Friday, October 19, 2018

விஜயதசமி வாழ்த்துகள்! - காளிகாட் காளி கோயில் - கொல்கத்தா (6)

விஜயதசமி வாழ்த்துகளுடன், இந்த நாளுக்குப் பொருத்தமாக, கொல்கத்தா தொடரின் இறுதிப் பதிவாக, காளிகாட் கோயில் குறித்த பதிவு 10 படங்களுடன்:

#1
கோவில் கோபுரம்

51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காளிகாட் காளி கோயில் கொல்கத்தாவின் டாலிகஞ்ச் எனும் பகுதியில் பாகீரதி (ஹூக்ளி) நதிக்கரையில் அமைந்துள்ளது. கல்கத்தா என்ற பெயர் காளிகட்டா (காளிகாட்) என்ற பெயரில் இருந்து வந்ததாகக் கூறுகிறார்கள்.

#2
தோரணவாயில்
காட் என்பது தீர்த்தக் கட்டம் எனப்படும் நதியின் படித்துறையாகும்.

Tuesday, October 16, 2018

நவராத்திரி வாழ்த்துகள் !


மேலிருக்கும் இணைப்பில் சென்ற வருடம் பகிர்ந்த
நவராத்திரி கொலுப் பதிவின் தொடர்ச்சியாக, 
தங்கை வீட்டின் இந்த வருடக் கொலுப் படங்கள்..

#1
கேரளத்து..


#2
கதக்களி..!

#3
பொய்க்கால் குதிரையில்.. 
தேசிங்கு ராஜா..
தேசிங்கு ராணி..

#4
கலைவாணியின் கடாட்சமும்..

Sunday, October 14, 2018

உன் வாழ்க்கையை உனக்காக வாழ்!

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 39
#1
“பெரும்பாலான மக்கள் தங்களிடம் இல்லாத தகுதியை இருப்பதாக, 
உயர்வாக மதிப்பிட்டுக் கொள்கிறார்கள். 
இருக்கும் திறமையையோ தாழ்வாக எடை போடுகிறார்கள்.”
_ Malcolm S. Forbes

#2
“நீங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்பதை உணர்வீர்களானால்,  
நிச்சயம் மிகுந்த சக்தி வாய்ந்தவர்களாக இருப்பீர்கள்!”
 _ Yogi Bhajan


#3
"வெற்றி எனது வரையறை அல்ல, ஆனால் உண்மை எனது வரையறை.

Friday, October 12, 2018

யாரோடும் பேசாதவள் - இந்த வார கல்கி இதழில்..


21 அக்டோபர் 2018 இதழில்..


யாரோடும் பேசாதவள்

வள் பேசவே மாட்டாள் 
என்றார்கள்
ஒரு காலத்தில் 
பேசிக் கொண்டிருந்தவள்தாம் 
என்றார்கள்
யாருமற்ற தனிமையில்  
தனக்குத்தானே 
பேசிக் கொள்வாளாய் இருக்கும்
என்றார்கள்

Thursday, October 11, 2018

பிர்லா மந்திர் - கொல்கத்தா (5)

#1

தொழிலதிபர் பிர்லாவின் குடும்பத்தினரால் நாட்டின் பல இடங்களில் கட்டப்பட்ட இந்துக் கோவில்களில் ஒன்று கொல்கத்தாவிலும் உள்ளது. பளிங்கினால் கட்டப்பட்ட இக்கோவில் அசுதோஷ் செளத்ரி அவென்யூவில் இருக்கிறது.

#2

இக்கோவிலைக் கட்டி முடிக்க 26 வருடங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.

Tuesday, October 9, 2018

ஹூக்ளி கரையோரம்.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 2) - கொல்கத்தா (4)

#1

தாஜ்மஹாலைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட ‘மக்ரனா’ எனும் உயர் வகை சலவைக் கற்களைக் கொண்டே விக்டோரியா நினைவிடமும் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மேல் மாடங்களும், இன்னும் பிற கட்டமைப்புகளுக் கூட தாஜ் மஹாலைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

#2

தற்போது அருங்காட்சியகமாகவும், சுற்றுலாத் தளமாகவும் அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிற   விக்டோரியா நினைவிடத்தில் மகாராணியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பிரிட்டிஷ் கால ஓவியங்கள் மற்றும் காட்சிப் பொருட்களாக ஆயுதங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், நிலவரைபடங்கள், காசுகள், அஞ்சல் தலைகள், கைவினைபொருட்கள், உடைகள் போன்றவை உள்ளன.

விக்டோரியா மகாராணி மற்றும் ஆல்பர்ட் இளவரசர் ஆகியோரின் நேர்த்தியான சில உருவப்பட ஓவியங்கள் பலவும் உள்ளன. அதில் மிகவும் குறிப்படத்தக்க ஓவியமாக போற்றப் படுகிறது,

Sunday, October 7, 2018

குற்றத்தை வெறுத்திடு.. குற்றவாளியை நேசித்திடு.. - மகாத்மா காந்தி பொன்மொழிகள்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 38
#1
“பிழை செய்திடும் சுதந்திரம் இல்லாவிடில் 
அந்த சுதந்திரத்திற்கு எந்த மதிப்புமில்லை.”

#2
“உனது நம்பிக்கைகள் உனது சிந்தனைகளாகின்றன,
உனது சிந்தனைகள் உனது வார்த்தைகளாகின்றன,
உனது வார்த்தைகள் உனது செயல்களாகின்றன,
உனது செயல்கள் உனது பழக்கங்களாகின்றன,
உனது பழக்கங்கள் உனது பண்புகளாகின்றன,
உனது பண்புகள் உனது தலைவிதியாகின்றது!”

Saturday, October 6, 2018

அழகிய கட்டிடக் கலை.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 1) - கொல்கத்தா (3)

#1

றுபத்து நான்கு ஏக்கர்கள் பரப்பளவில், பரந்து விரிந்த மலர்த் தோட்டங்களுடன் கூடிய விக்டோரியா நினைவிடம் (Victoria Memorial),
மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில், ஜவஹர்லால் நேரு சாலை அருகே, ஹூக்ளி நதிக்கரையோரத்தில் உள்ளது.

#2

1819–1901 வரை வாழ்ந்த விக்டோரியா மகாராணியின் நினைவாக உருவாக்கப்பட்ட பிரமாண்டமான இந்த பளிங்கு மாளிகை, 1906-1921 காலகட்டத்தில் கட்டப்பட்டது. 'வேல்ஸ் இளவரசர்' ஐந்தாம் ஜார்ஜினால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்நினைவிடம் பிரிட்டிஷ் அரசின் வெற்றிக்கான அடையாளமாகக் கருதப்பட்டது. விக்டோரியா மகராணி இந்தியாவின் பேரரசி என்ற பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

#3

Sunday, September 30, 2018

மகள் என்பவள்.. - மக்களும் மழலைகளும்..(2)

#1
 “முடிவில் நான் கற்றுக் கொண்டதெல்லாம் 
தனிமையில் எப்படி உறுதியாக இருக்க வேண்டுமென்பதையே”

#2
“நாம் குழந்தைகளை வளர்க்கவில்லை. 
பெரிய மனிதர்களையே வளர்க்கிறோம்.”

#3
குழந்தை சொல்லாததையும் புரிந்து கொள்பவள் தாய்

Sunday, September 23, 2018

திருப்தியான வாழ்க்கைக்கான திறவுகோல்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 37

#1
“வாழ்க்கையின் குறிக்கோள், 
குறிக்கோளுடனான வாழ்க்கையே!" 
_ Robert Byrne

#2
“சீரான திருப்தியான வாழ்க்கைக்கான திறவுகோல், 
வாழ்வில் சாதிக்க நாம்  யாரென்பதே நமக்குப் போதுமானதென 
மனப்பூர்வமாக நம்புவது”
_Ellen Sue Stern

#3
“நம்முடைய உலகத்தில் மாற்றம் கொண்டு வர 
எந்த மாயஜாலமும் தேவையில்லை. 
அதற்குத் தேவையான அத்தனை சக்தியும் 
நம்முள் ஏற்கனவே இருக்கிறது.” 
_J. K. Rowling

Friday, September 21, 2018

பண்பாட்டுத் தலைநகரம் - கொல்கத்தா (2)

நெடுங்காலமாக கொல்கத்தா அதன் இலக்கியம், கலை மற்றும் புரட்சிகரப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. கொல்கத்தாவில் "சாத்ரா" எனும் ஒருவகையான பாணியில் அமைந்த நாடகப் பாரம்பரியம் வழக்கில் உள்ளது. இந்தித் திரைப்படங்களோடு வங்காள மொழித் திரைப்படங்களையும், மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். டாலிகஞ்ச் எனும் இடமே வங்காளத் திரைப்படத் தயாரிப்பின் மையமாகத் திகழ்கிறது. இதனால் வங்காளத் திரைப்படத்துறை "டாலிவூட்" எனவும் அழைக்கப்படுகிறது. டாலீவூட் சத்யஜித் ரே, மிருணாள் சென், தப்பன் சின்ஹா, ரித்விக் காட்டக் மற்றும் அபர்ணா சென் போன்ற பல புகழ் பெற்ற இயக்குனர்களைத் திரைப்பட உலகுக்கு அளித்துள்ளது.  இப்படிப் பல வித காரணங்களுக்காக இந்தியாவின் ‘பண்பாட்டுத் தலைநகரம்’ எனவும் கொல்கத்தா கொண்டாடப் படுகிறது.

ஆயினும் முந்தைய பதிவில் சொன்னது போல மக்கள் மற்றும் நகரம் சார்ந்த பல பிரச்சனைகள் தீர்வு காணப்படாது மற்ற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் பின் தங்கிய நிலையில் உள்ளது, கொல்கத்தா. அவற்றில் ஒன்று கை ரிக்ஷா..

#1
மனிதரை மனிதர் இழுக்கும் அவலம்

மிழகத்தில் கலைஞரின் முயற்சியாலும், இந்தியாவின் மற்ற பெரும்பாலான இடங்களிலும் வழக்கொழிந்து விட்ட கை ரிக்ஷா இங்கே பயன்பாட்டில் இருப்பதும், துருப்பிடித்தத் தகர டப்பாவுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்த தோற்றத்தில் ஓடும் மிகப் பழைய மஞ்சள் அம்பாஸிடர் டாக்ஸிகளும் 21ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா எனும் சந்தேகத்தை வரவழைக்கின்றன. சாலைகளின் நடுவே ஓடுகின்ற ட்ராம், மற்றும் சைக்கிள் ரிக்ஷா, ஜட்கா ஆகிய வாகனங்கள் கொல்கத்தாவை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

#2
“அந்தக் காலம்... அது அது அது...”

Wednesday, September 19, 2018

ரவீந்திர சேது - கொல்கத்தா (1)

#1
ரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் கொல்கத்தா. மக்கள் தொகையில் நான்காவது இடம். மேற்கு வங்கத்தின் தலைநகரம்.   உலக அளவிலும் பரப்பளவில் எட்டாவது மிகப் பெரிய நகரமாகத் திகழ்கின்றது.

கொல்கத்தா என்ற பெயரும், ஆங்கிலேயர் இட்ட கல்கத்தா என்ற பெயரும், எப்படி வந்தது என்பதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், காளிகத்தா (காளி மாதாவின் இடம்) எனும் பொருளில் ஏற்பட்டதென்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.  வங்க மொழியினர் எப்பொழுதும் கொல்கத்தா என்றே அழைத்து வந்த போதும், ஆங்கிலேயர் இதனை கல்கத்தா என்று அழைத்ததால் அதுவே அதிகாரபூர்வப் பெயராக இருந்து வந்தது. பிறகு 2001 ஆம் ஆண்டில் கொல்கத்தா என்னும் உள்ளூர்ப் பெயரையே அதிகாரப்பூர்வப் பெயராக அறிவிப்பானது.

#2

இலங்கைப் பயணம் போல இதுவும் ஒரு குறுகிய காலப் பயணமே.

Sunday, September 16, 2018

மாயஜாலம்

#1
"புன்னகையை அணிந்திடு. 
நண்பர்களைப் பெற்றிடு" 
_ George Eliot

#2
"குழந்தைப் பருவம் என்பது 
களங்கமற்றதும் 
விளையாட்டுத்தனம் நிறைந்ததும் ஆகும். 
சுதந்திரமும் மகிழ்ச்சியும் கொண்டதாகும்"


#3
“குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடுவோம்!”

Sunday, September 9, 2018

கண்ணுக்குப் புலப்படாதவை

#1
“பணிவில் உயர்ந்து நிற்கையில் 
உயர்ந்த மனிதராகும் தகுதியை நாம் நெருங்கி விடுகிறோம்.” 
_Rabindranath Tagore

#2
சில நேரங்களில் 
ஒரு அறை வேண்டுவதெல்லாம் 
சாடி நிறைய அன்றலர்ந்த மலர்களையே.

#3
“அதிகாலை நடை பயிற்சி முழுநாளுக்குமான வரம்” 
- Henry David

Sunday, September 2, 2018

உலகம் ஒரு நாடக மேடை - வில்லியம் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 36

#1
 “நாம் யாரென்பது நமக்குத் தெரியும், 
ஆனால் யாராகக் கூடுமென்பது நமக்குத் தெரிவதில்லை”


#2
 “இயற்கையினுடான ஒரு தொடுதல் 
மொத்த உலகையும் நமக்கு நெருக்கமானதாக ஆக்குகிறது.”

#3
 “உங்கள் ஆன்மாவுக்கேனும் 
நீங்கள் உண்மையாய் இருங்கள்” 

Friday, August 31, 2018

ஆட்காட்டிக் குருவி - Did you do it - பறவை பார்ப்போம் - பாகம் 29

ளவில் பெரிய கரைப் பறவைகள், ஆட்காட்டிக் குருவிகள் .  சுமார் 10 முதல் 16 அங்குல நீளத்தில் இருக்கும்.
ஆங்கிலப் பெயர்Lapwing 
இவை மனிதர்களையோ அல்லது எதிரிகளையோ கண்டால் ஒலிஎழுப்பி மற்ற பறவைகளுக்கும்  ஆபத்தில் இருக்கும் பிற உயிரனங்களுக்கும் தெரியப்படுத்தும். உதாரணத்திற்கு பதுங்கி வரும் புலிகளின் வருகையை பக்கத்திலிருக்கும் மான்களுக்கு முதலிலேயே தெரிவித்து விடும்.

Sunday, August 26, 2018

சுதந்திரம் - இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (5)

#1

சுதந்திர தினத்தையொட்டி டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழ் சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்த “FREEDOM" எனும் தலைப்புக்குத் தேர்வான ஐந்து படங்களுள் ஒன்றாக..

#2

பாட்டுப் பாடவா..

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 35

#1
“ஒவ்வொரு நாளும் புது நாளே. 
கடந்து.. நகர்ந்து.. செல்லாவிடில் 
மகிழ்ச்சியைக் கண்டடையவே முடியாது போகும்."
- Carrie Underwood


#2
‘சில தினங்களில் 
பாடல் ஏதுமில்லாது போகலாம் உங்கள் இதயத்தில். 
பரவாயில்லை பாடிடுங்கள் எதையேனும்..' 
_ Emory Austin


#3
“குதூகலமாய் ஆடிட ஒன்றுமில்லாது போனால்
ஆனந்தமாய்ப் பாடிட காரணம் ஒன்றைக் கண்டு பிடி.”

Sunday, August 19, 2018

ஒரு நாள்.. ஒரு பச்சைக் கிளி.. - உலக ஒளிப்பட தின வாழ்த்துகள்!

*என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 34
*பறவை பார்ப்போம்.. - பாகம்: 28
தோட்டத்துப் பறவைகளைப் படமெடுக்கும் போது இருக்கும் முக்கிய சிரமம் அவை நம்மைக் கவனிக்க நேர்ந்தால் சிட்டாய்ப் பறந்து மறைந்து விடுமென்பதே.

#1
கொய்யாக் கிளையில்.. 
உல்லாசமாய் ஊஞ்சலாடிய படி..  

எல்லாப் பறவைகளும் அப்படியெனச் சொல்ல முடியாது. சில பறவைகள் கண்டு கொள்ளாது. வீட்டுக் கொய்யாவின் ருசியில் மனதைப் பறி கொடுத்த இந்தப் பச்சைக் கிளி, “எப்படி வேண்டுமோ ஆற அமரப் படமெடுத்துக் கொள். அருகே வந்து தொந்திரவு செய்யாமல் இருந்தால் சரி” என்கிற ரீதியில் அவ்வப்போது திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டுக் காரியமே கண்ணாக இருந்தபோது காட்சிப் படுத்திய படங்கள் ஏழின் வரிசை இது:

#2
வாய் நிறையக் கவ்வி..


#3
சிந்திச் சிதறி..

Monday, August 13, 2018

கூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)

#1
ஆங்கிலப் பெயர்: Pelican
றக்கும் நீர்ப் பறவைகளில் மிகப் பெரிய பறவை கூழைக்கடா. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மென்மையாகக் கூழ் போன்று இருப்பதாலும், கிடா போன்று பெரிதாக இருப்பதாலும் இதைக் கூழைக்கடா எனும் பெயர் வந்ததாகத் தெரிகிறது. Pelecanidae எனும் குடும்பத்தைச் சேர்ந்தது.

#2
உயிரியல் பெயர்: Pelecanus Occidentalis

டை:

Sunday, August 12, 2018

தேடல் என்பது உள்ளவரை..

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 33) 

#1
 “அபரிமிதம் என்பது நாம் அடையக் கூடிய ஒன்றல்ல. 
மனதுக்கு இணக்கமாக நாம் உணர வேண்டிய ஒன்று.”
_ Wayne Dyer
# Green Scarab Beetle
#2
“வாழ்வை அனுபவித்திட
 எல்லாமே கச்சிதமாக இருந்தாக வேண்டும் 
எனக் காத்திருக்காதீர்கள்”
 _Joyce Mayer

Sunday, August 5, 2018

உன்னையே கேள் - ரூமி பொன்மொழிகள்

#1
“பிரபஞ்சத்திலுள்ள யாவும் உன்னுள்ளேயே உள்ளன. 
தேவையான எல்லாவற்றையும் உன்னிடமே கேட்டுப் பெறு.”


#2
“வார்த்தைகளைப் பயன்படுத்தாதக் குரலொன்று உள்ளது. 
கவனியுங்கள்”


#3
“எதையும் ஆத்மார்த்தமாகச் செய்யும் போது 
மனதுள் மகிழ்ச்சி ஊற்றெடுப்பதை உணருவீர்கள்!”

Thursday, August 2, 2018

ஓடு மீன் ஓட.. குள நாரை.. - பறவை பார்ப்போம் (பாகம் 27)

#1
ஆங்கிலப் பெயர்: Indian pond heron

அளவில் சிறியதொரு கொக்கு இனம். கழுத்து குறுகிக் காணப்படும். குட்டையான வலிமையான அலகுகளைக் கொண்டிருக்கும்.

#2
உயிரியல் பெயர்: Ardeola grayii
வேறு பெயர்கள்:  குளத்துக் கொக்கு, குருட்டுக் கொக்கு, மடையான், 

இது பரவலாகக் காணப்படும் பறவைகளுள் ஒன்றாக இருப்பினும் இவற்றின் நிறத்தின் காரணமாக எளிதாகக் கண்ணுக்குப் புலப்படாது. இதனால் இது இருப்பது தெரியாமலே பிறர் அதன் மிக அருகில் செல்ல நேரும் சமயத்தில் சட்டென வெண் சிறகுகளை விரித்துப் பறந்து விடும். அருகே செல்லும் வரை அசையாதிருப்பதால் இதற்குக் கிட்டப் பார்வை பிரச்சனை என சிலர் கருதுகின்றனர். அதனாலேயே குருட்டுக் கொக்கு என்றும் அழைக்கப்படுகிறது.

#3
ஓடு மீன் ஓட..

Sunday, July 29, 2018

கடினமான பரீட்சை

#1
‘அமைதியாக, சாந்தமாக,
எப்போதும் நீங்கள்
உங்கள் கட்டுப்பாட்டில் இருங்கள்!’
_Paramahansa Yogananda


#2
‘சராசரியாக இருக்காதீர்கள். 
எவ்வளவு உயரத்தில் முடியுமோ 
அவ்வளவு உயரத்தில் பறக்கட்டும் 
உங்கள் உள்ளம்!’
_Aiden Wilson Tozer


#3
“சரியான நேரத்திற்காகப் பொறுமையாகக் காத்திருப்பதே, 
வாழ்க்கை நமக்கு வைக்கும் பரீட்சைகளில் கடினமான ஒன்று"

Tuesday, July 24, 2018

பூச்சி பிடிப்பான் (Green bee-eater) - பறவை பார்ப்போம் (பாகம் 26)

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 31)
பூச்சி பிடிப்பான் என அறியப்படும் Green bee-eater பூச்சிகளைப் பிடித்து உண்டு வாழும் குடும்பத்தைச் சேர்ந்த, மரக்கிளைகளைப் பற்றி அமரும் பாஸரைன் வகைப் பறவை.

#1
ஆங்கிலப் பெயர்: Green bee-eater

பிற பூச்சி பிடிப்பான்களைப் போல பச்சை நிறப் பூச்சிப் பிடிப்பான்களும் பளீர் வண்ணத்தில், மெல்லிய உருவத்தைக் கொண்டிருக்கும். சுமார் 9 அங்குல நீள உடலும் கூடுதலாக 2 அங்குல நீளமுடைய வால்களையும் கொண்டவை. இரு பாலினங்களுக்கிடையே வித்தியாசம் காண முடியாத படி, ஒரே மாதியாகத் தோற்றமளிக்கும். இறகுகள் முழுக்கவும் கண்ணைக் கவரும் பச்சை நிறத்தில் ஆங்காங்கே நீலத் தீட்டலுடன் இருக்கும். கன்னம், தொண்டைப் பகுதிகள் நீல நிறத்தில் இருக்கும். அழுத்தமான கருப்புக் கோடு கண்ணுக்கும் முன்னும் பின்னுமாக ஓடும். கருவிழிகள் சிகப்பாகவும், அலகு கருப்பாகவும், கால்கள் ஆழ் சாம்பல் வண்ணத்திலும் இருக்கும். மூன்று விரல்கள் அடிப்பாகத்தில் சேரும் வகையான இதன் கால்கள் சற்றே பலகீனமானவையே.

#2
உயிரியல் பெயர்Merops orientalis

இவற்றின் இனப்பெருக்கக் காலம் மார்ச் முதல் ஜூன் வரையிலும். மற்ற பூச்சி பிடிப்பான்களைப் போலன்றி பச்சைநிறப் பூச்சி பிடிப்பான்கள்  மணல் வெளியில் சுரங்கம் தோண்டி தனிமையில் கூடமைக்கும்.

#3

Sunday, July 22, 2018

வெற்றியின் அளவுகோல்

#1
‘வெற்றி என்பது முடிவல்ல.
 தோல்வி என்பது அழிவுமல்ல.
 துணிவுடன் தொடர்வதே முக்கியம்.’
 _ Winston Churchill


#2
‘எந்தவொரு கருணை கொண்ட செயலும், அது எத்தனை சிறிதாயினும்,  வீணாவதில்லை, எப்போதும்.’ 
_ ஈசாப்

 #3
“வானமே எல்லையின் தொடக்கம் என்பதை எப்போதும் நம்புகிறேன்” 
_MC Hammer

Tuesday, July 17, 2018

ஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்!

த்து ஆண்டுகள்.  மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென..

#


மொத்தப் பார்வைகள்: 
இருபத்தியொரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்++. 
சராசரியாக படம் ஒன்றுக்கு 700 பார்வைகள்
#


இது சாதனையல்ல.. மகிழ்ச்சி. எண்ணிக்கை பெரிதல்ல.. எண்ணியபடி செயலாற்றி வருவதில் ஒருவித மன திருப்தி.

மூவாயிரமாவது படம்.  
3000 நார்களால் பின்னிய கூடு. 
#

Sunday, July 15, 2018

கடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)

#1
கடலோரம் வாங்கிய காற்று..

#2
கால் பந்தாட்டம்.. அலையோரம் களியாட்டம்.. 

#3
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin