Thursday, September 25, 2014

முத்துக்கள் 600; தமிழ் ஃபெமினாவில் ‘அடை மழை’; மதுரை மாநாடு - தூறல் 20

#1

 முத்துச்சரத்தில் 600 முத்துக்கள் கோத்தாகி விட்டது!

இப்போதெல்லாம் எந்தத் திட்டமிடலும் இல்லை. கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகவும் கோக்கின்ற பயணம் இங்கே சற்று தேக்கம் கண்டாலும் ஃப்ளிக்கர் தளத்தில் தினம் ஒன்று என்கிற கணக்கில் தடையில்லாமல் தொடருகிறது. ஆனால் வாரம் இரண்டு என்ற அளவில் கூட பதிவுகள் இட இயலவில்லை, இந்த வருடத்தின் சில மாதங்களில்.

வாசித்த நூல்கள், பார்த்த இடங்கள், கேட்ட விஷயங்கள் எனப் பகிர நினைத்துத் தள்ளிப் போட்டிருப்பவை நிறையவே.

Monday, September 22, 2014

பறவை - பாப்லோ நெருடா

நாளின் பரிசுப்பொருட்கள் மொத்தமும் கடத்தப்படுகின்றன
ஒரு பறவையிடத்திருந்து அடுத்ததற்கு.
ஒரு புல்லாங்குழலிலிருந்து நாள்
இன்னொரு புல்லாங்குழலுக்குச் செல்கிறது
செடிகொடியாலான உடையினை அணிந்து.

Saturday, September 20, 2014

‘ஆறடி நிலம்’ பாகம் 2 - ‘தினகரன் வசந்தம்’ தொடர்

பாகம் 1 இங்கே.

ராணி ஜீனத் மஹால் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் பிரச்சனையைக் கொண்டு வரக் கூடிய எந்த விஷயத்தையும் பேசத் தயாராக இல்லை. பிரிட்டிஷ்காரர்களுக்கும் இது நன்றாகத் தெரிந்திருந்தது. அதனாலேயே யாரையாவது ராணியிடம் கதை சொல்ல அனுப்பிக் கொண்டிருந்தார்கள். புரட்சி எனப் புறப்பட்டவர்கள், தெற்கே தம்மை எதிர்த்தவர்கள் எல்லாம் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பதையெல்லாம் விலாவாரியாக விளக்க வைத்தார்கள். புத்திசாலிகள்.

இன்னொரு விஷயமும் ஜாஃபர் மனதை அலைக்கழித்தது. தன்னை ஒரு சுஃபி மகானாக உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார். எத்தனையோ பேரின் துயர்களை, நோய்களை தன் ஆசிர்வாதத்தால், பிரார்த்தனையால் குணப்படுத்த முடிந்திருக்கிறது. இப்படியொரு அசாதாரண சக்தியைத் தனக்கு அள்ளித் தந்த கடவுள் என்ன நினைப்பார்? ஜனங்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதை விரும்புவாரா? அதே நேரம், ஒரு மகான் போரில் ஈடுபடலாமா? போரில் இறங்கி பல உயிரிழப்புகளுக்குக் காரணமாகலாமா? குழப்பமாக இருந்தது. தன் பிறப்பின் நோக்கம் என்ன? எது சரி? எது தப்பு? தன் மேல் விதிக்கப்பட்டதுதான் என்ன?

ராம் பாபாவைக் கேட்கலாமா?

Thursday, September 18, 2014

வானம் எனக்கொரு போதி மரம் - செப்டம்பர் PiT புகைப்படப் போட்டி

இந்த மாத போட்டியின் தலைப்புக்கானக் கருப்பொருள் கண்ணில் மாட்டவில்லை என யாருமே சொல்ல முடியாதபடி ஒரு தலைப்பைக் கொடுத்துவிட்டார் நடுவர் நித்தி ஆனந்த்.

வானம் எனக்கொரு போதி மரம்

#1

உங்கள் படங்களை அனுப்ப இன்னும் 2 தினங்களே இருக்கிற நேரத்தில் இந்தப் பதிவு அனுப்ப நினைத்து மறந்தவர்களுக்கு ஒரு நினைவூட்டலாக இருக்குமென நம்புகிறேன்.

முடிந்தவரை தலைப்புக்காக ஒரு படமேனும் எடுக்க வேண்டுமென்கிற என் விருப்பத்தின் விளைவாக முதல் படம். நேற்றைய வானம்.

மேலும் சில பல மாதிரிப் படங்கள் :)!

#2 அந்தி வானம்

#3 வர்ண ஜாலம்

#4 மஞ்சள் வெயில் மாலையிலே..

Tuesday, September 16, 2014

ஆறடி நிலம் - 'தினகரன் வசந்தம்' நான்கு வாரத் தொடர் - பாகம் 1

17 ஆகஸ்ட் தொடங்கி நான்கு ஞாயிற்றுக் கிழமைகள் தினகரன் வசந்தம் இதழில் வெளியான குறுந்தொடரை, பத்திரிகையில் வாசிக்கத் தவறியவர்களுக்காக இங்கே ஒவ்வொரு பாகமாக பகிருகிறேன்.


Monday, September 15, 2014

பெங்களூரில் அகநாழிகை பதிப்பக நூல்கள் வெளியீடு: ‘சக்கர வியூகம்’, ‘சிகப்பு பச்சை மஞ்சள் வெள்ளை’

நேற்று 14 செப்டம்பர் 2014, மாலை 6 மணியளவில் அகநாழிகை பதிப்பகத்தின் நூல்களான,  ஐயப்பன் கிருஷ்ணனின் “சக்கர வியூகம்” சிறுகதைத் தொகுப்பும், செல்வராஜ் ஜெகதீசனின் “சிகப்பு பச்சை மஞ்சள் வெள்ளை” கவிதைத் தொகுப்பும் வெளியிடப் பட்டன. விழா நிகழ்வுகளின் சில படங்கள் உங்கள் பார்வைக்கு:

Sunday, September 14, 2014

மு. ஜீவானந்தம் இலக்கியப் பரிசு.. “இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்பிற்கு..


பெண் எழுத்தாளர்களுக்கான மு. ஜீவானந்தம் இலக்கியப் பரிசுப் போட்டியில் எனது முதல் கவிதைத் தொகுப்பான “இலைகள் பழுக்காத உலகம்” நூலிற்கு ஊக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது:
Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin