ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

தனித்திரு விழித்திரு

என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 5)
#1 தும்பி
 Dragonfly
இவரின் உயிரியல் பெயர் Anisoptera . விர் விர்ரெனப் பறந்து விடுகிற இவரைப் படம் பிடிப்பது எளிதுதான். சில வாரங்களுக்கு முன் வீட்டுக்கு அருகேயிருக்கும் கே.ஆர்.புரம் ஏரிக்குச் சென்றிருந்தேன் பறவைகள் கண்ணில் அகப்படுமா எனப் பார்க்க.  நுழைவுச்சீட்டு வாங்கி பூங்கா வழியாக ஏரிக்கரையோரம் வெகுதூரம் நடந்தும் பறவைகள் கண்ணில் சிக்கவில்லை. ஆனால் வழியெங்கும் தட்டான்களின் ரீங்காரம். கவனித்ததில் ஒரு குச்சியின் மேல் வந்தமருகிற தட்டான் சில நொடிகளில் கிளம்பி ஹெலிகாப்டர் போல அந்தப் பகுதியிலேயே சற்று வட்டமடித்துவிட்டு, திரும்பவும் அதே குச்சிக்கே வந்து ஓய்வெடுக்கின்றன. தயாராகக் காத்திருந்து வேண்டிய கோணங்களில் எடுத்துக் கொண்டேன். அந்தப் பகிர்வு தனியாகப் பிறகு வரும்:).

வீட்டில் ஒருநாள் கணினியிலிருந்து கண்ணை அகற்றிய கணத்தில் சன்னல் வழியே தெரிந்தது மாமரக்கிளையின் குச்சி மேல் அமர்ந்திருந்த இந்த வண்ணத் தட்டான். பிற ஜந்துக்களைப் பார்த்தால் அவசரமாகக் கேமராவை எடுக்கச் செல்வேன். ஆனால் இது நிச்சயமாய் அதே இடத்தில் மீண்டும் வந்தமரும் என எண்ணியபடி நிதானமாக கேமராவை எடுத்து, மாங்குச்சியின் மஞ்சள் நிறத்துக்குப் பச்சைப் பின்னணி இருக்கட்டும் என, சன்னல் வழியாகவே ஜூம் எடுத்த படம்.


#2 மர வண்ண வெட்டுக்கிளி
Wood-colored Short-wing Grasshopper
#3
துள்ளி வேறிடம் நகர்ந்ததும் இன்னொரு க்ளிக்..


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

உலக ஒளிப்பட தினம் 2016 - கருப்பு வெள்ளையில் ஏன் படங்கள்?

ளிப்படக் கலையின் 177_வது வருடம். 19 ஆகஸ்ட், இன்று உலக ஒளிப்பட தினம். தத்தமது உலகத்தை உலகத்தோடு பகிர்ந்து கொள்ளும் அத்தனை ஒளிப்படக் கலைஞர்களுக்கும் நல்வாழ்த்துகள்!
என் முதல் கேமரா
நீங்கள் மட்டுமல்ல, பொதுவாகவே ஏன் பல ஒளிப்படக் கலைஞர்களுக்கும் சரி, ஓவியர்களுக்கும் சரி கருப்பு வெள்ளைப் படங்கள் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு..?” சமீபத்திய பதிவொன்றில் என்னிடம் எழுப்பப்பட்ட கேள்வி. வர்ணங்கள் அழகு. வர்ண மயமானது வாழ்க்கை.


இருப்பினும் அதை அப்படியே பதிவு செய்வதை விடுத்து ஏன் கருப்பு வெள்ளையில் காட்ட வேண்டும்?

இதற்குப் பல காரணங்கள். வண்ணப் படங்கள் எடுக்கும் வசதி இல்லாத நாட்களில் எடுக்கப்பட்ட படங்கள் இன்றைக்கும் ஏன் நம் மனதை விட்டு அகலாமல் நிற்பதை மறுக்க முடியாது. கருப்பு வெள்ளைப் படங்களில்
வண்ணங்களால் ஏற்படும் கவனச் சிதறல் தவிர்க்கப்பட்டு கருப்பொருளின் மேல் கவனம் குவிகிறது. ஒளியும் நிழலும் சிறப்பாக வெளிப்படுகிறது. கருப்பு வெள்ளை மற்றும் சாம்பல் வண்ணங்களின் கலவையை சரி வரக் கொண்டு வருவதிலிருக்கும் சவால் பிடித்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு கலைஞருக்குள்ளும் இருக்கும் தனிப்பட்ட இரசனையின் வெளிப்பாடாகவும் அமைந்து போகின்றன கருப்பு வெள்ளைப் படங்கள்.

குறிப்பாக மனிதர்களின் உணர்ச்சிகளைத் துல்லியமாகக் காட்டுவதிலும் வல்லமை வாய்ந்தவை கருப்பு வெள்ளை portrait படங்கள். ‘இல்லையென சொல்லமுடியுமா?’ கேட்கிறார்கள் இவர்கள்:

#1
‘எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால் துணிவே துணையாய் மாறும்..’

#2
‘இரவானால் பகலொன்று வந்திடுமே..’

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

தூக்கணாங்குருவிகளும் செம்மீசைச் சின்னான்களும்..

சில வாரங்களுக்கு முன் வீட்டுத் தோட்டத்தில் தினசரி மணிக்கணக்கில் தூக்கணாங்குருவிகளின் உற்சாகக் கச்சேரி. முருங்கை மரத்தில் கூடு கட்டத் துவங்கின. மளமளவென ஒன்றல்ல மூன்று கூடுகள் ஒருசில தினங்களுக்குள் முழுமை பெற்றன. எந்நேரமும் அதில் ஊஞ்சலாடிக் கொண்டு தலைகீழாகத் தொங்கிக் கொண்டு பாட்டுப் பாடியபடி இருந்தன. கேமராவுடன் பால்கனி பக்கம் சென்றால் விர்ரென அடுத்த வீட்டு மரங்களுக்கு விரைந்தன. கிளைகளுக்குள் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்த்து கண்ணாமூச்சி ஆடின. சரி இனி தொந்திரவு செய்ய வேண்டாமெனக் கேமராவைக் கையில் எடுக்காமல் அவற்றின் விளையாட்டுகளை நாளும் பொழுதும் இரசித்தபடி இருக்கையில் திடீரென அவற்றைக் காணவில்லை. ஐந்தாறு நாட்களாக நடந்து வந்த இசைத் திருவிழா நின்று போய் மரத்தில் பேரமைதி. குருவிகளின் சங்கீதத்தைக் கேட்க முடியாத வருத்தத்தில் கிளைகளும் இலைகளும் கூட அசையாதிருந்தன. 
#3

எங்கே சென்றிருக்கும் அவை? எங்கெங்கிருந்தோ குச்சிகளை, புற்களைச் சேகரித்து வந்து இத்தனை பொறுமையாக, இத்தனை அழகாக தேர்ந்த கட்டிடக் கலை நிபுணர்களைப் போல கட்டிய கூடுகளை அத்தனை எளிதாக ஒதுக்கித் தள்ளி விட்டுப் போய் விட்டனவா? தங்கையிடம் சொன்ன போது, ஒருவேளை உள்ளே முட்டைகள் இட்டிருக்கும், திரும்பி வருமென்றாள். அப்படியும் நடக்கவில்லை. அதன் பின் சென்ற மாத இறுதியில் அடைமழையில் கூடுகள் பேய்க்காற்றில் அலைபாய்ந்தபோது ‘முட்டைகள் இருக்குமோ.. அவை என்னாகுமோ..’ எனக் கவலையுடன் கவனித்தேன். எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் குருவிகள் நிச்சயம் அவற்றை நிர்க்கதியாய் விட்டுப் போயிருக்காதே? அவற்றின் வாழ்க்கை முறை பற்றி இணையத்தில் தேடினேன்.

சுவாரஸ்யமான பல விஷயங்கள் கிடைத்தன.

புதன், 10 ஆகஸ்ட், 2016

'மகிழ்ச்சி!' - கல்கி பவள விழா மலர் 2016_ல்.. என்னைக் கவர்ந்த என் புகைப்படம்..

ல்கி குழுமத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவு விழா 6 ஆகஸ்ட் 2016 அன்று சென்னையில் நடைபெற்றது.

மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியால் வெளியிடப்பட்ட பவளவிழா மலரில்...
என்னைக் கவர்ந்த என் புகைப்படம்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin