புதன், 13 மே, 2009

50-ஆவது பதிவாக “விசுவாசம்”[‘கலைமகள்’ மாத இதழில்..]



பாரம்பரியம் மிக்க கலைமகள் மாத இதழ் மூலமாக என் முதல் பத்திரிகைப் பிரவேசம், கலைவாணியே ஆசிர்வதித்தாற் போல. எந்த முயற்சியிலும் கிடைக்கும் ‘முதன் முதல்’ வெற்றி என்பது அலாதி மகிழ்ச்சியைத் தருவது சகஜம்தானே. ஐம்பதாவது பதிவாக இந்த வெற்றியைப் பதிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த பதிவில் முத்துச்சரத்தின் ஒரு வருட நிறைவைக் குறிப்பிட்டிருந்தேன். முத்துச்சரத்தைத் தொடுக்க ஆரம்பிக்கையில் ‘தொடர்ந்து எழுதுவது என் வழக்கமாக இல்லாமல் தோன்றும் போது எழுதுவதே என் பழக்கமாக இருந்து வருகிறது. அதை வலைப்பூ மாற்றுமா அறியேன். மாற்றினால் மகிழ்வேன்’ என்ற குறிப்புடனேதான் என்னை அறிமுகம் செய்து கொண்டிருந்தேன். வலைப்பூ என்னை ஓரளவு மாற்றித்தான் இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளியில் 'தொடர்ந்து' பதிவுகளைத் தந்தபடிதான் இருக்கின்றேன் இதுவரையில். இனி எப்படியோ தெரியவில்லை.

இந்த ஒருவருடமும் என்னோடு உடன் வரும் அனைவருக்கும் என் நன்றிகளை சமீபத்தில் இங்கே நான் சமர்ப்பித்திருந்தாலும், தொடரும் உங்கள் அனைவரின் ஊக்கத்துக்கும் மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன்.






'ரு வருசமா.. ரெண்டு வருசமா..? பத்து வருசமா ராப்பகலா நேரங்காலம் பாக்காம நாயாப் பேயா உழைக்கறேன். ஹூம் அதான் நம்பளப் பாத்தா மனுசனாட்டமே தெரியலியோ என்னவோ'

காலையில் இருந்து நினைத்து நினைத்து மனது ஆறவேயில்லை கோபாலுக்கு. வேறொன்றுமில்லை. சின்ன முதலாளி பள்ளிப் பருவத்தில் ஓட்டிப் பழகிய பழைய சைக்கிள் ஒன்று வீட்டோடு இருந்தது. அன்று காலை அதை சடாரெனத் தூக்கி தோட்டக்காரன் முனுசாமியிடம் கொடுத்து விட்டார் முதலாளி செந்தில் நாதன்.

'இதோ இப்பக் கூட மணி பதினொண்ணாச்சு. கட்சிக் கூட்டம், கரைவேட்டிக் கூட்டமின்னு எல்லாம் முடிஞ்சு இப்படி இவரு ராப்படையிலதான் கெளம்புவாரு. அவரை வூட்ல சேத்துட்டு நான் கெளம்பினா ஒரு பஸ் இருக்காது. ஏதோ இந்த சைக்கிளு இருந்துச்சோ, காலம் ஓடுச்சோ. அதுக்கும் ஆப்பு வச்சுப் புட்டாரே இந்த நன்றி கெட்ட மனுசன்'

மொபைல் மிளிர்ந்து ‘ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்’ என இசைத்தது. முதலாளியை இறக்கி விட்ட பின் கடுப்புடன் காத்திருந்த போது தேடிப் பிடித்து இறக்கி வைத்த ரிங்டோன்.

இது அவனுக்கு வழக்கம்தான். அவ்வப்போதைய மூடுக்கு ஏற்ற மாதிரி பாடல் ட்யூனைத் தேர்ந்தெடுத்து ரிங்டோனாக செட் செய்வது. குஷியான நாட்களிலே துள்ளல் பாடல்கள். பண்டிகை நாட்களானால் பக்தி பாடல்கள். அதிலும் தேசத் தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களிலும், குடியரசு சுதந்திர தினங்களிலும் ‘வந்தே மாதரம்’ ஒலிக்கும். எப்படியும் எப்போதும் முதலாளியுடன் யாராவது பயணிப்பது வழக்கம். அவர்கள் இவனது அன்றன்றைய ரிங் டோனைக் கேட்டு ‘பலே பலே’ என்கையில் காற்றில் பறக்கிற மாதிரி இருக்கும்.

ஒருமுறை அண்ணங்காரனுடன் கடும் சண்டை. முடிவில் இவன் தனிக் குடித்தனம் வர வேண்டியதாய்ப் போயிற்று. அன்று இவன் செட் செய்திருந்தது ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’ பாடல். பாட்டைக் கேட்டு முதலாளி விசாரித்து வீட்டுக்குப் பத்துமாத அட்வான்ஸ் ஏற்பாடு செய்தது தனிக்கதை. அதெல்லாம் இப்போது அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. ஏன் நினைவுக்கே வரவில்லை.

இப்போதும் இந்த ரிங்டோனை கேட்க நேர்ந்து செந்தில் நாதன் 'என்னது ஊரைத் தெரிஞ்சுக்கிட்டியா ஒலகம் புரிஞ்ச்சுக்கிட்டியா' என்று வேடிக்கையாய் இழுப்பார். விசாரிப்பார். அப்போது பிடியே கொடுக்காமல் பூடகமாய் இடக்கு மடக்காய் எதையாவது சொல்லி அவரை நல்ல வெறுப்பேற்ற வேண்டும் என்று நினைத்தபடி பச்சைப் பொத்தானை அழுத்தினான் ஆத்திரமாக.

"ப்பா கோவாலு, எங்காச்சும் போய் சாப்பிட்டிருப்பா. பக்கத்திலே எதுவும் நல்லதா கிடைக்காட்டி வண்டிய எடுத்துட்டுப் போயிட்டு வாப்பா. இன்னும் கொறஞ்சது ஒரு மணி நேரமாவது ஆகும் போலிருக்கு" இவனது பதிலுக்குக் காத்திராமல் அவசரமாய் அணைத்து விட்டார்.

முன்னெல்லாம் இப்படி அவர் கனிவாய்க் கூப்பிட்டுச் சொல்லுகையில் நெகிழ்ந்து போகிறவன் ‘இந்தக் கரிசனமெல்லாம் வெறும் வேஷம்’ எனக் கொதிப்பாய் உணர்ந்தான். மொபைலை பக்கத்து இருக்கையிலே வீசினான்.

‘இது கூட அவர் கொடுத்தது’ மெதுவாய் தலை தூக்கிய நினைப்பை வேகமாய்த் துரத்தினான். 'சொந்த உபயோகத்துக்கான அழைப்புகளுக்கு மட்டுமின்றி இந்தப் பாட்டு விளையாட்டுக்கெல்லாம் சேர்த்து பில் கட்டுவதும்' என்பதை மறந்தான். 'எல்லாம் தன் வசதிக்கு. ஒரு கடை கண்ணியிலே இறங்கினா திரும்பி வாசலுக்கே வண்டியக் கூப்பிட்டுக்க, எங்கே இருக்குறேன்னு தெரிஞ்சுக்க, என் வசதியப் பார்த்தா..?'எனத் தலை தூக்கிய நல்ல நினைப்புகளைத் தானே மறுதலித்து மகிழ்ந்தான்.

சாப்பிடப் பிடிக்கவில்லை. காரின் இருக்கையைச் சாய்ந்து காலை நீட்டிப் படுத்தான். துரத்திய நினைவுகளில் தூக்கமும் வரவில்லை.

காலையில் சைக்கிளை தள்ளிக் கொண்டே வெளியேறிய முனுசாமி தன்னைப் பார்த்த பார்வையில் ஒரு வெற்றியின் பெருமிதம் தெரிந்ததோ என வேண்டாத சிந்தனைகள் துரத்தின.

'பொட்டப் புள்ள ரெண்டு கிலோ மீட்டரு நடந்தே காலேஜ் போகுது’ன்னு அத இத சொல்லி அமுக்கிப் புட்டானே. சரி இவருக்குந்தான் எங்கே போச்சாம் புத்தி. நாளக்கி அவன் எப்படி என்னை மதிப்பான்’

கை நழுவிப் போன பொருளைப் பற்றிய கவலை யோசிக்க யோசிக்க கெளரவப் பிரச்சனையாகவும் ஆனது.

'எத்தினி பேரு, இந்த கட்சி எதிர் கட்சின்னு இல்லாம என் வண்டி ஓட்டர தெறமைய, வேல செய்யற பொறுமய, கையில களவில்லாத அருமயப் பார்த்து எங்கிட்ட வந்திரு அம்புட்டு தாரேன் இம்புட்டுத் தாரேன்னு கூப்பிட்டிருப்பாக. அசைஞ்சு கொடுத்திருப்பனா?’

கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மேலான கழிவிரக்கம் தடம் மாறி முதலாளியின் மேல் சொல்லொண்ணா கோபமாக உருமாறுவதை அவன் உணராமலும் இல்லை.

‘ஏலேய் கோவாலு ஒரேடியா துள்ளாதே அவரு உனக்கும் குடும்பத்துக்கும் என்னெல்லாம் செஞ்சிருக்காரு. பார்த்தா ஒரு பழைய சைக்கிளு. கேட்டா புதுசே ஒனக்கு வாங்கித் தருவாரு’

குரங்கு மனது, கூவிய மனசாட்சியை ஒதுக்கி ஓரங்கட்டியது.

'அப்ப்டிக் கேட்டு வாங்கி எனக்கொண்ணும் ஆக வேண்டியதில்லை. என்னிக்கு நான் முக்கியமா படலியோ இனியும் இவரோடு இருப்பதுங்கிறது தன்மானப் பிரச்சனை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேறிடணும். இத்தினி நாள் ஏதோப் பாத்துட்டாரு, அந்த நன்றிக்கு நல்ல விதமாவே விலகிடணும்’

எடுத்த முடிவில் மனம் சமாதானமடைய மெல்ல மெல்லக் கண்ணயர்ந்தான்.

லேய் கோவாலு”

'மறுபடியும் மனசாட்சியா?’ அரண்டு மிரண்டு எழுந்தான். அரக்கப் பரக்க விழித்தான்.

முதலாளியின் ஆத்ம நண்பர் அன்புமணி.

"என்னாலே முழிக்கிறே? செம தூக்கமா? வண்டிய எடு. உங்கய்யா அதோ வர்றாரு"



சுதாகரித்து ஸீட்டை மடக்கி முன்னுக்கிழுத்து, கீழிறங்கி மடமடவெனப் பின்பக்கக் கதவுகள் இரண்டையும் திறந்து விட்டான். செந்தில் நாதன் தொலைவில் எல்லோருக்கும் கும்பிடு போட்டுக் கொண்டிருக்க அன்புமணி காருக்குள் ஏறி அமர்ந்தார் பெருமூச்சுடன். அவர் பக்கக் கதவை ஓங்கி அறைந்து மூடினான். முதலாளியிடம் இந்தக் கோபத்தைக் காண்பிக்க இயலாதே. ஆனால் அன்புமணி அதை சட்டை செய்ததாய் தெரியவில்லை.

தலைவரின் வண்டி கிளம்பும் வரைக் காத்திருந்து பின் செந்தில் நாதன் அவசரமாய் வந்து வண்டியில் ஏறிக் கொண்டார்.

முதல் கேள்வியாய் “சாப்பிட்டியாப்பா கோவாலு” என்றார்.

அவனுக்கோ பேசவே பிடிக்கவில்லை. ‘ம்ம்ம்’ என்று முணங்கினான்.

மேலே ‘எங்கே சாப்பிட்டே என்ன சாப்பிட்டே’ என அடுத்தடுத்து புறப்படப் போகும் கேள்விகளை நினைத்து அயர்வாய் உணர்ந்த வேளையில், அந்தச் சிரமத்தை வைக்காமல் 'பிலுபிலு'வெனச் செந்தில்நாதனைப் பிடித்துக் கொண்டார் அன்புமணி.

“ஒரு வருசமா.. ரெண்டு வருசமா.. இருபது வருசமா அந்தாளு கூட இருக்கீங்க. நேரங்காலம் பாக்காம உண்மையா ஒழச்சிருக்கீங்க. இப்படிக் கவுத்துப்புட்டாரே அண்ணாச்சி. ”

“இந்தா இந்தா நிறுத்து தலைவரை ஒண்ணுஞ் சொல்லாதே.”

"தாங்கலயே எனக்கே தாங்கலயே. நாலுவாட்டி கட்சி தாவி திரும்பி வந்தவனுக்கு லட்டு மாதிரி ஸீட்டு. அதுவும் நம்ப தொகுதிய. ஒங்களுக்கு கோவமே வரலியா அண்ணாச்சி?"

‘எனக்கு நீரு ஆப்பு வச்சா ஆண்டவன் ஒமக்கு வேட்டே வச்சுப்புட்டானா?’

'குப்'பென நெஞ்சுக்குள் பரவிய சந்தோஷத்தில் ஆட்களோ வண்டியோ இல்லாத சாலையில் 'பீம் பீம்’ என ஹாரனை அடித்து ஒலியெழுப்பினான் கோபால் உல்லாசமாய்.

“அன்பூ, நம்ம தலைவரு எதை செஞ்சாலும் அதில ஒரு அர்த்தம் ஒரு காரணம் ஒரு நியாயம் இருக்கும்ப்பா”

"அட போங்க அண்ணாச்சி. என்ன அர்த்தமோ என்ன காரணமோ! இவரு கூட இருந்து என்னாத்தக் கண்டோம். கேட்டா இவருதான் நல்லவரு வல்லவரு நியாயமானவருன்னு வாயடைச்சுப் போடறீக. மூஞ்சில கரியப் பூசுனாப்ல ஆயிடுச்சில்ல இப்ப?"

இப்போது தன் குரலே அன்புமணியின் வாயிலிருந்து ஒலிப்பது போலிருந்தது கோபாலுக்கு. ஊற்றெடுத்த உற்சாகத்தை ஆக்ஸிலேட்டரில் காட்ட ஸ்பீடாமீட்டரின் முள் நூறைத் தொட்டது.

“உன்னை யாரப்பா அப்படி நினைக்கச் சொன்னது? விசுவாசங்கிறது ஒருவரோடு உயர்விலேயும் தாழ்விலேயும் கூடவே இருக்கிறது மட்டுமில்ல. நம்ம நலனுக்கு ஒவ்வாததாய் ஏதும் நடக்கையில் பெரிசு பண்ணாத இருக்கிறதுந்தான். அது மட்டுமில்லாம நல்லாரோடே இருப்பதிலே கிடைக்கிற திருப்தியொண்ணே போதாதா ஆயுசுக்கும். சரி ஒண்ணு கேட்கிறேன். நல்லது செய்யற ஆண்டவன்தான் நமக்குக் கஷ்டத்தையும் தர்றான். அப்பவும் என்னக் காப்பாத்தப்பான்னு அவங்கிட்டேயேதானே போறோம். அது பக்தின்னா விசுவாசமும் அது போலத்தான். தலைவருக்குன்னு சில நியாயங்கள் இருந்தே இருக்கும் நீ வேணாப் பொறுத்திருந்து பாரேன்.”

கேட்டுக் கொண்டே வந்த கோபால் யாரோ தன் பின்னந் தலையில் ‘பொளேர்’ என அறைந்த உணர்வில் தேவையில்லாமல் ப்ரேக்கை அழுத்த, எழுந்த ‘க்ரீச்’ சத்தத்திலும் வண்டியின் குலுக்கலிலும் செந்தில் நாதனின் பேச்சு திசை மாறியது.

“கோவாலு என்னய வீட்டுல விட்ட கையோடு அப்படியே இவரை அவர் வீட்டிலே சேத்திடுப்பா. இந்நேரத்துக்கு ஒனக்கும் பஸ்ஸு இருக்காது. அதனால என்ன பண்றே. அப்படியே நம்ம வண்டியவே எடுத்துட்டு போயிடு. வூட்டுப் பக்கமா நிறுத்திக்கிட்டு நாளக்கி நேரத்துக்கு வந்து சேரு. ஆங்.. காலம்பறயே சொல்ல நினைச்சேன். ஒன் சின்ன எசமானரு நாளக்கி புது மாடல் பைக்கு ஒண்ணு டெலிவரி எடுக்கிறாப்ல. பழய பைக்கு இனி ஒனக்குத்தான்”.

கோபாலின் கண்களில் ‘க்ளுக்’ எனக் கண்ணீர்.
***

[மே 2009 கலைமகள் மாத இதழில் 66-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
படங்கள்: கதையுடன் வெளியாகியிருந்தவை. நன்றி கலைமகள்!]






93 கருத்துகள்:

  1. இந்தாங்க, முதலில் எங்க வாழ்த்து(க்)களைப் பிடியுங்க.

    இன்னும் கதையைப் படிக்கலை. கடைசி வரி மட்டும் கண்ணில் பட்டது.

    கோபால்.....

    பதிலளிநீக்கு
  2. ***துளசி கோபால் said...
    இந்தாங்க, முதலில் எங்க வாழ்த்து(க்)களைப் பிடியுங்க.

    இன்னும் கதையைப் படிக்கலை. கடைசி வரி மட்டும் கண்ணில் பட்டது.

    கோபால்.....***

    LOL!

    பதிலளிநீக்கு
  3. நாம் செய்றதுக்கு பதிலுக்கு எதிர்பார்க்காமல் வாழனும்னு சொல்றோம்.

    ரஜினிமாதிரி ஒரு ஸ்டேஜ்க்கு போயி யோகா, ஆஸ்ரமம்னு போனா, பொதுவா அதைத்தான் சொல்லிக்கொடுப்பாங்க. பலனை எதிர்பார்த்து செய்வது உபகாரம் இல்லை. நன்றி எதிர்பார்த்து செய்வது சுயநலம் அது இதுனு.

    ஆனால் அப்படி எதிர்பார்க்காமல் பொதுவாக நாம் வாழ்வதில்லை.

    அப்படி வாழ்ந்தால் எல்லோரும் புத்தராகிவிடுவோமே?

    நம்ம எல்லாம கோபாலு மாதிரி ரொம்ப சாதாரண மனுஷங்கதான்.

    ஆனால், when we experience something which we find that unfair, how we convince ourself and move on in our life varies person to person. That is where the difference in humanbeings lies, I suppose!

    Anyway, I am happy for Gopal- your hero. :-)))

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள்.கலைமகள் அருள் அற்புதமாய் துணை வருகிறது.

    பதிலளிநீக்கு
  5. பதிவு கொஞ்சம் பெருசா இருக்கு..

    பொறுமையா படித்து விட்டு பின்னூட்டம் போடுறேன் :-)

    பதிலளிநீக்கு
  6. துளசி கோபால் said...

    //இந்தாங்க, முதலில் எங்க வாழ்த்து(க்)களைப் பிடியுங்க.//

    மலர்க்கொத்தாக ஏந்திக் கொண்டேன். நன்றி!

    //இன்னும் கதையைப் படிக்கலை. கடைசி வரி மட்டும் கண்ணில் பட்டது.

    கோபால்.....//

    வருணின் நிலையே எனதும்:))))!

    பதிலளிநீக்கு
  7. வருண் said...
    //ஆனால் அப்படி எதிர்பார்க்காமல் பொதுவாக நாம் வாழ்வதில்லை.//

    மிகச் சரி. அப்படி நம்மால் வாழ முடிவதில்லை என்பதைத்தான் கோபால் எனும் சாமான்யனின் இயல்பான மனவருத்தம் கோபம் மூலம் காட்ட முயன்றிருக்கிறேன்.

    //அப்படி வாழ்ந்தால் எல்லோரும் புத்தராகிவிடுவோமே?//

    எல்லோராலும் புத்தராய் ஏசுவாய் காந்தியாய் இருக்க முடியாதுதான் வருண். ஆனால் எல்லா சமயங்களிலும் உணர்ச்சி வசப்பட்ட முடிவுகளை எடுப்பதும் தவறு என்பதை உணர்த்தவே அவனது முதலாளி செய்த நல்லவற்றை அவன் மறந்து போனதை கதையின் ஆரம்பித்திலிருந்து ஓட விட்டிருக்கிறேன்.

    //நம்ம எல்லாம கோபாலு மாதிரி ரொம்ப சாதாரண மனுஷங்கதான்.

    ஆனால், when we experience something which we find that unfair, how we convince ourself and move on in our life varies person to person. That is where the difference in humanbeings lies, I suppose!//

    கரெக்ட். சிந்தித்து கன்வின்ஸ் ஆகுங்கள். சரி எது தவறெது என அறிந்திட சற்றேனும் காலம் எடுத்திடுங்கள். இதுதான் சாதரண மனுஷங்களாகிய நாம் புரிந்திட வேண்டியது:)!

    தங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  8. goma said...

    //வாழ்த்துக்கள்.கலைமகள் அருள் அற்புதமாய் துணை வருகிறது.//

    ஆசிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கோமா.

    பதிலளிநீக்கு
  9. கிரி said...

    //பதிவு கொஞ்சம் பெருசா இருக்கு..

    பொறுமையா படித்து விட்டு பின்னூட்டம் போடுறேன் :-)//

    காத்திருக்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  10. SurveySan said...

    //kalakkunga! :)//

    நன்றி சர்வேசன்:)!

    பதிலளிநீக்கு
  11. ஐ....!! அக்கா ... வாழ்த்துக்கள்....!!! எப்போ ட்ரீட்டு ........???



    ------------------------------------------------------------


    " கோவாலு .....!!!! கோவாலு.........!!!! அவசரபட்டுட்டியே ராசா....

    " உம்பட மொதலாளி நெம்போ நல்லவரு......... " ஆஆவ்வ்வ்வ்.......

    பதிலளிநீக்கு
  12. அக்கா, இரட்டை வாழ்த்துக்களைப் பிடிங்க... அச்சு இதழில் வந்த முதல் சிறுகதைக்கும், முத்தாக கோர்க்கப்பட்ட ஐம்பது பதிவுகளுக்கும் வாழ்த்துக்கள்!
    (இப்ப இங்க மணி அதிகாலை 5:10.. :-) )

    பதிலளிநீக்கு
  13. ஒரு வருசமா, ரெண்டு வருசமா? எத்தனை வருசமா நீங்கள் எழுதுகிறீர்கள். முதன்முதலாக பாரம்பரியமிக்க கலைமகளில் உங்கள் கதை பதிவானது அறிய மகிழ்ச்சி. கதையை படித்துவிட்டு எழுதுகிறேன்.
    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  14. இரட்டை வாழ்த்துகள்

    மனத்திற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

    அன்புடன்
    திகழ்

    பதிலளிநீக்கு
  15. மகிழ்ச்சியான செய்தி!
    மென்மேலும் வளர வாழ்த்துகள் ராமலஷ்மி!!!

    பதிலளிநீக்கு
  16. அக்கா 50 பதிவுக்கு வாழ்த்துக்கள்

    //கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மேலான கழிவிரக்கம் தடம் மாறி முதலாளியின் மேல் சொல்லொண்ணா கோபமாக உருமாறுவதை அவன் உணராமலும் இல்லை.
    ///

    பொதுவாக பலரிடத்திலும் காணப்படும் இந்த மனநிலை ! தம் எண்ணங்களால் தம்மை வருத்திக்கொண்டு அதனால் ஏற்படும் கோபத்தினை பிறரிடம் செலுத்துவது!

    // நம்ம நலனுக்கு ஒவ்வாததாய் ஏதும் நடக்கையில் பெரிசு பண்ணாத இருக்கிறதுந்தான்/

    அருமையான கருத்து !

    :)

    வாழ்த்துக்கள் அக்கா!

    பதிலளிநீக்கு
  17. congratulations, all the very best. its very rare to get articles published in Kalaimagal, India today etc.

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்கள். சாதிச்சுட்டீங்க :)

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி.. அருமையா இருக்கு கதை..
    கலைமகள் பழய புத்தகங்க்ள் இன்னும் எங்க வீட்டுல இருக்கு.. எனக்கு அதில் வரும் கதைகளும் ஓவியமும் ரொம்ப பிடிக்கும்.. அதே போலவே உங்க கதையும் அட்டகாசம்.. அந்த ஓவியமும் அழகா போட்டிருக்காங்க...
    தொடர்ந்து வெற்றிபடிகள் ஏற கலைமகள் அருள்வாள். :)

    பதிலளிநீக்கு
  20. வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் தடயங்கள்.

    பதிலளிநீக்கு
  21. கலைமகள் - பாரம்பரியம் மிக்க பத்திரிகை. பெயரும் அவ்வளவு அழகு. அதில் உங்க முதல் கதை வருவதென்பது பெருமையா இருக்கு - எங்களுக்கும்.

    கூடவே ஐம்பதுக்கும் வாழ்த்துகள். - Slow and steady wins the race. Way to go sis.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  22. 50- பதிவு மற்றும் கலைமகளில் கதை வந்தற்கும் வாழ்த்துகள்! (எப்படியோ கதையில என் பெயரும் வந்திடுச்சு!) கதையும் மிகவும் நல்லாவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  23. அருமையான கதை அக்கா.
    நெஞ்சை தொடும்,உணர்வு மிக்கதாய் இருக்கிறது."கெட்டதிலும் நல்லது" என்ற கருத்து அடிநாதமாய் கதையில் இழையோடுகிறது.

    கலைமகளில் உங்கள் படைப்பு வெளிவந்ததற்கு வாழ்த்துகள்.மிக்க மகிழ்ச்சி :)

    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாசிக்க காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  24. லவ்டேல் மேடி said...

    // ஐ....!! அக்கா ... வாழ்த்துக்கள்....!!! எப்போ ட்ரீட்டு ........??? //

    நன்றி! எப்போ அடுத்த பெங்களூர் விஸிட்???
    ------------------------------------------------------------
    //" கோவாலு .....!!!! கோவாலு.........!!!! அவசரபட்டுட்டியே ராசா....//

    அருமையா கதையின் பாயிண்டை பிடிச்சிருக்கீங்க மேடி. அதற்கும் நன்றி:)!

    பதிலளிநீக்கு
  25. வாழ்த்துகள் ராமலஷ்மி! தொடரட்டும் உங்கள் சாதனைகள்!!

    பதிலளிநீக்கு
  26. தமிழ் பிரியன் said...

    //அக்கா, இரட்டை வாழ்த்துக்களைப் பிடிங்க... அச்சு இதழில் வந்த முதல் சிறுகதைக்கும், முத்தாக கோர்க்கப்பட்ட ஐம்பது பதிவுகளுக்கும் வாழ்த்துக்கள்!
    (இப்ப இங்க மணி அதிகாலை 5:10.. :-) )//

    இத்தனை அதிகாலையில் வாழ்த்த வந்து விட்டீர்களா? நேற்று வாழ்த்தியதோடு இன்று தனியாக பாராட்டுப் பதிவும். எல்லாவற்றிற்கும் நன்றி தமிழ் பிரியன்:)!

    பதிலளிநீக்கு
  27. சகாதேவன் said...

    //ஒரு வருசமா, ரெண்டு வருசமா? எத்தனை வருசமா நீங்கள் எழுதுகிறீர்கள்.//

    ரசித்தேன் ரசித்தேன், கதையின் முதல் வரியைப் பிடித்துக் கணக்கைக் கணக்காகச் சொல்லியிருக்கும் விதத்தை ரசித்தேன்:)!

    //முதன்முதலாக பாரம்பரியமிக்க கலைமகளில் உங்கள் கதை பதிவானது அறிய மகிழ்ச்சி. கதையை படித்துவிட்டு எழுதுகிறேன்.//

    மிக்க நன்றி. கண்டிப்பாக நேரமிருக்கையில் வாசியுங்கள்.

    எண்ணங்களைக் கோர்த்திட ஆரம்பித்தேன் வலைப்பூ. என்னை மேலும் எழுதச் செய்தவர்கள் ஊக்கம் தந்த பதிவர்களே! அதையேன் கேட்கிறீர்கள்? பத்திரிகையில் முயற்சிக்குமாறு தொடர் மிரட்டல்கள்தான்:)!!

    பதிலளிநீக்கு
  28. திகழ்மிளிர் said...

    //இரட்டை வாழ்த்துகள்

    மனத்திற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

    அன்புடன்
    திகழ்//

    தொடரும் உங்களைப் போன்றவர்களின் ஊக்கத்தால்தான் இது சாத்தியமாயிற்று திகழ்மிளிர். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  29. Amal said...

    //மகிழ்ச்சியான செய்தி!
    மென்மேலும் வளர வாழ்த்துகள் ராமலஷ்மி!!!//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அமல்.

    பதிலளிநீக்கு
  30. வாசித்தேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  31. ஆயில்யன் said...

    //அக்கா 50 பதிவுக்கு வாழ்த்துக்கள்//

    நன்றி ஆயில்யன்.

    //பொதுவாக பலரிடத்திலும் காணப்படும் இந்த மனநிலை ! தம் எண்ணங்களால் தம்மை வருத்திக்கொண்டு அதனால் ஏற்படும் கோபத்தினை பிறரிடம் செலுத்துவது!//

    அழகாய்ச் சொல்லிவிட்டீர்கள். கோபாலின் கதாபாத்திரத்தில் பொதுவான மனித இயல்பைத்தான் காட்ட முயன்றிருக்கிறேன்.

    ***// நம்ம நலனுக்கு ஒவ்வாததாய் ஏதும் நடக்கையில் பெரிசு பண்ணாத இருக்கிறதுந்தான்/

    அருமையான கருத்து !

    :)!//***

    நன்றி ஆயில்யன்:)! இந்த எண்ணம் இல்லாவிட்டால் ‘விசுவாசம்’ என்கிற வார்த்தைக்கே அர்த்தமில்லை என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
  32. குப்பன்_யாஹூ said...

    //congratulations, all the very best. its very rare to get articles published in Kalaimagal, India today etc.//

    பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி குப்பன்_யாஹூ.

    பதிலளிநீக்கு
  33. Jeeves said...

    //வாழ்த்துக்கள். சாதிச்சுட்டீங்க :)//

    நன்றி ஜீவ்ஸ்:)!

    பதிலளிநீக்கு
  34. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    //வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி.. அருமையா இருக்கு கதை..//

    நன்றி முத்துலெட்சுமி.

    //கலைமகள் பழய புத்தகங்க்ள் இன்னும் எங்க வீட்டுல இருக்கு.. எனக்கு அதில் வரும் கதைகளும் ஓவியமும் ரொம்ப பிடிக்கும்.. அதே போலவே உங்க கதையும் அட்டகாசம்.. அந்த ஓவியமும் அழகா போட்டிருக்காங்க...//

    உண்மைதான். அப்படி கதைக்காகவே அவர்கள் ஓவியங்களைத் தீட்டுகையில் அந்தக் கதாபாத்திரங்களும் உயிர் பெற்றாற்போலத் தோன்றும்.

    //தொடர்ந்து வெற்றிபடிகள் ஏற கலைமகள் அருள்வாள். :)//

    உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  35. மாதேவி said...

    //வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் தடயங்கள்.//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  36. வாழ்த்துகள் மேடம். தொடரட்டும் உங்கள் சாதனைகள்

    பதிலளிநீக்கு
  37. அனுஜன்யா said...
    //கலைமகள் - பாரம்பரியம் மிக்க பத்திரிகை. பெயரும் அவ்வளவு அழகு. அதில் உங்க முதல் கதை வருவதென்பது பெருமையா இருக்கு - எங்களுக்கும். //

    பெருமை எல்லாம் தொடர்ந்து ஊக்கம் தந்து வரும் உங்கள் எல்லோரையும்தான் சேரும்.

    //கூடவே ஐம்பதுக்கும் வாழ்த்துகள். - Slow and steady wins the race. Way to go sis.//

    மிக்க நன்றி அனுஜன்யா.

    பதிலளிநீக்கு
  38. என் அன்பு வாழ்த்துக்கள் பிரண்ட்!

    பதிலளிநீக்கு
  39. //பாரம்பரியம் மிக்க கலைமகள் மாத இதழ் மூலமாக என் முதல் பத்திரிகைப் பிரவேசம், கலைவாணியே ஆசிர்வதித்தாற் போல//

    நீங்கள் கூறுவது உண்மை..இந்த பத்திரிக்கை பற்றி எனக்கு அதிகம் தெரியாது ஆனால் பலர் இந்த பத்திரிக்கை நடுநிலையான மற்றும் பரபரப்பிற்காக எழுதாத பத்திரிக்கை என்று கூற கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    //அதிக எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளியில் 'தொடர்ந்து' பதிவுகளைத் தந்தபடிதான் இருக்கின்றேன் இதுவரையில்//

    எத்தனை பதிவு எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை..என்ன எழுதி இருக்கிறோம் என்பது தான் முக்கியம்..நீங்கள் அதில் சிறப்பே!

    //அதான் நம்பளப் பாத்தா மனுசனாட்டமே தெரியலியோ என்னவோ'//

    ஹா ஹா ஹா ஆரம்பமே அசத்தல்

    கதை நன்றாக உள்ளது..கருத்துடன். நான் கூட இவரை போல பல சமயங்களில் அவசரப்பட்டு நினைத்து விடுவேன்..பிறகு தவறுணர்ந்து வருந்துவேன். அதே போல ஒருவர் செய்யும் செயல் எனக்கு தவறாக தெரியும்..அதே தவறை நானும் செய்ய வேண்டியதாக வரும் போது வெட்கி தலைகுனிவேன்.

    நீங்கள் மென்மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள். slow and steady யாக கலக்குங்கள்.

    ராமலக்ஷ்மி உங்களை போல பலர் கவிதை எழுதினாலும் அனைவரிலும் நீங்களே தனித்து தெரிகிறீர்கள், அதிக வாசகர்களையும் பெற்று இருக்கிறீர்கள். இதுவே உங்கள் திறமைக்கு சாட்சி. [இதற்க்கு நீங்கள் தன்னடக்கமாக பதில் கூறினாலும் இது தான் உண்மை ;-)]

    யாருடைய மனமும் புண்படக்கூடாது என்று (எழுத, கருத்து கூற) நினைக்கும் உங்கள் மனமே உங்களுக்கு இந்த உயரத்தை எட்ட உதவி இருக்கிறது என்றால் மிகையில்லை. எந்த ஒரு ஆராவாரமும் இல்லாமல் அமைதியாக சாதிப்பதும், அந்த சாதனையை வெளிப்படுத்திக்காமையுமே உங்கள் சிறப்பு.

    தலைவர் பாணியில் சொல்வதென்றால் "கண்ணா! சிறப்பா செய்பவன் அதிகம் பேசமாட்டான்"

    உங்கள் 50 பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  40. ஆஹா ! மகிழ்ச்சி! வாழ்த்துகள்! கதைய இன்னும் படிக்கல !

    ஒரு கலைமகள் புத்தகத்த வீட்டுக்கு வாங்கிகிட்டு போய் உங்க கதைய காட்டி
    இவங்க எனக்கு தெரிஞ்சவங்கன்னு பெருமையா சொல்லிக்க போறேன்!

    பதிலளிநீக்கு
  41. 50க்கு வாழ்த்துக்கள்.

    கதையை படிச்சிட்டு வர்றேன்.

    பதிலளிநீக்கு
  42. ராமலக்ஷ்மி, அருமையன கதை. கலைமகளுக்கு ஏற்ற கதை. மனம் பூகிற போக்கில் மனிதனின் புலம்பலும், கதையைக் கொண்டு சென்றிருக்கும் நேர்த்தியும் அழகு. நேர்மையும் விசுவாசமும் குறைந்த இந்த நேரத்தில் இப்படி ஒரு கருத்தைச் சொல்லி இருப்பது முக்கியம்.
    முதல் அச்சு வெளியீட்டுக்கும் ,வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  43. குடந்தைஅன்புமணி said...

    //50- பதிவு மற்றும் கலைமகளில் கதை வந்தற்கும் வாழ்த்துகள்!//

    நன்றி அன்புமணி.

    // (எப்படியோ கதையில என் பெயரும் வந்திடுச்சு!) கதையும் மிகவும் நல்லாவே இருக்கிறது.//

    அட ஆமாங்க. நல்ல தமிழ்பெயராக யோசித்த போது மனதில் தோன்றிய பெயர்:)! பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  44. பட்டாம்பூச்சி said...

    //அருமையான கதை அக்கா.
    நெஞ்சை தொடும்,உணர்வு மிக்கதாய் இருக்கிறது."கெட்டதிலும் நல்லது" என்ற கருத்து அடிநாதமாய் கதையில் இழையோடுகிறது.//

    நன்றிங்க. எதையும் கெட்டதாகவே பார்க்கக் கூடாது என்பதும் ஒரு கோணம்.

    //கலைமகளில் உங்கள் படைப்பு வெளிவந்ததற்கு வாழ்த்துகள்.மிக்க மகிழ்ச்சி :)

    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாசிக்க காத்திருக்கிறோம்.//

    இந்த அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  45. சந்தனமுல்லை said...

    //வாழ்த்துகள் ராமலஷ்மி! தொடரட்டும் உங்கள் சாதனைகள்!!//

    நன்றி முல்லை.

    பதிலளிநீக்கு
  46. மண்குதிரை said...

    //வாசித்தேன். வாழ்த்துக்கள்.//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மண்குதிரை.

    பதிலளிநீக்கு
  47. " உழவன் " " Uzhavan " said...

    //வாழ்த்துகள் மேடம். தொடரட்டும் உங்கள் சாதனைகள்//

    மிக்க நன்றி உழவன்.

    பதிலளிநீக்கு
  48. அபி அப்பா said...

    //என் அன்பு வாழ்த்துக்கள் பிரண்ட்!//

    வாழ்த்துக்களுக்கு நன்றி அபி அப்பா!

    பதிலளிநீக்கு
  49. மதுரையம்பதி said...

    //வாழ்த்துக்கள். :)//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மதுரையம்பதி.

    பதிலளிநீக்கு
  50. கிரி said...

    //நீங்கள் கூறுவது உண்மை..இந்த பத்திரிக்கை பற்றி எனக்கு அதிகம் தெரியாது ஆனால் பலர் இந்த பத்திரிக்கை நடுநிலையான மற்றும் பரபரப்பிற்காக எழுதாத பத்திரிக்கை என்று கூற கேள்விப்பட்டு இருக்கிறேன்.//

    நீங்கள் சொல்வது சரியே.

    //எத்தனை பதிவு எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை..என்ன எழுதி இருக்கிறோம் என்பது தான் முக்கியம்..நீங்கள் அதில் சிறப்பே!//

    நன்றி கிரி. ‘எத்தனை’ என்பதை விட எப்போதும் ‘என்ன’ என்பதில்தான் என் நாட்டமும்.

    //கதை நன்றாக உள்ளது..கருத்துடன். நான் கூட இவரை போல பல சமயங்களில் அவசரப்பட்டு நினைத்து விடுவேன்..பிறகு தவறுணர்ந்து வருந்துவேன்.//

    கதையை ரசித்துப் படித்திருப்பது தெரிகிறது. எது விசுவாசம் என்பதோடு ஒரு சாமான்ய மனிதன் சமயத்தில் எப்படி அவசரப் புத்தியால் யோசிக்கத் தவறுகிறான் என்பதுமேதான் கரு.

    //நீங்கள் மென்மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள். slow and steady யாக கலக்குங்கள்.//

    அனுஜன்யாவைப் போலவே என் நிதானமும் சரியே என வாழ்த்தியிருக்கிறீர்கள்:)!

    //தலைவர் பாணியில் சொல்வதென்றால் "கண்ணா! சிறப்பா செய்பவன் அதிகம் பேசமாட்டான்"//

    ஆனால் என்னைப் பற்றி அதிகமாகவே பாராட்டி நீங்கள் பேசி விட்டீர்கள்:)! அந்த அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  51. ஜீவன் said...

    //ஆஹா ! மகிழ்ச்சி! வாழ்த்துகள்! கதைய இன்னும் படிக்கல !

    ஒரு கலைமகள் புத்தகத்த வீட்டுக்கு வாங்கிகிட்டு போய் உங்க கதைய காட்டி இவங்க எனக்கு தெரிஞ்சவங்கன்னு பெருமையா சொல்லிக்க போறேன்!//

    ஆஹா எனக்கும் மகிழ்ச்சி. ரொம்ப நன்றி ஜீவன்!

    பதிலளிநீக்கு
  52. புதுகைத் தென்றல் said...

    //50க்கு வாழ்த்துக்கள்.//

    நன்றி தென்றல்.

    பதிலளிநீக்கு
  53. வல்லிசிம்ஹன் said...

    //ராமலக்ஷ்மி, அருமையன கதை. கலைமகளுக்கு ஏற்ற கதை. மனம் பூகிற போக்கில் மனிதனின் புலம்பலும், கதையைக் கொண்டு சென்றிருக்கும் நேர்த்தியும் அழகு. நேர்மையும் விசுவாசமும் குறைந்த இந்த நேரத்தில் இப்படி ஒரு கருத்தைச் சொல்லி இருப்பது முக்கியம்.
    முதல் அச்சு வெளியீட்டுக்கும், வாழ்த்துகள்.//

    கதையைப் பற்றிய கருத்துக்கும் தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  54. மிக்க மகிழ்ச்சி...50- பதிவுகள் மற்றும் கலைமகளில் கதை வந்தற்கும் வாழ்த்துகள்!

    //கை நழுவிப் போன பொருளைப் பற்றிய கவலை யோசிக்க யோசிக்க கெளரவப் பிரச்சனையாகவும் ஆனது.//

    பெரும்பாலும் இப்படி நடப்பதுண்டு....



    //கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மேலான கழிவிரக்கம் தடம் மாறி முதலாளியின் மேல் சொல்லொண்ணா கோபமாக உருமாறுவதை அவன் உணராமலும் இல்லை.
    //

    இயல்பான மனித மனவோட்டங்களோடு நகர்கிறது கதை..அருமை


    //அதிக எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளியில் 'தொடர்ந்து' பதிவுகளைத் தந்தபடிதான் இருக்கின்றேன் இதுவரையில்//


    தொடருங்கள் படிக்கக் காத்திருக்கிறோம்..

    நட்புடன் ஜீவன்.

    பதிலளிநீக்கு
  55. த.ஜீவராஜ் said...

    // மிக்க மகிழ்ச்சி...50- பதிவுகள் மற்றும் கலைமகளில் கதை வந்தற்கும் வாழ்த்துகள்!//

    நன்றி ஜீவராஜ், தங்கள் வாழ்த்துக்களுக்கும் கதையை ரசித்து சொல்லியிருக்கும் கருத்துக்களுக்கும்.

    //தொடருங்கள் படிக்கக் காத்திருக்கிறோம்..//

    இயலும் வரை தொடருகின்றேன். இந்த அன்புக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  56. முதல் வருடம்,50வது பதிவு, அருமையான கதை..வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேடம்.

    இனியும் இதுபோன்ற படைப்புகளை படைத்து புகழ்பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  57. ஐம்பதாவது பதிவுக்கும், அருமையான கதைக்கும் வாழ்த்துக்கள் ராமலஷ்மி அக்கா.

    என்னதான் எடுத்துச்சொன்னாலும் நம்மில் அநேகம்பேர் கோபாலைப்போலத்தான் இருக்கிறோம். சைக்கிள் போயி ஸ்கூட்டர் வந்தா கோபம்போயி சந்தோஷம் வந்திடுது :)

    கலைமகளின் அருள் மேலும் தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  58. sindhusubash said...

    //முதல் வருடம்,50வது பதிவு, அருமையான கதை..வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேடம்.//

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சிந்து.

    பதிலளிநீக்கு
  59. சுந்தரா said...
    //என்னதான் எடுத்துச்சொன்னாலும் நம்மில் அநேகம்பேர் கோபாலைப்போலத்தான் இருக்கிறோம். சைக்கிள் போயி ஸ்கூட்டர் வந்தா கோபம்போயி சந்தோஷம் வந்திடுது :)//

    சரியாகச் சொன்னீர்கள் சுந்தரா:)!

    உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  60. /* நல்லது செய்யற ஆண்டவன்தான் நமக்குக் கஷ்டத்தையும் தர்றான். அப்பவும் என்னக் காப்பாத்தப்பான்னு அவங்கிட்டேயேதானே போறோம். அது பக்தின்னா விசுவாசமும் அது போலத்தான். */
    சரியா சொன்னீங்க. மிக அருமையான கதை. வாழ்த்துக்கள் மேடம்

    பதிலளிநீக்கு
  61. @ அமுதா,

    கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  62. உங்க கதை அச்சுல வந்தது ரம்ப சந்தோசம்.அதுக்கொரு வாழ்துக்கள்.
    ஐபதாவது பதிவுக்கு ஒரு வாழ்துக்கள்.

    // ‘தொடர்ந்து எழுதுவது என் வழக்கமாக இல்லாமல் தோன்றும் போது எழுதுவதே என் பழக்கமாக இருந்து வருகிறது.//

    இது தான் சரியான பழக்கம்கா.இதையவே கடைபிடிக்கலாம்.

    தொடர்ந்து கலக்க வாழ்துக்கள்கா.

    பதிலளிநீக்கு
  63. மணியன் said...

    //வாழ்த்துகள்!!//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மணியன்.

    பதிலளிநீக்கு
  64. கார்த்திக் said...

    //உங்க கதை அச்சுல வந்தது ரம்ப சந்தோசம்.அதுக்கொரு வாழ்துக்கள்.
    ஐபதாவது பதிவுக்கு ஒரு வாழ்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கு நன்றி நன்றி!!

    *** // ‘தொடர்ந்து எழுதுவது என் வழக்கமாக இல்லாமல் தோன்றும் போது எழுதுவதே என் பழக்கமாக இருந்து வருகிறது.//

    இது தான் சரியான பழக்கம்கா.இதையவே கடைபிடிக்கலாம்.\\ ***

    எப்போதும் போல உங்கள் கருத்தை கவனத்தில் கொள்கிறேன் கார்த்திக்:)!

    பதிலளிநீக்கு
  65. வாழ்த்துக்கள் ராம் மேடம்

    இன்னும் கதையைப் படிக்கலை, சீக்கிரம் படிச்சிடறேன்

    பதிலளிநீக்கு
  66. @அமிர்தவர்ஷினி அம்மா

    நல்லது, வாழ்த்துக்களுக்கு நன்றி அமித்து அம்மா!

    பதிலளிநீக்கு
  67. //இந்தாங்க, முதலில் எங்க வாழ்த்து(க்)களைப் பிடியுங்க.

    இன்னும் கதையைப் படிக்கலை.//

    பொறுமையா வந்து பின்னூட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  68. @ சதங்கா,

    பிடித்துக் கொண்டேன் வாழ்த்துக்களை!
    நன்றி. பொறுமையாப் படிங்க:)!

    பதிலளிநீக்கு
  69. பெருசா வாய்த்திகிறேன்.
    ஐம்பதாவது பதிவுக்கும் இந்த அருமையா கதைக்குத். படிக்க
    நல்லா இருந்துச்சுங்க கதை

    பதிலளிநீக்கு
  70. @ ஆ.முத்துராமலிங்கம்,

    முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  71. ஐம்பதுக்கும் ! அச்சிலேற்றியதற்கும் முதற்கண் வாழ்த்துக்கள்.

    படிப்பவர் மனதில் பட்டென்று ஒட்டிக் கொள்ளும் கதை ! வெள்ளந்தியான கோபால், அவருக்கும் உதவணும் என்று நினைத்த அவரது முதலாளி செந்தில்நாதன், மற்றும் அன்புமணி ... அனைவரும் நெஞ்சில் நிற்கின்றனர்.

    தொடர்ந்து உங்கள் கதைகள் அச்சேற வாழ்த்துக்கள் !!!

    பதிலளிநீக்கு
  72. @ சதங்கா,

    கதையைப் பற்றிய தங்கள் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  73. வாழ்த்துகள் ராமலஷ்மி

    நிறைய இன்னும் எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  74. ஷைலஜா said...

    //வாழ்த்துகள் ராமலஷ்மி

    நிறைய இன்னும் எழுதுங்க.//

    பத்திரிகைகளில் முயற்சிக்குமாறு நீங்கள் தொடர்ந்து வலியுறுத்திய அக்கறையினால் எழுந்த முயற்சியின் வெற்றிதான் இது ஷைலஜா. உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  75. ராமலஷ்மி மேடம்,

    வருகைக்கு நன்றி. வாழ்த்துக்கும் நன்றி.

    க்லைமகள் கதை.வாழ்த்துக்கள்.
    ஐம்பதாவது பதிவு.வாழ்த்துக்கள்.

    நான் 15 வருடங்களுக்கு முன்பு க்லைமகளில் கதை எழுதி இருக்கேன்.
    தலைப்பு: “உஸ்மான் ரோடு கிருஷ்ணர்”

    உங்கள் கதை படித்தேன்.நல்லா இருக்கு.என்னோடு யோசனை அண்ட் பணிவான வேண்டுகோள்.

    கவிதை மற்றும் கதையில் கருத்துக்களை/நீதிகளை/ரசனைகளை
    உரத்தக் குரலில்சொல்லாமல்
    மெல்லிசாக கவிதை மற்றும் கதையில் இழைத்துச் சொல்லலாம்.இயல்பாக இருக்கும்.யதார்த்தம் மிளிரும்.
    பிரச்சார நெடி அடிக்காமல் இருக்கும்.

    ஏன் முயற்ச்சிக்கக் கூடாது?

    நன்றி.

    விகடன் பங்களூர்ல வந்துடிச்சா?

    பதிலளிநீக்கு
  76. கதை படிச்சேன். கோபாலின் செல்லில் புதிய ரிங்டோன் - " நம்ம முதலாளி, நல்ல முதலாளி" தானே. நானும் ஒரு வாரமாக ஒரு பதிவு எழுதி வைத்து தலைப்பு என்ன எழுதுவது என்று இருந்திருந்தேன். கோபால் போனில் ஊரைத் தெரிஞ்சுக்.......... என்று கேட்டதும் அதுவே தலைப்பானது. படித்தீர்களா?
    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  77. கே.ரவிஷங்கர் said...

    //கலைமகள் கதை.வாழ்த்துக்கள்.
    ஐம்பதாவது பதிவு.வாழ்த்துக்கள்.//

    நன்றி!

    //நான் 15 வருடங்களுக்கு முன்பு க்லைமகளில் கதை எழுதி இருக்கேன்.
    தலைப்பு: “உஸ்மான் ரோடு கிருஷ்ணர்”//

    இப்போது தங்கள் வலைப்பூவில் பகிர்ந்திடலாமே?

    //உங்கள் கதை படித்தேன்.நல்லா இருக்கு.என்னோடு யோசனை அண்ட் பணிவான வேண்டுகோள்.//

    வரவேற்கிறேன். அக்கறையை யோசனையாகவே வெளிப்படுத்துங்கள், வேண்டுகோள் போன்ற பெரிய வார்த்தைகள் வேண்டாம் ரவிஷங்கர்:)!

    //மெல்லிசாக கவிதை மற்றும் கதையில் இழைத்துச் சொல்லலாம்.இயல்பாக இருக்கும்.யதார்த்தம் மிளிரும்.//

    [பதினைந்து வயதில்] எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவே என் பாணியாக ஒட்டிக் கொண்டு விட்டது. பலரும் இதை லேசாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள் கவிதைகளின் நீளம் உட்பட:)! நானும் இதை உணர்ந்தே இருக்கிறேன். மாற்றிக் கொள்வது அத்தனை எளிதாக இல்லை:( !

    //ஏன் முயற்ச்சிக்கக் கூடாது?//

    இப்போது வலையில் உங்கள் போன்ற பலரின் எழுத்துக்கள் என்னை நிறைய சிந்திக்க வைக்கின்றன. அந்த வாசிப்புக்கள் என்னை மாற்றிக் கொள்ள உதவும். நிச்சயம் முயற்சிக்கிறேன். அக்கறை கலந்த ஆலோசனைக்கு மிக்க நன்றி!

    //விகடன் பங்களூர்ல வந்துடிச்சா?//

    வந்ததும் வாங்காமல் இருந்ததே இல்லை..:)! வெள்ளி கடைக்கு வரும். சனி [அ] ஞாயிறு வீடு வரும்:)! அதில் உங்கள் கவிதைகள் இரண்டுமே அருமை. குறிப்பாக “நாய்க்குட்டிக்கு அம்மா வேணும்”!

    பதிலளிநீக்கு
  78. சகாதேவன் said...

    //கதை படிச்சேன். கோபாலின் செல்லில் புதிய ரிங்டோன் - " நம்ம முதலாளி, நல்ல முதலாளி" தானே.//

    அதுவேதான் அதுவேதான்:))!

    //நானும் ஒரு வாரமாக ஒரு பதிவு எழுதி வைத்து தலைப்பு என்ன எழுதுவது என்று இருந்திருந்தேன்.//

    ஒரு பதிவல்ல நான்கு பதிவு. எப்படித் தெரியும் என்று யோசிக்கிறீர்களா? அருணா அவர்களின் பதிவிலே “நான்கு பல்புகள் மிளிர்ந்தபடி” எனக் குறிப்பிட்டிருந்தீர்களே?

    //கோபால் போனில் ஊரைத் தெரிஞ்சுக்.......... என்று கேட்டதும் அதுவே தலைப்பானது. படித்தீர்களா?//

    இப்போதுதான் படித்து விட்டு வந்தேன்! தலைப்பு வெகுபொருத்தம். ஆக, ஒரு பல்ப் பதிவாகி அணைந்து விட்டது. மிளிரும் மற்ற மூன்றிற்கும் காத்திருக்கிறோம். தலைப்புக்கு கோபாலை அணுகலாம்:)!

    பதிலளிநீக்கு
  79. ரொம்ப நல்லா இருக்குங்க கதை. ஆனா, கலைமகள் என்பது நான் கேள்விப்படாத பெயர். நேரம் கிடைத்தால், அப்படியே நம்ம ப்ளாக் பக்கம் ஒரு விசிட் வாங்க!

    பதிலளிநீக்கு
  80. SUMAZLA/சுமஜ்லா said...

    //ரொம்ப நல்லா இருக்குங்க கதை.//

    நன்றி, முதல் வருகைக்கும்!

    //ஆனா, கலைமகள் என்பது நான் கேள்விப்படாத பெயர்.//

    ஆச்சரியமாய் இருக்கிறது நீங்கள் சொல்வது. 1932-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 3 தலைமுறையாக கடந்த 77 வருடங்களாக தரமான இலக்கிய திங்கள் இதழாக இன்றுவரை திகழுகிறது கலைமகள்.

    பதிலளிநீக்கு
  81. கதை இயல்பான நடையில் நல்லாயிருக்கு.

    50-வது பதிவுக்கும் பத்திரிகை பிரவேசத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி! மென்மேலும் வளர கலைமகள் துணையிருப்பாள் :)

    (பின்னூட்டங்களெல்லாம் படிக்கலை. மன்னிச்சுக்கோங்க)

    பதிலளிநீக்கு
  82. கவிநயா said...

    //கதை இயல்பான நடையில் நல்லாயிருக்கு.

    50-வது பதிவுக்கும் பத்திரிகை பிரவேசத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி! மென்மேலும் வளர கலைமகள் துணையிருப்பாள் :)//

    மிக்க நன்றி:)! உங்கள் வாழ்த்துக்காகக் காத்திருந்தேன்!
    பயணம் முடிந்து வந்ததுமே விரைந்து வாசிக்க வந்து விட்டீர்களே.

    //(பின்னூட்டங்களெல்லாம் படிக்கலை. மன்னிச்சுக்கோங்க)//

    பின்னூட்டங்களாகத் தவறாமல் தொடர்ந்து தாங்கள் தருகின்ற ஊக்கமே எனக்குப் போதுமே:)!

    பதிலளிநீக்கு
  83. அன்பின் ராமலக்ஷ்மி,

    அச்சு ஊடகத்துறையில் உங்கள் எழுத்துக்கள் நடைபோடத் துவங்கியிருப்பது அறிந்து மிகவும் மகிழ்கிறேன். இது நல்ல ஆரம்பம். இனி தொடர்ந்து எழுதுங்கள்.

    இணையத்தில் உங்களை எல்லோருக்கும் தெரியும். அது போலவே எல்லாத்தரப்பிலும் அறிந்த 'எழுத்தாளர் ராமலக்ஷ்மி'யைக் காண ஆவலாக இருக்கிறேன்.

    எனது அன்பான வாழ்த்துக்கள் சகோதரி !

    பதிலளிநீக்கு
  84. எம்.ரிஷான் ஷெரீப் said...
    //அச்சு ஊடகத்துறையில் உங்கள் எழுத்துக்கள் நடைபோடத் துவங்கியிருப்பது அறிந்து மிகவும் மகிழ்கிறேன். இது நல்ல ஆரம்பம். இனி தொடர்ந்து எழுதுங்கள்.//

    அச்சுத் துறையில் முயற்சிக்க என்னைத் தொடர்ந்து வற்புறுத்தியவர்களில் நீங்கள் முதன்மையானவர். இந்த நல்ல செய்தியை பகிர்ந்திட நினைக்கையில் நீங்களோ உடல் சுகவீனத்தில். மீண்டு வந்ததும் வாழ்த்த வந்ததும் கடவுளின் செயலே.

    //இணையத்தில் உங்களை எல்லோருக்கும் தெரியும். அது போலவே எல்லாத்தரப்பிலும் அறிந்த 'எழுத்தாளர் ராமலக்ஷ்மி'யைக் காண ஆவலாக இருக்கிறேன்.

    எனது அன்பான வாழ்த்துக்கள் சகோதரி!//

    உங்கள் வாழ்த்துக்களால் அது சாத்தியமாகட்டும்:)! மிக்க நன்றி ரிஷான்.

    பதிலளிநீக்கு
  85. 50க்கு வாழ்த்துகள் அக்கா.. முதல் பத்தியே ரகளையா ஆரம்பிக்கிது.. :)

    பதிலளிநீக்கு
  86. $anjaiGandh! said...

    //50க்கு வாழ்த்துகள் அக்கா.. முதல் பத்தியே ரகளையா ஆரம்பிக்கிது.. :)//

    நன்றி சஞ்சய். பதிவின் முதல் பத்தியா கதையின் பத்தியா என்று சொல்லவேயில்லையே நீங்கள்:)?

    பதிலளிநீக்கு
  87. இதழ் வெளிவந்த போதே இந்தக் கதையை நான் படித்திருக்கிறேன். கதை நெகிழ்ச்சி தருவதாகத்தான் இருந்தது.
    ஆனால் என் மனதில்தான் ஒரு ஏக்கம்.
    சிறந்த பணியாளர்களுக்கு அக்கறை காட்டும் முதலாளி அமைவதில்லை. நல்ல முதலாளிகளுக்கு விசுவாசமான வேலைக்காரர்கள் கிடைப்பதில்லை. இந்த இடைவெளி எந்தக் காலத்திலும் உண்டு. நானும் இந்த இடைவெளியில் சிக்கியே ஒவ்வொரு முறையும் சிதைந்ததால்தான் தனி நபர் நிறுவனத்தில் வேலைக்கு செல்வதற்கே அஞ்சிக் கொண்டிருக்கிறேன்.

    ஆனால் வாசிப்பு என்னைப் பண்படுத்தியதால்தான் வேலையை விட்டு நின்று விடுவது என்று முடிவு செய்த பிறகும் கூட கடை நாள் வரை என்னுடைய வேலையை மிகச் சரியாக செய்து முடித்திருக்கிறேன். இந்த வழக்கம் எனக்கு வருமானம் தரவில்லை. அதே போல் மன உறுத்தலையும் கொடுக்கவில்லை.

    பிறர் ஒரு வேலையை முடித்து விட்டு ஆயிரம் ரூபாயை அதற்குரிய தொகையாக கேட்டால் சில நேரங்களில் ஆயிரத்து இருநூறு ரூபாய் கூட கிடைக்கும். ஆனால் நான் கேட்பதே ஐநூறுதான் என்றால் அதில் நூறு ரூபாயை வாங்கவே பத்து முறை அலைய வேண்டியிருக்கும்.

    ஐந்தாண்டுகளில் நான் வேலை செய்த ஆடிட்டர் அலுவலகம், நூறாண்டுகளைக் கடந்த நிறுவனம் (பள்ளிக்கூடமும் , மருத்துவமனையும் இவர்களின் துணை நிறுவனங்கள் ), மிகப்பெரிய அச்சகம், தொலைகாட்சி தொடர்கள் தயாரித்த நிறுவனம், என்று நான் பணிபுரிந்த எல்லா இடங்களிலும் அதிக சம்பளம் இல்லை... பேசிய சம்பளமே எனக்கு சரிவர கிடைத்தது கிடையாது.

    எதோ கடைநிலை ஊழியராக இருந்தேன் என்று நினைத்து விடாதீர்கள்... ஆடிட்டர் அலுவலகத்தில் கிளை மேலாளர், நூறாண்டு நிறுவனத்தில் வருமானவரி, விற்பனைவரி, வருங்கால வைப்புநிதி, பள்ளிக்கூட கணக்கு, மருத்துவமனை கணக்கு மேற்பார்வை, பிரச்சனையில் உள்ள கணக்குகளை எல்லாம் சரி செய்தல் உட்பட பல பொறுப்புகள், அச்சகத்தில் மேலாளர், தொலைகாட்சி தொடர் தயாரித்த நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பு என்று பேர்தான் பெரிய பேர்.

    யாரிடமும் ஒழுங்காக சம்பளம் வராததற்கு நான் காரணமா...யார் காரணம் என்றெல்லாம் புரிய வில்லை.

    இப்படி பல பிரச்சனைகளுக்கு இடையில் என் மனதை அமைதிப்படுத்துவது புத்தகங்கள்... வருமானம் தருவது கைத்தொழிலும் எழுத்தும்தான்.

    உங்கள் கதையை கலைமகளில் படித்த போது, இப்படி எல்லாம் முதலாளி இருக்காங்களா ? என்று வியப்பு ஏற்பட்டது உண்மை. ஏன்னா நான் பார்த்த முதலாளிகள் ஒருத்தரும்....சரி... அதை சொல்ல வேண்டாம். நீங்கள் கதையில் எழுதியது போலவும் நிச்சயம் ஆட்கள் இருக்கத்தான் செய்வார்கள். என்ன... அவர்களை நான் சந்திக்க வில்லை.

    பதிலளிநீக்கு
  88. சரண் said...
    //சிறந்த பணியாளர்களுக்கு அக்கறை காட்டும் முதலாளி அமைவதில்லை. நல்ல முதலாளிகளுக்கு விசுவாசமான வேலைக்காரர்கள் கிடைப்பதில்லை.//

    உலக நடப்பில் உள்ளதுதான். விதிவிலக்குகளும் உள்ளனவே.

    //என்ன... அவர்களை நான் சந்திக்க வில்லை.//

    விரைவில் சந்திக்க என் வாழ்த்துக்கள்!

    தங்கள் மனம் திறந்த பகிர்தலுக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  89. கலைமகள் உங்களை மடியில் அமர்த்திக் கொண்டாள். இதைவிட வேறென்ன வேண்டும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin