Sunday, July 4, 2010

ஆயர்ப்பாடி மாளிகையில்...- தினமணி கதிர் சிறுகதை


"நீ போய் வண்டியில வெயிட் பண்ணு. அப்பாவிடம் ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு வந்துடுறேன்".

'அஞ்சு நிமிஷத்தில பேசி முடிக்கிற விஷயமா இது?' சுந்தரத்துக்கு மகனின் மேல் கோபம் கோபமாக வந்தது.

சுரேஷ் நீட்டிய கார்சாவியை வாங்கிக் கொண்ட ஸ்நேகா "இன்னும் நீங்க சாப்பிடலை மாமா. உங்களுக்காக வெயிட் பண்ணிப் பாத்துட்டு இப்பதான் சாப்பிட்டோம். இட்லி மேசையிலே இருக்கு. காஃபி ஃப்ளாஸ்கில வச்சிட்டேன். கரெண்ட் அடிக்கடி போகுது. மைக்ரோஅவன்ல சூடு பண்ண முடியாதே, அதான்.." என்றாள்.

"நீ கிளம்பும்மா. அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்" சிரமப்பட்டு புன்னகைத்தார். அவள் வெளியேறியதும் மறுபடி முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டார். சுரேஷின் கண்களைத் தவிர்க்க செய்தித்தாளைப் புரட்ட ஆரம்பித்தார்.

முன் தினம் இரவு படுக்கும் முன்னால் அவன் சொன்ன விஷயத்திலிருந்து இன்னும் அவரால் மீள முடியவில்லை. ஸ்நேகாவுடனான ஆறு வருட மனம் நிறைந்த தாம்பத்தியத்தில் சாத்தியப்படாது போன ஒரேஒரு ஆசையை, தத்து எடுப்பதன் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளத் தீர்மானித்திருப்பதாக நிறுத்தி நிதானமாகவே அவன் சொன்னாலும் அதிர்ந்துதான் போனார் சுந்தரம். அவரை அதிகம் பேசவும் விடாமல் 'முடிவை யோசிச்சு மெதுவா சொல்லுங்க' என அவன் தூங்கப் போய்விட்டான். பொட்டுத் தூக்கமில்லாமல் இவர் புரண்டு மனம் புழுங்கி எழுந்தது யாருக்குத் தெரியும்?

'மீனாட்சி உசுரோட இருந்திருந்தா அவளுக்கு புரியும். இந்தத் தடியனுக்கு எப்படி விளங்கும்?'

ஆனால் அவர் மனக்கிலேசத்தை விளங்கியவன் போலவே சின்னச் சிரிப்புடன் "நீங்க கையில் பிடிச்சிருக்கிறது நேத்தய பேப்பர். இதப் படியுங்க" என அன்றைய செய்தித்தாளை நீட்டினான் சுரேஷ். அவர் வாங்கிக் கொள்ளவில்லை.

"அப்பா இதப் பாருங்க. நீங்க என்ன முடிவெடுத்தீங்கன்னு நான் கேக்கப் போறதில்ல்லை இப்போ. அடுத்த வாரத்துக்குள்ள சொன்னா போதும். உங்க ஆசிர்வாதத்தோடதான் போய் பதிவு செய்யலாம்னு இருக்கோம். அதுக்காக இப்படி சாப்பிடாம எல்லாம் இருக்காதீங்க."

அனுமதியோடு என்று சொல்லாமல் ஆசிகளோடு என அவன் சொன்னதைக் கவனித்துக் கலவரமானவர் அவசரமாகத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, "ம்ம். இல்ல நானும் யோசிச்சேன். தத்து என்பதொண்ணும் புதிய விஷயமில்லதான். காலகாலமா நடக்குறதுதான். எம் பொண்ணாதான் ஸ்நேகாவைப் பார்க்கிறேன்னு உனக்கே தெரியும். உங்க ரெண்டு பேருக்கும் நல்லவழி காட்டத்தானே குத்துக்கல்லாட்டம் இருக்கேன் ஒங்கம்மா போனப் பொறவும்."

அவரது பீடிகை அவருக்கே பலவீனமாய்த் தெரிந்தது. இருந்தாலும் தொடர்ந்தார்: "நீ ஊம்னு சொல்லு. கிராமத்தில என் தம்பியோட பேரப் பசங்களில ஒண்ணைக் கூட்டிட்டு வந்துடலாம். இப்பதான் பொறந்த கைக்குழந்தை வேணுமின்னாலும், மூணாவது மருமக மாசமா இருக்கறதா போன தடவை ஃபோனில பேசினப்போ சொன்னான். அந்தக் குடும்பம் தலையெடுத்ததே என்னாலதான். ஒரு பய புள்ளயும் என் பேச்சைத் தட்ட மாட்டானுங்க."

ஆவலாக மகனைப் பார்த்தார்.

"வேண்டாமேப்பா. அம்மா அப்பா கூடப் பொறப்பு எல்லாம் நல்ல விதமா அமைஞ்ச குடும்பத்திலிருந்து பிரிச்சு ஒரு குழ்ந்தையைக் கூட்டி வருவதை விட இதெல்லாம் அமைய வாய்ப்பில்லாமல் போன ஒரு குழந்தைய அழைச்சுட்டு வந்து வளர்க்கதான் ரெண்டு பேரும் விரும்புறோம். எது சிறப்பு நீங்களே சொல்லுங்க."

"உங்களுக்கெல்லாம் பரந்த மனசு. நா யாரு? பழைய பஞ்சாங்கம். ஒரு குழந்தைக்கு வாழ்க்கையில்ல கொடுக்கறீங்க. அதைத் தடுக்கற பாவியா நான் எதுக்கு இருக்கணும் நடுவில இங்க"

"ஏன் பெரிய வார்த்தையெல்லாம்? நமக்கு மேலே ஒருத்தர் இருக்கையில யாருக்கு யார் வாழ்க்கை தர்றது? சொல்லப் போனா அம்மா அப்பாவா இருக்கிற வாய்ப்பையும் வாழ்க்கையையும் அந்தக் குழந்தைதான் எங்களுக்குத் தரப் போகுது. தாத்தான்னு உங்க மடியிலேறிக் கொஞ்சி விளையாடப் போகுது."

"நீ என்ன சொன்னாலும் எம் மனசு ஏத்துக்க மாட்டேங்குது. இரத்த சொந்தமில்லாத ஒரு உயிர்மேல பாசத்தைக் கொட்ட முடியும்னு எனக்குத் தோணலை".

"அப்போ அம்மாவை நீங்க நேசிச்சது பொய்யா?"

"இதென்ன எடக்குமுடக்கா? இரத்த சம்பந்தம் இல்லாட்டாலும் அந்தப் பந்தம் வேற. ஆயிரமானாலும் நம்ம மனுஷங்க. புள்ள விஷயம் அப்படியில்ல. ஒரு மண்ணுல துளிர் விட்டதை இன்னொரு மண்ணில நட்டு வச்சு, பாத்துப் பாத்து தண்ணி விட்டு வளர்த்தாலும் நமக்கு அது ஒட்டுமா? உறவாகுமா?"

"அப்படித் தோணலை எனக்கு. தேவகி வயித்தில பொறந்த கண்ணன் ஆயர்ப்பாடி மாளிகையில் அன்னை யசோதைக்கு இன்பத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கலையா? பாசமா இருக்கலையா? போங்கப்பா நீங்க சொல்லிக் கொடுத்த கதைகளை உங்களுக்குத் திரும்பச் சொல்ல வைக்கிறீங்களே?" மென்மையாகச் சிரித்தான் சுரேஷ்.

சுந்தரமா அசைந்து கொடுக்கும் பேர்வழி?

"இப்படியெல்லாம் விதண்டாவாதம் செஞ்சா மேலே நா சொல்ல என்ன இருக்கு? உங்க இஷ்டப்படியே செய்யுங்க. அப்படியே நெட்டுல எனக்கொரு டிக்கெட்டும் புக் பண்ணிடு. பெரியவனா இங்க வந்து உட்கார்ந்திருப்பதில் பிரயோசனமிருக்கணும். ஏதோ இருக்கிற காலம் வரைக்கும் உங்களை வழிநடத்த முடியுமேங்கிற திருப்திக்காகத்தான் கூட வாழ சம்மதிச்சேன். பேசாம ஊரைப் பாக்கவே போயிடுறேன்."

"ரொம்பக் கோபமாயிருக்கீங்க. நான் கிளம்புறேன். ஸ்நேகா இஸ் வெயிட்டிங். இப்போ தயவுசெஞ்சு சாப்பிடுங்க. இந்தப் பேச்சை இப்போதைக்கு விட்டுடுவோம்."

ப்போதைக்காமில்ல இப்போதைக்கு? எப்போது கேட்டாலும் என் பதில் இதுதான்’ நினைத்தபடி அமர்ந்திருந்தவரைக் கலைத்தது இண்டர்காம் அழைப்பு.

'யாராயிருக்கும்?'

அது சுமார் ஐநாறு வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு. ஊருக்குப் போயிடுறேன்னு ஜம்பமாய் சொன்னாரே தவிர மனதுக்குள் நடுக்கம்தான். மனைவி மீனாட்சியின் மறைவுக்குப் பிறகு கிராமத்தில் தனியாக இருக்கிறாரே என டெல்லியின் குளிருக்கு பெங்களூர் இவருக்கு தேவலாமாயிருக்கும் என ஒரே மாதத்தில் மாற்றல் பெற்றுக் கொண்டு, வந்த கையோடு இந்த ஃப்ளாட்டையும் வாங்கி, அவரைத் தன்னோடு அழைத்துக் கொண்டிருந்தான் சுரேஷ். மருமகள் ஸ்நேகாவின் கவனிப்பும் அனுசரணையும் இதுநாள் வரை ஊர் நினைப்பைத் தரவே இல்லை. அதுமட்டுமில்லாமல் கிராமத்து வாழ்க்கையை விட இந்த நகர வாழ்வு பிடித்துப் போய் அதில் அவர் ஐக்கியமாகி விட்டதும்தான் உண்மை.

சிறுவர் பூங்கா, முதியோர் பூங்கா, நீச்சல் குளம், விளையாட்டு மைதானம், சூப்பர் மார்க்கெட், காண்டீன், உடற்பயிற்சி நிலையம் என எல்லா வசதியும் வளாகத்தினுள்ளே கொண்ட அந்தக் குடியிருப்பில் ‘சீனியர் சிட்டிசன்ஸ்’ என ரொம்ப மரியாதையாய் அழைத்து நடத்தப் பட்டவர்களில் ஒருவராகத் தானும் இருப்பதில் அவருக்கு அதிபெருமிதம். கூடவே நல்ல நட்புகளும் கிடைத்திருந்தன. அவர்களோடு நடைப் பயிற்சிக்கு செல்வது, பழைய கதைகள் பேசுவது, பூங்காவுக்கு விளையாட வரும் குழந்தைகள அடித்துக் கொண்டால் அவர்களுக்குப் பஞ்சாயத்து பண்ணுவது, குடியிருப்பு நிர்வாக விவகாரங்களை இழுத்துப்போட்டு செய்வது என வாழ்க்கை வெகு சுவராஸ்யமாகி விட்டிருந்தது.

'செக்யூரிட்டி கேட்டிலிருந்து இருக்குமோ? இந்த நேரத்தில் நட்புகள் அழைக்காதே!' என அவர் நினைத்தது தப்பாக இருந்தது.

“என்ன சுந்தரம்? பையனும் மருமவப் பொண்ணும் ஆஃபிசுக்குப் போயாச்சா? உனக்கென்ன ப்ரோக்ராம்? எங்கூட ஏர்போர்ட் வரைக்கும் வர்றியா? எம்பேரனை கூப்பிட்டு வரணும்.”

தானிருக்கும் மனநிலையில் எங்காவது போய்வந்தால் தேவலாம் போலிருக்க 'சரி' என்றார். அவசரமாய் சாப்பிட்டுவிட்டு மறக்காமல் காஃபியையும் குடித்து விட்டுக் கிளம்பினார்.

ஹெ
ப்பால் ஃப்ளை ஓவரில் ஏறுகையில் வழக்கமாய் ரசிக்கும் ஏரியையும், நீலவானப் பின்னணியில் நிமிர்ந்து நின்றிருந்த இரட்டை வெள்ளைக் கோபுரங்களையும் ரசிக்கும் மனநிலை அன்று இல்லை. ஏதேதோ சொல்லிக் கொண்ட வந்த மூர்த்தியின் பேச்சிலும் மனது ஒட்டவில்லை.

மூர்த்தி கில்லாடி. என்னமோ சரியில்லை என்று கண்டு பிடித்து விட்டார். சுந்தரத்துக்கும்தான் நண்பர்களை விட்டால் யாருள்ளார்? சொந்தங்களிடம் சொல்லி அழ ஈகோ தடுக்கிறது. சின்னதாய் மூர்த்தி ‘என்னாச்சு சுந்து’ன்னு ஆதுரமாகக் கையை அழுத்திக் கேட்கவும் நெகிழ்ந்து போனார். ஒரு பாட்டம் சொல்லி முடிக்கையில் தழுதழுத்து "நான் எதுக்கு இவங்க கூட இருக்கணும். என் சொல்லுக்கு என்ன மதிப்பிருக்கு" அழுதே விட்டார் சின்னக் குழந்தையைப் போல.

"உன் சொல்லுக்கு மதிப்பில்லேங்கிறதுதான் இப்போ பிரச்சனையா?"

'நிச்சயமா இல்லை' என்பது போல வலதும் இடதுமாய் ஆட்டினார் தலையை மூக்கை உறிஞ்சிபடி.

"வழி நடத்த, வழி நடத்தன்னு ஒப்புக்குச் சொல்றியே தவிர வழிவிடாத நந்தி மாதிரியில்ல நடந்துக்குற?"

"நிறுத்துப்பா ட்ரைவர். அத்தனை தூரமில்லை. இப்படியே ஆட்டோப் பிடிச்சு வீட்டுக்குப் போறேன்."

சுர்ரென தலைக்கு ஏறிய கோபத்தில் கத்தினார் சுந்தரம் கரகரப்பாக.

"அதுக்குள்ள இப்படிக் கோச்சுக்கறியே. சரி சரி. நீ என் பேரனைப் பார்த்ததில்லையே. காட்டுறேன் பாரு."

தன் அலைபேசியின் சேமிப்பிலிருந்த படத்தைத் திறந்து காட்ட அதில் மெல்லியதாக மீசை முளைத்துப் பூனைக் கண்களுடன் பளீரென்ச் சிரித்தான் ஒரு வெளிநாட்டுச் சிறுவன். பதினைந்து வயது இருக்கலாம்.

"இவனா உங்க பேரன்?" குழப்பமாகிக் கேட்டார் சுந்தரம் "கோகுல் கோகுல்னு சொல்வீரே!"

"இவனும் என் பேரன். கோகுல் இல்லை மைக்கேல்."

என்ன சொல்லவெனத் தெரியாமல் சுந்தரம் முழிக்க,

"ஆச்சரியமா இருக்குல்ல. நம்ம ஃப்ரென்டுங்க யாருட்டேயும் இன்னும் சொல்லலை. நேரில வரவிட்டு முன்னே நிறுத்திக்கலாம்னுதான். இவன் என் மகள் வயித்தில பிறக்காத பிள்ளை. ஸ்டூடண்ட்ஸ் எக்ஸ்சேஞ்ச் ப்ரோகிராம்ல முதல்ல பேரன் கோகுல் யு.எஸிலிருந்து இதோ ஜெர்மனியில் இருக்கிற இந்த மைக்கேல் வீட்டுல போய் 3 மாசம் இருந்து அங்குள்ள ஸ்கூலுக்குப் போய்வர, அடுத்த வருஷத்தில அவன் என் மகள் வீட்டுக்கு வந்திருக்கான். கோகுலோட க்ளாஸிலேயே மூணு மாசம் ஒண்ணாப் படிச்சான். எந்த ஜன்மத்துப் பந்தமோ தெரியல. அப்படியே மகளுக்கு ரெண்டாவது பிள்ளையாகிட்டான். இது நடந்து ரெண்டு வருஷமிருக்கும்.

ஜெர்மனி திரும்பிய பிறகும் இந்த அம்மாவுடன் பேசாமல் ஒருநாள் கூட இருந்ததில்லை. அவனம்மா ரோஸி என் பெண்ணுக்கு சகோதரியாயிட்டா. மைக்கேல் தும்மினாலும் இருமினாலும் நம்ம நாட்டு வைத்தியம்தான் நடக்குது என் மகளிடம் கேட்டு. எங்களோடையும் அடிக்கடி பேசுவாங்க. இப்போ இந்த தாத்தா பாட்டியோடு சில நாள் இருந்துட்டுப் போகணுமின்னு ஆசைப்பட்டு கிளம்பி வந்துட்டிருக்கான்.

இதெல்லாம் சாத்தியமா இந்த மாதிரியான அன்பெல்லாம் சத்தியமான்னு விதண்டாவாதம் செய்ய ஆயிரம் பேர் இருக்காங்க. அவங்களுக்கு பதில் சொல்லிட்டிருக்க விருப்பமில்லை. அதனாலேயே இதை இத்தனை காலமும் உங்களுக்கெல்லாம் சொல்லலை. அன்பை அனுபவிச்சுப் பார்த்தால்தான் தெரியும். சொல்லிப் புரியவைக்க முயற்சிப்பது முட்டாள்தனம்தான் இல்லையா? இப்பப் பாரு இப்படி திடீர்னு பொறப்பட்டு பேரன் வரும் சந்தோஷத்துல திக்குமுக்காடி, ஏர்போர்ட் வரலைன்னுட்டு அவனுக்கு விதம் விதமா சமைக்க பம்பரமா சுத்திட்டிருக்கா நேத்துவரை கைவலிக்கு கால்வலிக்குன்னுட்டிருந்த என் வூட்டுக்காரி"

பகபகவென மூர்த்தி சிரிக்க தேசிய நெடுஞ்சாலையில் வெகுவேகமாய் வழுக்கிக் கொண்டு வந்த வாகனம் விமான நிலையத்தின் உள்ளிருந்த ஃப்ளைஓவரில் ஏறத் தொடங்கியிருந்தது.

ஆயர்ப்பாடி மாளிகைகள் அன்பாலே நிறைந்து விட்டால் அங்கே கிருஷ்ணன், பலராம் மட்டுமில்லாமல் அவர்கள் நண்பர்களும் யசோதைக்கு தாய்மையைத் தர முடிகிற அதிசயமும், குடும்பத்தையே குதூகலிக்க வைக்க முடிகிற அற்புதமும் சுந்தரத்துக்குப் பிரமிப்பைத் தந்தது.

“எறங்கு சுந்தரம் என்ன யோசன”

வளாகத்தின் வாசலில் வண்டி நின்றிருந்தது.

பேரனை வரவேற்கும் ஆவலில் மூர்த்தி இறங்கி அவசர அவசரமாய் நடக்க ஆரம்பிக்க, 'இந்த மனுஷனிடம் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. விடப்படாது இவரை' என்பது போலாக அவர் பின்னாலே ஓடிக் கொண்டிருந்தார் சுந்தரம்.

***
நன்றி தினமணிக் கதிர்!

4 ஜூலை 2010

 • தினமணி இணையதளத்திலும் வாசிக்கலாம் இங்கே.
 • கதையின் கடைசி வரிகளைக் கண்முன் கொண்டு வந்திருக்கும் கதிரின் ஓவியருக்கும் நன்றி!

68 comments:

 1. சிறுகதை அருமைங்க... வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் அருமையா இருக்கு

  ReplyDelete
 3. அருமையான கதை.ரொம்ப நல்லா இருக்கு!

  ReplyDelete
 4. அருமையான கதை அக்கா

  ReplyDelete
 5. நல்லா வந்திருக்கு ராமலஷ்மி

  ReplyDelete
 6. wishes ji, I used to read kadhir when Maalan & sudhaankan were with them. Now who is the editor.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்
  தினமணிக் கதிரில் பின்னூட்டம் போட்ட கையோடு வந்துவிட்டேன்

  ReplyDelete
 8. வெகு அழகான கதை ராமலக்ஷ்மி.'' சுர்ரென்று கோபம் ''என்னால் உடனே அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. ரத்தஅழுத்தத்திற்கு முதல் காரணம்.:) இந்த மாதிரி மனமாற்றம் எங்கும் தேவை.பிறகு எங்கும் ஆயர்பாடி தான்.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் அக்கா!

  ReplyDelete
 10. //ஆயர்ப்பாடி மாளிகைகள் அன்பாலே நிறைந்து விட்டால் அங்கே கிருஷ்ணன், பலராம் மட்டுமில்லாமல் அவர்கள் நண்பர்களும் யசோதைக்கு தாய்மையைத் தர முடிகிற அதிசயமும், குடும்பத்தையே குதூகலிக்க வைக்க முடிகிற அற்புதமும் சுந்தரத்துக்குப் பிரமிப்பைத் தந்தது.//

  உண்மை, முக்காலும் உண்மை. அனுபவத்தால் அறிஞர்கள் சொல்லும் வார்த்தைகள் என்றுமே பொய்யாவததில்லை.

  பார்த்தேன், உடன் படித்தேன், அத்தோடு ரசித்தேன்.

  பார்த்தேன்..உடன் படித்தேன்

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் அக்கா! சிம்பிளா அழகா இருக்கு!

  ReplyDelete
 12. வாழ்த்துகள். கதை அருமை.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள், அக்கா!

  Good one. :-)

  ReplyDelete
 14. பணம், வேறு பொருள் ஏதாவது என்றால் அது பெறுபவருக்கோ, தருபவருக்கோ சில நேரங்களில் சங்கடங்களைத் தரலாம். ஆனால் அன்பு ஒன்றுதான் தருபவர், பெறுபவர் இருவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும் என்பதை உணரவைத்த நெகிழ்ச்சியான கதை.

  ReplyDelete
 15. கதை அருமையா இருக்கு ராமலக்ஷ்மி.
  தலைப்பு மிகப் பொருத்தம்.

  ReplyDelete
 16. @ ராம்ஜி_யாஹூ

  //wishes ji, I used to read kadhir when Maalan & sudhaankan were with them. Now who is the editor.//

  மாலன் இப்போ புதியதலைமுறை பத்திரிகை எடிட்டரா இருக்கார். தினமணி நாலிதழ் எடிட்டர் வைத்தியநாதன் தான் கதிருக்கும் எடிட்டரா இருப்பாருன்னு நினைக்கிறேன்.சரியா தெரியலை.

  ReplyDelete
 17. கதை ரொம்ப அழகா வந்திருக்குங்க

  வாழ்த்துகள்

  ||அன்பை அனுபவிச்சுப் பார்த்தால்தான் தெரியும். சொல்லிப் புரியவைக்க முயற்சிப்பது ||

  ரொம்ப ரசிச்சேன் இந்த வரியை..

  என்னோட FB சுவர்ல போட்டிருக்கேன் இந்த வரியை

  ReplyDelete
 18. ரொம்ப அருமையா வந்திருக்குங்க...

  ReplyDelete
 19. உளவியல் சார்ந்த அணுகுமுறையும், லாவகமாக
  கதை சொல்லும் நேர்த்தியும் உங்களிடம் நிறைய
  இருக்கிறது ராமலக்ஷ்மி ! நல்ல சிறுகதை ..
  வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 20. தெளிவான நடை

  சின்ன மெச்சேஜ்

  சிம்ப்ளி சூப்பர்ப்...

  வாழ்த்துக்கள் மேடம்...

  ReplyDelete
 21. அருமையா இருக்கு அக்கா. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 22. ரொம்ப அருமையா வந்திருக்கு!பூங்கொத்து!

  ReplyDelete
 23. மைக்கேல் கோகுல் ஆனதை அழகாக சொன்னீர்கள்.
  சகாதேவன்

  ReplyDelete
 24. அருமை.

  அடிக்கடி இப்படி தினமணி கதிர்ல எழுதுறீங்களே. அந்த ரகசியத்தை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

  ReplyDelete
 25. கதை அருமையாக உள்ளது, வாழ்த்துக்கள் , ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 26. நேற்று இரவுதான் கதிரில் வாசித்தேன்.. அருமையான கதை... அன்பு அனுபவித்து உணரவேண்டியதுதான்... சொல்லில் உணர்த்துவதில்லை....

  நல்ல கதை.. வாழ்த்துக்களும்...

  ReplyDelete
 27. அருமையான கதை அக்கா

  ReplyDelete
 28. கதை சூப்பர். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 29. ரொம்ப நல்லாயிருக்கு அக்கா.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 30. அருமையான கதை.. ரொம்ப நல்லாருக்கு ராமலக்ஷ்மி மேடம். வாழ்த்துகள்

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள் அக்கா பதிவு வழக்கம் போல சூப்பர்

  ReplyDelete
 32. சூப்பரா இருக்குங்க.

  ReplyDelete
 33. நான் தான் லேட்டா வந்துட்டேன் போலிருக்கே! வாழ்த்துகள் ராமலஷ்மி!

  கதையிலேயும் கலக்கறீங்க! :-)

  ReplyDelete
 34. புரிதலை... உணர்த்தும் கதை மிக நல்லாயிருக்குங்க.

  ReplyDelete
 35. அமைதிச்சாரல் has left a new comment on your post "ஆயர்ப்பாடி மாளிகையில்...- தினமணிக்கதிர் சிறுகதை":

  சூப்பரா இருக்குங்க.

  Posted by அமைதிச்சாரல் to முத்துச்சரம் at July 6, 2010 9:17 AM

  ReplyDelete
 36. அஹமது இர்ஷாத் said...

  // சிறுகதை அருமைங்க... வாழ்த்துக்கள்..//

  மிக்க நன்றி இர்ஷாத். சிறுகதைக்கு என நீங்கள் அளித்த விருதினையும் முகப்பில் பதிந்து கொண்டேன்:)! உங்கள் நோக்கம் 'அதைப் பார்த்து அனைவரும் அடிக்கடி கதைகள் எழுத வேண்டும் என்பதே' எனக் குறிப்பிட்டிருந்தீர்கள் உங்கள் பதிவில். செய்கிறேன். நன்றி:)!

  ReplyDelete
 37. LK said...

  //வாழ்த்துக்கள் அருமையா இருக்கு//

  நன்றி LK உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

  ReplyDelete
 38. நானும் பின்னூட்டம் இட்டிருந்தேனே ராமலஷ்மி? பரவாயில்லை மறுபடி இங்கயும் சொல்லிக்கறேன் வாழ்த்துகள் நிறைய இதுபோல எழுதுங்கள்!

  ReplyDelete
 39. அபி அப்பா said...

  //அருமையான கதை.ரொம்ப நல்லா இருக்கு!//

  மிக்க நன்றி அபி அப்பா, தினமணி இணைய தளத்தில் பதிந்த கருத்துக்கும்.

  ReplyDelete
 40. சின்ன அம்மிணி said...

  // நல்லா வந்திருக்கு ராமலஷ்மி//

  நன்றி அம்மிணி.

  ReplyDelete
 41. அத்திரி said...

  // அருமையான கதை அக்கா//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அத்திரி.

  ReplyDelete
 42. ராம்ஜி_யாஹூ said...

  // wishes ji, I used to read kadhir when Maalan & sudhaankan were with them. Now who is the editor.//

  நீங்கள் கேட்டதும் கதிரினைப் புரட்டிப் பார்த்தேன். அதுபற்றிய விவரம் இல்லை. சரவணன் உங்களுக்குத் தந்திருக்கும் பதில் சரியாக இருக்கக்கூடுமென எண்ணுகிறேன். வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 43. goma said...

  //வாழ்த்துக்கள்
  தினமணிக் கதிரில் பின்னூட்டம் போட்ட கையோடு வந்துவிட்டேன்//

  என் படைப்புகள் எங்கு வெளியானாலும் அந்தந்த தளத்துக்கே சென்று தொடர்ந்து கருத்துக்கள் வழங்கி, தந்து வரும் ஊக்கத்திற்கு நன்றிகள் கோமா.

  ReplyDelete
 44. வல்லிசிம்ஹன் said...

  //வெகு அழகான கதை ராமலக்ஷ்மி.'//

  நன்றி வல்லிம்மா.

  //' சுர்ரென்று கோபம் ''என்னால் உடனே அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. ரத்தஅழுத்தத்திற்கு முதல் காரணம்.:)//

  :)!

  // இந்த மாதிரி மனமாற்றம் எங்கும் தேவை.பிறகு எங்கும் ஆயர்பாடி தான்.//

  திருவார்த்தைகள். மீண்டும் நன்றிகள்.

  ReplyDelete
 45. ஆயில்யன் said...

  // வாழ்த்துக்கள் அக்கா!//

  நன்றி ஆயில்யன்.

  ReplyDelete
 46. நானானி said...

  *** //ஆயர்ப்பாடி மாளிகைகள் அன்பாலே நிறைந்து விட்டால் அங்கே கிருஷ்ணன், பலராம் மட்டுமில்லாமல் அவர்கள் நண்பர்களும் யசோதைக்கு தாய்மையைத் தர முடிகிற அதிசயமும், குடும்பத்தையே குதூகலிக்க வைக்க முடிகிற அற்புதமும் சுந்தரத்துக்குப் பிரமிப்பைத் தந்தது.//

  உண்மை, முக்காலும் உண்மை. அனுபவத்தால் அறிஞர்கள் சொல்லும் வார்த்தைகள் என்றுமே பொய்யாவததில்லை.

  பார்த்தேன், உடன் படித்தேன், அத்தோடு ரசித்தேன்.//***

  வாழ்க்கை நமக்கு நிறையக் கற்றுக் கொடுக்கிறதுதானே? ரசித்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி. நன்றி நானானி.

  ReplyDelete
 47. தமிழ் பிரியன் said...

  // வாழ்த்துக்கள் அக்கா! சிம்பிளா அழகா இருக்கு!//

  மிக்க நன்றி தமிழ் பிரியன்.

  ReplyDelete
 48. தெய்வசுகந்தி said...

  //அருமையான கதை!!!!!!!!!!!//

  மிக்க நன்றி தெய்வசுகந்தி.

  ReplyDelete
 49. மாதேவி said...

  // வாழ்த்துகள். கதை அருமை.//

  மிக்க நன்றி மாதேவி.

  ReplyDelete
 50. Chitra said...

  // வாழ்த்துக்கள், அக்கா!

  Good one. :-)//

  நன்றி சித்ரா.

  ReplyDelete
 51. திருவாரூரிலிருந்து சரவணன் said...

  // பணம், வேறு பொருள் ஏதாவது என்றால் அது பெறுபவருக்கோ, தருபவருக்கோ சில நேரங்களில் சங்கடங்களைத் தரலாம். ஆனால் அன்பு ஒன்றுதான் தருபவர், பெறுபவர் இருவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும் என்பதை உணரவைத்த நெகிழ்ச்சியான கதை.//

  மிக்க நன்றி சரவணன், கருத்துக்கும் ராம்ஜியின் கேள்விக்கான பதிலைத் தந்திருப்பதற்கும்.

  ReplyDelete
 52. அம்பிகா said...

  // கதை அருமையா இருக்கு ராமலக்ஷ்மி.
  தலைப்பு மிகப் பொருத்தம்.//

  கதையுடன் தலைப்பையும் ரசித்தமைக்கு நன்றி அம்பிகா.

  ReplyDelete
 53. ஈரோடு கதிர் said...

  // கதை ரொம்ப அழகா வந்திருக்குங்க

  வாழ்த்துகள்

  ||அன்பை அனுபவிச்சுப் பார்த்தால்தான் தெரியும். சொல்லிப் புரியவைக்க முயற்சிப்பது ||

  ரொம்ப ரசிச்சேன் இந்த வரியை..

  என்னோட FB சுவர்ல போட்டிருக்கேன் இந்த வரியை//

  மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் கதிர்.

  ReplyDelete
 54. கமலேஷ் said...

  // ரொம்ப அருமையா வந்திருக்குங்க...//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கமலேஷ்.

  ReplyDelete
 55. James Vasanth said...

  // உளவியல் சார்ந்த அணுகுமுறையும், லாவகமாக
  கதை சொல்லும் நேர்த்தியும் உங்களிடம் நிறைய
  இருக்கிறது ராமலக்ஷ்மி ! நல்ல சிறுகதை ..
  வாழ்த்துக்கள் ..//

  மிக்க நன்றி ஜேம்ஸ்.

  ReplyDelete
 56. ப்ரியமுடன் வசந்த் said...

  // தெளிவான நடை

  சின்ன மெச்சேஜ்

  சிம்ப்ளி சூப்பர்ப்...

  வாழ்த்துக்கள் மேடம்...//

  நன்றி வசந்த்.

  ReplyDelete
 57. சுசி said...

  // அருமையா இருக்கு அக்கா. பாராட்டுக்கள்.//

  நன்றி சுசி.

  ReplyDelete
 58. அன்புடன் அருணா said...

  // ரொம்ப அருமையா வந்திருக்கு!பூங்கொத்து!//

  மிக்க நன்றி அருணா.

  ReplyDelete
 59. சகாதேவன் said...

  // மைக்கேல் கோகுல் ஆனதை அழகாக சொன்னீர்கள்.
  சகாதேவன்//

  மைக்கேலும் கோகுலத்துக் கண்ணன் ஆனான்:)! மிக்க நன்றி சகாதேவன்.

  ReplyDelete
 60. yeskha said...

  // அருமை.//

  நன்றி.

  //அடிக்கடி இப்படி தினமணி கதிர்ல எழுதுறீங்களே. அந்த ரகசியத்தை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.//


  கதிரில் இது என் இரண்டாவது படைப்புதானே? வார்ப்பு, யூத் விகடன், திண்ணை போன்றவற்றில் ‘அடிக்கடி’ என்றாலும் அர்த்தம் உள்ளது:)! கடந்த மாத 'வடக்கு வாசல்' இதழில் மூன்றாவது முறையாகவும்,கடந்த வார 'உயிரோசை'யில் இரண்டாவது முறையாகவும், இந்தவார 'வல்லமை' இதழில் முதன் முறையாகவும் என் படைப்புகள் வெளியாகியுள்ளன. அடிக்கடி, அதாவது விடாது முயற்சி செய்தால் திருவினையாகும். இதுதான் ரகசியம் எஸ்கா :)!

  ReplyDelete
 61. சே.குமார் said...

  // அருமையான கதை அக்கா//

  நன்றி குமார்.

  ReplyDelete
 62. சந்தனமுல்லை said...

  //நான் தான் லேட்டா வந்துட்டேன் போலிருக்கே! வாழ்த்துகள் ராமலஷ்மி!

  கதையிலேயும் கலக்கறீங்க! :-)//

  நன்றி முல்லை.

  ReplyDelete
 63. சி. கருணாகரசு said...

  // புரிதலை... உணர்த்தும் கதை மிக நல்லாயிருக்குங்க.//

  நன்றி கருணாகரசு.

  ReplyDelete
 64. ஷைலஜா said...

  // நானும் பின்னூட்டம் இட்டிருந்தேனே ராமலஷ்மி? பரவாயில்லை மறுபடி இங்கயும் சொல்லிக்கறேன் வாழ்த்துகள் நிறைய இதுபோல எழுதுங்கள்!//

  நேற்றைய ப்ளாகர் பிரச்சனையில் சிலரது பின்னூட்டங்கள் திரும்பி வந்தன. உங்களுடையது தவறியிருக்கலாம். உங்களது தொடர் ஊக்கமே என்னை சிறுகதை பக்கம் திருப்பியுள்ளது என்பதை நானும் இங்கயும் சொல்லிக்கறேன் ஷைலஜா:)!

  ReplyDelete
 65. ஆயர்ப்பாடி மாளிகைகள் அன்பாலே நிறைந்து விட்டால் அங்கே கிருஷ்ணன், பலராம் மட்டுமில்லாமல் அவர்கள் நண்பர்களும் யசோதைக்கு தாய்மையைத் தர முடிகிற அதிசயமும், குடும்பத்தையே குதூகலிக்க வைக்க முடிகிற அற்புதமும் //
  நெகிழ வைத்து விட்டீர்கள் ராமலெக்ஷ்மி

  ReplyDelete
 66. @ thenammailakshmanan

  மிக்க நன்றி தேனம்மை.

  ReplyDelete
 67. மின்னஞ்சலில்..

  //Hi Ramalakshmi,

  Congrats!

  Your story titled 'ஆயர்ப்பாடி மாளிகையில்...- தினமணிக்கதிர் சிறுகதை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 5th July 2010 05:12:02 AM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/293927

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team//

  தமிழிஷில் வாக்களித்த 27 பேருக்கும், தமிழ் மணத்தில் வாக்களித்த 10 பேருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin