Friday, July 16, 2010

மொட்டு ஒண்ணு.. மெல்ல மெல்ல..

மொட்டு ஒண்ணு..


மெல்ல மெல்ல..விரிந்து..


மலர்ந்து..
சிரிக்கிறது அழகாய்.. மூவண்ண மலராய்..

கொஞ்சும் மஞ்சளை
மிஞ்சும் சிகப்பை
மிதமாய் வருடிடும் வெள்ளை..


இளங்காற்றினில்
இதமாய் ஆடும் இலைகளின் நடுவே
எழிலாய் அசைந்து
மனதை அடிக்குது கொள்ளை!

*********


[மொட்டு விரியத் தொடங்கிய கணத்திலிருந்து ஓரிரு மணிக்குள் முழுதாய் மலர்ந்து விடுவது இம்மலரின் விசேஷம்.]


கண்ணுக்கு விருந்து வைத்துக் கையசைத்து விடைபெறுகிறேன்.

சிலவாரகால இடைவெளிக்குப் பிறகு சந்திப்போமா:)?

105 comments:

 1. ரொம்ப அக்கறையா எடுத்து இருக்கீங்களே... :)
  நல்லவிதமா போய்ட்டு சீக்கிரமா வாங்க..:)

  ReplyDelete
 2. அழகாயிருக்குங்க

  ReplyDelete
 3. Fantastic!! Excellent!! Very good creative thought!!

  ReplyDelete
 4. அழகாய் இருக்கு !


  எடுக்க நேர்ந்த கணங்கள் எத்தனை மணி துளிகள் ? :)


  அந்த சிவப்பு மகரந்தம் ஒரு தனி போட்டோவாக #நேயர் விருப்பம் :)

  ReplyDelete
 5. அடடா! என்ன அழகு! நீங்க ரொம்ப அழகா போட்டோ எடுக்கிறீங்க மேடம்!

  ReplyDelete
 6. அழகு.... பொறுமையாக எடுத்து பகிர்ந்ததற்கு நன்றி. ஊருக்கா? சீக்கிரம் வாங்க... முத்துச்சரத்தில் நல்முத்துக்கள் தொடுத்துக்கொண்டே இருக்க...

  ReplyDelete
 7. சூப்பர் படப்பிடிப்பு.குழந்தை ஒன்றின் முதல் நடை எடுத்து வைத்த ,காட்சி போல் ரசித்தேன்

  ReplyDelete
 8. கலக்கல்
  அசத்தல்

  ம்ம்ம்ம்.. மனுசங்களுக்கு இவ்வ்வ்வ்வளவு பொறுமை வேணுமே

  ReplyDelete
 9. கலர்ஃபுல்லாவும் சூப்பராவும் இருக்குங்க..

  ReplyDelete
 10. மிக அழகு சகோதரி.
  பொறுமைக்கும், திறமைக்கும் எனது பாராட்டுக்கள்.

  இடைவெளியா? எங்கே போகிறீர்கள்?

  ReplyDelete
 11. மேலிருந்து ஐந்தாவது படம் நான் எடுத்துகிட்டேன் கொள்ளையழகு..

  ஓய்வு மன நிம்மதியை தருவதாய் இருக்கட்டும்...

  ReplyDelete
 12. சூப்பர். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. நான் ரொம்ப பொங்கி ஒரு பின்னூட்டம் போட்டேன். ரிலீஸ் பண்ணும் நேரம் கரண்ட் போயிடுச்சு. அதை திரும்பி நியாபகம் வச்சு அடிக்க முடியலை. சுறுக்கமா "நல்லா இருந்துச்சு"ன்னு வச்சுகுங்க:-))

  ReplyDelete
 14. மொட்டு ஒண்ணு
  மலருது மலருது
  மெதுவாய் மெதுவாய்
  மணமும் பரவுது

  வண்ண வண்ண
  வண்டுகள் வந்து
  ரதி இவள் தானோ என‌
  ராகம் பாடுது.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 15. சூப்பர் படங்கள் ராமலஷ்மி

  ReplyDelete
 16. ஒரு புஷ்பம் மலர்ந்தது... என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. படங்கள் அழகோ அழகு. எவ்வளவு படங்கள் எடுத்தீர்கள். எப்படிப் பொறுமையாய் காத்திருந்தீர்கள்? அந்த அனுபவத்தையும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே...

  ReplyDelete
 17. பொறுமையின் சின்னம், தாங்கள்தான் போலும். மிகவும் மகிழ்ச்சியான உணர்வைத் தூண்டும் படங்கள். நன்றி.

  //கண்ணுக்கு விருந்து வைத்துக் கையசைத்து விடைபெறுகிறேன்.சிலவாரகால இடைவெளிக்குப் பிறகு சந்திப்போமா:)?//

  அந்த கேள்விக்குறி தவறுதலாக விழுந்ததுதானே?

  ReplyDelete
 18. //கண்ணுக்கு விருந்து வைத்துக் கையசைத்து விடைபெறுகிறேன்.
  சிலவாரகால இடைவெளிக்குப் பிறகு சந்திப்போமா:)? ///


  nice.....

  நல்லவிதமா போய்ட்டு சீக்கிரமா வாங்க..:)

  ReplyDelete
 19. எல்லாப்படமும் அழகாயிருக்குங்க... அந்த நீட்சிகளை பார்ப்பதற்கு எவ்ளோ அழகாயிருக்கு... அருமைங்க...

  ReplyDelete
 20. Take care and come back soon. we will miss your colorful posts! :-)

  ReplyDelete
 21. செம சூப்பர்! பூ பூக்கும் ஓசையை கேட்டீங்களா?! :))

  ReplyDelete
 22. ஆகா அருமையான படங்கள், Amazing Work keep it up

  ReplyDelete
 23. இளங்காற்றினில்
  இதமாய் ஆடும் இலைகளின் நடுவே
  எழிலாய் அசைந்து
  மனதை அடிக்குது கொள்ளை!
  :))

  ReplyDelete
 24. மொட்டுகள் எக்காலத்திலும் மலர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்த மலருக்கு ராமலக்ஷ்மியின் கைவண்ணம் பட்டிருக்கிறது. அதிக அழகோடு பூத்துவிட்டது.அற்புதமான கவிதை ராமலக்ஷ்மி.வாழ்த்துகள். சில தினக்கள் போதாதா. சில வாரங்கள் போக வேண்டுமா:)

  ReplyDelete
 25. ஆர்வம் , அக்கறையோட... பொறுமையும் கூடுதலாவே இருக்கு :)

  ReplyDelete
 26. பக்கத்திலே காத்திருந்து எடுத்திருப்பீங்க போல அதனோட அழகை.அவ்ளோ அழகாயிருக்கு.மீண்டும் சந்திப்போம்.
  சுகமாய்ப் போய்ட்டு வாங்க.

  ReplyDelete
 27. அடடா! என்ன அழகு! நீங்க ரொம்ப அழகா போட்டோ எடுக்கிறீங்க மேடம்!

  ReplyDelete
 28. மிக அருமையா இருக்குங்க....
  சின்ன சின்ன சொற்கள் கவிதையாவதுபோல.
  ..... மகிழ்ச்சியை சுமந்து மீண்டும் வருக.

  ReplyDelete
 29. தமிழ் பிரியன் said...
  //ரொம்ப அக்கறையா எடுத்து இருக்கீங்களே... :)//

  ஆர்வத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்:)!


  //நல்லவிதமா போய்ட்டு சீக்கிரமா வாங்க..:)//

  நன்றி தமிழ் பிரியன்.

  ReplyDelete
 30. தெய்வசுகந்தி said...
  //Wow Super pics!!!!!!!!!!!//

  நன்றி தெய்வசுகந்தி.

  ReplyDelete
 31. VELU.G said...
  //அழகாயிருக்குங்க//

  நன்றிங்க வேலு.

  ReplyDelete
 32. மோகன் குமார் said...
  //Fantastic!! Excellent!! Very good creative thought!!//

  மிக்க நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 33. ஆயில்யன் said...
  //அழகாய் இருக்கு !

  எடுக்க நேர்ந்த கணங்கள் எத்தனை மணி துளிகள் ? :)//

  இரு மணி நேரங்களில்..:)! நன்றி ஆயில்யன்.

  //அந்த சிவப்பு மகரந்தம் ஒரு தனி போட்டோவாக #நேயர் விருப்பம் :)//

  இளங்காற்றில் ஆடிக் கொண்டே இருந்தபடியால் நாலாவது படம் தவிர மற்றதில்(இங்கு பதியாதவையும் சேர்த்து) மகரந்தம் அத்தனை ஷார்ப்பாக வரவில்லை:(! இன்னொரு முறை எடுத்துப் பார்க்கிறேன்:)!

  ReplyDelete
 34. க.நா.சாந்தி லெட்சுமணன். said...
  //அடடா! என்ன அழகு! நீங்க ரொம்ப அழகா போட்டோ எடுக்கிறீங்க மேடம்!//

  மிக்க நன்றி சாந்தி.

  ReplyDelete
 35. அமுதா said...
  //அழகு.... பொறுமையாக எடுத்து பகிர்ந்ததற்கு நன்றி. ஊருக்கா? சீக்கிரம் வாங்க... முத்துச்சரத்தில் நல்முத்துக்கள் தொடுத்துக்கொண்டே இருக்க...//

  சரி அமுதா:)! என் நன்றிகள்.

  ReplyDelete
 36. goma said...
  //சூப்பர் படப்பிடிப்பு.குழந்தை ஒன்றின் முதல் நடை எடுத்து வைத்த ,காட்சி போல் ரசித்தேன்//

  உவமை அழகு. நன்றி கோமா.

  ReplyDelete
 37. அமைதிச்சாரல் said...
  //கலர்ஃபுல்லாவும் சூப்பராவும் இருக்குங்க..//

  நன்றி அமைதிச்சாரல்.

  ReplyDelete
 38. ஈரோடு கதிர் said...
  //கலக்கல்
  அசத்தல்

  ம்ம்ம்ம்.. மனுசங்களுக்கு இவ்வ்வ்வ்வளவு பொறுமை வேணுமே//

  எனக்கு இருக்கிறது என ஒத்துக் கொள்கிறீர்கள்:)! நன்றி கதிர்.

  ReplyDelete
 39. அம்பிகா said...
  //அருமை.., அழகு...//

  நன்றி அம்பிகா.

  ReplyDelete
 40. எம்.ரிஷான் ஷெரீப் said...
  //மிக அழகு சகோதரி.
  பொறுமைக்கும், திறமைக்கும் எனது பாராட்டுக்கள்.

  இடைவெளியா? எங்கே போகிறீர்கள்?//

  நன்றி ரிஷான். ஊர்ப்பக்கம் போய்வரலாமென..:)!

  ReplyDelete
 41. தமிழ் உதயம் said...
  //அழகு...அழகு...//

  நன்றி தமிழ் உதயம்.

  ReplyDelete
 42. ப்ரியமுடன் வசந்த் said...
  //மேலிருந்து ஐந்தாவது படம் நான் எடுத்துகிட்டேன் கொள்ளையழகு..//

  தாராளமாய்:)!

  //ஓய்வு மன நிம்மதியை தருவதாய் இருக்கட்டும்...//

  மிக்க நன்றி வசந்த்.

  ReplyDelete
 43. மதுரை சரவணன் said...
  //சூப்பர். வாழ்த்துக்கள்.//

  நன்றி சரவணன்.

  ReplyDelete
 44. அபி அப்பா said...
  //நான் ரொம்ப பொங்கி ஒரு பின்னூட்டம் போட்டேன். ரிலீஸ் பண்ணும் நேரம் கரண்ட் போயிடுச்சு. அதை திரும்பி நியாபகம் வச்சு அடிக்க முடியலை. சுறுக்கமா "நல்லா இருந்துச்சு"ன்னு வச்சுகுங்க:-))//

  அது போதுமே:)! நன்றி அபி அப்பா.

  ReplyDelete
 45. sury said...
  //மொட்டு ஒண்ணு
  மலருது மலருது
  மெதுவாய் மெதுவாய்
  மணமும் பரவுது

  வண்ண வண்ண
  வண்டுகள் வந்து
  ரதி இவள் தானோ என‌
  ராகம் பாடுது.

  சுப்பு ரத்தினம்.//

  மலரின் மணமும்.. வண்டுகளின் ராகமும்.. ஆகா, மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 46. பா.ராஜாராம் said...
  //fantasic sagaa!//

  நன்றி நண்பரே.

  ReplyDelete
 47. சின்ன அம்மிணி said...
  //சூப்பர் படங்கள் ராமலஷ்மி//

  நன்றி அம்மிணி.

  ReplyDelete
 48. ஸ்ரீராம். said...
  //ஒரு புஷ்பம் மலர்ந்தது... என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. படங்கள் அழகோ அழகு. எவ்வளவு படங்கள் எடுத்தீர்கள். எப்படிப் பொறுமையாய் காத்திருந்தீர்கள்? அந்த அனுபவத்தையும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே...//

  சுமார் இருபது படங்கள் எடுத்திருப்பேன். எடுப்பது மிக சுவாரஸ்யமாய் இருந்தது. ஆனால் அதில் ஒரு ஐந்தினை தேர்வு செய்யதான் நிறைய அவகாசமும் பொறுமையும் தேவைப்பட்டது என்றால் நீங்கள் நம்ப வேண்டும். நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 49. கண்ணகி said...
  //அழகோவியம்...//

  நன்றிகள் கண்ணகி.

  ReplyDelete
 50. அமைதி அப்பா said...
  //பொறுமையின் சின்னம், தாங்கள்தான் போலும். மிகவும் மகிழ்ச்சியான உணர்வைத் தூண்டும் படங்கள். நன்றி. //

  நன்றி அமைதி அப்பா.

  //அந்த கேள்விக்குறி தவறுதலாக விழுந்ததுதானே?//

  தவறுதலாய் என்று சொல்ல முடியாது. சாதாரணமாய் போட்டது. அவ்வளவே:)!

  ReplyDelete
 51. ஆ.ஞானசேகரன் said...
  ***/ //கண்ணுக்கு விருந்து வைத்துக் கையசைத்து விடைபெறுகிறேன்.
  சிலவாரகால இடைவெளிக்குப் பிறகு சந்திப்போமா:)? ///

  nice.....

  நல்லவிதமா போய்ட்டு சீக்கிரமா வாங்க..:) /***

  நன்றி ஞானசேகரன்:)!

  ReplyDelete
 52. க.பாலாசி said...
  //எல்லாப்படமும் அழகாயிருக்குங்க... அந்த நீட்சிகளை பார்ப்பதற்கு எவ்ளோ அழகாயிருக்கு... அருமைங்க...//

  ஆமாம் பாலாசி. மிக்க நன்றி.

  ReplyDelete
 53. சந்தனமுல்லை said...
  //செம சூப்பர்! பூ பூக்கும் ஓசையை கேட்டீங்களா?! :))//

  கேட்காமலா:)? தலைப்பாக அதைத்தான் முதலில் யோசித்திருந்தேன்.

  ReplyDelete
 54. சந்தனமுல்லை said...
  //Take care and come back soon. we will miss your colorful posts! :-)//

  நன்றி முல்லை:)!

  ReplyDelete
 55. சசிகுமார் said...
  //ஆகா அருமையான படங்கள், Amazing Work keep it up//

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 56. கோவை குமரன் said...
  ***/இளங்காற்றினில்
  இதமாய் ஆடும் இலைகளின் நடுவே
  எழிலாய் அசைந்து
  மனதை அடிக்குது கொள்ளை!
  :))//

  இல்லையா:)?

  முதல் வருகைக்கு நன்றி கோவை குமரன்.

  ReplyDelete
 57. அன்புடன் அருணா said...
  //Happy holidays!!//

  நன்றி அருணா.

  ReplyDelete
 58. வல்லிசிம்ஹன் said...
  //மொட்டுகள் எக்காலத்திலும் மலர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்த மலருக்கு ராமலக்ஷ்மியின் கைவண்ணம் பட்டிருக்கிறது. அதிக அழகோடு பூத்துவிட்டது.அற்புதமான கவிதை ராமலக்ஷ்மி.வாழ்த்துகள். சில தினக்கள் போதாதா. சில வாரங்கள் போக வேண்டுமா:)//

  ரசித்த அழகை மீண்டும் மீண்டும் ரசிக்க காட்சியாக்கி விட்டேன்:)!

  வந்துடுறேன் சீக்கிரம். நன்றிகள் வல்லிம்மா.

  ReplyDelete
 59. ரசிகன்! said...
  //ஆர்வம் , அக்கறையோட... பொறுமையும் கூடுதலாவே இருக்கு :)//

  நன்றி ரசிகன்:)!

  ReplyDelete
 60. ஹேமா said...
  //பக்கத்திலே காத்திருந்து எடுத்திருப்பீங்க போல அதனோட அழகை.அவ்ளோ அழகாயிருக்கு.மீண்டும் சந்திப்போம்.
  சுகமாய்ப் போய்ட்டு வாங்க.//

  ஆமாங்க. தொட்டியைச் சுற்றி சுற்றி வந்தும், நல்ல போஸில் எடுக்க தொட்டியையே வசதிக்கு ஏற்ப சுற்றி வைத்தும் எடுத்தாயிற்று:)!

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 61. Priya said...
  //wow Great... amazing work!//

  நன்றி பிரியா.

  ReplyDelete
 62. சே.குமார் said...
  //அடடா! என்ன அழகு! நீங்க ரொம்ப அழகா போட்டோ எடுக்கிறீங்க மேடம்!//

  நன்றிகள் குமார்.

  ReplyDelete
 63. புவனேஸ்வரி ராமநாதன் said...
  //அருமை.//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புவனேஸ்வரி.

  ReplyDelete
 64. சி. கருணாகரசு said...
  //மிக அருமையா இருக்குங்க....
  சின்ன சின்ன சொற்கள் கவிதையாவதுபோல.
  ..... மகிழ்ச்சியை சுமந்து மீண்டும் வருக.//

  மிக்க நன்றி கருணாகரசு.

  ReplyDelete
 65. மின்னஞ்சலில்..


  Hi Ramalakshmi,

  Congrats!

  Your story titled 'மொட்டு ஒண்ணு.. மெல்ல மெல்ல..' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 17th July 2010 05:25:02 AM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/303832

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team

  தமிழ் மணத்தில் வாக்களித்த 18 பேருக்கும், தமிழிஷில் வாக்களித்த 36 பேருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூடிய விரைவில் சந்திக்கலாம்:)!

  ReplyDelete
 66. ரொம்ப அழகு.

  (இதை விட சிரிய மொட்டாக இருந்தால் அதை தின்னலாம், தெரியுமா.?)

  ReplyDelete
 67. time irunthal enathu valaikku varavum....

  http://www.vayalaan.blogspot.com

  ReplyDelete
 68. சூப்பரா இருக்கு...எத்தனை அழகா பொறுமையா எடுதுருகீங்க...வாழ்த்துக்கள்...

  நேரம் கிடைக்கும் பொழுது என் பதிவு பக்கம் வாங்க...
  funaroundus.blogspot.com

  ReplyDelete
 69. http://www.greatestdreams.com/2010/07/blog-post_19.html, சகோதரி பதிவுலகில் நான் எப்படிபட்டவர் எனும் தொடர்பதிவு எழுத அழைக்கிறேன், நன்றி.

  ReplyDelete
 70. Extraordinarily beautiful Ramalakshmi...very nice.

  ReplyDelete
 71. பொறுமை+ஆர்வம்+கவனம்+நேரம்+தொந்தரவில்லாத சூழ்நிலை=அற்புதமான படைப்பு!!!!

  ரொம்ப சந்தோஷமாயிருக்கு.

  ReplyDelete
 72. வழக்கம்போல அருமை,அக்கா

  ReplyDelete
 73. ராமலக்ஷ்மி, படங்கள் அருமை.

  கண்ணுக்கு விருந்து,மனதுக்கு மகிழ்ச்சி.

  சீக்கிரம் வாருங்கள்,நல்ல பதிவுகள் தாருங்கள்.

  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 74. ரெம்ப நல்லா இருக்குங்க... சூப்பர்

  ReplyDelete
 75. கண்ணைப்பறிக்கிறது மலரின் கொள்ளை அழகு....

  ReplyDelete
 76. ராமலக்ஷ்மி மிக நல்ல முன்னேற்றம் உங்கள் படங்களில்... ஆர்வம் இருந்தால் சிறப்பாக பரிணமிக்கலாம் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம்.. வாழ்த்துக்கள். படத்தை பற்றி கூற எதுவுமில்லை ஏற்கனவே பலர் கூறி விட்டனர்

  ReplyDelete
 77. மிக அழகான படங்கள் பகிர்வுக்கு நன்றி ராமலெக்ஷ்மி.. அடிக்கடி வர இயலவில்லை.:((

  ReplyDelete
 78. ஆதிமூலகிருஷ்ணன் said...
  //ரொம்ப அழகு.

  (இதை விட சிரிய மொட்டாக இருந்தால் அதை தின்னலாம், தெரியுமா.?)//

  தகவல் புதிது. ஆனாலும் மலர விடவே மனம் விரும்புது:)! நன்றி ஆதி.

  ReplyDelete
 79. சே.குமார் said...
  //time irunthal enathu valaikku varavum....

  http://www.vayalaan.blogspot.com//

  உங்கள் ‘நெடுங்கவிதைகள்’ வலைப்பூவே எனக்கு அறிமுகம். ‘மனசு’ புதுசு:)! அவசியம் வருகிறேன்.

  ReplyDelete
 80. Gayathri said...
  //சூப்பரா இருக்கு...எத்தனை அழகா பொறுமையா எடுதுருகீங்க...வாழ்த்துக்கள்...

  நேரம் கிடைக்கும் பொழுது என் பதிவு பக்கம் வாங்க...
  funaroundus.blogspot.com//

  நன்றி காயத்ரி. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் வருகிறேன்.

  ReplyDelete
 81. V.Radhakrishnan said...
  //http://www.greatestdreams.com/2010/07/blog-post_19.html, சகோதரி பதிவுலகில் நான் எப்படிபட்டவர் எனும் தொடர்பதிவு எழுத அழைக்கிறேன், நன்றி.//

  தொடர்பதிவிலுள்ள பெரும்பாலான கேள்விகளுக்கு ஏற்கனவே எனது ஒருசில பதிவுகளில் [குறிப்பாக 'நன்றி நவிலல்' என வகைப்படுத்தப் பட்டவற்றின் கீழ்] பதில்கள் சொல்லி விட்டுள்ளேன்:)! அழைத்த அன்பிற்கு நன்றி ராதாகிருஷ்ணன்.

  ReplyDelete
 82. ஜெஸ்வந்தி said...
  //Super. Beautiful.//

  மிக்க நன்றி ஜெஸ்வந்தி.

  ReplyDelete
 83. உமாஷக்தி said...
  //Extraordinarily beautiful Ramalakshmi...very nice.//

  வாங்க உமாஷக்தி. மிக்க நன்றி.

  ReplyDelete
 84. நானானி said...
  //பொறுமை+ஆர்வம்+கவனம்+நேரம்+தொந்தரவில்லாத சூழ்நிலை=அற்புதமான படைப்பு!!!!

  ரொம்ப சந்தோஷமாயிருக்கு.//

  நன்றி நானானி:)!

  ReplyDelete
 85. பாத்திமா ஜொஹ்ரா said...
  //வழக்கம்போல அருமை,அக்கா//

  நன்றி பாத்திமா.

  ReplyDelete
 86. கோமதி அரசு said...
  //ராமலக்ஷ்மி, படங்கள் அருமை.

  கண்ணுக்கு விருந்து,மனதுக்கு மகிழ்ச்சி.

  சீக்கிரம் வாருங்கள்,நல்ல பதிவுகள் தாருங்கள்.

  வாழ்க வளமுடன்.//

  நன்றி கோமதிம்மா. திரும்பி வந்தாயிற்று. பதிவுகள் விரைவில்..:)!

  ReplyDelete
 87. அப்பாவி தங்கமணி said...
  //ரெம்ப நல்லா இருக்குங்க... சூப்பர்//

  நன்றி புவனா.

  ReplyDelete
 88. கவிநா... said...
  //கண்ணைப்பறிக்கிறது மலரின் கொள்ளை அழகு....//

  அந்த அழகில் மயங்கியதால் பிறந்தவையே இப்படங்கள். நன்றி கவிநா!

  ReplyDelete
 89. கிரி said...
  //ராமலக்ஷ்மி மிக நல்ல முன்னேற்றம் உங்கள் படங்களில்... ஆர்வம் இருந்தால் சிறப்பாக பரிணமிக்கலாம் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம்.. வாழ்த்துக்கள். படத்தை பற்றி கூற எதுவுமில்லை ஏற்கனவே பலர் கூறி விட்டனர்//

  ஆரம்பத்திலிருந்து என் பிட் மற்றும் புகைப்படப் பதிவுகளைக் கவனித்து வருகிறீர்கள்.நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்:)!ஊக்கம் தரும் வாழ்த்துக்களுக்கு நன்றி கிரி.

  ReplyDelete
 90. மாதேவி said...
  //அழகிய படம்.//

  நன்றி மாதேவி.

  ReplyDelete
 91. tamilraja said...
  //அழகோ,அழகு//

  நன்றி தமிழ் ராஜா.

  ReplyDelete
 92. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //மிக அழகான படங்கள் பகிர்வுக்கு நன்றி ராமலெக்ஷ்மி.. அடிக்கடி வர இயலவில்லை.:((//

  நன்றி தேனம்மை. வருந்தத் தேவையில்லை. நேரம் அனுமதிக்கையில் வாருங்கள் போதும்:)!

  ReplyDelete
 93. சந்திக்கலாம் அக்கா..

  அழகா, அருமையா எடுத்திருக்கீங்க. கூடவே கவிதையும் அழகு.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin