச்சு கையி..’ன்னு ஏதாவது ஒரு புராணம் வைத்திருப்பான்.
ஆனால் இன்று கால்களை மடக்கி இரண்டு முட்டிகளுக்கும் நடுவில் தலையைப் புதைத்து, வித்தியாசமாய் சுவரில் சாய்ந்திருந்தவனிடமிருந்து விட்டு விட்டு வந்த கேவல் ஏனோ வயிற்றைப் புரட்டியது. பக்கம் வந்து அவன் முகத்தைத் தொட்டு தூக்க முயன்றவள் அதிர்ந்து போனாள் அப்போதுதான் அந்தக் கோலத்தைக் கவனித்தவளாய். அவனது கேசம் மிகக் கேவலமாக அலட்சியமாக வெட்டப்பட்டு அலங்கோலமாகக் காட்சி அளித்தது.
"யாருடா? யாருன்னு சொல்லுடா! எவண்டா இப்படிச் செய்தது?"
“கேட்காதே எதுவும் கேட்காதே ம்ம்ம்ம் போ”
அவள் கையை அஜீத் வெறுப்பாய் தள்ளி விட பதட்டம் அதிகமாயிற்று. அவன் அருகே மடிந்து அமர்ந்தாள்.
"சொல்லுப்பா ராசா என் செல்லம் என்னான்னு ஆத்தாட்ட சொல்லுப்பா"
"இப்ப சொல்லி என்னாகணும். சொன்னனே நாலு நாளா காசு கொடும்மா முடி வெட்டிக்கணும் டீச்சரு திட்டுதுன்னு. நெதமும் கேட்டனே, காதுல போட்டுக்கலியே நீயி.."
"என்ன செய்யறது ராசா ஒனக்குதான் நம்ம நெலம தெரியுமில்ல. முழுசா பதினஞ்சு ரூவா கீழ வைக்கணும். அந்தக் காசு இருந்தாத்தான ஒன் வயித்துக்கு சோறாக்க முடியும். அதான் வாரக் கடசி வரட்டும் எப்படியாச்சும் ஏற்பாடு செய்யறேன்னனே..."
"அதுக்குள்ளார இன்னிக்கு க்ளாஸில அத்தினிபேரு முன்னாடியும் டீச்சரு கோவமா கத்திரிய எடுத்து 'கருக்கு புருக்கு'ன்னு வெட்டிட்டாங்கம்மா. எல்லாப் பசங்களும் எப்படிச் சிரிச்சாங்க தெரியுமா?"
அப்படியே அவள் மடியில் சரிந்தான் அஜீத்.
"வெளங்குவாளா அந்தப் பாதகத்தி? மனுஷிதானா அவ? புள்ளயப் பெத்தவதானே அவளும்" பொங்கிய கோபத்தில் சீதாவிடமிருந்து சரமாரியாக வந்து விழுந்தன வசவுகள்.
"என்னத் தவிர எல்லாரும் சொன்ன நாளுல வெட்டிகிட்டு வந்துட்டாங்களேம்மா. உன்னால ஏம்மா காசு கொடுக்க முடியல? டீச்சரு அவங்க பையிலருந்து கண்ணாடிய எடுத்து அதுல பாக்கச் சொல்லி சிரிச்சாங்கம்மா. வூடு வர்ற வரைக்கி பசங்கல்லாம் பின்னாடியே கேலி செஞ்சுட்டே வந்தாங்கம்மா. இனிமே நான் ஸ்கூலுக்கே போலம்மா".
"அய்யோ ராசா என்னக் கொல்லாத. நா வச்சுக்கிட்டா இல்லேன்னேன். உங்கப்பாரு படுத்துற பாடத்தான் நீயே பாக்குறியே. நீ நல்லாப் படிச்சு பெரியாளா வருணுமின்னுதான கடனவுடன வாங்கி இந்த இஸ்கோலில சேத்தேன். அப்படியெல்லாம் சொல்லப்படாது. பார்பரண்ணே கையக் காலப் புடிச்சு நாளக்கே எப்படியாச்சும் முடிய அழகாக்கிப் புடுவோம். நீ வந்து இப்ப சாப்பிடுவியாம்".
"ஒண்ணும் வேணாம் போம்மா. பார்பருமாமா சும்மவே என்ன எப்பவும் வெளக்கண்ண வெளக்கண்ணன்னு கிண்டலடிப்பாரு. இப்ப சொல்லிச் சொல்லிச் சிரிப்பாரு" விக்கி விக்கி அழுதபடி அவள் மடியிலிருந்து இறங்கி சுவரைப் பார்க்கத் திரும்பிப் படுத்துக் கொண்டான் அஜீத். அவன் கேசத்தை கோத முயன்ற அவள் கையை மறுபடி தட்டி விட்டான். சரி விட்டுத்தான் பிடிப்போமென பேசாதாகி விட்டாள் சீதா.
அவனுக்குதான் எத்தனை அழகான கருகருவென்ற மென்மையான கேசம்! நித்தம் தேங்காய் எண்ணெய் தடவி இடது பக்கம் நேர்கோடாக வகிடெடுத்து சீவி விட்டால், தன்னிச்சையாக அவன் கன்னம் தடவி நெட்டி முறிப்பாள். "இத்தன எண்ணெய் வைக்காதேம்மா, பசங்க 'வருது பாரு விளக்கெண்ணெய்ம்பாங்க'" என அவன் சிணுங்கினாலும் கேட்க மாட்டாள்.
ஆளும் அத்தனை அழகு. இவனை நிறைமாதமாய் வயிற்றில் சுமந்திருந்த போது அதிசயமாய் கொட்டகையில் படம் பார்க்கக் கூட்டிப் போயிருந்தான் புருஷன் பழநி. அப்போதுதான் புகழேணியில் ஏறத் தொடங்கியிருந்த நடிகர் அஜீத்தை முதல் முதலாய் வெள்ளித் திரையில் கண்டு மகிழ்ந்த இருவரும் அப்போதே தீர்மானித்து விட்டார்கள் பையன் பிறந்தால் ‘அஜீத்’ என பெயர் வைக்க வேண்டுமென. ஓரளவு நிறமாகவும் பிறந்து விட வானத்தில் மிதக்காத குறைதான் இருவருக்கும்.
பார்த்துப் பார்த்துதான் அவன் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தாள் சீதா. கொத்து வேலைக்குப் போகும் கணவனின் சம்பளம் கைக்கு வந்தால்தான் உண்டு. பாதி நாட்கள் குடியில் தொலைத்து விட்டுத்தான் வருவான். அதற்காகவெல்லாம் கவலைப் பட்டதே இல்லை அவள். 'என் காலில் நின்று காப்பாற்றுவேன் என் பிள்ளையை' என வைராக்கியமாய் துப்புறவுத் தொளிலாளி வேலை பார்த்து வந்தாள் ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில்.
மூன்றாவது வரை வருமானத்துக்கேற்றபடி அரசுப் பள்ளியில் படிக்கவைத்து வந்தவள், அவளது அண்ணன் தனது மகனை அவர்கள் ஏரியா மக்களில் சற்றே வசதியானவர் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளியில் சேர்த்ததைப் பார்த்து, அந்தச் சிறுவன் சின்னச் சின்னதாய் ஆங்கில வாக்கியங்கள் பேசுவதைக் கேட்டு அசந்து, ஆசைத் தொற்றிக் கொள்ள, வேலை பார்த்து வந்த குடியிருப்பில் சில நல்ல மனிதர்களிடம் உதவி, கடன் எல்லாம் பெற்று இந்தப் பள்ளியில் சேர்தது விட்டிருந்தாள்.
ஆனால் சேர்த்த பிறகுதான் தெரிந்தது செலவு ஒரே தடவையோடு முடியாதென்பது. காலணியிலிருந்து தலைக் கேசம் வரை எப்போதும் எதிலும் இருக்க வேண்டும் ஒழுங்கு. இதெல்லாம் முற்றிலும் புதிதாக இருந்தாலும் உருண்டு புரண்டு எல்லாவற்றிற்கும் எப்பாடு பட்டாவது பணத்தைப் புரட்டி விடுவாள். இந்த வாரம்தான் இப்படி சற்றே அசந்து விட்டாள். இல்லையில்லை அவள் வரையில் மாபெரும் தவறினை செய்து விட்டாள்.
திங்கட்கிழமை "அம்மா முடி ரொம்ப வளர்ந்துட்டுன்னு டீச்சர் நறுக்குன்னு தலயில கொட்டினாங்கம்மா. ரெண்டு நாளுக்குள்ள வெட்டியிருக்கணுமாம்’ அவன் சொன்ன போது அலட்சியப் படுத்தாமல் 'சரி கண்ணு' என்று அக்கறையாகக் கேட்டுக் கொண்டவள் அன்று முழுக்க அதே நினைவாகத்தான் இருந்தாள்.
ஒரு வீட்டில் வேலைக்காரப் பெண்மணி வராது போக ‘யாரையாவது பார்த்து அனுப்பி வை சீதா’ என இவள் வீடு வீடாகக் குப்பைகளைச் சேகரிக்க சென்ற போது அந்த வீட்டுக்காரப் பெண்மணி சொல்ல ‘நானே வர்றேம்மா’ என குடியிருப்பு நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை மீறி சாப்பாட்டு இடைவேளை நேரத்தில் யாருக்கும் தெரியாமல் பம்மிப் பம்மி நுழைந்து, பாத்திரங்களைக் கழுவி, வீட்டைப் பெருக்கிக் கொடுத்த போது கையில் வாங்கிய ஐம்பது ரூபாய் மனதை அத்தனை லேசாக்கி விட்டிருந்தது.
ஆனால், அன்று மாலை திரும்பி வரும் வழியில் தற்செயலாகச் சந்தித்த மோகனா இவளையும் அழைத்துக் கொண்டு அண்ணாச்சிக் கடைக்குச் சென்று சேலைக்கு சீட்டுக் கட்டுகையில், பாழாய்ப் போன மனது அங்கு தொங்கிக் கொண்டிருந்த பச்சை நிற சில்க் காட்டன் புடவையில் தன்னைப் பறி கொடுக்க, முடிந்து வைத்த ஐம்பது ரூபாயை அங்கேயே முதல் சீட்டுத் தொகையாய் இழந்ததுதான் சோகம்.
குற்ற உணர்வில் குன்றிப் போனவளாய் பிரமை பிடித்த மாதிரி மகனுக்கருகிலேயே அவள் அமர்ந்திருக்க வந்து சேர்ந்தான் பழநி தள்ளாட்டத்துடன் வழக்கம் போல ஃபுல் லோடு ஏற்றிக் கொண்டு. கையில் பக்கோடா பொட்டலம். தண்ணி அடிக்கையில் தொட்டுக் கொள்ள வாங்கிச் சாப்பிடும் பஜ்ஜி, பக்கோடோ, போண்டா எதுவானாலும் அதில் கொஞ்சத்தை மகனுக்கு எடுத்து வரும் பாசக்காரத் தந்தை.
"இந்தா புள்ளக்கிக்கு கொடு. எனக்குந் தட்டப் போடு"
அவன் நீட்டிய பொட்டலத்தை வாங்கி சுவரில் ஓங்கி வீசினாள் ஆத்திரமாய். நாலாப் பக்கமும் சிதறி ஓடின பக்கோடா உருண்டைகள்.
என்றைக்கு இல்லாத திருநாளாய் இவளுக்கு ஏன் இந்த ஆத்திரம் என புரியாமல் விழித்தவனுக்கு அழுது அழுது தூங்கி போயிருந்த மகனை எழுப்பி அமர வைத்து, “பாருய்யா பாரு. உம்புள்ளய வாத்திச்சி என்ன பண்ணி வச்சிருக்கு பாரு” எனக் குமுறலுடன் காட்டி நடந்ததைச் சொல்ல, கோபமானான் பழநியும்.
“வர்றேண்டா நாளைக்கே ஒன் இஸ்கோலுக்கு. அந்த வாத்திச்சிய இழுத்துப் போட்டு அடிச்சு உண்டு இல்லேன்னு ஆக்கிடறேன் பாருடா செல்லம்.”
“அய்யோ அதெல்லாம் வேண்டாய்யா. புள்ள அங்கப் படிக்கணுமய்யா. நீ பாட்டுக்கு ஏடாகூடாம ஏதுஞ்செஞ்சிடாத. நல்லா நாக்கப் புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்டுப்புட்டு வருவோம். நம்ம மாதிரியான ஏழபாழைங்க கஸ்டம் புரியாத பிறவிங்க. பொட்டச்சி நா மட்டும் போனா மதிக்க மாட்டாளுக. நீயும் கூட வர்றே அக்காங்...”
அப்போதுதான் விழித்து அரைத் தூக்கத்தில் இருந்த அஜீத்துக்கு அப்பாவும் அம்மாவும் பேசுவதன் அர்த்தம் மெல்ல மெல்ல புரிபட பதறி, “வேணாம் வேணாம், ஒண்ணுங் கேக்க வேணாம். அப்புறம் பசங்க ஆரும் என்னய எந்த ஆட்டத்துக்கும் சேத்துக்க மாட்டாங்க. இனிமேட்டு பழய ஸ்கூலுக்கு வேணாப் போறேன். இங்க வேணவே வாணாம். நீங்களும் போகவேப் படாது” வெறி பிடித்தவன் போல கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தான் அஜீத்.
சுதாகரித்துக் கொண்ட சீதா “சரி ராசா. இப்ப சாப்புட வா” என்று கூப்பிட்டுப் பார்த்தாள். அவனோ “எனக்குப் பசிக்கல போ” என்றான்.
"சரி நீ இங்கிட்டே இரு. அப்பாவுக்கு சோத்தைப் போட்டுட்டு ஒனக்கு பிசைஞ்சு எடுத்தாந்து வாயில தாரேன்".
ஏதோ பேச முயன்ற பழநியையும் கண்ணால் சாடை காட்டி சாப்பிட அழைத்துச் சென்றாள்.
அவமானத்தால் உள்ளம் குறுகிப் போயிருந்த மகனின் உணர்வுகள் அவளுக்குப் புரியாமல் இல்லை. பள்ளிக்குச் சென்று முறையிடுவதால் எந்த நியாயமும் தமக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதும் தெரிந்தே இருந்தது. அம்பலம் ஏறாது ஏழை சொல் என்பதை விடவும் அந்த முயற்சி மகனை எந்த அளவுக்குக் கலவரப் படுத்தும் என்கிற கவலையே பிரதானமாகத் தோன்றியது. 'பேசாமல் அரசுப் பள்ளியிலேயே தொடர விட்டிருந்திருக்கலாமோ' என்கிற எண்ணம் வேறு படுத்தியது.
இதே பள்ளியில் படித்து கால் செண்டரில் கை நிறைய சம்பளம் வாங்கும் தன் சித்தி மகன் கைபேசியில் ‘தஸ்ஸு புஸ்ஸூ’ன்னு ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டுகையிலும், ‘அக்கா பைக் வாங்கிட்டேன்’ எனப் போன வாரம் வந்து காண்பித்த போதும், அவன் முகத்தில் தன் மகனை இருத்தி, தம் போன்ற மக்களுக்கும் இதெல்லாம் சாத்தியம் எனக் கண்ட கனவு எல்லாம் கானல் நீரேதானா என்ற கேள்வி எழும்பியது.
"ஏன்யா, நீ மட்டும் பொறுப்பா இருந்தா இந்த நெலம வேணுமாய்யா நமக்கு" எனப் புலம்பியபடியே உணவைப் பரிமாறினாள் சீதா. சாப்பாட்டைப் பார்த்ததும் சகலதும் மறந்து போனது பழநிக்கு.
ஒரு கிண்ணத்தில் சோற்றைப் போட்டுக் குழம்பை ஊற்றிப் பிசைந்து எடுத்துக் கொண்டு, மகனை நோக்கி வந்த சீதா அப்படியே நின்று விட்டாள். கையில் கத்திரிக்கப் பட்ட கேசத்தை வைத்துக் கொண்டு சொட்டுச் சொட்டாக அதன் மேலே விழுந்த தன் கண்ணீர்த் துளிகளை வெறித்தபடி உட்கார்ந்திருந்தான் அஜீத்.
கிண்ணத்தை ஒரு பக்கமாக வைத்து விட்டு "இதயுமா அள்ளிட்டு வந்தே" என்றாள்.
வகுப்புத் தரையில் விழுந்த கேசத்தைக் கையால் கூட்டி எடுத்து, டீச்சர் அவனது காலி சாப்பாட்டு டப்பாவில் போடச் செய்ததை தேம்பலுடன் அவன் சொல்லி முடிக்கையில் அவள் கண்களும் கொதித்துக் குளமாயின.
அங்குமிங்கும் திரும்பியள் பழநி பக்கோடா வாங்கி வந்த கிழிக்கப்பட்ட செய்தித்தாள் கண்ணில் படவும் அதை விரைந்து சென்று எடுத்தாள். எண்ணெயில் ஊறிப் போயிருந்த அந்தத் தாளில் அவன் கையிலிருந்த முடிக் கற்றைகளை வாங்கிப் பொட்டலாமாக மடித்தாள்.
வேகமாக வீட்டுக்கு வெளியில் வந்தவள் தெருவின் எதிர்முனையிலிருந்த குப்பைத் தொட்டியை நோக்கிச் சென்றாள். மகனின் ஆசிரியையாக அதை நினைத்துக் கொண்டு ஆவேசமாக அதன் மேல் விசிறி எறிந்தாள் பொட்டலத்தை, மனதிலிருந்து வழித்து எறிய முடியாத தன் இயலாமையையும் குற்ற உணர்வையும் எண்ணி நொந்தபடி.
கவனித்திருந்தாலும் கூட அவள் வாசித்தறிய வாய்ப்பே இல்லைதான் சுருட்டி எறியப்பட்ட அந்தப் பொட்டலத் தாளில் இருந்த செய்தியை: 'நகரின் மிகப் பிரபலமான பள்ளியில் நகம் வெட்டி வரவில்லை என ஒரு மாணவனைச் சற்று கடுமையாகக் கடிந்து கொண்ட குற்றத்துக்காக பெற்றோர்கள் திரண்டு வந்து கொடுத்த புகாரின் பெயரில் ஆசிரியர் இரண்டு மாத காலம் சஸ்பென்ட்.'
*** *** ***
[உரையாடல் சிறுகதைப் போட்டி விவரங்கள் இங்கே.]
இக்கதையில் வரும் சம்பவம் மிகைப்படுத்தப் பட்டதோ என்று ஒருசிலருக்குத் தோன்ற வாய்ப்பிருக்கிறது. இங்கு வலையேற்றிய பிறகு 13 ஜூன் 2009, டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் வந்த செய்தியின் சுட்டி இது.
இங்கு வலையேற்றிய பின்

- 5 நவம்பர் 2009 யூத்ஃபுல் விகடன் இணைய தளத்திலும்
- 15 ஜனவரி 2010, திண்ணை இணைய இதழிலும்..
- 17 ஜூலை 2010, வல்லமை இணைய இதழிலும்...
- லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையின் 2010 தீபாவளி மலரிலும்..
வாழ்த்துக்கள் அக்கா!
பதிலளிநீக்குஇது போன்ற பள்ளிக் கொடுமைகள் நம்ம ஊரில் தான் நிறைய நடக்கிறது. இப்படி நடந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் என்பதும், கீழ்த்தட்டு மக்களுக்கு தெரியாமலே போகிறது என்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குஉருக்கமான கதையா எழுதிட்டீங்க
பதிலளிநீக்குஇதை போல சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டு தான் உள்ளன..
குழந்தைகளின் மனதை உணராதவர்களே இதை போல நடந்து கொள்கிறார்கள். பல நல்ல ஆசிரியர்கள் இருந்தாலும் இதை போல ஒரு சிலர் செய்யும் செயலால் அனைவருக்கும் கெட்ட பெயர்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதமிழ் பிரியன் said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் அக்கா!//
முதல் வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ் பிரியன்!
சதங்கா (Sathanga) said...
பதிலளிநீக்கு//இது போன்ற பள்ளிக் கொடுமைகள் நம்ம ஊரில் தான் நிறைய நடக்கிறது.//
உண்மைதான், எப்போதுமே இருந்திருந்தனவா அல்லது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வருகின்றனவா என்பதும் அந்த இறைவனுக்கே வெளிச்சம்:(!
கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சதங்கா!
சென்ஷி said...
பதிலளிநீக்கு//போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
நன்றி சென்ஷி.
வாழ்த்திவிட்டு வாசிக்கத் தொடங்கினேன்.
பதிலளிநீக்குஅருமையான கருத்து அழகாகன நடை,எதிர்பாராத முடிவு.
கதை அல்ல நிஜம் என்ற நிஜக்கதை.
தட்டிவீட்டுக்குள் அஜீத்?!என்று கேட்டுமுடிக்கும் முன் அப்பா அஜீத் விசிறியாக இருக்கும் என்று எண்ணியபடி வாசித்துக்கொண்டே போனேனா ...நான் கணித்தது சரிதான் என்று ராலல்ஷ்மி சொல்லிவிட்டார்.
பதிலளிநீக்குமனித உரிமைகளைப் பற்றி பாமரர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் அறியாமல் இருப்பதுதான் வேடிக்கை
பதிலளிநீக்குஉங்க மெயில் வர்றதுக்கும் முன்னாடியே நான் படிச்சிட்டேன் :-).
பதிலளிநீக்குஒவ்வொன்றும் வர்ணித்த(spelling?) விதம் அழகு.
கதை அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்
கதை அருமை! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅப்படியே கண்முன்னால் நடப்பது போல உரைச் சித்திரம் வரைந்துவிட்டீர்கள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குமனம் கரைந்துவிட்டது அந்தக் குழந்தையின் நிலைமையைப் பார்த்து. கதையொ, கட்டுரையோ இப்படி நடக்கத்தானே செய்கிறது.
அநியாயம் எங்கெ நடந்தாலும் தட்டி கேட்க ஏழைப் பெற்றோர்களால் முடிவதில்லையே.
மிக உருக்கம்.
வாழ்த்துகள் ஒரு நல்ல கருத்துக்கு..
ஹை...! நல்லாருக்கே! கருதான் மனதை நெருடும் கரு. மூன்றாமிடத்தில் இருக்கும் தங்களின் அருமைகளை பெருமைகளை இந்த குருமார்கள் எப்போதுதான் உணர்வார்களோ?
பதிலளிநீக்குஇந்த மாதிரி ஆசிரியர்களை உதைப்பது ஒன்றுதான் வழி! அஜீத்தின் அப்பா சரி...
பதிலளிநீக்குவெற்றிக்கு வாழ்த்துக்கள்! :)
அருமையான கதை.. நீதியும் நியாமும் பொருளாதார நிலையைப் பொறுத்து மாறும் என்பதை நெத்தியடியாக சொல்லியிருக்கிறீர்கள்.. வெற்றி பெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபரிசுக்கேற்ற நட்சத்திரக் கதைதான் ராமலக்ஷ்மி!!!
பதிலளிநீக்கு@ திகழ்மிளிர்,
பதிலளிநீக்குவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
கிரி said...
பதிலளிநீக்கு//உருக்கமான கதையா எழுதிட்டீங்க
இதை போல சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டு தான் உள்ளன..//
நன்றி. அடிக்கடி கேள்விப் படுகிறோம் செய்தி ஊடகங்கள் மூலம் மட்டுமின்றி பாதிக்கப் பட்ட குழதைகள், பெற்றோரிடமிருந்தும்.
//குழந்தைகளின் மனதை உணராதவர்களே இதை போல நடந்து கொள்கிறார்கள்.//
குழந்தைகளிடம் காட்டும் கண்டிப்பில் இருக்க வேண்டிய கனிவை எளிதாக மறந்து விடுகார்கள் :( !
//பல நல்ல ஆசிரியர்கள் இருந்தாலும் இதை போல ஒரு சிலர் செய்யும் செயலால் அனைவருக்கும் கெட்ட பெயர்.//
மிகச்சரி. எல்லாத் துறையிலும் இந்தக் குறைபாடு களைய முடியாததாய் இருக்கிறது.
கருத்துக்களுக்கு மிக்க நன்றி கிரி.
பள்ளி தொடங்கிய ஜூன் மாதத்தில் வந்த சூப்பரான கதை. பரிசு நிச்சயம் அக்கா!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
goma said...
பதிலளிநீக்கு//வெற்றி பெற வாழ்த்துக்கள்//
//வாழ்த்திவிட்டு வாசிக்கத் தொடங்கினேன்.//
என் மேலே அத்தனை நம்பிக்கை உங்களுக்கு. நன்றி நன்றி:)!
//அருமையான கருத்து அழகாகன நடை,எதிர்பாராத முடிவு.
கதை அல்ல நிஜம் என்ற நிஜக்கதை.//
ஆமாம், சரியாகவே சொன்னீர்கள். நிஜத்தைதான் கதையாக்குகிறார்கள். கதையில் வாசிக்கையில் நிஜத்திலும் இப்படி நடக்கிறதே என்கிற அயர்வு.
தவிர்க்க முடியவில்லை இவற்றை.
//தட்டிவீட்டுக்குள் அஜீத்?!என்று கேட்டுமுடிக்கும் முன் அப்பா அஜீத் விசிறியாக இருக்கும் என்று எண்ணியபடி வாசித்துக்கொண்டே போனேனா ...நான் கணித்தது சரிதான் என்று ராலல்ஷ்மி சொல்லிவிட்டார்.//
ஹாஹா, அப்படி நீங்கள் கணித்ததிலேயே ஊர்ஜிதமாகி விட்டது பாருங்கள் நான் எழுதியிருப்பது மிகையல்ல என்பது.
பெரும்பாலான தட்டி வீட்டுக் கதவுகளைத் தட்டிப் பாருங்கள். நிச்சயம் ஒரு குட்டி விஜய், ரஜனி, கமல், சூர்யா, ஜோதிகா இருப்பார்கள். அப்படி பெயர் சூட்டுவதில் பெற்றவர்களுக்கு ஒரு அளவில்லா ஆனந்தமென்றால் பிள்ளைகளுக்கும் மனங்கொள்ளா பெருமிதம் பூரிப்பு:)!
//மனித உரிமைகளைப் பற்றி பாமரர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் அறியாமல் இருப்பதுதான் வேடிக்கை//
பாமரர்களாவது அறியாமையால் அப்படி நடந்து கொள்ளுகிறார்கள். ஆனால் படித்தவர்களும் கூட பல சமயங்களில் தட்டிக் கேட்கத் துணிவற்ற கோழைகளாகத்தான் அமைதியாகி விடுகிறார்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பள்ளியில் பிறகு எப்படி அமையுமோ என்று. ஆனால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட் குழந்தைகளின் மன மற்றும் உடல் ரீதியான உளைச்சலைப் பொறுத்து இருக்கிறது பிரச்சனையின் தீவிரம்.
அதை யாரும் அத்தனை எளிதாக எடை போட்டு விட முடியாது.
தங்கள் விரிவான கருத்துப் பரிமாற்றங்களுக்கு மிக்க நன்றி கோமா.
Truth said...
பதிலளிநீக்கு//ஒவ்வொன்றும் வர்ணித்த(spelling?) விதம் அழகு.
கதை அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்//
நன்றி ட்ரூத். அட, ஸ்பெல்லிங் பற்றி இன்னுமா கவலை? இப்போது அதையெல்லாம் தாண்டி சக்கை போடு போடுகின்றனவே உங்கள் பதிவுகள்:)!
//முன்னாடியே நான் படிச்சிட்டேன் :-).//
சங்கமம் 'பேருந்து' போட்டிக்கு வாக்கெடுப்பு ஆரம்பம் என ஓடி வந்து சொன்ன வேகம் அந்த ‘தேடல்’ கதையுடன் நின்று விடக் கூடாதென்றே தேடி வந்தேன் தட்டி எழுப்ப. ஆனால் நீங்கள் தூங்கவில்லை எனக் காட்டி விட்டீர்கள்:)! நல்லது, அப்போது அதிவிரைவில் உங்களிடமிருந்து ‘உரையாடல்’ போட்டிக்கு அசத்தலான கதையை எதிர்பார்க்கிறோம். தொடங்கட்டும் இப்போதே அடுத்த கதைக்கான உங்கள் தேடல்! [நண்பர்கள் பலரும் நல்ல நல்ல கதைகளுடன் களத்தில் இறங்கத் தயாராக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு கூடுதல் தகவல்:)!]
புன்னகை said...
பதிலளிநீக்கு//கதை அருமை! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
உங்கள் பாராட்டினாலும் வாழ்த்துக்களாலும் புன்னகைக்க வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி:)!
வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா!
பதிலளிநீக்குவல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//அப்படியே கண்முன்னால் நடப்பது போல உரைச் சித்திரம் வரைந்துவிட்டீர்கள் ராமலக்ஷ்மி.//
பாராட்டுக்கு மிக்க நன்றி வல்லிம்மா.
//மனம் கரைந்துவிட்டது அந்தக் குழந்தையின் நிலைமையைப் பார்த்து. கதையொ, கட்டுரையோ இப்படி நடக்கத்தானே செய்கிறது.//
அடிக்கடி நடக்கிறது.
//அநியாயம் எங்கெ நடந்தாலும் தட்டி கேட்க ஏழைப் பெற்றோர்களால் முடிவதில்லையே.//
தங்களுக்கு சரியானபடி நியாயம் கிடைக்குமா என்கிற கேள்விக்குறியுடனே பல பிரச்சனைகளுக்கு விடை தேடாது விட்டு விடுகிறார்கள் பிரச்சனையை விதியின் வசம்.
//மிக உருக்கம்.
வாழ்த்துகள் ஒரு நல்ல கருத்துக்கு..//
கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நானானி said...
பதிலளிநீக்கு//ஹை...! நல்லாருக்கே!//
நன்றி!
//கருதான் மனதை நெருடும் கரு.//
இது போன்ற நெருடும் சம்பவங்கள் நெஞ்சிலிருந்து அகலாததால் உருவானது.
//மூன்றாமிடத்தில் இருக்கும் தங்களின் அருமைகளை பெருமைகளை இந்த குருமார்கள் எப்போதுதான் உணர்வார்களோ?//
ஒருசிலரால் அந்த இடத்துக்கே வந்து சேருகிறது பாருங்கள் இழுக்கு.
கருத்துக்கு மிக்க நன்றி நானானி!
நாகூரான் said...
பதிலளிநீக்கு//இந்த மாதிரி ஆசிரியர்களை உதைப்பது ஒன்றுதான் வழி! அஜீத்தின் அப்பா சரி...//
ஆமாங்க:), ஆனால் பல அஜீத்தின் அப்பாக்களுக்கு போதையில் வீரம் இருக்கும். விவேகம் இருக்காது. அது தெளிந்த பின்னே கோழையாகி விடுவார்கள் அல்லது கவலையை மறக்க மறுபடி போதையை நாடுவார்கள்:(! உருப்படியாய் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.
//வெற்றிக்கு வாழ்த்துக்கள்! :)//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நாகூரான்.
வெண்பூ said...
பதிலளிநீக்கு//அருமையான கதை.. நீதியும் நியாயமும் பொருளாதார நிலையைப் பொறுத்து மாறும் என்பதை நெத்தியடியாக சொல்லியிருக்கிறீர்கள்.. வெற்றி பெற வாழ்த்துகள்.//
கதையின் சாராம்சத்தை நெற்றியடியாய் சொல்லி வாழ்த்தியமைக்கு என் நன்றிகள் வெண்பூ!
அன்புடன் அருணா said...
பதிலளிநீக்கு//பரிசுக்கேற்ற நட்சத்திரக் கதைதான் ராமலக்ஷ்மி!!!//
இதுவே எனக்கான பரிசு. நன்றி அருணா:)!
" உழவன் " " Uzhavan " said...
பதிலளிநீக்கு//பள்ளி தொடங்கிய ஜூன் மாதத்தில் வந்த சூப்பரான கதை. பரிசு நிச்சயம் அக்கா!
வாழ்த்துக்கள்!//
வாழ்த்துக்களுக்கு நன்றி உழவன். இது போன்ற சம்பவங்கள் இனிவரும் நாட்களில் எந்தப் பள்ளிகளிலும் நடக்காதிருக்கட்டுமாக!
கடையம் ஆனந்த் said...
பதிலளிநீக்கு//வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா!//
மிக்க நன்றி ஆனந்த்!
நல்லா இருக்கு.. போட்டியிலே வெற்றி பெற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇதைப் போன்ற செய்கைகளால் குழந்தைகள் மனம் எவ்வளவு பாதிக்கப்படும் என்று கல்வி கற்ற/கற்பிக்கும் ஆசிரியர்களே ஏன் உணர்வதில்லை என்றுதான் புரியவில்லை :(
பதிலளிநீக்கு//பரிசுக்கேற்ற நட்சத்திரக் கதைதான் ராமலக்ஷ்மி!!!//
ரிப்பீட்டேய்!
அன்பின் ராமலக்ஷ்மி,
பதிலளிநீக்குமனதை மிகவும் பாதித்துவிட்டது உங்கள் சிறுகதை. கதையல்ல..மூலைக்கு மூலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிஜம். ஏதும் செய்யவியலாமல் பார்த்திருக்கிறோம் அஜித்தின் பெற்றோரைப் போல :(
வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி !
(ஒரு இடத்தில் 'முதத்தில்' என இருக்கிறது. அதை முகத்தில் என மாற்றி விடுங்கள் )
நசரேயன் said...
பதிலளிநீக்கு//நல்லா இருக்கு.. போட்டியிலே வெற்றி பெற வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்களுக்கு நன்றி நசரேயன்.
கவிநயா said...
பதிலளிநீக்கு//இதைப் போன்ற செய்கைகளால் குழந்தைகள் மனம் எவ்வளவு பாதிக்கப்படும் என்று கல்வி கற்ற/கற்பிக்கும் ஆசிரியர்களே ஏன் உணர்வதில்லை என்றுதான் புரியவில்லை :( //
“கற்ற”... சரியாகச் சொன்னீர்கள் கவிநயா. குழந்தைகளாய் எப்போதுதான் குழந்தைகளாக பார்ப்பார்களோ இது போன்ற ஆசிரியர்கள் :( !
உற்சாகமாய் வழிமொழிந்த உங்கள் பாராட்டுக்கும் நன்றி!
எம்.ரிஷான் ஷெரீப் said...
பதிலளிநீக்கு//மனதை மிகவும் பாதித்துவிட்டது உங்கள் சிறுகதை. கதையல்ல..மூலைக்கு மூலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிஜம். ஏதும் செய்யவியலாமல் பார்த்திருக்கிறோம் அஜித்தின் பெற்றோரைப் போல :( //
முற்றிலும் உண்மை ரிஷான் :(!
நீங்கள் கவனித்து மேற்கொள்ளச் சொன்ன திருத்தத்தை உடனடியாக செய்து விட்டேன்:), மிக்க நன்றி!
வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள் அக்கா! :)
பதிலளிநீக்குஅவ்வப்போது செய்திதாள்களில் கண்ணில்படும் இது போன்ற செய்திகளில் சாரத்தினை மட்டும் வாசித்து சென்றுவிடும் பலருக்கு அதன் வலியினை உணர்த்தும் சம்பவங்களின் தொகுப்பாய் உரையாடல் சிறுகதை!
மனதினை நெகிழவைத்தது !
ஒரு சமுதாய சீர்திருத்த நோக்கோடு, ஒரு ஆசிரியையின் அறியாமையையும் தகுதிமீறலையும் கடிந்து, தண்டிக்கப்பட வேண்டியாவர் என்று மிரட்டி நல்லா எழுதி இருக்கீங்க, ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குஏனோ தெரியலை, எப்போவோ படித்த ஜானகிராமன் எழூதிய "சக்தி வைத்தியம்" மற்றும் "நாலாவது சார்" போன்ற சிறுகதைகளை என் நினைவுக்கு கொண்டுவந்து விட்டது உங்கள் கதை.
வெற்றிபெற வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி! :-)
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு போக முடியல அக்கா!
பதிலளிநீக்குகதையின் கருவும், எழுத்துநடையும் பின்னிட்டிங்க ;)
\\நித்தம் தேங்காய் எண்ணெய் தடவி இடது பக்கம் நேர்கோடாக வகிடெடுத்து சீவி விட்டால், தன்னிச்சையாக அவன் கன்னம் தடவி நெட்டி முறிப்பாள். "இத்தன எண்ணெய் வைக்காதேம்மா, பசங்க 'வருது பாரு விளக்கெண்ணெய்ம்பாங்க'" என அவன் சிணுங்கினாலும் கேட்க மாட்டாள்.
\\
;-)) எத்தனை முறை இந்த மாதிரி நடந்திருக்கு எனக்கு!!!இன்னிக்கு வரைக்கும் தலைக்கு எண்ணெய் வச்சியான்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க ;)
மீண்டும் வாழ்த்துக்கள் ;)
நல்ல நடை.அருமையான கரு.
பதிலளிநீக்குமுடிவு வேறு மாதிரி இன்னும் வலுவாக அமைத்திருக்கலாமோ...
ஆயில்யன் said...
பதிலளிநீக்கு//அவ்வப்போது செய்திதாள்களில் கண்ணில்படும் இது போன்ற செய்திகளில் சாரத்தினை மட்டும் வாசித்து சென்றுவிடும் பலருக்கு அதன் வலியினை உணர்த்தும் சம்பவங்களின் தொகுப்பாய் உரையாடல் சிறுகதை!
மனதினை நெகிழவைத்தது !//
இப்போது இது போன்ற செய்திகள் வெளியில் தெரியவருவது ஓரளவு ஆசிரியர்களை கவனமாக இருக்கச் செய்யும். பாதிக்கப் பட்ட குழந்தைகளின் வலியினை பெற்றோரின் வருத்தத்தை சமூகம் உணர வேண்டும். நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஆயில்யன்!
வருண் said...
பதிலளிநீக்கு//ஒரு சமுதாய சீர்திருத்த நோக்கோடு, ஒரு ஆசிரியையின் அறியாமையையும் தகுதிமீறலையும் கடிந்து, தண்டிக்கப்பட வேண்டியவர் என்று மிரட்டி நல்லா எழுதி இருக்கீங்க, ராமலக்ஷ்மி.//
மிரட்டி விட்டேனா:)? இது போல நடந்து கொள்வது நிச்சயம் தகுதி மீறல்தான் என்பது ஒருபுறமிருக்க அறியாமை மட்டுமே காரணமா அல்லது மனரீதியாகப் பாதிக்கப்பட்டு சமுதாயத்தின் மீதோ குடுப்பத்தின் மீதோ காட்ட முடியாத கோபத்தை இந்தப் பிஞ்சுகளிடம் காட்டித் தீர்த்துக் கொள்கிறார்களா என்றும் கூட தோன்றுவதுண்டு!
//ஏனோ தெரியலை, எப்போவோ படித்த ஜானகிராமன் எழூதிய "சக்தி வைத்தியம்" மற்றும் "நாலாவது சார்" போன்ற சிறுகதைகளை என் நினைவுக்கு கொண்டுவந்து விட்டது உங்கள் கதை.//
வாய்ப்புக் கிடைத்தால் தேடிப் படிக்க முயற்சிக்கிறேன். வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி வருண்.
கோபிநாத் said...
பதிலளிநீக்கு//போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு போக முடியல அக்கா!
கதையின் கருவும், எழுத்துநடையும் பின்னிட்டிங்க ;)//
நன்றி கோபிநாத்.
//;-)) எத்தனை முறை இந்த மாதிரி நடந்திருக்கு எனக்கு!!!இன்னிக்கு வரைக்கும் தலைக்கு எண்ணெய் வச்சியான்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க ;)//
ஆகா நடந்திருக்கிறதா உங்களுக்கு:)?
கருத்துக்கும் உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!
கும்க்கி said...
பதிலளிநீக்கு// நல்ல நடை.அருமையான கரு.//
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கும்க்கி.
// முடிவு வேறு மாதிரி இன்னும் வலுவாக அமைத்திருக்கலாமோ...//
என்னைப் பொறுத்தவரை கடைசிக்கு முந்தைய பத்தியோடு கதை அழகாய் முடிந்து விட்டதாகவே கருதுகிறேன்.
/*மனதிலிருந்து வழித்து எறிய முடியாத தன் இயலாமையையும் குற்ற உணர்வையும் எண்ணி நொந்தபடி.
பதிலளிநீக்கு*/
உண்மை. அழகாக கூறியுள்ளீர்கள் யதார்த்தமான ஒரு நிகழ்வை. படிக்கும் பொழுது மனம் வருந்தியது.. இது போன்ற ஆசிரியர்கள் கதையில் கூட வேண்டாமென்று...
உண்மைதான், நன்றி அமுதா. ஆனால் இப்படிப் பட்ட ஆசிரியர்களை அடையாளங்காட்ட வேண்டிய கட்டாயத்தில்.. தவறினைச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியத்தில்.. அல்லவா நாம் இருக்கின்றோம் :( !
பதிலளிநீக்குஅருமையான களம். நேர்த்தியான நடை. வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகொஞ்சம் பொறுமையா படிப்போமேன்னு தள்ளி போட்டுகிட்டே வந்தேன் பிரண்ட்!
பதிலளிநீக்குமெதுவா நிதானிச்சு படிக்க படிக்க ஏழ்மையின் உக்கிரமும், குடிகார கணவன் மீது கோவமும், ஏழி சொல் அம்பலமாகாது என்கிற விரக்தியும், பச்சை புடவை மேல் ஆசைவைத்த அம்மாவின் அல்ப்ப சந்தோஷமும், அத்ஹனால் அவளின் குற்ற உணர்வும், பையன் முடியை தாருமாறாக வெட்டிய ஆசிரியையின் கொடூரமும், அத்தோடு நில்லாமல் அதை சாப்பிடும் டப்பாவில் வைத்து அடைத்து அனுப்பிய ஆசிரியையின் வக்கிரமும், சிறுவன் அஜீத்தின் வெட்க அவமான உணர்வும் .....கடைசியாக அந்த தினத்தந்தியில் இருந்த வாசகமும்..................யப்பா யப்பா எத்தனை உணர்ச்சிகள் இந்த சின்ன கதையில்......
கண்டிப்பாக பரிசு கன்பாஃர்ம்டு!
அடிக்கடி இனி நீங்க கதை எழுதலாமே!
என் வாழ்த்துக்கள்
நல்ல கதை. அருமையான நடை. உங்கள் கதை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇது கதையா இல்லை நிஜமா? அவ்வளவு அருமையான தெளிவான நடை!
பதிலளிநீக்குகுடிகாரனுக்கு மனைவியாய் வாய்த்த ஒரு ஏழைப் பெண்ணின் மனப்போராட்டத்தையும், தன் மகனை, பெரிய ஆளாக பார்க்க நினைக்கும் பாசப் போராட்டத்தையும் மிக தெளிவாக வடித்துள்ளீர்கள்.
பரிசு கிடைக்க, கிடைக்க என்ன? கண்டிப்பாக உண்டு! அட்வான்ஸ் வாழ்த்துக்கள். இதை உதட்டளவில் சொல்லவில்லை, உள்ளத்தளவில் சொல்கிறேன்.
உழவன் சாரின் கதை மற்றும் தங்கள் கதையெல்லாம் படித்து, நான் எழுத நினைத்த கதையை மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறேன், எழுதலாமா வேண்டாமா என்று?!
Deepa said...
பதிலளிநீக்கு//அருமையான களம். நேர்த்தியான நடை. வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.//
பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தீபா.
அபி அப்பா said...
பதிலளிநீக்கு//மெதுவா நிதானிச்சு படிக்க படிக்க //
//யப்பா யப்பா எத்தனை உணர்ச்சிகள் இந்த சின்ன கதையில்......//
யோசித்து யோசித்து நான் எழுதிய கதைக்கு உங்களது விரிவான விமர்சனம் தந்து விட்டது பெரும் மனநிறைவை.
//அடிக்கடி இனி நீங்க கதை எழுதலாமே!//
முயற்சிக்கிறேன். உங்களது 'பச்சை பெல்டும் குள்ளமாமாவும்’ சிறுகதையைப் படித்து வியந்த தருணத்தில்தான் எனக்கும் ஏற்பட்டது ஆர்வம் போட்டியில் கலந்து கொள்ள. பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அபி அப்பா.
ஜெஸ்வந்தி said...
பதிலளிநீக்கு//நல்ல கதை. அருமையான நடை. உங்கள் கதை வெற்றி பெற வாழ்த்துக்கள். //
உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜெஸ்வந்தி:)!
SUMAZLA/சுமஜ்லா said..
பதிலளிநீக்கு//இது கதையா இல்லை நிஜமா? அவ்வளவு அருமையான தெளிவான நடை!//
நிஜத்தில் பார்க்க கேட்க நேரும் சம்பவங்களின் பாதிப்பில் பிறந்த கதை என்பதுதான் நிஜம்.
//குடிகாரனுக்கு மனைவியாய் வாய்த்த ஒரு ஏழைப் பெண்ணின் மனப்போராட்டத்தையும், தன் மகனை, பெரிய ஆளாக பார்க்க நினைக்கும் பாசப் போராட்டத்தையும் மிக தெளிவாக வடித்துள்ளீர்கள்.//
அழகான விமர்சனத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சுமஜலா.
//நான் எழுத நினைத்த கதையை மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறேன், எழுதலாமா வேண்டாமா என்று?! //
செய்யாதீர்கள் அப்படி. கண்டிப்பாக எழுதுங்கள். பரிசினைத் தாண்டி நம் ஒவ்வொருவரின் பங்களிப்புத்தான் முக்கியம். அனைவரின் படைப்புகளையும் ஒருசேர அங்கு வாசிக்கையில்.. வித்தியாசமான பல களங்களில் புனையப் பட்ட அக்கதைகளும், அவற்றில் காணப்படும் வேறுபட்ட பல சிந்தனை வடிவங்களும் நம்மையும் நம் எழுத்தையும் செதுக்கிக் கொள்ள உதவும் என்பதில் எந்த ஐயமுமில்லைதானே? அட்வான்ஸ் வாழ்த்துக்களுடன் உங்கள் கதையை எதிர்நோக்கி...
அன்பு
ராமலக்ஷ்மி
குழ்ந்தைகளின் மனம் அறியா முட்டாள்கள்..,
பதிலளிநீக்குSUREஷ் (பழனியிலிருந்து) said...
பதிலளிநீக்கு//குழ்ந்தைகளின் மனம் அறியா முட்டாள்கள்..,//
அப்படித்தான் தோன்றுகிறது :( !
கருத்துக்கு நன்றி SUREஷ்!
கதை நல்லா இருக்குங்க.
பதிலளிநீக்குநாட்ல இந்தமாதிரி சீத்தாக்களும் அஜித்தும் இருக்கத்தானா செய்யுராங்க.
வெற்றிபெற வாழ்துக்கள்கா.
கார்த்திக் said...
பதிலளிநீக்கு//நாட்ல இந்தமாதிரி சீத்தாக்களும் அஜித்தும் இருக்கத்தானா செய்யுராங்க.//
நிறைய..:(!
கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கார்த்திக்.
விளிம்பு நிலை மனிதர்கள் பற்றி இவ்வளவு விரிவாக எழுத நல்ல அவதானிப்பு இருக்க வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது. இதற்கு முன்பும் கூட 'இரத்த பாசம்' கதையில் ஏழைகளின் அன்றாட அவலங்களை எழுதியிருந்த ஞாபகம்.
பதிலளிநீக்குகளம், கரு, கதாபாத்திரங்கள் எல்லாமே சிறப்பு. முடிவு உண்மையில் யதார்த்தம். நல்ல கதை சகோ.
இந்தக் கதையைப் படிக்கும் ஆசிரியப்பணியில் இருக்கும் யாருக்காவது வருத்தம் ஏற்படுமோ என்று யோசித்தேன்; அருணாவே வந்து பாராட்டி விட்டதில் நிம்மதி. பரிசு கிடைக்க மனப்பூர்வ வாழ்த்துகள்.
அனுஜன்யா
அனுஜன்யா said...
பதிலளிநீக்கு//விளிம்பு நிலை மனிதர்கள் பற்றி இவ்வளவு விரிவாக எழுத நல்ல அவதானிப்பு இருக்க வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது.//
வாழ்க்கையில் நாம் காண நேரும் மனிதர்களைக் கவனிப்பதும், சமயங்களில் அவர்கள் பிரச்சனைகளுக்குக் காது கொடுப்பதும் மனித வாழ்க்கையைப் புரிந்திட உதவுகின்றன.
//இதற்கு முன்பும் கூட 'இரத்த பாசம்' கதையில் ஏழைகளின் அன்றாட அவலங்களை எழுதியிருந்த ஞாபகம்.//
மிக நன்றாக நினைவில் வைத்திருக்கிறீர்களே. அப்போது நீங்கள் தந்த ஊக்கம்தான் என்னை கலைமகளில் கொண்டு நிறுத்தியது என்றால் அது மிகையல்ல.
//களம், கரு, கதாபாத்திரங்கள் எல்லாமே சிறப்பு. முடிவு உண்மையில் யதார்த்தம். நல்ல கதை சகோ.//
நன்றி அனுஜன்யா, உங்களிடம் நான் பாஸ் மார்க் வாங்கி விட்டதில் திருப்தி.
//இந்தக் கதையைப் படிக்கும் ஆசிரியப்பணியில் இருக்கும் யாருக்காவது வருத்தம் ஏற்படுமோ என்று யோசித்தேன்; அருணாவே வந்து பாராட்டி விட்டதில் நிம்மதி.//
ஆசிரியர் பணி என்பது உன்னதமான ஒன்று. ஒரு சிலரால் அந்த பணிக்கு ஏற்படும் களங்கம் களையப் பட வேண்டுமல்லவா? இது போன்ற சம்பவங்கள் பல காலமாக தொடர்ந்து நடக்கின்றன. ஊடகங்களின் கவனத்துக்கு வர வாய்ப்பின்றி எத்தனையோ நிகழ்வுகள் உள்ளேயே புதைந்தும் போகின்றன.
குழந்தைகளின் மனவலி புரியாதவர்கள் இந்தத் துறைக்கே வரக் கூடாதெனப் பிரார்த்திப்போமாக. மற்றபடி நல்ல ஆசிரியர்கள் போற்றி வணங்கத்தக்கவர்கள் என்பதில் என்றைக்கும் மாற்றுக் கருத்தில்லை.
உங்கள் விரிவான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
நல்ல கதை..... !! அருமை...!!! வாழ்த்துக்கள் சகோதரி.....!!!!
பதிலளிநீக்குகதை சொன்ன விதம் நன்றாக இருக்கு வாழ்த்துகள் ராமலஷ்மி
பதிலளிநீக்குநேரமின்மை காரணமாக தாமதமாகபின்னூட்டமிடுவதற்கு மன்னிக்கவும்
லவ்டேல் மேடி said...
பதிலளிநீக்கு//நல்ல கதை..... !! அருமை...!!! வாழ்த்துக்கள் சகோதரி.....!!!!//
நன்றி மேடி!
ஷைலஜா said...
பதிலளிநீக்கு//கதை சொன்ன விதம் நன்றாக இருக்கு வாழ்த்துகள் ராமலஷ்மி//
நன்றி ஷைலஜா! உங்கள் கருத்துக்காகத்தான் காத்திருந்தேன்:)!
மேடம்,
பதிலளிநீக்குகதை நல்லா இருக்கு.உரையாடல்கள் யதார்த்தம். நல்ல flow.அழகாக இடம் விட்டு பாராக்கள்.சூப்பர்.
வழுக்கிக்கொண்டுப் போகிறது.
டீச்சர் செய்கை இந்த காலகட்டத்தில் சாத்தியமா?
கடைசி பாரா இல்லாமல் இருந்தால்
யதார்த்தமா இருந்திருக்கும்.
நீதி?
வாழ்த்துக்கள்.
கே.ரவிஷங்கர் said...
பதிலளிநீக்கு//கதை நல்லா இருக்கு. உரையாடல்கள் யதார்த்தம். நல்ல flow.அழகாக இடம் விட்டு பாராக்கள்.சூப்பர்.
வழுக்கிக்கொண்டுப் போகிறது.//
உங்கள் பாராட்டு, கதைகளில் அதிக கவனம் செலுத்தும் ஆர்வத்தைத் தருகிறது, நன்றி.
//டீச்சர் செய்கை இந்த காலகட்டத்தில் சாத்தியமா?//
சாத்தியமா என்றால்? சட்டத்துக்கு பயந்து இப்படி செய்வதில்லை என்கிற அர்த்தத்தில் கேட்கிறீர்களா எனப் புரியவில்லை. இப்படியும் ஆசிரியர் இருக்க முடியுமா எனப் பலரும் கேட்டு விட்டார்கள், ஒருவர் தன் பதிவொன்றிலே இக்கதையைக் குறிப்பிட்டே!
இப்படிப் பட்ட சம்பவங்கள் பரவலாக நடந்தபடிதான் உள்ளன. நான் இக்கதையைப் பதிவிட்ட ஒரு வாரம் கழித்து கூட 13 ஜூன் TOI-ல் இது போன்ற ஒரு சம்பவம் செய்தியாக வந்திருந்தது. பள்ளிக்கு சுத்தமாக வராததால் 3 மாணவர்களின் தலை முடியை வழித்தெடுத்து, டாய்லெட்டில் அடைத்து வைக்கப் பட்டதாக. இருதினம் கழித்துப் பெற்றோர் ஒருவழியாக துணிந்து போலிசில் புகார் செய்ய சம்பந்தப் பட்ட மூன்று ஆசிரியர்கள் மேலும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. :(!
//கடைசி பாரா இல்லாமல் இருந்தால்
யதார்த்தமா இருந்திருக்கும்.//
இருக்கலாம். ஆனால் சீதாவின் இயலாமைக்குப் பின் இருக்கும் அறியாமையையும் காட்டுகிறதே அந்தப் பத்தி. சமூகத்தில் நியாயம் என்பது ஒவ்வொரு தட்டு மக்களுக்கும் ஒவ்வொரு விதமாக அமைவதும் கிடைப்பதும் கண்கூடு. ஒருவேளை போராடியிருந்தால் அவளுக்கும் கிடைத்திருக்கலாம் நியாயம்.
//நீதி?//
சொல்லித் தெரியவேண்டியதில்லை என்றே நினைக்கின்றேன்! [நீங்கள்தானே கலைமகளில் வெளியான என் ‘விசுவாசம்’ சிறுகதைக்கான பின்னூட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல வேண்டாமே எனக் கேட்டுக் கொண்டீர்கள்:)!]
//வாழ்த்துக்கள்.//
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரவிஷங்கர்.
இது மிகைப்படுத்தப்பட்ட விஷயமே அல்ல.
பதிலளிநீக்குஒரு பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியரே ஒரு மாணவனின் ஊனத்தைக் குறிப்பிட்டு திட்டிவிட்டார். அந்த வகுப்பு மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வராமல் வகுப்புக்கும் போகாமல் ஆசிரியர் மன்னிப்பு கேட்கும் வரை போராடினார்கள். இது நான் நேரில் கண்ட உண்மை.
தலைமுடியை வெட்டிய ஆசிரியகள் பற்றி மட்டுமல்ல இன்னும் கொடூரமாக நடந்து கொண்ட ஆசிரியர்கள் பற்றியும் செய்திகளில் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். பத்திரிகை நிருபர்கள் பலரின் நட்பு எனக்கு இருப்பதால் அவர்கள் மூலம் தெரிய வரும் விஷயங்கள் இதை விட மோசமான அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கும்.
சமீபத்தில் வேதாரண்யம் வேன் விபத்தில் ஒரு சில குழந்தைகளைக் காப்பாற்றி, தன் உயிரைத் தியாகம் செய்த சுகந்தி என்ற ஆசிரியைக்கு (இவர் ஆயிரம் ரூபாய் ஊதியம் வாங்கி இருந்தால் அதிகம்.) இருந்த அக்கறையில் நூற்றில் ஒரு பங்கு கூட அரசுப் பள்ளிகளில் பல ஆயிரம் ஊதியம் வாங்கும் ஆசிரியர்களில் பலருக்கு இல்லை என்பது கசப்பான உண்மை.
@ சரண்,
பதிலளிநீக்குதங்கள் பகிர்வுக்கு நன்றி சரண். நீங்கள் கடைசியாக சொல்லியிருப்பதும் ஜீரணிக்க முடியாத கசப்பான உண்மைதான். அரசு தனியார் என்ற பாகுபாடுகளும் இல்லை இங்கே. நல்ல ஆசிரியர்களுக்கு மத்தியில் மாற்றானவர்களும் இருக்கிறார்கள் இப்படி:(!