சனி, 19 மார்ச், 2011

திறந்திடு ஸீஸேம்.. கதவுகள்.. படங்கள்- மார்ச் PiT போட்டி

1.‘குயிலப் புடிச்சு.. கூண்டில் அடைச்சு..
கூவச் சொல்லுகிற உலகம்..’
எதிர்காலம் நோக்கி
இன்றைய தலைமுறையை இட்டுச் செல்லும் முறை???

2.கண்ணாடிக் கதவுகளின் வழியே..
காட்சி தரும் கதவுகளும்.. தாமரைக் குளமும்..
ரூம் போட்டு யோசிக்க.. உகந்த இடம்.

3. சாளரக் கதவுகள் திறந்திருக்க
அதன்
நிழல்கள் நீரில் தத்தளிக்க


4.எத்தனை கதவுகள் எண்ணுங்கள்
கதையையும் கொஞ்சம் கேளுங்கள்

குமரகத்தின் வேம்பநாடு ஏரிக்கரையில் 1881-ல் இந்த இரண்டடுக்கு விக்டோரியன் கட்டிடம் ஆல்ஃப்ரட் ஜார்ஜ் பேக்கர் என்பவரால் பெரிய பெரிய தேக்கு மரக்கட்டைகளால் இழைத்து இழைத்துக் கட்டப்பட்டது. இப்போது தாஜ் க்ரூப்பின் சுற்றுலா விடுதியின் உணவகமாக செயல் பட்டு வருகிறது.

5.அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி..

அருகிலேயே அமைந்த பறவைகள் சரணாலயம், அழகான ஏரி இவை அடுத்தடுத்து துரையின் நான்கு தலைமுறைகளை இங்கேயே உல்லாசமாக வாழ வைத்திருந்தது. இதைக் கட்டப் பயன்படுத்தபட்ட நம் மக்களின் கடின உழைப்பு காலத்தால் அழிக்க முடியாத ஒன்றாக.., இன்றும்
திறந்திருக்கும் கதவுகளின் உள்ளே உறைந்திருக்கிறது மெளனமாக.

6. நூலகத்தின் சாளரங்கள்
பெங்களூரு மைய நூலகம். உள்ளிருக்கும் புத்தகங்களின் அறிவு மூச்சு கசிகிறதோ திறந்திருக்கும் ஒற்றை சன்னல் வழியே..?

7.மங்களூரில் ஒரு பிரிட்டிஷ் கட்டிடம்சிகப்பில் சுவர் இருந்தால் பச்சையில்தான் கதவுகள் இருக்கணுமோ#டவுட்டு

8. தியானக் கதவுகள்
மைசூருக்கு அருகிலிருக்கும் பைலாக்குப்பேயில் திபத்தியர் கட்டியிருக்கும் பெளத மத தங்கக் கோவிலின் பிரதான தியான மண்டபம். தன்னை உணர, ஞானம் பெற, புத்தரை அடைய, புத்தராக மாற உதவுகிறது தியானம் என வரவேற்கின்றன இதன் கதவுகள்.

9.கம்பளமும் கதவுகளும்


10.கதவிலே கையூன்றி..
கதவிலே கையூன்றி நிற்கலாம் கம்பீரமாய் காவலாளி!
கையூட்டு கேட்டுதான் தன்மானம் இழந்து
தலைகுனியக் கூடாது அரசின் தொழிலாளி!

11.கதவுகளின் இருபுறமும்..
ஆஞ்சநேயரின் திருவுருவம்!!

12. கதவைத் தட்டும் கஜேந்திரர்



நினைவோ ஒரு பறவை.. விரிக்கும் அது சிறகை..

13.அறிவுக்கண்களைத் திறந்த கதவுகள்
அ ஆ அறிவித்த ஆரம்பப் பள்ளி
***
14. ஞானக் கதவுகள்
உருவாக்கிய கல்விக் கூடம்
***
15.தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்
[பள்ளி தேவாலயம் அப்படியே மாறாமல்..]
கேட்டிருக்கிறோமே ஒவ்வொரு பரீட்சைக்கும்:)!
கொடுக்கப்பட்ட வரங்களின் நினைவாகவே இப்படம்:)!
சில மாதம் முன்னர் செய்த பள்ளி விஜயம் பற்றிய பதிவு இங்கே: ‘தாயுமானவராய்’!
***

16.கதவைத் தட்டாமல் நினைவைத் தட்டி..
நானும் தங்கைகளும் ஒரே சமயத்தில் கல்லூரியில் இருந்த சமயம். அதன் அருகேயே இருந்தால் சென்று வர எளிதாக இருக்குமென்ற அம்மாவின் முடிவால் சில வருடங்கள் தங்கியிருந்த வீடு. யாரையும் தொந்திரவு செய்யாமல் அதன் வழியே சென்று நினைவுகளை மீட்ட வேளையில்.. பதிந்த படம் :)!
***



17. உச்சி வெயிலில் பச்சப் புள்ளைகள்
நெல்லையப்பர் கோவில், பூட்டிய தாமிர சபை முன்னபாக..

18. திறக்கப் பயந்த கதவுகள்

கோடை வெயில் கண்டும்..
கொட்டிடுமோ தேனீ என்றும்..
***


19. சாமியறைக் கதவுகள்




திறந்திடு ஸீஸேம்!

குரல் கொடுப்போமே நம் உள்ளக் கதவுகளைத் தட்டி..

பாராட்டாகட்டும் வாழ்த்தாகட்டும் நன்றியாகட்டும்
மனம் திறந்து.. மனம் நிறைந்து..
பாராட்டுவோம் வாழ்த்துவோம் நன்றி சொல்வோம்

குகையின் கடும்பாறைக் கதவுகளைப் போல் மனதை இறுக மூடி வைத்திருந்தால் குறுகித்தான் போகும் அது.

அன்பு

தொகுப்பாய் பல படங்களைப் பதிந்து, எதைக் கொடுக்க எதைக் கொடுக்க என நானும் குழப்பமாகி, உங்களையும் கேள்வி கேட்டு சிரமப் படுத்தி.., இதெல்லாம் செய்யாம ஒண்ணே ஒண்ணு, போய் வாம்மா கண்ணே கண்ணுன்னு சென்றமாத போட்டிக்கு அனுப்பி வைத்த இப்படம் தளிர் நடை போட்டு சென்று வீர நடையுடன் வெளிவந்திருக்கிறது இறுதிச் சுற்றில் மூன்றாம் இடத்தைப் பெற்று:)! நன்றி PiT!

அதீதம்
எனது இப்படத்தை (மார்ச் 1-15) அதீதம் இணைய இதழ்,' புகைப்படங்கள்' பிரிவில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. நன்றி அதீதம்!

இரண்டையும் உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

கேட்க மறந்து விட்டேனே!
போட்டிக்கு எதைக் கொடுக்க:)?
அல்லது
எந்தப் படம் உங்கள் ரசனைக் கதவைத் திறந்தது:)?
*** *** ***

67 கருத்துகள்:

  1. மீள் நினைவுகளான பழைய வீட்டின் படம் எல்லோருக்கும் உண்டு

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  2. அருமையான படங்களும், நினைவலைகளும் கலக்கல்....

    பதிலளிநீக்கு
  3. அழகான படங்கள்

    கதவைத்தட்டும் கஜேந்திரர் ரைட் லெக்கால ஒன்னு விட்டா அந்த கேட் என்னாவறது..

    சாமியறைக்கதவுகள் படம் ஸ்க்ரால் பண்றப்பவும் செமயா இருக்கு..

    பதிலளிநீக்கு
  4. முதாலவது படம் எனக்கு ஈழம் காட்டுது.பிரம்பும் பின்னலில் நீரில் நிழல் தரும் படமும் பிடிச்சிருக்கு !

    பதிலளிநீக்கு
  5. வழக்கம்போல எல்லாமே அழகா இருக்கு..சாமியறை கதவு என்னங்க மேஜிக் அது செய்யுது ? !!
    :)

    பதிலளிநீக்கு
  6. எதிர்காலம் நோக்கி
    இன்றைய தலைமுறையை இட்டுச் செல்லும் முறை???

    கதவிலே கையூன்றி நிற்கலாம் கம்பீரமாய் காவலாளி!
    கையூட்டு கேட்டுதான் தன்மானம் இழந்து
    தலைகுனியக் கூடாது அரசின் தொழிலாளி!

    உள்ளிருக்கும் புத்தகங்களின் அறிவு மூச்சு கசிகிறதோ திறந்திருக்கும் ஒற்றை சன்னல் வழியே..?

    கோடை வெயில் கண்டும்..
    கொட்டிடுமோ தேனீ என்றும்..//

    படங்களும் அதைப் பார்த்துப் பிறந்த வரிகளும் நன்று.

    எனது தேர்வு...
    1.‘குயிலப் புடிச்சு.. கூண்டில் அடைச்சு..
    கூவச் சொல்லுகிற உலகம்..’

    பதிலளிநீக்கு
  7. புகைப்படங்களின் காவியம் எனக் கூறலாம் உங்களது இந்தப் பதிவினை.
    அத்தனையும் அருமை. பலாப் பழத்தில் எந்த சுளை சுவையானது என்று கேட்டால், சொல்வது கடினம். எல்லா படங்களுமே அருமையிலும் அருமை. குமரகத்தின் வேம்பநாடு
    கட்டிடம்தான் எனது தேர்வு. அதுபோல ஒரு வீடு கட்டவேண்டும் என்பதுதான்
    எனது ஆசை. அதீதம் இதழில் தங்களது படம் வெளிவந்ததற்கு
    என் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி அக்கா.

    பதிலளிநீக்கு
  8. ஆஹா ராமலஷ்மி ! படங்களும் அவை சொன்ன கதைகளும் அருமை,ஒரு சில இடங்கள் அதிகம் பழகிய இடம் போல உணரும் அளவு மிக இயல்பு...

    பதிலளிநீக்கு
  9. என் தேர்வு 3 வது படம்...ராமலஷ்மி.எதை தேர்ந்தெடுக்கன்னு தெரியலை அத்தனையும் அழகு.

    பதிலளிநீக்கு
  10. படங்களும்,அதற்கொப்ப கவிதைகளும் போட்டி போட்டு பார்ப்போரை கவர்ந்திழுக்கின்ரன.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. Brings back memories - very interesting collection. Not just for the PiT, you should release a photo blog now and then with a theme....

    Good luck for the contest

    பதிலளிநீக்கு
  12. கதவிலே கையூன்றி நிற்கலாம் கம்பீரமாய் காவலாளி!
    கையூட்டு கேட்டுதான் தன்மானம் இழந்து
    தலைகுனியக் கூடாது அரசின் தொழிலாளி!

    அதானே ஒரு கவிதை இல்லாமல் எப்படி ..

    பதிலளிநீக்கு
  13. 1.குயிலைப் பிடிச்சு....
    9.கம்பளமும் கதவுகளும்.
    இரண்டும் போட்டி தலைப்புக்கு பொருத்தமாக இருப்பது போல் தெரிகிறது. உங்கள் ஆல்பத்தில் இவ்வளவு கதவுகளா?

    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  14. படங்கள் தங்களுக்குக்குள் போட்டி போடுகிறது....
    மிக நேர்த்தி.

    பதிலளிநீக்கு
  15. முதல் புகைப்படம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  16. Close contest between #3 and 4 - #3 finally won - that peaceful, serene shot is my choice!

    பதிலளிநீக்கு
  17. அன்பின் ராமலக்ஷ்மி

    அத்தனையும் அருமை. மனதைக் கவர்ந்திழுக்கும் கதவுகள். திறமை, பொறுமை, உழைப்பு மற்றும் சிந்தனை அத்தனையும் ஒருங்கே சேர்ந்து படைத்த முத்துகள். ஒவ்வொன்றும் கண்ணைக் கவர்ந்து, இது சிறந்ததா அது சிறந்ததா என முடிவு செய்ய இயலாத நிலௌக்குக் கொண்டு செல்கின்றன.

    9 : கமபளமும் கதவுகளூம்
    8 : தியானக் கதவுகள்
    19 : சாமியறைக் கதவுகள்
    15 : தேவாலயம்
    16 : மலரும் நினைவுகள்

    இவைகளீல் ஒன்று நிச்சயம் போட்டியில் வெல்லும்.

    அதீதம் இதழில் வெளிவந்தமைக்கும், போட்டியில் வெற்ரி பெற்றமைக்கும் - பாராட்டுகள். இனி வெல்வமைக்கு நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  18. எனக்குப்பிடிச்சது சாமியறைக்கதவுகள்தான்..

    பதிலளிநீக்கு
  19. முதலாவது படம் மனதை பிசைகிறது..ஏனைய அனைத்தும் அழகு படங்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  20. அப்பப்பா எத்தனை கதவுகள் அக்கா..

    பதிலளிநீக்கு
  21. கதவென்றாலே அது ஒரு கவிதையின் நல்ல கருப்பொருள். எத்தனை கதவுகளை திறந்து மகிழ்ச்சியை அள்ளி வீசி இருக்கிறீர்கள். சாமியறைக் கதவின் காட்சிக் கோணம் கலை நுணுக்கத்துடன் எடுக்கப் பட்டிருக்கிறது. அந்த கதவின் மேலோங்கும் பிரமிப்பு எல்லா புகைப்படத்திலும் விதவிதமான கோணங்களில் இருக்கின்றன...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. //பாராட்டாகட்டும் வாழ்த்தாகட்டும் நன்றியாகட்டும்
    மனம் திறந்து.. மனம் நிறைந்து..
    பாராட்டுவோம் வாழ்த்துவோம் நன்றி சொல்வோம்//

    படங்களும் அதற்கு கீழ் நீங்கள் எழுதி இருக்கும் வாக்கியங்களும் அருமை.

    மனம் திறந்து மனம் நிறைந்து பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  23. சாமியறை கதவுகள் சந்திரமுகி படத்துல வருகிற மாதிரி இருக்கு.. :-) நல்லா இருக்கு.

    தற்போது படங்கள் எடுப்பது உங்களின் விருப்பமாக ஆனா பிறகு தற்போது எதைப்பார்த்தாலும் கலைக்(புகைப்பட)கண்ணோடு பார்க்க ஆரம்பித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் :-) சூப்பரா முன்னேறிட்டீங்க படம் எடுப்பதில்.

    பதிலளிநீக்கு
  24. அருமையான படங்களும் மலரும் நினைவுகளும். உங்கள் பள்ளி இருந்த ஊர் பேரை சொல்லலையே !

    பதிலளிநீக்கு
  25. அருமையான படங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. அருமை. குறிப்பாக கம்பளமும் கதவுகளும்.

    பதிலளிநீக்கு
  27. யப்பாடி! வழக்கம் போல அருமையான படங்கள் எதை அனுப்பினீங்க கடேசில?

    பதிலளிநீக்கு
  28. முதல் படம் மனதை நெருடுகிறது.
    யானை தட்டும் கதவு காணக்கிடைக்காதது.
    கம்பளமும் கதவுகளும் அழகு
    இதில் ஏதாவது ஒன்று?

    பதிலளிநீக்கு
  29. வாவ்! எதைச் சொல்ல, அதை விட. அத்தனை கதவுகளும் அழகு, அதற்குத் தகுந்த வரிகளும்.

    பதிலளிநீக்கு
  30. மிகவும் அருமையான புகைப்படங்கள்..
    வருங்கால மன்னர்கள்..கம்பிகளுக்கிடையே..
    கதவைத்தட்டும் கஜேந்திரர்...பிச்சையெடுக்கும் காட்சி..
    இருப்பதிலேயே சூப்பர் மேகங்கள் தான்..
    அப்பா அம்மா இருவரின் கரம் பிடித்த சிறுவன்...இரண்டு பேரும் ஒற்றுமையாக இருங்கள்..கலாச்சார சீரழிவு இன்று குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கிறது..
    நான் ஒரு மாணவியிடம்..உனது அப்பா எங்கே? இன்னொரு அம்மாவிடம் ...
    உனது அம்மா என்கே? இன்னொரு அப்பாவிடம்...
    நீ யாரிடத்தில்...
    எனது பாட்டியிடம்..
    இதைப்போன்ற குரல்கள் கேட்காமலிருக்க...
    அப்பா, அம்மாக்களே...குழந்தையின்
    பிஞ்சுக்கரங்களை கை விட்டு விடாதீர்கள்..

    பதிலளிநீக்கு
  31. விஜய் said...
    //மீள் நினைவுகளான பழைய வீட்டின் படம் எல்லோருக்கும் உண்டு

    வாழ்த்துக்கள்//

    ஆம், நன்றி விஜய்.

    பதிலளிநீக்கு
  32. MANO நாஞ்சில் மனோ said...
    //அருமையான படங்களும், நினைவலைகளும் கலக்கல்....//

    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  33. க.பாலாசி said...
    //அழகான படங்கள்

    கதவைத்தட்டும் கஜேந்திரர் ரைட் லெக்கால ஒன்னு விட்டா அந்த கேட் என்னாவறது.. //

    :))))!

    //சாமியறைக்கதவுகள் படம் ஸ்க்ரால் பண்றப்பவும் செமயா இருக்கு..//

    அதுதான் தலைப்புக்காக புதிதாக எடுத்தது, நன்றி பாலாசி.

    பதிலளிநீக்கு
  34. ஹேமா said...
    //முதாலவது படம் எனக்கு ஈழம் காட்டுது.பிரம்பும் பின்னலில் நீரில் நிழல் தரும் படமும் பிடிச்சிருக்கு !//

    மிக்க நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  35. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //வழக்கம்போல எல்லாமே அழகா இருக்கு..சாமியறை கதவு என்னங்க மேஜிக் அது செய்யுது ? !!
    :)//

    லோ ஆங்கிள், நானே எதிர்பார்க்கலை ஸ்க்ராலில் இப்படி மேஜிக் காட்டுமென:)! நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  36. அமைதி அப்பா said...
    //படங்களும் அதைப் பார்த்துப் பிறந்த வரிகளும் நன்று.

    எனது தேர்வு...
    1.‘குயிலப் புடிச்சு.. கூண்டில் அடைச்சு..
    கூவச் சொல்லுகிற உலகம்..’//

    ரொம்ப நன்றி அமைதி அப்பா, அதுவே அதி பொருத்தமாக, ஆனால் காருக்குள் இருந்தபடி எடுத்ததால் கண்ணாடியின் பிரதிபலிப்பு விழுந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  37. புவனேஸ்வரி ராமநாதன் said...
    //புகைப்படங்களின் காவியம் எனக் கூறலாம் உங்களது இந்தப் பதிவினை.
    அத்தனையும் அருமை. பலாப் பழத்தில் எந்த சுளை சுவையானது என்று கேட்டால், சொல்வது கடினம். எல்லா படங்களுமே அருமையிலும் அருமை. குமரகத்தின் வேம்பநாடு
    கட்டிடம்தான் எனது தேர்வு. அதுபோல ஒரு வீடு கட்டவேண்டும் என்பதுதான்
    எனது ஆசை. அதீதம் இதழில் தங்களது படம் வெளிவந்ததற்கு
    என் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி அக்கா.//

    மிக்க நன்றி புவனா. உங்கள் ஆசை விரைவில் நிறைவேற வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  38. asiya omar said...
    //ஆஹா ராமலஷ்மி ! படங்களும் அவை சொன்ன கதைகளும் அருமை,ஒரு சில இடங்கள் அதிகம் பழகிய இடம் போல உணரும் அளவு மிக இயல்பு...

    என் தேர்வு 3 வது படம்...ராமலஷ்மி.எதை தேர்ந்தெடுக்கன்னு தெரியலை அத்தனையும் அழகு.//

    மிக்க நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  39. ஸாதிகா said...
    //படங்களும்,அதற்கொப்ப கவிதைகளும் போட்டி போட்டு பார்ப்போரை கவர்ந்திழுக்கின்ரன.வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  40. Someone like you said...
    //Brings back memories - very interesting collection. Not just for the PiT, you should release a photo blog now and then with a theme....

    Good luck for the contest//

    Thanks a lot:)!

    பதிலளிநீக்கு
  41. goma said...
    //சாமி அறைக்கதவு அருமை//

    மிக்க நன்றி கோமா.

    //கதவிலே கையூன்றி நிற்கலாம் கம்பீரமாய் காவலாளி!
    கையூட்டு கேட்டுதான் தன்மானம் இழந்து
    தலைகுனியக் கூடாது அரசின் தொழிலாளி!

    அதானே ஒரு கவிதை இல்லாமல் எப்படி ..//

    ஹி...

    பதிலளிநீக்கு
  42. சகாதேவன் said...
    //1.குயிலைப் பிடிச்சு....
    9.கம்பளமும் கதவுகளும்.
    இரண்டும் போட்டி தலைப்புக்கு பொருத்தமாக இருப்பது போல் தெரிகிறது. உங்கள் ஆல்பத்தில் இவ்வளவு கதவுகளா?//

    இன்னும் உள்ளன:)! இது போதுமென நிறுத்தி விட்டேன். தங்கள் தேர்வுகளுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  43. சி.கருணாகரசு said...
    //படங்கள் தங்களுக்குக்குள் போட்டி போடுகிறது....
    மிக நேர்த்தி.//

    நன்றி கருணாகரசு.

    பதிலளிநீக்கு
  44. தமிழ் உதயம் said...
    //முதல் புகைப்படம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது.//

    நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  45. Someone like you said...
    //Close contest between #3 and 4 - #3 finally won - that peaceful, serene shot is my choice!//

    மூன்றாவதே முதலில் என் தேர்வாக இருந்து பிறகு கடைசிப் படம் வென்று விட்டது:)!

    பதிலளிநீக்கு
  46. cheena (சீனா) said...
    அன்பின் ராமலக்ஷ்மி

    //அத்தனையும் அருமை. மனதைக் கவர்ந்திழுக்கும் கதவுகள். திறமை, பொறுமை, உழைப்பு மற்றும் சிந்தனை அத்தனையும் ஒருங்கே சேர்ந்து படைத்த முத்துகள். ஒவ்வொன்றும் கண்ணைக் கவர்ந்து, இது சிறந்ததா அது சிறந்ததா என முடிவு செய்ய இயலாத நிலௌக்குக் கொண்டு செல்கின்றன.

    9 : கமபளமும் கதவுகளூம்
    8 : தியானக் கதவுகள்
    19 : சாமியறைக் கதவுகள்
    15 : தேவாலயம்
    16 : மலரும் நினைவுகள்

    இவைகளீல் ஒன்று நிச்சயம் போட்டியில் வெல்லும்.

    அதீதம் இதழில் வெளிவந்தமைக்கும், போட்டியில் வெற்ரி பெற்றமைக்கும் - பாராட்டுகள். இனி வெல்வமைக்கு நல்வாழ்த்துகள். //

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சீனா சார்.

    பதிலளிநீக்கு
  47. அமைதிச்சாரல் said...
    //எனக்குப்பிடிச்சது சாமியறைக்கதவுகள்தான்..//

    ஆயிற்று:)! நன்றி சாரல்.

    பதிலளிநீக்கு
  48. S.Menaga said...
    //முதலாவது படம் மனதை பிசைகிறது..ஏனைய அனைத்தும் அழகு படங்கள் அக்கா...//

    மிக்க நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  49. சுசி said...
    //அப்பப்பா எத்தனை கதவுகள் அக்கா..//

    நன்றி சுசி:)!

    பதிலளிநீக்கு
  50. SurveySan said...
    words are more beautiful than pictures :)

    நன்றி சர்வேசன்:)!

    பதிலளிநீக்கு
  51. குமரி எஸ். நீலகண்டன் said...
    //கதவென்றாலே அது ஒரு கவிதையின் நல்ல கருப்பொருள். எத்தனை கதவுகளை திறந்து மகிழ்ச்சியை அள்ளி வீசி இருக்கிறீர்கள். சாமியறைக் கதவின் காட்சிக் கோணம் கலை நுணுக்கத்துடன் எடுக்கப் பட்டிருக்கிறது. அந்த கதவின் மேலோங்கும் பிரமிப்பு எல்லா புகைப்படத்திலும் விதவிதமான கோணங்களில் இருக்கின்றன...
    வாழ்த்துக்கள்.//

    கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  52. கோமதி அரசு said...
    ***//படங்களும் அதற்கு கீழ் நீங்கள் எழுதி இருக்கும் வாக்கியங்களும் அருமை.

    மனம் திறந்து மனம் நிறைந்து பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம் ராமலக்ஷ்மி.//***

    மிக்க நன்றி கோமதிம்மா:)!

    பதிலளிநீக்கு
  53. March 20, 2011 8:16 AM
    கிரி said...
    //சாமியறை கதவுகள் சந்திரமுகி படத்துல வருகிற மாதிரி இருக்கு.. :-) நல்லா இருக்கு.

    தற்போது படங்கள் எடுப்பது உங்களின் விருப்பமாக ஆனா பிறகு தற்போது எதைப்பார்த்தாலும் கலைக்(புகைப்பட)கண்ணோடு பார்க்க ஆரம்பித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் :-) சூப்பரா முன்னேறிட்டீங்க படம் எடுப்பதில்.//

    மிக்க நன்றி கிரி:)!

    பதிலளிநீக்கு
  54. மோகன் குமார் said...
    //அருமையான படங்களும் மலரும் நினைவுகளும். உங்கள் பள்ளி இருந்த ஊர் பேரை சொல்லலையே !//

    முகப்பிலேயே சொந்த ஊர் பெயரைப் போட்டிருப்பதால் அவசியமில்லை என நினைத்து விட்டேன்:)! நெல்லை. நன்றி மோகன்குமார்.

    பதிலளிநீக்கு
  55. மாதேவி said...
    //அருமையான படங்கள். வாழ்த்துக்கள்.//

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  56. ஸ்ரீராம். said...
    //அருமை. குறிப்பாக கம்பளமும் கதவுகளும்.//

    நன்றி ஸ்ரீராம்:)! ஒரு கதவேனும் முழுசாய் தெரியாதது குறையாகி விடலாமென ஒரு ஐயம். கோணம் எனப் பார்த்தால் எனக்கும் பிடித்த ஒன்று.

    பதிலளிநீக்கு
  57. திவா said...
    //யப்பாடி! வழக்கம் போல அருமையான படங்கள் எதை அனுப்பினீங்க கடேசில?//

    அந்தக் கடேசி:)! நன்றி திவா சார்.

    பதிலளிநீக்கு
  58. நானானி said...
    //முதல் படம் மனதை நெருடுகிறது.
    யானை தட்டும் கதவு காணக்கிடைக்காதது.
    கம்பளமும் கதவுகளும் அழகு
    இதில் ஏதாவது ஒன்று?//

    கருத்துக்கும் தேர்வுகளுக்கும் மிக்க நன்றி நானானி.

    பதிலளிநீக்கு
  59. கவிநயா said...
    //வாவ்! எதைச் சொல்ல, அதை விட. அத்தனை கதவுகளும் அழகு, அதற்குத் தகுந்த வரிகளும்.//

    வாங்க கவிநயா:)! மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  60. ESWARAN.A said...
    //மிகவும் அருமையான புகைப்படங்கள்..
    வருங்கால மன்னர்கள்..கம்பிகளுக்கிடையே..
    கதவைத்தட்டும் கஜேந்திரர்...பிச்சையெடுக்கும் காட்சி..
    இருப்பதிலேயே சூப்பர் மேகங்கள் தான்..//

    நன்றி சார்.

    //அப்பா அம்மா இருவரின் கரம் பிடித்த சிறுவன்...இரண்டு பேரும் ஒற்றுமையாக இருங்கள்..கலாச்சார சீரழிவு இன்று குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கிறது..
    நான் ஒரு மாணவியிடம்..உனது அப்பா எங்கே? இன்னொரு அம்மாவிடம் ...
    உனது அம்மா என்கே? இன்னொரு அப்பாவிடம்...
    நீ யாரிடத்தில்...
    எனது பாட்டியிடம்..
    இதைப்போன்ற குரல்கள் கேட்காமலிருக்க...
    அப்பா, அம்மாக்களே...குழந்தையின்
    பிஞ்சுக்கரங்களை கை விட்டு விடாதீர்கள்..//

    நீங்கள் கேட்ட குரல்கள்... வருத்தம் தருகின்றன. அப்படியாக நிகழாமல் இருக்கப் பிரார்த்திப்போம். நன்றி.

    பதிலளிநீக்கு
  61. தமிழ்மணம் இன்ட்லியில் வாக்களித்தவருக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  62. அருமையான படங்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  63. திறந்திடு ஸீஸேம்...
    திறந்திட்டது மனக்கதவு,
    அள்ளிக் கொள்ளுங்கள்
    பாராட்டுக்களை புதையலாய்!
    சரம் கோர்த்ததில் அத்தனையுமே

    முத்துக்கள்!

    பதிலளிநீக்கு
  64. iam a new one for your blogs...I really like your sense of photography...all the best in future pl continue...

    பதிலளிநீக்கு
  65. காட்சிகள்
    மனதில் கிளைபரப்பி செல்கிறது

    நினைவுகளை மீள் பிரசுரம் செய்தபடி .........அருமை

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin