வியாழன், 31 டிசம்பர், 2015

நெல்லை ஓவியர் மாரியப்பன் படைப்புகள் - 2015 பெங்களூர் சித்திரச் சந்தை - பாகம் 2

2015 பெங்களூர் சித்திரச் சந்தை (பாகம் 1) ‘இங்கே


நெல்லையைச் சேர்ந்த ஓவியர் மாரியப்பனின் படைப்புகளை ஒவ்வொரு வருடமும் தனிப்பதிவுகளாகப் பகிர்ந்து வருகிறேன். அவற்றுக்கான இணைப்புகளைப் பதிவின் இறுதியில் தந்திருக்கிறேன்.


இந்த முறை நான் சென்றது பின் மாலை வேளையில். இவரது ஓவியங்களைக் காட்சிப் படுத்தியிருந்த இடத்தை நான் அடைந்த பொழுது இருட்ட ஆரம்பித்து விட்டிருந்தது. ‘இத்தனை தாமதமாக வருகிறீர்களே. பெரிய அளவில் வரைந்த பல ஓவியங்கள் விற்று போனதுடன், எடுத்தும் சென்று விட்டார்களே’ என ஆதங்கப்பட்டார். பார்க்கும் வாய்ப்பு நழுவிப் போனதேயென ‘நீங்கள் படம் எடுத்திருப்பீர்களே. காட்டுங்களேன்’ என்றேன் ஆர்வமாக. பதிலுக்கு

புதன், 30 டிசம்பர், 2015

பெங்களூர் சித்திரச் சந்தை 2015 ( Chitra Santhe )

இந்த வருடத்தின் முதல் மாதம் முதல் ஞாயிறில் நடைபெற்ற நிகழ்வைப் பற்றி வருடம் முடிய இரு தினங்கள் இருக்கும் போதாவது பகிர்ந்திட வேண்டாமா? Better late than never.. இல்லையா:)?

4 ஜனவரி 2015. சித்ரகலா பரீக்ஷத் வளாகத்திலும், இரண்டு கிலோ மீட்டர் நீளமுள்ள குமர க்ருபா சாலையிலும், அதன் பக்கவாட்டு சாலைகளிலுமாக மொத்தம் 1200 ஓவியக் கலைஞர்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுமிருந்து வந்து தங்கள் படைப்புகளைக் காட்சிப் படுத்தியிருந்தார்கள். தீவிரக் கலை இரசிகர்கள், வேடிக்கை பார்க்க வந்தவர்கள், தங்களையும் தங்கள் குழந்தைகளையும் ஓவியமாகத் தீட்டிக் கொள்ள ஆர்வம் காட்டியவர்கள், சிறு வியாபாரிகள் என அந்த சாலையில் அன்றைய தினம் கால் பதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தைத் தாண்டி விட்டதெனில் நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும்.

#1

#2
சித்ரகலா பரீக்ஷத் வளாகத்தின் உள்ளே..


2012_ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் சென்று விட்டேன். வருடத்திற்கு வருடம் அலைமோதும் கூட்டம் அதிகரித்தபடியேதான் உள்ளது. முந்தைய வருடப் பகிர்வுகள் “சித்திரம் பேசுதடி” எனும் பகுப்பில் (label) தேடினால் கிடைக்கும்!  இவ்வருடம் எடுத்த படங்களில் சிலவற்றை வரிசையாகப் பகிருகிறேன். விளக்கங்கள் தேவையில்லை சித்திரங்களே பேசுகையில்..

#3
விதம் விதமாக வி்நாயகர்..

வெள்ளி, 25 டிசம்பர், 2015

கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்!

#1 Jingle Bells
ண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறுஸ்துமஸ் நல்வாழ்த்துகள் :)! விழாக்காலப் படங்கள் மேலும் சில..

JINGLE BELLS

#3 நட்சத்திரங்கள் மின்னும் கிறுஸ்துமஸ் மரம்

புதன், 23 டிசம்பர், 2015

முன்னொரு காலத்தில்.. - கேப்ரியல் ஒகாரா


கனே, ஒரு காலத்தில்
அவர்கள் மனதாரச் சிரித்தார்கள்
கண்களால் புன்னகைத்தார்கள்
ஆனால் இப்பொழுதோ
சிரிப்பதாய்ப் பற்களை மட்டுமே காட்டுகிறார்கள்
பனிக் கட்டியைப் போல் உறைந்த அவர்களது கண்கள்
என் நிழலுக்கு அப்பால் எதையோ தேடுகின்றன.

தங்கள் இதயத்தால் அவர்கள் கைகளைக் குலுக்கிய
காலம் ஒன்று இருந்தது
அது மறைந்து விட்டது.

திங்கள், 21 டிசம்பர், 2015

வைகுண்ட ஏகாதசி

மார்கழி மாதத்தில் வருகிற வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி ஆகக் கொண்டாடப்படுகிறது.

#1 மாலே மணிவண்ணா..


திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுமென்பது நம்பிக்கை.

#2
..பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே..
-திருப்பாவை


முன்னிரவில் உறங்காது இருந்து இந்நாளில் திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர்.

#3 கோபுர தரிசனம்

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

தக்கனப் பிழைத்தல் - பறவை பார்ப்போம் (5)

மாடப்புறாக்கள், அழகு மயில்கள், நீந்தும் நாரைகள், சேவல், பருந்து  எனப் பல்வேறு சமயங்களில் ஃப்ளிக்கரில் பதிந்தவை இந்த ஞாயிறின் படத் தொகுப்பாக...

#1 ‘விடிந்தது பொழுது..’

#2 “உள்ளே வரலாமா?”


#3 மீனைத் தேடி.. 
நாரைகள்

தக்கனப் பிழைத்தல் 

#4 காலை உணவு..

செவ்வாய், 15 டிசம்பர், 2015

தனித்துவங்கள் - நவீன விருட்சத்தில்..

காட்டுத் தீக்கு ஒப்பாக
இரத்தச் சிகப்பு இலைகளோடு
கனன்றிருந்த விருட்சத்தின் இலைகள்
பழுப்புக்கு மாறத் தொடங்கியிருந்தன
இளவேனிற்கால முடிவில்.

ஒவ்வொன்றாய் உதிர்ந்து
ஒற்றை இலையோடு
ஓரிருநாள் காட்சியளித்த விருட்சத்தின்
கடைசி இலையும்
விடை பெற்றுப் பறக்கலாயிற்று.

சனி, 12 டிசம்பர், 2015

அவசர காலத்தில்..

மாமழையில் சிக்கிக் கொண்டபோது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் கற்க நேர்ந்த பாடங்களென வந்த ‘வாட்ஸ் அப்’ பகிர்வுகள் இன்னும் சில. மீண்டும் இப்படியொரு நிலை  வேண்டாவே வேண்டாம் என்றாலும் சில விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே. அதே போல உணர்ந்து கொள்ளவும் சில உண்மைகள்..

இன்வெர்டரிலிருந்து நேரடியாக மொபைலுக்கு சார்ஜ்:

மின் தடையின் காரணமாக மொபைலில் சார்ஜ் இல்லாமல் முற்றிலுமாக நான்கு நாட்களுக்கு வெளியுலகோடு தொடர்பு துண்டிக்கப்பட்டு மாட்டிக் கொண்டவர்கள் பலபேர். அவர்கள் நிலைமை என்னாயிற்றோ என உறவினர் நண்பர்களின் பதட்டம் ஒரு புறம்.

புதன், 9 டிசம்பர், 2015

மழைக்குப் பின்.. சுகாதாரம்.. சில குறிப்புகள்..

வெள்ள நீர் வடிந்தாலும் சென்னையின் பல பகுதிகளில் இன்னும் சாலைகள் சுத்தம் செய்யப்படாமல், குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும்,.மாசடைந்த சூழலில் மக்கள் பயந்துபடியே இருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி தேவையான மருந்துகள் கிடைக்காமல், இன்னும் மின்சாரம் திரும்பாமல், BSNL, Airtel சரியாகாமல் எங்கும் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலும் பலர் சிரமத்தில் இருக்கிறார்கள். இவ்வேளையில் மக்கள் தங்கள் உடல் நலத்தைக் காத்துக் கொள்ளவும், நீரினால் பரவக் கூடிய நோய்களைத் தடுக்கவும் அறிவுறுத்தப்பட வேண்டும். சுகாதாரத்தில் காட்ட வேண்டிய அக்கறை பற்றி வாட்ஸ் அப்பில் ஆங்கிலத்தில் பகிரப் பட்ட குறிப்புகளைத் தமிழாக்கம் செய்து இங்கு அளித்திருக்கிறேன். இவற்றில் பல மருத்துவர்களைக் கலந்தாலோசித்து தரப்பட்டவை.
முதலில் மும்பையைச் சேர்ந்த  மருத்துவர் ஒருவர் பகிர்ந்ததைப் பார்க்கலாம்:

திங்கள், 7 டிசம்பர், 2015

வெள்ளமும் உதவும் உள்ளங்களும்..

பெய்து முடித்த பெருமழை மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டிருக்கிறது. உறவுகள், நட்புகள் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்ட அனுபவங்களும், செய்திகள் மூலம் அறியவரும் மக்கள் படும் இன்னல்களும் கலவரத்தை அளிப்பதாக உள்ளன. அரசோ, ராணுவமோ யார் என்ன செய்கிறார்கள் எனப் பாராது நம்மால் என்ன முடியும் என ஓடி ஓடி உதவிக் கொண்டிருக்கிறார்கள் தன்னார்வலர்கள். பிற ஊர்கள், மாநிலங்களிலிருந்தும் உதவிப் பொருட்களோடு விரைந்து கொண்டிருக்கிறார்கள். நேரில் சென்றோ அல்லது நம்பகமான குழுவினர் மூலமோ பாதிப்படைந்தவர்களுக்கு சரியாகச் சென்று சேர்வதில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறார்கள். பெங்களூரிலும் அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் நண்பர் குழுக்கள் பொருட்கள், மற்றும் உடைகளை வீடு வந்து வாங்கிச் செல்கிறார்கள். உதவிக் கொண்டிருக்கும் அனைவரும், சிரமத்தில் இருப்பவர்களின் பலதரப்பட்ட தேவைகளையும் மனதில் கொண்டு கவனத்துடன் செயலாற்றி வருகிறார்கள். மனிதமும், சகோதரத்துவமும் மரித்துவிடவில்லை என்பது இப்பேரிடர் காலத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் பெரிய ஆறுதல்.

உதவி வரும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

வர்களில் சிலரோடு கைகோர்க்க விருப்பமா?

புதன், 2 டிசம்பர், 2015

சென்னை மழை - மீட்புப் பணி - பிரார்த்தனைகள்!

#1

சென்னையிலும், தமிழ்நாட்டின் கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் மழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கில் மாட்டிக் கொண்டு மக்கள் படுகிற அவதி மனதைப் பதைக்க வைப்பதாக இருக்கிறது. இருப்பிடம், உணவு, மின்சாரம், உடல்நலம், பாதுகாப்பு என எல்லாமே கேள்விக் குறியாகி விட்டுள்ளது. இந்த நேரத்தில் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு மனித நேயத்துடன் களம் இறங்கி, உதவி வருகிற அத்தனை நல்லுள்ளங்களுக்கும் வந்தனங்கள்.

உரிய நேரத்தில் உதவி பல இடங்களுக்கு கிடைக்கவில்லை என்ற செய்திகள் வந்தபடி இருந்தாலும் மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளவர்கள் காட்டி வரும் அர்ப்பணிப்பு நெகிழ வைப்பதாகக் குறிப்பிட்டார் பின்வரும் படங்களை தன் மொபைலில் எடுத்து அனுப்பியிருந்த நண்பர்.

#2

ஞாயிறு, 29 நவம்பர், 2015

அருட்பெருஞ்சோதி - திருக்கார்த்திகை தீபங்கள்

தீபங்கள் ஏற்றிடும் திருக்கார்த்திகை மாதப் பகிர்வாக,
சுடர்விடும் விளக்குகளின் அணிவரிசை!
சமீபத்தில் ஃப்ளிக்கரில் பதிந்த மற்றும் இந்த வாரத்தில் எடுத்த படங்கள் ஆறு!

#1
ஓம் கஜலக்ஷ்மியே போற்றி


#2
ஓம் அன்னப் பூரணியே போற்றி!

# 3
ஓம் தீப ஒளியே போற்றி!

ஞாயிறு, 22 நவம்பர், 2015

எதிலும் அவன் குரலே.. - ராதா கிருஷ்ணா!

"கார்த்திகை மாதம் இறைவன் தாமோதரனுக்கானது. மாதம் முழுவதும் அகல் விளக்கேற்றி ராதா கிருஷ்ணாவின் ஆசிகளைப் பெற்றிடுங்கள்’ எனும் குறிப்போடு நான் ஃப்ளிக்கரில் பதிந்த (இப்பதிவின் ஆறாம்) படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார் திருமதி. மேனகா(மீனாட்சி) சுப்புரத்தினம். அவருக்காகவும் உங்களுக்காகவும் சமீபத்தில் எடுத்த ராதா கிருஷ்ணா படங்களின் தொகுப்பு...!

#1 ராதையின் நெஞ்சமே..


#2 கண்ணனுக்குச் சொந்தமே..

#3 ராதா கல்யாண.. வைபோகமே..

புதன், 18 நவம்பர், 2015

தப்பித்தல் - நவீன விருட்சத்தில்..


ஞ்சள் கண்கள்.
சின்னக் கொம்புகளில்
எப்போதோ தீட்டப்பட்ட
சிகப்பு வர்ணத்தின் மிச்சங்கள்.
பால்வெள்ளைக் கழுத்துக்கு
அழகு சேர்த்த

செவ்வாய், 17 நவம்பர், 2015

கார்த்திகை மைந்தன்.. திருச்செந்தூரின் கடலோரத்தில்..

ந்த சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் கோபுர தரிசனம், யானையின் ஆசிர்வாதம், உற்சவ மூர்த்தி, தங்கத்தேர் மற்றும்.. அலை கடல்.. படங்கள் பத்தொன்பது.  3 மாதங்களுக்கு முன்னர் சென்றிருந்த போது எடுத்தவை..

#1
திருச்செந்தூரின் கடலோரத்தில்..

#2
ராஜ கோபுரம்

#3
கருணைக் கடலே கந்தா போற்றி

#4
ஓம் விநாயகா

ஞாயிறு, 15 நவம்பர், 2015

சனி, 14 நவம்பர், 2015

நேருவின் ரோஜாக்கள் - குழந்தைகள் தின வாழ்த்துகள்!

“குழந்தைகள் தோட்டத்து மொக்குகளைப் போன்றவர்கள். அன்பாகவும், கவனமாகவும் பேணி வளர்க்கப்பட வேண்டியவர்கள். நாளைய குடிமக்களான அவர்களே நம் நாட்டின் எதிர்காலம்” - நேருஜி

கிளாஸிக் கருப்பு வெள்ளைப் படங்கள் ஒன்பதில் நெஞ்சை அள்ளும் குழந்தைகள்... நேருவின் ரோஜாக்கள்..

#1

#2

#3
#4

செவ்வாய், 10 நவம்பர், 2015

'அந்திமழை' தீபாவளி சிறப்பிதழின் காமிரா கண்களில்.. சாமான்ய மனிதர்கள்..


வம்பர் 2015, 'அந்திமழை'யின் நடுப்பக்கத்தில், 'காமிரா கண்கள்' பகுதியில் என்னைப் பற்றிய குறிப்புடன், நான் எடுத்த படங்கள் ஏழு ..!

#பக்கம் 34


#பக்கம் 35

திங்கள், 9 நவம்பர், 2015

2015 கல்கி தீபாவளி மலரில்..

298 பக்கங்களுடன் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், ஒளிப்படங்கள், ஓவியங்களுடன் மங்கையர் மலர், கோகுலம் பகுதிகளையும் உள்ளடக்கி வெளியாகியுள்ள கல்கியின் பவள விழா ஆண்டு தீபாவளி மலர், எம். எஸ் அவர்களின் நூற்றாண்டு சிறப்பிதழும் ஆகும். ம.செ.யின் ஓவியம் மற்றும் சிறப்புக் கட்டுரையோடு ஃபோட்டோ பெட்டகத்தில் அவரது அரிய பல புகைப்படங்களும் 3 பக்கங்களுக்கு இடம் பெற்றுள்ளன.

ந்தாவது ஆண்டாக 2015 தீபாவளி மலரிலும் நான் எடுத்த ஒளிப்படம்..
தலைமை உதவி ஆசிரியர் அமிர்தம் சூர்யா அளித்திருக்கும் கேப்ஷனுடன்..,
அவருக்கும் கல்கி குழுமத்திற்கும் என் நன்றி.

# பக்கம் 181_ல்..

செவ்வாய், 3 நவம்பர், 2015

ரகசியக் கணக்கு - மல்லிகை மகளில்..

2015 நவம்பர் இதழில்..
கிளம்பிய மண்வாசனையைத் தொடர்ந்து
சுழன்று வீசிய ஐப்பசிக் காற்றுக்கு
தலையைத் திருப்பியவனின்
செவியை உரசிச் செல்கிறது
பள்ளி மைதானத்திலிருந்து
பறந்து வந்த சிக்ஸர் பந்து.

நெடுநாள் வசித்த வேப்பமரப் பொந்தினை
கிளியிடம் இழந்த மைனாவின் கூச்சலால்
கலைகிற ஞாயிறு பகலுறக்கம்

ஞாயிறு, 1 நவம்பர், 2015

தேவதைகள் வாழும் பூமி

#1  2015 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று ஃப்ளிக்கரில் பதிந்த படம்:

நீட்சியாக மேலும் சில குட்டித் தேவதைகள்:


#2 அன்னக்கிளி மடியில் செல்லக்கிளி


# மகிழ்வலை

#3 பூவினும் மெல்லிய பூங்கொடி

புதன், 28 அக்டோபர், 2015

சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் (8,9) - சொல்வனம் இதழ்: 138



பட்டத்தினால் என்ன பயன்?

அவர்களால் அடைய முடிவதில்லை
அழகானவர்கள் தீச்சுடரில் மரிக்கிறார்கள்-
தற்கொலை மாத்திரைகள், எலிப் பாஷாணம், கயிறு 
எதுவாக வேண்டுமானலும் இருக்கட்டும்...

செவ்வாய், 27 அக்டோபர், 2015

எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் நினைவஞ்சலிக் கூட்டம்

அஞ்சலிகள்!
ழுத்தாளரும் கலை, இலக்கிய விமர்சகருமான திரு வெங்கட் சாமிநாதன் கடந்த புதன் கிழமை, 21 அக்டோபர் 2015 அன்று அதிகாலையில் காலமானார். அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் விதமான ஓர் அஞ்சலி நிகழ்ச்சியை எழுத்தாளர் பாவண்ணன் நண்பர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்திருக்கிறார். அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

மூன்று தமிழும் ஓரிடம் நின்று..

ஒன்று.. இரண்டு.. மூன்று..

பார்த்ததும் பளிச் எனத் தெரிய வேண்டும் படத்தில்..

இதுதான் ‘தமிழில் புகைப்படக் கலை’ தளம் இம்மாதப் போட்டிக்கு அறிவித்திருக்கும் தலைப்பு..

சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

#1 சுற்றிச் சுற்றி வந்தீக..

#2 மைசூர் அரண்மனையின் தெற்குக் கோபுரங்கள்


#3 இதழ் மூன்று.. துளிர் மூன்று..

#4 கதிரொளியில் மொட்டுக்கள்..

புதன், 14 அக்டோபர், 2015

மனிதம்.. அன்பு.. அமைதி.. - மகாத்மா காந்தியின் பொன்மொழிகள் 10

#1 எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு உயிர்த்திருக்கிறது.

#2 என் வாழ்க்கையே எனது அறிவுரை.

#3 அமைதியை அடைவதற்கென எந்தப் பாதையும் கிடையாது. அமைதியேதான் பாதை.


#4 கண்ணுக்கு கண் எனும் கொள்கை,

வெள்ளி, 9 அக்டோபர், 2015

கரையாத கணபதி பப்பா - பெங்களூரு, சாங்கி ஏரி


ரு வாரங்களுக்கு முன், ஒரு ஞாயிறு மாலை பெங்களூர் மல்லேஸ்வரத்தில் இருக்கும் சாங்கி ஏரிக்கு சென்றிருந்தேன். அதற்கு முந்தைய வாரத்தில் அந்த ஏரியைக் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை செய்தித்தாளில் படிக்க நேர்ந்ததும் செல்லும் ஆவல் எழுந்ததற்கு ஒரு காரணம்.

#2

பசுமை சுருங்கிக் கொண்டே வருகிற இந்தத் தோட்ட நகரில் பல வித உயிர்களுக்கும் மரங்களுக்கும் புகலிடமாக இருந்து வருகிறது

வியாழன், 1 அக்டோபர், 2015

அலங்கார பலூன்களும் விபரீத விளைவுகளும்..


லுவலக விழாக்கள், குடும்ப நிகழ்வுகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இவற்றை A to Z கவனித்து  நடத்தித் தருகிறோம்’ என வாக்குத் தருகிற, இவெண்ட் ஆர்கனைசர் எனப்படுகிற விழா ஏற்பாட்டளர்களிடம் பொறுப்பைக் கொடுத்து விடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் மக்கள். தவறில்லை. ஆனால் ஒப்படைக்கும் பொறுப்பை நேர்மையாகச் செயல்படுத்துவார்களா என்பதைத் தீர விசாரிப்பது மிக மிக அவசியம்.

புதன், 23 செப்டம்பர், 2015

உனக்கான நாள்

#1
ஆசையின் தீவிரம், கனவின் அளவு, போகிற போக்கில் ஏமாற்றங்களைச் சமாளிக்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது, வெற்றியின் அளவு._ Robert Kiyosaki
#2
இதயத்தில் சற்றே இடம் வைத்திருங்கள், நினைத்தும் பார்த்திராத ஆச்சரியங்களுக்கு. _Mary Oliver
#3 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin