புதன், 1 ஏப்ரல், 2009

இவர்களும் நண்பர்களே...

டவுள் நம் மீது கொண்ட கருணையினால் நல்ல குடும்பம் பெற்றோர் குழந்தைகள் அமைய பெறுகிறோம். ஆனால் அப்படி அமையப் பெறாதவர்... ஏதோ ஒரு சமயத்தில் கடவுளின் கருணை சற்றே குறைந்ததனால் இப்போது ஆதரவற்றோர் இல்லங்களில்.

இருப்பினும் இவர்களை என்றைக்கும் கடவுளின் குழந்தைகளாகவே அறியப் பட வைத்து பாசம் காட்டுவதும் கடவுள்தான். அவரது தேவைகளை உணர்ந்து தீர்த்து வைக்கத் தூதுவர்களாய் பிற மனிதர்களாகிய நம்மை அனுப்புவதும் கடவுள்தான்.

மனித நேயத்தால் இவர்களுக்கு உதவுபவர்கள் ஒரு பக்கமெனில், 'தர்மம் தலை காக்கும்' எனப் புண்ணியம் சேர்க்க உதவக் கிளம்புகிறவர்கள் ஒரு பக்கம். சரி இப்படியெல்லாம் சான்றோர் சொல்லி வைத்துச் சென்றிருக்கவில்லையாயின் பகிரும் எண்ணமே உதவும் உள்ளமே அற்றுப் போயிருக்கும் உலகத்தில்.

எப்படியோ இப்போது பலரும் இது போன்ற இல்லங்களுக்குத் தங்களாலான உதவிகளைச் செய்து வருவது மகிழ்ச்சிக்குரியது. அவரவர் அவரவருக்கு தெரிந்த முடிந்த வகையில் செய்து வரும் உதவிகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கு பகிர்ந்திட விளைகிறேன்.

நானறிந்த இல்லங்கள் இரண்டில் உதவிகளை ஏற்பதில் எதிர்மாறான விதிமுறைகள் இருந்து வருகின்றன. ஒன்று அரசு இல்லம். மற்றது தனியார் நடத்துவது. இரண்டுமே குழந்தைகளைப் பரமாரிப்பவை. அரசு தனியார் என்பதனாலன்றி அதை திறம்பட நடத்துபவரின் சில தனிப்பட்ட கொள்கைகளினாலேயே விதிமுறைகள் அமைந்துள்ளன என்பதையும் முதலிலேயே தெளிவு படுத்தி விடுகிறேன்.

நமக்குத் தேவையில்லாத பொருட்கள் எதுவாக இருந்தாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறார்கள் அரசு இல்லத்தில். நல்ல நாட்கள் அல்லது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் நினைவு நாட்கள் வருகையில் அந்த நேரத்து சாப்பாட்டுக்கான செலவினை ஏற்றுக் கொண்ட முறையிலோ அல்லது உணவை தயாரித்து எடுத்துச் சென்றோ அக்குழந்தைகளுக்கு தம் கையால் உணவளிக்க விருப்பப் பட்டால் அனுமதிக்கும் இவர்கள் குழந்தைகளுக்கு அருமையாக டேபிள் மானர்ஸ் பழக்கியிருக்கிறார்கள். மேசையிலே தத்தமது தட்டுடன் வரிசையாக ஒழுங்குடன் அமர்ந்து பிரார்த்தனைக்குப் பிறகே உண்ண ஆரம்பிக்கிறார்கள். சின்னப் பருக்கையும் சிந்தாமல் கவனமுடன் உண்பதும் எதையும் வீணாக்காது உணவை முடிப்பதும் கருத்தைக் கவர்கிறது.

இந்த இல்லத் தலைவி அடிக்கடி வலியுறுத்தும் இன்னொரு விஷயம், இனிப்புகள் வழங்குவதைத் தவிர்க்கச் சொல்வது. அதற்குப் பதில் அந்தந்த சீஸன் பழங்களை வாங்கிக் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறார். இது எத்தனை நல்ல யோசனை. இதை எல்லோரும் சற்று கவனிக்கலாமே.

சில நேரங்களில் வாங்கித் தரும் இனிப்புகள் என்னதான் மிக நல்ல பெயர் பெற்ற கடையில் வாங்கினாலும், பாதுகாக்கப் பட்ட முறை, செய்ய பயன்படுத்தப் பட்ட பொருட்களின் பரிசுத்தம் இதில் ஏதும் பிரச்சனை இருக்க நேர்ந்தால் நம்மால் அந்தக் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குக் கேடு வந்து விடவும் கூடாதல்லவா? நாமே வீட்டில் செய்ய முடிந்தால் நல்லது. அப்படி முடியாத பட்சத்தில், பழங்கள் சாலச் சிறந்ததல்லவா? இல்லை இனிப்புகள் தருவதே விருப்பம் அதில்தான் திருப்தி என்றால் அதன் தரத்தினை உறுதி செய்து கொள்வதுடன் கூடவே பழங்களையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம்தானே.

பழங்கள் விற்கும் விலையில் சாப்பாடு போக அதை வாங்கி வழங்குவது என்பது தங்களுக்குச் சிரமமானதாய் இருப்பதாகவும் அந்த இல்லத் தலைவி தெரிவித்தார். உண்மைதானே. ஆரோக்கிய வாழ்வுக்கு அத்தியாவசியமான பழங்களை அவர்கள் சுவைத்திட தருவதில் நமக்கும் கிடைக்கும் ஒரு மன நிறைவு.

ன்னொரு தனியார் இல்லத்தில் சில வருடங்கள் முன்னர் வரை நமக்குத் தேவையற்ற பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கி கொண்டார்கள்தான். ஆனால் இப்போது எந்த பழைய உடைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. தேவையற்ற ஸ்டேஷனரி அயிட்டங்கள் எதையும் உள்ளே அனுமதிப்பதில்லை. உதவ விரும்புபவர்கள் பணமாகவோ அல்லது புது உடைகள் அல்லது தைத்துக் கொள்ள புதுத் துணி புது பேனா பென்சில் நோட்டுப் புத்தகங்கள் இப்படித்தான் தர வேண்டும் என்கிறார்கள்.

'தானம் பெறும் நிலையில் இருந்து கொண்டு இந்த வெட்டிப் பந்தா தன்மானத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை' எனும் விமர்சனங்களுக்கு இவர்கள் வருத்தப் படவுமில்லை. இந்த இல்லத்தின் தலைவியை இது குறித்து நான் கேட்ட போது அவர் அளித்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாகவே தோன்றியது.

அவர் கூறியதாவது: "பெரும்பாலானவர்கள் உபயோகித்த தேவையில்லாத உடைகளை உதவுகிறோம் என்ற பெயரில் சலவைக்கு போடும் அழுக்கு மூட்டைகளாக மிக மோசமான நிலையில் வந்து இறக்கி வைத்து விட்டுச் செல்கிறார்கள். அதே போல இங்கு வந்து விழும் க்ரையான்ஸ், கலர் பென்சில், நோட்டுக்கள் போன்ற ஸ்டேஷனரிகளும் அப்படியே. பாதிக்கும் மேலானவை உபயோகிக்கவே முடியாத நிலையில் இருக்கும். இதை வகைப்படுத்தி எடுப்பதே மிகப் பெரிய வேலையாகி விடுகிறது சமயத்தில்.

மேலும் இதைக் காண நேரும் எம் குழந்தைகளுக்கு மற்றவர் இரக்கத்தில் அண்டிப் பிழைக்கிறோமோ என்கிற மனோபாவம் எழவும் வாய்ப்பிருக்கிறது. தங்கள் கையால் இனிப்புகளை விநியோகம் செய்ய விரும்புவதாகச் சொல்லி விட்டு குழந்தைகளை வரிசையாக நிற்க வைத்து ‘பொத் பொத்’ எனக் கையிலே போடுபவர்களும் சிலருண்டு. கருணை காட்டுவதாக எண்ணிக் கொண்டு எங்கள் குழந்தைகளைக் கையேந்துபவர்கள் போல நடத்துவதை எங்களால் அனுமதிக்க முடியவில்லை" என்றார்.

பின்னர் முத்தாய்ப்பாய் "எல்லோரும் அப்படி எனச் சொல்ல வரவில்லை. ஆனால் இது போன்ற சங்கடங்களைத் தவிர்க்கவே இப்போது எந்த பழைய பொருட்களையும் ஏற்பதில்லை" என முடித்தார். ஆக இவர் சொல்வது போன்ற விதிமுறைகள் சில இல்லங்களில் இருக்குமாயின் நம் உதவிகளை பணமாகவோ புது பொருட்களாகத் தருவதாகவோ அவர்களின் விதி முறைகளுக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டுமேயன்றி சிந்திக்காமல் அவர்களை விமர்சிக்கக் கூடாது.

பிறர் உதவியை எதிர்பார்த்துதான் இந்த இல்லங்கள் இயங்குகின்றன என்றாலும் இங்கிருப்பவர்கள் எவரும்.. குழந்தைகள் என்றன்றி ஆதரவற்ற பெண்கள், முதியோர்கள் அனைவருமே கருணைக்குரியவர்களாய் நடத்தப் படாமல் சக மனிதர்களால் நட்பும் அன்பும் பாராட்டப் படவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

நாம் நமது நண்பர்களுக்கு பரிசு வழங்க விரும்புகையில் அதை அழகான வண்ணத் தாளில் சுற்றி ரிப்பன் கட்டி எத்தனை அக்கறையாய் எடுத்துச் செல்கிறோம். அதே போல இவர்களையும் எண்ணி அந்த அக்கறையை இவர்களிடத்திலும் காட்டலாமே.

உபயோகித்த நமக்கு தேவையற்ற உடைகளாயின் சலவை செய்து தையலோ பொத்தானோ விட்டிருந்தால் தைத்து இஸ்திரி போட்டு அழகாய் கொடுக்கலாமே. விளையாட்டுப் பொருட்கள் போன்ற எதுவானாலும் உடையாமல் நல்லபடியாக இருந்தால் மட்டுமே கொடுங்களேன்.

நம் குழந்தைகளின் பழைய நோட்டுக்களில் எழுதாமல் எஞ்சிய சில தாள்களை நாமே கிழித்து பைண்டு செய்து கொடுக்கலாமே. சில பக்கங்களே எழுதியவையாயின் அவற்றை நாமே நீக்கி அட்டையிட்டு உபயோகிக்கும் நிலையில் தரலாமே. காலிலே சக்கரத்தை மாட்டிக் கொண்டு ஓடுகிற காலமிது எங்கே கிடைக்கும் இதற்கெல்லாம் நேரமென சிலர் நினைக்க வாய்ப்புண்டு. மனம் இருந்தால் உண்டுதானே மார்க்கம்?

அதே போல நம் கையால் உணவளிக்க விரும்பும் பட்சத்தில் நம் வீட்டு விருந்தினர்களை எப்படிக் கவனிப்போமோ அதே போல ஒவ்வொருவரின் கண்களையும் நேருக்கு நேர் சந்தித்துப் புன்னகைத்துக் கனிவுடன் பரிமாறுவதில் கவனம் எடுக்கலாமே. தருமம் அளிக்கப் படுகிறது என்கிற மாதிரியான எண்ணம் அவர்களுக்கு எழாதபடி பார்த்திடலாமே. இறைவனின் குழந்தைகளாகிய இவர்களும் நம் நண்பர்களேயன்றோ?

*** *** *** *** ***



*சர்வேசனின்சென்னை விஸிட்-உதவுக் கரங்கள்’. விஸிட் செய்யாதவர்கள் செய்யலாமே. அவரது பதிவினை மட்டுமல்ல, உதவுகின்ற கரங்கள் எங்கு இருப்பினும்...

*இப்பதிவின் பிரதிபலிப்பாக.. தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதாக இங்கு பின்னூட்டத்தில் வாக்களித்த படி.. 4 ஏப்ரல் 09 அன்று ஜீவன் அவரது 'கண்ணாடி' வலைப்பூவில் பதிந்த "இறைவனின் குழந்தைகள்"!

இனிப்புகள் வழங்குவதால் மட்டுமே ஆரோக்கியத்துக் கேடு வர வாய்ப்பென்பதில்லை, யார் யார் எவ்வளவு சாப்பிடுவார்கள் என்பதை அறியாமல், எதையும் வீணாக்காது சாப்பிட வேண்டும் எனப் பழக்கப் படுத்தப் பட்ட அக்குழந்தைகளுக்கு நாம் பரிமாறுவதும் சரியல்ல என்பதையும் புரிய வைத்துள்ளார். கண்டிப்பாக வாசித்துப் பாருங்கள். கவனிக்க வேண்டிய கருத்து அது. அதையும் மீறி ‘தம் கையால் பரிமாறினால்தான் புண்ணியம்’ என்பது போன்ற கொள்கையுடையோர் கூடவே நிர்வாகத்தினரை அருகில் வைத்துக் கொள்வதும், கடைசிப் பத்தியில் நான் சொல்லியிருக்கும் விஷயங்களைக் கவனத்தில் கொள்வதும் அவசியம்.

*ஜீவனைத் தொடர்ந்து இங்கே வாக்களித்தபடி ரம்யா அவர்கள் தன் ஐம்பதாவது பதிவாக 14 ஏப்ரல் 09 அன்று, தான் வாழும் அர்த்தமுள்ள வாழ்க்கையின் அனுபங்களைப் பதிந்திருக்கும் "ஆதரவற்ற குழந்தைகளும்-முதியவர்களும்".




விழிப்புணர்வினைக் கோரும் இப்பதிவு இன்னும் பலரைச் சென்றடைய வழி செய்திருக்கும் விகடனுக்கு நன்றி!

  • தமிழ்மணம் திரட்டி நடத்திய தமிழ்மணம் விருது 2009 போட்டியில், சமுக விமர்சனங்கள் பிரிவில் முதல் பரிசாக தங்கப் பதக்கத்தை பெற்ற பதிவு! தமிழ் மணத்துக்கும், வாக்களித்து பலரிடத்தில் பதிவின் நோக்கம் சென்றடைய உதவிய அனைவருக்கும் என் நன்றிகள்!

109 கருத்துகள்:

  1. அவர்களும் நண்பர்களே ...ரொம்ப நாளா "உதவும் கரங்கள் "போக நினைச்சதுண்டு ...இல்லனா "சிவானந்த குருகுலம் "...இடம் முக்கியமில்லை அங்கிருக்கும் மனிதர்களே முக்கியம்..பேசி ...சிரித்து ...கொஞ்சம் உதவி நம்மில் ஒருவராக அவர்களை உணர வைப்பது என்ற எண்ணமே முக்கியமாகப் பட்டது,பொருளாதார ரீதியாக அதிகம் உதவிட முடியாவிட்டாலும் மற்ற பிற உதவிகளை எல்லோருமே தாராளமாகச் செய்யலாம் தான்.

    நல்ல பதிவு ...அந்த தனியார் இல்லத் தலைவி சொன்னதில் எந்த வித தவறும் இல்லை .அது மிகச் சரியே.

    பதிலளிநீக்கு
  2. மிஞ்சியதைத் தான் தானமாக தர வேண்டும் என்ற ஒரு குறுகிய புத்தி மனிதர்களிடம் இருக்கிறது. குறிப்பாக பூகம்ப காலங்களில் வந்து குமியும் இது போன்ற பழைய பொருட்களாலேயே நிறைய பிரச்சினைகள் வந்தன. அளவாகக் கொடுத்தாலும் நல்ல புதிய பொருட்களைக் கொடுப்பதே சாலச் சிறந்தது.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு! உபயோகமான பதிவு! உயரிய கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு. மிகவும் பயனுள்ள கருத்துகளையும் யோசனைகளையும் முன் வைத்திருக்கிறீர்கள். சிந்தித்து செயல்படுவோம். மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. பொறுமையாக படித்து பின்னூட்டம் இடுகிறேன்

    பதிலளிநீக்கு
  6. "பெரும்பாலானவர்கள் உபயோகித்த தேவையில்லாத ....

    கொடுக்கும் பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும் என்பது முக்கியமே.

    தெரிந்த ஒருவர் சிறிதுகாலத்திற்கு முன்பு தாங்கள் பார்ப்பதற்கு சிறிய கறுப்பு வெள்ளை ரிவியும் நிலையத்திற்கு பெரிய கலர் ரிவியும் அன்பளிப்பு செய்திருந்தார்.

    இப்படியான நல்ல உள்ளங்களை வாழ்த்த வார்த்தைகள் நம்மிடம் ஏது.

    பதிலளிநீக்கு
  7. நல்ல சிந்தனையைத்தூண்டும்கருத்துகள் ராமலஷ்மி!

    பதிலளிநீக்கு
  8. தங்கள் கருத்துகள் ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான். இதுபோன்ற அமைப்பிற்கு ஒருமுறை உதவி செய்து பாருங்கள். அந்த நிமிடங்களில் உங்கள் மனது உங்களிடம் இருக்காது. எனது குழந்தையின் பிறந்த நாளுக்கு காலை சிற்றுண்டி அளித்தேன். அந்த குழந்தைகள் 'தேங்க்ஸ் அண்ணா' என்று ஒரு வார்த்தைகள் சொன்னார்கள். அந்த நிமிடம் நான் நானாக இல்லை. ஒவ்வொரு நாளும் இவர்களுக்கு நம்மால் உதவ முடியாவிட்டாலும், திருமணநாள், பிறந்தநாளுக்கு உதவலாம். முயற்சி செய்யுங்கள்!

    பதிலளிநீக்கு
  9. //மேலும் இதைக் காண நேரும் எம் குழந்தைகளுக்கு மற்றவர் இரக்கத்தில் அண்டிப் பிழைக்கிறோமோ என்கிற மனோபாவம் எழவும் வாய்ப்பிருக்கிறது. தங்கள் கையால் இனிப்புகளை விநியோகம் செய்ய விரும்புவதாகச் சொல்லி விட்டு குழந்தைகளை வரிசையாக நிற்க வைத்து ‘பொத் பொத்’ எனக் கையிலே போடுபவர்களும் சிலருண்டு. கருணை காட்டுவதாக எண்ணிக் கொண்டு எங்கள் குழந்தைகளைக் கையேந்துபவர்கள் போல நடத்துவதை எங்களால் அனுமதிக்க முடியவில்லை" என்றார்.//

    உண்மை!

    //நம் வீட்டு விருந்தினர்களை எப்படிக் கவனிப்போமோ அதே போல ஒவ்வொருவரின் கண்களையும் நேருக்கு நேர் சந்தித்துப் புன்னகைத்துக் கனிவுடன் பரிமாறுவதில் கவனம் எடுக்கலாமே.//


    மனம் நிறைவு தந்தது

    நானும் சில சில சின்ன உதவிகள் செய்திருக்கிறேன்!

    வருடத்திற்கு ஒரு முறையாகிலும் உதவி செய்யலாம் - வசதி குறைவுடையவர்கள்!

    பதிலளிநீக்கு
  10. நல்லகருத்துக்களை கொண்ட பதிவை கொடுத்து இருக்கிறீர்கள் அக்கா. இது போன்ற கருத்துக்களை மக்களிடத்தில் எடுத்துசெல்வது முக்கியமானதும் இப்போது எல்லோருடைய கடமையும் கூட.

    பதிலளிநீக்கு
  11. /சின்னப் பருக்கையும் சிந்தாமல் கவனமுடன் உண்பதும் எதையும் வீணாக்காது உணவை முடிப்பதும் கருத்தைக் கவர்கிறது.//

    தலை வணங்குகிறேன்.

    //இந்த இல்லத் தலைவி அடிக்கடி வலியுறுத்தும் இன்னொரு விஷயம், இனிப்புகள் வழங்குவதைத் தவிர்க்கச் சொல்வது. அதற்குப் பதில் அந்தந்த சீஸன் பழங்களை வாங்கிக் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறார். இது எத்தனை நல்ல யோசனை. இதை எல்லோரும் சற்று கவனிக்கலாமே.//

    நிச்சயம் நல்ல யோசனை. தரமற்ற இனுப்புவகைகளால் உடல் நிலை பாதிக்க வாய்ப்பிருப்பது மட்டுமில்லாமல் அதை குணப்படுத்த மேலும் நிதிச் சுமை ஏற்படும். ஆகவே பழங்கள் சரியான தேர்வே. அதைவிட நிதியாக கொடுபப்து தான் மிகச் சிறந்தது. தேவைக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.

    அந்த தனியார் இல்லத் தலவி சொல்லி இருப்பது 100 சடவீதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. அந்த குழந்தைகள் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் எதையும் தவிர்க்க வேண்டும்.

    தொடர்ந்து மிக அற்புதமான பதிவுகளாக எழுதுகிறீர்கள். பொறாமையுடன் வாழ்த்துக்கள் அக்கா. :)

    பதிலளிநீக்கு
  12. பிரண்ட் ! சூப்பர் பதிவு இது இது பத்தி சொல்ல வேண்டியது அதிகம் இருக்கு தனி மடல் செய்கிறேன் இப்ப நேர்ரம் இல்லை!

    பதிலளிநீக்கு
  13. அன்பின் ராமலக்ஷ்மி,

    மிகவும் நல்லதொரு பதிவு.
    //'தானம் பெறும் நிலையில் இருந்து கொண்டு இந்த வெட்டிப் பந்தா தன்மானத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை' எனும் விமர்சனங்களுக்கு இவர்கள் வருத்தப் படவுமில்லை.//

    அந்தத் தலைவியைப் பாராட்டுகிறேன். கிழிந்த கந்தல் உடைகள், உடைந்த பொருட்களெனப் பல தம் கண்முன்னாலே வகைபிரிக்கப்பட்டு தமக்கு பகிரப்படும்போது அக்குழந்தைகள் மனதில் அவர்கள் அறியாமலேயே கழிவிரக்கமும் ஒருவித தாழ்வுமனப்பான்மையும் தோன்றிவிடுகிறது. அது அவர்களது தொடர்ந்த ஆரோக்கியமான மன,உடல்வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பாக அமைந்துவிடுகிறது. அந்தத் தலைவி இதைக் கவனத்தில் கொண்டிருக்கிறார்.

    உங்கள் பதிவும் எழுத்தும் நல்ல சிந்தனையை விதைக்கிறது சகோதரி.
    பாராட்டுக்களும் நன்றியும் உரித்தாகட்டும் !

    பதிலளிநீக்கு
  14. (((பிறர் உதவியை எதிர்பார்த்துதான் இந்த இல்லங்கள் இயங்குகின்றன என்றாலும் இங்கிருப்பவர்கள் எவரும்.. குழந்தைகள் என்றன்றி ஆதரவற்ற பெண்கள், முதியோர்கள் அனைவருமே கருணைக்குரியவர்களாய் நடத்தப் படாமல் சக மனிதர்களால் நட்பும் அன்பும் பாராட்டப் படவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.))).

    இந்த சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளபட்ட காரணம் நம்மை போன்ற சகமனிதர்களே தானே மேடம்....சுயமரியாதைக்கு ஏற்ற தாழ்வுகள் கிடையாது.விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.

    பதிலளிநீக்கு
  15. //நாம் நமது நண்பர்களுக்கு பரிசு வழங்க விரும்புகையில் அதை அழகான வண்ணத் தாளில் சுற்றி ரிப்பன் கட்டி எத்தனை அக்கறையாய் எடுத்துச் செல்கிறோம். அதே போல இவர்களையும் எண்ணி அந்த அக்கறையை இவர்களிடத்திலும் காட்டலாமே.//

    200% வழிமொழிகிறேன்...இதை நாம் வேண்டுகோளாக நினைக்கும் அளவிற்கு நடந்து கொள்பவர்களை நினைத்தால் கடுப்பாக தான் உள்ளது.

    கொடுப்பதை ஒரு மனநிறைவுடன், இதை போல நாகரீகமான முறையில் பொருட்களை கொடுப்பதே ஒருவருக்கு அழகு.

    எதோ நானும் உதவி செய்கிறேன் பேர்வழி என்று இதை போல செய்வது.. அவர்களை அசிங்கப்படுத்துவது போல தான்..அவர்கள் இதையும் ஏற்று கொள்ளும் நிலையில் இருந்தாலும் அதற்காக இவ்வாறு செய்வது கீழ்த்தரமான செயலாக தான் உள்ளது.

    //அதே போல நம் கையால் உணவளிக்க விரும்பும் பட்சத்தில் நம் வீட்டு விருந்தினர்களை எப்படிக் கவனிப்போமோ அதே போல ஒவ்வொருவரின் கண்களையும் நேருக்கு நேர் சந்தித்துப் புன்னகைத்துக் கனிவுடன் பரிமாறுவதில் கவனம் எடுக்கலாமே. தருமம் அளிக்கப் படுகிறது என்கிற மாதிரியான எண்ணம் அவர்களுக்கு எழாதபடி பார்த்திடலாமே. இறைவனின் குழந்தைகளாகிய இவர்களும் நம் நண்பர்களேயன்றோ?//

    கண்டிப்பாக

    நல்ல பதிவு ராமலக்ஷ்மி

    பின் குறிப்பு

    தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு என்றாலும், தன்னுடைய பிரச்சனைகள் அனைத்தும் முடிந்த பிறகு தான் ஒருவருக்கு உதவி செய்வேன், தனக்கு பணம் தேவைக்கு அதிகமாக இருந்தால் தான் உதவி செய்வேன் என்ற எண்ணம் கொண்டவர்கள் எந்த காலத்திலும் மற்றவர்களுக்கு உதவ முடியாது..

    பதிலளிநீக்கு
  16. பழசோ புதுசோ, முன்னாலேயே என்ன வேணும்ன்னு ஒரு வார்த்தை கேட்டு அத சம்பாதிச்சு கொண்டு கொடுக்கலாம்.
    சுனாமி சமயத்திலே கேக்காமலே பழைய துணிகள் மலை மலையா குவிஞ்சது. பாதிக்கப்பட்ட மக்களோ பழசெல்லாம் போட மாட்டாங்க.
    எல்லாத்தையும் வித்து காசாக்கி சுனாமி நிதில சேக்கிறதா போச்சு.

    பழைய விஷயங்களை ரீசைக்கிள் பண்ணரதையே ஒரு சர்வீஸா கூட செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  17. Thanks for the post, very good thought - I agree , I used to do my part now and then when I was in chennai - Now I could only transfer money :)

    பதிலளிநீக்கு
  18. எல்லோரும் me the 1st அப்படின்னு ஒரு பின்னூட்டம் போடுவாங்க.

    நான் கொஞ்சம் different.

    உங்கள் புரொஃபைலைப் பார்த்த 3400 (மூவாயிரத்து நானூறாவது) ஆள் நான்.

    இது எப்படி இருக்கு.

    me the 3400th.

    howzzat?

    Thanks..

    பதிலளிநீக்கு
  19. மேடம்

    நல்ல பதிவு

    நானும் வெகுநாளாய் (சொல்லக்கூடாதுதான்), பலருக்கும் உதவி வருகிறேன். இது இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

    என் சுற்றம், சூழல் போக, நண்பர்கள் வட்டத்தின் உறவினர்கள் மற்றும் பல இடங்களில் உதவி செய்ததுண்டு.

    எங்கள் மணவிழா, எங்கள் சுட்டி பையனின் பிறந்த நாள் விழா போன்ற நிகழ்வுகள் இதுபோன்ற இல்லங்களிலே கொண்டாடப்படுகிறது. எப்படி என்றால், அவனின் பிறந்த நாள் அன்று, காலை கோவிலில் அர்ச்சனை, மதியம் இது போன்ற ஒரு இல்லத்திற்கு சென்று, அவர்களுக்கு உணவிட்டு, என் பையனை அவர்கள் ஆசீர்வதிக்க, பின் சாயங்காலம் பையனின் நண்பர்கள் மற்றும் வீட்டை சுற்றி உள்ளோர் பங்கேற்பது என்று, இப்படி போகும் அந்த நாள்.

    பதிலளிநீக்கு
  20. தருமம் என்றால் என்ன என்பதை ஒவ்வொருவரும் புரிந்து அதற்கேற்ப தான தருமம் செய்ய முறபடவேண்டும் என்ற கருத்தை மிக அழகாக வலியுறுத்தியிறீர்கள்.

    தான் உபயோகிக்க இயலாது என்று குப்பையிலே தூக்கிப்போடும் அளவிற்கு இருக்கும் கந்தல்களை தானம் என கருதுவது மனித நேயம் அறவே இல்லை. எது இல்லாமல் தான் இருக்க முடியாதோ அதைத் தருவது தான் தானம்
    தருமம். தா என கைகள் இரண்டையும் தன் முன் நீட்டியவனுக்குத் தன் காது குண்டலங்களையும் வெட்டித் தந்த‌
    கர்ணன் செய்தது தானம். கொடுத்த வாக்கினைக் காப்பாற்றியே தீரவேண்டுமென்ற உறுதியுடன் வந்து நின்ற
    வாமனிடம் தன் தலையைக் காட்டி இதோ இதில் உனது மூன்றாவது அடியை வைத்துக்கொள் எனச் சொன்ன‌
    மஹாபலி செய்தது தானம்.

    இருப்பினும் இவை எல்லாம் 2009 கி.பி. ல் நடக்கும், நடக்கவேண்டுமென நினைப்பது கனவு காண்பது போல்தான்.
    ஈகை என்றால் என்ன என்பது பற்றி எனது வலையில் பல மாதங்கள் முன்பு ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

    / http://www.blogger.com/post-edit.g?blogID=6816844899156699718&postID=6831711452837766335//

    நேரம் கிடைக்கும்பொழுது பார்க்கவும்.

    நிற்க. சென்னையை அடுத்த திருனின்ற வூர் அருகில் கசுவா என்னும் கிராமத்தில் சேவாலயா என்னும் தொண்டு
    நிறுவனம் மிகச்சிறப்பாக கடந்த 10 ஆண்டுகட்கு மேலாகச் செயல்படுகிறது. அந்த வட்டாரத்தில் இருக்கும் எல்லாச் சிறுவர்களுக்கும் கல்வி ப்ள்ஸ் டூ வரை அளிக்கப்படுகிறது. இப்பள்ளி கடந்த மூன்றாண்டுகளாக ப்ள்ஸ் டூ வில் நூறு
    விழுக்காடு வெற்றிதனை ப் பெற்று இருக்கிறது. ப்ளஸ் டு முடித்தபின் தகுந்த மாணவர்களை பொறி இயல் மற்றும்
    மருத்துவக் கல்லூரியில் சேர்க்க பொருளுதவி செய்கிறது. இதைத் தவிர முதியோர் இல்லம் ஒன்றும் நடத்திவருகிறது. இதில் படித்து ப் பயனடைந்த மென் பொருள் வல்லுனர் ஒருவர் தனது மாத வருவாயில் பாதியை இப்பள்ளிக்கு
    நன்கொடையாக வழங்குகிறார்.

    இந்த நிறுவனத்தின் போற்றத்தக்க செயல் பாடுகளை இங்கே கவனிக்கவும்:

    www.sevalaya.org


    பாரதி சொன்னாரே:
    நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!

    நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!!

    அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!


    அது போன்று , பொருள் தான் தானம் தரவேண்டும் என்பதில்லை. தாம் பெற்ற கல்வியை இச்சிறுவர்களுக்குப் புகட்ட முற்படலாம். மருத்துவர்கள் தங்களுக்கு வரும் சாம்பிள் மருந்துக்ளை இது போன்ற‌
    தொண்டு நிறுவனங்களுக்குத் தரலாம்.

    சுப்பு ரத்தினம்.
    ஸ்டாம்ஃபோர்டு,

    பதிலளிநீக்கு
  21. //அந்த குழந்தைகள் 'தேங்க்ஸ் அண்ணா' என்று ஒரு வார்த்தைகள் சொன்னார்கள். அந்த நிமிடம் நான் நானாக இல்லை.//

    பதிவுக்கு பலம் சேர்த்த பின்னூட்ட வரிகள். படிக்கும்போதே சிலிர்க்கிறது. படித்துவிட்டு இருந்துவிடாமல் உதவவும் செய்வோம்.

    பதிலளிநீக்கு
  22. // அதற்குப் பதில் அந்தந்த சீஸன் பழங்களை வாங்கிக் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறார். இது எத்தனை நல்ல யோசனை. இதை எல்லோரும் சற்று கவனிக்கலாமே.//

    இதுகூட நல்ல யோசனைதான்

    தமிழ்பிரியன் சரியாச்சொன்னீங்க.

    இதெல்லாம் ஒருவகை தானம்.
    நம்ம இம்சை & கோ பாருங்க இந்தவருசம் என்ன கலக்குகலக்கிருக்காங்கன்னு.

    முத்தானா பதிவுங்க.

    பதிலளிநீக்கு
  23. மிக அவசியமான பதிவு மேடம்.

    /*தருமம் அளிக்கப் படுகிறது என்கிற மாதிரியான எண்ணம் அவர்களுக்கு எழாதபடி பார்த்திடலாமே. இறைவனின் குழந்தைகளாகிய இவர்களும் நம் நண்பர்களேயன்றோ*/
    நிச்சயமாக... இக்கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி. அக்குழந்தைகளைக் காணச் செல்லும் பொழுது சின்ன சின்ன உரையாடலில் கூட அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியை என்னென்பது? செய்யும் உதவியை திருந்தச் செய்வ்வதே நன்று

    பதிலளிநீக்கு
  24. மிஸஸ்.தேவ் said...

    //அவர்களும் நண்பர்களே ...ரொம்ப நாளா "உதவும் கரங்கள் "போக நினைச்சதுண்டு ...இல்லனா "சிவானந்த குருகுலம் "...இடம் முக்கியமில்லை அங்கிருக்கும் மனிதர்களே முக்கியம்..//

    சரியாகச் சொன்னீர்கள்.

    //பேசி ...சிரித்து ...கொஞ்சம் உதவி நம்மில் ஒருவராக அவர்களை உணர வைப்பது என்ற எண்ணமே முக்கியமாகப் பட்டது//

    இதைத்தான் அவர்களும் எதிர்பார்த்து ஏங்குகிறார்கள்.

    //பொருளாதார ரீதியாக அதிகம் உதவிட முடியாவிட்டாலும் மற்ற பிற உதவிகளை எல்லோருமே தாராளமாகச் செய்யலாம் தான். //

    மிகச் சரி, நம் நேரத்தை நட்புடன் பகிர்ந்திடலாமே.

    //நல்ல பதிவு ...அந்த தனியார் இல்லத் தலைவி சொன்னதில் எந்த வித தவறும் இல்லை .அது மிகச் சரியே.//

    உகந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி மிஸஸ். தேவ்.

    பதிலளிநீக்கு
  25. தமிழ் பிரியன் said...

    //மிஞ்சியதைத் தான் தானமாக தர வேண்டும் என்ற ஒரு குறுகிய புத்தி மனிதர்களிடம் இருக்கிறது. குறிப்பாக பூகம்ப காலங்களில் வந்து குமியும் இது போன்ற பழைய பொருட்களாலேயே நிறைய பிரச்சினைகள் வந்தன. அளவாகக் கொடுத்தாலும் நல்ல புதிய பொருட்களைக் கொடுப்பதே சாலச் சிறந்தது.//

    புதிதாக வாங்கித் தர வசதியில்லாதவர்கள் உபயோகித்ததைக் கொடுக்க நினைப்பதை குற்றமாகவும் சொல்ல முடியவில்லை. ஆனால் அவை கொடுக்கும் நிலையில் இருக்க வேண்டும் அல்லவா? அப்படி இல்லாவிட்டால் கொடுக்காமலிருப்பதே சாலச் சிறந்தது. நீங்கள் சொன்னாற் போல பூகம்ப கால மீட்பு பணிகளுக்கு மத்தியில் நிச்சயமாய் இந்த் மாதிரி குவியும் பழைய பொருட்களால் நன்மையை விட சிரமங்களே அதிகம். இதை யோசித்து மக்கள் செயல் பட வேண்டும். கருத்துக்கு நன்றி தமிழ் பிரியன்.

    பதிலளிநீக்கு
  26. சந்தனமுல்லை said...

    //நல்ல பதிவு! உபயோகமான பதிவு! உயரிய கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி!//

    நல்லது சந்தனமுல்லை. கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. கவிநயா said...

    //அருமையான பதிவு. மிகவும் பயனுள்ள கருத்துகளையும் யோசனைகளையும் முன் வைத்திருக்கிறீர்கள். சிந்தித்து செயல்படுவோம். மிக்க நன்றி ராமலக்ஷ்மி.//

    நன்றி கவிநயா. கருத்துக்களை ஏற்றுக் கொண்டதோடு சர்வேசனின் உதவும் கரங்கள் பதிவினை விஸிட் செய்தமைக்கும் என் நன்றிகள். செல்லும் வழியிலிருந்து தள்ளியிருநதே உதவவும் வழி வகுக்கும் பல தகவல்கள் நிறைந்த பதிவு. அது உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பது கண்டு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  28. கிரி said...

    //பொறுமையாக படித்து பின்னூட்டம் இடுகிறேன்.//

    பொறுமையாகப் படிக்க வேண்டிய விஷயமே இது. அவ்வாறே படித்து அருமையான கருத்துக்களைப் பகிர்ந்தும் கொண்டிருக்கிறீர்கள், நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  29. ♥ தூயா ♥ Thooya ♥ said...

    //arumaiyana pathivu//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தூயா.

    பதிலளிநீக்கு
  30. மாதேவி said...

    //"பெரும்பாலானவர்கள் உபயோகித்த தேவையில்லாத ....

    கொடுக்கும் பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும் என்பது முக்கியமே.//

    ஆமாம் மாதேவி. அதில் கண்டிப்பாக கவனம் இருக்க வேண்டும்.

    //தெரிந்த ஒருவர் சிறிதுகாலத்திற்கு முன்பு தாங்கள் பார்ப்பதற்கு சிறிய கறுப்பு வெள்ளை ரிவியும் நிலையத்திற்கு பெரிய கலர் ரிவியும் அன்பளிப்பு செய்திருந்தார்.
    இப்படியான நல்ல உள்ளங்களை வாழ்த்த வார்த்தைகள் நம்மிடம் ஏது.//

    உண்மைதான், மிக நல்ல விஷயம். கருத்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. ஷைலஜா said...

    //நல்ல சிந்தனையைத் தூண்டும் கருத்துகள் ராமலஷ்மி!//

    நன்றி ஷைலஜா.

    பதிலளிநீக்கு
  32. குடந்தைஅன்புமணி said...

    //தங்கள் கருத்துகள் ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான். இதுபோன்ற அமைப்பிற்கு ஒருமுறை உதவி செய்து பாருங்கள். அந்த நிமிடங்களில் உங்கள் மனது உங்களிடம் இருக்காது.//

    உண்மைதான். அமுதாவும் இதே கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்கள் பாருங்கள்.

    //எனது குழந்தையின் பிறந்த நாளுக்கு காலை சிற்றுண்டி அளித்தேன். அந்த குழந்தைகள் 'தேங்க்ஸ் அண்ணா' என்று ஒரு வார்த்தைகள் சொன்னார்கள். அந்த நிமிடம் நான் நானாக இல்லை. ஒவ்வொரு நாளும் இவர்களுக்கு நம்மால் உதவ முடியாவிட்டாலும், திருமணநாள், பிறந்தநாளுக்கு உதவலாம். முயற்சி செய்யுங்கள்!//

    நல்ல விஷய்ம். உங்கள் அனுபவத்தையும் கருத்தையும் அழகுற பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அன்புமணி.

    பதிலளிநீக்கு
  33. ஆயில்யன் said...

    //உண்மை!//
    //மனம் நிறைவு தந்தது //

    ஆமோதிக்கும் கருத்துக்களுக்கு நன்றி ஆயில்யன். அவர்களையும் நம்மில் ஒருவராக பார்க்க வேண்டும் என்கிற ஆதங்கத்தில்தான் இந்தப் பதிவு.

    //நானும் சில சில சின்ன உதவிகள் செய்திருக்கிறேன்!//

    நல்லது தொடர்ந்து செய்து வாருங்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    //வருடத்திற்கு ஒரு முறையாகிலும் உதவி செய்யலாம் - வசதி குறைவுடையவர்கள்!//

    உண்மைதான் பொருளாதார உதவி வசதிப்படி செய்யலாம். வாய்க்கும் போது நம் நேரத்தை அவர்களுக்காக ஒதுக்கலாம். சூரி சார் அவர்கள் சொல்லியிருப்பது போல படிப்பு கற்றுத் தரலாம். நல்ல கருத்துகளுக்கு நன்றி ஆயில்யன்.

    பதிலளிநீக்கு
  34. கடையம் ஆனந்த் said...

    //நல்லகருத்துக்களை கொண்ட பதிவை கொடுத்து இருக்கிறீர்கள் அக்கா. இது போன்ற கருத்துக்களை மக்களிடத்தில் எடுத்துசெல்வது முக்கியமானதும் இப்போது எல்லோருடைய கடமையும் கூட.//

    உண்மை ஆனந்த். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  35. முன்பு உதவும் கரங்கள் வண்டி வரும் நல்ல துணிமணிகளையும் அரிசி மற்றவையும் எடுத்து வைப்போம். இப்போது இந்த சேவை இருக்கிறதா தெரியவில்லை.
    மிக நல்ல கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள் ராம்லக்ஷ்மி.

    மற்ற நாடுகளில் அழுக்குத் துணிகளை குப்ப்பையில் போடுவதற்கே பணாம் கட்ட வேண்டும்.

    நாம் கொடுக்கும் எதையும் நம் வீஇட்டுக் க்குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணர்வோடு கொடுத்தால் நல்லது நடக்கும்.
    நன்றாகவும் இருக்கும்.
    நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  36. Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

    //நிச்சயம் நல்ல யோசனை. தரமற்ற இனுப்புவகைகளால் உடல் நிலை பாதிக்க வாய்ப்பிருப்பது மட்டுமில்லாமல் அதை குணப்படுத்த மேலும் நிதிச் சுமை ஏற்படும்.//

    மிகச் சரி. உங்கள் பின்னூட்டத்திற்குப் பிறகு ‘ஆரோக்கியத்துக்குக் கேடு’ எனும் வார்த்தைகளையும் ஹைலைட் செய்து விட்டேன்.

    //ஆகவே பழங்கள் சரியான தேர்வே. அதைவிட நிதியாக கொடுபப்து தான் மிகச் சிறந்தது. தேவைக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.//

    நிதியாகப் கொடுப்பதுதான் சிறந்தது. ஆனால் சிலருக்கு நிதி நிஜமாகவே குழந்தைகளுக்குத்தான் போய் சேருகிறதா எனும் தேவையற்ற சந்தேகங்கள் வருவது ஒரு சோகம். தாங்களாகவே செய்வதில்தான் திருப்தி அடைவார்கள். சரி எப்படியாயினும் உதவும் வரை அதை வரவேற்கத்தான் வேண்டும்.

    //அந்த தனியார் இல்லத் தலவி சொல்லி இருப்பது 100 சடவீதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. அந்த குழந்தைகள் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் எதையும் தவிர்க்க வேண்டும்.//

    சரியான புரிதலுக்கும் பாராட்டுக்கும் நன்றி சஞ்சய்!

    பதிலளிநீக்கு
  37. அபி அப்பா said...

    //பிரண்ட் ! சூப்பர் பதிவு இது இது பத்தி சொல்ல வேண்டியது அதிகம் இருக்கு தனி மடல் செய்கிறேன் இப்ப நேர்ரம் இல்லை!//

    நன்றி. நல்லது, உங்கள் மேலான கருத்துக்களை அறிய ஆவலுடன் இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  38. எம்.ரிஷான் ஷெரீப் said...

    //அந்தத் தலைவியைப் பாராட்டுகிறேன். கிழிந்த கந்தல் உடைகள், உடைந்த பொருட்களெனப் பல தம் கண்முன்னாலே வகைபிரிக்கப்பட்டு தமக்கு பகிரப்படும்போது அக்குழந்தைகள் மனதில் அவர்கள் அறியாமலேயே கழிவிரக்கமும் ஒருவித தாழ்வுமனப்பான்மையும் தோன்றிவிடுகிறது. அது அவர்களது தொடர்ந்த ஆரோக்கியமான மன,உடல்வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பாக அமைந்துவிடுகிறது. அந்தத் தலைவி இதைக் கவனத்தில் கொண்டிருக்கிறார்.//

    நிச்சயம் அவர் பாராட்டுக்குரியவர்தான். விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் தன் கொள்கையை அவர் விளக்கிய விதம் மிகச் சரியான புரிதலை நமக்கும் கொடுக்கிறது. குழந்தைகளின் மன ஆரோக்கியத்துக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் அற்புதமே. உங்கள் நல்ல கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ரிஷான்.

    பதிலளிநீக்கு
  39. sindhusubash said...

    //சுயமரியாதைக்கு ஏற்ற தாழ்வுகள் கிடையாது.விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.//

    உண்மைதான். கருத்துக்கு நன்றி சிந்து.

    பதிலளிநீக்கு
  40. கிரி said...
    //கொடுப்பதை ஒரு மனநிறைவுடன், இதை போல நாகரீகமான முறையில் பொருட்களை கொடுப்பதே ஒருவருக்கு அழகு.//

    அந்தப் புரிதல் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.

    //எதோ நானும் உதவி செய்கிறேன் பேர்வழி என்று இதை போல செய்வது.. அவர்களை அசிங்கப்படுத்துவது போல தான்..//

    மிகச் சரி.உதவியாக நினைத்து செய்வது தொல்லையாக அவமதிப்பாக முடிந்து விடக் கூடாதுதான்.

    //..தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு என்றாலும், தன்னுடைய பிரச்சனைகள் அனைத்தும் முடிந்த பிறகு தான் ஒருவருக்கு உதவி செய்வேன், தனக்கு பணம் தேவைக்கு அதிகமாக இருந்தால் தான் உதவி செய்வேன் என்ற எண்ணம் கொண்டவர்கள் எந்த காலத்திலும் மற்றவர்களுக்கு உதவ முடியாது..//

    எப்போதும் நம்மால் “இயன்ற அளவு” என ஒரு வரையரையை வைத்துக் கொண்டு எவரும் உதவலாம்தான். அப்படியே பொருளாதார உதவி செய்ய முடியாது போனாலும் நம் நேரத்தைக் கொடுப்பது பற்றி சிந்திக்கலாம்.

    விரிவாகப் பகிர்ந்து கொண்ட கருத்துக்களுக்கு மிக்க நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  41. திவா said...

    //பழசோ புதுசோ, முன்னாலேயே என்ன வேணும்ன்னு ஒரு வார்த்தை கேட்டு அத சம்பாதிச்சு கொண்டு கொடுக்கலாம்.//

    ஆமாம் தேவையறிந்து உதவுவதே பயனுள்ளதாக மட்டுமின்றி அர்த்தமுள்ளதாகவும் அமையும்.


    //சுனாமி சமயத்திலே கேக்காமலே பழைய துணிகள் மலை மலையா குவிஞ்சது. பாதிக்கப்பட்ட மக்களோ பழசெல்லாம் போட மாட்டாங்க.
    எல்லாத்தையும் வித்து காசாக்கி சுனாமி நிதில சேக்கிறதா போச்சு.//

    இது போன்ற கருத்தைத்தான் தமிழ் பிரியனும் சொல்லியிருக்கிறார். யோசித்துப் பார்க்கையிலேயே மலைப்பாய்தான் இருக்கிறது.

    //பழைய விஷயங்களை ரீசைக்கிள் பண்ணரதையே ஒரு சர்வீஸா கூட செய்யலாம்.//

    இதுவும் பரிசீலிக்க வேண்டிய நல்ல யோசனையே. நன்றி திவா.

    பதிலளிநீக்கு
  42. நாகை சிவா said...

    //நல்ல பதிவு!//

    கருத்துக்கு நன்றி சிவா.

    பதிலளிநீக்கு
  43. Srivats said...

    //Thanks for the post, very good thought - I agree , I used to do my part now and then when I was in chennai - //

    நல்ல விஷயம் ஸ்ரீவத்ஸ்.

    //Now I could only transfer money :)//

    நிச்சயமாய் அவர்கள் தங்கள் தேவைக்கேற்ப நன்றியுடன் பயன்படுத்திக் கொள்வார்கள். கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  44. தமிழ்நெஞ்சம் said...

    //எல்லோரும் me the 1st அப்படின்னு ஒரு பின்னூட்டம் போடுவாங்க.

    நான் கொஞ்சம் different.

    உங்கள் புரொஃபைலைப் பார்த்த 3400 (மூவாயிரத்து நானூறாவது) ஆள் நான்.

    இது எப்படி இருக்கு.//

    ரொம்ப நல்லாவேயிருக்கு:)! வருகைக்கு நன்றி தமிழ் நெஞ்சம்.

    பதிலளிநீக்கு
  45. உதவ வேண்டும், அதுவும் எப்படி என்ற நல்லெண்ணத்தை ஒவ்வொருவர் மனதிலும் பதிய வைத்த பதிவு.
    'கொசுவத்தி சுத்த வச்சீட்டீங்க!' என்ற சொலவடைக்கு மாற்றாக இனிமேல் நான், "பத்த வச்சிட்டீயே பரட்டை!" ஸ்டைலில் 'பத்த வச்சிடீங்களே!"னுதான் சொல்லப் போறேன். ஆமா! 'பத்தவச்சீட்டீங்களே
    ராமி!'
    உதவும்கரங்களோடு நாங்கள் கொண்டிருந்த ஒரு வருட பந்தம்....ம்ம்ம் பதிகிறேன்.

    பதிலளிநீக்கு
  46. R.Gopi said...

    //நானும் வெகுநாளாய் (சொல்லக்கூடாதுதான்), பலருக்கும் உதவி வருகிறேன். இது இன்றளவும் தொடர்ந்து வருகிறது. //

    சொல்லும் சூழல் சந்தர்ப்பம் அமைகையில் சொல்லலாம் தப்பில்லை. இது மற்றவர்களுக்கு ஒரு தூண்டுதலாக அமையும்தானே.


    //என் சுற்றம், சூழல் போக, நண்பர்கள் வட்டத்தின் உறவினர்கள் மற்றும் பல இடங்களில் உதவி செய்ததுண்டு. எங்கள் மணவிழா, எங்கள் சுட்டி பையனின் பிறந்த நாள் விழா போன்ற நிகழ்வுகள் இதுபோன்ற இல்லங்களிலே கொண்டாடப்படுகிறது. எப்படி என்றால், அவனின் பிறந்த நாள் அன்று, காலை கோவிலில் அர்ச்சனை, மதியம் இது போன்ற ஒரு இல்லத்திற்கு சென்று, அவர்களுக்கு உணவிட்டு, என் பையனை அவர்கள் ஆசீர்வதிக்க, பின் சாயங்காலம் பையனின் நண்பர்கள் மற்றும் வீட்டை சுற்றி உள்ளோர் பங்கேற்பது என்று, இப்படி போகும் அந்த நாள்.//

    நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோபி.

    பதிலளிநீக்கு
  47. மிக அருமையாச் சொல்லியிருக்கீங்க...கவனத்துடன் செயல் பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  48. sury said...

    //எது இல்லாமல் தான் இருக்க முடியாதோ அதைத் தருவது தான் தானம் தருமம்.//

    சத்தியமான வார்த்தைகள்.

    //இருப்பினும் இவை எல்லாம் 2009 கி.பி. ல் நடக்கும், நடக்கவேண்டுமென நினைப்பது கனவு காண்பது போல்தான்.//

    உண்மைதாங்க. கர்ணன் போலவும் மஹாபலி போலவும் நடக்க வேண்டுமென நினைக்க முடியாதுதான்.


    //ஈகை என்றால் என்ன என்பது பற்றி எனது வலையில் பல மாதங்கள் முன்பு ஒரு பதிவு எழுதியிருந்தேன்.//

    நீங்கள் தந்திருக்க்கும் சுட்டி மூலம் அதைப் பார்க்க முயற்சித்ததில் முடியவில்லையே, சார் :( !?

    //www.sevalaya.org//

    சேவாலயா நிறுவனத்தின் போற்றத்தக்க செயல் பாடுகளை விளக்கமாகச் சொல்லியதுடன் சுட்டியும் கொடுத்திருப்பதற்கு நன்றி. சென்று பார்த்தேன்.

    //பாரதி சொன்னாரே:
    நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
    நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!!
    அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!

    அது போன்று , பொருள் தான் தானம் தரவேண்டும் என்பதில்லை. தாம் பெற்ற கல்வியை இச்சிறுவர்களுக்குப் புகட்ட முற்படலாம். மருத்துவர்கள் தங்களுக்கு வரும் சாம்பிள் மருந்துக்ளை இது போன்ற தொண்டு நிறுவனங்களுக்குத் தரலாம். //

    அழகு அழகு. அற்புதமான யோசனைகளை முன் வைத்ததற்கும் விரிவான நல்ல கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  49. சதங்கா (Sathanga) said...

    \\//அந்த குழந்தைகள் 'தேங்க்ஸ் அண்ணா' என்று ஒரு வார்த்தைகள் சொன்னார்கள். அந்த நிமிடம் நான் நானாக இல்லை.//

    பதிவுக்கு பலம் சேர்த்த பின்னூட்ட வரிகள். படிக்கும்போதே சிலிர்க்கிறது. படித்துவிட்டு இருந்துவிடாமல் உதவவும் செய்வோம்.\\

    சந்தோஷம் சதங்கா. கண்டிப்பாகச் செய்வோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  50. கார்த்திக் said...
    \\// அதற்குப் பதில் அந்தந்த சீஸன் பழங்களை வாங்கிக் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறார். இது எத்தனை நல்ல யோசனை. இதை எல்லோரும் சற்று கவனிக்கலாமே.//

    இதுகூட நல்ல யோசனைதான் \\//

    ஆமாம் கார்த்திக் எனக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது.

    //தமிழ்பிரியன் சரியாச்சொன்னீங்க.//

    திவாவும் சொல்லியிருப்பதையும் கவனிங்க. அவர்கள் கருத்துக்கள் சிந்திக்க வைக்கிறது.

    //இதெல்லாம் ஒருவகை தானம்.
    நம்ம இம்சை & கோ பாருங்க இந்தவருசம் என்ன கலக்குகலக்கிருக்காங்கன்னு.//

    பார்த்தேன். நிச்சயமா அவர்கள் முயற்சிகளுக்கு தலை வணங்கணும். FOC அமைப்பின் மூலம் எத்தனை பேரின் கல்விக்கு வழி செய்திருக்கிறார்கள்!!

    //முத்தானா பதிவுங்க.//

    பகிர்ந்து கொண்ட கருத்துக்களுக்கும் சேர்த்து நன்றி கார்த்திக்!

    பதிலளிநீக்கு
  51. அமுதா said...

    //மிக அவசியமான பதிவு மேடம்.//

    நன்றி அமுதா/

    \\ /*தருமம் அளிக்கப் படுகிறது என்கிற மாதிரியான எண்ணம் அவர்களுக்கு எழாதபடி பார்த்திடலாமே. இறைவனின் குழந்தைகளாகிய இவர்களும் நம் நண்பர்களேயன்றோ*/


    நிச்சயமாக... இக்கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி. அக்குழந்தைகளைக் காணச் செல்லும் பொழுது சின்ன சின்ன உரையாடலில் கூட அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியை என்னென்பது?\\

    உண்மைதான், அந்த மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

    \\செய்யும் உதவியை திருந்தச் செய்வ்வதே நன்று\\

    திருவார்த்தை.

    பதிலளிநீக்கு
  52. முத்துலெட்சுமி-கயல்விழி said...
    //நல்லப்பதிவு ராமலக்ஷ்மி..//

    நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  53. பாச மலர் said...
    //நல்லதொரு பதிவு ராமலக்ஷ்மி..//

    நன்றி பாசமலர்.

    பதிலளிநீக்கு
  54. வல்லிசிம்ஹன் said...

    //முன்பு உதவும் கரங்கள் வண்டி வரும் நல்ல துணிமணிகளையும் அரிசி மற்றவையும் எடுத்து வைப்போம். இப்போது இந்த சேவை இருக்கிறதா தெரியவில்லை.//

    தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் வல்லிம்மாவுக்கு.

    //நாம் கொடுக்கும் எதையும் நம் வீட்டுக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணர்வோடு கொடுத்தால் நல்லது நடக்கும். நன்றாகவும் இருக்கும். நன்றிம்மா.//

    அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  55. நானானி said...

    //உதவ வேண்டும், அதுவும் எப்படி என்ற நல்லெண்ணத்தை ஒவ்வொருவர் மனதிலும் பதிய வைத்த பதிவு.//

    நன்றி நானானி.

    //'பத்தவச்சீட்டீங்களே
    ராமி!' உதவும்கரங்களோடு நாங்கள் கொண்டிருந்த ஒரு வருட பந்தம்....ம்ம்ம் பதிகிறேன்.//

    நல்ல விஷயங்கள் 'பத்தி'க் கொண்டு பரவுவது நல்லதுதானே நானானி:)? உங்கள் அனுபவங்களைக் கண்டிப்பாகப் பதிவிடுங்கள். காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  56. மதுரையம்பதி said...
    //மிக அருமையாச் சொல்லியிருக்கீங்க...கவனத்துடன் செயல் பட வேண்டும்.//

    கவனத்தை வலியுறுத்துவதே முக்கிய நோக்கம். கருத்துக்கு நன்றி மதுரையம்பதி.

    பதிலளிநீக்கு
  57. நன்றாகச் சொன்னீர்கள். மீதம் இருப்பவைகளைத்தான் தானமாகத் தரவேண்டும் என்று பலர் நினைப்பதுபோல, சிலர் பண்டிகை நாட்களில் மட்டும்தான் பிச்சைக்காரர்களுக்குக்கூட சாதம் போடுகிறார்கள். இது தொடர்பான எனது பதிவு http://tamiluzhavan.blogspot.com/2009/01/blog-post.html ஒருவனின் பசியைப் போக்குவதற்கு நல்ல நாட்களைத் தேடவேண்டாமே..

    பதிலளிநீக்கு
  58. இந்தியாவில் இருந்தபொழுது அதுபோல் பெரிய தான தர்மம் எதுவும் செய்ததில்லை. பழைய துணியெல்லாம் ரொம்பவே பழசா இருக்கும். அந்த மாதிரி ஆதரவற்றோர்கூட வாங்க மாட்டாங்க. வறுமைக்கோட்டை பிடித்து தொங்கிக்கொண்டு இருந்தவர்களில் நாங்களும் ஒன்றா என்னனு தெரியலை. ஆனா, அம்மா அப்பா நல்லா அமைந்ததால், என்றுமே யாரைவிடவும் எங்களை குறைவாக நினைத்ததில்லை.

    ஆனால், இப்போ இங்கே நிறைய பழைய துணிகள் சேரும். குட்வில் னு ஒரு ஆர்கனைஷேசன் இருக்கு. அவங்க கிட்ட கொண்டு போய் கொடுக்கிறது. இதே துணிகள் நம்ம ஊரில் உள்ள இல்லாதவர்களுக்கு கொடுக்க முடிந்தால் நல்லா இருக்குமேனு தோனும்!

    உங்கள் பொதுநோக்கிற்கும், சமுதாயத்தை கண் திறக்கவைக்கும் முயற்சிக்கும் கிடைதத ஊதியம்தான் "குட் ப்ளாக்" ல இந்தப்பதிவு இடம் பெறுவதுனு நான் நம்புகிறேங்க, ராமலக்ஷ்மி.

    வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  59. மிக அருமையான புரிந்து கொள்ளவேண்டிய பதிவு!!!!
    அன்புடன் அருணா

    பதிலளிநீக்கு
  60. " உழவன் " " Uzhavan " said...

    //சிலர் பண்டிகை நாட்களில் மட்டும்தான் பிச்சைக்காரர்களுக்குக்கூட சாதம் போடுகிறார்கள். இது தொடர்பான எனது பதிவு http://tamiluzhavan.blogspot.com/2009/01/blog-post.html ஒருவனின் பசியைப் போக்குவதற்கு நல்ல நாட்களைத் தேடவேண்டாமே..//

    நல்ல கருத்து உழவன். உங்கள் கவிதையைக் கண்டேன். பண்டிகை நாளில் தேவைக்கதிகமாய் உணவு நிரம்பி வழிவதும், மற்ற நாட்கள் பட்டினியில் வாட நேருவதும் வேதனைதான். இதுவே அவரவர் வீட்டின் நல்ல நாட்கள் மறைந்தவர் நினைவு நாட்களில் மற்றவருக்கு உதவி செய்து மனநிறைவு பெறுவதை வரவேற்கலாம். அவை ஒரே நாளில் வருவதில்லை. மேலும் இந்த வழக்கம் எல்லோரையும் பிறருக்கு உதவும் நோக்கை வளர்க்கவும் செய்கிறது.

    இதையெல்லாம் தாண்டி நீங்க்ள் சொல்கிற மாதிரி உதவி செய்ய நாள் பார்க்க வேண்டியதில்லை என்கிற கருத்தையும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். வருகைக்கும் கருத்துக்கு நன்றி உழவன்.

    பதிலளிநீக்கு
  61. வருண் said...
    //அம்மா அப்பா நல்லா அமைந்ததால், என்றுமே யாரைவிடவும் எங்களை குறைவாக நினைத்ததில்லை.//

    இதைத்தாங்க நானும் ஆரம்ப வரிகளில் சொல்லியிருக்கிறேன். கடவுள் நம் மேல் கொண்ட கூடுதல் கருணைதான் அது.

    //நம்ம ஊரில் உள்ள இல்லாதவர்களுக்கு கொடுக்க முடிந்தால் நல்லா இருக்குமேனு தோனும்!//

    இருக்குமிடத்திலும் நல்ல உள்ளத்துடன் ‘குட்வில்’லுக்குதானே தருகிறீர்கள். கயல்விழி இந்தியாவில் இருந்தபோது எப்போதும் நல்ல உடைகளையே தன்னிடம் வேலை செய்யும் பெண்ணுக்குத் தந்ததாய் எழுதிய பதிவு எனக்கு நினைவில் உள்ளது வருண்!

    உங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  62. அன்புடன் அருணா said...

    //மிக அருமையான புரிந்து கொள்ளவேண்டிய பதிவு!!!!//

    மிக்க நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  63. நன்கு உணர்ந்து அருமையான விளக்கங்களுடன் எடுத்து சொல்லி இருக்கின்றீர்கள் !
    இது சம்பந்தமான என் விளக்கங்களை ஒரு பதிவாக எழுதுகிறேன் விரைவில்!!!

    பதிலளிநீக்கு
  64. ஜீவன் said...

    //நன்கு உணர்ந்து அருமையான விளக்கங்களுடன் எடுத்து சொல்லி இருக்கின்றீர்கள் !//

    நன்றி ஜீவன்.

    // இது சம்பந்தமான என் விளக்கங்களை ஒரு பதிவாக எழுதுகிறேன் விரைவில்!!!//

    செய்யுங்கள் ஜீவன். நானானியும் அவ்வாறே சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொருவர் அனுபவமும் ஒவ்வொரு பாடம் சொல்லித் தருமே.

    பதிலளிநீக்கு
  65. விகடனில் இருந்து வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம் தானுங்க.

    அதாவது 10 முதல் 20 விசிட்டர் வராங்க. 30 முதல் 40 ஹிட் கொடுக்கிறாங்க.

    அதனால இதையெல்லாம் பெரிசா நினைக்காமல் தொடர்ந்து பதிவுகளைக் கொடுங்க.


    இது எனக்கு நேர்ந்த அனுபவம். எனக்கு இத்தனை விசிட்டர் மட்டுமே வந்தார்கள் என டிராக்கர் சொன்னது.

    உங்களுக்கு எப்படி?

    பகிரவும்.

    நன்றி

    த.நெ.

    பதிலளிநீக்கு
  66. ட்ராக்கரில் எப்படிப் பார்ப்பது என்பது எனக்குத் தெரியாதே:( .[ஹி..நீங்க அதற்கு ஏதாவது பதிவிட்டிருந்தால் சுட்டி கொடுங்களேன்.] நான் எப்போதும் ஃபீட்ஜிட் மற்றும் ஹிட் கவுண்டரில்தான் பார்க்கிறேன். விகடன் மூலம் வந்தவர்களும் கணிசமாய் இருப்பதாகவே தோன்றியது. சரி அது எத்தனை பேர் என்பதை விட இன்னொரு தளம் மூலமாகவும் சொல்ல வரும் கருத்துக்கள் இன்னும் சிலபல பேரை அடைகிறது என்கிற வரையில் மகிழ்ச்சிதானே. மற்றபடி பதிவுகள் எப்போதும் போலவேதான் தொடரும். ரொம்ப நன்றி தமிழ் நெஞ்சம்.

    பதிலளிநீக்கு
  67. நீண்ட முக்கியமான பதிவு. இவ்வளவு சிரமம் எடுத்து நீங்கள் விளக்கியது மிக பயனுள்ளது. ஏனெனில் தனியார் இல்லங்கள் இப்படி வேண்டாம் என்று சொன்னால் சராசரி மனித இயல்பு கோவத்தில் முடியும். அவர்கள் பக்க நியாயத்தை அறிந்து எழுதியதற்கு ஒரு பெரிய நன்றி.

    உங்கள் பதிவுகள் மென்மேலும் பலரால் (விகடன் வாசகர்கள் பலரும் படிக்கிறார்கள்) வாசிக்கப் படுவதால், அதிகமாக மிளிர்கின்றன. உண்மையிலேயே மிக்க மகிழ்வாக இருக்கு. Keep going.

    வழக்கம் போல லேட் மாஸ்டர் நான். என்ன பண்றது. பொறுத்துக்கோங்க :)

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  68. @ தமிழ் நெஞ்சம்,

    நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க தனிமடலில் தாங்கள் தந்த ட்ராக்கர் பற்றிய உங்கள் பதிவின் சுட்டி http://www.tamilnenjam.org/2008/03/blog-post_9520.html -யையும், பரிந்துரைத்த http://www.histats.com-ம் இங்கு பதிந்து வைக்கிறேன், தேவைப்படும் மற்றவரும் பயனுறும் விதமாக. மிக்க நன்றி தமிழ் நெஞ்சம்.

    பதிலளிநீக்கு
  69. அனுஜன்யா said...

    //ஏனெனில் தனியார் இல்லங்கள் இப்படி வேண்டாம் என்று சொன்னால் சராசரி மனித இயல்பு கோவத்தில் முடியும்.//

    அப்படி பலரும் கோபப் பட்டதைக் கண்டுதான் அவரிடம் விளக்கத்தைப் பெற்றேன்.

    //அவர்கள் பக்க நியாயத்தை அறிந்து எழுதியதற்கு ஒரு பெரிய நன்றி.//

    அந்த நியாயத்தை அறிகையில் எப்போது எங்கே எதைக் கொடுத்தாலும் நல்லவிதமாகத் தர வேண்டும் என்கிற எண்ணம் இப்போது எல்லோர் மனதிலும் ஆழப் பதிகிறதல்லவா? அதற்கு அவருக்கும் நம் நன்றிகள்.

    //உங்கள் பதிவுகள் மென்மேலும் பலரால் (விகடன் வாசகர்கள் பலரும் படிக்கிறார்கள்) வாசிக்கப் படுவதால், அதிகமாக மிளிர்கின்றன. உண்மையிலேயே மிக்க மகிழ்வாக இருக்கு.//

    எப்போதுமே இணைய இதழ்களில் எழுதுவதில் ஆர்வம் கொண்ட எனக்கு விகடன்.காமின் பரிந்துரையில் மட்டுமின்றி, படைப்புகளும் வெளியாவதை இன்னோரு அங்கீகாரமாக.. இன்னும் சில பேரை நம் எழுத்துக்கள் சென்றடையும் வாய்ப்பாகவே கருதி மகிழ்கிறேன்.

    //Keep going.//

    தொடரும் உங்கள் ஊக்கத்துக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  70. மிகவும் அருமையான பதிவு இராமலஷ்மி மேடம்! இது போன்ற இல்லங்களுக்கு செல்கையில், அட நாம் எவ்வள்வு கொடுத்து வைத்தவர்கள், நமக்கு எல்லோரும் இருந்தும், குறைபடுகிறோமே என்று தோன்றும். நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்றும் வெகுவாக தோன்றும் :)

    பதிலளிநீக்கு
  71. இவர்களும் நண்பர்களே//

    பொருத்தமான தலைப்பு அக்கா!

    பதிலளிநீக்கு
  72. நல்ல பதிவு..

    எஞ்சியதைத் தராமல் தன்னால் இயன்றதைத் தரலாமே தானமாக..

    பதிலளிநீக்கு
  73. //பெரும்பாலானவர்கள் உபயோகித்த தேவையில்லாத உடைகளை உதவுகிறோம் என்ற பெயரில் சலவைக்கு போடும் அழுக்கு மூட்டைகளாக மிக மோசமான நிலையில் வந்து இறக்கி வைத்து விட்டுச் செல்கிறார்கள்//

    இது ரொம்ப உண்மை. சுனாமியின் போது கூட அப்படி நடந்ததாக ஞாபகம்.

    பழையது கொடுக்கலாம். ஆனா, அது நீங்க போட்டுக்கிட்டு வெளியில் போய் வரக் கூடிய தரத்தில் இருக்கணும். கிழிசல்கள் கூடாது.

    நான் மொக்கையா போடர பதிவு, உங்க பார்வை பட்டதும், மெருகேறிடுது. உபயோகமானதாவும் ஆயிடுது. அருமை :)

    பதிலளிநீக்கு
  74. //இது ரொம்ப உண்மை. சுனாமியின் போது கூட அப்படி நடந்ததாக ஞாபகம்.//

    சர்வே மேலே இதைப்பத்தி கமென்டி இருக்கேன்.

    //நான் மொக்கையா போடர பதிவு, உங்க பார்வை பட்டதும், மெருகேறிடுது. உபயோகமானதாவும் ஆயிடுது. அருமை :)//

    அவங்க ஜாதக விசேஷம். நம்ம சுப்பையா வாத்தியாரைவிட்டு அனலைஸ் பண்ணனும்!
    :-)))))

    பதிலளிநீக்கு
  75. மிக அருமையான பதிவு ராமலக்ஷ்மி
    இவர்களைப் பற்றி நினைத்தாலே மனது
    கணத்து தான் போகும்.

    ஆனால் நிர்வாகம் அவர்களை வளர்க்கும் விதம்
    மிக நேர்த்தியாக இருக்கின்றது.

    ஒரு பருக்கை கூட சிந்தாமல் உணவு உண்பது என்பது மிகப் பெரிய விஷயம்
    இன்றைக்கு கிடைத்த சாப்பாட்டிற்கு நாம் கொடுக்கும் மரியாதை.

    பழைய துணிகளை மூட்டையாக கொடுப்பதிருக்கு பதிலாக ஒரு துணியாக இருந்தாலும் நல்ல துணியாக கொடுத்தால் அதுவும் நன்றாக இருக்கும்.

    சரியான முடிவுதான் நிர்வாகம் எடுத்திருக்கின்றது.

    நல்ல பதிவு, நிறைய விஷயங்களை எல்லாரும் தெரயுந்து கொள்ளும்படி இருந்தது.

    நம்மில் ஒருவராக அவர்களை நினைத்தாலே போதும்
    அவர்களும் நம்மில் ஒருவராகா திகழ்வார்கள்.

    பதிலளிநீக்கு
  76. Ramya Ramani said...

    //மிகவும் அருமையான பதிவு இராமலஷ்மி மேடம்! இது போன்ற இல்லங்களுக்கு செல்கையில், அட நாம் எவ்வள்வு கொடுத்து வைத்தவர்கள், நமக்கு எல்லோரும் இருந்தும், குறைபடுகிறோமே என்று தோன்றும்.//

    உண்மைதான் ரம்யா. நம் மீது நாம் அடிக்கடி கொள்ள நேரும் தன்னிரக்கம் எல்லாம் தவிடுபொடியாகித்தான் விடும்.

    //நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்றும் வெகுவாக தோன்றும் :)//

    ஆம். செய்வோம் நிச்சயமாய். நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களை வலையுலகம் பக்கம் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி ரம்யா.

    பதிலளிநீக்கு
  77. Poornima Saravana kumar said...

    //இவர்களும் நண்பர்களே//

    பொருத்தமான தலைப்பு அக்கா!

    நல்ல பதிவு..

    எஞ்சியதைத் தராமல் தன்னால் இயன்றதைத் தரலாமே தானமாக..//

    ஆமாம் பூர்ணிமா, பொருளாதார வசதியைப் பொறுத்து இயன்றால் புதிதாய் தரலாம். இயலாவிடின் எதைத் தந்தாலும் அவை தரமானதாகவும், உபயோகிக்கக் கூடிய நல்ல நிலையில் இருக்க வேண்டியதும் மிக மிக அவசியமே. கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  78. SurveySan said...

    //இது ரொம்ப உண்மை. சுனாமியின் போது கூட அப்படி நடந்ததாக ஞாபகம்.//

    ஆமாம் திவாவும் இதையே நினைவு கூர்ந்திருக்கிறார். தமிழ் பிரியனும் பூகம்ப காலத்தில் இப்படி துணி மூட்டைகள் குவிந்ததைச் சொல்லியிருக்கிறார்:( !

    //பழையது கொடுக்கலாம். ஆனா, அது நீங்க போட்டுக்கிட்டு வெளியில் போய் வரக் கூடிய தரத்தில் இருக்கணும். கிழிசல்கள் கூடாது.//

    சரியாகச் சொன்னீர்கள்.

    //நான் மொக்கையா போடர பதிவு,//

    ...அப்படியென நீங்களாவே சொல்லி விடக் கூடாது. உங்களின் பல பதிவுகள் சமுதாய சிந்தனையுடன், சமூக நோக்குடன் மட்டுமின்றி சகபதிவர்களுக்குத் தேவையான சுவாரஸ்யமான பயனுள்ள பல தகவல்களைத் தந்த வண்ணமேதான் உள்ளன.

    பதிலளிநீக்கு
  79. திவா said...

    //அவங்க ஜாதக விசேஷம். நம்ம சுப்பையா வாத்தியாரைவிட்டு அனலைஸ் பண்ணனும்! :-)))))//

    'சரி, காப்பி பேஸ்டா பண்ண முடியும்' என நீங்களே மூடி வைத்த ஃபைலை மறுபடி திறந்து விட்டீர்களா திவா:)))?

    பதிலளிநீக்கு
  80. RAMYA said...

    //ஆனால் நிர்வாகம் அவர்களை வளர்க்கும் விதம்
    மிக நேர்த்தியாக இருக்கின்றது.//

    அத்தனை குழந்தைகளும் சொல்லி வைத்தாற் போல நேர்த்தியான ஒழுங்கினைக் கடைப்பிடிப்பது பிரமிக்க வைக்கிறது. இப்படி பழக்கிய நிர்வாகத்தினரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

    //ஒரு பருக்கை கூட சிந்தாமல் உணவு உண்பது என்பது மிகப் பெரிய விஷயம்
    இன்றைக்கு கிடைத்த சாப்பாட்டிற்கு நாம் கொடுக்கும் மரியாதை.//

    நிச்சயமாய்.

    //நல்ல பதிவு, நிறைய விஷயங்களை எல்லாரும் தெரயுந்து கொள்ளும்படி இருந்தது.

    நம்மில் ஒருவராக அவர்களை நினைத்தாலே போதும்
    அவர்களும் நம்மில் ஒருவராகா திகழ்வார்கள்.//

    ஆமாம் ரம்யா. ஜீவன் இப்பதிவினைத் தொடர்ந்து வெளியிட்ட ‘
    இறைவனின் குழந்தைகள்
    ’ பதிவில் உங்கள் பின்னூட்டம் கண்டேன். விரைவில் உங்கள் அனுபவங்களை நீங்கள் பதிவிடக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  81. தொடர்கிறேன் ராமலக்ஷ்மி சகோதரி
    கொஞ்சம் கால அவகாசம் தேவை !!

    பதிலளிநீக்கு
  82. @ ரம்யா,

    நல்லது எவ்வளவு கால அவகாசம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்ல நினைக்கும் நல்ல விஷயங்களுக்காகக் கண்டிப்பாகக் காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  83. ஆஹா........!!! நெம்ப அருமையான பதிவுங்கோ அம்முனி.......!!! நெம்ப டச்சு பண்ணிபோட்டுருச்சு பதிவு.....!!! வாழ்த்துக்கள் ...!!!!


    " வாழ்க வளமுடன்......!!"


    இருந்தாலுமும் போன பதிவு நெம்ப சூபருங்கோ .......!!!!!!!!

    பதிலளிநீக்கு
  84. @ லவ்டேல் மேடி,

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    //இருந்தாலுமும் போன பதிவு நெம்ப சூபருங்கோ .......!!!!!!!!//

    ஆமாம், பொருத்தமான அந்தப் படமும். அதை விட்டு விட்டீர்களே:)! பாருங்க இப்போது யூத் விகடனின் symbol-ஏ அந்தப் படமாகி விட்டதில் எனக்கு மகிழ்ச்சி. அப்போ உங்களுக்கு..:)?

    பதிலளிநீக்கு
  85. அட ஆம்மாங்கோ அம்முனி........!!! நெசமாதானுங்கோ....!!!!! நெம்ப அருமையா இருக்குதுங்கோ .........!!!!


    நெம்ப தேங்க்ஸ்ங்கோ......!!!!!

    பதிலளிநீக்கு
  86. லவ்டேல் மேடி said...

    //நெம்ப தேங்க்ஸ்ங்கோ......!!!!//

    தன்யையானேன்:)!

    பதிலளிநீக்கு
  87. நல்ல கருத்துள்ள பதிவு ராம் மேடம். ஏற்கனவே 2 முறை படிச்சேன், கமெண்ட் போட முடியலை. இப்ப 3ஆவது முறை..........

    பதிலளிநீக்கு
  88. அமிர்தவர்ஷினி அம்மா said...

    //நல்ல கருத்துள்ள பதிவு ராம் மேடம்.//

    நன்றி அமித்து அம்மா.

    பதிலளிநீக்கு
  89. sankarfilms said...

    // arumai //

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  90. அக்கா அடுத்த பதிவு எப்போது?

    பதிலளிநீக்கு
  91. வாழ்க்கையில் முதன் முறையா 50 பின்னூட்டங்களைக் கடந்திருக்கேன். அதிலே நான் போட்ட செல்ஃபும் அதிகம்.

    உங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  92. கடையம் ஆனந்த் said...

    //அக்கா அடுத்த பதிவு எப்போது?//

    வெகு விரைவில் ஓரிரு தினங்களில்:)!
    நன்றி ஆனந்த்.

    பதிலளிநீக்கு
  93. தமிழ்நெஞ்சம் said...
    //வாழ்க்கையில் முதன் முறையா 50 பின்னூட்டங்களைக் கடந்திருக்கேன். அதிலே நான் போட்ட செல்ஃபும் அதிகம்.//


    தமிழ்மண நட்சத்திரப் பதிவாளாராக வாழ்த்துக்களைப் பெற்ற அப்பதிவிற்கும்
    மின்னப் போகும் உங்கள் வாரத்துக்கும் முதற்கண் என் வாழ்த்துக்கள் தமிழ்நெஞ்சம்.

    எனது பதிவுகளில் எப்போதுமே என் பதில்கள் சரிக்குச் சரி இருக்கும். இது வழக்கமாக வருகை தரும் அனைவரும் அறிந்ததே.

    //உங்களுக்கு நன்றி//

    ஒரு வகையில் நீங்கள் இப்பதிவில் முன்னதாகக் கேட்டிருந்த ’எத்தனை பேர் வந்தார்கள் எங்கிருந்து வந்தார்கள்’ என்பதெல்லாம் ஒரு தகவலுக்குத்தானே தவிர அதுதான் பதிவிற்கான மதிப்பெண்ணைத் தரும் அளவுகோல் அன்று எனும் என் எண்ணத்தைத் தனி மடலில் தாங்களும் உறுதி செய்ததில் மகிழ்ச்சி.

    ஆக நானும் சொல்ல வேண்டும் நன்றி, உங்கள் புரிதலுக்கு:).

    விகடன் ‘குட் ப்ளாக்ஸ்’ பிரிவில் நம் பதிவுகள் இடம் பெறுவதை, ஒரு அங்கீகாரமாக... நம் படைப்பு இன்னும் சிலரைச் சென்றடையும் விதமாக... அமைவதை இப்போது ஏற்றுக் கொண்டு விட்டீர்கள்தானே:)?

    நாம் சொல்ல வந்த கருத்து ஒரு சிலரது மனதிலாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமாயின் அதுவேதான் அப்படைப்புக்கான வெற்றி.

    அந்த வகையில் பல நல்ல தொழிற்நுட்பத் தகவல்களை சிரமமேற்கொண்டு சேகரித்துத் தரும் உங்கள் வலைப்பூ இந்தப் பின்னூட்ட எண்ணிக்கை போன்றவற்றையெல்லாம் தாண்டி எல்லோருக்கும் பயன்பட்டு எப்போதும் பேசப் பட்டு வருவது பெருமைக்குரிய விஷயமாகும். அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் தமிழ்நெஞ்சம்.

    பதிலளிநீக்கு
  94. முதன் முறையாய் உங்கள் வலைப்பதிவை இன்று பார்வை இட நேர்ந்தது.

    மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் முத்துக்கள்..

    கடலில் மட்டுமல்ல தாமிரபரணி ஆற்றில் கூட முத்துக்கள் பிறக்ககூடும் என்று சந்தோஷ பட்டு கொண்டேன். ..

    தாமிரபரணி கரையில் இருந்து ராமனுஜம்

    பதிலளிநீக்கு
  95. ச. ராமானுசம் said...

    // தாமிரபரணி கரையில் இருந்து //

    நன்று நன்று, மகிழ்வாக உணர்கிறேன்:)!

    //மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் முத்துக்கள்..

    கடலில் மட்டுமல்ல தாமிரபரணி ஆற்றில் கூட முத்துக்கள் பிறக்ககூடும் என்று சந்தோஷ பட்டு கொண்டேன். ..//

    தங்கள் முதல் வருகைக்கும் முத்தான பாராட்டுக்கும் எனது நன்றிகள் ராமானுசம்.

    பதிலளிநீக்கு
  96. தமிழ்மணம் விருதுகளில் இந்த இடுகைக்கு முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  97. தமிழ்மண விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். :)

    பதிலளிநீக்கு
  98. சரண் said...

    //தமிழ்மணம் விருதுகளில் இந்த இடுகைக்கு முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.//

    நன்றி சரண். உங்கள் அனைவரது பின்னூட்டங்களாலும்தான் பரிசு பெற்ற விவரம் தெரிய வந்தது.

    பதிலளிநீக்கு
  99. திகழ் said...

    //வெற்றிக்கு வாழ்த்துகள்//

    எப்போது எங்கே[இணைய இதழ்களில்] எழுதி வந்தாலும் தொடர்ந்து கவனித்து வரும் உங்கள் அன்புக்கும் சேர்ந்து நன்றிகள் திகழ்.

    பதிலளிநீக்கு
  100. ஊர்சுற்றி said...

    //தமிழ்மண விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். :)//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஊர்சுற்றி!

    பதிலளிநீக்கு
  101. / ராமலக்ஷ்மி said...
    எப்போது எங்கே[இணைய இதழ்களில்] எழுதி வந்தாலும் தொடர்ந்து கவனித்து வரும் உங்கள் அன்புக்கும் சேர்ந்து நன்றிகள் திகழ்./


    உங்களுக்கு தான் நன்றியை நவில வேண்டும்.
    உங்களைப் போன்றவர்களின் கவிதை வரிகளைப் படிக்கும் வாய்ப்பைத் தவற விடக் கூடாது என்னும் எண்ணம் தான்.

    க‌விந‌யா அவ‌ர்க‌ளின் க‌விதையை வாசிக்கும் பொழுதே உங்க‌ளின் க‌விதையைப் ப‌திவு இடுவ‌தாக‌க் கூறி இருந்தீர்க‌ள்
    எங்கே ம‌ற‌ந்து விட்டீர்க‌ளோ என்று நினைத்தேன்

    வாழ்த்துக‌ள்



    அன்புட‌ன்
    திக‌ழ்

    பதிலளிநீக்கு
  102. @ திகழ்

    மறக்கவில்லை திகழ். வலைப்பூவில் இனிதான் பதிய இருக்கிறேன். தொடரும் தங்கள் ஊக்கத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  103. வாழ்த்துகக்ள் ராமலக்‌ஷ்மி.
    தமிழ் மண விருது, குட்பிளாக்கில் வந்த்தது எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள்.

    நேரமின்மையால் தொடர்ந்து வர முடியல், முடிந்த போது கண்டிப்பாக வருகிறேன்.

    என் பக்கம் வந்து கருத்து தெரிவித்தமைக்கும் மிகக் நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin