பொதுவாக கதைகளை விட கவிதைகளின் மீதான் நேசம் சற்றே தூக்கலாக இருப்பதால் அவற்றையே விரும்பித் தேடி வாசிப்பது வழக்கம். அந்த வகையில் இணையத்தில் நிலாரசிகன் பக்கங்களில் அவரது கவிதைகளுடனேயே அதிக பரிச்சயமாகி இருந்த சமயம். சர்வேசன் நடத்திய ‘நச்’ சிறுகதை போட்டிக்கு நடுவர்களில் ஒருவராக இருக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வர, அதில் இரண்டாம் பரிசுக்குத் தேர்வான நிலாரசிகனின் ‘அப்பா சொன்ன நரிக்கதை’ வித்தியாசமான களத்தாலும், சொன்ன விதத்தாலும் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. அதுவே நான் வாசித்த அவரது முதல் சிறுகதை.
ஒரு சில நாட்களில் மேற்சொன்ன பரிசு பெற்றக் கதையினையும் சேர்த்துக் கொண்டு வெளிவந்தது அவரது சிறுகதைகளின் தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்”.
திரிசக்தி பதிப்பகத்தின் இப்புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்று வந்த தோழி ஷைலஜா என்னுடன் பகிர்ந்து கொண்ட சம்பவத்தைக் குறிப்பிடுவது கதாசிரியரை கெளரவப் படுத்துவதாக அமையும் என நம்புகிறேன். அன்று பலரது புத்தகங்களையும் வெளியிட சிறப்பு விருந்தினராக வந்திருந்த அஸிஸ்டென்ட் கமிஷனர் திரு. ரவி அவர்கள் விழா மேடையில் வந்தமர்ந்ததும் “யார் அந்த நிலாரசிகன்? எங்கே அவர்? அவரை நான் பார்க்க வேண்டும். உடனடியாக மேடைக்கு வரவும்” என ஒலிபெருக்கியில் அறிவிக்க சலசலத்ததாம் கூட்டம். கூச்சத்துடன் இவர் மேடைக்குச் செல்ல, தொகுப்பின் தலைப்பாக அமைந்த ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’ கதையினை மிகவும் சிலாகித்துக் கூறியதோடு நில்லாது “நிலாரசிகன், இன்று முதல் நான் உங்கள் ரசிகன்!” என்றாராம். இது போன்ற ஆத்மார்த்தமான பாராட்டுக்களே எழுத்தாளனை மேலும் செலுத்துகின்ற உந்து சக்தியாக அமைகின்றன என்றால் அது மிகையாகாது.
அத்தகு பாராட்டுக்கான அனைத்துச் சிறப்பையும் கொண்டதுதான் முதல் கதையான 'யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்'. மிகையற்ற வார்த்தைகளே இவை என வாசித்தால் நிச்சயம் உணர்வீர்கள்.
சென்னையிலிருந்து மும்பைக்குப் பயணப்படுகையில் ரயிலில் வாசிக்கவென ஏதேனும் வாங்கும் எண்ணத்தில் பழைய புத்தகக் கடைக்குச் செல்லும் நாயகன், தற்செயலாக காணக் கிடைத்த கிழிந்த டைரியால் ஈர்க்கப்பட்டு அதைப் பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்கிறான். ஏழு வருடங்களுக்கு முந்தைய டைரியின் ஆறுபக்கங்கள் கிழிந்து ஜனவரி ஏழாம் நாளில் தொடங்கி மார்ச் பனிரெண்டு வரைக்குமான குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. முத்தான கையெழுத்தில் எழுத்துப் பிழைகளுடனான அக்குறிப்புகள், மும்பைக்குக் கடத்தப்பட்டு விற்கப்பட்ட சிறுமியினுடையதாகும். குறிப்புகளை சிறுமியின் பார்வையிலேயே பதிந்திருப்பது உருக்கத்தை அதிகரிக்கிறது.

ஊருக்குத் திரும்பிய இரண்டு வாரங்களுக்குப் பின்னரும் சமூகம் அச்சிறுமிக்கு இழைத்த கொடுமையின் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாத நிலையில் மறுபடி தில்லிக்குப் பயணப்படுகிறான் நாயகன். அங்கிருந்து ஜான்ஸிக்கு செல்லும் ரயிலில் அவனோடு பயணிக்கும் இருபது வயது யுவதி மேல்பர்த்தில் இருந்து தவற விடும் டைரியைத் தவிர்க்க முடியாமல் வாசிக்க நேருகையில் நாயகனுக்கு ஏற்படும் அதிர்ச்சி வலி குழப்பம் எல்லாம் நம்மையும் தொத்திக் கொள்கிறது.
சிறப்பான ஆரம்பக் கதையே மற்ற கதைகளை விரைந்து வாசிக்கத் தூண்டுதலாய் அமைய, ஒரே நாளில் கீழே வைக்க மனமின்றி மற்ற கதைகளையும் வாசித்து முடித்தேன். நூலில் இடம்பெற்றிருப்பது மொத்தம் பதினேழு கதைகள். ஒவ்வொன்றுமே மாறுபட்ட களங்களில் இயல்பான அழகான எழுத்து நடையில்.
எதையும் எதிர்பாராத தூய்மையான தாயன்பைப் பேசுகிறது 'ஆலம்'.
அக்கம் பக்கத்து குழந்தைகளை அவரவர் குழந்தைகளைப் போல நேசிக்கும் எவரும் ஒன்றிடுவர் 'ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு ‘ஏ’ பிரிவு' சிறுகதையுடன். ஒரு இளைஞனுக்கும் கீழ்வீட்டில் வசிக்கும் சிறுமிக்கும் இடையேயான அன்புப் பிணைப்பு அழகான கவிதையாய். கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் சிரமப்படுகையில் அவனிடம் எழும் தவிப்பு, பிசிறற்றப் பிரியங்களால் நிறைந்தது உலகமென்பதை உணர வைக்கிறது சோகத்தின் நடுவேயும்.
நிஜங்களின் பிம்பமான 'வேலியோர பொம்மை மனம்' பெற்றோரைக் கண்ணெதிரே இலங்கை குண்டு வெடிப்பில் பலிகொடுத்த சிறுமி ஜெயரஞ்சனியை பற்றியது. “அநாதை எனும் வக்கிரச்சொல் ஜெயாவின் செவிகளில் நுழைய முடியாமல் காற்றில் அலைந்து திரிந்தது” என்கிறார் ஆசிரியர். ஆம், காது கேளாத வாய் பேச இயலாத குழந்தை அவள். நேசித்த கரடிப் பொம்மை மட்டுமே அப்போதைய ஒரே ஆறுதலாக இருக்க, முள்வேலி முகாமில் தட்டேந்தி நிற்பவளிடம் மூர்க்கமாக நடந்து கொள்கிறான் ஒரு ராணுவவீரன். பொம்மையைப் பிடுங்கி கருணையே இல்லாமல் பிய்த்துப் போட்ட அவனை ஒரு காலை நேரத்தில், தன் வெள்ளை மனதால்.. அப்பழுக்கற்ற அன்பால்.. வீழ்த்தியது தெரியாமலே தன்வழி நடப்பதாகக் கதை முடிகிறது.
அவள் கை அணைப்பிலிருந்த பிய்ந்த கரடிப் பொம்மையைப் போலவேக் கிழிந்து போகின்ற வாசிப்பவர் மனம், மீண்டும் தன்னிலைக்கு வர அவகாசம் தேவைப்படுகிறது.
இவை ஒருபுறமிருக்க..,
நான் மிக மிக ரசித்தவை, ரகளையான விவரணைகளுடன் என்னை மிகக் கவர்ந்தவை 'வால்பாண்டி சரித்திரம்', 'சேமியா ஐஸ்' மற்றும் 'தூவல்':)! பால்ய கால நினைவுகளின், அனுபவங்களின் பிரதிபலிப்பாக அமைந்தவை முதலிரண்டும். வயதுக்கே உரித்தான குறும்புகளின் மொத்தக் குத்தகைக்காரனாக வரும் சிறுவன் பால்பாண்டி 'வால்' பாண்டியாக மாறிப் போவதுவரை அவனது பார்வையிலேயே அட்டகாசமாக நகருகின்றது முதல் கதை. ‘போர்டிங் ஸ்கூலில் போட்டால்தான் உருப்படுவான்’ என அவன் அப்பா முடிவெடுத்து அழைத்துச் செல்லுகையில் நமக்கு ஏற்படும் பரிதாபம் அதை அவன் எதிர்கொள்ளும் விதத்தில் தவிடுபொடியாகி புன்னகைக்க வைக்கிறது.
இதே வாசிப்பின்பம் 'சேமியா ஐஸ்' கதையின் முடிவிலும். சித்தியின் ப்ளாஸ்டிக் செருப்பைக் கொடுத்து சேமியா ஐஸ் வாங்கித் தின்ற குற்றத்துக்காக அடிவாங்கி வேப்பமரத்தோடு அந்த மாற்றாந்தாயால் கட்டிப் போடப்படும் சின்னஞ்சிறுவன், இரவெல்லாம் நின்றபடியே தூங்கிப் பட்டினியாகக் கிடப்பது பார்த்து வருகின்ற பச்சாதாபம் தொலைந்து போய், பொங்குகிறது ஒரு 'குபீர்' சிரிப்பு கதையின் கடைசி வாக்கியத்தால்.
அதுவுமில்லாமல் சின்ன வயது நினைவுகளையும் அழகாய் கிளப்பி விட்டது இந்த 'சேமியா ஐஸ்':)! அப்போது எங்கள் வீட்டில் தெருவில் போகும் ஐஸ் எல்லாம் வாங்க விடமாட்டார்கள். காசும் கிடைக்காது. ‘பழைய டப்பா டபரா இரும்புக்கு சேமியா ஐஸேய்...’ என்று கூவியபடி மணியடித்துச் செல்பவரிடம் ஓவல் டின், போர்ன்விட்டா காலி டப்பாக்களைப் போட்டு ரகசியமாய் சேமியா ஐஸ் வாங்கி வந்து அண்ணன்மார்கள் தர, குதில் போன்றதான துணி போடும் பெட்டிக்குள் ஒளிந்திருந்து உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட்டிருக்கிறோம் நானும் தங்கைகளும்:))!.
'தூவல்' கதையில் பேனாவின் மீதான நேசத்தைச் சொன்ன விதமும், முடிவைப் படிக்கும் போது ஆரம்ப வரிகளை மறுபடி வாசிக்க வைத்திருப்பதும் கதாசிரியரின் வெற்றி.
சிறுகதைப் பிரியர்களின் சேகரிப்பில் அவசியம் இருக்க வேண்டிய தொகுப்பு.
விலை ரூ:70. பக்கங்கள்: 86. வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்; லேன்ட் மார்க்; சிடி சென்டர்/ஸ்பென்ஸர் ப்ளாஸா.
இணையத்தில் வாங்கிட இங்கே [http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=79 ] செல்லவும்.
இதுவே நிலாரசிகனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இதையடுத்து இவரது நான்காவது கவிதை தொகுப்பு " வெயில் தின்ற மழை " அடுத்த மாதம் 'உயிர்மை' பதிப்பகத்தின் வாயிலாக வெளிவர உள்ளது. சென்னைவாழ் நண்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அவசியம் விழாவுக்குச் சென்று சிறப்பியுங்கள். விழா குறித்த அறிவிப்பு அவரது வலைதளத்தில் விரைவில் வெளியாகும்.
மென்பொருள் நிறுவனமொன்றில் வேலை பார்த்தபடி கிடைக்கின்ற நேரத்தை எல்லாம் இலக்கியத்துக்கு அர்ப்பணித்து வரும் இந்த முப்பது வயது இளைஞர் நிலாரசிகன் மேலும் பல சிகரங்கள் தொட வாழ்த்துவோம்.
இன்று அவரது பிறந்த தினமும்..

எதேச்சையாக அறிய வந்த போது ஏற்பட்டதொரு இனிய திகைப்பு.
பரிசாக எனது முதல் நூல் விமர்சனம்:)!
*** *** ***
பரிசாக எனது முதல் நூல் விமர்சனம்:)!
*** *** ***
- இங்கு வலையேற்றிய பின் 12 டிசம்பர் 2010 திண்ணை இணைய இதழிலும்..
- ஈரோடு சுப்ரீம் அரிமா சங்க சுவடுகள் இதழிலும்..
nila rasikanin kavithaikal thalaththai naan thodarnthu vasikkirean.... ungal vimarsanam arumai.
பதிலளிநீக்குHappy Birthday NILA.
நல்ல விமர்சனம். நிலா ரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநிலா ரசிகனும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் :)
பதிலளிநீக்குபுத்தகப் பார்வை புதிய களம்... தொடரட்டும்
பதிலளிநீக்குமிக நேர்த்தியான பார்வை, மிக அழகாய் பதியப்பட்டிருக்கிறது... உண்மையான பாராட்டுகள்
நிலா ரசிகனுக்கு வாழ்த்துகளும், பிறந்த நாள் வாழ்த்துகளும்
புத்தக விமர்சனத்தோடு பிறந்த நாள் வாழ்த்துக்களும். கூடவே அடுத்த கவிதைத் தொகுதி பற்றிய அறிவிப்பும்.
பதிலளிநீக்குவேறென்ன வேண்டும் ஒரு எழுத்துக்காரனுக்கு. இத்தனையும் தொகுத்தளித்த உங்கள் பணியும் பாராட்டத் தக்கது ராமலஷ்மி. வாங்கி வைத்திருக்கும் நிலாவின் சிறுகதைத் தொகுப்பை உடனே வாசிக்கச் சொல்கிறது உங்களின் இந்த மதிப்புரை.
நண்பர் நிலாரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நானும் இந்த நூல் பற்றி எழுத நினைத்துள்ளேன்.
பதிலளிநீக்குஅருமையாக எழுதியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.
நல்ல விமர்சனம். நிலா ரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக நன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குஅவரே சொல்லியிருந்தால் கூட இந்த ஈர்ப்பு வந்திருக்காது. நிலா ரசிகனை ஒரு நல்ல மனிதராகவே தெரியும் ,அவரது புத்தகங்களை அறிந்ததில்லை. வெகு அருமை.
பிறந்த நாள் வாழ்த்துகள் நிலா.
மிக மிக நன்றி ராமலக்ஷ்மி.அருமையான உணர்ச்சிகளை நெகிழ்வாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
நல்ல விமர்சனங்கள்
பதிலளிநீக்குநிறைய தெரிந்து கொண்டேன்
நிலா ரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குஎழுத்தாளர் நிலாரசிகன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றியும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஅருமை வாழ்த்துகள்
பதிலளிநீக்குமற்றவரை பாராட்டும் நல்ல குணம் உங்களது வாழ்க வழமுடன் என்றும்
பதிலளிநீக்குசிறப்பான விமர்சனம் அக்கா.
பதிலளிநீக்குநிலாரசிகனுக்கு வாழ்த்துக்கள்!
நிலா ரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த பதிவை விட சிறந்த வாழ்த்து இருக்க முடியாது. நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குவாழ்த்துகள் நிலா ரசிகன்.
கட்டாயம் படித்த தீர வேண்டிய புத்தங்களில் இதுவும் ஒன்றுங்க.. படிச்சுகிட்டே இருக்கேன்.. நல்ல விமர்சனம் :)
பதிலளிநீக்குகட்டாயமாக படிக்க வேண்டும் முத்துச்சரம். நிலாரசிகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குHappy birthday to Nilarasikan !
பதிலளிநீக்குஇப்படி அநியாயமா சேமியா ஐஸ் ஞாபகத்தைக் கிளறி விட்டுட்டீங்களே ராமலக்ஷ்மி :)
பால் ஐஸ், க்ரேப் ஐஸ், கல்கோனா, சேமியா ஐஸ்.... hmmm.. those were the days :))
Very nice post - do they ship overseas?
நல்ல விமர்சனம். நிலா ரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநல்லா இருக்கு ராமலக்ஷ்மி..
பதிலளிநீக்குநிலாரசிகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும்..:)
அருமையான விமர்சனம் அக்கா. அவருக்கு சிறந்த ஒரு பரிசு குடுத்திருக்கிங்க.
பதிலளிநீக்குநிலாரசிகனுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
தங்கள் இலக்கியப் பயணத்தில் அடுத்த மைல்கல்.....’விமரிசகர்’
பதிலளிநீக்குவெற்றி மகுடத்தில் அடுத்த முத்து....
வாழ்த்துக்கள்.
தாமதமாக வந்தாலும் செறிவான விமர்சனம்.
பதிலளிநீக்குபுத்தக வெளிஈட்டுக்கே சென்றிருந்தேன். போலிஸ் ஆபிசர் ரவியே மிக அசந்து போய் வாழ்த்தினார். நிலாரசிகன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நர்சிம் said...
பதிலளிநீக்குஇந்த பதிவை விட சிறந்த வாழ்த்து இருக்க முடியாது. நல்ல பகிர்வு.]]]
உண்மைதான். ரசித்து எழுதப்பட்ட விமர்சனம்.
வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி:)
பதிலளிநீக்குராமலட்சுமி அம்மா..மிகவும் ரசனையாக எழுதியிருக்கிறீர்கள்..
நன்றிகள் பல..
நன்றியுடன்,
நிலாரசிகன்.
நிலா ரசிகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். புத்தக அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குபுதுமையான முறையில் இந்த கதாசிரியருக்கு உங்க பொறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்க சான்றிதழால் இந்தப்புத்தகம் 1000 பிரதிகள் அதிகமாக விற்கும் என்பது என் நம்பிக்கை! :)
பதிலளிநீக்குநிலா ரசிகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநல்லதொரு கலைஞனை ஊக்குவிக்கும் விமர்சனம்.அவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநிலா ரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநல்ல விமர்சனம். நிலா ரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇப்படியெல்லாம் நண்பர் நிலாரசிகனின் அக்கதைத்தொகுப்பைப் பற்றி எழுதும் ஆசை எனக்கும் இருந்தது. எழுதத் தெரியாத்தால் அவரை நேரில் மட்டும் பாராட்டிவிட்டு இருந்துவிட்டேன். உங்களின் இந்தப் பதிவு கண்டு மகிழ்ச்சியே.
பதிலளிநீக்குவாழ்த்துகள் நிலா!
மென்பொருள் நிறுவனமொன்றில் வேலை பார்த்தபடி கிடைக்கின்ற நேரத்தை எல்லாம் இலக்கியத்துக்கு அர்ப்பணித்து வரும் இந்த முப்பது வயது இளைஞர் நிலாரசிகன் மேலும் பல சிகரங்கள் தொட வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குஇன்று அவரது பிறந்த தினமும்..
....Best wishes to him! Convey our birthday wishes to him too. :-)
அன்பின் நிலாரசிகனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகளோடூ - புத்தக வெளியீட்டு விழா சிறக்கவும் வாழ்த்துகிறோம்.
பதிலளிநீக்குசதீஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. பகிர்வும் விமர்சனமும் அருமை ராமலெக்ஷ்மி.
பதிலளிநீக்குநிலா ரசிகனின் எழுத்துகள் பற்றி மிகுந்த ரசனையுடன் பதிந்திருக்கிறீர்கள். அருமை ராமலக்ஷ்மி. நிலா ரசிகன் அவர்கள் மென்மேலும் வளரவும், அவருடைய பிறந்த நாளை முன்னிட்டும், அவருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஒரு கை, பொரி போட்டதும் , தெப்பக்குளத்து மீன்கள் எல்லாம் அப்படியே கூட்டமாக பொரியை நோக்கி நீந்தி வரும் அழகை ,
பதிலளிநீக்கு’முத்துச்சரம் ’
’கொஞ்சம் வெட்டிப்பேச்சு
ஆகிய இரண்டு பதிவிலும் கண்டு ரசிக்கிறேன்.
இப்படிக்கு மீன்
//தேனம்மை லெக்ஷ்மணன் said...
பதிலளிநீக்குசதீஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. //
சதீஷுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..
ராமலஷ்மி அம்மா...சதீஷ் யார்? :)
நிலா ரசிகனும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.அருமையான விமர்சனம்
பதிலளிநீக்குசே.குமார் said...
பதிலளிநீக்கு//nila rasikanin kavithaikal thalaththai naan thodarnthu vasikkirean.... ungal vimarsanam arumai.
Happy Birthday NILA.//
மகிழ்ச்சியும் நன்றியும் குமார்.
LK said...
பதிலளிநீக்கு//நல்ல விமர்சனம். நிலா ரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//
நன்றி எல் கே.
ஆயில்யன் said...
பதிலளிநீக்கு//நிலா ரசிகனும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் :)//
உங்கள் அனைவருக்கும் அவரது நன்றியை சொல்லியிருக்கிறார்:)!
ஈரோடு கதிர் said...
பதிலளிநீக்கு//புத்தகப் பார்வை புதிய களம்... தொடரட்டும்
மிக நேர்த்தியான பார்வை, மிக அழகாய் பதியப்பட்டிருக்கிறது... உண்மையான பாராட்டுகள்
நிலா ரசிகனுக்கு வாழ்த்துகளும், பிறந்த நாள் வாழ்த்துகளும்//
புதிய களம்தான். தொடரலாம்ங்கறீங்க:)? ஊக்கம் அளிக்கும் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
செல்வராஜ் ஜெகதீசன் said...
பதிலளிநீக்கு//புத்தக விமர்சனத்தோடு பிறந்த நாள் வாழ்த்துக்களும். கூடவே அடுத்த கவிதைத் தொகுதி பற்றிய அறிவிப்பும்.
வேறென்ன வேண்டும் ஒரு எழுத்துக்காரனுக்கு. இத்தனையும் தொகுத்தளித்த உங்கள் பணியும் பாராட்டத் தக்கது ராமலஷ்மி. வாங்கி வைத்திருக்கும் நிலாவின் சிறுகதைத் தொகுப்பை உடனே வாசிக்கச் சொல்கிறது உங்களின் இந்த மதிப்புரை.//
ஒரு எழுத்துக்காரனுக்கு இன்னொரு எழுத்துக்காரனின் மனப்பூர்வமான பாராட்டு. மகிழ்ச்சி.
தொகுப்பை சீக்கிரம் வாசியுங்கள் செல்வராஜ் ஜெகதீசன். நிச்சயம் அதனோடு ஒன்றிடுவீர்கள்.
செ.சரவணக்குமார் said...
பதிலளிநீக்கு//நண்பர் நிலாரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நானும் இந்த நூல் பற்றி எழுத நினைத்துள்ளேன்.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.//
உங்கள் விமர்சனத்தை வாசிக்கும் ஆவலில் உள்ளேன். எழுதுங்கள் விரைவில். கருத்துக்கு மிக்க நன்றி சரவணக்குமார்.
வெறும்பய said...
பதிலளிநீக்கு//நல்ல விமர்சனம். நிலா ரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//
மிக்க நன்றிங்க.
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//மிக நன்றி ராமலக்ஷ்மி.
அவரே சொல்லியிருந்தால் கூட இந்த ஈர்ப்பு வந்திருக்காது. நிலா ரசிகனை ஒரு நல்ல மனிதராகவே தெரியும் ,அவரது புத்தகங்களை அறிந்ததில்லை. வெகு அருமை.
பிறந்த நாள் வாழ்த்துகள் நிலா.
மிக மிக நன்றி ராமலக்ஷ்மி.அருமையான உணர்ச்சிகளை நெகிழ்வாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.//
ரொம்ப நன்றி வல்லிம்மா. வாய்ப்புக் கிடைத்தால் இந்தப் புத்தகத்தை வாசியுங்கள். நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்.
VELU.G said...
பதிலளிநீக்கு//நல்ல விமர்சனங்கள்
நிறைய தெரிந்து கொண்டேன்//
நன்றிகள் வேலு ஜி.
Mrs.Menagasathia said...
பதிலளிநீக்கு//நிலா ரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் மேனகா.
அமைதி அப்பா said...
பதிலளிநீக்கு//எழுத்தாளர் நிலாரசிகன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றியும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.//
மிக்க நன்றி அமைதி அப்பா.
யாதவன் said...
பதிலளிநீக்கு//அருமை வாழ்த்துகள்//
நன்றி யாதவன்.
நேசமுடன் ஹாசிம் said...
பதிலளிநீக்கு//மற்றவரை பாராட்டும் நல்ல குணம் உங்களது வாழ்க வழமுடன் என்றும்//
மிக்க நன்றி ஹாசிம்.
சுந்தரா said...
பதிலளிநீக்கு//சிறப்பான விமர்சனம் அக்கா.
நிலாரசிகனுக்கு வாழ்த்துக்கள்!//
வாங்க சுந்தரா. மிக்க நன்றி.
சசிகுமார் said...
பதிலளிநீக்கு//நிலா ரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//
உங்கள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். நன்றி சசிகுமார்.
நர்சிம் said...
பதிலளிநீக்கு//இந்த பதிவை விட சிறந்த வாழ்த்து இருக்க முடியாது. நல்ல பகிர்வு.
வாழ்த்துகள் நிலா ரசிகன்.//
சகஎழுத்தாளராக மகிழ்ந்து அவருக்குத் தந்திருக்கும் வாழ்த்துக்கு நன்றி நர்சிம். உங்கள் ‘அய்யனார் கம்மா’வும் நான் வாசிக்க விரும்பி வாங்கக் கொடுத்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ந்யூபுக்லேண்டில் அப்போது ஸ்டாக் தீர்ந்து விட்டதென எண்ணுகிறேன். தொகுப்பு அடுத்த பதிப்புக்குத் தயாராவது போலத் தெரிகிறது. வாழ்த்துக்கள். விரைவில் வாசிப்பேன்.
இராமசாமி கண்ணண் said...
பதிலளிநீக்கு//கட்டாயம் படித்த தீர வேண்டிய புத்தங்களில் இதுவும் ஒன்றுங்க.. படிச்சுகிட்டே இருக்கேன்.. நல்ல விமர்சனம் :)//
சீக்கிரமா முடியுங்க:)! நன்றி இராமசாமி கண்ணன்.
நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
பதிலளிநீக்கு//கட்டாயமாக படிக்க வேண்டும் முத்துச்சரம். நிலாரசிகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//
அவசியம் வாசியுங்கள் நித்திலம். மிக்க நன்றி.
Someone like you said...
பதிலளிநீக்கு//Happy birthday to Nilarasikan !
இப்படி அநியாயமா சேமியா ஐஸ் ஞாபகத்தைக் கிளறி விட்டுட்டீங்களே ராமலக்ஷ்மி :)
பால் ஐஸ், க்ரேப் ஐஸ், கல்கோனா, சேமியா ஐஸ்.... hmmm.. those were the days :))
Very nice post - do they ship overseas?//
வாங்க வாங்க என்னைப் போல் ஒருவரே:)! இங்கேயே அதெல்லாம் இப்போ கண்ணுல காணக் கிடைக்கிறதில்லே. உங்களுக்கு எங்கிருந்து அனுப்புறது:))?
அம்பிகா said...
பதிலளிநீக்கு//நல்ல விமர்சனம். நிலா ரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//
நன்றி அம்பிகா.
November 23, 2010 8:10 PM
பதிலளிநீக்குமுத்துலெட்சுமி/muthuletchumi said...
//நல்லா இருக்கு ராமலக்ஷ்மி..
நிலாரசிகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும்..:)//
நன்றி முத்துலெட்சுமி:)!
சுசி said...
பதிலளிநீக்கு//அருமையான விமர்சனம் அக்கா. அவருக்கு சிறந்த ஒரு பரிசு குடுத்திருக்கிங்க.
நிலாரசிகனுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.//
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் அவரை மேலும் பல வெற்றிகளைக் காண வைக்கும். நன்றி சுசி.
goma said...
பதிலளிநீக்கு//தங்கள் இலக்கியப் பயணத்தில் அடுத்த மைல்கல்.....’விமரிசகர்’
வெற்றி மகுடத்தில் அடுத்த முத்து....
வாழ்த்துக்கள்.//
ஒவ்வொரு தொடக்கங்களிலும் உடனிருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி கோமா:)!
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//தாமதமாக வந்தாலும் செறிவான விமர்சனம்.//
ரொம்பத் தாமதம்தான். சமீபத்தில்தான் புத்தகம் வாசிக்க வாய்த்தது. ஆனால் அடுத்த தொகுப்புக்கான அறிவிப்புடன் இப்பதிவு அமைந்ததில் ஒரு திருப்தி:)! அவரது வயதை அறிய முயன்றபோது இன்றுதான் பிறந்தநாள் என்பதும் தெரிய வர, பரிசாகவும் ஆனது கூடுதல் சந்தோஷம்.
////புத்தக வெளிஈட்டுக்கே சென்றிருந்தேன். போலிஸ் ஆபிசர் ரவியே மிக அசந்து போய் வாழ்த்தினார். நிலாரசிகன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்//
இது குறித்து நிறைய சிலாகித்துச் சொன்னார் தோழி ஷைலஜா. சுருக்கமாகவே பதிந்துள்ளேன். நேரில் சென்றிருந்த நீங்களும் அதை உறுதி செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி மோகன் குமார்.
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//நர்சிம் said...
இந்த பதிவை விட சிறந்த வாழ்த்து இருக்க முடியாது. நல்ல பகிர்வு.]]
உண்மைதான். ரசித்து எழுதப்பட்ட விமர்சனம்.//
மிக்க நன்றி தமிழ் உதயம். ரசித்து வாசித்ததை அதே உணர்வுடன் பதிந்து விட்டேன்:)!
நிலாரசிகன் said...
பதிலளிநீக்கு//வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி:)
ராமலட்சுமி அம்மா..மிகவும் ரசனையாக எழுதியிருக்கிறீர்கள்..
நன்றிகள் பல..
நன்றியுடன்,
நிலாரசிகன்.//
நன்றி நிலாரசிகன். மேலும் உயரங்கள் தொட மீண்டும் என் வாழ்த்துக்கள்:)!
kggouthaman said...
பதிலளிநீக்கு//நிலா ரசிகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். புத்தக அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி.//
மிக்க நன்றி கெளதமன்.
வருண் said...
பதிலளிநீக்கு//புதுமையான முறையில் இந்த கதாசிரியருக்கு உங்க பொறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்க சான்றிதழால் இந்தப்புத்தகம் 1000 பிரதிகள் அதிகமாக விற்கும் என்பது என் நம்பிக்கை! :)//
நன்றி வருண்:)! ஒளிரும் நிலாவை டார்ச் அடித்துக் காட்ட முயன்றுள்ளேன். அவ்வளவுதான்! ஆனாலும் உங்கள் நல்வாக்கும் நம்பிக்கையும் பலிக்க வேண்டுமென்பதே என் ஆசையும்!
அன்பரசன் said...
பதிலளிநீக்கு//நிலா ரசிகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...//
நன்றிகள் அன்பரசன்.
ஹேமா said...
பதிலளிநீக்கு//நல்லதொரு கலைஞனை ஊக்குவிக்கும் விமர்சனம்.அவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.//
நன்றி ஹேமா.
Priya said...
பதிலளிநீக்கு//நிலா ரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!//
நன்றி ப்ரியா.
Balaji saravana said...
பதிலளிநீக்கு//நல்ல விமர்சனம். நிலா ரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//
நன்றிகள் பாலாஜி சரவணா.
"உழவன்" "Uzhavan" said...
பதிலளிநீக்கு//இப்படியெல்லாம் நண்பர் நிலாரசிகனின் அக்கதைத்தொகுப்பைப் பற்றி எழுதும் ஆசை எனக்கும் இருந்தது. எழுதத் தெரியாத்தால் அவரை நேரில் மட்டும் பாராட்டிவிட்டு இருந்துவிட்டேன். உங்களின் இந்தப் பதிவு கண்டு மகிழ்ச்சியே.
வாழ்த்துகள் நிலா!//
நேரிலும் இங்கும் நீங்கள் அளித்த பாராட்டுக்கள், உங்கள் நண்பர் மேலும் பல வெற்றிகளை அடைந்திட ஊக்கம் தந்திடும். நன்றி உழவன்.
Chitra said...
பதிலளிநீக்கு//....Best wishes to him! Convey our birthday wishes to him too. :-)//
நன்றி சித்ரா. நிச்சயமாய்:)!
cheena (சீனா) said...
பதிலளிநீக்கு//அன்பின் நிலாரசிகனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகளோடூ - புத்தக வெளியீட்டு விழா சிறக்கவும் வாழ்த்துகிறோம்.//
மிக்க நன்றி சீனா சார்.
தேனம்மை லெக்ஷ்மணன் said...
பதிலளிநீக்கு//சதீஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. பகிர்வும் விமர்சனமும் அருமை ராமலெக்ஷ்மி.//
ராஜேஷ் எனும் அவரது இயற்பெயரை அவசரத்தில் மாற்றி உச்சரித்து விட்டுள்ளீர்கள் என எண்ணுகிறேன்! கருத்துக்கு மிக்க நன்றி தேனம்மை!
கவிநயா said...
பதிலளிநீக்கு//நிலா ரசிகனின் எழுத்துகள் பற்றி மிகுந்த ரசனையுடன் பதிந்திருக்கிறீர்கள். அருமை ராமலக்ஷ்மி. நிலா ரசிகன் அவர்கள் மென்மேலும் வளரவும், அவருடைய பிறந்த நாளை முன்னிட்டும், அவருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.//
உங்கள் அன்பான நல்வாழ்த்துக்களை அவரிடம் சேர்ப்பித்து விடுகிறேன். மிக்க நன்றி கவிநயா:)!
goma said...
பதிலளிநீக்கு//ஒரு கை, பொரி போட்டதும் , தெப்பக்குளத்து மீன்கள் எல்லாம் அப்படியே கூட்டமாக பொரியை நோக்கி நீந்தி வரும் அழகை ,
’முத்துச்சரம் ’
’கொஞ்சம் வெட்டிப்பேச்சு
ஆகிய இரண்டு பதிவிலும் கண்டு ரசிக்கிறேன்.
இப்படிக்கு மீன்//
பதிவுலகில் நாம் எல்லோருமே அடுத்தவர் ஆக்கங்களை பகிர்வுகளைத் தேடிச் சென்றபடி இருக்கும் மீன்கள்தான். தொடரும் ஊக்கத்துக்கு என் நன்றிகள்:)!
நிலாரசிகன் said...
பதிலளிநீக்கு//ராமலஷ்மி அம்மா...சதீஷ் யார்? :)//
உங்கள் இயற்பெயரைதான் அவசரத்தில் அப்படிக் குறிப்பிட்டு விட்டார். வாழ்த்துக்கள் உங்களுக்கேதான்:)! வாங்கிக் கொள்ளுங்கள்!
ஜெஸ்வந்தி - Jeswanthy said
பதிலளிநீக்கு//நிலா ரசிகனும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.அருமையான விமர்சனம்//
மிக்க நன்றி ஜெஸ்வந்தி.
தமிழ்மணத்தில் வாக்களித்த 22 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 36 பேருக்கும் என் நன்றிகள்.
பதிலளிநீக்குநல்ல ஒரு அறிமுகம்...நன்றி.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
அடடா... தாமதமா வந்துட்டேன். ஆனாலும் நிலாரசிகனுக்கு என் வாழ்த்துக்கள். அவரது சிறுகதைகளைப் பற்றிய உங்களின் குறிப்புகள் அவற்றை படிக்கத் தூண்டுகின்றன, வாசிக்கிறேன். நல்ல உணர்வு.
பதிலளிநீக்கு@ தமிழ்க் காதலன்,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அவசியம் வாசியுங்கள்.
நல்ல விமர்சனம். உடனே வாங்கி படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம்.தொடருங்கள்!
பதிலளிநீக்குஉங்கள் விமர்சனத்தை படித்து முடித்த போது நிலா ரசிகனின் புத்தகத்தையும் படிக்க வேண்டுமென ஆவல் ஏற்பட்டுவிட்டது!!!
அருமையான விமர்சனம்,புத்தகம் வாங்கி படிக்க ஆவல் ஏற்படுத்திவிட்டது.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு@ அமுதா,
பதிலளிநீக்குஅவசியம் வாசியுங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்:)!
@ இசக்கிமுத்து,
பதிலளிநீக்குமிக்க நன்றி:)!
@ ஆசியா ஓமர்,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியா.
வாழ்த்துக்கள் சகோ
பதிலளிநீக்குஉங்களுக்கும் நிலவு ரசிகனுக்கும்
விஜய்
@ விஜய்,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீங்கள் எழுதியிருப்பதே ஒரு அருமையான சிறுகதையாக, சிறந்த கதையாக இருக்கிறது! உங்கள் மன உணர்வுகள் வழியே வந்த இந்த அழகிய பாராட்டைவிட அவருக்கு சிறந்த மகுடம் வேறு இருக்க முடியாது! அவரது கதைகளை அவசியம் வாங்கிப் படிக்கத் தூன்டுகிறது உங்களின் அருமையான எழுத்து!
பதிலளிநீக்குமுதலில் நிலாரசிகனுக்கு இப்படி ஒரு தொகுப்பு வெளியிட்டமைக்கு வாழ்த்து சொல்வதா, அவரது பிறந்த நாள் வாழ்த்து சொல்வதா, இல்லாவிடில் உங்க விமர்சனத்துக்கு பின்னர் விற்பனை அதிகமாக போகுதே அதுக்கு வாழ்த்து அவருக்கு சொல்லனுமா, பதிப்பகத்துக்கு சொல்லனுமா அல்லது இப்படி ஒரு விமர்சனம் செய்த உங்களுக்கு சொல்லனுமா என்கிற தவிப்பு தான் முதலில்....
பதிலளிநீக்கு@ மனோ சாமிநாதன்,
பதிலளிநீக்குமகிழ்ச்சியும் நன்றியும்.
@ அபி அப்பா,
பதிலளிநீக்குமிக்க நன்றி! வாழ்த்துக்களை அவருக்கு சொல்வோம் மேலும் பல வெற்றிகள் பெற்றிட:)!
வெயில் தின்ற மழை "
பதிலளிநீக்குஅழகான தலைப்பு .நிலாரசிகனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..
நிலா ரசிகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குராமலஷ்மி அவர்களுக்கு வணக்கம். புகைப்படம் எடுப்பதில் தான் வல்லுநர்என நினைத்திருந்தேன்.ஆனால் நூல் விமர்சனத்திலும் படு கில்லாடியாக இருக்கிறீர்கள்..தொடரட்டும் உங்கள் பணி.
பதிலளிநீக்குஅருமையான விமரிசனம். இந்தமுறை சென்னை விஸிட்டில் புத்தகத்தை வாங்கிருவேன்.
பதிலளிநீக்குநிலாரசிகனின் பிறந்தநாளுக்குக் கொஞ்சம்(?!) தாமதமான வாழ்த்து(க்)கள்.
பாரத்... பாரதி... said...
பதிலளிநீக்கு//வெயில் தின்ற மழை "
அழகான தலைப்பு .நிலாரசிகனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..//
ஆம் அருமையான தலைப்பு:)! உங்கள் பிறந்த தின வாழ்த்துக்களையும் அவரிடம் சேர்ப்பித்து விடுகிறேன்:)! முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாரதி.
ESWARAN.A said...
பதிலளிநீக்கு//ராமலஷ்மி அவர்களுக்கு வணக்கம். புகைப்படம் எடுப்பதில் தான் வல்லுநர்என நினைத்திருந்தேன்.ஆனால் நூல் விமர்சனத்திலும் படு கில்லாடியாக இருக்கிறீர்கள்..தொடரட்டும் உங்கள் பணி.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சார்:)!
துளசி கோபால் said...
பதிலளிநீக்கு//அருமையான விமரிசனம். இந்தமுறை சென்னை விஸிட்டில் புத்தகத்தை வாங்கிருவேன்.//
இதைவிட வேறென்ன வேண்டும் விமர்சனம் செய்த எனக்கு:)? மிக்க நன்றி மேடம்.