ஞாயிறு, 30 டிசம்பர், 2018

முகிழும் மொட்டும் மலரும் ஆண்டும்

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 45

#1
"வாழ்க்கை என்பது
வரையறையற்ற வாய்ப்புகளைக் 
கொண்டதொரு களம்."
- Deepak Chopra.


#2
"ஒன்றும் நிச்சயமற்ற நிலையில் 
எதுவும் சாத்தியம்."
_Margaret Drabble.


#3
"நம்முள் நன்றியுணர்வையும் 
பாராட்டும் பண்பையும்  
வளர்க்கும் பரிசு, 
இயற்கையின் அழகு."
_Louie Schwartzberg

திங்கள், 17 டிசம்பர், 2018

வெண் கன்னக் குக்குறுவான் - பறவை பார்ப்போம் (பாகம்:35)

#1
வெண் கன்னக் குக்குறுவான்
வேறு பெயர்கள்: 
சின்னக் குக்குறுவான், கழுத்தறுத்தான் குருவி

வெண் கன்னக் குக்குறுவான் பறவைகளின் பூர்வீகம் ஆசியா. இவை பரவலாக ஆசிய கண்டத்தின் வெப்பமண்டல நாடுகளில் காணப்படுகின்றன. இது கிளைகளைப் பற்றி அமரும் 'பாசரைன்' (Passerine) வகைப் பறவைகளுள் ஒன்றே. குக்குறுவான் என்கிற பெயர் அதன் தடித்த பெரிய அலகினாலும், அலகைச் சுற்றிச் சிலிர்த்து நிற்கும் முடிகளின் தோற்றத்தாலும் ஏற்பட்டது. இது பழங்களை உண்டு மரங்களில் வாழும் பறவை.

வெளுத்த இளஞ்சிவப்பில் தடிமனான அலகினைக் கொண்டவை.  இக்குக்குறுவானின் தலை, கழுத்து, மார்பு ஆகிய இடங்கள் பழுப்பு நிறத்தில் வெண்ணிறக் கீற்றல்களுடன் காணப்படும். எஞ்சிய சிறகுப் பகுதிகள் பச்சைப் பசேலென்ற புல்லின் நிறத்தைக் கொண்டிருக்கும். மரங்களில் அமர்ந்திருக்கையில் இலைகளோடு ஒத்த பச்சை நிறம் இவற்றின் இருப்பைக் காட்டிக் கொடுக்காது. அப்படியும் என் கேமராக் கண்கள் இதன் இருப்பைக் கண்டு பிடித்து விட்டன.

#2

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

எண்ணித் துணிக

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 43 
பறவை பார்ப்போம் - பாகம்: 34 
#1
“ரொம்பவும் சிந்திக்காதீர்கள்.
உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவற்றைத்
தயங்காமல் செய்திடுங்கள்."
புள்ளிச் சில்லை

#2
"சில நேரங்களில் உடனுக்குடன் எடுக்கும் முடிவுகள்
பின்னாளில் எடுக்கும் பல முடிவுகளை விடவும்
சிறப்பானதாகவே இருக்கும்."
மணிப் புறா

#3
"பார்த்துக் கொண்டே இருங்கள்..
என்னால் முடியும்.
முடித்துக் காட்டுவேன்."

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

மகிழ்ச்சியைத் தேடாதே

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 42

#1
“நீங்கள் தனியாகக் காணும் கனவு கனவாகவே இருந்து விடக் கூடும். 
மற்றவரோடு சேர்ந்து காணும் கனவு நிச்சயம் நனவாகும்” 
_  ஜான் லெனான்

#2
"உண்மையை அமைதியில்தான் அறிந்து கொள்ள முடியும். 
அசைவற்றுக் கவனித்து அறிந்திடுங்கள்."
_ லியோனார்ட் ஜேக்கப்சன்

#3
“வாழ்வில் நல்ல திருப்பங்களைக் கொண்டு வர

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin