Monday, December 21, 2009

பவனி


பளபளக்கும் பட்டுடையும்
மினுமினுக்கும் நகைநட்டும்
சரிகை இழையோடும்
தலைப்பாகையுமாய்..
அலங்கரித்த
வெண்புரவிகளில்
கம்பீரமாய் பெருமிதமாய்
அரசத்தம்பதியர் வீற்றுவர
கண்நூறுதான் கண்டுமகிழ..

ஊர்உலா முடிந்து
உடைமாற்றி நகை களைந்து
நின்றார்கள் கூலிக்கு
இன்றாவது கிடைக்குமாவென..

கனைக்காத குதிரைக்குக்
கால்களாய் இருந்த
களைப்பு மிகுதியில்
ராஜாவும்..
செழிக்காத கலைக்குச்
சேவகியாய்-
மெய் வருத்திப்
பொய்க் களிப்புடன்
பவனிவந்த ராணியும்!
***படம் நன்றி: வடக்கு வாசல்
[இக்கவிதைக்காகவே ஓவியர் சந்திர மோகன் வரைந்தது].


 • 'வடக்கு வாசல்' பத்திரிகையின் டிசம்பர் 2009 இதழிலும் மற்றும் அதன் இணைய தளத்திலும் வெளிவந்துள்ள கவிதை.98 comments:

 1. //ஊர்உலா முடிந்து
  உடைமாற்றி நகை களைந்து-
  நின்றார்கள் கூலிக்கு
  இன்றாவது கிடைக்குமாவென../


  நிதர்சனம்!

  ஆட்டம் கொண்டாட்டங்களில் களித்திருந்து செல்லும் கூட்டத்தினருக்கு என்ன தெரியும் ஆடியவர்களின் ரணம்?

  [மனதினுள் சட்டென்று ரணத்தினை உண்டாக்கும் எந்த கவிதையும் அமரத்துவம் பெறுகிறது!]

  ReplyDelete
 2. ஆயில்யன் said...

  //நிதர்சனம்!

  ஆட்டம் கொண்டாட்டங்களில் களித்திருந்து செல்லும் கூட்டத்தினருக்கு என்ன தெரியும் ஆடியவர்களின் ரணம்?//

  உண்மைதான் ஆயில்யன். நலிந்து வரும் கலையேயாயினும் அதற்கு நாயகர்களாய் காவலர்களாய் இருப்பதைப் பெருமிதமாகக் கருதி கிடைக்கின்ற வருமானத்தில் காலத்தை ஓட்டும் இவர்களின் பேட்டியினைப் பொதிகையில் பார்க்க நேர்ந்தது.

  //[மனதினுள் சட்டென்று ரணத்தினை உண்டாக்கும் எந்த கவிதையும் அமரத்துவம் பெறுகிறது!]//

  கால் முட்டியிலிருந்து பாதம் வரை க்ரேப் பேண்டேஜ் போன்ற துணியினை வலுசேர்க்கக் கட்டிக் கொண்டு இரண்டடி உயரக் கட்டைகளைப் பாதங்களுக்கடியில் பொருத்திக் கொண்டு முழுஈடுபாட்டுடன் அநாயசமாய் ஆடி பிரமிக்க வைத்தாலும் அவர்களது பொருளாதார நிலை மனதில் வலியைத்தான் ஏற்படுத்துகிறது!

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஆயில்யன்.

  ReplyDelete
 3. அருமை!அருமை!

  என்றும் வாழ வேண்டும்
  கலைகளும்,கலைஞர்களும்.

  ReplyDelete
 4. சுமந்தவனின் வலி அழகான கவிதையாக, மிக உண்மையாக.

  ReplyDelete
 5. //பளபளக்கும் பட்டுடையும்
  மினுமினுக்கும் நகைநட்டும்
  சரிகை இழையோடும்
  தலைப்பாகையுமாய்..
  அலங்கரித்த
  வெண்புரவிகளில்
  கம்பீரமாய் பெருமிதமாய்
  அரசத்தம்பதியர் வீற்றுவர-
  கண்நூறுதான் கண்டுமகிழ..

  ஊர்உலா முடிந்து
  உடைமாற்றி நகை களைந்து-
  நின்றார்கள் கூலிக்கு
  இன்றாவது கிடைக்குமாவென..//

  துணை நடிகர்கள் மனதில் வந்துபோகிறார்கள் சகோதரி.
  வாழ்த்துக்கள்.
  தொடருங்கள்.

  ReplyDelete
 6. கடைக்கோடி மனிதர்களின் கஷ்டத்தை கவிதையாய் வடித்திருப்பது அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. ஆயில்யன் சொல்லவேண்டியதை சொல்லி விட்டார். வடக்கு வாசலில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

  உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
  ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

  ReplyDelete
 9. அருமையான சிந்தனை

  ReplyDelete
 10. //ஊர்உலா முடிந்து
  உடைமாற்றி நகை களைந்து-
  நின்றார்கள் கூலிக்கு
  இன்றாவது கிடைக்குமாவென..//

  நலிந்த கலைஞர்களின் வலி..நல்ல கவிதைங்க

  ReplyDelete
 11. எல்லாருமே ஒருவிதத்தில் போலி வாழ்க்கைதான் வாழ்கிறார்களீ.

  நல்ல கவிதை.

  ReplyDelete
 12. அருமை அக்கா.

  அப்டியே யதார்த்தத்தை கவிதை ஆக்கி இருக்கீங்க.

  மனத் திரையில் காட்சி தானாக உருவாகிறது.. :(

  ReplyDelete
 13. மிக ரசித்தேன் ... புதியதோர் கோணம்...அருமையான வரிகோர்ப்பு..... பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. கவிதை அருமை. வடக்கு வாசல் பிரவேசத்திற்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. ஊர் திருவிழாவில் கோயில் கொடையையும், நலிந்த கலைஞர்களின் நிலையையும் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்..

  ReplyDelete
 16. ரொம்ப எதார்த்தமா நல்லா எழுதியிருக்கீங்க மேடம்

  //ஊர்உலா முடிந்து
  உடைமாற்றி நகை களைந்து-
  நின்றார்கள் கூலிக்கு
  இன்றாவது கிடைக்குமாவென//

  இந்த வரிகள் ஒரு வித மன பாதிப்பை உருவாக்குகின்றது...!

  :(

  ReplyDelete
 17. 'செழிக்காத கலைக்குச்
  சேவகியாய்''

  உண்மைதான் மேடம் இதுபோல் இன்னும் எத்தனையோ சேவகிகள் ஆனால் பாராட்டத்தான் ஆளில்லை.

  ReplyDelete
 18. பவனி யில் பவனி வந்த இந்த வரிகள் எனக்கு பிடிச்சது \\கனைக்காத குதிரைக்குக்
  கால்களாய் இருந்த
  களைப்பு மிகுதியில்
  ராஜாவும்..
  செழிக்காத கலைக்குச்
  சேவகியாய்-//

  ReplyDelete
 19. தங்கள் சரத்தில் மற்றுமொரு முத்து!

  /செழிக்காத கலைக்குச்
  சேவகியாய்-
  மெய் வருத்திப்
  பொய்க் களிப்புடன்
  பவனிவந்த ராணியும்!/

  ஹ்ம்ம்...:-(

  ReplyDelete
 20. பவனி அருமை பவானி

  ReplyDelete
 21. அழகா.. இயல்பா.. கடைசியில் மனதிலறையும் நிதர்சனம்... நல்லா இருக்குங்க..

  ReplyDelete
 22. பகல் முழுக்க பட்டினி இருந்தாலும் ராத்திரியில் ராஜா வேஷம் போடற சுகம் பத்தி ராஜபார்ட் ரங்கதுரையில் சிவாஜி பேசும் வசனம் ஞாபகம் வந்தது...

  ReplyDelete
 23. அருமை அருமை.. இப்படி வாழ்க்கையை எழுத்தாக்குவதும், அதைப் படிப்பதும்தான் மனதைத் தொடுகின்றன.
  வடக்கு வாசலுக்கு வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 24. கண் முன்னே காட்சியாய்
  தங்களின் கவிதை

  அற்புதம்

  வாழ்த்துகள்

  ReplyDelete
 25. அப்பாடா. இன்னைக்கி படிச்சதுலயே என் மண்டைக்கு புரிஞ்ச ஒரே கவித இத்தான்... வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 26. \\ஆயில்யன் said

  //[மனதினுள் சட்டென்று ரணத்தினை உண்டாக்கும் எந்த கவிதையும் அமரத்துவம் பெறுகிறது!]//

  உங்கள் கவிதையும் அமரத்துவம் பெறுகிறது.

  ReplyDelete
 27. பொய்க்கால் குதிரையில் பவனிவரும் ராஜா ராணியைத்தான் சொல்றீங்களா?

  உண்மையிலேயே இங்கே களைப்படையும் கால்கள்தான் மெய் மற்றதெல்லாம் பொய்.

  இதை ஏன் பொய்க்கால் குதிரைனு சொல்றாங்கனு தெரியலை!

  உண்மையான ராஜா ராணிபோல் இல்லாமல் தாங்களால் எல்லோரையும் மகிழ்விக்க முடிகிறதே என்று நினைத்து திருப்தியடைய வேண்டியதுதான்.

  ReplyDelete
 28. கலையின் வலி

  அழகு

  விஜய்

  ReplyDelete
 29. ஆகா அருமை
  பிறந்தநாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 30. /*கனைக்காத குதிரைக்குக்
  கால்களாய் இருந்த
  களைப்பு மிகுதியில்
  ராஜாவும்..
  செழிக்காத கலைக்குச்
  சேவகியாய்-
  மெய் வருத்திப்
  பொய்க் களிப்புடன்
  பவனிவந்த ராணியும்!*/
  மனம் கனத்தது நிதர்சனத்தை எண்ணி...

  ReplyDelete
 31. முதல் பாராவில் பார்வையாளர்கள் பார்வையில்.. பின்பு நிஜம்.. அருமை

  ReplyDelete
 32. கனைக்காத குதிரைக்குக்
  கால்களாய் இருந்த
  களைப்பு மிகுதியில்
  ராஜாவும்..
  செழிக்காத கலைக்குச்
  சேவகியாய்....

  அட்ட‌காச‌ம்

  ReplyDelete
 33. வேஷமிட்ட வாழ்க்கைத்திரைக்குப்பின் ஓசையின்றிக் கேட்கும் விம்மல்களைக்கூட அழகாகப் படம்பிடிச்சிருக்கீங்க ராமலக்ஷ்மி அக்கா.

  கவிதை அருமை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 34. எம்.எம்.அப்துல்லா said...

  //அருமை!அருமை!

  என்றும் வாழ வேண்டும்
  கலைகளும்,கலைஞர்களும்.//

  மனதார வாழ்த்துவோம் இவ்வாறாக. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அப்துல்லா.

  ReplyDelete
 35. tamiluthayam said...

  // சுமந்தவனின் வலி அழகான கவிதையாக, மிக உண்மையாக. //

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள் தமிழ்உதயம்.

  ReplyDelete
 36. எம்.ரிஷான் ஷெரீப் said...

  //துணை நடிகர்கள் மனதில் வந்துபோகிறார்கள் சகோதரி.
  வாழ்த்துக்கள்.
  தொடருங்கள்.//

  துணை நடிகர்கள் வாழ்வும் இப்படியாகத்தான் உள்ளன பெரும்பாலும். வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றிகள் ரிஷான்.

  ReplyDelete
 37. துபாய் ராஜா said...

  // கடைக்கோடி மனிதர்களின் கஷ்டத்தை கவிதையாய் வடித்திருப்பது அருமை. வாழ்த்துக்கள்.//

  கவனிக்கப்பட வேண்டும் அவர்களது கஷடம் என்கிற ஆதங்கித்தில்தான். வாழ்த்துக்களுக்கு நன்றி துபாய் ராஜா.

  ReplyDelete
 38. தமிழ் பிரியன் said...

  // ஆயில்யன் சொல்லவேண்டியதை சொல்லி விட்டார். வடக்கு வாசலில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!//

  ஆயில்யனின் கருத்தை வழிமொழிந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தமிழ் பிரியன்.

  ReplyDelete
 39. @ தமிழினி,
  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 40. goma said...

  //அருமையான சிந்தனை//

  கருத்துக்கு மிக்க நன்றி கோமா.

  ReplyDelete
 41. புலவன் புலிகேசி said...

  //நலிந்த கலைஞர்களின் வலி..நல்ல கவிதைங்க//

  கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி புலவன் புலிகேசி.

  ReplyDelete
 42. சின்ன அம்மிணி said...

  //எல்லாருமே ஒருவிதத்தில் போலி வாழ்க்கைதான் வாழ்கிறார்களீ.

  நல்ல கவிதை.//


  உண்மைதான் அம்மிணி. நேரம் வருகையில் நிதர்சனத்தைச் சந்தித்துதான் ஆக வேண்டிய சூழலில். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 43. சுசி said...

  //அருமை அக்கா.

  அப்டியே யதார்த்தத்தை கவிதை ஆக்கி இருக்கீங்க.

  மனத் திரையில் காட்சி தானாக உருவாகிறது.. :( //

  நிஜவாழ்வில் காட்சிகள் விரைவில் மாறி கலைகள் செழிக்க வாழ்த்துவோம்.

  கருத்துக்கு நன்றி சுசி.

  ReplyDelete
 44. சி. கருணாகரசு said...

  // மிக ரசித்தேன் ... புதியதோர் கோணம்...அருமையான வரிகோர்ப்பு..... பாராட்டுக்கள்.//

  ரசனைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கருணாகரசு.

  ReplyDelete
 45. கவிநயா said...

  //கவிதை அருமை. வடக்கு வாசல் பிரவேசத்திற்கும் வாழ்த்துகள்.//

  வடக்கு வாசலில் இது எனது இரண்டாவது படைப்பு. உங்கள் வாழ்த்து இன்னும் பல படைப்புகள் வெளிவர வழிசெய்யட்டும். பாராட்டுக்கும் நன்றி கவிநயா.

  ReplyDelete
 46. ஈ ரா said...

  //ஊர் திருவிழாவில் கோயில் கொடையையும், நலிந்த கலைஞர்களின் நிலையையும் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்..//

  நன்றி ஈ ரா. சின்ன வயதில் கோவில் விழாக்களில் இந்நடனங்களை ரசிக்க மட்டும் தெரிந்ததே தவிர கலைஞர்களின் சிரமங்கள் புரிந்ததே இல்லை:(!

  ReplyDelete
 47. பிரியமுடன்...வசந்த் said...

  ***/ ரொம்ப எதார்த்தமா நல்லா எழுதியிருக்கீங்க மேடம்

  //ஊர்உலா முடிந்து
  உடைமாற்றி நகை களைந்து-
  நின்றார்கள் கூலிக்கு
  இன்றாவது கிடைக்குமாவென//

  இந்த வரிகள் ஒரு வித மன பாதிப்பை உருவாக்குகின்றது...!

  :( /***

  யதார்த்த வாழ்க்கைக்கும் ஏற்றுக் கொண்ட வேடத்துக்கும் இடையேதான் எவ்வளவு இடைவெளி! கருத்துக்கு நன்றி வசந்த்!

  ReplyDelete
 48. aambal samkannan said...

  // 'செழிக்காத கலைக்குச்
  சேவகியாய்''

  உண்மைதான் மேடம் இதுபோல் இன்னும் எத்தனையோ சேவகிகள் ஆனால் பாராட்டத்தான் ஆளில்லை.//

  கிடைக்கின்ற பாராட்டுக்கள் என்பது கணநேரக் கைதட்டல்கள் மட்டுமே என்றாகி விட்ட நிலை. கலைக்கு அவர்கள்தான் சேவகம் செய்கிறார்கள் தம்மை சரியாகக் காப்பாற்றா விட்டாலும் கூட. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி aambal samkannan!

  ReplyDelete
 49. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  ***/ பவனி யில் பவனி வந்த இந்த வரிகள் எனக்கு பிடிச்சது

  \\கனைக்காத குதிரைக்குக்
  கால்களாய் இருந்த
  களைப்பு மிகுதியில்
  ராஜாவும்..
  செழிக்காத கலைக்குச்
  சேவகியாய்-// /***

  ரசனைக்கு நன்றி முத்துலெட்சுமி.
  வடக்கு வாசல் தெற்கே வந்தடையும் முன், கவிதை அதில் பவனி வந்திருக்கும் விவரத்தைத் தெரிவித்தமைக்கும்:)!

  ReplyDelete
 50. சந்தனமுல்லை said...

  // தங்கள் சரத்தில் மற்றுமொரு முத்து!

  /செழிக்காத கலைக்குச்
  சேவகியாய்-
  மெய் வருத்திப்
  பொய்க் களிப்புடன்
  பவனிவந்த ராணியும்!/

  ஹ்ம்ம்...:-( //

  கருத்துக்கு மிக்க நன்றி முல்லை.

  ReplyDelete
 51. thenammailakshmanan said...

  //பவனி அருமை பவானி//

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தேனம்மைலக்ஷ்மணன்.

  ReplyDelete
 52. பலா பட்டறை said...

  //அழகா.. இயல்பா.. கடைசியில் மனதிலறையும் நிதர்சனம்... நல்லா இருக்குங்க..//

  கருத்துக்கு நன்றிங்க பலா பட்டறை.

  ReplyDelete
 53. ஸ்ரீராம். said...

  // பகல் முழுக்க பட்டினி இருந்தாலும் ராத்திரியில் ராஜா வேஷம் போடற சுகம் பத்தி ராஜபார்ட் ரங்கதுரையில் சிவாஜி பேசும் வசனம் ஞாபகம் வந்தது...//

  வசனம் நினைவில்லா விட்டாலும் இப்படத்தின் கதை நினைவிருக்கிறது. பொய்க்கால் ஆட்டக்காரருக்கு மட்டுமின்றி எல்லா நாடகக் கலைஞர்களுக்கும் பொருந்தக் கூடியதாகத்தான் உள்ளது இக்கவிதை. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 54. " உழவன் " " Uzhavan " said...

  //அருமை அருமை.. இப்படி வாழ்க்கையை எழுத்தாக்குவதும், அதைப் படிப்பதும்தான் மனதைத் தொடுகின்றன.
  வடக்கு வாசலுக்கு வாழ்த்துக்கள் :-)//

  வாழ்க்கையை எழுத்தாக்குவதில் வல்லமை கொண்ட உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் உழவன்.

  ReplyDelete
 55. திகழ் said...

  //கண் முன்னே காட்சியாய்
  தங்களின் கவிதை

  அற்புதம்

  வாழ்த்துகள்//

  ரசித்துப் பாராட்டியிருப்பதற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் திகழ்.

  ReplyDelete
 56. அண்ணாமலையான் said...

  //அப்பாடா. இன்னைக்கி படிச்சதுலயே என் மண்டைக்கு புரிஞ்ச ஒரே கவித இத்தான்... வாழ்த்துக்கள்.....//

  நல்லது:). நன்றி அண்ணாமலையான்.

  ReplyDelete
 57. அம்பிகா said...

  ***? \\ஆயில்யன் said

  //[மனதினுள் சட்டென்று ரணத்தினை உண்டாக்கும் எந்த கவிதையும் அமரத்துவம் பெறுகிறது!]//

  உங்கள் கவிதையும் அமரத்துவம் பெறுகிறது./***

  பெரிய பாராட்டு. இருப்பினும் உங்களுக்கும் ஆயில்யனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 58. வருண் said...

  //பொய்க்கால் குதிரையில் பவனிவரும் ராஜா ராணியைத்தான் சொல்றீங்களா?//

  அவர்களேதான்.

  //உண்மையிலேயே இங்கே களைப்படையும் கால்கள்தான் மெய் மற்றதெல்லாம் பொய்.

  இதை ஏன் பொய்க்கால் குதிரைனு சொல்றாங்கனு தெரியலை!//

  இந்தக் கேள்விக்கு நீங்கள் சொல்லியிருப்பதேதான் சரியான பதில். களைப்படையும் கால்கள்.. எத்தனை மெய்:(!

  //உண்மையான ராஜா ராணிபோல் இல்லாமல் தாங்களால் எல்லோரையும் மகிழ்விக்க முடிகிறதே என்று நினைத்து திருப்தியடைய வேண்டியதுதான்.//

  அந்த ஒரே ஒரு திருப்தியில்தான் அரைவயிறே நிரம்பினாலும் இக்கலையை விடாமல் வளர்த்தபடி இருக்கிறார்கள். “உண்மையான ராஜா ராணிபோல் இல்லாமல்”.. சிந்தனை நன்று வருண்.

  கருத்துக்கு நன்றிகள்!

  ReplyDelete
 59. கவிதை(கள்) said...

  //கலையின் வலி

  அழகு //

  நன்றிகள் விஜய்.

  ReplyDelete
 60. தியாவின் பேனா said...

  //ஆகா அருமை
  பிறந்தநாள் வாழ்த்துகள்//

  பாராட்டுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் தியாவின் பேனா.

  ReplyDelete
 61. அமுதா said...

  ***/ /*கனைக்காத குதிரைக்குக்
  கால்களாய் இருந்த
  களைப்பு மிகுதியில்
  ராஜாவும்..
  செழிக்காத கலைக்குச்
  சேவகியாய்-
  மெய் வருத்திப்
  பொய்க் களிப்புடன்
  பவனிவந்த ராணியும்!*/
  மனம் கனத்தது நிதர்சனத்தை எண்ணி.../***

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமுதா.

  ReplyDelete
 62. பிரசன்னா said...

  // முதல் பாராவில் பார்வையாளர்கள் பார்வையில்.. பின்பு நிஜம்.. அருமை//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரசன்னா.

  ReplyDelete
 63. தமயந்தி said...

  ***/கனைக்காத குதிரைக்குக்
  கால்களாய் இருந்த
  களைப்பு மிகுதியில்
  ராஜாவும்..
  செழிக்காத கலைக்குச்
  சேவகியாய்....

  அட்ட‌காச‌ம்/***

  கருத்துக்கு நன்றி தமயந்தி.

  ReplyDelete
 64. சுந்தரா said...

  //வேஷமிட்ட வாழ்க்கைத்திரைக்குப்பின் ஓசையின்றிக் கேட்கும் விம்மல்களைக்கூட அழகாகப் படம்பிடிச்சிருக்கீங்க ராமலக்ஷ்மி அக்கா.

  கவிதை அருமை. வாழ்த்துக்கள்!//

  உங்கள் கருத்தே ஒரு அழகான கவிதை. நன்றி சுந்தரா.

  ReplyDelete
 65. //
  பளபளக்கும் பட்டுடையும்
  மினுமினுக்கும் நகைநட்டும்
  சரிகை இழையோடும்
  தலைப்பாகையுமாய்..
  அலங்கரித்த
  வெண்புரவிகளில்
  கம்பீரமாய் பெருமிதமாய்
  அரசத்தம்பதியர் வீற்றுவர-
  கண்நூறுதான் கண்டுமகிழ..
  //


  ராஜா காலத்துக்கே சென்றது மனம் இந்த வரிகளைப் படிக்கும்போது!

  ReplyDelete
 66. //
  ஊர்உலா முடிந்து
  உடைமாற்றி நகை களைந்து-
  நின்றார்கள் கூலிக்கு
  இன்றாவது கிடைக்குமாவென..
  //

  இந்த வரிகளைப் படிக்கும போது மனம் கனத்துப் போச்சு:(

  இந்த நிலையில் அவர்களின் மனம் எவ்வளவு பாடு பட்டிருக்கும்
  நிதர்சனமும் கூட சகோதரி!

  ReplyDelete
 67. ராமல‌ஷ்மி மேடம்

  ரொம்ப நல்லா இருக்கு உங்க கவிதை...

  பல பத்திகளில் எழுதப்பட்ட ஒரு கவிதையும்
  அதை படித்து, படித்தே களைத்து போன நானும்...

  வாழ்த்துக்கள் மேடம்...

  என்னோட வலைப்பக்கம் வந்து ரொம்ப நாளேச்சே மேடம்...

  (www.jokkiri.blogspot.com
  www.edakumadaku.blogspot.com)

  ReplyDelete
 68. RAMYA said...

  //ராஜா காலத்துக்கே சென்றது மனம் இந்த வரிகளைப் படிக்கும்போது!//

  ரசனைக்கு நன்றி ரம்யா.

  //இந்த வரிகளைப் படிக்கும போது மனம் கனத்துப் போச்சு:(

  இந்த நிலையில் அவர்களின் மனம் எவ்வளவு பாடு பட்டிருக்கும்
  நிதர்சனமும் கூட சகோதரி!//

  உண்மைதான் ரம்யா. கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 69. R.Gopi said...

  // ராமல‌ஷ்மி மேடம்

  ரொம்ப நல்லா இருக்கு உங்க கவிதை...//

  நன்றி கோபி.

  //பல பத்திகளில் எழுதப்பட்ட ஒரு கவிதையும்
  அதை படித்து, படித்தே களைத்து போன நானும்...

  வாழ்த்துக்கள் மேடம்...//

  மூன்று பத்திகளிலே அத்தனை களைப்பு வந்து விட்டதா:)? சரிதான்.
  உங்கள் வலைப்பக்கம் நேரம் வாய்க்கையில் அவசியம் வருகிறேன். வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 70. புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)

  http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html

  ReplyDelete
 71. @ சிங்கக்குட்டி,
  தந்திருக்கும் விருதுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சிங்கக்குட்டி.

  ReplyDelete
 72. கடைக் கோடி கலைஞனின் மன வாசல் திறந்து காட்டிவிட்டீர்கள். அருமை.

  ReplyDelete
 73. @ நானானி,

  கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நானானி.

  ReplyDelete
 74. @ அன்புடன் அருணா,

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள் அருணா.

  ReplyDelete
 75. குட். நல்ல இருக்கு

  regards
  ram

  www.hayyram.blogspot.com

  ReplyDelete
 76. @ hayyram,

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 77. இன்னொரு சிறப்பான கவிதை.

  ReplyDelete
 78. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 79. ஹாப்பி பர்த்டே!

  ReplyDelete
 80. இனிய பிறந்தநாள் நல்வாழ்துக்கள் அக்கா :-))

  ReplyDelete
 81. முதல்லே வடக்குவாசலில் கவிதை வெளிவந்ததுக்கு வாழ்த்துகளைச் சொல்லிக்கறேன்.

  அடுத்து பிறந்த நாள் வாழ்த்துகள். மேன்மேலும் பல சிறப்புகளையும் பெற்று வாழ வாழ்த்துகள்.

  ReplyDelete
 82. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....தங்களின் இனிய மனது போல் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 83. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 84. ஆதிமூலகிருஷ்ணன் said...

  //இன்னொரு சிறப்பான கவிதை.//

  மிக்க நன்றி ஆதி.

  ReplyDelete
 85. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லியிருக்கும்..

  புலவன் புலிகேசி

  சர்வேசன்

  கார்த்திக்

  கீதா மேடம் [ஆசிகளுக்கு நன்றிம்மா]

  மோகன் குமார்

  திகழ்

  அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்!

  ReplyDelete
 86. நல்லா இருக்கு.. வடக்கு வாசலுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 87. நசரேயன் said...

  // நல்லா இருக்கு.. வடக்கு வாசலுக்கு வாழ்த்துக்கள்//

  கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நசரேயன்.

  ReplyDelete
 88. //ஊர்உலா முடிந்து
  உடைமாற்றி நகை களைந்து-
  நின்றார்கள் கூலிக்கு
  இன்றாவது கிடைக்குமாவென..//

  நிழலுக்குப்பின் நிஜம் முகத்தில் அறைகிறது.
  http://amaithicchaaral.blogspot.com

  ReplyDelete
 89. @ அமைதிச்சாரல்,

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமைதிச்சாரல். பதிவுலகில் புதிதாக மலர்ந்திருக்கும் உங்கள் வலைப்பூவுக்கும் என் நல்வாழ்த்துக்கள்:)!

  ReplyDelete
 90. அருமையான கவிதைகள்

  மேலும் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 91. கவிதை நயம் என்னை ஈர்த்து இழுக்கிறது

  கலைகளையும் கலைஞர்களையும் ஒரு சேர கவிதையில் காண்கிறேன் .

  நான் இப்போது தான் உங்கள் பதிவுக்கு வருகிறேன் .

  உங்க‌ளை ப‌த்தி அறிந்து கொண்ட‌தில் மிக்க‌ ம‌கிழ்ச்சி .

  உங்களிடமிருந்து நிறைய கற்க வேண்டும் போல உள்ளது .

  இனிமேலும் தொடரும் நம் எண்ணங்கள் ....

  ReplyDelete
 92. நல்லாருக்கு சகா கவிதை.வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 93. கட்டபொம்மன் said...

  //அருமையான கவிதைகள்

  மேலும் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்//

  முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கட்ட்பொம்மன்.

  ReplyDelete
 94. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  //கவிதை நயம் என்னை ஈர்த்து இழுக்கிறது

  கலைகளையும் கலைஞர்களையும் ஒரு சேர கவிதையில் காண்கிறேன் .

  நான் இப்போது தான் உங்கள் பதிவுக்கு வருகிறேன் .

  உங்க‌ளை ப‌த்தி அறிந்து கொண்ட‌தில் மிக்க‌ ம‌கிழ்ச்சி .

  உங்களிடமிருந்து நிறைய கற்க வேண்டும் போல உள்ளது .

  இனிமேலும் தொடரும் நம் எண்ணங்கள் //

  சொன்னது போலவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி ஸ்டார்ஜன்!

  ReplyDelete
 95. பா.ராஜாராம் said...

  // நல்லாருக்கு சகா கவிதை.வாழ்த்துக்கள்!//

  மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 96. நலிந்து வரும் பொய்க்கால் குதிரை
  அழிந்திடாது தொடர வேண்டும். அவர் தம் பொருளாதாரமும் பெருகவேண்டும். அற்புதமான வரிகளில் அழகான கவிதை வடித்ததற்கு வாழ்த்துக்கள்.

  வண்ண ஆடை அலங்காரங்கள் மேடைக்குத் தானோ ? ஓவியரின் கறுப்பு வெள்ளைப் படமும் ஒரு அர்த்தத்துடன் தான் ஆடுகிறது.

  ReplyDelete
 97. சதங்கா (Sathanga) said...

  //நலிந்து வரும் பொய்க்கால் குதிரை
  அழிந்திடாது தொடர வேண்டும். அவர் தம் பொருளாதாரமும் பெருகவேண்டும்.//

  வாழ்த்துவோம் கலைகள் செழிக்க!

  //அற்புதமான வரிகளில் அழகான கவிதை வடித்ததற்கு வாழ்த்துக்கள்.

  வண்ண ஆடை அலங்காரங்கள் மேடைக்குத் தானோ ? ஓவியரின் கறுப்பு வெள்ளைப் படமும் ஒரு அர்த்தத்துடன் தான் ஆடுகிறது.//

  ஓவியத்தை பார்த்த கோணம் அருமை. நன்றி சதங்கா!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin