முகந்தழுவிச் சென்ற கடற்காற்றின்
சில்லிப்பை அனுபவித்திருக்கையில்,
சோளத்தைக் காட்டிச்
சிணுங்கியது மழலை
அதன் விரல்பிடித்து நடந்து
மினுங்கும் தணலில்
மஞ்சள்முத்துக்கள்
வேகக் காத்திருந்து
வாங்கித் திரும்பும் வழியில்
சந்தித்தான் எதிர்பாராமல்
ஆருயிர் நண்பனை
ஆண்டுகள் பலகழிந்து.
பரவசமாய் பிணைந்து கொண்ட
கரங்கள் நான்கின் கதகதப்புக்குள்
களிப்பாய் துள்ளியது நட்பு
கிடைத்தசில நிமிடத்துள்
நீந்தித் திளைத்தார்கள்
மலரும் நினைவுகளில்
"அந்த நாட்கள் எத்தனை சுகமானது"
அவன் சொல்ல
"வாய்க்குமா இனி அது போல"
இவன் மருக
சுட்ட சோளத்தைச்
சுவைத்துக் கொண்டிருந்த
இவன் குழந்தையின் கன்னந்தட்டி
பெயர் கேட்கத் தோன்றாத அவனும்
பச்சைநிற பலூனைத் தக்கவைக்கக்
காற்றோடு போராடிக் கொண்டிருந்த
அவன் குழந்தையின் கேசங்கலைத்து
'என்ன படிக்கறாய்?'
தெரிந்திட ஆர்வம் காட்டாத இவனும்
மின்னஞ்சல் முகவரி
அலைபேசி எண் பரிமாறி
"தொடர்பில் இருப்போம்" உறுதிகூறி
விடைபெற்று நகர்ந்தார்கள்
காலடியில் மிதிபட்டுக்
கலைந்து கொண்டிருந்த
அழகிய சிறு மணல் வீடுகள்
பற்றியக் கவனமின்றி..
சந்தித்த அவ்வினிய தருணத்தின்
அருமை பற்றிய பிரஞ்ஞையுமின்றி.
வீசிக் கொண்டிருந்தது சில்லிப்பாய்
தொடர்ந்து கடற்காற்று.
***
படம்: இணையத்திலிருந்து...
27 டிசம்பர் 2010 திண்ணை இணைய இதழில் வெளிவந்த கவிதை. நன்றி திண்ணை!
ஆஹா..பழைய நடபைப்பற்றி என்னே அருமையான கவிதை.
பதிலளிநீக்குஆயிரம் அர்த்தம் சொல்லும் வரிகள்
பதிலளிநீக்குஅது உங்களுக்கு கைவந்த கலை!
கவிதை நன்று.
தொடரட்டும் சினேகம்.
பதிலளிநீக்குநிஜம்தான் அக்கா.
பதிலளிநீக்குநட்புகளைக் காணக்கிடைத்துவிட்டால், சுற்றியிருக்கிற எல்லாமே அற்பமாய்த்தான் போய்விடுகிறது :)
அன்பின் ராமலக்ஷ்மி
பதிலளிநீக்குஅருமை அருமை - பழைய நண்பர்கள் சந்தித்து, பேசி, தொடர்பில் இருக்க வழி செய்து, அவரவர் வேலையினைப் பார்க்க முயன்றனர். கூட வந்திருந்த குட்ம்பத்தினரைப் பற்றியோ, மழலைகளைப் பற்றியோ பேசத் தோணவில்லை. அவ்வரிய தருணத்தினை அப்பொழுதே மறந்து விட்ட அவர்கள் என்ன செய்வார்கள் பாவம். இதுதான் இக்காலம்.
வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
பெங்களூரில் பீச் இல்லையே.. அப்புறம் எப்படி?
பதிலளிநீக்குமணல் வீடுகள் உங்களை எப்போதுமே கவர்கின்றன.. பல கவிதைகளில் வருகின்றன (வரட்டும் வரட்டும்)
/பரவசமாய் பிணைந்து கொண்ட
பதிலளிநீக்குகரங்கள் நான்கின் கதகதப்புக்குள்
களிப்பாய் துள்ளியது நட்பு/
இதற்காய் ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து!
பழைய நட்பு புதிதாகியது.....
பதிலளிநீக்குமனம் சந்தொஷிக்கிறது.....
கலக்கல்....
போலியான முகப்பூச்சு....நம் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக்கொடுக்கப்போகிறோம் நாம்...
பதிலளிநீக்குஅவல உண்மைகளின்
அழகு வார்ப்பு!
போலி முகப்பூச்சு என்று சொல்வது...கொஞ்சம் வன்மையாகத் தோன்றுகிறது...
பதிலளிநீக்குஅந்த வார்த்தைகளுக்குப் பதிலாக இவை...
எதார்த்தமான நியாயமற்ற கவனக்குறைவு...
//பரவசமாய் பிணைந்து கொண்ட
பதிலளிநீக்குகரங்கள் நான்கின் கதகதப்புக்குள்
களிப்பாய் துள்ளியது நட்பு//
அருமையான வரிகள்.. வீட்டுக்கு போனதும் மின்னஞ்சல் முகவரியும், தொலைபேசிஎண்ணும் கண்டிப்பா ஞாபகம் வந்துடும்.. அவங்களுக்கு :-))
அதிர்ஷ்ட நண்பர்கள். ராமலக்ஷ்மியின் கதையில் பாசத்தில் இணைந்த கலந்த கரங்கள் எப்பொழுதும் தொடர்ந்து பிணைந்து இருக்கட்டும் கடல் காற்றுப் போல. அருமை ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குதொடர்பு தொடரட்டும்.அருமை.
பதிலளிநீக்குஇனிய பதிவு....
பதிலளிநீக்குபழைய நட்பை கவிதை மூலமாக புதுப்பித்துவிட்டீர்கள்.
பதிலளிநீக்குகவிதைக்கு முரண் அழகுதான். ஆனால் எதிர்பாராத ஒன்றைச் சொல்ல நினைத்து சற்றே தடம் மாறி விட்டதோ.. கவிதையை அப்படியே ஏற்றால்..
பதிலளிநீக்குஇவர்கள் நட்பு அப்போதும் உண்மையாய் இருந்திருக்காது என்றே தோன்றுகிறது..
அன்றைய நினைவினில் அனைத்தையும் மறந்தார்கள்... நிஜத்திற்கு வரும்போது இழந்த அற்புதமான தருணங்களை எண்ணி வருந்துவார்கள்.... நல்ல கவிதை.. இந்த மாத வடக்கு வாசல் கவிதை படித்தேன் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு"காலடியில் மிதிபட்டுக் கலைந்துகொண்டிருந்த அழகிய
பதிலளிநீக்குமணல் வீடுகள் பற்றிய கவனமின்றி...."
அருமையான பல விஷ்யங்களை பூடகமாகச்
சொல்லிப்போகும் வரிகள்
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்
நல்ல கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
///"அந்த நாட்கள் எத்தனை சுகமானது"
பதிலளிநீக்குஅவன் சொல்ல
"வாய்க்குமா இனி அது போல"
இவன் மருக///
நல்ல வரிகள்...
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)
உங்களது இந்த கவிதையை படிக்கையில்
பதிலளிநீக்குபிரிந்த நண்பர்கள் நீண்ட நாள் கழித்து
சந்திக்கையில் மௌனம்தான் அங்கே ஆட்சி செய்யும்
என்ற கருத்து உறுதியாகிறது. அருமை.
வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி அக்கா.
super...vaalththukkal
பதிலளிநீக்குநட்பும் காதல்போலத்தான்.
பதிலளிநீக்குசிலசமயங்களின் மௌனமாய்
மகிழ்ச்சி கொள்ளும் !
அருமை. அருமை.
பதிலளிநீக்குநல்ல கவிதை ராமலஷ்மி. நல்ல வரிகள்.
பதிலளிநீக்கு//மினுங்கும் தணலில்
பதிலளிநீக்குமஞ்சள்முத்துக்கள்
வேகக் காத்திருந்து//
அழகான முத்துக்கள், இவற்றைப் போல நிறைய அள்ளித் தெளித்திருக்கிறீர்கள். நல்ல கவிதை. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!
கலக்கலான கவிதை
பதிலளிநீக்கு///"அந்த நாட்கள் எத்தனை சுகமானது"
பதிலளிநீக்குஅவன் சொல்ல
"வாய்க்குமா இனி அது போல"
இவன் மருக///
இத்தகைய உணர்வுகள் எல்லோருக்குமே எதாவதொரு காலக் கட்டத்தில் வாய்க்கும் என நினைக்கிறேன்.
அருமை.
நாலு கரங்கள் பிடிக்கும்போது உயிர் நட்புன்னு தெரியுது. ஆனா, இவிக உயிர் நட்பு இல்லங்கறீங்களா? பிரீலியே?
பதிலளிநீக்குஆயிரம் அர்த்தம் சொல்லும் அருமையான கவிதை.
பதிலளிநீக்குஇயந்திர மனிதர்கள்.
பதிலளிநீக்குஅருமையா எழுதி இருக்கீங்க அக்கா.
மிக அருமை ராமலெக்ஷ்மி.. திண்ணியிலேயே ரசித்தேன்..:)
பதிலளிநீக்குபிரிந்தவர்கள் கூடி உலகத்தை மறந்து உறவாடியது அவர்கள் நட்பின் ஆழத்தை குறிக்கிறது.
பதிலளிநீக்குகவிதை அருமை.
கடல்காற்றைப் போலவே அருமை
பதிலளிநீக்குஒரு கவிதை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான புரிதலைத் தருவதுண்டு பலநேரங்களில். இதுவும் அந்த வகையுடன் சேர்ந்து விட்டது. நான் சொல்ல வந்தது, கடந்த காலம் எத்தனை இனிமை என மருகுபவர், ‘தொடர்பில் இருப்போம்’ என எதிர்காலத்துக்கான வாக்குறுதியைத் தருபவர் ‘சந்திக்க வாய்த்த அவ்வினிய தருணத்தின்’ அருமையை உணராமலே பிரிகின்றனர். இன்னும் தெளிவாய் சொல்லியிருக்க வேண்டுமோ:)? எனினும் சிலரின் வித்தியாசமான புரிதல்கள் வேறு கோணங்களிலும் என்னை சிந்திக்க வைத்தது பிடித்திருக்கிறது!
பதிலளிநீக்குஸாதிகா said...
பதிலளிநீக்கு//ஆஹா..பழைய நடபைப்பற்றி என்னே அருமையான கவிதை.//
நன்றி ஸாதிகா.
அமைதி அப்பா said...
பதிலளிநீக்கு//ஆயிரம் அர்த்தம் சொல்லும் வரிகள்
அது உங்களுக்கு கைவந்த கலை!
கவிதை நன்று.//
மிக்க நன்றி அமைதி அப்பா:)!
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//தொடரட்டும் சினேகம்.//
ஆகட்டும் அப்படியே. நன்றி தமிழ் உதயம்.
சுந்தரா said...
பதிலளிநீக்கு//நிஜம்தான் அக்கா.
நட்புகளைக் காணக்கிடைத்துவிட்டால், சுற்றியிருக்கிற எல்லாமே அற்பமாய்த்தான் போய்விடுகிறது :)//
ஆமாம் சுந்தரா:)! நன்றி.
cheena (சீனா) said...
பதிலளிநீக்கு//அன்பின் ராமலக்ஷ்மி
அருமை அருமை - பழைய நண்பர்கள் சந்தித்து, பேசி, தொடர்பில் இருக்க வழி செய்து, அவரவர் வேலையினைப் பார்க்க முயன்றனர். கூட வந்திருந்த குட்ம்பத்தினரைப் பற்றியோ, மழலைகளைப் பற்றியோ பேசத் தோணவில்லை. அவ்வரிய தருணத்தினை அப்பொழுதே மறந்து விட்ட அவர்கள் என்ன செய்வார்கள் பாவம். இதுதான் இக்காலம்.
வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா//
இக்காலம் இப்படிதான் ஆகிவிட்டது. நன்றி சீனா சார்.
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//பெங்களூரில் பீச் இல்லையே.. அப்புறம் எப்படி?//
நல்ல கதையா இருக்கே?எழுதுவதெல்லாம் நிஜத்தில்.. அதுவும் அருகில் இருக்கணுமா?
கவிதைக்கும் சாட்சி கேட்கும் வக்கீல்:)!
//மணல் வீடுகள் உங்களை எப்போதுமே கவர்கின்றன.. பல கவிதைகளில் வருகின்றன (வரட்டும் வரட்டும்)//
நான் அறிந்து இதுதான் மணல் வீட்டைப் பற்றி பேசும் முதல் கவிதை:)! கடற்கரை கவிதை இன்னொன்று உள்ளதுதான். நன்றி மோகன் குமார்!
அன்புடன் அருணா said...
பதிலளிநீக்கு***/பரவசமாய் பிணைந்து கொண்ட
கரங்கள் நான்கின் கதகதப்புக்குள்
களிப்பாய் துள்ளியது நட்பு/
இதற்காய் ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து!/***
அத்தருணம் அநேகமாய் அனைவருக்கும் வாய்த்த ஒன்றாய் இருக்கும்:)! ஸ்பெஷலுக்கு ஸ்பெஷல் நன்றி அருணா:)!
MANO நாஞ்சில் மனோ said...
பதிலளிநீக்கு//பழைய நட்பு புதிதாகியது.....
மனம் சந்தொஷிக்கிறது.....
கலக்கல்....//
நன்றி மனோ.
பாச மலர் / Paasa Malar said...
பதிலளிநீக்கு//போலியான முகப்பூச்சு....நம் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக்கொடுக்கப்போகிறோம் நாம்...
அவல உண்மைகளின்
அழகு வார்ப்பு!
போலி முகப்பூச்சு என்று சொல்வது...கொஞ்சம் வன்மையாகத் தோன்றுகிறது...
அந்த வார்த்தைகளுக்குப் பதிலாக இவை...
எதார்த்தமான நியாயமற்ற கவனக்குறைவு...//
ஆம் கடைசியாக சொல்லியிருப்பது மிகச் சரியாகப் பொருந்துகிறது பாசமலர். மிக்க நன்றி.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு***//பரவசமாய் பிணைந்து கொண்ட
கரங்கள் நான்கின் கதகதப்புக்குள்
களிப்பாய் துள்ளியது நட்பு//
அருமையான வரிகள்.. வீட்டுக்கு போனதும் மின்னஞ்சல் முகவரியும், தொலைபேசிஎண்ணும் கண்டிப்பா ஞாபகம் வந்துடும்.. அவங்களுக்கு :-))//***
வரட்டும் சாரல். தொடர்பில் இருக்கட்டும்:)! நன்றி.
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//அதிர்ஷ்ட நண்பர்கள். ராமலக்ஷ்மியின் கதையில் பாசத்தில் இணைந்த கலந்த கரங்கள் எப்பொழுதும் தொடர்ந்து பிணைந்து இருக்கட்டும் கடல் காற்றுப் போல. அருமை ராமலக்ஷ்மி.//
அப்படியே ஆகட்டும். நன்றி வல்லிம்மா:)!
asiya omar said...
பதிலளிநீக்கு//தொடர்பு தொடரட்டும்.அருமை.//
நல்லது. நன்றி ஆசியா ஓமர்:)!
கலாநேசன் said...
பதிலளிநீக்கு//இனிய பதிவு...//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கலாநேசன்.
Lakshmi said...
பதிலளிநீக்கு//பழைய நட்பை கவிதை மூலமாக புதுப்பித்துவிட்டீர்கள்.//
நட்பு உயிர்ப்புடன் தொடர வாழ்த்துவோம்:)! மிக்க நன்றிங்க.
ரிஷபன் said...
பதிலளிநீக்கு//கவிதைக்கு முரண் அழகுதான். ஆனால் எதிர்பாராத ஒன்றைச் சொல்ல நினைத்து சற்றே தடம் மாறி விட்டதோ.. //
இன்னும் தெளிவாய் சொல்லியிருந்திருக்கணுமோ.. என எனக்கும் தோன்றிவிட்டது:)!
//கவிதையை அப்படியே ஏற்றால்..
இவர்கள் நட்பு அப்போதும் உண்மையாய் இருந்திருக்காது என்றே தோன்றுகிறது..//
பால்ய நட்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதென்பது என் எண்ணம். இவ்விடத்தில் பாசமலர் சொன்ன “நியாயமற்ற கவனக்குறைவு” பொருத்தமா பாருங்களேன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
குமரி எஸ். நீலகண்டன் said...
பதிலளிநீக்கு//அன்றைய நினைவினில் அனைத்தையும் மறந்தார்கள்... நிஜத்திற்கு வரும்போது இழந்த அற்புதமான தருணங்களை எண்ணி வருந்துவார்கள்.... நல்ல கவிதை.. இந்த மாத வடக்கு வாசல் கவிதை படித்தேன் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்//
நன்றி நீலகண்டன், வடக்கு வாசல் வாழ்த்துக்களுக்கும்:)!
Ramani said...
பதிலளிநீக்கு//"காலடியில் மிதிபட்டுக் கலைந்துகொண்டிருந்த அழகிய
மணல் வீடுகள் பற்றிய கவனமின்றி...."
அருமையான பல விஷ்யங்களை பூடகமாகச்
சொல்லிப்போகும் வரிகள்
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி ரமணி.
Rathnavel said...
பதிலளிநீக்கு//நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி ரத்னவேல்.
தமிழ்வாசி - Prakash said...
பதிலளிநீக்கு***/ //"அந்த நாட்கள் எத்தனை சுகமானது"
அவன் சொல்ல
"வாய்க்குமா இனி அது போல"
இவன் மருக///
நல்ல வரிகள்.../***
நன்றி பிரகாஷ்.
புவனேஸ்வரி ராமநாதன் said...
பதிலளிநீக்கு//உங்களது இந்த கவிதையை படிக்கையில்
பிரிந்த நண்பர்கள் நீண்ட நாள் கழித்து
சந்திக்கையில் மௌனம்தான் அங்கே ஆட்சி செய்யும்
என்ற கருத்து உறுதியாகிறது. அருமை.
வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி அக்கா.//
நன்றி புவனேஸ்வரி, அதுவும் சிலநேரம் நடப்பதுண்டுதான்.
மதுரை சரவணன் said...
பதிலளிநீக்கு//super...vaalththukkal//
நன்றி சரவணன்.
ஹேமா said...
பதிலளிநீக்கு//நட்பும் காதல்போலத்தான்.
சிலசமயங்களின் மௌனமாய்
மகிழ்ச்சி கொள்ளும் !//
நன்றி ஹேமா.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//அருமை. அருமை.//
நன்றி ஸ்ரீராம்.
Vijisveg Kitchen said...
பதிலளிநீக்கு//நல்ல கவிதை ராமலஷ்மி. நல்ல வரிகள்.//
நன்றி விஜி.
கவிநயா said...
பதிலளிநீக்கு***//மினுங்கும் தணலில்
மஞ்சள்முத்துக்கள்
வேகக் காத்திருந்து//
அழகான முத்துக்கள், இவற்றைப் போல நிறைய அள்ளித் தெளித்திருக்கிறீர்கள். நல்ல கவிதை. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!/***
மிக்க நன்றி கவிநயா.
சி.பி.செந்தில்குமார் said...
பதிலளிநீக்கு//கலக்கலான கவிதை//
நன்றி செந்தில்குமார்.
அம்பிகா said...
பதிலளிநீக்கு***///"அந்த நாட்கள் எத்தனை சுகமானது"
அவன் சொல்ல
"வாய்க்குமா இனி அது போல"
இவன் மருக///
இத்தகைய உணர்வுகள் எல்லோருக்குமே எதாவதொரு காலக் கட்டத்தில் வாய்க்கும் என நினைக்கிறேன்.
அருமை.//***
ஆம் பெரும்பாலும் இதைக் கடக்காதவர் இருக்க முடியாது, நன்றி அம்பிகா.
Pit said...
பதிலளிநீக்கு//நாலு கரங்கள் பிடிக்கும்போது உயிர் நட்புன்னு தெரியுது. ஆனா, இவிக உயிர் நட்பு இல்லங்கறீங்களா? பிரீலியே?//
உயிர்நட்புதான். பரவசத்தில் அன்றைய தருணத்தின் அருமையை தவறவிடுகிற இவர்கள் பரபரப்பான இயந்திர வாழ்வில் ‘தொடர்பில் இருப்பார்களா?’ எனத் தோன்ற வைக்கிறார்கள்.
நன்றி சர்வேசன்.
சே.குமார் said...
பதிலளிநீக்கு//ஆயிரம் அர்த்தம் சொல்லும் அருமையான கவிதை.//
நன்றி குமார்.
சுசி said...
பதிலளிநீக்கு//இயந்திர மனிதர்கள்.
அருமையா எழுதி இருக்கீங்க அக்கா.//
மிக்க நன்றி சுசி:)!
தேனம்மை லெக்ஷ்மணன் said...
பதிலளிநீக்கு//மிக அருமை ராமலெக்ஷ்மி.. திண்ணியிலேயே ரசித்தேன்..:)//
நன்றி தேனம்மை.
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//பிரிந்தவர்கள் கூடி உலகத்தை மறந்து உறவாடியது அவர்கள் நட்பின் ஆழத்தை குறிக்கிறது.//
இந்தப் பார்வை பிடித்திருக்கிறது.
//கவிதை அருமை...//
நன்றி கோமதிம்மா.
அமுதா said...
பதிலளிநீக்கு//கடல்காற்றைப் போலவே அருமை//
நன்றி அமுதா.
தமிழ்மணத்திலும் இன்ட்லியிலும் வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.
பதிலளிநீக்கு//இவர்கள் பரபரப்பான இயந்திர வாழ்வில் ‘தொடர்பில் இருப்பார்களா?’ எனத் தோன்ற வைக்கிறார்கள்.//
பதிலளிநீக்கு:) facebook helps more so than emails.
@ Surveysan,
பதிலளிநீக்கு//:) facebook helps more so than emails.//
உங்களுக்கான பதிலில் எழுதி, நீளம் கருதி நீக்கிய விஷயத்தை சரியாகப் பிடித்து விட்டீகளே:)! அது..
நட்பினை உயிர்ப்புடன் வைத்திருக்க ஃபேஸ்புக், ஆர்குட் போன்றவை இப்போது உதவினாலும் கூட, அவற்றின் மூலமாகவும் கண்டு பிடிக்க இயலாத நட்புக்கள் உள்ளன எனக்கு:(! தேடல் மட்டும் தொடர்ந்த படியே..!
நண்பர்கள் குழந்தைகளை கண்டு கொள்ள வில்லையே என்பதை நானும் நினைத்தேன். தலை வருடி,கன்னம் தடவி செல்லகுட்டியின் பேர் என்ன என்று கேட்டு இருக்கலாம்.
பதிலளிநீக்குஅவர்கள் பழைய நாட்கள் நினைவலையில் இந்தபிஞ்சுகள் இடம் பெறவில்லையே அந்தகால நினைவுகளோடே பிரிந்து விட்டார்கள் தொடர்பில் இருப்போம் என்று.
@ கோமதி அரசு,
பதிலளிநீக்குஉண்மைதான் கோமதிம்மா. தொடர்ந்து தொடர்பில் இருக்கையில் மறந்ததையும் மற்றவரையும் கவனிப்பார்கள் என நம்புவோம்:)! மீள்வருகைக்கு நன்றி.