Tuesday, February 8, 2011

நவீன விருட்சத்தில்.. - அழகிய வீரர்கள்


மிகக் கவனமாக
கீழிருந்து ஆரம்பித்து
மெல்லத் தோள் வரைக்கும்
தோழமையாய் தொடர்ந்து
தலை தடவி
சாதுரியமாய் மூளை புகுந்து
அரவணைத்தது சாட்டை
புதுப் பம்பரத்தை
இறுக்கமாக..


அணைப்பின் கதகதப்பில்
கிடைத்த பாதுகாப்பு உணர்வில்
சிலிர்த்துப் பரவசமாகிய
பச்சிளம் பம்பரம்
களத்தில் இறங்கத் தயாரானது
துடிப்பாக..


இலாவகமாய் இழுத்துவிட்ட கயிறு
விலகி நின்று வேடிக்கை பார்க்க
வீரியமாய் சுழலாயிற்று
தன் வசீகரத்தில் தானே மயங்கி
பார்ப்பவர் வியக்கும் வண்ணமாக..


விசை குறைந்து சாயும்முன்
உடனுக்குடன் தூக்கி
உச்சிமுகர்ந்து பாராட்டி
ஒவ்வொரு ஆட்டத்துக்கும்
‘அழகியவீரன் நீ’யென ஆர்ப்பரித்து
அனுப்புகின்ற சாட்டையைத்
துதிக்கின்ற விசுவாசியாக..


காலமுள் சிரித்தபடி நகர
கயிற்றின் கணக்குகள்
புரியாமல் ஆடியோடியதில்
கூர்முனை மழுங்கி
வண்ணங்கள் சோபை இழக்க
வனப்பைத் தொலைத்துத்
தோற்கத் தொடங்கியது பம்பரம்
சபையிலே தள்ளாடி..


மழுங்கிய முனைக்கு
மருத்துவம் செய்யும் முனைப்போ
அதுவரையிலும் பெற்ற உழைப்புக்கு
இரங்கும் மனமோ
எப்போதும் கொண்டிராத சாட்டை
வேறு பளபளத்த பம்பரங்கள் தேடி..


ஆராதித்து வந்த தலைமையின்
அசல் முகங்கண்ட அதிர்ச்சியில்,
விசிறியடிக்கப்பட்ட விசுவாசி
விதியை நொந்தபடி..


இக்கணத்திலும்,
வட்டமிடும் பருந்துகளாய்
வான்வெளியை நிறைத்து
பசியோடு கருநாகச் சாட்டைகள்..


மாட்டுவதற்கென்றே
முட்டை ஓடு விட்டு வரும்
அறியாக் குஞ்சுகளாய்
பூமியெங்கும் அழகிய வீரர்கள்..!
***

முதன் முறையாக நவீன விருட்சத்தில், நன்றி நவீன விருட்சம்!

படம் நன்றி: இணையம்இந்தக் கவிதை ஜூன் 2011-ல் வெளியான நவீனவிருட்சம் சிற்றிதழ் பிரசுரத்துக்கும் தேர்வு செய்யப்பட்டிருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆசிரியருக்கு நன்றி!


82 comments:

 1. நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. எத்தனை ரசித்து எழுதி இருக்கீங்க.பாராட்டுகக்ள்.

  ReplyDelete
 3. இரண்டு தளத்தில் இயங்கும் கவிதை!

  நல்லாருக்கு சகா. வாழ்துகள்!

  ReplyDelete
 4. அருமையாக ஒப்புமை கொடுத்திருக்கீங்க...

  ReplyDelete
 5. முள்ளாய்க் குத்துகிறது வரிகள். உண்மை வருத்தும். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 6. உயிரையே பணயம் வைக்கும் வித்தை அவர்களுக்கே உரியது.நல்லதொரு கவிதை அக்கா !

  ReplyDelete
 7. பன்முகத்தன்மை கொண்ட கவிதை மா நன்று

  ReplyDelete
 8. எவ்வளவு அருமையான ஒப்பீடு!! நிஜமாகவே அசத்தலான கவிதை அக்கா.

  //மழுங்கிய முனைக்கு
  மருத்துவம் செய்யும் முனைப்போ
  அதுவரையிலும் பெற்ற உழைப்புக்கு
  இரங்கும் மனமோ
  எப்போதும் கொண்டிராத சாட்டை
  வேறு பளபளத்த பம்பரங்கள் தேடி..//

  அப்படியே நிஜத்தைத் தோலுரித்துச்சொல்கிற வரிகள்!

  வாழ்த்துக்கள் அக்கா!

  ReplyDelete
 9. முதன் முறையாக நவீன விருட்சத்தில், நன்றி நவீன விருட்சம்!


  .....அருமை, அக்கா... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. மிக அருமை ராமலெக்ஷ்மி.. பம்பரத்தை வேறு ரூபத்தில் இப்போதுதான் பார்த்தேன்..

  ReplyDelete
 11. மிக அருமை தோழி. கவிப்பார்வை அழகானது மட்டுமல்ல, வித்தியாசமானதும் கூட. தங்கள் வரிகள் இதனை மெய்ப்பிக்கின்றன. சொல்லாடலும் அதனூடே நீங்கள் தூவும் சில சிந்தனை விதைகளும் அழகு. ஒரு நற்கவிதையின் வீச்சு முடிவிலியில்... இக்கவிதையும்...

  வாழ்த்துகள்...

  ReplyDelete
 12. எல்லோருக்கும் பொருந்தும் அக்கா..

  ReplyDelete
 13. சுற்றும் பம்பரத்தில் சுழற்றிய கவிதை. நவீன விருட்சம்...பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. மிக அருமை ராமலெக்ஷ்மி..

  ReplyDelete
 15. //ஆராதித்து வந்த தலைமையின்
  அசல் முகங்கண்ட அதிர்ச்சியில்,
  விசிறியடிக்கப்பட்ட விசுவாசி
  விதியை நொந்தபடி..//

  unmaiyai uraikkirathu kavithai. vaalththukkal

  ReplyDelete
 16. அந்தக்காலத்தில் நாங்க (நான்)பம்பரத்தை தரையில் சுத்தாமல் நேரிடையாக (தரையில் சுத்தவிடுவதை பைப்பாஸ் பண்ணி)கையில் சுத்த விடுவேனாக்கும். :) நெசம்மாத்தாங்க!!

  ரொம்ப நல்ல சிந்தனைங்க, ராமலக்ஷ்மி! சாட்டையை "க்ரிட்டிக்" போலவும், பம்பரத்தை ஒரு "க்ரியேட்டர்" போலவும் சிந்திப்பது அருமை! என்னைப்போல ஆளையே இப்படி பாராட்ட வச்சுட்டீங்க!!!

  +2 ஓட்டுக்கள் போடலாம்னு ஆசை! ஆனால் +1 தான் அல்லவ்ட்! :))

  ReplyDelete
 17. அருமையான கவிதை. நவீன விருட்சத்துக்கும் வாழ்த்துகள்! :)

  ReplyDelete
 18. //மாட்டுவதற்கென்றே
  முட்டை ஓடு விட்டு வரும்
  அறியாக் குஞ்சுகளாய்
  பூமியெங்கும் அழகிய வீரர்கள்..!//

  சந்தர்ப்ப வாதிகளிடம் மாட்டும் அறியா குஞ்சுகள்.

  அறியா குஞ்சுகள் எப்போது விழித்துக்கொள்ளும்?

  அருமையான கவிதை ராமலட்சுமி.

  ReplyDelete
 19. நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. மிரட்டுகிறது கவிதை வார்த்தைகளில்!!
  எச்சரிக்கிறது உலகை அர்த்தங்களில்!!

  வாழ்த்துகள் அக்கா.

  ReplyDelete
 21. மிக அருமை மேடம். சாட்டையும் பம்பரமும் சில நிதர்சங்களின் குறியீடாக...

  ReplyDelete
 22. Hello ungaludaya pambaram nanragave suzhanrulladhu,aanal tamilakathil suzhazhavillaiye, saattai visiya vidham nanragave irunthadhu nanri vazhthukkal.

  ReplyDelete
 23. அடடா! அசத்தறீங்க!

  ||தன் வசீகரத்தில் தானே மயங்கி ||
  மிக அருமை!

  ReplyDelete
 24. மிக நல்ல கருத்துள்ள கவிதை.

  ReplyDelete
 25. மிக அருமையான படிமம்!! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 26. கவிதை களத்தி நின்று சுற்றுகிறது... நல்லாயிருக்குங்க,

  ReplyDelete
 27. மழுங்கிய முனைக்கு
  மருத்துவம் செய்யும் முனைப்போ
  அதுவரையிலும் பெற்ற உழைப்புக்கு
  இரங்கும் மனமோ
  எப்போதும் கொண்டிராத சாட்டை
  வேறு பளபளத்த பம்பரங்கள் தேடி..
  //

  ஆனா சாட்டையையும் காலம் கிழிக்கும்.... அப்போது அந்த சாட்டை மழுங்கிய பம்பரத்துக்கு கூட உதவாது... சரியாதான் சொன்னேனா?

  ReplyDelete
 28. நன்றி ராமலக்ஷ்மி.. நவீன விருட்சத்தில் உங்களது பம்பரம் குறித்த கவிதை என்னை மிகவும் பாதித்தது. உங்கள் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது அது. இன்னும் உங்கள் இந்த கவிதை குறித்து குறிப்பிட்டு பல நண்பர்களிடமும் பகிர்ந்திருக்கிறேன். எப்படியானாலும் பம்பரம் குறித்து அந்த உந்துதலில் பம்பரம் குறித்தே ஒரு கவிதை எழுதினேன்.நீங்கள் எழுதிய கவிதையை விட இன்னொன்று சிறப்பாக படைப்பது மிகவும் சிரமம்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. Rathnavel said...
  //நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 30. ஸாதிகா said...
  //எத்தனை ரசித்து எழுதி இருக்கீங்க.பாராட்டுகக்ள்.//

  மிக்க நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 31. பா.ராஜாராம் said...
  //இரண்டு தளத்தில் இயங்கும் கவிதை!

  நல்லாருக்கு சகா. வாழ்துகள்!//

  மிக்க நன்றி பா ரா.

  ReplyDelete
 32. மோகன் குமார் said...
  //:((( //

  உலக நடப்பு இதுவே. நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 33. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //அருமையாக ஒப்புமை கொடுத்திருக்கீங்க...//

  நன்றி முத்துலெட்சுமி.

  ReplyDelete
 34. வல்லிசிம்ஹன் said...
  //முள்ளாய்க் குத்துகிறது வரிகள். உண்மை வருத்தும். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

  கருத்துக்கு மிக்க நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 35. ஹேமா said...
  //உயிரையே பணயம் வைக்கும் வித்தை அவர்களுக்கே உரியது.நல்லதொரு கவிதை அக்கா !//

  ஆம் ஹேமா. மிக்க நன்றி.

  ReplyDelete
 36. sakthi said...
  //பன்முகத்தன்மை கொண்ட கவிதை மா நன்று//

  மிக்க நன்றி சக்தி.

  ReplyDelete
 37. சுந்தரா said...
  **//எவ்வளவு அருமையான ஒப்பீடு!! நிஜமாகவே அசத்தலான கவிதை அக்கா.
  //மழுங்கிய முனைக்கு
  மருத்துவம் செய்யும் முனைப்போ
  அதுவரையிலும் பெற்ற உழைப்புக்கு
  இரங்கும் மனமோ
  எப்போதும் கொண்டிராத சாட்டை
  வேறு பளபளத்த பம்பரங்கள் தேடி..//

  அப்படியே நிஜத்தைத் தோலுரித்துச்சொல்கிற வரிகள்!

  வாழ்த்துக்கள் அக்கா!//**

  மிக்க நன்றி சுந்தரா.

  ReplyDelete
 38. Chitra said...
  **//முதன் முறையாக நவீன விருட்சத்தில், நன்றி நவீன விருட்சம்!


  .....அருமை, அக்கா... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!//**

  நன்றி சித்ரா:)!

  ReplyDelete
 39. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //மிக அருமை ராமலெக்ஷ்மி.. பம்பரத்தை வேறு ரூபத்தில் இப்போதுதான் பார்த்தேன்..//

  மிக்க நன்றி தேனம்மை.

  ReplyDelete
 40. வருணன் said...
  //மிக அருமை தோழி. கவிப்பார்வை அழகானது மட்டுமல்ல, வித்தியாசமானதும் கூட. தங்கள் வரிகள் இதனை மெய்ப்பிக்கின்றன. சொல்லாடலும் அதனூடே நீங்கள் தூவும் சில சிந்தனை விதைகளும் அழகு. ஒரு நற்கவிதையின் வீச்சு முடிவிலியில்... இக்கவிதையும்...

  வாழ்த்துகள்...//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வருணன்.

  ReplyDelete
 41. சுசி said...
  //எல்லோருக்கும் பொருந்தும் அக்கா..//

  உண்மைதான், நன்றி சுசி.

  ReplyDelete
 42. ஸ்ரீராம். said...
  //சுற்றும் பம்பரத்தில் சுழற்றிய கவிதை. நவீன விருட்சம்...பாராட்டுக்கள்.//

  நன்றி, நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 43. T.V.ராதாகிருஷ்ணன் said...
  //நல்லாருக்கு//

  மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 44. அமைதிச்சாரல் said...
  //அசத்தலான கவிதை..//

  நன்றி சாரல்.

  ReplyDelete
 45. அருண் காந்தி said...
  //Ultimate!//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 46. அம்பிகா said...
  //மிக அருமை ராமலெக்ஷ்மி..//

  நன்றி அம்பிகா.

  ReplyDelete
 47. மதுரை சரவணன் said...
  ***//ஆராதித்து வந்த தலைமையின்
  அசல் முகங்கண்ட அதிர்ச்சியில்,
  விசிறியடிக்கப்பட்ட விசுவாசி
  விதியை நொந்தபடி..//

  unmaiyai uraikkirathu kavithai. vaalththukkal//**

  மிக்க நன்றி சரவணன்.

  ReplyDelete
 48. வருண் said...
  //அந்தக்காலத்தில் நாங்க (நான்)பம்பரத்தை தரையில் சுத்தாமல் நேரிடையாக (தரையில் சுத்தவிடுவதை பைப்பாஸ் பண்ணி)கையில் சுத்த விடுவேனாக்கும். :) நெசம்மாத்தாங்க!!//

  என் அண்ணன்கள் செய்து பார்த்திருக்கிறேன் இந்த வித்தையெல்லாம். ஆகையாலே நம்புகிறேன்:)!

  //ரொம்ப நல்ல சிந்தனைங்க, ராமலக்ஷ்மி! சாட்டையை "க்ரிட்டிக்" போலவும், பம்பரத்தை ஒரு "க்ரியேட்டர்" போலவும் சிந்திப்பது அருமை! என்னைப்போல ஆளையே இப்படி பாராட்ட வச்சுட்டீங்க!!!

  +2 ஓட்டுக்கள் போடலாம்னு ஆசை! ஆனால் +1 தான் அல்லவ்ட்! :))//

  பாராட்டுக்கும் பொன்னான வாக்குக்கும் மிக்க நன்றி வருண்:)!

  ReplyDelete
 49. கவிநயா said...
  //அருமையான கவிதை. நவீன விருட்சத்துக்கும் வாழ்த்துகள்! :)//

  மிக்க நன்றி கவிநயா:)!

  ReplyDelete
 50. கோமதி அரசு said...
  ***//மாட்டுவதற்கென்றே
  முட்டை ஓடு விட்டு வரும்
  அறியாக் குஞ்சுகளாய்
  பூமியெங்கும் அழகிய வீரர்கள்..!//

  சந்தர்ப்ப வாதிகளிடம் மாட்டும் அறியா குஞ்சுகள்.

  அறியா குஞ்சுகள் எப்போது விழித்துக்கொள்ளும்?

  அருமையான கவிதை ராமலட்சுமி.//***

  விசிறப்படும் நிலைக்கு முன்னரே விழித்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 51. ஆயிஷா said...
  //நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.//

  நன்றி ஆயிஷா.

  ReplyDelete
 52. சசிகுமார் said...
  //கவிதை அருமை//

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 53. "உழவன்" "Uzhavan" said...
  //வாழ்த்துக்கள் :-)//

  நன்றி உழவன், நவீன விருட்சத்தில் அளித்த கருத்துக்கும்.

  ReplyDelete
 54. ஹுஸைனம்மா said...
  //மிரட்டுகிறது கவிதை வார்த்தைகளில்!!
  எச்சரிக்கிறது உலகை அர்த்தங்களில்!!

  வாழ்த்துகள் அக்கா.//

  மிக்க நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 55. சே.குமார் said...
  //அருமையான கவிதை.//

  நன்றி குமார்.

  ReplyDelete
 56. கனாக்காதலன் said...
  //கவிதை மிக அருமை.//

  மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 57. அமுதா said...
  //மிக அருமை மேடம். சாட்டையும் பம்பரமும் சில நிதர்சங்களின் குறியீடாக...//

  ஆம், நன்றி அமுதா.

  ReplyDelete
 58. மாதேவி said...
  //வாழ்த்துகள்.//

  நன்றி மாதேவி.

  ReplyDelete
 59. luckyguy1961 said...
  //Hello ungaludaya pambaram nanragave suzhanrulladhu,aanal tamilakathil suzhazhavillaiye, saattai visiya vidham nanragave irunthadhu nanri vazhthukkal.//

  அரசியலுக்குப் போய் விட்டீர்களா:)? கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 60. Chitra said...
  //Nalla kavithai, arumai :)//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 61. ஈரோடு கதிர் said...
  //அடடா! அசத்தறீங்க!//

  ||தன் வசீகரத்தில் தானே மயங்கி ||
  மிக அருமை!//

  நன்றி கதிர்:)!

  ReplyDelete
 62. asiya omar said...
  //மிக நல்ல கருத்துள்ள கவிதை.//

  நன்றி ஆசியா.

  ReplyDelete
 63. ஆர்.கே.சதீஷ்குமார் said...
  //ரொம்ப நல்லாருக்கு//

  நன்றி சதீஷ்குமார்.

  ReplyDelete
 64. குட்டிப்பையா|Kutipaiya said...
  //மிக அருமையான படிமம்!! வாழ்த்துக்கள்!//

  மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 65. சி.கருணாகரசு said...
  //கவிதை களத்தி நின்று சுற்றுகிறது... நல்லாயிருக்குங்க,//

  நன்றி கருணாகரசு.

  ***//மழுங்கிய முனைக்கு
  மருத்துவம் செய்யும் முனைப்போ
  அதுவரையிலும் பெற்ற உழைப்புக்கு
  இரங்கும் மனமோ
  எப்போதும் கொண்டிராத சாட்டை
  வேறு பளபளத்த பம்பரங்கள் தேடி..//

  ஆனா சாட்டையையும் காலம் கிழிக்கும்.... அப்போது அந்த சாட்டை மழுங்கிய பம்பரத்துக்கு கூட உதவாது... சரியாதான் சொன்னேனா?/***

  நான் ஒருபுள்ளியில் நிறுத்தி விட்டுள்ளேன். நீங்கள் அடுத்த புள்ளிக்கு நகர்ந்து சொல்லியிருக்கிறீர்கள். மிகச் சரி. அது புரியாமல்தானே சாட்டைகள் ஆட்டம் போடுகின்றன.

  ReplyDelete
 66. குமரி எஸ். நீலகண்டன் said...
  //நன்றி ராமலக்ஷ்மி.. நவீன விருட்சத்தில் உங்களது பம்பரம் குறித்த கவிதை என்னை மிகவும் பாதித்தது. உங்கள் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது அது. இன்னும் உங்கள் இந்த கவிதை குறித்து குறிப்பிட்டு பல நண்பர்களிடமும் பகிர்ந்திருக்கிறேன். எப்படியானாலும் பம்பரம் குறித்து அந்த உந்துதலில் பம்பரம் குறித்தே ஒரு கவிதை எழுதினேன்.நீங்கள் எழுதிய கவிதையை விட இன்னொன்று சிறப்பாக படைப்பது மிகவும் சிரமம்.வாழ்த்துக்கள்//

  மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும். நவீன விருட்சத்தில் வெளியான அன்றே நீங்கள் அளித்திருந்த கருத்துக்கும் என் நன்றி.

  ReplyDelete
 67. தமிழ்மணத்தில் வாக்களித்த பன்னிரெண்டு பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த இருபத்தேழு பேருக்கும் என் நன்றி.

  ReplyDelete
 68. அன்பின் ராமலக்ஷ்மி - அருமையான கவிதை - நவீன விருட்சத்தில் வெளிவந்தமைக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் -சாட்டைக்கும் பம்பரத்துக்கும் உள்ள உறவு நன்கு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நிஜத்தில் நடக்கும் பல்வேறு செயல்களை நினைவுறுத்தும் கவிதை. - நட்புடன் சீனா

  ReplyDelete
 69. @ cheena (சீனா),

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சீனா சார்.

  ReplyDelete
 70. மாட்டுவதற்கென்றே
  முட்டை ஓடு விட்டு வரும்
  அறியாக் குஞ்சுகளாய்
  பூமியெங்கும் அழகிய வீரர்கள்..!
  அருமை!

  ReplyDelete
 71. @ MangaiMano,

  மிக்க நன்றி மங்கை.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin