இன்றைக்குதான் ரேணுவுக்கும் பிறந்தநாள்.
மணவாழ்வு முறிந்து முழுதாக இருபத்தியெட்டு வருடங்கள் ஆகிவிட்டிருந்தாலும், ஒரு முறையேனும் ரேணுவை நினைக்காமல் இளைய மகள் திரிஷாவின் பிறந்தநாளைக் கடக்க முடிந்ததில்லை கிஷோரால். அதுவும் நேற்று நடுங்கும் குரலில் வெகுநேரம் அம்மா அவன் கையைப் பிடித்தபடி ரேணுவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததில் அவள் நினைவு கூடுதலாகவே மனதை ஆக்ரமித்திருந்தது.


