திங்கள், 29 ஏப்ரல், 2013

கொல்கத்தாவின் ஒரு நடைபாதையிலிருந்து.. - சமகால ஆங்கிலக் கவிதை - அதீதத்தில்..


திறக்காதே உன் கண்களை
செளகரியமாகவே இருக்கட்டும் அவை
சின்ன மரத்தின் அடியில்
கூடைக்குள், கந்தல் பொதி மேல்.
எதுவும் சென்றுவிடவில்லை
தடதடக்கும் சரக்கு வண்டியைத் தவிர.
உன் அன்னை அதோ இருக்கிறாள்
சுள்ளிகளால் தீ மூட்டிக் கொண்டு.
அவளது முகம் கரிப் புழுதியாலும்
வியர்வையாலும் ஊறிப் போயிருக்கிறது.
கஞ்சியை முற்றுகையிடும் ஈக்களை
சூசூவென விரட்டிக் கொண்டிருக்கிறாள்.

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

தூறல்:12 - பெங்களூரில்.. கம்ப இராமாயண முற்றோதல், புகைப்படக் கண்காட்சி; புன்னகை உலகில் ‘ங்கா’; In and Out Chennai

சுவையை அனுபவித்துவிட்டால், 
கம்பனால் என்ன செய்ய முடியும் 
என்பதற்கு எடுத்துக் காட்டு.

கம்பராமாயண முற்றோதல்:

எழுத்தாளர் சொக்கன் ஒருங்கிணைக்க திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் வழிநடத்த கடந்த இரண்டு சனிக்கிழமைகளாக பெங்களூரில் கம்பராமாயணம் வாசிப்பு நடைபெற்று வருகிறது.

திங்கள், 22 ஏப்ரல், 2013

நட்சத்திரக் கனவு - 'கல்யாண் நினைவுப் போட்டி' பரிசுக் கவிதை

இரு சிறுவிழிகள்
எத்தனைப் பரந்தவானை
இதயத்துள் நிரப்பி விடுகின்றன!
ஆயிரம் நட்சத்திரக் கண்களால்
வானமும் பூமியை
அளந்து கொண்டுதானே இருக்கும்?

நினைவு தெரிந்த நாளிலிருந்து
நான் பார்க்கும் வானில்
வித்தியாசங்கள் அதிகமில்லை.
பிரபஞ்சம் தோன்றிய நொடியிலிருந்து
வான் பார்க்கும் பூமியில்
எவ்வளவு வித்தியாசங்கள்?

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

அதிகாலை நேரமே.. - சூர்யோதயம் - கபினி [பாகம் 2]


உதிக்கும் போதும் மறையும் போதும் பொன்மஞ்சளைப் பூசிக்கொண்டு
பிரகாசிக்கிற சூரியனை எந்நாளும்தான் பார்க்கிறோம் என்றாலும்  ஒருநாளைப் போல் ஒரு நாள் இருப்பதில்லை அது வானிலே தீட்டும் ஒளிச் சித்திரங்கள். அதுவும் ஏரி, கடல், நதிக்கரைகளில் என்றால் கேட்கவே வேண்டாம். வானோடு நீரும் தகதகக்கிற இரம்மியமான காட்சியில் உள்ளம் கொள்ளை போகிறது.

#1 அதிகாலை நேரமே..

புள்ளினங்கள் புறப்படும் வேளையில்
சவாரிக்குக் கிளம்புகின்றன பரிசல்களும்..
#2 தகதகவென..

திங்கள், 15 ஏப்ரல், 2013

என் பாட்டியின் வீடு - பண்புடன் இணைய இதழில்.. - கமலா தாஸ் கவிதை (3)



தொலைதூரத்தில் இருக்கிறது இப்போதும்,
எனக்கு அன்பை அள்ளித் தந்த வீடு...

அந்தப் பெண்மணி இறந்து விட்டாள்,
வீடும் மெளனத்துள் சுருங்கிக் கொண்டது,
புத்தகங்களுக்கு மத்தியில் சர்ப்பங்கள் நகருகின்றன,
அப்போதோ வாசிக்கும் வயதை எட்டாதிருந்தேன்.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

விஜய - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

மதுரை மீனாக்ஷி சுந்தரேஷ்வரர்-கூடலழகர்-நெல்லை காந்திமதி திருக்கோவில் கோபுரங்கள்

‘விஜய’ வருடத்தில்
அனைவர் வாழ்விலும் வெற்றிகள் மலரட்டும்! கனவுகள் மெய்ப்படட்டும்!
இயற்கையை மதிப்போம்!
சக மனிதரை, உயிர்களை நேசிப்போம்!
உலக அமைதிக்குப் பிரார்த்திப்போம்!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***



புதன், 10 ஏப்ரல், 2013

பரிசலோட்டி பன்னீர் - படம் மீட்டெடுத்த காவேரிக்கரை நினைவும், ரிஷிகேஷ் நிகழ்வும்

செல்லுமிடங்களில் ஒரு சில நிமிடங்களோ மணிகளோ, சந்திக்கிற மனிதர்களின் பெயர்களைக் கேட்டறிந்து படத்தோடு அவர்கள் பெயரையும் குறிப்பிடுவார் தன் அனைத்துப் பயணக் கட்டுரைகளிலும் பதிவர் துளசி கோபால் அவர்கள். அவரிடத்தில் பிடித்த பல விஷயங்களில் இதுவும் ஒன்று. இந்த நல்ல வழக்கத்தைக் கடைப்பிடிக்க நினைத்தாலும் பலநேரங்களில் மறந்து போகிறேன்.

படத்தில் இருப்பவர் பெயர் பன்னீரா என்றால், இல்லை.

திங்கள், 8 ஏப்ரல், 2013

பூக்களைப் படமாக்குவதில் என்ன பெரிய கிரியேட்டிவிட்டி இருக்கிறது?

#1 ஒட்டகச் சிவிங்கியை ஓரங்கட்டிய மலர்..
 விவரம் கடைசியில்..
எனது 'படங்கள் ஆயிரம் - ஃப்ளிக்கர் பயணம்'  பதிவில் ‘நீங்கள் அதிகமாய் பூக்களைதான் எடுக்கிறீர்கள்.’ என ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார். ‘அனைத்து வகைப் படங்களும் எடுத்து வந்தாலும், அதிகமாய் சமூக வலைத்தளங்களில் பகிருவது பூக்களையே என்பதால் அப்படித் தோன்றுகிறது’ என்றொரு பதிலை நான் சொன்னாலும் உடனடியாக ஆராய்ந்து பார்த்ததில் (ஃப்ளிக்கரில் வகைப்படுத்தியிருக்கும் ஆல்பங்களில்) அதிக எண்ணிக்கையில் படங்களைக் கொண்டிருப்பது பூக்கள் ஆல்பமே. ஆயிரத்தில் 165 போலப் பூக்கள் படங்கள் இருந்தன அன்று. இப்போது மேலும் சில. இப்படியே போனால் தனிப்பட்ட ஆல்பத்தின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டு ‘பூக்கள் ஆயிரம்’ என ஒரு பதிவு போட்டாலும் போடுவேன் போலிருக்கிறது:)! என்ன செய்வது? இயற்கை பல்லாயிரக்கணக்கான வண்ணங்களில், வடிவங்களில் அல்லவா மலர்களைப் படைத்து வைத்திருக்கிறது!

ஒரு தோழி சொன்னார், ‘பூக்களைப் படமாக்குவதில், பொதுவாகவே புகைப்படங்களிலும்தான் என்ன பெரிய கிரியேட்டிவிட்டி இருக்கிறது?  கோலமோ, சித்திரமோ என்றால் நம் கைவண்ணம் என ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது. இருக்கிறதை அப்படியே எடுத்துக் காட்டுவதில் என்ன பெரிய சுவாரஸ்யம்?’ என. மற்றவர் எடுப்பது குறித்து அல்லாமல் தனக்கு ஏன் அதில் ஆர்வம் இல்லை என்பதாகதான் சொன்னார். நல்லது. அது அவரது தனிப்பட்ட எண்ணம். என்னைப் பொறுத்தவரை,

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

சிரிப்பு (சிறுகதை) - அமீரகத் தமிழ் மன்றம் 13_ஆம் ஆண்டு விழா மலரில்..


22 மார்ச் 2013 அன்று துபாய் பெண்கள் உயர் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடந்து முடிந்த அமீரகத் தமிழ் மன்றத்தின் பதிமூன்றாம் ஆண்டுவிழாவில், ‘விழா மலர்’ சிறப்பு விருந்தினரான இயக்குனர் பிரபு சாலமனால் வெளியிடப்பட்டது.  விழா குறித்த விரிவான விவரங்களை தினமலரில் இங்கே காணலாம்.


எனது சிறுகதையை வெளியிட்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றத்துக்கு நன்றி! RamalakshmiRamalakshmi1


சிரிப்பு


வாய்க்கால் பாலத்தின் குட்டைச் சுவர் மேல் உட்கார்ந்து போவோர் வருவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் சிங்காரம். அரிசி மில்லு அண்ணாச்சி, பரமசிவம் வாத்தியார், சங்கரலிங்கம் சம்சாரம், குருக்களைய்யா மகன் எனத் தெரிந்தவர்கள் கடந்து போனாலும் வாளாவிருந்தான். அவர்களும் இவனோடு பேச முற்படவில்லை. இவனும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பள்ளி சிநேகிதன் பெருமாள் மட்டும் சைக்கிளின் வேகத்தைக் குறைக்காமல் ‘என்னலே சிங்காரம்?’ என உற்சாகமாய்க் கையசைத்துப் புன்னகைத்தபடிக் கடந்து போனான். வேறு வழியில்லாமல் பதிலுக்குப் புன்னகைத்து வைத்தவன், ‘உருப்படாத பயலுவதான் இந்தக் காலத்துல உதார் விட்டுக்கிட்டுத் திரியுறானுங்க’ என நினைத்தான்.

ஒரே வகுப்பில் பத்தாவது வரைப் படித்தவர்கள் பெருமாளும் அவனும். சில வகுப்புகளில் ஒரே பெஞ்சில் கூட இருந்திருக்கிறார்கள். இவன் எழுபது எண்பது என மதிப்பெண்கள் எடுக்கையில் அவன் நாற்பத்தைந்தை எந்தப் பாடத்திலும் தாண்டியதாக நினைவில்லை. நாற்பது வருடங்கள் ஓடி விட்டன. ‘ஈ ஓட்டுற கடையில என்னமோ தலைக்கி மேலே வேல கெடக்கிறாப்ல பாவ்லா பண்ணிக்கிட்டு நிக்காமல்லாப் பெடலப் போடுதான். ஒரு வகையில நல்லாதாப் போச்சு. என்ன கெடக்குப் பேச? எப்படிப் போவுது வியாவாரம்னுதான் ஆரம்பிக்க வேண்டிருக்கும். அது போதுமே. ஆரம்பிச்சுருவான் புராணத்தை. அப்பன் ஆரம்பிச்சக் கடை அவனாலதான் ஆஹா ஓஹோன்னு போகுதுன்னு அம்பானி ரேஞ்சுக்குப் பேசுவான். போட்டும் போட்டும். நிக்காமயேப் போட்டும்’ என நினைத்தான்.

வியாழன், 4 ஏப்ரல், 2013

கோடை வந்தாச்சு! - ஏப்ரல் மாத PiT போட்டி

பென்ஷனர்ஸ் பாரடைஸ் என்பார்கள் ஒருகாலத்தில், இதமான சீதோஷ்ணத்திற்காகவே பெங்களூரை.  மெட்ரோவுக்கு, பாலங்களுக்கு, சாலை விரிவாக்கத்திற்கு என என்னென்னவோ காரணங்களைச் சொல்லிக் கிட்டத்தட்ட நாலாயிரத்துக்கும் மேலான மரங்களைப் பலி கொடுத்து வளர்ந்து நிற்கிற ஐடி நகரத்து பென்ஷனர் நண்பர் ஒருவர் ‘இந்தக் கோடைக்கு வேற எங்காவது ஓடிப் போயிரலாம்ன்னு இருக்கேன்’ என்றார் போன வாரம்.  எல்லோருமே கோடை நெருங்க நெருங்க நடுங்க ஆரம்பிச்சிடுறோம் எப்படி சமாளிக்கறதுன்னு.  கூடவே சேர்ந்துக்கிற மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடுன்னு நாடு முழுக்க இருக்கு பிரச்சனை. விடுமுறைன்னு குழந்தைகளுக்குக் கொண்டாட்டம். ஆட்டம் பாட்டம்னு இருக்கிற அவங்கள அனல் வெயில் தாக்காமப் பாத்துக்கணும். வீட்டிலேயே பூட்ட முடியாம அங்கே இங்கேன்னு கூட்டிக்கிட்டும் போகணும். ஏராளமான திட்டங்களை இப்பவே போட ஆரம்பிச்சிருப்பீங்க. இந்த சமயத்துக்குச் சரியானத் தலைப்பா எனக்குத் தோணுறது என்னென்னு இப்பப் புரிஞ்சிருக்குமே உங்களுக்கு?

கோடை.

இதுதான் தலைப்பு. (போட்டி அறிவிப்பு இங்கே.)

வெப்பத்தின் தாக்கத்தை, வேண்டியிருக்கும் குளிர்ச்சியை, உல்லாச விடுமுறையை, இப்படி எந்தப் படமானாலும் அடிப்படையில் கோடை என்பதை உணர்த்துகிற விதமா இருக்கணும். உதாரணத்துக்கு கைவசமிருந்த சில படங்களை மாதிரிக்கு இங்கே தந்திருந்தாலும், நீங்க உங்க கற்பனைக் குதிரையை வேகாத வெயிலில் வேகமாய் ஓடவிட்டு அழகழகான  படங்களோடு வருவீங்கங்கிற நம்பிக்கை இருக்கு:)! எலுமிச்சஞ்சாறு, நீர்மோரு, பனையோலை விசிறி, தர்பூசணி, குளுகுளுக் கண்ணாடி, உச்சி வெயிலில் பசங்க ஆடும் கிரிக்கெட்  என எவ்வளவோ இருக்குதானே!

#1 தவிக்கிற வாய்களுக்கென..


#2 சூப்பர் ட்ரிங்க்


 #3 பெருந்தாகம்

திங்கள், 1 ஏப்ரல், 2013

நன்றி ரியாத் தமிழ்ச் சங்கம்! - கல்யாண் நினைவு - உலகளாவிய கவிதைப் போட்டி முடிவுகள்


ரியாத் தமிழ் சங்கம் நடத்திய உலகளாவிய கவிதைப் போட்டியின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.  எனது கவிதை ‘நட்சத்திரக் கனவு’ சிறப்பு ஆறுதல் பரிசு பெற்றிருப்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்:)!

ரியாத் தமிழ்ச் சங்கத்திற்கும், நடுவர்களுக்கும் என் நன்றி!

போட்டி முடிவுகளையும் இங்கே அறியத் தருகிறேன்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin