PiT பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PiT பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஜூன், 2020

இப்போது வானில்.. ஸ்ட்ராபெர்ரி நிலவு..

Exif: 1/125s, f/13,
 ISO 100
Focal length: 300mm
#HandHeld 

இன்று 5 ஜூன் 2020 சந்திரக் கிரகணம்:

இந்த ஆண்டின் இரண்டாவது பெனும்ப்ரல் சந்திரக் கிரகணம் இன்றிரவு.. இதோ இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  இது நிலவு தேய்ந்து மீண்டும் வளரும் பூரணச் சந்திரக் கிரகணம் இல்லை. பூரணக் கிரகணத்தின் போது சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றுமே ஒரே நேர்கோட்டில் வரும். அப்படி இல்லாமல் சூரியனின் கதிர்கள் பூமி மேல் விழுகையில், பூமியின் மங்கலான penumbra எனும் அரைநிழற் பகுதியை  நிலவு கடந்து செல்வதையே ஆங்கிலத்தில் Penumbral Lunar Eclipse என்கிறார்கள். நிலவின் தேய்வும் மிகமிகச் சிறிதாக நாம் சாதாரணமாப் பார்க்கையில் உணர முடியாதபடியே இருக்கும். டெலஸ்கோப் மூலமாகதான் தேய்வை உணர முடியும்.

இந்திய நேரப்படி, இன்றிரவு சுமார் 10.30 மணி முதல் நாளை  அதிகாலை 2.40 மணி வரை நீடிக்கும் சந்திர கிரகணம்  இரவு 12.40 மணியளவில் முழுமையான அளவை எட்டும் என்கிறார்கள். இந்த நேரத்தில் நாம் எப்போதும் பார்க்கும் வழக்கமான பிரகாசத்தோடு இருக்காதாம் முழுநிலவு.

ஸ்ட்ராபெர்ரி மூன்:

பொதுவாக ஜூன் மாத நிலவை ஸ்ட்ராபெர்ரி மூன் என்கிறார்கள். Honey Moon, the Mead Moon(தேனில் தயாரிக்கப்படும் பானம்), and Rose Moon போன்ற பெயர்களும் உண்டு. The Maine farmer's almanac_படி ஒவ்வொரு மாதத்தின் முழு நிலவுக்கும் ஒரு பெயர் வழங்கப் படுகிறது. 

முன்னரே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன், ஃபார்மர்ஸ் அல்மனாக் என்பது ஓரளவுக்கு நம்ம ஊர் பஞ்சாங்கம் போல.

வியாழன், 24 மார்ச், 2016

குரூப்புல டூப்பு

#1

#2

குரூப்புல டூப்பு யாருன்னு கண்டு பிடிச்சிட்டீங்கதானே? எதற்காக இப்போ டூப்பை ஓரம் கட்டணும்னு கேள்வி வரலாம்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

உயிரோட்டம்

#1  குறுநகை
மாற்றங்கள் வரவேற்புக்குரியவை. காலத்திற்கேற்ப ‘PiT - தமிழில் புகைப்படக் கலை’ தளத்தின் அடுத்தக் கட்ட நகர்வு:

புகைப்படக் கலையில் தமிழ் நண்பர்கள் திறனையும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்கிற ஒரே நோக்கத்துடன் பாடங்கள், அனுபவக் குறிப்புகளோடு எட்டரை ஆண்டுகளாக இயங்கி வருகிறது PiT தமிழில் புகைப்படக்கலை தளம் என்பதை அறிவீர்கள். இடைவிடாமல் வேறுவேறு தலைப்புகளில் நடத்தப்பட்டு வந்த மாதாந்திரப் போட்டிகள், இனி புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த Facebook https://www.facebook.com/groups/488597597986621/  குழுவின் மூலமாக தொடர முடிவாகி, இம்மாதப் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

#2 வெள்ளந்திச் சிரிப்பு

ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கணக்கை உருவாக்கிக் கொள்வது அவசியம். இணையம் பயன்படுத்தும் யாவரும் பதிவுலகில் இருப்பதில்லை. ஆனால் ஃபேஸ்புக் கணக்கு இல்லாதவர்கள் அபூர்வமே. போட்டி ஆல்பத்தில் படங்களைச் சேர்ப்பதை எளிமைப் படுத்தவே பிட் ஃபேஸ்புக் நோக்கி நகர்ந்து, இம்மாதம் இப்புதிய குழுவை ஆரம்பித்துள்ளது. இதுவரையில் 300+ பேர்கள் ஆர்வத்துடன் இணைந்திருக்கிறார்கள். ஆனால் முன்னரே பிட் தளத்தில் பகிரப் படும் பதிவுகளை உடனுக்குடன் அறிந்திட https://www.facebook.com/photography.in.tamil/ எனும் ஃபேஸ்புக் பக்கம் இரு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு அதை 3300+ வாசகர்கள் தொடர்ந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் இப்பக்கத்தை ‘லைக்’ செய்து பதிவுகளைத் தொடரலாம்.

#3 புன்முறுவல்
“Living things - உயிருள்ளவை ” என்பதே 2016 பிப்ரவரி போட்டிக்கு நடுவர் நவ்ஃபல் அறிவித்திருக்கும்  தலைப்பு. மனிதர்களாகவோ பிறஜீவராசிகளாகவோ இருக்கலாம். உயிரோட்டத்துடன் படங்கள் இருக்கவேண்டும் என்பது அவர் சொல்லாமலே புரிந்து கொள்ள வேண்டிய விதி. மற்ற பொது விதிமுறைகள் இங்கே.  இப்போது சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

#4 யாரை நம்பி நான் பொறந்தேன்..

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

மூன்று தமிழும் ஓரிடம் நின்று..

ஒன்று.. இரண்டு.. மூன்று..

பார்த்ததும் பளிச் எனத் தெரிய வேண்டும் படத்தில்..

இதுதான் ‘தமிழில் புகைப்படக் கலை’ தளம் இம்மாதப் போட்டிக்கு அறிவித்திருக்கும் தலைப்பு..

சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

#1 சுற்றிச் சுற்றி வந்தீக..

#2 மைசூர் அரண்மனையின் தெற்குக் கோபுரங்கள்


#3 இதழ் மூன்று.. துளிர் மூன்று..

#4 கதிரொளியில் மொட்டுக்கள்..

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

சுவை, மணம், குணம்.. காஃபி, டீ.. கலக்கலாம் வாங்க !

தேநீர் (அ ) காஃபி

இதுதான் இம்மாத ‘தமிழில் புகைப்படக் கலை’ அறிவித்திருக்கும் போட்டி. சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

#1


 “நம்மூர் சாயாக்கடைகளை காலை நேரத்தில் கேமராவுடன் முற்றுகையிடுங்கள். அற்புதமான, உயிரோட்டமுள்ள படம் கிடைப்பது நிச்சயம். வெறும் தேநீர் கோப்பையை மட்டும் எடுக்காமல், மக்கள் அதை குடிப்பது போல், கடைக்காரர் சாயா ஆற்றுவது போல் எடுத்துப் பாருங்கள் வித்தியாசம் தெரியும்.”  என்கிறார் நடுவர் நவ்ஃபல்.

#2
சுவரில் தெரியும் எழுத்துக்களை வைத்து இவரை எங்கே படமாக்கியிருப்பேன் என்று உங்களால் எளிதாகக் கணிக்க முடியும் என நம்புகிறேன் :)!

#3
க்ரீன் டீ = ஆரோக்கியம்


கடந்த மூன்று மாதப் போட்டிகளில் முறையே 60, 80, 40 பேர்கள் என்ற எண்ணிக்கையில் கலந்து கொண்டிருந்த இடத்தில்..

புதன், 8 ஜூலை, 2015

நீங்களே உங்களது நீதிபதி..

#1
ஓம் ஸ்ரீ சாய் ராம்
“உங்களின் படத்திற்கு முதல் நீதிபதி நீங்கள். இது தான் என்று இல்லாமல் குழந்தைகள், பெரியவர்கள் என யாராகவும் இருக்கலாம்.  இயற்கை காட்சிகளாக இருக்கலாம். எந்த வகையான படமாகவும் இருக்கலாம்.   அவற்றில் இருந்து மிகச் சிறப்பாக நீங்கள் கருதும் படங்கள் பத்தைத் தேர்ந்தெடுத்து அதில் இருந்து அதி சிறப்பு என்று  உங்களுக்குப் பிடித்த  ஒன்றை நீங்கள்  போட்டிக்கு அனுப்புங்கள்.” என்று சொல்லி விட்டார் இந்த மாத போட்டிக்கான நீதிபதி.

#2
நீங்களே உங்களது நீதிபதி..
PiT தளத்தில் அறிவிப்புப் பதிவு இங்கே.

ஆக முதல் சுற்றுப் படங்களாய் உட்கார்ந்து ஒரு பத்தைத் தேர்ந்தெடுங்கள். அதிலிருந்து ஒரு அதிசிறப்பை அனுப்பி வையுங்கள்.

2000 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் என் ஃப்ளிக்கர் பக்கத்திலிருந்து எதை என்று மாதிரிக்காகத் தேர்ந்தெடுப்பது? அதுவுமில்லாமல் காக்கைக்கும் தன் குஞ்சு.. போல என் கேமரா பிடித்த எல்லாமே எனக்குப் பொன் குஞ்சாகதான் தெரிகிறது:). ஆகையாலே சமீபத்தில் பதிந்தவற்றிலிருந்து.. முத்துச்சரத்தில் பதியாததாகத் தெரிவு செய்து பத்து படங்கள் பார்வைக்கு இங்கே....

#3
ஓம் க்ஷிப ஸ்வாஹா..
#4

ஞாயிறு, 7 ஜூன், 2015

சட்டம் போடலாம் வாங்க..

ஒளிப்படம் எடுக்கும் போது நாம் கட்டம் கட்டும் காட்சியின் ஆழத்தை அதிகரிக்கவும், சுவாரஸ்யம் கூட்டவும், சொல்ல வருவதை அழுத்தமாகக் காட்டவும் கையாளப் படுகிற உத்திகளில் ஒன்றுதான் சட்டத்துக்குள் சட்டம் (Frame within a frame) . இதுவே ஜூன் மாத PiT போட்டிக்கான தலைப்பு.

#1
உச்சிக் கோவில்

கேமரா பார்வையுடன் இரசனையான கூட்டமைவு(composition)ம் சேர்ந்து பார்ப்பவரை ஈர்க்கும் இந்த வகைப் படங்கள். 

#2
அருள்வாய் நீ..
அதுமட்டுமின்றி கேமரா வழங்கும் வழமையான செவ்வக வடிவ சட்டத்திலிருந்து விலகி விதம் விதமாகச் சட்டமிடும் வாய்ப்பை நம்மைச் சுற்றியிருக்கும் பல விஷயங்கள் நமக்கு வழங்குகின்றன:


#3
கால் முளைத்த ஊஞ்சலுக்குள்
காட்சிகள் இரண்டு

திங்கள், 11 மே, 2015

போர்ட்ரெயிட் (Portrait) என்றால் என்ன? - ஒரு அறிமுகம்




போர்ட்ரெயிட் அல்லது போர்ட்ரெய்ச்சர் என்பது ஒரு நபரின் முகம், முக அமைப்பு, உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலை வடிவம். அது ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, சிற்பமாகவோ இருக்கலாம். இவை சப்ஜெக்ட் நகராத நிலையில் இருக்கும் போது எடுக்கவோ, வரையவோ, வடிக்கவோ படுகின்றன. குறிப்பாக சப்ஜெக்ட் படம் எடுப்பவரையோ வரைபவரையோ நேராகப் பார்ப்பது போல் இருக்க வேண்டும்.  அப்போதுதான் பார்வையாளரைப் படத்துடனோ ஓவியத்துடனோ வெற்றிகரமாக ஒன்றிடச் செய்ய முடியும். அதுதானே ஒரு கலைஞனுக்கு தேவையானதும் :)?
**

சரி, நாம் இப்போது போர்ட்ரெயிட் ஃபோட்டோகிராஃபிக்கு வருவோம்.

I.  TRADITIONAL PORTRAIT எனப்படும் வழமையான மரபு: இதைத்தான் இம்மாதப் போட்டிக்கான தலைப்பாக நடுவர் அறிவித்திருப்பது.

* முகத்துக்கு முக்கியத்துவம்..

* நபரின் தனித்தன்மையைப் பிரதிபலிப்பது..


* நபர் நேரடியாகக் கேமராவைப் பார்ப்பது..

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

மறுபக்கம் - ஏப்ரல் போட்டி

#1 ஜெய மங்களம்

 .

#2 சுப மங்களம்


மங்களம் பாடி விட்டதால் பதிவு முடிந்து விட்டதெனப் பக்கத்தை மூடி விட வேண்டாம்:). பார்வைக்கு விருந்தாகக் காத்திருக்கின்றன மேலும் 15 படங்கள்.

வெள்ளி, 20 மார்ச், 2015

‘ஆஹா’ படங்களின் அணிவகுப்பு - மார்ச் போட்டி

#1

அசத்தி விட்டிருக்கிறார்கள், கோடு போட்டால் ரோடு போடும் "PiT" குடும்பத்தினர். இந்த முறை சற்று வித்தியாசமான ஒரு தலைப்பைக் கொடுப்போமென முடிவு செய்த நடுவர் நவ்ஃபலுக்கு நிச்சயம் மகிழ்ச்சிதான். எழுபது படங்கள் வரை அணி வகுத்து நிற்கின்றன சவால் விட்டபடி. அப்படி என்னதான் தலைப்பு?

#2

செவ்வாய், 20 ஜனவரி, 2015

சிந்தனை ஒன்றுடையாள்..

உலகில் உயர்வான ஒன்றாகப் போற்றப்படுவது தாய்ப்பாசம். அதையே இம்மாதப் போட்டிக்கானத் தலைப்பாகத் தந்திருக்கிறார் நடுவர் நித்தி ஆனந்த்: தாய்மை(Motherhood). மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் தாயன்பையும் காணத் தரக் கேட்கிறார். படங்களை அனுப்ப இன்றே கடைசி தினம் ஆகையால் நினைவூட்டலாக இந்தப் பதிவு. படங்கள் தாய்-சேய்க்கான பாசம், பரிவு, அக்கறை, மகிழ்ச்சி போன்றவற்றை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் வைக்கவும்.
#1

முன்னர் பகிர்ந்த படங்கள் 1+பதிமூன்றின் கொலாஜுடன், மேலும் புதிதாக 4 படங்கள் மாதிரிக்காகப் பகிருகிறேன்.

#2 சிந்தனை ஒன்றுடையாள்


#3 கனிவான அன்பு

வியாழன், 20 நவம்பர், 2014

மனிதனும் பிரம்மனே..

இந்த மாத PiT போட்டிக்கு ஒரு நல்ல தலைப்பைக் கொடுத்து, சப்ஜெக்டைத் தெரிவு செய்யும் வாய்ப்புக்கான கதவுகளையும் விரியத் திறந்து விட்டிருக்கிறார் நடுவர். மனிதனின் கைவண்ணத்தில் உருவான எந்தப் பொருளையும் ஒளிப்படமாக்கி அனுப்பலாம். சின்னஞ்சிறு குண்டூசி முதல் கலைநயமிக்கச் சிலைகள், பிரமாண்டமானக் கப்பல்கள் வரை இரசனையுடன் படமாக்கி அனுப்பிடலாம். மாதிரிப் படங்களுடனான அறிவிப்புப் பதிவு இங்கே.

படங்களை அனுப்ப இன்றே கடைசித் தேதி ஆகையால் உங்களுக்கு நினைவு படுத்திட 10 மாதிரிப் படங்களுடன் ஒரு பகிர்வு. 5,6 தவிர்த்து மற்றன யாவும் புதிது.

#1 கலைவாணி கலையழகுடன்..


#2 ஆயர்ப்பாடி மாளிகையில்..

#3 புத்தம் சரணம்
#4 Made for each other

திங்கள், 20 அக்டோபர், 2014

செடிகொடியில் காய்கனிகள்.. - PiT Oct 2014

#1
ஒரு கல்லில் எத்தன மாங்கா..?
இந்த மாத PiT போட்டிக்குப் படங்கள் அனுப்ப இன்றே கடைசித் தினம் ஆகையால், நினைவூட்டிடும் விதமாக இங்கும் ஒரு பதிவு. 

“நீங்கள் கேமராவுடன் தோட்டத்துக்கோ, தோப்புக்கோ, சோலைக்கோச் செல்ல வேண்டும். இயற்கை அன்னையின் மடியில் உறங்குபவற்றைத் தொந்திரவு செய்யாமல் படமாக்க வேண்டும். இலை தளைகளுக்குள் ஒளிந்து கொண்டு சிரிப்பவற்றைக் குனிந்து நிமிர்ந்து கண்டு பிடிக்க வேண்டும். சூரியக் குளியலில் ஆனந்தித்திருப்பவற்றை கண்டு ரசித்துக்  காட்சியாக்க வேண்டும்.

தலைப்பு: கொய்யாத காய்கனிகள்” என அறிவிப்புப் பதிவில் சொல்லியிருந்ததென்னவோ நிஜம்தான். ஆனால் அடித்துப் பெய்கிற மழைக்கு நடுவில் எப்படித் தோப்புத் துரவுக்குள் போகட்டும் என்கிறீர்களா? மழை விடும் நேரத்தில் முயன்று பாருங்களேன். காய்கனிகளும் மழையில் நனைந்து பளிச்சென போஸ் கொடுக்கும்:)!

ஒவ்வொரு மாதமும் தலைப்புக்காகப் புதுப்படங்கள் பதிகிற வழக்கத்தில் இந்தப் பதிவிலும் முதல் ஐந்து புதியவை. மற்றவை முன்னர் பல பதிவுகளில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.

#2
இவை என்ன காய் :)?
#3 குட்டைச் செடியில்..


#4 ஒற்றைக் கத்திரி..

வியாழன், 18 செப்டம்பர், 2014

வானம் எனக்கொரு போதி மரம் - செப்டம்பர் PiT புகைப்படப் போட்டி

இந்த மாத போட்டியின் தலைப்புக்கானக் கருப்பொருள் கண்ணில் மாட்டவில்லை என யாருமே சொல்ல முடியாதபடி ஒரு தலைப்பைக் கொடுத்துவிட்டார் நடுவர் நித்தி ஆனந்த்.

வானம் எனக்கொரு போதி மரம்

#1

உங்கள் படங்களை அனுப்ப இன்னும் 2 தினங்களே இருக்கிற நேரத்தில் இந்தப் பதிவு அனுப்ப நினைத்து மறந்தவர்களுக்கு ஒரு நினைவூட்டலாக இருக்குமென நம்புகிறேன்.

முடிந்தவரை தலைப்புக்காக ஒரு படமேனும் எடுக்க வேண்டுமென்கிற என் விருப்பத்தின் விளைவாக முதல் படம். நேற்றைய வானம்.

மேலும் சில பல மாதிரிப் படங்கள் :)!

#2 அந்தி வானம்

#3 வர்ண ஜாலம்

#4 மஞ்சள் வெயில் மாலையிலே..

சனி, 19 ஜூலை, 2014

சந்தோஷமும் சமாதானமும்

#1 பால் போலவே..
வெள்ளை நிறம் அமைதிக்கும் சமாதானத்துக்குமான அடையாளம் என்றால் மஞ்சள்  சந்தோஷத்துக்கும் வளமான வாழ்வுக்குமான அடையாளம்.

புதன், 18 ஜூன், 2014

நீரும் நெருப்பும்

நீரும் நெருப்பும்.. நிலமும் காற்றும்..

பஞ்ச பூதங்களில் நான்கு பூதங்கள்!

இந்த நான்கு இயற்கை சக்திகளையும் படமாக்கக் கேட்டுள்ளார் இந்த மாத PIT போட்டிக்காக, நடுவர் ஆன்டன்.

*நீர்த்துளி முதல் சீறும் சமுத்திரம் வரை..
*வெப்பத்தில் வெடித்துப் போன நிலம் முதல் அழகாகத் தெரியும் எந்த நில அமைப்பும்..
*சீறும் தீக்குச்சி முதல் காட்டுத்தீ வரை..
* உருவமில்லாக் காற்றை உணர வைப்பதாக..

உங்கள் படங்கள் இருக்க வேண்டும் என்கிறார். குறிப்பாக, இயற்கை சக்தி பார்த்ததும் ஈர்ப்பதாக அமைந்திருக்க வேண்டும்.

அறிவிப்புப் பதிவு இங்கே.

மாதிரிக்காகவும் ஒரு நினைவூட்டலாகவும் மேலும் சில படங்களை இங்கு பகிருகிறேன். [கடைசி இரு படங்கள் தவிர்த்து மற்றவை புதியவை:). படங்கள் இரண்டும் மூன்றும் தலைப்புக்காகவே எடுத்தவை.]

#1 சிற்றருவியின் தீம்தனனா..

#2 காற்றலை இல்லையென்றால்..
#3 சுடர்த் தாமரை

வெள்ளி, 14 மார்ச், 2014

தூறல் 16 - AID பெங்களூர் கண்காட்சியும் எனது படங்களும்; மல்லிகை மகள்; சிறு வியாபாரிகள்

AID பெங்களூர், விழிப்புணர்வுக்காக நடத்திய ஒளிப்படப் போட்டி குறித்த அறிவிப்பு விரிவாக இங்கே. கலந்து கொண்ட படங்களில் கண்காட்சிக்குத் தேர்வான படங்கள் 15 குறித்த விவரங்கள் இங்கே. அவற்றில் எனது படங்கள் இரண்டு தேர்வாகியுள்ளன என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இவற்றோடு பெங்களூர் குறித்த மேலும் பல ஒளிப்படங்களுடன், மார்ச் 15 மற்றும் 16 தேதிகளில், பெங்களூரின் தொம்லூர் பகுதியிலிருக்கும் தளம் அரங்கில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் வாய்ப்புக் கிடைக்கிறவர்கள் கலந்து கொள்ளுங்கள்!

கண்காட்சியில் இடம் பெறவிருக்கும் எனது படங்கள்:

சனி, 18 ஜனவரி, 2014

சீட்டு விளையாடத் தெரிந்திருப்பது அவசியம்தானா?

இம்மாத PiT போட்டிக்கு 'சீட்டுக்கட்டு விளையாடத் தெரிந்திருக்க அவசியம் இல்லை. அதன் வடிவங்கள் நான்கையும் அறிந்திருந்தாலே போதும்.’ என்கிறார் நடுவர் ஆன்டன். அறியாதவர் இருக்கிறீர்களா என்ன:)? ஆனாலும் அழகுத் தமிழில் வரிசைப் படுத்தியிருக்கிறார் நான்கு வடிவங்களையும் அறிவிப்புப் பதிவில் இப்படி:
  • ஈட்டிமுனை வடிவம் (Spade) - ♠
  • இதய வடிவம் (Heart) - ♥
  • சாய்சதுர வடிவம் (Diamond) - ♦
  • மூன்று பக்க இலை வடிவம் (Club) - ♣

நீங்கள் எடுக்கிற படங்கள் இந்த வடிவங்களில் ஒன்றைப் பிரதிபலிப்பதாய் இருக்க வேண்டும். ‘நூற்றுக்கு நூறு சதவிகிதம் துல்லியமாய் இருக்க வேண்டியதில்லை. ஏற்றுக் கொள்ளும் வகையில் பிரதிபலித்தால் சரி’ என நடுவர் பச்சைக் கொடி காட்டியிருந்தாலும் ‘உங்கள் கற்பனைத் திறனில் அவ்வடிவம் மெருகு பெற்று, ஒளிப்படக் கலையின் முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தாலே வெற்றி பெறும்’ என்றும் சொல்லியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:)!

மாதிரிக்கு நான் எடுத்தவற்றில் சில:
#1  ♣
 
#2  ♣

#3 ♣

திங்கள், 9 டிசம்பர், 2013

பொகே அல்லது பொகா (Bokeh) - ஒரு அறிமுகம்; மூடிய கதவுகள் - டிசம்பர் PiT போட்டி

 #1
பின்னணியின் தொலைவு கூடக் கூட பொகே அழகும் கூடும்.
இந்த மாத PiT போட்டி இரண்டு தலைப்புகளில். DSLR பயன்படுத்துகிறவர்களுக்காக சவாலான தலைப்பு ஒன்றும், பொதுத் தலைப்பாக இன்னொன்றும்.

விரிவான விவரங்களை போட்டி அறிவிப்பு பதிவில் காணலாம்.

கிறுஸ்துமஸைக்  கொண்டாட, புதுவருடத்தை வரவேற்க நகரங்கள் ஒளிக்கோலம் பூணுகிற இந்நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக முதல் தலைப்பு.

போட்டி 1: பொகே

பொகே அல்லது பொகா குறித்து அறியாதவர்களுக்காக இன்று PiT-ல் நான் அளித்திருக்கும் விளக்கப் பதிவு http://photography-in-tamil.blogspot.com/2013/12/bokeh.html உங்களுக்கும் பயனாகக் கூடுமென இங்கேயும் பகிர்ந்துள்ளேன். ஒளிப்படக்கலையில் ‘பொகே’ அல்லது ‘பொகா’ என்றால் என்னவெனப் பார்ப்போம்.

Bokeh எனும் சொல் ஜப்பானிய மொழியில் ‘மங்கிய’ (blurred) எனும் அர்த்தம் கொண்டதாகும். ஆங்கிலத்துக்கு வந்த விட்ட இச்சொல் பொகே, பொகா, போக்கி எனப் பலவிதமான உச்சரிப்புகளில் பயன்படுத்தப் படுகிறது. நாம் பொகே எனப் பார்ப்போம்:).

புதன், 8 மே, 2013

ஆன்மாவின் இசை - மே 2013 PiT போட்டி


ஆன்மாவின் இசை சிரிப்பு என்பார்கள்.  தன்னிகரற்ற அந்த இசையை, முகம் மலர்ந்த புன்னகையை, மனம் நிறைந்த சிரிப்பைக் காட்சிப்படுத்திடக் கேட்கிறது மே PiT போட்டி.

தலைப்பு: புன்னகை

”புன்னகை, சந்தோஷம் , மகிழ்ச்சி, ஆனந்தம்,குதூகலம்,கலகலப்பு.. இப்படி எது வேண்டுமானாலும் இருக்கட்டும்..’ என்கிறார் நடுவர் கருவாயன் என்ற சுரேஷ்பாபு, அறிவிப்புப் பதிவில். “இன்றைக்கு இருக்கின்ற பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலைகளில் நாம் சந்திக்கின்ற அனைவருமே ஒரு வித இறுக்கமான முகங்களையே பார்க்கின்றோம்..முகம் உர்ர் என இருந்தால் யாருக்காவது பிடிக்குமா என்ன...” எனக் கேட்கிறார்.

உண்மைதானே? எந்த ஒரு மன இறுக்கத்தையும் மாற்றிடும் சக்தியாக,  மனக் கவலைகளைப் போக்கிடும் மருந்தாக புன்னகையும் சிரிப்பும் இருப்பதை மறுக்க முடியுமா?

#1


#2

#3
குழலூதும் பாலக் கிருஷ்ணர் போல அபிநயம் பிடிக்கிறார் :)!
#4

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin