செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

படங்கள் ஆயிரம் - FLICKR பயணம்


புகைப்படப் பகிர்வுக்காகவே இயங்கும் தளங்களில் முதன்மையாக விளங்கி வரும் Flickr-ல் இன்றோடு எனது Photostream ஆயிரம் படங்களை நிறைவு செய்து 1,33,700 + மொத்தப் பக்கப் பார்வைகளைப் பெற்று தொடருகிற பயணத்துக்குக் காரணாமாய், ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி:)!

# காலைப் பனியில் ரோஜா


# ஆயிரமாவது படம்!!


 # பக்கப் பார்வைகள் 133,700+

இங்கும் அங்கும்

முத்துச்சரம் ஆரம்பித்த மாதத்திலிருந்தே PiT போட்டிகளுக்கென தொகுப்பாகப் படங்களை பகிரும் பழக்கம் ஆரம்பித்தது. ஒன்றரை வருடங்கள் கழித்து 2009-ல் ஆரம்பித்த ஃப்ளிக்கர் பக்கத்தில் இங்கிருக்கும் அத்தனை படங்களும் உள்ளன என சொல்ல முடியாது. அங்கே பகிர்ந்த அனைத்தும் இங்கு உள்ளன என்றும் சொல்ல முடியாது. எப்படியானாலும் புகைப்படங்களுக்கே ஆன பிரத்தியேகமான தளத்தில் ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு என்ற விகிதத்தில் பகிர்ந்த படங்கள் ஆயிரத்தைத் தொட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

‘எண்ணிக்கை முக்கியமா?’

இல்லைதான் என்றாலும்

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

பட்டாம்பூச்சிப் பண்ணை - மைசூர் நேச்சர் பார்க் - படங்கள் 17 - இறுதிப் பாகம்

#1

காராஞ்சி ஏரிக்கு உள்ளேயே ஒரு சிறிய தீவில் அமைந்திருக்கிறது பட்டாம்பூச்சிப் பண்ணை (Butterfly Park). (Nature Park) இயற்கைப்பூங்காவின் நுழைவாயிலில் இந்த இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஏரியை ஒட்டியே அமைந்தபாதையில் உள்ளே நடக்க வேண்டியுள்ளது. ஒரு சிறிய பாலம் நம்மை அந்தத் தீவுக்கு அழைத்துச் செல்கிறது.

#2 வரவேற்கிறது வண்ணத்துப்பூச்சிப்பூங்கா..


பாலத்தின் இருபக்கமும் ஏரியின் அழகும் அமைதியும் வசீகரிக்கிறது.

#3

“இயற்கையை ஆழ்ந்து நோக்குங்கள். எல்லாமே எளிதாகப் புரிபட ஆரம்பிக்கும்.”

-ஆல்பர்ட் ஐன்ஸ்டின்


புதன், 20 பிப்ரவரி, 2013

விருது - நவீன விருட்சத்தில்..



முதுமையைத் தொட்டபோது
ஒட்டிக் கொண்டன
தனிமையும் தளர்வும்.

இளமையில் துணையிருந்த
திறமைகளும் திடமும்
விடை பெற்றிருந்த வேளையில்,
காலம் கடந்து
அறிவிப்பான விருதை
ஏற்க மறுத்தப் பெருமிதத்துடன்
அவனது இரு கைகளும்
இறுகப் பற்றிக் கொள்கின்றன
மேசை இழுப்பறையில்
பத்திரமாய்ப் பாதுகாத்து வந்த
பேனாவையும் தூரிகையையும்.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

கல்வித் தந்தை காமராசர் - மறுக்கப்படும் கல்வி - பிப்ரவரி PiT


ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கிடைக்க வேண்டுமென மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்த கல்வித் தந்தையின் ஆசை இன்று நிறைவேறியிருக்கிறதா?

#1 புத்தகம் ஏந்த வேண்டிய பருவத்தில் பூக்கூடையுடன் வீதியில்.. 

வியாழன், 14 பிப்ரவரி, 2013

உப்புத் தாத்தா

#1 
உப்பு உப்போய்... கோலப்பொடி! உப்பு உப்போய்... கோலப்பொடி” எனக் குரல் கொடுத்தபடி வெள்ளிக்கிழமைகளில் இருமுடி கட்டிய மாதிரி தலையில் இரண்டையும் சுமந்து வருகிற பழனித் தாத்தாவை நெல்லை வீதிகளில் உங்களில் யாரேனும் பார்த்திருக்கவும் கூடும். சிறு வியாபாரிகளுக்கும் அவர்களிடம் வாடிக்கையாய் வாங்குகிற வீட்டினருக்கும் ஒரு காலத்தில் இருந்த பந்தங்கள் நகர வாழ்வில் காண அரிதானதென்றால் சிறுநகரங்களிலும் வந்துவிட்டுள்ள பல்பொருள் அங்காடிகள், சந்தைகளால்  இந்தக் காட்சிகள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

புதன், 6 பிப்ரவரி, 2013

நதியின் ஓட்டம்


1. அலையை எதிர்த்துச் சென்றாலும் நதியின் ஓட்டத்துக்குத் தடையாய் இருப்பதில்லை படகு. எதிர்கொள்வோம் நம் பிரச்சனைகளை எவர் வளர்ச்சிக்கும் தடையாய் இராது.

திங்கள், 4 பிப்ரவரி, 2013

கூழாங்கற்கள் - நவீன விருட்சம் 92_வது இதழில்..



மணல் வீட்டைக் கட்டி
மாளிகை எனக் கொண்டாடுகிறது குழந்தை.
ஆர்ப்பரித்துத் தோழர்கள் அளித்தக்
கூழாங்கற்களால்
அகழியை அலங்கரித்து
அழகு பார்க்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin