Sunday, September 26, 2010

ஒற்றைப் பேனாவின் மை
பேரொளியொன்று
வானில் தோன்றிய வேளையில்
பிரபஞ்சமெங்கும் சிந்தியததன் மிச்சமாய்
எண்ணற்ற நட்சத்திரங்கள்

ஓரொளியிலிருந்து வந்த 

மூலம் அறியாமல்
யார் உயர்வென்று
எங்கெங்கினும் போர்க்களங்கள்

மோதியது போதுமென்று
வாதிட்டு அலுத்துப் போய்
செய்வதறியாது கோள்கள்

உலுக்கக் காத்திருக்கிறது உலகை
ஒற்றைப் பேனாவின் மை
வடிக்கப் போகும் தீர்ப்புகள்

வெட்கப்பட்டு உதித்து
வேதனையுடன் மறைகின்றார்
நித்தம் சூரியசந்திரர்கள்

ஒரேசக்தியாய் ஒளிர்கின்றார்
அத்தனை கடவுளரும் எனும்
புரிதலின்றி புவியெங்கும் பாமரர்கள்!

***

: 24 செப்டம்பர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட இருந்த அயோத்தி தீர்ப்புக்கு உச்சநீதி மன்றம் நான்கு நாட்களுக்கு இடைக்காலத் தடை.


படங்கள்: இணையத்திலிருந்து..

82 comments:

 1. தீர்ப்புக்காக காத்திருக்கும் ஒவ்வொரு கணமும் திக்திக்தான்..

  எடுத்துக்கொண்ட கரு அருமை ராமலஷ்மி :-)

  ReplyDelete
 2. ஒரு வகையான திகில் தினங்களாகத்தான் இருக்கப் போகின்றன அவை.

  ஆனால் தீர்ப்பு வழக்கம் போல் ஒத்தி வைக்கப் படும் என்றே தோன்றுகிறது. பார்ப்போம்

  ReplyDelete
 3. //////உலுக்கக் காத்திருக்கிறது உலகை
  ஒற்றை பேனாவின் மை
  வடிக்கப் போகும் தீர்ப்புகள்
  .//////

  வார்த்தை அலங்கரிப்பு அருமை . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. தலைப்பே கவிதையாய்

  வாழ்த்துக்கள் சகோ

  விஜய்

  ReplyDelete
 5. ஆமாம். வாஸ்தவம் தான். அந்த தீர்ப்புக்காக திக் திக் தான். அருமையான கவிதை.

  ReplyDelete
 6. நல்லா இருக்கு அக்கா.

  //உலுக்கக் காத்திருக்கிறது உலகை
  ஒற்றை பேனாவின் மை
  வடிக்கப் போகும் தீர்ப்புகள்//

  ReplyDelete
 7. //
  ஓரொளியிலிருந்து
  வந்த மூலம் அறியாமல்
  யார் உயர்வென்று
  எங்கெங்கினும் போர்க்களங்கள்

  மோதியது போதுமென்று
  வாதிட்டு அலுத்துப் போய்
  செய்வதறியாது கோள்கள்
  //

  நல்லாருக்குங்க...

  குறிப்பா, மோதியது போதுமென்று....நல்ல உதாரணம்.

  ReplyDelete
 8. //
  உலுக்கக் காத்திருக்கிறது உலகை
  ஒற்றை பேனாவின் மை
  வடிக்கப் போகும் தீர்ப்புகள்
  //

  இதுவும் கூட ரொம்ப நல்லாருக்கு....ஏன்னா அந்த தீர்ப்போட இம்பாக்ட் இன்டியா மட்டுமில்லாம உலகம் முழுக்க இருக்கும்கிறது உண்மையான விஷயம்.

  ReplyDelete
 9. தீர்ப்பு இரு தரப்புக்கும் சாதகமாக அமையும்னே தோணுது.

  வரட்டும் பாப்போம்.

  ReplyDelete
 10. பஸ் எரிப்பு வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கவில்லையா, அது போல் வரும்.
  அது சரி, உங்கள் ஒற்றைப் பேனாவை கொஞ்சம் தாங்களேன். நான் எழுத உட்காரும்போது எவ்வளவோ சிந்தனை வருகிறது. ஆனால் எழுத முடியவில்லை.
  சகாதேவன்

  ReplyDelete
 11. அன்பின் ராமலக்ஷ்மி

  அருமை அருமை - சிந்தனை அருமை
  ஒற்றைப்பேனாவின் மை உலகத்தினையே மாற்றும் வலிமை உடையது. சொற்கள் - சிந்தனைகள் அனைத்துமே அருமை

  நல்ல படியாக முடிய நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 12. அன்பு ராமலக்ஷ்மி, மிகச் சீரிய சிந்தனையைத் தாங்கி வந்த வரிகள். உதிர்த்த உங்கள் பேனாவிற்கும் நன்றி. நல்ல தீர்ப்பை எழிதக் காத்திருக்கும் அந்தப் பேனாவுக்கும் நன்றி. உங்கள் எண்ணங்கள் உலகம் முழுவதும் பரவ உலகத்தில சாந்தி நிலவட்டும்.நன்றிம்மா..

  ReplyDelete
 13. \\ஒரேசக்தியாய் ஒளிர்கின்றார்
  அத்தனை கடவுளரும் எனும்
  புரிதலின்றி புவியெங்கும் பாமரர்கள்!\\
  இந்த புரிதல் இல்லாதது தான் பிரச்சினையே! அவசியமான கவிதை.

  ReplyDelete
 14. அருமையான சிந்தனை

  ReplyDelete
 15. அருமையான சிந்தனை ராமலக்ஷ்மி..
  எனக்கும் மோதியது போதுமென்று கோள்கள் மிகப்பிடித்தது.

  ReplyDelete
 16. அருமையான கருத்து; அழகான வார்த்தைகள், அருமையான கவிதை

  ReplyDelete
 17. அக்கா அருமையான கவிதை விரும்பி படித்தேன் நன்றிகள் பல

  ReplyDelete
 18. ஒரேசக்தியாய் ஒளிர்கின்றார்
  அத்தனை கடவுளரும் எனும்
  புரிதலின்றி புவியெங்கும் பாமரர்கள்!//

  எத்தனை அற்புதமான வரிகள்.
  புரிய வேண்டுபவர்களுக்கு புரியட்டும்.

  ReplyDelete
 19. தீர்ப்பு வருமோ..வராதோ....ஆனா நல்ல கவிதை வந்திருக்கு.

  ReplyDelete
 20. //ஒரே சக்தியாய் ஒளிர்கின்றார்
  அத்தனை கடவுளரும் எனும்
  புரிதலின்றி புவியெங்கும் பாமரர்கள்//

  உங்கள் கவிதையைப் படித்தவுடன் எனக்கு மகரிஷி பாடல் நினைவுக்கு வந்தது. உங்கள் கவிதை அருமை ராமலக்ஷ்மி.

  எது பண்பு
  /
  /நீதி வழுவாது மக்கள் உழைத்து உண்டு
  நித்திய அநித்தியத்தின்விளக்கம் பெற்று
  ஆதிநிலை அறிவு நிலையுணர்ந்து
  அன்பால்
  ஆன்மீக நெறியில் பலர் வாழ்ந்த நாட்டில்
  சாதி மொழி நாடு வெறி இவற்றின் மூலம்
  தங்களையே உலக மக்களிடமிருந்து
  பேதித்து பிரிவு பிரிவாக்கிக் காணும்
  பித்து ஒரு பெருகளங்கமன்றோஆய்வீர்.//

  அன்பால் ஆன்மீக நெறியில் பலர் வாழ்ந்த நாட்டில் இப்போது என்ன நடக்கிரது?

  அன்பே கடவுள் என்றுணர்ந்தால் அமைதி நிலவும்.

  ReplyDelete
 21. தீர்ப்பினால் விளைந்த சிந்தனையில் உதித்த கவிதைகள் அழகிய வரிகளுடன் மிளிர்கிறது.

  ReplyDelete
 22. கவிதை நல்லா இருக்குங்க

  ReplyDelete
 23. வழக்கம் போல அருமையான சிந்தனை! :-)

  ReplyDelete
 24. தலைப்பு அழகாய்

  தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டால், இன்னும் நிறைய சிக்கல்கள் வரும்..

  ReplyDelete
 25. ஒரேசக்தியாய் ஒளிர்கின்றார்
  அத்தனை கடவுளரும் எனும்
  புரிதலின்றி புவியெங்கும் பாமரர்கள்//

  மிக அருமை ராமலெக்ஷ்மி..

  ReplyDelete
 26. கட்டுரையோ, புகைப்படக்கலையோ, கவிதையோ, எல்லாப்பக்கமும் கலக்குகிறீர்கள்.. ஆல் இன் ஆல் அழகுராணி....

  ReplyDelete
 27. அமைதிச்சாரல் said...
  //தீர்ப்புக்காக காத்திருக்கும் ஒவ்வொரு கணமும் திக்திக்தான்..

  எடுத்துக்கொண்ட கரு அருமை ராமலஷ்மி :-)//

  சரியாச் சொன்னீங்க. நன்றி அமைதிச்சாரல்.

  ReplyDelete
 28. Jeeves said...
  //ஒரு வகையான திகில் தினங்களாகத்தான் இருக்கப் போகின்றன அவை.

  ஆனால் தீர்ப்பு வழக்கம் போல் ஒத்தி வைக்கப் படும் என்றே தோன்றுகிறது. பார்ப்போம்//

  அப்படித்தான் ஒரு நப்பாசை நமக்கு. ஆனால் அதுவும் ஒருவகையில் நம் இயலாமையையே காட்டும். நன்றி ஜீவ்ஸ்.

  ReplyDelete
 29. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
  ***//////உலுக்கக் காத்திருக்கிறது உலகை
  ஒற்றை பேனாவின் மை
  வடிக்கப் போகும் தீர்ப்புகள்
  .//////

  வார்த்தை அலங்கரிப்பு அருமை . பகிர்வுக்கு நன்றி***

  நன்றி சங்கர்.

  ReplyDelete
 30. விஜய் said...
  //தலைப்பே கவிதையாய்

  வாழ்த்துக்கள் சகோ//


  மிக்க நன்றி விஜய்.

  ReplyDelete
 31. அபி அப்பா said...
  //ஆமாம். வாஸ்தவம் தான். அந்த தீர்ப்புக்காக திக் திக் தான். அருமையான கவிதை.//

  நன்றி அபி அப்பா.

  ReplyDelete
 32. புவனேஸ்வரி ராமநாதன் said...
  //நன்று.//

  மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 33. சுசி said...
  ***நல்லா இருக்கு அக்கா.

  //உலுக்கக் காத்திருக்கிறது உலகை
  ஒற்றை பேனாவின் மை
  வடிக்கப் போகும் தீர்ப்புகள்//***

  நன்றி சுசி.

  ReplyDelete
 34. அது சரி(18185106603874041862) said...
  ***//
  ஓரொளியிலிருந்து
  வந்த மூலம் அறியாமல்
  யார் உயர்வென்று
  எங்கெங்கினும் போர்க்களங்கள்

  மோதியது போதுமென்று
  வாதிட்டு அலுத்துப் போய்
  செய்வதறியாது கோள்கள்
  //

  நல்லாருக்குங்க...

  குறிப்பா, மோதியது போதுமென்று....நல்ல உதாரணம்.***

  நன்றி. செய்வதறியாத நிலையில்தானே எல்லோரும்?

  ReplyDelete
 35. அது சரி(18185106603874041862) said...

  ***/
  //உலுக்கக் காத்திருக்கிறது உலகை
  ஒற்றை பேனாவின் மை
  வடிக்கப் போகும் தீர்ப்புகள்
  //

  இதுவும் கூட ரொம்ப நல்லாருக்கு....ஏன்னா அந்த தீர்ப்போட இம்பாக்ட் இன்டியா மட்டுமில்லாம உலகம் முழுக்க இருக்கும்கிறது உண்மையான விஷயம்./***

  செளதி அரேபியாவிலிருக்கும் நண்பர், தீர்ப்பின் விளைவாக என்னாகுமோ என அங்கும் பதட்டம் நிலவுவதாக 23ஆம் தேதி தெரிவித்தபோதுதான் இதன் தாக்கம் எப்படியாக இருக்கப் போகிறது என்பதை உணர்ந்தேன்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 36. SurveySan said...
  //தீர்ப்பு இரு தரப்புக்கும் சாதகமாக அமையும்னே தோணுது.

  வரட்டும் பாப்போம்.//

  நன்றி சர்வேசன்.

  அப்படி அமைந்து அதை மனப்பூர்வமாக இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டும் விட்டால்.. நினைக்கவே இனிக்கிறது. பார்க்கலாம்.

  ReplyDelete
 37. சகாதேவன் said...

  //பஸ் எரிப்பு வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கவில்லையா, அது போல் வரும்.
  அது சரி, உங்கள் ஒற்றைப் பேனாவை கொஞ்சம் தாங்களேன். நான் எழுத உட்காரும்போது எவ்வளவோ சிந்தனை வருகிறது. ஆனால் எழுத முடியவில்லை.//

  நல்ல தீர்ப்புக்குக் காத்திருப்போம். ஒற்றைப் பேனா! தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். பதிலுக்கு அடிக்கடி பதிவுகள் தாருங்கள்:)! நன்றி.

  ReplyDelete
 38. cheena (சீனா) said...
  //அன்பின் ராமலக்ஷ்மி

  அருமை அருமை - சிந்தனை அருமை
  ஒற்றைப்பேனாவின் மை உலகத்தினையே மாற்றும் வலிமை உடையது. சொற்கள் - சிந்தனைகள் அனைத்துமே அருமை

  நல்ல படியாக முடிய நல்வாழ்த்துகள்//

  உங்கள் நல்வாக்குப் படியே ஆகட்டும். மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 39. வல்லிசிம்ஹன் said...

  //அன்பு ராமலக்ஷ்மி, மிகச் சீரிய சிந்தனையைத் தாங்கி வந்த வரிகள். உதிர்த்த உங்கள் பேனாவிற்கும் நன்றி. நல்ல தீர்ப்பை எழிதக் காத்திருக்கும் அந்தப் பேனாவுக்கும் நன்றி. உங்கள் எண்ணங்கள் உலகம் முழுவதும் பரவ உலகத்தில சாந்தி நிலவட்டும்.நன்றிம்மா..//

  மிக்க நன்றி வல்லிம்மா. நல்லது நடக்கக் காத்திருப்போம்.

  ReplyDelete
 40. அம்பிகா said...
  ***\\ஒரேசக்தியாய் ஒளிர்கின்றார்
  அத்தனை கடவுளரும் எனும்
  புரிதலின்றி புவியெங்கும் பாமரர்கள்!\\
  இந்த புரிதல் இல்லாதது தான் பிரச்சினையே! அவசியமான கவிதை.***

  மிக்க நன்றி அம்பிகா.

  ReplyDelete
 41. யாதவன் said...
  //அருமையான சிந்தனை//

  கருத்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 42. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //அருமையான சிந்தனை ராமலக்ஷ்மி..
  எனக்கும் மோதியது போதுமென்று கோள்கள் மிகப்பிடித்தது.//

  போதும் போதுமென்றிருக்கிறது நமக்கும். நன்றி முத்துலெட்சுமி.

  ReplyDelete
 43. அமுதா said...
  //அருமையான கருத்து; அழகான வார்த்தைகள், அருமையான கவிதை//

  மிக்க நன்றி அமுதா.

  ReplyDelete
 44. சசிகுமார் said...
  //அக்கா அருமையான கவிதை விரும்பி படித்தேன் நன்றிகள் பல//

  நன்றிகள் சசிகுமார்.

  ReplyDelete
 45. அமைதி அப்பா said...
  ***ஒரேசக்தியாய் ஒளிர்கின்றார்
  அத்தனை கடவுளரும் எனும்
  புரிதலின்றி புவியெங்கும் பாமரர்கள்!//

  எத்தனை அற்புதமான வரிகள்.
  புரிய வேண்டுபவர்களுக்கு புரியட்டும்.***

  அந்தப் புரிதல் வந்து விட்டால் வேறென்ன வேண்டும்? நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 46. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
  //நல்ல பகிர்வுங்க......நன்றி.//

  மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 47. ஜெரி ஈசானந்தன். said...
  //தீர்ப்பு வருமோ..வராதோ....ஆனா நல்ல கவிதை வந்திருக்கு.//

  கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 48. கோமதி அரசு said...
  ***//ஒரே சக்தியாய் ஒளிர்கின்றார்
  அத்தனை கடவுளரும் எனும்
  புரிதலின்றி புவியெங்கும் பாமரர்கள்//

  உங்கள் கவிதையைப் படித்தவுடன் எனக்கு மகரிஷி பாடல் நினைவுக்கு வந்தது. உங்கள் கவிதை அருமை ராமலக்ஷ்மி.***

  நன்றி கோமதிம்மா. எது பண்பு என்பதை விளக்கும் மகிரிஷியின் அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.

  //அன்பே கடவுள் என்றுணர்ந்தால் அமைதி நிலவும்.//

  திருவார்த்தை.

  ReplyDelete
 49. ஸ்ரீராம். said...
  //தீர்ப்பினால் விளைந்த சிந்தனையில் உதித்த கவிதைகள் அழகிய வரிகளுடன் மிளிர்கிறது.//

  நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 50. ஜிஜி said...
  //கவிதை நல்லா இருக்குங்க//

  நன்றி ஜிஜி.

  ReplyDelete
 51. சந்தனமுல்லை said...
  //வழக்கம் போல அருமையான சிந்தனை! :-)//

  நன்றிகள் முல்லை.

  ReplyDelete
 52. ஈரோடு கதிர் said...
  //தலைப்பு அழகாய்

  தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டால், இன்னும் நிறைய சிக்கல்கள் வரும்..//

  நன்றி கதிர். வழங்கப்பட்டாலும்..! பார்ப்போம்.

  ReplyDelete
 53. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  ***ஒரேசக்தியாய் ஒளிர்கின்றார்
  அத்தனை கடவுளரும் எனும்
  புரிதலின்றி புவியெங்கும் பாமரர்கள்//

  மிக அருமை ராமலெக்ஷ்மி..***

  நன்றி தேனம்மை.

  ReplyDelete
 54. தேஜூ உஜ்ஜைன் said...
  //கட்டுரையோ, புகைப்படக்கலையோ, கவிதையோ, எல்லாப்பக்கமும் கலக்குகிறீர்கள்.. ஆல் இன் ஆல் அழகுராணி....//

  நன்றி யெஸ்கா:)!

  ReplyDelete
 55. T.V.ராதாகிருஷ்ணன் said...
  //அருமை//

  நன்றி சார்.

  ReplyDelete
 56. தமிழ்மணத்தில் வாக்களித்த 19 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 26 பேருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 57. அருமையான பதிவு ராமலக்ஷ்மி !

  ReplyDelete
 58. என்னம்ம்மா.....எழுதுறே...செல்லம்!!!

  ReplyDelete
 59. ரொம்ப நல்ல படைப்புங்க... அந்த ஒற்றைப் பேனாவின் ‘மை’க்காகத்தான் இத்தனை திக்..திக்..கள்...

  ReplyDelete
 60. ஆ.ஞானசேகரன் said...
  //வளமான சிந்தனை//

  நன்றி ஞானசேகரன்.

  ReplyDelete
 61. James Vasanth said...
  //அருமையான பதிவு ராமலக்ஷ்மி !//

  மிக்க நன்றி ஜேம்ஸ்.

  ReplyDelete
 62. நானானி said...
  //என்னம்ம்மா.....எழுதுறே...செல்லம்!!!//

  நன்றிகள் நானானி:)!

  ReplyDelete
 63. க.பாலாசி said...
  //ரொம்ப நல்ல படைப்புங்க... அந்த ஒற்றைப் பேனாவின் ‘மை’க்காகத்தான் இத்தனை திக்..திக்..கள்...//

  அதேதான். நன்றிகள் பாலாசி.

  ReplyDelete
 64. புரிஞ்சா சரிதான். அருமை :-)

  ReplyDelete
 65. தலைப்பே கவிதையாய்...

  வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 66. "உழவன்" "Uzhavan" said...
  //புரிஞ்சா சரிதான். அருமை :-)//

  நன்றி உழவன்.

  ReplyDelete
 67. சே.குமார் said...
  //தலைப்பே கவிதையாய்...

  வாழ்த்துக்கள் சகோ.//

  நன்றி குமார்.

  ReplyDelete
 68. வெட்கப்பட்டு உதித்து
  வேதனையுடன் மறைகின்றார்(கள்)
  நித்தம் சூரியசந்திரர்கள்

  ஒரேசக்தியாய் ஒளிர்கின்றார்(கள்)
  அத்தனை கடவுளரும் எனும்
  புரிதலின்றி புவியெங்கும் பாமரர்கள்!//

  சரியா மேடம்??

  தலைப்புதான் நிறைய பேசுகிறது

  மையை மைகள் என்று எழுத முடியாதென்றே இந்தவரிகளிலும் கள்ளை விட்டுவிட்டீர்களோ?`

  ;)

  ReplyDelete
 69. @ வசந்த்,

  இலக்கணம் எனக்கு அத்துப்படி என சொல்ல மாட்டேன்:)! ஒரு ஃப்ளோவுக்காக எழுதியிருந்தால் ஆமாம் என சொல்லியிருப்பேன். ஆனால் ‘மறைகின்றார் ஒளிர்கின்றார்’ எனக்குத் தெரிந்தவரையில் பன்மையே. காலப் போக்கில் தனிப்பட்ட ஒருவரை மரியாதை நிமித்தமாகக் குறிப்பிட இப்பதம் அதிகமாகப் பயன்பட ஆரம்பித்து விட்டதால், பலராலும் ஒருமையாகப் பார்க்கப்படுகிறதென்றே தோன்றுகிறது.

  நன்றி வசந்த்:)!

  ReplyDelete
 70. தலைப்புதான் பிடித்து இழுத்து வந்தது :) கவிதையின் கருவும் சொல்லாட்சியும் அருமை. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 71. @ கவிநயா,

  உங்களுக்கும் நன்றி. இங்கு அழைத்து வந்த தலைப்புக்கும் நன்றி:)!

  ReplyDelete
 72. ஒற்றைப் பேனாவிலிருந்து அன்றி மூன்று பேனாக்களிலிருந்து வந்து விட்டுள்ளன தீர்ப்புக்கள். அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்த முயன்றிருப்பது தெரிகிறது. நிறை குறைகள் அலசப்பட்டு மேல் முறையீடு பற்றியப் பேச்சுக்கள் நடக்கின்றன. எவரும் விரும்பத் தகாத வகையில் எதிர்ப்புகளைக் காட்டதது பெரிய ஆறுதல்.

  ReplyDelete
 73. " வெட்கப்பட்டு உதித்து
  வேதனையுடன் மறைகின்றார்
  நித்தம் சூரியசந்திரர்கள்

  ஒரேசக்தியாய் ஒளிர்கின்றார்
  அத்தனை கடவுளரும் எனும்
  புரிதலின்றி புவியெங்கும் பாமரர்கள்!"

  எத்தனை கருத்தாழம் மிக்க வரிகள்! மிக அருமையான கவிதை ராமலக்ஷ்மி!!

  ReplyDelete
 74. @ மனோ சாமிநாதன்,

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 75. நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

  ReplyDelete
 76. @ ஈரோடு தங்கதுரை,

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நேரமிருக்கையில் நிச்சயம் பார்க்கிறேன்.

  ReplyDelete
 77. நல்லா இருக்கு. கரு அருமை ராமலஷ்மி .

  ReplyDelete
 78. @ ஜெஸ்வந்தி,

  மிக்க நன்றி ஜெஸ்வந்தி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin