Monday, March 8, 2010

சதுரங்கப் பலகையில் சர்வ சுதந்திரமாய்...- விகடன்.காமின் சக்தி 2010-ல்

மகளிர்தின வாழ்த்துக்கள்!

ன்றைக்கும் காணக் கிடைக்கிற காட்சிதான் இது. உற்சாகக் கூவலுடன் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடியபடி இருக்க அவர்கள் வயதொத்த சிறுமி ஏக்கமாய் பார்த்தபடி அமர்ந்திருப்பது. கடந்து செல்லுபவர்கள் ‘இவளையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்’ என்றால் "இது பாய்ஸ் கேம்ஸ்’ என்பதாக இருக்கும் வருகிற பதில். ஒரு ஓவர் பவுலிங் கொடுத்துப் பார்க்கும் முன்னரே ஏன் இந்த முடிவு? ‘அவளாலே முடியாது’ அப்போதுதான் நம் கண் எதிரே அருமையான கேட்சை தவறவிட்ட சிறுவன் அலட்சியமாகச் சொல்லுவான்.

துறுதுறுவென ஓடிச்சாடி அந்தச் சிறுமியின் கால்கள் காட்டத் துடிக்கும் வேகத்தை அத்தனை எளிதாய்ப் புறக்கணித்தால் எப்படி? கண்கள் கவனத்தைக் குவிக்க, தாவிக் கைகள் பிடிக்க என அவள் பந்துகளைத் தடுத்தாள ஒரு வாய்ப்புக் கூட மறுக்கப்பட்டால் எப்படி? உடல் பலத்தில் ஒருபடி கீழே இருந்தாலும் கூட உற்சாகத்தை உயிரினுள்ளிருந்து திரட்டி, பிடித்திருக்கும் மட்டைக்கு ஊட்டி, அவளால் இயன்ற வரை ஓங்கி அடிக்கிற பந்து சிக்சரா ஃபோரா, இல்லையேல் காற்றிலே மட்டை மட்டும் சுழல க்ளீன் போல்டா, பரவாயில்லை எதுவானாலும் ஆடிப் பார்க்கதான் விடுங்களேன்.

கமனிதனுக்கான வாய்ப்பைக் கிடைக்கவிடாமல் செய்வதைப் போன்றதொரு மட்டமான விஷயம் வேறில்லை உலகில். அதுவே பெண்கள் என வருகையில் சமுதாயம் இதை எப்போதும், அந்தச் சிறுவனைப் போலவே தயங்காமல், ‘இதுவே உங்களுக்கு விதிக்கப்பட்டது’ என்கிற மாதிரியான மனோபாவத்துடன் இன்றளவும் செய்து கொண்டேதான் இருக்கிறது. அதையும் உடைத்துக் கொண்டு வெளியில் வந்து காண்பித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் பெண்கள். கடந்த வருடம் நவம்பர் 20ஆம் தேதி இந்திய கடற்படையின் வரலாற்றில் ஒரு குறிப்பு பொன் எழுத்துக்களால் பதிக்கப் பட்டது. அன்று இருபத்து இரண்டு வயதே நிரம்பிய அம்பிகா ஹூடா, சீமாராணி ஆகிய இரு பெண் அதிகாரிகள் துணை லெப்டினென்ட் பொறுப்பேற்றனர்.இதுகாலம் வரையில் பெண் பைலட்டுகள் சரக்கு மற்றும் போக்குவரத்து விமானங்களை மட்டுமே இயக்கி வந்துள்ளனர். ஆனால் இந்த சாதனை மகளிர் கப்பற்படையின் குண்டு பொழியும் வசதிபடைத்த டார்னியர் விமானங்களை ஓட்டி ரேடார் மூலமாகக் கடலைக் கண்காணிப்பது, போர் விமானங்களின் வருகையைக் கவனித்து விமானப் படைக்குத் தகவல் தருவது போன்ற மிகப் பெரிய பொறுப்புகளைக் கையாளப் போகிறார்கள். ஆக, ஆண்களால் மட்டுமே முடியுமென நினைக்கப்பட்ட விஷயங்களை பெண்களும் செய்து பார்க்க அனுமதி அளிக்கப் பட்டதால்தானே இது சாத்தியப்பட்டது. அவர்கள் முயற்சித்துதான் பார்க்கட்டுமே. முடியவில்லை எனத் தோற்றாலும் நட்டமொன்றும் இல்லை. ஆனால் முயற்சிக்க விடுங்கள்!

மாம் இப்போது இங்கே எந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது? சொல்லபோனால் எங்களுக்கான வாய்ப்புகளும் இவர்களால்தான் கெட்டுப் போகிறது’ என முணுமுணுக்கும் ஆண்கள் பலருண்டு. உதாரணத்துக்கு கடந்த வாரம் ஹரியானா மாநில அரசானது அரசுப்பணியிலிருக்கும் பெண்களுக்கு இரண்டு வருட சி.சி.எல் எனும் சைல்ட் கேர் லீவ் ஒன்றை அறிவித்துள்ளது. முதலிரண்டு குழந்தைகளுக்கு மட்டுமென்றும், பதினெட்டு வயதை அவர்கள் எட்டும் வரை எப்போது வேண்டுமானாலும் இந்த விடுப்பை பிரித்து எடுத்துக் கொள்ளலாமென்றும் அறிவித்துள்ளது.

இது சரியா தவறா எனும் பெரும் சர்ச்சையும் எழுந்துள்ளது. ‘இனிமேல் இவர்களுக்கு கொண்டாட்டம்தான். பெரும்பாலும் அலுவலகங்கள் இதனால் காலியாகத்தான் இருக்கப் போகின்றன. எந்த வேலைகளும் நடக்கப் போவதில்லை’ எனும் எக்காளம் வலுக்கிறது. தம்மை ஈன்றவளும் தம் வாரிசுகளைச் சுமந்தவளும் பெண் என்பதை இவர்கள் மறந்தொன்றும் போகவில்லை. மதிக்கின்ற மனம்தான் இல்லை. ஆனால் ஹரியானாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கீதா புக்கல், தாய்மையைப் மதித்துப் போற்றும் அடையாளமாகவே இச்சட்டம் அமலுக்கு கொண்ட வரப்பட்டதாக அறிவித்துள்ளார்.

‘பெண்கள் தாங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக மட்டுமேயன்றி தம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தரவும்தான் வேலைக்குச் செல்கிறார்கள். வீட்டிலும் வெளியிலுமாக சுமைதாங்கும் அவர்களுக்கு இது தேவையான ஒன்றுதான்’ என அனுசரணையாகக் குரல் எழுப்பியுள்ளனர் அம்மாநில அரசு அதிகாரிகள் சிலர். இருப்பினும், கிளம்பியிருக்கும் அதிருப்தியால் மற்ற மாநிலங்கள் இதைப் பின்பற்ற முன்வருவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்க இன்றளவிலும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான பிரசவகால விடுப்பு மூன்றுமாதங்களாகவே இருந்து வருகிறது.

விடுப்பு கிடைக்கிறது என்பதற்காக எவரும் தேவையில்லாமல் அதை பயன்படுத்துவார்கள் எனத் தோன்றவில்லை. ஏனெனில் வேலையின் மீதான் அக்கறையும், போட்டிகள் சூழ்ந்த இவ்வுலகில் தன்னை நிரூபித்தாக வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் பெண்கள். இடைக்காலங்களில் தவிர்க்கமுடியாமல் நீண்ட விடுப்புகள் தேவைப்படுகையில் வேறுவழியின்றி பார்த்து வந்த வேலையை ஏக்கத்துடனும் வருத்தத்துடனும் ராஜினாமா செய்து விட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் உண்டு. அந்த நிலைமை ஏற்படாமலிருக்கவும் இந்த சட்டம் உதவும் என்கிற வகையில் நிச்சயம் இது பாராட்டுக்குரியதே.

பி
ரசவகாலம் தவிர்த்து தன்னை ஒரு பெண் என்பதை முன்னிறுத்தி சலுகைகள் பெறுவதில் அத்தனை நாட்டமோ விருப்பமோ கொண்டவர்களாகத் தெரியவில்லை இன்றைய மங்கையர். எந்த உடல் உபாதையானாலும் பொறுத்துக் கொண்டு வெளிக்காட்டாமல் வேலை செய்கிறார்கள். தமது குழந்தைகளுக்கொரு பிரச்சனை, எதிர்பாராத உடல்நலக் குறைவு என வரும் போது விடுப்பு எடுக்கும் சூழல்கள் அமைந்துதான் போகிறது. தாய்மையா வேலையா என இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிற நிலைமைதான். இதையே சாதகமாக்கி, ஒரு பதவி உயர்வென்று வருகையில், திறமையிலும் அர்ப்பணிப்புடன் வேலை செய்வதிலும் பலமடங்கு முன்னணியில் இருந்தாலும்கூட பெண் எனும் காரணத்தால், குடும்பப் பொறுப்புடன் இந்தப் பொறுப்பை சரிவர செய்வது அத்தனை சாத்தியப்படாது என அவர்களைப் பின்தள்ளுவது நடப்பதேயில்லை என யாராவது சொல்ல இயலுமா?

சமுதாயத்தைப் பார்த்து எழுப்பப்படும் இக்கேள்விகள் யாவும், கவனிக்க, பெண்களுக்கும் உரித்தானதே. மேலதிகாரியாக இருப்பது ஒரு பெண்ணே ஆனாலும், அலுவலக நன்மை கருதியென இந்தமாதிரியான கட்டங்களில் பதவி உயர்வை திறமையில் ஒருபடி கீழே இருக்கும் ஆணுக்குத் தந்து விடுவதுண்டு. அந்த வாய்ப்பை உரிய தகுதியுடைய அந்தப் பெண்ணுக்கேதான் வழங்கிப் பாருங்களேன். எப்பாடு பட்டேனும் மூன்று குதிரையில் கூட சவாரி செய்து உங்கள் அலுவலகத்தை முன்னுக்குக் கொண்டு வருவார். இந்த இடத்தில்தான் வீட்டிலுள்ளவர்கள் ஒத்துழைப்பும் அத்தியாவசியமாகிறது ஒரு பெண்ணின் முன்னேற்றத்துக்கு.

வீடும் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம்தானே? தினசரி வீட்டு வேலைகளில் உதவுவதில் முடிந்து விடுவதில்லை கணவனின் கடமை. குழந்தைகளின் பள்ளியில் பெற்றோர் சந்திப்புகள் அல்லது அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது போன்ற பொறுப்புகள் தந்தைக்கும் உண்டு.தன்னைவிட மனைவி பெரிய பொறுப்பில் இருந்தால் ‘என் வேலை அத்தனை முக்கியம் இல்லை என நினைத்தாயா?’ என்றோ, அல்லது தான் உயர்பதவி வகிக்கும் கர்வத்தில், ‘என்வேலை முக்கியமா உன் வேலை முக்கியமா’ என்றோ விவாதம் செய்வது சரியல்ல. குறிப்பிட்ட அத்தினத்தில் மனைவிக்கு அலுவலகத்தில் ஏதேனும் அதிமுக்கிய வேலை இருக்கலாம். அவரது வளர்ச்சியின் அடுத்த மைல்கல்லை எட்ட வைக்கக் கூடியதாக இருக்கலாம்.

கவனித்துப் பார்த்தால் இது போன்ற ‘நீயா நானா’வில் பெரும்பாலும் விட்டுக்கொடுப்பவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். ஊர் மாற்றமோ வேலை மாற்றமோ ஆணுக்கு நிகழுகையில், அதே ஊருக்கு தனது அலுவலகம் மூலமாக மாற்றலாகிட வழியில்லாது போகையில், அதுவரை பார்த்துச் சேர்ந்த பெயர் பதவி எல்லாவற்றையும் துறந்து வேறுவேலையைத் தேட கணவனுக்காகக் பொட்டியைக் கட்டும் மனைவியர்தான் எத்தனைபேர்? மறுபடியும் ஆரம்பப் புள்ளியிலிருந்து புதிய இடத்தில் வேலையைத் தொடங்க ஆண்களே அதீத தயக்கம் காட்டுகையில் குழந்தைகளின் படிப்பு,வீடு,வேலை,இட மாற்றங்களுக்கு மனத்திண்மையுடன் தம்மை தயார் செய்து கொள்கிறார்கள் பெண்கள்.

துரங்கப் பலகையில் எவருக்கும் இல்லாத சக்தி ராணிக்குதான் தரப்பட்டுள்ளது. மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்? ராஜாவைக் காப்பாற்ற. வாழ்க்கை சதுரங்கத்தில் ராஜாவாகக் குடும்பமோ பணியிடமோ இருக்க, பெண் சர்வ சுதந்திரமாக ஓடுவதுபோலத்தான் ஓடுகிறாள் எட்டுத்திக்கிலும், காலில் பிணைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத சங்கலியுடன்.
பிறப்பால் பெண் எனும் அந்தச் சங்கிலியை அனுசரணையுடன் அறுத்தெறிந்து அவர்களுக்கு உரிய வாய்ப்பினைக் கொடுப்பதில்தான் இருக்கிறது அதே பிறப்பால், தேக பலம் எனும் ஒரேயொரு கூடுதல் வரத்தால், தம்மை உயர்வாய்க் கருதிக் கொள்பவர்களின் உண்மையான பெருமிதம். சக மனுஷியை சக உயிராய் மதித்து எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுங்கள். வளர்ச்சிக்கு வழி விடுங்கள். வானம் தொடுவார்கள். வாழ வைப்பார்கள்.
*** ***


 • 6 மார்ச், “சக்தி 2010” மகளிர்தினச் சிறப்பிதழின் ஹைலைட்ஸ் ஆகஇங்கே:

 • யூத்ஃபுல் விகடன் தளத்தின் ‘அதிகம் படித்தவை’ பட்டியலிலும்:
நன்றி விகடன்!

 • ‘பெண்ணுக்குப் பேதம் வேண்டாம்’ எனும் தலைப்பில் ஜனவரி 2011 'லேடீஸ் ஸ்பெஷல்' பத்திரிகையின் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழிலும்.., நன்றி லேடீஸ் ஸ்பெஷல்!

68 comments:

 1. மகளிர் தின வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 2. மீ த ஃபர்ஸ்ட் ஆகலாம் என்றிருந்தேன்...ஆயில்யன் முந்திக் கொண்டார்.
  பர்ர்ர்வாயில்லெ....யூத்ஃபுல்விகடனில் முத்திரை குத்திட்டோம்லே

  ReplyDelete
 3. //பெண் சர்வ சுதந்திரமாக ஓடுவதுபோலத்தான் ஓடுகிறாள் எட்டுத்திக்கிலும், காலில் பிணைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத சங்கலியுடன்//

  இதைத்தான் ஆதங்கமாக கொட்டியிருந்தேன் கவிதையாக.
  பெண் என்பதற்காகவே ஒதுக்கப்படுவது கொடுமை இல்லையா??..

  மகளிர் தின வாழ்த்துக்கள் மேடம்.

  ReplyDelete
 4. மிக நல்ல பதிவு மேடம்

  //சதுரங்கப் பலகையில் எவருக்கும் இல்லாத சக்தி ராணிக்குதான் தரப்பட்டுள்ளது. மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்? ராஜாவைக் காப்பாற்ற.//

  இல்லை வாழ்க்கைன்ற ஆட்டத்தில் ஜெயிக்கறதுக்கு கூடன்னு வச்சுகிடலாம்ல மேம்....

  ReplyDelete
 5. மகளிர் தின வாழ்த்துகள்

  சக்தி 2010ல் இடம் பெற்றதற்க்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 6. மகளிர்தின வாழ்த்துக்கள்,

  ReplyDelete
 7. சக மனுஷியை சக உயிராய் மதித்து எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுங்கள். வளர்ச்சிக்கு வழி விடுங்கள்.


  ........... பெண்கள் தினத்துக்கு ஏற்ற பதிவு. வாழ்த்துக்கள், அக்கா!

  ReplyDelete
 8. வாழ்க்கை சதுரங்கத்தில் ராஜாவாகக் குடும்பமோ பணியிடமோ இருக்க, பெண் சர்வ சுதந்திரமாக ஓடுவதுபோலத்தான் ஓடுகிறாள் எட்டுத்திக்கிலும், காலில் பிணைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத சங்கலியுடன்.//
  மிக அருமை ராமலஷ்மி.
  மிக அருமை.

  ReplyDelete
 9. மகளிர்தின வாழ்த்துக்கள் அக்கா.அருமையான பதிவு..

  ReplyDelete
 10. மிகச் சிறப்பான பதிவு அக்கா.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. அங்கேயும் படித்தேன்!இங்கேயும்! பூங்கொத்து!

  ReplyDelete
 12. ம்ம்ம் ஒன்னும் சொல்லுரதிக்கில்லை

  மகளிர் தின நல்வாழ்துக்கள் அக்கா

  ReplyDelete
 13. மகளீர் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் அக்கா!!

  ReplyDelete
 15. அருமையா எழுதி இருக்கீங்க அக்கா.

  வாழ்த்துக்கள்.

  முத்துச் சரத்தில் இன்னொரு முத்து.

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி..

  அருமையாக எழுதி இருக்கிறீர்கள் , வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெற பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. மகளிர்தின வாழ்த்துக்கள்!
  அருமையான பதிவு ராமலஷ்மி.

  ReplyDelete
 18. இரட்டை வாழ்த்துக்கள்!

  மகளிர்தினத்த்திற்கும், சக்திக்கும்.. :-)

  ReplyDelete
 19. ராமலக்ஷ்மி,உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!

  அருமையான பதிவு.

  ReplyDelete
 20. மகளிர் தின வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  மகளிர் தினத்துக்கான மிகச் சிறந்த இடுகை.

  ReplyDelete
 21. மகளிர் தின வாழ்த்துகள் ராமலட்சுமி மேடம்.

  மேலும்மேலும் சிற‌க்க என்னுடைய வாழ்த்துகள்.

  ReplyDelete
 22. மகளிர் தின வாழ்த்துகள்

  ReplyDelete
 23. ***சதுரங்கப் பலகையில் எவருக்கும் இல்லாத சக்தி ராணிக்குதான் தரப்பட்டுள்ளது. மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்? ராஜாவைக் காப்பாற்ற.***

  Honestly, எனக்கு சதுரங்க ராஜாவைப் பார்த்தால் பாவமாகவும், ராணியைப் பார்த்தால் பொறாமையாகவும் இருக்கும்ங்க! :)

  மகளிர்தின வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
 24. மகளிர் தின வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  உங்களின் வழக்கமான பதிவை போல இல்லாமல் கொஞ்சம் காரம் அதிகமாக இருப்பது போல தோன்றுகிறது.. நன்றாக உள்ளது.

  ReplyDelete
 25. நன்றாக அலசி எழுதி இருக்கிறீர்கள்..பாராட்டுக்கள். சக்தி 2010 விகடன்.காம் முகப்பு ஆகியவற்றுக்குப் பாராட்டுக்கள்

  ReplyDelete
 26. ஆயில்யன் said...

  //மகளிர் தின வாழ்த்துக்கள் !//

  நன்றி ஆயில்யன்!

  ReplyDelete
 27. goma said...

  //மீ த ஃபர்ஸ்ட் ஆகலாம் என்றிருந்தேன்...ஆயில்யன் முந்திக் கொண்டார்.
  பர்ர்ர்வாயில்லெ....யூத்ஃபுல்விகடனில்முத்திரை குத்திட்டோம்லே//

  யூத்ஃபுல் விகடன் தளத்தில் பதிந்த தங்கள் கருத்துக்கும், தொடரும் ஆசிகளுக்கும் நன்றிகள் கோமா:)!

  ReplyDelete
 28. அமைதிச்சாரல் said...

  ***/ //பெண் சர்வ சுதந்திரமாக ஓடுவதுபோலத்தான் ஓடுகிறாள் எட்டுத்திக்கிலும், காலில் பிணைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத சங்கலியுடன்//

  இதைத்தான் ஆதங்கமாக கொட்டியிருந்தேன் கவிதையாக.
  பெண் என்பதற்காகவே ஒதுக்கப்படுவது கொடுமை இல்லையா??..

  மகளிர் தின வாழ்த்துக்கள் மேடம்./***

  உங்கள் கவிதையும் வெகு அருமை அமைதிச்சாரல். கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 29. பிரியமுடன்...வசந்த் said...

  //மிக நல்ல பதிவு மேடம்//

  நன்றி வசந்த்!

  ***/ //சதுரங்கப் பலகையில் எவருக்கும் இல்லாத சக்தி ராணிக்குதான் தரப்பட்டுள்ளது. மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்? ராஜாவைக் காப்பாற்ற.//

  இல்லை வாழ்க்கைன்ற ஆட்டத்தில் ஜெயிக்கறதுக்கு கூடன்னு வச்சுகிடலாம்ல மேம்..../***

  நிச்சயமா வசந்த். எதிர்படை என்பது எல்லாம் தடைகளென இருக்க உடைத்தபடி ஜெயிக்கத்தான் செல்லுகிறாள். அதேநேரம் அந்த கண்ணுக்குத் தெரியாத.. அதை இல்லாது செய்தால் இன்னும் பரிமளிப்பார்கள்தானே?

  ReplyDelete
 30. பிரியமுடன்...வசந்த் said...

  //மகளிர் தின வாழ்த்துகள்

  சக்தி 2010ல் இடம் பெற்றதற்க்கும் வாழ்த்துகள்//

  கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி:)!

  ReplyDelete
 31. aambalsamkannan said...

  //மகளிர்தின வாழ்த்துக்கள்//

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 32. கண்மணி/kanmani said...

  ** //வாழ்க்கை சதுரங்கத்தில் ராஜாவாகக் குடும்பமோ பணியிடமோ இருக்க, பெண் சர்வ சுதந்திரமாக ஓடுவதுபோலத்தான் ஓடுகிறாள் எட்டுத்திக்கிலும், காலில் பிணைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத சங்கலியுடன்.//

  மிக அருமை ராமலஷ்மி.
  மிக அருமை.//**

  மிகவும் நன்றி கண்மணி!

  ReplyDelete
 33. Chitra said...

  // ** சக மனுஷியை சக உயிராய் மதித்து எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுங்கள். வளர்ச்சிக்கு வழி விடுங்கள்.**


  ........... பெண்கள் தினத்துக்கு ஏற்ற பதிவு. வாழ்த்துக்கள், அக்கா!//

  மிக்க நன்றி சித்ரா!

  ReplyDelete
 34. அன்புடன் மலிக்கா said...

  //மகளிர்தின வாழ்த்துக்கள் அக்கா.அருமையான பதிவு..//

  மிக்க நன்றி மலிக்கா!

  ReplyDelete
 35. சுந்தரா said...

  //மிகச் சிறப்பான பதிவு அக்கா.

  வாழ்த்துக்கள்!//

  நன்றி சுந்தரா!

  ReplyDelete
 36. அன்புடன் அருணா said...

  //அங்கேயும் படித்தேன்!இங்கேயும்! பூங்கொத்து!//

  பூங்கொத்துக்கு நன்றிகள் அருணா!

  ReplyDelete
 37. கார்த்திக் said...

  //ம்ம்ம் ஒன்னும் சொல்லுரதிக்கில்லை//

  ஏன் கார்த்திக்:))?

  //மகளிர் தின நல்வாழ்துக்கள் அக்கா//

  மிக்க நன்றி:)!

  ReplyDelete
 38. புதுகைத் தென்றல் said...

  //மகளீர் தின வாழ்த்துக்கள்//

  நன்றி தென்றல்.

  ReplyDelete
 39. ஹுஸைனம்மா said...

  //வாழ்த்துக்கள் அக்கா!!//

  நன்றி ஹுஸைனம்மா. உங்கள் மகளிர்தினப் பதிவும் அருமை.

  ReplyDelete
 40. சுசி said...

  //அருமையா எழுதி இருக்கீங்க அக்கா.

  வாழ்த்துக்கள்.

  முத்துச் சரத்தில் இன்னொரு முத்து.//

  தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுசி!

  ReplyDelete
 41. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  //வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி..

  அருமையாக எழுதி இருக்கிறீர்கள் , வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெற பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

  ‘வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி’

  மிகச் சரியாகச் சொன்னீர்கள். அதுவும் முக்கியம். நன்றி முத்துலெட்சுமி.

  ReplyDelete
 42. மாதேவி said...

  //மகளிர்தின வாழ்த்துக்கள்!
  அருமையான பதிவு ராமலஷ்மி.//

  மிக்க நன்றி மாதேவி.

  ReplyDelete
 43. தமிழ் பிரியன் said...

  //இரட்டை வாழ்த்துக்கள்!

  மகளிர்தினத்த்திற்கும், சக்திக்கும்.. :-)//

  நன்றி நன்றி தமிழ் பிரியன்:)!

  ReplyDelete
 44. கோமதி அரசு said...

  //ராமலக்ஷ்மி,உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!

  அருமையான பதிவு.//

  மிக்க நன்றிம்மா!

  ReplyDelete
 45. அம்பிகா said...

  //மகளிர் தின வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  மகளிர் தினத்துக்கான மிகச் சிறந்த இடுகை.//

  மிகவும் நன்றி அம்பிகா!

  ReplyDelete
 46. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  //மகளிர் தின வாழ்த்துகள் ராமலட்சுமி மேடம்.

  மேலும்மேலும் சிற‌க்க என்னுடைய வாழ்த்துகள்.//

  வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்டார்ஜன்!

  ReplyDelete
 47. நசரேயன் said...

  //மகளிர் தின வாழ்த்துகள்//

  மிக்க நன்றி நசரேயன்!

  ReplyDelete
 48. வருண் said...

  //***சதுரங்கப் பலகையில் எவருக்கும் இல்லாத சக்தி ராணிக்குதான் தரப்பட்டுள்ளது. மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்? ராஜாவைக் காப்பாற்ற.***

  Honestly, எனக்கு சதுரங்க ராஜாவைப் பார்த்தால் பாவமாகவும், ராணியைப் பார்த்தால் பொறாமையாகவும் இருக்கும்ங்க! :)//

  பாவமாகவா..? சரிதான்:)!

  // மகளிர்தின வாழ்த்துக்கள்! :)//

  நன்றி வருண்!

  ReplyDelete
 49. கிரி said...

  //மகளிர் தின வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  உங்களின் வழக்கமான பதிவை போல இல்லாமல் கொஞ்சம் காரம் அதிகமாக இருப்பது போல தோன்றுகிறது.. நன்றாக உள்ளது.//

  காரசாரமாக இருக்கவேண்டுமென நினைத்து எழுதவில்லை:)! கடந்த வருடம் பெண்களுக்கு உரிய உரிமைகளைத் தந்ததால் உலகம் சுபிட்சமானது என்றுதானே எழுதியிருந்தேன். இப்போது மறுபக்கத்தையும் அலச வேண்டுமில்லையா?

  எத்தனையோ திறமைசாலிகள் வேகமாக முன்னுக்கு வந்தபடியே இருக்கையில் ஏதோ ஒரு புள்ளியில் பெண் என்பதனால் தேங்கி நின்றுவிடுவதை பல இடங்களில் பார்க்கிறோமே. அந்த ஆதங்கத்தைதான் பகிர்ந்து கொண்டுள்ளேன்!

  இங்கே குறிப்பிட்டிருக்கும் சில பிரச்சனைகளில் பெண்களுக்கு அனுசரணையாக நடக்கும் குடும்பத்தினரும் அலுவலகத்தினரும் இருக்கவே செய்கிறார்கள், ஆனால் மிக அபூர்வமாக. அந்த சதவிகிதம் கூடவேண்டும் என்பதுவும்தான் என் ஆசை.

  கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கிரி:).

  ReplyDelete
 50. ஸ்ரீராம். said...

  //நன்றாக அலசி எழுதி இருக்கிறீர்கள்..பாராட்டுக்கள். சக்தி 2010 விகடன்.காம் முகப்பு ஆகியவற்றுக்குப் பாராட்டுக்கள்//

  மிக மிக நன்றி ஸ்ரீராம்!

  ReplyDelete
 51. மின்னஞ்சலில்..

  //Hi Ramalakshmi,

  Congrats!

  Your story titled 'சதுரங்கப் பலகையில் சர்வ சுதந்திரமாய்...- விகடன்.காமின் சக்தி 2010-ல்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 8th March 2010 12:35:02 PM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/199234

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team//

  தமிழ் மணத்தில் வாக்களித்த பத்து பேருக்கும் தமிழிஷில் வாக்களித்த பதினெட்டு பேருக்கும் என் நன்றிகள்!

  ReplyDelete
 52. வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி

  ReplyDelete
 53. thenammailakshmanan said...

  //வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி//

  மிக்க நன்றி தேனம்மை:)!

  ReplyDelete
 54. நீண்டகாலமாகத் தேக்கி வைத்ததைக் கொட்டியிருக்கிறீர்கள். இருந்தாலும் அதை நாசூக்காகச் சொல்லியிருக்கிறீர்கள்...

  சதுரங்க ஆட்டத்தில் ராஜாவைக் காப்பாற்ற ராணிக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.

  சரிதான் ராஜா உசிரு ராணி கையில...

  ReplyDelete
 55. //நீண்டகாலமாகத் தேக்கி வைத்ததைக் கொட்டியிருக்கிறீர்கள். இருந்தாலும் அதை நாசூக்காகச் சொல்லியிருக்கிறீர்கள்...//

  வாங்க புளியங்குடி:)! நீண்டநெடுங்காலமாக நடந்து கொண்டேயிருப்பது எனச் சொல்லுங்கள்! சமீபகாலமாகப் பார்த்ததும் கவனத்துக்கு வந்தவையும் ஏராளம். இப்போது வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகரித்துவிட்ட சூழலில் இந்தப் பிரச்சனைகள் முக்கியத்துவம் தரப்பட்டு ஆராயப்படவேண்டியது அவசியம் என்று தோன்றிற்று.

  //சதுரங்க ஆட்டத்தில் ராஜாவைக் காப்பாற்ற ராணிக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.//

  அதிகாரம் என்பது சரியா? சுதந்திரம் என்ற பெயரில்.., ஆனால் கண்ணுக்குத் தெரியாத சங்கிலியுடன்.., ஏன் என்கிறேன்.

  //சரிதான் ராஜா உசிரு ராணி கையில... //

  புரிஞ்சா சரிதாங்க:)! ராசா இங்கே குடும்பம், பணியிடம் மற்றும் சமூகமும்தான்:)!

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புளியங்குடி!

  ReplyDelete
 56. பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 57. பனித்துளி சங்கர் said...

  // பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்!//

  நன்றி சங்கர்!

  ReplyDelete
 58. மகளிர் தின வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 59. மகளிர் தின வாழ்த்துகள் சகோதரி!

  சக்தி 2010ல் இடம் பெற்றதற்க்கும் வாழ்த்துகள்!


  //
  பெண் சர்வ சுதந்திரமாக ஓடுவதுபோலத்தான் ஓடுகிறாள் எட்டுத்திக்கிலும், காலில் பிணைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத சங்கலியுடன்
  //

  ஆமாம் சத்தியமான உண்மை. மறுக்க எவராலும் முடியாது!

  முத்துச் சரத்தின் முத்து அருமை!

  ReplyDelete
 60. RAMYA said...

  //மகளிர் தின வாழ்த்துகள் சகோதரி!

  சக்தி 2010ல் இடம் பெற்றதற்க்கும் வாழ்த்துகள்!//

  //ஆமாம் சத்தியமான உண்மை. மறுக்க எவராலும் முடியாது!//

  ‘சக்தி’ நீங்கள் சொன்ன பிறகு அப்பீல் ஏது? வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ரம்யா!

  ReplyDelete
 61. பெண்கள் என்பதற்காக மட்டம் தட்டுவதை துணிச்சலுடன் எதிர்ப்பவர்கள் திமிர்பிடித்தவள் என்ற பேரை சுமக்கிறார்கள். சில ஜொள் பார்ட்டிகள் பெண்களுக்கு கொடுக்கும் கூடுதல் சலுகைகளால் வேறு மாதிரியான அவப்பெயரையும் சுமக்கிறார்கள். ஆனால் இவை இரண்டையுமே பெண்கள் விரும்புவதில்லை. ஒரு மனுஷியாக அடையாளம் காணப்படுவதை மட்டுமே எதிர் பார்க்கும் பெண்கள்தான் மிக மிக அதிகம்.

  குழந்தை பிறப்பு, வளர்ப்பு போன்ற காரணங்களுக்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் விடுப்பு என்பது சலுகை அல்ல. உரிமை.அதுவும் வெளியில் வேலைக்கு செல்லும் காரணத்தால்தான். அதே சமயம் வீட்டில் இருக்கும் பெண்கள் குழந்தை பராமரிப்புடன் வழக்கமான வேலைகளையும் லாவகமாக செய்து முடிக்கும் அழகு இருக்கிறதே...அதன் பின்னால் உள்ள வேதனைகளை வெளியில் சொல்ல முடியாமல் குழந்தைக்காக இன் முகத்துடன் ஏற்றுக்கொள்பவள்தான் பெண். இதை யாராவது மறுக்க முடியுமா?

  ReplyDelete
 62. திருவாரூரிலிருந்து சரவணன் said...
  // ஒரு மனுஷியாக அடையாளம் காணப்படுவதை மட்டுமே எதிர் பார்க்கும் பெண்கள்தான் மிக மிக அதிகம்.//

  //குழந்தை பிறப்பு, வளர்ப்பு போன்ற காரணங்களுக்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் விடுப்பு என்பது சலுகை அல்ல. உரிமை. அதுவும் வெளியில் வேலைக்கு செல்லும் காரணத்தால்தான்.//

  உண்மை. விரிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சரவணன்.

  ReplyDelete
 63. ஆதங்கத்துடன் அங்கலாய்ப்பு...இடையே இழையோடும் சிறு பெருமிதம்...அருமை ராமலக்ஷ்மி..

  ReplyDelete
 64. மிக மிக அருமையான பதிவு. அழகாக அழுத்தமாக பெண்ணின் யதார்த்த நிலைகளைக் கூறி உள்ளீர்கள்.

  /*மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்? ராஜாவைக் காப்பாற்ற. வாழ்க்கை சதுரங்கத்தில் ராஜாவாகக் குடும்பமோ பணியிடமோ இருக்க, பெண் சர்வ சுதந்திரமாக ஓடுவதுபோலத்தான் ஓடுகிறாள் எட்டுத்திக்கிலும், காலில் பிணைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத சங்கலியுடன்.
  */
  முத்தாய்ப்பாக கூறிஉள்ளதும் மிக உண்மை.

  ReplyDelete
 65. உங்களது பெண்ணியம் குறித்த கட்டுரைகள் மிக நியாயமான மொழியில் மனதைத்தொடுவதாக, அழுத்தமாக அமைகின்றன. யாரும் போட்டிக்காக கூட மாற்றுக்கேள்வி கேட்கமுடியாத அளவில் இருக்கின்றன. வாழ்த்துகள். தொடர்க சேவை.

  விமானிகள் குறித்த பகுதிகள் புல்லரிப்பதாக இருந்தது. இதர பகுதிகளில் சொல்லப்பட்டதும் கச்சிதம்.

  ReplyDelete
 66. பாச மலர் said...

  //ஆதங்கத்துடன் அங்கலாய்ப்பு...இடையே இழையோடும் சிறு பெருமிதம்...அருமை ராமலக்ஷ்மி..//

  ஆமாம் பாசமலர், ஆதங்கம் பெருமிதம் இரண்டுமேதான்:)! அதைக் கவனித்துக் குறிப்பிட்டதற்கு நன்றிகள்!

  ReplyDelete
 67. அமுதா said...

  //மிக மிக அருமையான பதிவு. அழகாக அழுத்தமாக பெண்ணின் யதார்த்த நிலைகளைக் கூறி உள்ளீர்கள்.//

  நன்றி அமுதா.

  //முத்தாய்ப்பாக கூறிஉள்ளதும் மிக உண்மை.//

  ஒத்த கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 68. ஆதிமூலகிருஷ்ணன் said...

  //உங்களது பெண்ணியம் குறித்த கட்டுரைகள் மிக நியாயமான மொழியில் மனதைத்தொடுவதாக, அழுத்தமாக அமைகின்றன. யாரும் போட்டிக்காக கூட மாற்றுக்கேள்வி கேட்கமுடியாத அளவில் இருக்கின்றன. வாழ்த்துகள். தொடர்க சேவை.

  விமானிகள் குறித்த பகுதிகள் புல்லரிப்பதாக இருந்தது. இதர பகுதிகளில் சொல்லப்பட்டதும் கச்சிதம்.//

  உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி ஆதி. மிக்க நன்றி!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin