திங்கள், 30 ஜூன், 2014

அஞ்சலிகள்

என் அன்பு அத்தையும், பதிவரும், எழுத்தாளரும் ஆன கோமா என்கிற திருமதி. கோமதி நடராஜன் அவர்கள் உடல்நலக் குறைவினால் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்கள். அவர்களின் ஆன்ம சாந்திக்கு வேண்டிக் கொள்வோம்.


சிலரால் நம் வாழ்வில் ஏற்படும் வெற்றிடத்தை எவராலும் எதனாலும் நிரப்ப இயலாது:(!


வெள்ளி, 27 ஜூன், 2014

அர்த்தமுள்ள மெளனம்

1. நம் மெளனத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் நம் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை.

2. மெளனம் எல்லா சமயங்களிலும் சம்மதத்துக்கு அறிகுறி ஆகாது. புரிதலற்ற மனிதரோடு போராடுவது வீண் என்கிற அயர்வினாலும் மெளனம் சாதிக்க நேரும்.

3.சுருக்கமாக இருந்தாலும் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும், கனிவான வார்த்தைகள்!

புதன், 25 ஜூன், 2014

கருணை கொள்ளுங்கள்; காரணமும் விளைவும் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (5,6)

கருணை கொள்ளுங்கள்

எப்போதும் மற்றவரின் கருத்துகளைப்
புரிந்து கொள்ளவே
கேட்டுக் கொள்ளப்படுகிறோம்
அவை என்னதான்
காலத்துக்குப் பொருந்தாமல்
முட்டாள்தனமானதாய்
வெறுப்பூட்டக் கூடியதாய் இருந்தாலும்.

சனி, 21 ஜூன், 2014

ராகு, கேது பெயர்ச்சி - ராஜகோபுர தரிசனம் - திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம்

ராகு-கேது பெயர்ச்சி:

இன்று காலை இந்நேரமான 11 மணியளவில் ராகு பகவான் துலா ராசியிலிருந்து கன்னி ராசிக்குள்ளும், கேது பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்குள்ளும் நுழைகின்றனர். ராகு ஸ்தலமான கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரத்திலும், கேது பரிகாரத் தலமான கீழப்பெரும்பள்ளத்திலும் இன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இருவாரங்களுக்கு முன் ஒருநாள் இரு ஸ்தலங்களுக்கும் சென்றிருந்த போது எடுத்த படங்களில் பதினாறை இன்று பகிருவது பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன்.

 #1 திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்:
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சிவ ஸ்தலமான இக்கோவிலின் மூலவர் நாகநாதசுவாமி. கிரி குஜாம்பிகா எனும் பெயரில் வீற்றிருக்கிறார் பார்வதி. அம்மன் சன்னதியில் பார்வதியின் இருபக்கங்களிலுமாக லட்சுமியும் சரஸ்வதியும் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்கள். முப்பெரும் தேவியர் ஒரே சன்னதியில் காட்சி தருவது இங்குதான் என்றார்கள். கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகியோருடன்  மங்கள ராகுவாகக் காட்சி அளிக்கின்றார் ராகு பகவான். மனித முகத்தோடு காட்சி தருவது இங்கு மட்டுமே என்றும் சொல்கிறார்கள்.

கோவிலுக்குள் செல்லும் முன்னரே கிடைத்தது உற்சவ மூர்த்திகளின் தரிசனமும் கொடியேற்றமும்.

#2 கொடியேற்றத்துக்கான ஆயத்தங்கள்:
#3 உற்சவ மூர்த்திகள்

புதன், 18 ஜூன், 2014

நீரும் நெருப்பும்

நீரும் நெருப்பும்.. நிலமும் காற்றும்..

பஞ்ச பூதங்களில் நான்கு பூதங்கள்!

இந்த நான்கு இயற்கை சக்திகளையும் படமாக்கக் கேட்டுள்ளார் இந்த மாத PIT போட்டிக்காக, நடுவர் ஆன்டன்.

*நீர்த்துளி முதல் சீறும் சமுத்திரம் வரை..
*வெப்பத்தில் வெடித்துப் போன நிலம் முதல் அழகாகத் தெரியும் எந்த நில அமைப்பும்..
*சீறும் தீக்குச்சி முதல் காட்டுத்தீ வரை..
* உருவமில்லாக் காற்றை உணர வைப்பதாக..

உங்கள் படங்கள் இருக்க வேண்டும் என்கிறார். குறிப்பாக, இயற்கை சக்தி பார்த்ததும் ஈர்ப்பதாக அமைந்திருக்க வேண்டும்.

அறிவிப்புப் பதிவு இங்கே.

மாதிரிக்காகவும் ஒரு நினைவூட்டலாகவும் மேலும் சில படங்களை இங்கு பகிருகிறேன். [கடைசி இரு படங்கள் தவிர்த்து மற்றவை புதியவை:). படங்கள் இரண்டும் மூன்றும் தலைப்புக்காகவே எடுத்தவை.]

#1 சிற்றருவியின் தீம்தனனா..

#2 காற்றலை இல்லையென்றால்..
#3 சுடர்த் தாமரை

வியாழன், 5 ஜூன், 2014

சுற்றுச்சூழல் காப்போம்! - கைக்கொண்டனஹள்ளி ஏரி, பெங்களூரு (பாகம் 1)

5 ஜுன். உலகச் சுற்றுச் சூழல் தினமாகிய இன்று கைக்கொண்டனஹள்ளி ஏரியில் எடுத்த சில படங்களையும், ஏரியின் சுற்றுச் சூழலைப் பராமரிக்க அவர்கள் வலியுறுத்தும், கடைப்பிடிக்கும் விதிமுறைகளையும் பகிருவது பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன்.

#1

#2

#3

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin